<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar/9439067?origin\x3dhttp://halwacity.blogspot.com', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script> <!-- Remove below comment line to show the content. Added for meta redirection --> <!--

போட்டுத் தாக்கு!!!!!

எள்ளோடு எலி புழுக்கையும் எண்ணைக்காக காயுதாம்

-ல் போட்டுத் தாக்கியது

சமூக அறிவியல் தேர்வு

Difficulty in reading this post due to font issues? Click here for a PDF copy. Works best if you right-click the link and select 'Save target as...'
இந்த பதிவை போட்டுத் தாக்கியவர் : Vijayakumar
வலைப்பதிவர்களுக்கான காலாண்டுத் தேர்வு (மொத்தம் 50 மதிப்பெண்கள்)

கீழ்கண்ட வார்த்தைகளைப் பொருத்துக (5x2 மதிப்பெண்கள்)
ரஜினி  - நயந்தாரா உதடு
ஜெயலலிதா - தமிழ் என்கிற நாய்
சிம்பு - இமயமலை
ராமதாஸ் - ஜிலேபி
ஜெயகாந்தன் - தார் டப்பா

ஒரே வரியில் விடையளி (5x2 மதிப்பெண்கள்)

1) நடிகர் ஸ்ரீகாந்துக்கு கோபிகா மீது காதலா? சினேகாவுக்கு குட்பையா?

2) அல்வா கொடுக்கும் வழக்கம் ஒழிந்து ஜிலேபி கொடுக்கும் வழக்கம் எப்போது வந்தது?

3) ஜெயந்திரருக்கு தண்டனை கிடைக்குமா?

4) இந்திய ஜனாதிபதி வழக்கமாக என்ன செய்வார்?

5) 'லக்க லக்க லக்க லக்க' என்பது என்ன ராகத்தில் அமைந்துள்ளது?

கட்டுரை வரைக (3x10 மதிப்பெண்கள்)

1) ஆங்கிலம் என்பது தமிழ்நாட்டில் தீண்டப்படாத மொழி என்பதைப் பற்றி ஒரு கட்டுரை வரைக?

2) இந்தியப் பொருளாதாரத்தில் சந்திரமுகியின் பங்கு என்பதைப் பற்றி விவரிக்க?

3) ஞானப்பீடத்தால் தமிழுக்கு எப்படி புகழ் சேர்ந்தது என்பதை விலவாரியாக எழுதுக?



இந்த பதிவின் வாக்கு எண்ணிக்கை: . பக்கத்திலுள்ள ஸ்டாரை மவுசால் போட்டுத் தாக்கினால் எனக்கு மவுசு ஏறும். நன்றி:-)

உங்கள் கருத்துக்களை இட

திருப்பி தாக்கியவர்கள்:
அல்வா துணை...


























(மற்றவை பேப்பர் மாற்றியவுடன்...:)
 
ரஜினி - அடிக்கடி அபீட் ஆயிக்க
ஜெயலலிதா - கஞ்சா கேஸ்
சிம்பு - துணியேட ப்ளூ பிலிம்
ைராமதாஸ் - உடன் பிறவா அண்ணன்
ஜெயகாந்தன் - ஷேம் ஷேம் பப்பி ஷேம்

) நடிகர் ஸ்ரீகாந்துக்கு கோபிகா மீது காதலா? சினேகாவுக்கு குட்பையா?
கொயந்த கிட்ட போயி சாக்லேட் வேணுமா ஐஸ்கிரீம் வேணாமான்னு கேப்பீங்களா?

2) அல்வா கொடுக்கும் வழக்கம் ஒழிந்து ஜிலேபி கொடுக்கும் வழக்கம் எப்போது வந்தது?
7 கட்சி கூட்டணி வேல செய்ய மாட்டேங்குதே, அதுக்கு அல்வா கொடுக்கலாமான்னு இந்த பக்கம் யாரு நினைக்கிறா?

3) ஜெயந்திரருக்கு தண்டனை கிடைக்குமா?
அது அம்மா+சின்ன அம்மா & அய்யா+சின்ன அய்யா (டாக்டர் குடும்பம் அல்ல, காஞ்சி குடும்பம்) நடக்கும் பேரத்தின் முடிவை பொறுத்து

4) இந்திய ஜனாதிபதி வழக்கமாக என்ன செய்வார்?
பொண்டாட்டி இருந்தா கூட்டிகிட்டு வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொள்வார்... ரிடையர் ஆனவுடன் புத்தகம் எழுதுவார் (தான் மட்டும் படிக்க எதுக்குப்ப அச்சடிச்சி செலவு பண்றாங்க)

5) 'லக்க லக்க லக்க லக்க' என்பது என்ன ராகத்தில் அமைந்துள்ளது?
பண்ணாடை ராகம்

கட்டுரை வரைக (3x10 மதிப்பெண்கள்)
இந்த் பார்டுக்கு பதில் எயுதர அளவு டைம் இல்ல... அண்ணா யுனிவர்சிட்டி பக்கமா பதில் கெடக்கும், வாங்கி மார்க் போட்டுட்டு எவ்ளோன்னு துட்ட சொன்னா கொடுத்துற்றேன்.
 
பறக்கும் படையின் திடீர் சோதனையில் மாட்டிக் கொண்ட அன்பு - 0 மார்க் (ஜீனியர் விகடன், குமுதன் ரிப்போர்ட்டர், நக்கீரன்,துக்ளக், தமிழ்மணம் பதிவுகள் எல்லாத்தையும் ஒழுங்க படிங்க. அடுத்த பரீட்சையிலாவது பாஸ் பண்ண பாருங்க)

முகமூடி - 70 மார்க் (கேட்ட கேள்விக்கு அதிகபிரசங்கிதனமா பதில் சொன்னாலும் லாஜிக்கா சொன்னதுனால மார்க்)

அடுத்த பேப்பர் எங்கேப்பா? டைம் ஆவுதுல்ல... நாலு பேப்பரை திருத்துனோமா, காச பார்த்தோமான்னு இல்லாமா...
 
//(தான் மட்டும் படிக்க எதுக்குப்ப அச்சடிச்சி செலவு பண்றாங்க)//

இதை நான் வன்மையாக(!) கண்டிகிறேன்!!! என்னோட பேரை அச்சுலே பாக்க எனக்கு ஆசை இருக்காதா?

மத்தபடி கொஸ்சின் பேப்பர் மாறிடுச்சு! இது எங்க க்ளாஸ்க்கு இல்லே! மெடிகல் காலேஜுதை எஞ்சினீரிங்
க்ளாஸ்லே குடுத்தா எப்படி?
 
விஜய் அண்ணே,

பிட் அடிச்சு பறக்கும்படையில மாட்டறதெல்லாம் நீங்க படிச்ச காலம்:)

இப்போ லேட்டஸ்ட் டிரெண்ட் பேப்பர் மாத்துரதுவே... அத கொஞ்சம் சூசகமா சொன்னா புரியல ஒமக்கு:)

ஜீனியர் விகடன், குமுதன் ரிப்போர்ட்டர், நக்கீரன்,துக்ளக், தமிழ்மணம் பதிவுகள் எல்லாத்தையும் ஒழுங்க படிக்கறதோடு இல்லாம அதோட சாராம்சத்தை உள்வாங்கிக்கோங்க, அப்பதா நாலுகாசு பார்க்கமுடியும் வக்கிற பரிச்சை மூலம்.
சும்ம பரிச்ச வெச்சா நோ யூச்...
 
அன்பு அண்ணாச்சி,

அன்புன்னு பேர வச்சிக்கிட்டு இப்படி புசுக்குன்னு கோபப்பட்டா எப்படிண்ணே. பேப்பர் மாத்துனதுக்காக புள்ள ஜெயிலுக்கு போயிற கூடாதேன்னு, ப்ளையிங் ஸ்கூவாடுகிட்டே புடிச்சி கொடுத்தேன்.

பரீட்சை வைக்கிறதே நோ யூஸ்க்காக தானே :-)))

துளசியக்கா,

உங்க டிப்பார்ட்மெண்ட் பரீட்சை சீக்கிரமே வைக்கிறேன். கண்ட கண்ட குப்பை படங்க பார்க்காம உட்கார்ந்து படிங்க ஆமா :-)))
 
எனக்கா கோவமா... ஹி..ஹி...
என்னோட எழுத்துள்ள கோபமெல்லாம் கொப்புளிக்குதா என்ன!?
 
புன்னகை மன்னன் எங்கள் அன்பு அண்ணாச்சி கோபம் கொள்வதை பார்க்க ஆசை தான்.

பாண்டியன் பதிவு கொஞ்சம் மணக்கட்டும் என்று தான் ஏலக்காய் மாலை விசயம் போட்டு உடைத்தேனோ? :-)))
 
நக்கீரன், துக்ளக் ரெண்டும் இணையத்துல கிடைக்குதா?? கெடச்சா முகவரி ப்ளீஸ்...
 
இது என்னா புதுவிஷயம்? இந்த 'ஏலக்காய் மாலை!!!'

இது எங்க சிலபஸ்லே இல்லையே!
இருந்து கவர் பண்ணலையோ என்னமோ?
விளக்கம் தேவை!!! ஏலக்காய் மாலை என்றால் என்ன?
 
nakkeeran is available at http://www.nakkheeranbiweekly.com
 

உங்கள் கருத்துக்களை இட


<< திரும்ப முன் பக்கத்துக்கு போ

-ல் போட்டுத் தாக்கியது

சொப்பன ஸ்கலிதம்

Difficulty in reading this post due to font issues? Click here for a PDF copy. Works best if you right-click the link and select 'Save target as...'
இந்த பதிவை போட்டுத் தாக்கியவர் : Vijayakumar
பதின்ம வயதுக்குள் நுழைந்திருக்கும் சோமுவுக்கு முந்தாநாள் இரவு வாழ்க்கையின் முதல் முறையாக சொப்பன ஸ்கலிதம் தனக்கு ஆகிவிட்டதென்ற கவலைத் தொற்றிக் கொண்டது. "உறுப்பு போதிய வளர்ச்சியின்மை,எழுச்சியில்லாமை,எழுச்சி நீடிக்காமை, சொப்பன் ஸ்கலிதம், கண்கள் குழிவிழுந்து கன்னம் ஒட்டிப் போதல்..." என்று பத்திரிக்கையில் போட்டிருக்கும் சேலம் சிவராஜ் வைத்தியசாலை விளம்பரத்தை பார்த்திருக்காவிட்டால் அவனது நம்பிக்கை இந்த அளவு தளர்ந்து போயிருக்காது. கண்ணாடி முன் நின்று தனக்கு லேசாக வளர ஆரம்பித்திருக்கும் அரும்பு மீசையை ரசிப்பதை விட்டு விட்டு தன் கன்னத்தில் குழி விழுந்திருக்கிறதா என்பதை அடிக்கடி பார்த்துக் கொண்டான். அந்த விளம்பரத்தில் கூறிய சகல குணாதிசயங்களையும் சரி பார்த்துக் கொண்டான். அந்த வரிகளில் சூட்சுமம் ஏதாவது இருக்கிறதா என திரும்ப திரும்ப படித்தான். "உறுப்பு போதிய வளர்ச்சியின்மை" என்பதில் கொஞ்சம் சந்தேகம். கக்கூஸை தேடி ஓடினான்.


கக்கூஸ். அதுவரை ஆணுக்கு ஆண் குழந்தையும், பெண்ணுக்கு பெண் குழந்தையும் திடீரென பிறக்கும் என்று நம்பி வந்த சோமுவுக்கு அவன் நண்பன் குழந்தை எப்படி பிறக்கிறது என்ற ரகசியத்தை சொன்னதிலிருந்து கக்கூஸ் தான் சோமுவுக்கு சொர்க்கபுரி. கழிவறைக்குள் கருவுற்றான். சில நாட்களாக கிளர்ச்சி ஏற்படும் போது பாத்ரூம் தேடி ஓடுவது அவனது வாடிக்கை ஆகிவிட்டது. இந்த செயலும் அவன் மனதை வாட்டி வதைத்தது. இதனால் தான் தனக்கு சொப்பன ஸ்கலிதம் ஆகிறதென்று உறுதியாக நம்ப ஆரம்பித்தான்.

"என்ன? ராணி உன் பையன் வர வர தேஞ்சிக்கிட்டே போறான்" என்று பக்கத்து வீட்டு கிழவி கேட்பது இவன் காதில் விழுந்து தொலைத்தது. அதற்கு அவன் அம்மா "மயினி, அவன் வளர்ற புள்ளை அப்படித்தான் இருப்பான்" என்ற சமாதானத்தால் இவன் மனம் சமாதானம் அடையவேயில்லை. சட்டையின்றி கண்ணாடி முன் நின்று பார்த்தான். மேல் நெஞ்சு எலும்பும் அதை ஓட்டிய அவன் தலையும் ஹேங்கர் மாதிரி தெரிய அவன் உடம்பு அதில் தொங்கிக் கொண்டிருந்தது.

"இந்த சொப்பன ஸ்கலித மேட்டரை நண்பன் சுப்பி என்ற சுப்பிரமணியன் கிட்ட கேட்டு தெரிஞ்சிக்கிட வேண்டியது தான். ஆனா எனக்கு ஸ்கலிதம் ஆகிற மாதிரி அவன் கிட்ட சொல்லிறக் கூடாது. அப்புறம் அவன் சிரிப்பான்" என்று நினைத்துக் கொண்டான். கிண்டா மாதிரி ஓங்கி நெடு நெடுவென வளர்ந்திருந்த சுப்பியுடன் தன்னை எப்போதும் ஒப்பிட்டு பார்த்துக் கொள்வது சோமுவின் வாடிக்கை.

"என்னோட உடம்பு இப்படி ஒல்லியாகிட்டே போகுது.சிவராஜ் வைத்திய சாலை விளம்பரத்தில் சொன்ன மாதிரி நான் வளர்ச்சி அடையாம ஒல்லியா இருந்தா, உறுப்பும் போதிய வளர்ச்சி பெறவில்லை என்றால் என்ன செய்ய? சரி சுப்பி ஹெல்ப் பண்றானான்னு பார்ப்போம். இல்லேன்னா எப்படியாவது டாக்டர் சிவராஜ்ஜை பார்த்து கன்சல்ட் பண்ணிற வேண்டியது தான்" என தனக்கு தானே சமாதானம் பண்ணிக் கொண்டான்.

அன்று மாலையில் வழக்கம் போல சேவியர்ஸ் பள்ளிக்கு பக்கத்திலிருக்கும் மனகாவலம் பிள்ளை பூங்காவில் நண்பர்கள் கூடினார்கள். செவண்டாலர்ஸ் ஸ்கூல் பிள்ளைங்களை எப்படி சைட் அடிச்சேன், ரோஸ்மேரி ஸ்கூல் பிள்ளை எவ்வளவு அழக இருக்குதுங்க,மேரி சார்ஜண்ட் புள்ளைங்க ஏன் சொத்தையாக இருக்கிறது,கடலை போடுவது என்றால் என்ன? என்று உரையாடல் மேம்போக்கான விசயங்களை அலசிவிட்டு சில பல ஆழமான விசயங்களை பேச ஆரம்பித்தனர். அப்போது தான் சுப்பி தன் உரையாடலை பின்ன ஆரம்பித்தான். 9-ம் வகுப்பு பய பேசுற பேச்சு மாதிரி இல்லை அது. ஏதோ நேற்று இரவு மாமா ஊருக்கு போய் விட்டதால் பக்கத்து வீட்டு மாமி துணைக்கு வீட்டில் இருக்க கூப்பிட்டதாகவும், இவன் வீட்டிலும் 9-ம் வகுப்பு படிக்கும் சின்ன பையன் தானே என்று அனுப்பி வைத்ததாகவும் அப்புறம் நிகழ்ந்ததை "இன்பரசம்" என்ற செக்ஸ் புத்தகத்தில் படித்த கதையுடன் சமைத்து கூட்டாஞ்சோறாக நண்பர்கள் எல்லாருக்கும் சுப்பி வழங்கிக் கொண்டிருந்தான்.

"ஏலே உனக்கு எங்கேயோ மச்சம் இருக்குடா" என்று எல்லோரும் சிலாகித்தார்கள். ஆனால் சோமுவோ இவனுக்கு சொப்பன ஸ்கலிதம் ஆகிவில்லையென நினைக்கிறேன். அதுனால் தான் இப்படி கலாய்க்கிறான் என்று மனதில் நினைத்தாலும் "ஆமா இதெல்லாம் எப்படி தெரியுது உனக்கு" என்று அம்மாஞ்சியாக சுப்பியைக் கேட்டான். அதற்கு "இன்பரசம் செக்ஸ் புக்கை படி. எத்தனை பேர் கொஸ்டின் கேட்டிருப்பாங்க தெரியுமா? அவ்வளவும் மணி மணியான பதிலுங்க. பதில் சொல்றது யாருன்னு நெனச்சிக்கிட்ட? நம்ம சரோஜா தேவி தான்" என்றான்.

"சுப்பி எனக்கு அந்த புக்கு கொட்றா? நான் படிச்சிட்டு தர்றேன்" என்றான் சோமு. ரெடியாக வைத்திருந்தது போல புஸ்தக பையிலிருந்து கணக்கு புத்தகத்தை பிரித்து எடுக்க இன்பரசத்தில் ஏதோ ஒரு துணை நடிகை மேல் முந்தானை இல்லாமல் குனிந்து சிரித்துக் கொண்டிருந்தாள். அவசரம் அவசரமாக புத்தகத்தை எடுத்து தன்னுடை கால்சட்டைக்குள் நுழைத்து அரைஞான் கயிற்றில் இறுக்கிக் கொண்டான். வீட்டின் கழிப்பறையில் மோசமான பேப்பரில் அச்சடித்திருக்கும் அந்த புத்தகத்தை புரட்ட ஆரம்பித்தான். மலையாள நடிகைகள்,நடிகை மாதுரி என்று பல பேரின் படங்களை கடந்து சரோஜா தேவியின் கேள்வி பதில் பக்கத்துக்கு வந்தான். தேடினான். கிடைத்தது.

"சரசு மாமி! நான் அடிக்கடி சுய இன்பம் அனுபவிக்கிறேன். அடிக்கடி சொப்பன ஸ்கலிதமாகிறது? இதை எப்படி தடுப்பது?"

"இவையெல்லாம் மிகக் கொடூரமான வியாதிக்கு அறிகுறி.கூடுமான வரையில் மனதை திசைத் திருப்ப பார்க்கவும்.ஆன்மீகம் விளையாட்டு,படிப்பு என்று ஏதாவது ஒன்றில் உங்கள் கவனத்தைச் செலுத்தவும்"

இந்த பதிலை பார்த்ததும் சோமுவுக்கு பயம் அதிகரித்தது. தினமும் கோவிலுக்கு போக ஆரம்பித்தான். அவன் அம்மாவுக்கு ஏக ஆச்சரியம். "சாமி கும்பிட வா என்றால் எட்டடியில் ஓடிப் போவேனே. அவனா இது? எல்லாம் நல்லது தான்" என்று மகிழ்ந்தாள்.

சில நாள் கழித்து சுப்பி டவுணில் உள்ள லட்சுமி தியேட்டரில் "பாவம் கொடூரன்" என்ற மலையாள படம் ஓடுவதாகவும், அது செக்ஸ் எஜூகேஷன் பற்றி எனவும் கூறினான். எப்படியோ வீட்டில் டாபாய்த்து விட்டு சொப்பன ஸ்கலித கேள்விக்கு அந்த படத்தில் விடை தேடினான். நல்ல ஒரு மலையாள படம் பார்த்த திருப்தியுடன் எல்லோரும் வெளியே வர சுப்பி மட்டும் "சே! இண்டர்வல்ல தான் ஒரு பிட்டு ஓட்டுவாங்க. இன்னிக்கி போலீஸ் கெடிபிடி ஜாஸ்தின்னு அது கூட போடல சுத்த வேஸ்ட்" என்று பினாத்திக் கொண்டே வந்தான். சோமூ மிரட்சியுடன் அங்கிமிங்கும் கண்களை அலை பாயவிட்டு தன்னை தெரிந்தவர்கள் யாரும் பார்த்து விடக்கூடாதென்று விறு விறுவென்று ஓட்டமும் நடையுமாக பஸ்ஸை பிடிக்க ஓடினான்.

பரணி லாட்ஜில் பல தலைமுறை வைத்தியர் சித்த சிரோன்மணி சிவராஜ் வைத்தியர் காலை 6 மணி முதல் 5 மணி வரை இரண்டு நாட்கள் வீரியம் இல்லாமைக்கு வைத்தியம் பார்க்கப் போகிறார் என்ற விளம்பரம் பத்திரிக்கையில் பார்த்தான். எப்படியாவது சிவராஜை சந்தித்து சொப்ன ஸ்கலிதத்துக்கு விடிவு காண வேண்டுமென நினைத்தான். மெதுவாக பரணி லாட்ஜ் பக்கம் போனது தான் தெரியும் தலையில் துண்டுப் போட்டுக் கொண்டு பல 40, 50 வயது மதிக்கத்தக்க பல உருவங்கள் படையெடுத்துக் கொண்டிருந்தன.

"இருப்பதிலேயே சின்ன பையன் நான். எனக்கு இந்த பிரச்சனையா? எப்படி எனக்கு மட்டும் இப்படி ஆனது?" சோமூவுக்கு வெட்கம் பிடுங்கி திங்க திரும்பி வீட்டை நோக்கி நடந்தான்.

சொல்லி வைத்தாற் போல அன்று இரவு அவனுக்கு மப்பும் மந்தாரமாக இருந்தது. தூங்கியவனின் எண்ணத்தில் கனவொன்று உதித்தது. அவன் நண்பண் அமெரிக்காவில் அம்மண பீச் ஒன்று இருப்பதாக சொல்லியிருந்தான். அதே போல் கனவிலும் ஒரு நியூடு பீச். கால் கடுக்க சோமூ உள்ளாடையுடன் நடக்கிறான். எட்டிய தூரம் வரை ஒன்றும் கண்ணில் தென்படவில்லை. சிறிது தூரம் சென்றவனுக்கு மல்லாக்கப் படுத்திருந்த மோகினி ஒருவள் கண்ணில் பட்டாள். இளஞ்சூடான மணலின் நிறமும் அவளின் மேனியும் பொன்னிறமாயிருந்தன. ஒரே ஒரு துண்டை மட்டும் இடுப்புக்கு மேலே போட்டு மறைத்திருந்தாள். மணல் சரசரக்கும் சத்தத்தை கேட்டவள் லேசாக திரும்பி பார்த்தாள். சோமூவுக்கு கால்கள் அவளை நோக்கி தானாக நடைபயின்றன. ஓங்கி ஒரு காற்று அடிக்கவும்,அவள் மேல் போட்டிருந்த ஒரே துண்டு அந்த காற்றில் பறக்கவும், அதைப் பார்த்து சோமூ அதிர்ச்சியில் உறையவும், ஒரு பெரிய அலை அவன் எதிர்பாராத அளவு திடீரென தாக்கவும் சரியாயிருந்தது. இந்த நிகழ்ச்சிகளால் சோமூ நிலை குலைந்து போனான். ஆனால் எதையோ ரிலீஸ் செய்து விட்ட மாதிரி திருப்தியாக இருந்தது. உடம்பே பிசு பிசுத்துப் போனது. ஈரம் ஈரம் அவன் போட்டிருந்த ஒரே உள்ளாடை எல்லாம் ஈரம். அந்த திசையை நோக்கினான். மோகினியை காணவில்லை.

சோமூவின் பிடறியில் யாரோ ஓங்கி தட்டினார்கள் "ஏலே! எந்திரிலே படுக்கையில ஒன்னுக்கு அடிச்சி வச்சிருக்கே மூதேவி.இந்த மாசத்துல இரண்டாவது தடவையா ஒன்னுக்கு போயிருக்கே நீ. சின்ன புள்ளையா நீ? மாடு மாதிரி வளர்ந்திருக்கே. அறிவில்லை உனக்கு. நைட்டு மூக்கு முட்ட தண்ணி குடிச்சா, இப்படி தான் மூத்திரமா போவே. எந்திரிச்சி ஒன்னுக்கு அடிச்சி படுக்கனும்னு அக்கறை கூட இல்லை. ஏண்டா தத்தியா இருக்கே? எந்திரி போ... போயி குளிச்சிட்டு வா. தலையெழுத்து உன் மூத்திர படுக்கையெல்லாம் துவைக்க வேண்டியிருக்கிறது?"

திகலடைந்து எழுந்திருந்த சோமூவுக்கு பயங்கர அதிர்ச்சி "திரும்பவும் எனக்கு சொப்பன ஸ்கலிதம் ஆகிவிட்டது. திரும்பவும் சொப்பனத்தில் மூத்திரத்தை ஸ்கலிதித்து விட்டேன். அடக்கடவுளே!"

சோமூவின் தாய் தன் கணவரிடம் இதை சொல்லிக் கொண்டிருக்க "அவனுக்கு யூரினரில ஏதாச்சும் பிரச்சனை இருக்கும்டி. டாக்டர் கிட்ட காண்பிப்போம்"

டாக்டர் என்ற வார்த்தையை கேட்டவுடன் தலைமுறை சித்த வைத்திய சிரோன்மணி சிவராஜ் ஞாபகத்திற்கு வர ஸ்கலிதப் பிரச்சனை தனக்கு உண்மையிலே இருப்பதாக எண்ணி மூர்ச்சையடைந்தான்.

இப்போது 50 வயதாகிப் போன சோமூ ஒரு நாள் பத்திரிக்கையை திருப்பும் போது சேலம் சிவராஜ் வைத்தியசாலை, 6வது தலைமுறையான சிவராஜ் சஞ்செய் ஆஸ்தான வைத்தியராக இருப்பதையும் எதிர்கால வைத்தியராகப் போகும் 10 வயது பையன் சிவராஜ் சிபியின் படத்துடன் வந்திருந்த விளம்பரத்தை பார்த்தும் அந்த ப்ளாஷ் பேக் தோன்றியது. சொப்பன ஸ்கலிதத்துக்கு விடையும் கண்டுபிடித்து விட்டார். இப்போது பேரக்குழந்தைகளுடன் சௌக்கியமாக பெருவாழ்வு வாழ்ந்துக் கொண்டிருக்கிறார் சோமு.

இந்த பதிவின் வாக்கு எண்ணிக்கை: . பக்கத்திலுள்ள ஸ்டாரை மவுசால் போட்டுத் தாக்கினால் எனக்கு மவுசு ஏறும். நன்றி:-)

உங்கள் கருத்துக்களை இட

திருப்பி தாக்கியவர்கள்:
யோவ்! அல்வாசிட்டி விஜய், எப்படியா இப்படி எழுதறீங்க, கலக்குங்க... சொப்பனஸ்கலிதத்துக்கு இப்படி ஒரு அர்த்தமா?
 
அண்ணாச்..சீ ;-)
 
good one keep it up......looking forwrd for more..

radha
 
விஜய்,
இப்பதான் எனக்கு அர்த்தம் புரியுது.:-)
 
அதெல்லாம் கிடக்கட்டும் விஜய் அண்ணாச்சி... உங்களுக்கு 50 வயசாகிடிச்சின்னு சொல்லவேயில்லை?!
 
டேய் மாப்ஸ்,

கலக்கிட்டே போ.. எனக்கு தெரிஞ்சு லட்சுமி தியேட்டரில் அந்த படம் போடலை..

விஜி, நீ சொன்ன இந்த மேட்டரை பத்தி நான் விரைவில் இன்னொரு பதிப்பு எழுதுறேன்..

சங்கர்
 
sorry Alva I am under 16 (*_*)
 
உங்களுக்கு இது தேவையா விஜய்..?? ஒழுங்கா எழுதிகிட்டு இருந்தீங்க..?? என்னாச்சு..?? இதையே கட்டுரை வடிவத்தில் முயற்சித்திருந்தால் நன்றாயிருந்திருக்கும்..

ம்..என்னமோ போங்க..
 
அன்புள்ள மூக்கன், மூர்த்தி,

Fantasyஆக இந்த கதை என உங்களுக்கு தோனியிருந்தால் மன்னிக்கவும். Fantasy-க்காக எழுதிய கதை இல்லை. செக்ஸ் ஆகட்டும், உறவு முறைகள் ஆகட்டும், புரிந்துக் கொள்வது ஆகட்டும் பதின்ம வயதில் மிஞ்சி நிற்பது குழப்பமே. இந்த பதின்ம வயது குழப்பத்துக்கு சூழ்நிலைகளும் மிக முக்கிய காரணம் ஆகின்றன. நாமெல்லம் பதின்ம வயதைக் கடந்து தான் வந்திருப்போம். இந்த கதையில் உள்ளது உள்ளபடி இல்லாவிட்டாலும் இதன் தொடர்பாக வேறுவிதத்தில் அடைந்திருக்கும் குழப்பங்கள் எல்லார் பதின்ம வயதிலும் நிகழ்ந்திருக்கும் என்பதை என்னால் 100% அடித்து கூற முடியும்.

இந்த குழப்பத்தை விடை காண நான் கதை வழியாக முயலவில்லை. பதின்ம பிரச்சனையின் ஒரு துகளை பதிவாக எழுத முயன்றேன். அது வேறு மாதிரியாக உங்களுக்கு தெரிந்திருந்தால் நான் சொன்ன கதை சொன்ன விதத்தில் எதோ பிரச்சனை என நான் எடுத்துக் கொள்ள வேண்டும்.

நன்றி குழலி, மாண்ட்ரீஸர்,ராதா,முத்து.

மயாவரத்தான்,

ஒவாரா தான் நக்கல் அடிக்கிறீங்க அண்ணாச்சி.::-)

சங்கர், லட்சுமி தியோட்டர் என்பது கதைக்காக மட்டுமே. ஒரு காலத்தில் கொடிக்கட்டி பறந்த கலைவாணி தியேட்டரை மூடி விட்ட பிறகு, என் மனதில் வந்து நின்றது லட்சுமி தியேட்டர் தான்.

கறுப்பி,

உங்க ஊருல மேஜருக்கு ஆகக் குறைந்த வயது 16. எங்க ஊரில எல்லாம் 18ப்பா.

ராமன்,

PDA -ல் உங்களால் தமிழ் உள்ளீட முடிகிறதா என்ன? எனக்கு தெரிந்து இன்னும் பிடிஏ-க்களிலும், கைத்தொலைபேசியிலும் தமிழ் பாண்ட்டுகள் வருவதில்லை. அதில் தமிழ்ல் எழுத முடியாது என நினைக்கிறேன். எதிர்காலத்தில் வரலாம். உங்கள் கணியில் தமிழ் எழுத அழகி நம்பர்1, இ-கலப்பை,முரசு,குறள் எழுதி என நிறைய மென்பொருள்கள் உள்ளன. விவரங்களை கீழ்கண்ட முகவரியிலிருந்துப் பெற்றுக் கொள்ளலாம்.

http://www.thamizmanam.com/xblog/index.php?itemid=9
 
:)|(:
 
!!!!!! :-)))))))
 
நன்றி நரேன்,பாண்டியன் & துளசியக்கா... எல்லாரிடமும் ஒரு அவஸ்தையான சிரிப்பை தான் நான் பார்க்கிறேனோ?
 
kalakkitteeenga annnachi! This is the best blog entry I have read in 2005 and I mean it!
 
vijay,
samma kalakkalA ezuthi irukkIngka :-)
"சொப்பன ஸ்கலிதம்" kuRiththu oru viththiyAsamAna kaNNOttam !!!!
pArAttukkaL !!!!
 
ஆரம்பம் பார்த்ததும் "A" certificate கொடுக்கப்பட வேண்டிய படம் sorry கதை என்று தோன்றியது. பரவாயில்லை சமாளிச்சிட்ட்டீங்க..

ராமன் (எழுதுகருவி தொடர்பாக) என்னைத் தனிமடலில் தொடர்பு கொள்ள முடியுமா? sanuragc at yahoo dot com.
 
நன்றி கூத்து(ரவுசு,பிலுமு). சூப்பர் பெயரை வச்சிருக்கீங்க.

நன்றி பாலு, அனுராக்.

திரு.ராமன் அவர்களே, எழுதுகருவி விசயமாக அனுராக்கை தொடர்புக் கொள்ள முடியுமா?

வேலு, நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. ஏற்கனவே செக்ஸ் என்பது நமது ஊரில் இலை மறைகாய் என தெரிந்து அதில் குழம்பிய மக்கள் மனது குட்டையில் தலை தலைமுறையாக மீன் பிடிப்பவர்கள் இந்த சிவராஜ் வைத்தியசாலை.
 
விஜய், கிட்டத்தட்ட மூக்கரின் கருத்தே எனக்கும். கதை என்று எழுதி அதில் ஐம்பது வயது சோமுவெல்லாம் காட்டாமல் பதின்ம வயது குழப்பங்களை மட்டும் வைத்தே நல்ல கட்டுரையாக வடித்திருக்கலாம்.
 
நன்றி கே.வி.ஆர்

அய்யய்யோ... கட்டுரை எழுத வராம தானே நான் கதையா போட்டேன். இருந்தாலும் அடுத்த முறை கட்டுரையே முயற்சி பண்றேன்.
 
யோவ் இப்பம்தான் படிச்சேன், கலக்கிட்டீரய்யா? (உம்ம நடையில் மிகுந்த முதிர்ச்சி(முன்னைவிட) தெரிகிறது.)
 
நன்றி ரோசா அண்ணாச்சி. முதிர்ச்சி என்கிறது எல்லாம் நம்ம சகவலைப்பதிவர்களின் பின்னூட்ட ஊக்கமும், 'செந்தமிழும் நாப்பழக்கம்' என்று சொல்லப்படுவது போல தொடர் பதிவு பயிற்சியும்/முயற்சியும் தான்.
 
//(உம்ம நடையில் மிகுந்த முதிர்ச்சி(முன்னைவிட) தெரிகிறது.) //

இப்படி சொல்லிட்டீங்கல்ல. இப்போ தக்க வச்சிக்கிறதுக்கு பயம் தான் வருது :-))
 
அல்வா!
இந்த ஸ்கலிதம் மட்டுமில்லை, அந்த ஸ்கலிதத்தையும் மற்ற பதின்ம வயதுக் குழப்பங்களையும் எழுதுவது அவசியமே!
 
வடிவேல் அண்ணாச்சி,

நீங்கள் சொல்லுவதை முழுவதுமாக ஒத்துக் கொள்கிறேன். ஏறக்குறைய வலைப்பதிவர்கள்/படிப்பவர்கள் எல்லோரும் பதின்ம வயதை கடந்திருந்தாலும், பதின்ம வயது பிள்ளைகளை கொண்டோர்களாக கூடிய சீக்கிரம் ஆவர்கள். எண்ணங்கள் பதியப்படும் போது எல்லோருக்கும் பயனுள்ளதாக அமையும். காலம் செல்ல செல்ல கூடிய சீக்கிரமே எழுதி விடலாம்.
 
kr;rp eP vd;d brhy;y te;njd;nd bjhpany. brhg;gd !;fypjk; vdf;Fk; ,Uf;F ehd; vd;d bra;a?
 

உங்கள் கருத்துக்களை இட


<< திரும்ப முன் பக்கத்துக்கு போ

குண்டக்க மண்டக்க ரண்டக்க ரண்டக்க

Difficulty in reading this post due to font issues? Click here for a PDF copy. Works best if you right-click the link and select 'Save target as...'
இந்த பதிவை போட்டுத் தாக்கியவர் : Vijayakumar
மொபைல் புத்தகங்களை வலையேற்றுவதற்கு ஏற்பாடுகள் செய்துக் கொண்டிருப்பதால் நம்ம ப்ளாக் கோடையில் வானம் பார்த்த பூமியாகி விட்டது. ஊருல அக்னி நட்சத்திரம் கொளுத்துதோ இல்லையோ நம்ம பதிவும் சேர்ந்து காய்கிறது. காய்ந்த பூமிக்கு கொஞ்சம் தண்ணி காட்டி விட்டு போய் விடுகிறேன். என்னுடைய கலெக்ஷனிலிருந்து சில படங்களும் என்னுடைய கமெண்டும்.

யக்கா! உனக்கு வாய்நீளமுன்னு சொன்னாங்க. இம்புட்டு நீளம் இருக்குமுன்னு கனவுல கூட நெனச்சி பார்க்கலை யக்கா.
Image hosted by PicsPlace.to

யோவ் இவ்வளவு அழுத்தியா மூக்கை நோண்டுறது?
Image hosted by PicsPlace.to

அண்ணே! இப்படி நீ தலைகீழா நின்னாலும் அடுத்து அம்மா ஆட்சி தான்
Image hosted by PicsPlace.to

அடப்பாவிகளா! டைட்டானிக் புறப்படும் போது கப்பல் முனையில நின்னுக்கிட்டு கைய நீட்டுனவங்க தான், இன்னும் மடக்கவே இல்லையா?
Image hosted by PicsPlace.to

தாத்தா! தமிழ் வளரலேன்னு இப்படி மூஞ்சை தூக்கி வச்சிக்கிட்ட எப்படி?

Image hosted by PicsPlace.to

பரமண்டலங்களில் இருக்கும் எங்கள் பிதாவே! ஓ! ஜீஸ்! ஹெல்ப் மீ ப்ளீஸ்!!

Image hosted by PicsPlace.to

நல்ல வேளைப்பா! நம்ம ஊரு அரசியல்வாதிங்க எவனுக்கும் இந்த அளவு வாயில்லை
Image hosted by PicsPlace.to

குண்டக்க மண்டக்க ரண்டக்க ரண்டக்க.....



இந்த பதிவின் வாக்கு எண்ணிக்கை: . பக்கத்திலுள்ள ஸ்டாரை மவுசால் போட்டுத் தாக்கினால் எனக்கு மவுசு ஏறும். நன்றி:-)

உங்கள் கருத்துக்களை இட

திருப்பி தாக்கியவர்கள்:
உங்க சேஷ்டை எங்கே ;-)
 
:-))))))))))))
 
இதோ...என்னோட காமெண்ட்...(உங்க கமெண்ட்டுக்கு பதில் கமெண்ட்டும் உண்டு!)

1. ரெண்டு தொகுதியிலே ஜெயிச்சதுக்கு கலர் கலரா லட்டு தந்துகிட்டே இருக்காங்களே... வர்ற தேர்தலிலீ 234 தொகிதியிலேயும் ஜெயிச்சா என்ன ஆவுறது?! (இதுக்காகவாவது தோக்கடிக்கணும்!)

2. மூக்கா, பீரங்கியா?

3. தலைகீழா நிக்கிறது 'யாரு?!'

4. இது சூப்பர் கமெண்ட்

5. பல்லுல 'சீன' டாக்டர்கிட்டே கட்டின கம்பி இருக்குதாம். அதான் யாராச்சும் தமிழ் மருத்துவர்கிட்டே ஏன் போகலைன்னு தார் பூசிடப் போறாங்கன்னு ஒரு பயம் தான்!

6. கடவுளின் பதில் : 'இதுக்கு மேல யார் நெனச்சாலும் உன்னை காப்பாத்த முடியாதுப்பா! ஸாரி.. Itz too late!"

7. பாஸ்டன் பாலா.. உங்க கேள்விக்கு பதில் இதான்... இந்த போட்டோவிலே இருக்கிறது யாருன்னு நெனச்சீங்க?!
 
நன்றி பாலா, துளசியக்கா, மாயவரத்தான்.

//உங்க சேஷ்டை எங்கே ;-) //
பாலா என்ன சொல்ல வர்றீங்க தெரியலையே?

மாயவரத்தான், இன்னும் சில கருத்துக்கள் படங்களுக்கு.

1. இரண்டு தொகுதிக்கு கொடுத்த லட்டே வாயிலே பத்த மாட்டேங்குது. இன்னும் எல்லா தொகுதியிலும் ஜெயிச்சா?

2. மாயவரத்தான் உங்க வாயில அரசியல் நாத்தம் தாங்க முடியலப்பா. கொஞ்சம் பொறுங்க மூக்கை பொத்திக்கிறேன்.

3. என் பெயரு ஜேம்ஸ் தான். இங்கிலீஸ்ல பெயர் இருக்குதுன்னு மூஞ்சில கரி பூசிறாதீங்க ராமதாசு அய்யா. என்னை விட்டுருங்க.

4. (பெண் எலும்பு கூடு ஆண் எலும்புக் கூட்டைப் பார்த்து சொல்கிறது)ஜெயந்திரருக்கு தீர்ப்பு வர்ற வரை நீட்டுன கைய மடக்க விடமாட்டீங்கன்ன எப்படி?

5. ஒட்டு மொத்த தமிழ் நாட்டு அரசியலையும் இப்படிய வெறுக்கிறது.

6. [கலக்கல்]

7. இவரு பெயர் என்ன லபக்கு தாஸா?
 

உங்கள் கருத்துக்களை இட


<< திரும்ப முன் பக்கத்துக்கு போ

-ல் போட்டுத் தாக்கியது

Store wars

Difficulty in reading this post due to font issues? Click here for a PDF copy. Works best if you right-click the link and select 'Save target as...'
இந்த பதிவை போட்டுத் தாக்கியவர் : Vijayakumar
ஹாலிவுட்டில் ஏதாவது படம் வந்து வசூலை அள்ளிச் சென்றால் அதை வைத்து கிண்டல் பண்ணுவதும், அதைப் போன்ற கருத்தை ஒற்றிய நிறைய விசயங்கள் வெளிவரும். கீழ்கண்ட இணையதளத்தில் store wars என்று சூப்பர் ஸ்டோரில் நடக்கும் war-ஐ மிக அற்புதமாக ப்ளாஷ் வீடியோ ஸ்டீரிமிங் வழியாக கலக்கியிருக்கிறார்கள்.

அந்த படத்தைப் பார்க்க இந்த சுட்டியை க்ளிக்குங்கள்.

Cuke Skywalker அவருடைய நண்பர்களான Obi-Wan Cannoli, Ham Solo and Chewbroccoli உடன் மேற்கொள்ளும் மயிர் கூச்செறியும் சம்பவங்களை காணுங்கள்-"battle the evil Darth Tater".

இது ஒரு பார்ம் (FARM) தயாரிப்பு.

இந்த பதிவின் வாக்கு எண்ணிக்கை: . பக்கத்திலுள்ள ஸ்டாரை மவுசால் போட்டுத் தாக்கினால் எனக்கு மவுசு ஏறும். நன்றி:-)

-ல் போட்டுத் தாக்கியது

கல்யாண மாலை

Difficulty in reading this post due to font issues? Click here for a PDF copy. Works best if you right-click the link and select 'Save target as...'
இந்த பதிவை போட்டுத் தாக்கியவர் : Vijayakumar
ஞாயிறு காலை எழுந்தவுடன் காப்பி கிடைக்கிறதோ இல்லையோ சன் டிவியின் கல்யாண மாலை டிவியில் கிடைத்துவிடும். கல்யாண மாலை நடத்துபவர் (சேகர்??? எதா இருந்த எனக்கென்ன்? இந்த பதிவுக்கு அவரை சேகர் என்றே அழைப்போம்) நிகழ்ச்சியின் மூலமாக கல்யாணமாகாதா பெண்ணையும் ஆணையும் சேர்த்து வைக்கும் தெய்வ கைங்கரியம் என்றும், அவர் செய்யும் இந்த வேலை எவ்வளவு புனிதமானது எனவும் பக்கத்து விட்டு அம்மாள் அவரை தெய்வத்துக்கு ஈடாக அங்கலாய்த்து விட்டு போனார். பாவம் அந்த அம்மாள்! அழுகிய சமூக குளத்தில் மீன் பிடிப்பவர் சேகர் என்று அவருக்குத் தெரியவில்லை. எல்லோரும் காதலித்து மணம் முடிந்தால் அவர் தெய்வ சேவை என்ன ஆகுமோ? என்றைக்காவது என்னுடைய வெளிநாட்டு நண்பர் இது என்ன ப்ரோகிராம் என்று கேட்டால் அவரிடம் என்ன சொல்லி விளக்குவதோ?

Image hosted by PicsPlace.to


மேடையில் தோன்றும் சேகருக்கு எதிரில் இரண்டு அல்லது மூன்று பேர் உட்கார்ந்திருப்பார்கள். ஒருவர் கன்செர்ண்ட் பார்ட்டி மற்ற இருவரோ அல்லது ஒருவரோ அந்த பார்ட்டியின் பாட்டி, தாத்தா, அம்மா,அப்பா, அண்ணண் அண்ணி,மாமா,அத்தை இவர்களில் யாராவது இருவராக இருப்பர். சேகர் கேட்பார் "சொல்லுங்க உங்களுக்கு எப்படிபட்ட மருமகளா வேணும்?" பார்ட்டியுடன் வந்த இருவரில் ஒருவர் "நல்ல அழகுள்ள அறிவுள்ள கண்ணுக்கு லட்சணமா குடும்பப்பாங்கான பொண்ணா வேணும்?நாங்க **** வகுப்பைச் சேர்ந்தவங்க. அந்த வகுப்புலேயே பொண்ணு வேணும்"

அது சரி, குடும்பப்பாங்கான பொண்ணை இவர் சேர்த்து வைக்கவில்லையெனில் அவர் பெயர் வேறு ஏதோ?. நானும் ஏதோ 8ம் வகுப்பு B செக்ஷன் மாதிரி ஒரு வகுப்புன்னு நினைச்சா அது நம் சமூகத்தில் நாறிக் கொண்டிருக்கும் அழுகலை தான் குறிப்பிடுகிறார் என்பது பிறகு புரிந்தது. நம்ம மட்டும் ஒழுங்க. இதுல என்ன தப்பு இருக்கு?

சேகர் நம்ம பார்ட்டியை பார்த்துக் கேட்பார் "நீங்க சொல்லுங்க உங்களுக்கு எப்படிபட்ட பொண்ணு வேண்டும்"

என்னமோ! இவர் மேடைக்கு அந்தாண்ட உள்ள கூண்டில் பல பொண்ணுகளை பிடித்து வந்த மாதிரி, அதுல எப்படிப்பட்ட பொண்ணு வேணும் என்று கேட்கிற மாதிரி

நம்ம பார்ட்டி முகத்தில் ஆயிரம் டன் வெட்கம் வழிய ஆரம்பிப்பார் "ஹி ஹி எனக்கு படிச்சி வேலைப்பார்க்குற பொண்ணா அழகான பொண்ணா வேணும்"

அதற்குள் அந்த பார்ட்டியுடன் வந்த பெண் கண்ணில் கண்ணீர் திரண்டு சேகரை தெய்வமாக பார்த்து "அய்யா நீங்க ரொம்ப நல்ல சேவை செய்றீங்கைய்யா. உங்க சேவைக்கு அளவேயில்லை அய்யா. வீட்டுக்கு வர்ற மருமகளை என்னோட பொண்ணு மாதிரி பார்த்துகிடுவேங்கைய்யா. இது சத்தியம் அய்யா" என்று அடிச்சி சத்தியம் பண்ண சூடம் தேடிக்கொண்டிருப்பார்.

நம்ம சேகர் "கவலைப்படாதீங்கம்மா, உங்க நல்ல(அழுகை) மனசுக்கேத்த மாதிரி அழகான அறிவுள்ள லட்சணமான அடக்கமான நல்ல குணமுள்ள படிச்சி வேலைக்கு போற பொண்ணு கிடைப்பாங்க அம்மா".

ஆகா விஷ்ணு பெருமான் அருள் பாலித்து விட்டார். அவர் மேல் சொன்ன எல்லாத்துடனும் ஒரு பெண்ணை தேடிக் கட்டி வைத்தார் என்றால் உண்மையில் அவர் தெய்வம் தான் என்பதை நான் ஒத்துக் கொள்கிறேன்.

ஸ்லைடு விழுகிறது. பெயர் : சுப்பையா வயது: 30 படிப்பு : BA BEd வகுப்பு : *****

"கல்யாண மாலை இது கல்யாண மாலை சுயம்வரம் ஸ்டார்ட் ஆனாதே. ஆணுக்கும் பெண்ணுக்கும் இது போறாத காலம். பெண்ணுக்கு அடங்கி ஆண் நடந்தால்...." என்று நிகழ்கால கதையை நித்யஸ்ரீ குரலில் இழைத்து பாடிக் கொண்டிருக்க அடுத்த பகுதிக்கு கல்யாண மாலை போகிறது.

Image hosted by PicsPlace.to


தொத்தலாக "எனக்கு என்ன" என்கிற மாதிரி நடுவர் உட்கார்ந்து அவர் இருபக்கத்தையும் கொர்ர்ர்ர் என்று பார்த்துக் கொண்டிருப்பார். பேசுகிறவர்கள் ஏதோ ரொம்ப நாளாக மைக்கைப் பார்க்காத மாதிரி ஏதேதோ பினாத்துவார்கள். "நகைங்க எல்லாம் முக்கியம்கிறேன். இதோ பாருங்க இவங்க அம்மா ஆஸ்பத்திரியிலே சாக கிடந்தப்ப எங்கப்பா போட்டு அனுப்பிச்ச நகை இருக்கிற தைரியத்துல தான் அவங்களுக்கு வைத்தியம் பார்த்தோம்." என்று பாவமாக அவர் பக்கத்தில் உட்கார்ந்திருக்கும் கணவரை காட்டி. கூட்டம் விழுந்து விழுந்து சிரிக்கிறது [ஆமா! மேடையில என்ன சொன்னாலும் விழுந்து விழுந்து சிரிக்கிறதுக்கு ஒரு கூட்டம் எப்போதுமே இருக்குமே]

அட தேவுடா ஒரு பஞ்ச பரதேசிய அப்பன் வீட்டு நகையோட இவங்க கைபிடிச்சிருக்காங்க போல. அந்த தறுதலையை பெத்த அந்த சுகவீன அம்மாவுக்கு தேவைதான்.

"கல்யாண மாலை இது கல்யாண மாலை சுயம்வரம் ஸ்டார்ட் ஆனாதே. ஆணுக்கும் பெண்ணுக்கும் இது போறாத காலம். பெண்ணுக்கு அடங்கி ஆண் நடந்தால்...." திரும்ப நித்யஸ்ரீ.

இப்போது திரும்ப மேடை சேகருடன் மாப்பிள்ளையை தேடி வந்த அந்த பெண்ணும் துணைக்கு இருவர்.

சேகர் கேட்கிறார் "சொல்லும்மா. உனக்கு எப்படிப்பட்ட மாப்பிள்ளை வேணும்"

அந்த பெண் கண்ணில் நீர் முட்ட (வேற எதுக்கு கேமிராவுக்கு பயந்து தான்) "எனக்கு எனக்கு எனக்கு படிச்சி நல்ல வேலை பார்க்கிற மாப்பிள்ளையா வேணும். நான் வீட்டு வேலையெல்லாம் நல்ல செய்வேன்" [மே 22 அன்றைய கல்யான மாலை ப்ரோகிராமில் ஒரு பெண் உண்மையில் சொன்ன வார்த்தைகள் தான் அது]

சில பேர் சொல்வது "எனக்கு படிச்சி நல்ல அழகுள்ள அறிவுள்ள க்ளீன் ஹேபிட் உள்ளவரா வேணும். [முக்கியமா வீட்டுக்கு அடங்குன புருஷனா இருக்கனும்?]"

உடனே சேகர் "கவலைபடாதீங்கம்மா! உங்களுக்கு படிச்சி நல்ல வேலைப்பார்க்குற மாப்பிளையா கிடைப்பாங்க"

மேடைக்கு அந்தப்பக்கத்தில் இன்னொரு கூண்டில் மாப்பிளைகள் உள்ள தைரியத்தில் சேகர் வார்த்தைகளை அவுத்து விடுவார்.

ஸ்லைடு விழுகிறது. பெயர் : அம்பிகா வயது: 28 படிப்பு : B.Com (fail) வகுப்பு : ***** [10 ஆம் வகுப்பு டி செக்ஷன்]

அப்படியே கல்யாணமாலை புக்கு வேற வருகுது என விளம்பரம் வருகிறது.

ஆக மொத்தம் சமூகத்தின் அழுகல்கள் நர்த்தனம் ஆட டிவியில் சந்தைப்படுத்தபடுவது கல்யாணமும் கூட. பெரிய லெவல் கல்யாண புரோக்கர் சேகர். பெரிய லெவல் ப்ரோக்கரின் ப்ரோகிராம் கல்யாணமாலை.

இந்த பதிவின் வாக்கு எண்ணிக்கை: . பக்கத்திலுள்ள ஸ்டாரை மவுசால் போட்டுத் தாக்கினால் எனக்கு மவுசு ஏறும். நன்றி:-)

உங்கள் கருத்துக்களை இட

திருப்பி தாக்கியவர்கள்:
Ithai padithapin, ungalai patriya konja nanja mathippum poivittathu. I am sorry.
 
அது சரி அல்வாசிட்டி விஜய் நீங்க எதுக்கு கல்யாணமாலை பார்க்கின்றீர்கள்,உங்க வீட்டம்மாவுக்கு தெரியுமா நீங்கள் கல்யாணமாலை பார்ப்பது? இல்லையென்றால் அவர்களிடம் போட்டு கொடுக்கனுமா? ஹி ஹி...

எவ்வளவு முக்கியமான விடயம் எழுதியுள்ளீர் ஆனால் இங்கே கிண்டல் அடித்துக்கொண்டுள்ளேன், நமது சமூகத்திலே திருமணம், வரன் பார்த்தல் என்ற பெயரிலே அடிக்கும் கூத்துகளுக்கு அளவே இல்லை, ஆனாலும் என்ன செய்வது??!!@#$%
 
/*
என்றைக்காவது என்னுடைய வெளிநாட்டு நண்பர் இது என்ன ப்ரோகிராம் என்று கேட்டால் அவரிடம் என்ன சொல்லி விளக்குவதோ?
*/
உங்கள் வெளிநாட்டு நண்பரிடம், அவர் ஊர் டிவியில் வரும் 'Blind Date' நிகழ்ச்சி போன்றது இது என்றும், ஆனால் அதைப்போன்று 'வேறு விஷயங்களுக்கு' அல்லாமல் வாழ்க்கை முழுதும் இணைந்து இருப்பதற்கு (இந்த விஷயம் அவருக்குப்புரிவது கொஞ்சம் சிரமம் தான்) நடக்கும் ஒரு நல்ல விஷயம் என்றும் விளக்குங்கள். முக்கியமாக நீங்கள் புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள்.
 
அனானிமஸ்,

//Ithai padithapin, ungalai patriya konja nanja mathippum poivittathu. I am sorry. //

I don't care. உங்களை என் மீது மதிப்பு வைக்க நான் கேட்டுக் கொள்ளவில்லையே. அப்படியே வைத்து அது போய் விட்டால் நான் சொல்வதில் எங்கே தவறு என்று சொல்லலாமே.

குழலி,

ஞாயிறு காலை அந்த நேரத்திற்கு படுக்கையிலிருந்து எழுந்து நடமாடுவதே பெரிய விசயம். நேற்று தெரியாமல் அந்த நிகழ்ச்சி கண்ணில் பட்டுத் தொலைத்தது. அது தான் :-)))).

//நமது சமூகத்திலே திருமணம், வரன் பார்த்தல் என்ற பெயரிலே அடிக்கும் கூத்துகளுக்கு அளவே இல்லை, ஆனாலும் என்ன செய்வது?//

பாயிண்டை கரெக்டா பிடிச்சீங்களே.

கல்யாணமாலை அபிமானிகளே, அதனால் நீங்கள் அடைந்த பயனென்ன? இல்லை இந்த சமூகபணியால் நம் சமுதாயம் அடைந்த முன்னேற்றமென்ன?. டிவியில் வரும் இந்த கண்றாவிகளை பார்க்க சகிவில்லை. தெரியாமல் பார்த்து தொலைத்துவிட்டேன்.
 
அல்வா..

கலக்கிட்டேம்மா... நீங்கள் சொன்ன வார்த்தைகள் நிஜம்.. விடுமுறைக்கு ஊர் சென்றிருந்த போது என் சகோதரி இந்த நிகழ்ச்சியை ஆஹா.. ஓஹோ என்றார்.. பார்த்ததும்.. உங்களைப்போலவே நானும் நினைத்தேன்.. அவரிடமும் கூறினேன்.. அவர் ஒத்துக்கொள்ளவில்லை..
 
இனியவன், டீவிகளும் சமூக பொறுப்பும் என்ற அளவில் ஒரு பெரியதொரு பதிவே போடலாமென நினைக்கிறேன். ஏறக்குறைய தமிழ் கேபிள் சேனல்கள் வந்த காலத்திலிருந்து மூடநம்பிக்கைகளையும், கல்யாணமாலை மாதிரி சமூக நோய்களை நோண்டிப் பார்க்கும் நிகழ்ச்சிகளும் நிறையவே வருகின்றன. நான் ஏறக்குறைய சிலவருடங்களாக டிவி கவனிக்க ஆரம்பித்தது முதல் பார்த்தால், சிவசங்கர பாபாவின் நடனமும், பால் தினகரன் சொஸ்தப்படுத்தும் முறையும், ராசிக்கல் விளம்பரமும், காந்தி ஜெயந்திக்கு சினிமா படம் வைத்து சிறப்பு நிகழ்ச்சிகளும் இந்த டிவிக்கார பசங்களுக்கு மண்டையில மசாலா கம்மியோ என்று தோன்றுகிறது.

சமூகத்தின் நாடிப்பிடித்து அதுக்கேத்த மாதிரி கல்யாணம் பண்ணி வைத்து பணக்காரர்களாக திரியும் எத்தனையோ தரகர்கள் நாட்டில் நடமாடிக் கொண்டிருக்கிறார்கள். இவர் கல்யாணமாலை நிகழ்ச்சி நடத்தி மட்டுமே நாட்டில் உள்ள அனைவருக்கும் கல்யாணம் ஆகிற மாதிரி வீட்டுப் பெண்களின் கேடு கெட்ட நம்பிக்கையை வளர்த்து வருகிறார்கள். எத்தனையோ கல்யாண ப்ரோக்கர்கள் வித விதமாக மார்க்கெட்டில் அலைகிறார்கள். இன்ஞ்சினியர் படித்த பொண்ணு என்றால் 70000, டாக்டர் படித்த பொண்ணு என்றால் 10000 ரூபாய் பீஸ் என்று வாங்கிக் கொண்டு அலையும் எத்தனையோ பேரை பார்த்திருக்கிறேன். அவர்கள் கல்யாணம் மட்டும் தான் பண்ணி வைக்கிறார்களா என்ற சந்தேகம் எனக்கு எப்போது உண்டு. இதனால் தான் இந்த மாதிரி நிகழ்ச்சிகளை காணச் சகிக்கவில்லை டிவிகளில்.
 
neengal kalyaana maalai nigalchiyai kurai sollukireergal...

Tamilmatrimony.com is creating history for making arranged marriages. So, same likek matrimony website, this is also helping peoples to find the best groom and bride. this is more reliable and peoples are getting chance to see the bride and groom.

neril senru pen or maapilai paarpathu, pennai or maapilai vendaam enpathu ithu ellam kuraya vaaipu ullathu.

ithu ponra nigalchigalai varaverpoam. mudinthaal athai meruhetra "TIPS" kudungal. thayavu seithu kindal seyya vendaam. because may be many marriages happening because of this..who knows?

neengal ethirpaarkum thirumanangal INDIA vil adutha thalai muraiyil nadakkum.
 
Well, in fact what the host is doing on TV is done by many others in houses. Lets be honest, didnt we all look for a gal from our own community ??
 
Namma oorule ethulada kutram kandupidikkirathunnu alaiyira koottam...vittu thallanum...eluthirathukku vizhayame illennu ninaikkiren.....varatchi...
 
//ஏறக்குறைய தமிழ் கேபிள் சேனல்கள் வந்த காலத்திலிருந்து மூடநம்பிக்கைகளையும், கல்யாணமாலை மாதிரி சமூக நோய்களை நோண்டிப் பார்க்கும் நிகழ்ச்சிகளும் நிறையவே வருகின்றன//

ஒரு பெரியார் மிகக்கடினப்பட்டு ஓரளவுக்கு மூடப்பழக்கம்,பேய் பிசாசு என்பதை அழித்த சமூகத்தை மீண்டும் அதில் தள்ளுகின்றன தொலைக்காட்சிகள், காலையில் ராசிப்பலனில் ஆரம்பித்து மைடியர் பூதம்,ராஜராஜேஸ்வரி,அது மட்டும் ரகசியம்,சிதம்பர ரகசியம் எத்தனை எத்தனையோ மூடப்பழக்க தொடர்கள்,ராசிக்கல் என பல நிகழ்ச்சிகள், இதெல்லாம் பெரியாரின் சீடரின் தொலைக்காட்சியிலேயே என்னத்த சொல்ல
 
டேய் விசயகுமாரு, அப்படி என்னடா உனக்கு மோகன் மேல கோபம் ? அவரு படத்தை போட்டாச்சு, பின்னே பெயரை மட்டும் ஏன் மாத்தி போடனும் ? அவரு ஏதோ பண்ணிட்டுயிருக்காரு ? இந்த சேவைக்கு எதாவது காசு வாங்குறாருனா, நீ சொல்லுறது சரிதான். ஆனா காசு வாங்கம தானே செய்யுறார்.. இப்போ யார் கிட்டையாவது நீ ஆசிர்வாதம் வாங்கிருகீயா ? அதே மாதிரி தாண்டா அவர் நல்ல பையனோ பொண்ணோ கிடைக்கும் செல்லுறது.. எல்லாத்துக்கும் குதர்க்கம் பேசலாம்..

எதோ எனக்கு பட்டத சென்னேன் போ...

நன்றி..

என்றும் அன்புடன்
சங்கர்..
 
ஐயோ கலக்குறீங்க..இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து பார்த்து கொண்டிருக்கும் சக உழியன் , 'கவலைப்படாதீங்கம்மா, உங்க நல்ல மானசுக்கேத்த மாதிரி அழகான அறிவுள்ள லட்சணமான அடக்கமான நல்ல குணமுள்ள படிச்சி வேலைக்கு போற பொண்ணு கிடைப்பாங்க என்ற பேச்சில் மயங்கி ' அவர் நல்ல மனுஷனா இருக்காரு.. எவ்வளவு அமைதியா ஆறுதலா பேசுறாரு' . அட பாவிங்களா!! இப்படி ஒவ்வொருத்தனையா நினைச்சு முதல்வர் ஆக்கிவுட்ருங்கடா..
 
Nice Post . Same feeling with me.
 

உங்கள் கருத்துக்களை இட


<< திரும்ப முன் பக்கத்துக்கு போ

-ல் போட்டுத் தாக்கியது

என் பதிவுகள் இனி கைத்தொலைபேசியிலும் படிக்கலாம்

Difficulty in reading this post due to font issues? Click here for a PDF copy. Works best if you right-click the link and select 'Save target as...'
இந்த பதிவை போட்டுத் தாக்கியவர் : Vijayakumar
காலம் காலமாக நான் மென்பொருள் துறையில் குப்பைக் கொட்டிக் கொண்டிருந்தாலும் ஏதோ வயிற்றுப் பிழைப்புக்காக தான் அந்த தொழில் என்ற முறையில் தான் இருப்பேன். சில சமயம் தீடிரென்று மென்பொருளின் மீது கட்டுக்கு அடங்கா காதல் ஏற்பட்டு எதாவது மென்பொருளைப் பிடித்து நோண்டிக் கொண்டிருப்பேன். காதல் சிலகாலம் தான். அதற்குள் என் கவனமும் ஏதாவது ஒன்றில் திரும்பி பழையபடி பழைய நிலமைக்கு மாறி விடுவேன்.

இந்த வாரம் முழுக்க கைத்தொலைபேசிகளில் ஜாவா என்ற தலைப்பில் நோண்டிக் கொண்டிருக்கும் போது தற்செயலாக 'டெக்குயூலா கேட்' என்ற கைத்தொலைபேசி புத்தகத்தை உருவாக்கும் ஒரு மென்பொருள் வந்து மாட்டியது. எனக்கு ஜாவா ஒரு சதவிகிதம் தான் தெரியும். அந்த நிலையிலும் டெக்குயூலா கேட் மென்பொருளை நோண்டி நுங்கெடுத்து தமிழில் கைத்தொலைபேசி புத்தகத்தை உருவாக்க முடிந்தது.

திடீரென என் மூளையில் ஒரு பல்ப் உதிக்க, என்னுடைய தினசரி பதிவுகளை ஏன் கைத்தொலைபேசியில் வழங்கக்கூடாது எனத் தோன்றியது. அதன் வசதி என்னவென்றால், அலுவலகத்திற்கு பஸ்ஸிலோ,இரயிலிலோ பயன் செய்யும் போது GPRS வழியாகவும், இல்லையென்றால் கிளம்பும் முன் என் பதிவை உங்கள் கைத்தொலைபேசியில் போட்டுக் கொண்டால் நீங்கள் பயணம் செய்துக் கொண்டே உங்கள் கைத்தொலைபேசியில் என் பதிவை படிக்கலாம்.(வேணாம்... வேணாம்... அப்படி படிக்கிறதுக்கு என் பதிவுல என்ன இருக்குன்னு கேட்டா நான் மனசு நொந்து போயிருவேன்...அவ்வ்வ்வ்வ்)

உங்களிடம் எந்த மாடல் கைத்தொலைபேசி இருக்க வேண்டும்? மாடல் எல்லாம் எனக்கே தெரியாதுங்க. குறைந்த பட்சம் உங்களிடம் இருக்க வேண்டியது ஜாவா மென்பொருளை ஓட்டும் ஒரு கைத்தொலைபேசி அவ்வளவு தான். இப்போது தான் எல்லா கைத்தொலைபேசிகளிலும் ஜாவா கேம்களை கொடுத்து உங்களை கெடுத்து வைத்திருக்கிறார்களே. அப்படியானல் உங்களால் என்னுடைய பதிவுகளையும் உங்கள் கைத்தொலைப்பேசியில் படிக்கலாமென நினைக்கிறேன். உங்களிடம் GPRS என்ற கைத்தொலைப்பேசி இணைய வசதியிருந்தால் நல்லது. இல்லாவிட்டாலும் ஜாவா கோப்புகளை கணியில் இறக்கி கைத்தொலைப்பேசியில் ஏற்றும் வசதியிருந்தாலும் சரி. மிக எளிதாக இந்த கைத்தொலைப்பேசி புத்தகத்தை ஏற்றிப் படிக்கலாம்.

Image hosted by PicsPlace.to


டெக்னிகலாக அதிகம் சொல்லத் தெரியாத காரணத்தால் இத்துடன் விளக்கத்தை நிறுத்திக் கொள்கிறேன். மேலும் சந்தேகம் இருந்தால் என்னை njvijay at halwacity dot com என்ற முகவரியில் தொடர்புக் கொள்ளலாம்.

சரி. இப்போது இதில் இருக்கும் குறை/நிறைகளை பார்ப்போம். நிறை என்றால் கைத்தொலைபேசியில் தமிழிலேயே பதிவுகளை/கதைகளை படிக்கும் வாய்ப்பு. குறை என்று சொன்னால் எழுத்துரு (font) தான். யூனிகோட் பயன்படுத்தவில்லை. டிஸ்க்கி தான் பயன்படுத்துகிறேன். மேல் சொன்ன மென்பொருள் வெறும் windows font -ஐ மட்டும் சேர்க்க அனுமதிப்பதால் என்னால் TSC_AvaragalFxd மட்டுமே பயன்படுத்த முடிகிறது. இதனால் தமிழ் கொக்கி எழுத்தில் வரும் கொக்கி மட்டும் கொஞ்சம் உயரத்தில் தொங்கிக் கொண்டிருக்கும். வெகு சிறிதாக அசௌகரியம் கொடுத்தாலும் உங்களால் தமிழை கைத்தொலைபேசியில் படிக்க முடியும். படங்கள் வராது. எழுத்துருக்கள் அழகுப்படுத்தபடவில்லை/முடியாது(தற்காலிகமாக).


தற்போதைக்கு கைத்தொலைபேசியில் தமிழ் எழுத்துக்கள் இப்படி தான் தோன்றும்Image hosted by PicsPlace.to


வெள்ளோட்டமாக 'புதுமைபித்தனின்' 10 சிறுகதைகளை கைத்தொலைப்பேசி புத்தகமாக வெளியிடுகிறேன். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் GPRS தொடர்பு வழியாகவோ இல்லையென்றால் உங்கள் கணனியிலோ .jar கோப்புகளை இறக்கிக் கொண்டு உங்கள் ஜாவா கைத்தொலைபேசியில் ஏற்றிக் கொண்டு நீங்களே சோதனை பண்ணிப் பார்த்துக் கொள்ளுங்கள். கட்டாயம் உங்களின் பதில்களை எதிர்பார்க்கிறேன். ஊக்கமும், ஆர்வமும் இருந்தால் இன்னும் நிறைய பண்ணலாம். மகிழ்ச்சியான செய்தி என்னவென்றால் உங்களிடம் இருக்கும் பழைய ஜாவா கைத்தொலைபேசியிலும் வேலை செய்யும். அதாவது MIDP 1.0 & MIDP 2.0 -க்களில் எந்த தடங்கலும் இல்லாமல் வேலை செய்ய வேண்டும்,(நான் என்னுடைய கைத்தொலைபேசியில் மட்டுமே சோதித்திருக்கிறேன். அதனால் தான் அந்த பொறுப்பை உங்களிடம் கொடுக்கிறேன்)

கீழே கோப்புகளை பெற்றுக் கொள்ளுங்கள். முயற்சி செய்து பாருங்கள். உங்கள் பதிலை எனக்கு சொல்லுங்கள்.

புதுமைப்பித்தனின் 10 கதைகளும்... (.jar கோப்பு 60KB-களை கொண்டது)

http://www.geocities.com/njvijay/Java/puthumai.jar

உங்கள் கைத்தொலைபேசியில் மிகச் சிறிதளவே இடமிருந்தால் புதுமைப்பித்தனின் 'அகலியை' என்ற சிறுகதையை மட்டும் படித்துப் பாருங்கள் (இந்த .jar கோப்பு 30 KB அளவுள்ளது)

http://www.geocities.com/njvijay/Java/short.jar

கீழ்கண்ட புதுமைப்பித்தனின் சிறுகதைகள் உங்கள் கைத்தொலைபேசியில் அடங்கப்போகிறது.

1. அகலியை
2. கோபால் அய்யங்காரின் மனைவி
3. இரண்டு உலகங்கள்
4. கடவுளின் பிரதிநிதி
5. காலானும் கிழவியும்
6. மெஷின் யுகம்
7. ஒரு நாள் கழிந்து
8. படபடப்பு
9. பொன்னகரம்
10. தெருவிளக்கு

எனக்காக செய்த முயற்சி உங்களுக்கும் பயன்படலாம் என்ற யோசனையில். பயன்படுத்திவிட்டு சொல்லுங்கள்.

அடுத்து 'பின்னூட்ட எஞ்சின்' ஒன்றை தயாரிக்கலாமா என யோசித்துக் கொண்டிருக்கிறேன். அதாவது அந்த மென்பொருளை ஒரு தட்டு தட்டிவிட்டால் 1000 கணக்கில் பின்னூட்டத்தை அள்ளி வழங்கும். இதுக்கு யாருப்பா ரெடி?

இந்த பதிவின் வாக்கு எண்ணிக்கை: . பக்கத்திலுள்ள ஸ்டாரை மவுசால் போட்டுத் தாக்கினால் எனக்கு மவுசு ஏறும். நன்றி:-)

உங்கள் கருத்துக்களை இட

திருப்பி தாக்கியவர்கள்:
பின்னூட்ட எஞ்சினா??? நாம என்னா எம்மெல்லே எம்பி எலக்சன்லயா நிக்கறோம்... பின்னூட்டங்கர பேர்ல ஏதோ சாமன்ய மக்கள் "வாய்ஸ்" கொடுத்து பொளுது ஒட்டிகினு இருக்கோம், அதிலயும் ரவுசு பண்ணிறாதவே அல்வா... கம்யூனிஸ்டுங்க வேற ரீஜன்டா கொரலுட சமாச்சாரமே சிக்க மாட்டேன்னுதுன்னு கவலைலகீறாங்க... அவங்களுக்கு வேல கொத்துறாதப்பு
 
கைத்தொலைபேசியில் பதிவுகளை இட உங்கள் முயற்சியும் முறையும் பயன்படுமானால் வலைப்பதிவுகளின் இன்னொரு வளர்ச்சி சாத்தியமாகிறது.
வாழ்த்துக்கள்

பின்னூட்ட SPAM செய்யப் போறீங்களா? தேவையா?
 
விஜய்,
நம்பவே முடியவில்லை. செல்பேசியில் தமிழ் என சமீபத்தில் மிகப் பரபரப்பாய்ப் பேசப்பட்டதே உங்களுக்கு நினைவிருக்கிறதா?. முழுக்கதையும் செல்பேசியில் படிக்க இயலுமா?. நம்பவே முடியவில்லை. கதைகளை எப்படி செல்பேசிக்கு இறக்கிக்கொள்வது என்று கொஞ்சம் விளக்கமாய்ச் சொல்லுங்களேன்.
 
நல்ல முயற்சி விஜய், பாராட்டுக்கள்!
 
விஜய்,
நீங்கள் கொடுத்த முகவரியிலிருந்து நேரடியாய் ( http://www.geocities.com/njvijay/Java/puthumai.jar) என்னுடைய செல்பேசிக்கு GPRS மூலம் இறக்க முயற்சி செய்தேன், கோப்பு "unsupported file formate" என்கிறது :-(.
 
அன்புள்ள விஜய்,

'ஐடியா' நல்லா இருக்கு. இதுக்குப் பொருத்தமான 'கைத் தொலைபேசி'யை உடனே
அனுப்பிவைக்கவும். ச்சும்மா ஒரு நாலு போதும், வீட்டுலே ஆளுக்கு ஒண்ணு!!!
 
முத்து,

நான் சோதித்து பார்த்தது nokia 6230i மாடலில் மட்டுமே.மற்றபடி மென்பொருள் வழியாக சோதித்துப் பார்த்ததில் ஜாவா ஓடும் எல்லா கைத்தொலைபேசியிலும் இதைப் படிக்கலாம் என தோன்றியது. நான் இதில் பயங்கர வல்லுனன் எல்லாம் இல்லையாதலால் தொழில்நுட்பத்தில் உங்களுக்கு அவ்வளவாக உதவ முடியாத நிலையில் உள்ளேன். முத்து உங்கள் தொலைபேசியில் ஜாவா ப்ரோகிராமை இறக்கியிருக்கிறீர்களா? எப்படி அந்த ப்ரோகிராம்களை வழக்கமாக உங்கள் கைத்தொலைபேசியில் இருக்குவீர்கள்? என்பதை எனக்கு தனி மடலில் சொல்வீர்களா? இது என்னுடைய மைக்ரோ முயற்சி மட்டுமே. பலர் இதை பரிசோதித்து சொன்னால் இன்னும் விரிவாக செய்யலாம். வழக்கமாக .jad கோப்பை மட்டும் தான் GPRS -ல் கொடுப்பார்கள் என நினைக்கிறேன். என்னால் இந்த கோப்பை எந்த செர்வரிலும் ஏற்ற முடியவில்லை. அதனால் .jar-ஐ போட்டேன். என்னுடைய மாடலில் வேலை செய்கிறது. வேண்டுமானால் தனிமடலில் அந்த இரண்டையும் உங்களுக்கு அனுப்புகிறேன். பரிசோதித்துச் சொல்லவும்.உங்கள் உதவி பேருதவியாக இருக்கலாம்.

துளசியக்கா,

நோக்கியாவின் 60 வகை தொலைபேசி எல்லாவற்றிலும் கட்டாயம் வேலை செய்ய வேண்டும். மற்றவகளை பற்றி சீக்கிரமே விரிவாக எழுதுகிறேனே?
 
GPRS வழியாக பயன்படுத்தாமல் மேல் சொன்ன ஜாவா கோப்பை உங்கள் கணியில் இறக்கி, தொலைபேசியில் நிறுவி பயன்படுத்தி பாருங்களேன். ஏற்கனவே உங்கள் தொலைபேசிகளில் ஜாவா ப்ரோகிராம்களை நிறுவியிருந்தால் உங்களுக்கு தெரியலாம். பயன்படுத்த முனைந்தவர்கள் கண்ட பிரச்சனையை சொல்லலாம்.
 
கணியில் .jar இறக்கி தொலைப்பேசியில் நிறுவ...

1. To be able to install the application onto your device, you may need .jar file. Click on the "Download" link next to these and select 'save to disk' to download the files onto your computer.
2. Use your device connectivity software to install the downloaded files onto your device using a cable or an infra-red link - see device manual for details.
3. You can also run the applications using a MIDP emulator, such as the J2ME Wireless Toolkit found on http://java.sun.com/products/j2mewtoolkit/download.html
 
அன்பின் விஜய் நல்ல முயற்சி. தொடர்ந்து வெற்றி கொடி கட்டுங்கள். நான் முதலில் எவ்வாறு கைப்பேசிக்கு அப்லோட் என்று பார்க்கவேண்டும்.

செய்துபார்த்துவிட்டு மீண்டும் வருகிறேன்.
 
ஒடம்பு பூர மூளை போலருக்கு சார் உங்களுக்கு!
 
நன்று, வாழ்த்துகள், பாராட்டுகள்.

இப்போதைக்கு என் தொலைபேசியில் ஜாவா இல்லை, ஜி.பி.ஆர்.எஸ் மட்டும்தான். InFusio என்ற விளையாட்டுக்கு மட்டுமே பயன்படும் மென்பொருள் இயங்குமென்பொருள் மட்டுமே உள்ளது.

ஆனா இப்படியே நிறுத்திடாதீங்க அதுக்காக. கூடியவிரைவில் எல்லாருக்கிட்டயும் ஜாவா வந்துடும். அப்போ இணையத்துல தேடிப்பார்க்கும்போது தமிழ் மென்பொருட்கள் இருந்தா எவ்வளவு சந்தோஷமா இருக்கும் தெரியுமா! எனவே நீங்கள் பாட்டுக்கு தொடரவும். பலன் கூடியவிரைவில் கிடைக்கும் (எங்களுக்குத்தான்).

geocitiesல் கோப்புகளுக்கு restrictionஇருக்கு, இல்ல. எனவே, brinksterல் ஒரு கணக்கு துவங்கி வேண்டியதை அப்லோட் பண்ணிக்கோங்க (audio files & executable files மட்டும் கிடையாது). அதுல WAP support கூட இருக்கு. இந்த மாதிரி புதுப்புது விஷயங்கள் எல்லாம் முயன்று பார்க்க ஒரு சொந்த சர்வரோ அல்லது serverside scripting வசதி இருக்கும் இலவசதளத்தில் ஒரு கணக்கோ மிகவும் அத்யாவசியம். ப்ளாக்ஸ்பாட், ஜியோசிடீஸ் எல்லாம் சரிப்பட்டு வராது.

மற்றபடி துளசிகோபால் சொன்னதை நானும் வழிமொழிகிறேன். ஆனால் எனக்கு ஒரே ஒரு தொலைபேசி அனுப்பி வைத்தால் போதும். :-)
 
நன்றி தமிழ்வாணம். பயன்படுத்து விட்டு சொல்லுங்களேன்.

//பயங்கர மண்ட ஸார் உங்களுக்கு//
//ஒடம்பு பூர மூளை போலருக்கு சார் உங்களுக்கு! //

ஹரி, மாயவரத்தான் இந்த மண்டையும், உடம்பு பூரா மூளையும் டெக்குலா கேட் தயாரிச்ச Tequilacat, Panya என்ற ரஷ்யரை தான் சேரும். கீழே போய் பாருங்க

http://tequilacat.nm.ru/dev/br/

நான் அதை தமிழ் படுத்தி மட்டுமே பார்த்தேன். அந்த மென்பொருளை பயன்படுத்தி எப்படி உடம்பெல்லாம் மூளை பெறுவது எப்படின்னு சொல்லி சீக்கிரமே பதிவு போடுகிறேன்.

க்ரூபா, உங்களின் ஊக்கத்திற்கும் ஆக்கத்திற்கும் நன்றி. என்னோட ஆர்வம் எப்படி போகலாமென பார்த்து விட்டு காசு கொடுத்து செர்வார் வாங்கி வைத்துக் கொள்ளலாமென நினைக்கிறேன். அதுவுமில்லாமல் ஜாவா கைத்தொலைபேசியில் ஏகத்துக்கு வந்து விட்டது.

நன்றி.
 
என்ன விஜய், என்னாச்சு நல்லாத்தான இருந்தீங்க!?

வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்.

என்னுடைய 6610ல் Page Not Supportedனுதான் வந்தது. Jar கோப்பை அப்படியே இறக்கமுடியுமான்னு தெர்ல...சரி நாளைக்கு சந்திக்கும்போது நேரில் பார்க்கலாம், முயற்சி செய்யலாம்.

அப்புறம், துளசியக்கா, கிருபா மாதிரி பேராசையெல்லாம் எனக்கு கிடையாதுப்பா. எனக்கு டோர்டெலிவரில்லாம் வேணாம், நானே நேரில் பெற்றுக்கொள்கிறேன்:)
 
நம்ம 'தல' ஒரு சூப்பர் மேட்டர் சொல்லியிருக்காரு.. உடனே அவருகிட்ட போய் எனக்கு நாலு செல்லு அனுப்பு, ஒண்ணு அனுப்பு, நானே வந்து வாங்கிக்கிறேன் அப்படீன்னு எல்லம் பின்னோட்டம் கொடுத்து ஏம்ப்பா அவரு மனசை புண் படுத்துறீங்க?! ஒழுங்கா வரிசையிலே வந்து பின்னோட்டம் கொடுத்தா நாம கொடுக்குற பின்னோட்டத்துக்கு தகுந்தா மாதிரி அவரே செல் அவரு செலவிலே தர்றதா முடிவெடுத்திருக்காராம். அதுவுமில்லாமா நம்ம தலயோட சகா சம்மி அண்ணாச்சி வேற அவரு பங்குக்கு ஒரு செல் தருவாராம்... எல்லாரும் அல்ல்க்கட்டுங்க.. அல்லக்கட்டுஙோய்...!
 
துளசியக்கா, க்ருபா, அன்பு, மாயவரத்தான்,

ஹி ஹி ஹி :-)... உங்களுக்கு போன் தானே வேனும். இந்த மென்பொருளை விலை கொடுத்து வாங்கிக் கொள்ளுங்கள். ஒரு போன் இலவசம். இது எப்படியிருக்கு. மென்பொருள் விலை அதிகம் ஒன்னுமில்லை பாய்ஸ்&கேர்ள்ஸ், ஜஸ்ட் 600 சிங்கப்பூர் டாலர் தான். மென்பொருளுடன் போன்+ ப்ளூ தூத் (Bluetooth) வசதி கூட தருகிறேன். இந்த டீல் நல்லாயிருக்கா :-))))))
 
அன்பு,

மன்னிக்கவும். கைத்தொலைபேசி புத்தகத்தை GPRS வழியாக இறக்க முடியவில்லை.(நான் பதிவில் தவறுதலாக குறிப்பிட்டி விட்டேன் ). GPRS பற்றி பார்த்துக் கொண்டிருக்கிறேன். க்ருபா சொன்ன மாதிரி தொழில் நுட்பம் நல்லபடியாக போனால் காசு கொடுத்து செர்வரில் இடம் வாங்கி தொலைப்பேசி புத்தகத்தை போட வேண்டும். தற்சமயம் இதை உங்கள் கணியில் இறக்கி SYNC தான் பண்ண வேண்டும்.
 
ஆகா என்னே உங்கல் சேவை?! என்னக்கு இப்போதைக்கு போன் மட்டும் போதும். மென்பொருள் அப்பாலிக்கா வாங்கிக்கிறேன்! ஓ.கே.வா?! (போற போக்கைப் பார்த்தா 100+ஐ தொட்டுடும் போலருக்கே?!)

ஹி ஹி ஹி :-)...
 
உங்கல் ---> உங்கள்
 
மாயவரத்தான் அண்ணே, உங்கல் என்று சொல்லி பொங்கல் கொடுக்குறீங்களே.

உங்களுக்கு இல்லாத போனா? சிங்கப்பூருக்கு வந்து நேரடியாக என்னிடம் பெற்றுக் கொள்ளலாம். (இந்த சலுகை சிங்கப்பூரில் வசிக்காதவர்களுக்கு மட்டுமே) :-)))
 
விஜை, எல்லோருக்கும் ஓசியில் செல்பேசி தரும் வரைக்கும் உங்களுக்கு சொந்த இணையதளம் கிடைக்காமல் இருக்கக்கடவது! காசு குடுத்து வாங்கற வரைக்கும் இப்போதைக்கு ப்ரின்க்ஸ்டர் தளத்தையே பயன்படுத்திக்கோங்களேன்!

<a href="http://www.brinkster.com">http://www.brinkster.com</a>க்குப் போய் ஒரு கணக்க துவக்கிக்கோங்க.

அப்பறம் கீழ்க்கண்ட கோடிங்கை ஒரு ASP fileஆ சேமிச்சு, அந்த ஜார் கோப்போட சேர்த்து அப்லோட் பண்ணிட்டா போதும். ப்ரிங்க்ஸ்டர்ல wap/gprs support இருக்கு, பல ஈபுக் வெளியிடலாம்.

<%Response.ContentType="text/vnd.wap.wml" %>
<!DOCTYPE wml PUBLIC "-//WAPFORUM//DTD WML 1.1//EN" "http://www.wapforum.org/DTD/wml_1.1.xml">
<wml>
<card id="Tamil" title="Tamil eBook">
<p>
<a href="short.jar">short.jar</a>
</p>
</card>
</wml>


ரிமோட் லிங்கிங்கை அனுமதிக்கும் ஜியோசிடீஸ் கூட ஏனோ 'செல்' கண்டண்டில் நிறைய மக்கர் பண்ணுகிறது. ப்ரிங்க்ஸ்டர் ரிமோட் லிங்கிங்கை அநுமதிப்பதில்லை. ஆனால் அத்தளத்தில் இருக்கும் ஒரு ஏ.எஸ்.பி./ஹெச்.டி.எம்.எல் கோப்பின் வழியாக பைனரி கோப்புக்களைப் பதிவிறக்க அனுமதி உண்டு.
 
//சிங்கப்பூருக்கு வந்து நேரடியாக என்னிடம் பெற்றுக் கொள்ளலாம்//

நல்லதாப்போச்சு...வர்ற ஜூன் 5-ம் தேதி நீங்க ப்ரீயா? எங்கே வந்து செல் போனை பெற்றுக் கொள்ளலாம்?! (நெசம்மாவே சிங்கப்பூர் வர்றேன்! வாழ்க 'ஏர்-ஆசியா')
 
என்ன செல்ஃபோனுள்ள தமிழா?
Technolgy improved so much..?

நானும் சிங்கப்பூர் வந்து(!)செல்ஃபோன் வாங்கிக்கவா??
 
க்ரூபா சங்கர்,

உங்கள் சாபத்திற்கு நன்றி:-))) உவகையுடன் ஏற்றுக் கொள்கிறேன். .jar, .jad-க்கு MIME setting பண்ண வேண்டியிருக்கிறது. ஏறக்குறைய காசுக் கொடுத்து வலைத்தளம் வாங்கும் பிராசசில் உள்ளேன். அடுத்தவாரத்தில் ஒரு நல்ல செய்தி வரலாம். நீங்க முயற்சி பண்ணி பார்த்து கட்டாயம் சொல்லவேண்டும்.

மாயவரத்தான்,

//நல்லதாப்போச்சு...வர்ற ஜூன் 5-ம் தேதி நீங்க ப்ரீயா? எங்கே வந்து செல் போனை பெற்றுக் கொள்ளலாம்?!//
(வடிவேலு சொல்கிற மாதிரி) ஆஹா... தெரியாமத்தனமா வாயை விட்டு மாட்டிக்கிட்டேன். வந்துட்டான்யா வந்துட்டான்யா...

ஹி ஹி... நான் ஜூன் 5 ப்ரீயா இல்லையே ஹி ஹி...

எல்.எல்.தாஸூ,

Technolgy improved so much, you know ';-). ஆமாம் நீங்கள் பார்த்திருப்பீர்களே. சிங்கப்பூரில் செல் எவ்வளவு முக்கியமென. கட்டாயம் ஒன்றை வாங்கிக் கொள்ளுங்கள்.
 
வணக்கம் விஜய்,
இன்று
http://mobile.halwacity.com
மூலம் என்னுடைய கைத்தொலைபேசியிலிருந்தே (Nokia 6610) GPRS உதவியுடன் மிக சுலபமாக புதுமைப்பித்தன் சிறுகதைகள் இறக்கமுடிந்தது.

இங்கு நீங்கள் போட்டிருப்பதைவிட வெகுஅழகான தமிழில் படிக்கமுடிகிறது, நன்றி.

நல்ல முயற்சி, வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.

கைத்தொலைபேசி போன்ற உபகரணங்களுக்கு கதையை விட கவிதை/ஹைகூ வடிவம் இன்னும் சிறப்பாக இருக்கும். சில நல்ல கவிதைகளை இடுங்கள்:)
 
எனது LG ரக பேசியிலும் தெளிவாக தெரிகிறது. புதுமை என்ற தொகுப்பை இறக்கி பார்த்தேன். வாழ்த்துக்கள். அன்பு சொன்னது போல சின்ன கவிதைகள் இடுங்கள்.
 
நன்றி அன்பு, சயந்தன்.

சீக்கிரமே நிறைய விசயங்கள் உங்கள் கைத்தொலைபேசியில் வரலாம். உங்களிடமும் சப்போஸ் GPRS இருந்தால் சப்போஸ் ஜாவா இருந்தால் சப்போஸ் இந்த http://mobile.halwacity.com -ஐ முயற்சி செய்துப் பாருங்களேன்.
 
//இங்கு நீங்கள் போட்டிருப்பதைவிட வெகுஅழகான தமிழில் படிக்கமுடிகிறது//

அடேங்கப்பா.. ஆச்சரியமாயிருக்கே.. இவரு போட்டிருப்பதை விட வெகு அழகான தமிழிலா?! ஓ.. இவரு கொஞ்சம் ஆங்கிலம் கலப்பா எழுதுவாரு.. அதான் குடிதாங்கிகளுக்கு பயந்து அதுவே மாத்திகிடுச்சி போல! அப்படியிருந்தாலும் அது புதுமைப்பித்தன் தமிழாச்சே!
 
எப்படி மாயவரத்தான் இப்படியெல்லாம்? :-) இந்த கிண்டல் உங்க கூடவே பிறந்ததா... இல்லை வளரும் போது கடவுள் கிண்டல் வரம் கொடுத்தாரா? எப்படிங்க இப்படி?
 
மயவரத்தான் அண்ணே, ராமதாஸ் தொண்டர் படையில சேர்ந்துகிட்டீங்களா என்ன? அவர் அழகான தமிழ் என்று சொன்னது தமிழ் எழுத்துருவை. நம்ம தமிழை அழகான தமிழ்ன்னு யாருமே சொல்லமாட்டாங்க :-))))))))
 
விஜய்,
அருமை. மின்னஞ்சலில் ஏற்கனவே சொன்னபடி
http://www.halwacity.com/jar/puthumai.jad -ல் இருந்து எனது சாம்சங்E-700 செல்பேசிக்கு இறக்கினேன். தமிழ் எழுத்துக்குக்கள் அழகாய்த்தான் இருக்கின்றன. கீ, சி போன்ற எழுத்துக்கள் மட்டும் கொஞ்சம் (கொஞ்சம்தான்) வித்தியாசமாய்த் தெரிகின்றன. மிக அருமை.

WAP மூலம் http://mobile.halwacity.com பார்த்தேன். மோகினித்தீவு இறக்கியிருக்கிறேன். ஒரு சுவாரசியமான விஷயம், இப்புத்தகங்களை நான் முதன்முதலாய் செல்பேசியின் மூலமாகத்தான் படிக்கப்போகிறேன். இதுவரை இதைப் படித்ததில்லை.

நீங்கள் முதலில் கொடுத்த jar கோப்புகள் எனக்கு வேலைசெய்யவில்லை, பின்னால் கொடுத்த jad கோப்புகள்தாம் செல்பேசிநூலைப் படிக்க உதவின.

நீங்கள் இந்த jad கோப்புகளின் முகவரிகளைக் குறிப்பிட்டு புதிதாய் ஒரு பதிவு எழுதினால் நல்லது எனத் தோன்றுகிறது.
 
நன்றி முத்து.

ஆம் கொம்பு எழுத்துக்கள் கொஞ்சம் ஓட்டு பிரிந்து தான் தெரிகிறது. 'கீ' இந்த மாதிரி சுழி கொம்பெழுத்து அதை விட கொடுமை. காலப்போக்கில் இதை சரி செய்து விடலாம். மொத்தத்தில் முதலில் சிறு தடங்கல் இருந்தாலும் பழகிவிட்டால் தடங்கல் இல்லாமல் படிக்கலாம் என்பது என் அபிப்ராயம்.

கொஞ்சம் பொறுங்கள். ஒரு வடிவத்துக்கு இதை கொண்டு வந்த பிறகு விரிவாக எழுதுகிறேன்.
 
எனக்கும் வடிவாக வேலைசெய்கிறது... (கொம்புப் பிரச்கனையை தவிர...) மற்றது தெளிவாகவும் தெரிகிறது...
 
மிக்க நன்றி நோநோ. கொஞ்சம் பொறுத்துக் கொள்ளுங்கள். இன்னும் நிறைய வசதிகளுடன் கூடிய விரைவில்....
 

உங்கள் கருத்துக்களை இட


<< திரும்ப முன் பக்கத்துக்கு போ

-ல் போட்டுத் தாக்கியது

இன்னாது இது?

Difficulty in reading this post due to font issues? Click here for a PDF copy. Works best if you right-click the link and select 'Save target as...'
இந்த பதிவை போட்டுத் தாக்கியவர் : Vijayakumar
சுவாரஸ்யமாக வரும் சில மின்னஞ்சல்களில் கீழ் கண்ட படங்களைப் பார்த்தேன். அட! நம்ம பாலிவுட் நடிக, நடிகைகள் தான். ஆனால் கொஞ்சம் வழக்கத்துக்கு மாறாக...

ஏய்!! நீ அழகாயிருந்தே

Image hosted by PicsPlace.to

எப்படி இருந்த நீ இப்படி ஆயிட்டே

Image hosted by PicsPlace.to

விரு விரு விருமாண்டி விருமாண்டி

குறிப்பு: ஹிர்திக் உன்னை சுத்தி எப்போவுமே பெண்கள் கூட்டம் இருக்குமாமே? அதுனால உன்னை தனியா விடுறதுக்கு மனசு வராம உன் படத்துக்கு மேலும் கீழும் பெண்கள் படமா போட்டுருக்கிறேன். என்சாய் கண்ணா....

Image hosted by PicsPlace.to

வெவ்வேவ்வேவா... இது எப்படியிருக்கு?

Image hosted by PicsPlace.to

இனாபா சௌக்கியமாகிரியா?

Image hosted by PicsPlace.to

இந்த வாரம் வேலை அதிகமாகி போய்விட்டதால், இன்றும் ஒரு ஒப்பேத்தல் பதிவு.

இந்த பதிவின் வாக்கு எண்ணிக்கை: . பக்கத்திலுள்ள ஸ்டாரை மவுசால் போட்டுத் தாக்கினால் எனக்கு மவுசு ஏறும். நன்றி:-)

உங்கள் கருத்துக்களை இட

திருப்பி தாக்கியவர்கள்:
விஜய்,
இந்தப் படங்களையெல்லாம் உருவாக்கியது யார் அல்வாதானா ?.
 
விஜய்

தயவுச் செய்து கஜோலை எடுத்து விடுங்கள்!!!

கஜோல் மீது நமக்கு பிரியம் ஜாஸ்தி!!!

நன்றி!!!

மயிலாடுதுறை சிவா...
 
தங்க தலைவி ஐஸ்வார்யாராய் முகத்தில் விளையாடிய உம்மை வன்மையாக கண்டிக்கிறேன்.
 
அய்யோ முத்து. இதெல்லாம் நான் உருவாக்கியவை அல்ல. மின்னஞ்சலில் வந்தது. படத்துக்கு மேலிருக்கும் கமெண்ட் மட்டும் என்னுடையது.

இதோ பார்றா! சிவா கஜோல்ன்னு சொல்றார். ராரா ஐஸ்வர்யாராய் என்கிறார். இப்படியே படத்தை எடுத்தால் என் பதிவு blank -காக தான் இருக்கும்.
 

உங்கள் கருத்துக்களை இட


<< திரும்ப முன் பக்கத்துக்கு போ

-ல் போட்டுத் தாக்கியது

என்ன தோனுது?

Difficulty in reading this post due to font issues? Click here for a PDF copy. Works best if you right-click the link and select 'Save target as...'
இந்த பதிவை போட்டுத் தாக்கியவர் : Vijayakumar
நிறைய பேர் உலக நடப்புகளை தெரிந்துக் கொள்ள டிவி பார்ப்பார்கள். டிவி செய்திகள் பார்ப்பார்கள். வீட்டு பெண்கள், செய்தியோடு செய்தி வாசிக்கும் பெண் என்ன கலர் சேலை அணிந்து வந்திருக்கிறார். என்ன நகை அணிந்து வந்திருக்கிறார், எப்படி பொட்டு வைத்திருக்கிறார் என்பதை கூர்ந்து கவனிப்பார்கள். வீட்டு ஆண்கள் செய்தி வாசிக்கும் பெண் எப்படிபட்ட ஃபிகார் என்று ஆராய்ச்சி செய்துக் கொண்டிருப்பார்கள்.

செய்தி ஃபிகர்களை கவனிப்பதை விட்டு விட்டு தெரியாதனமாக செய்தி வாசிக்கும் ஆண் அணிந்து வரும் உடையைப் பார்த்தும் பேஜாராகிட்டம்பா. செய்திகளில் சுவாரஸ்யம் இருக்கிறதோ இல்லையோ அவர்கள் அணிந்து வரும் கோமாளி உடைகள் சில சமயம் மிகுந்த சுவாரஸ்யமாக இருக்கும். அடிக்கும் மஞ்சள், பச்சை, ஊதா என பல ராமராஜன் நிறங்களில் மேல் கோட் அணிந்து வருவார்கள். அந்த மாதிரி கோட்களை எங்கு தான் வாங்குவார்களோ, தெரியவில்லை? இல்லையென்றால் கேமிராவுக்கு எடுப்பாக இருக்க வேண்டுமென அணிந்து வருகிறார்களோ?

சன் நியூஸில் வரும் கீழ்கண்ட செய்தி வாசிக்கும் காட்சியையும், அவர் அணிந்திருக்கும் மேல் கோட் கலரையும் பாருங்கள். என்ன தோனுது?



Image hosted by PicsPlace.to

ஒரு வழியா இன்னிக்கி பதிவை தேத்தியாச்சிப்பா... :-0)





இந்த பதிவின் வாக்கு எண்ணிக்கை: . பக்கத்திலுள்ள ஸ்டாரை மவுசால் போட்டுத் தாக்கினால் எனக்கு மவுசு ஏறும். நன்றி:-)

உங்கள் கருத்துக்களை இட

திருப்பி தாக்கியவர்கள்:
ungkaLukku kiNdal rompa jASthi pA :)))

enRenRum anbudan
BALA
 
பாலா,என்ன பண்றது சில நேரம் சிலவற்றை கூர்ந்து கவனித்தால் எல்லாமே கமெடி மயமாகத் தான் தெரிகிறது.

நன்றி முத்து
 
விஜய்,

சினிமா ஷூட்டிங் பார்த்தா, அதுலே அவுங்க போட்டுருக்கற உடைகள் கலர் கண்ராவியா
இருக்கும். ஆனா படத்துலே நல்லா வந்துருதே! அதுக்காக இருக்கும்.

நானும் பலசமயம் இதைப் பத்தி நினைச்சிருக்கேன். ஒரு ஹிந்திப் படம்(பேர் ஞாபகமில்லை)
ப்ரேம் சோப்ரா படம் முழுக்க பச்சை, மஞ்சள், ஆரஞ்சு, நீலம்னு இருக்கற எல்லாக் கலருலேயும்
ஃபுல்சூட் போட்டுக்கிட்டு வருவார்! அந்தப் படத்துலே அவருக்குத்தான் காஸ்ட்யூம் செலவு ஜாஸ்தியா
செஞ்சிருப்பாங்க போல. கிட்டத்தட்ட ஒரு பத்து பதினைஞ்சு ஃபுல்சூட்:-))))))
 
துளசியக்கா,

சன் டிவி நியூஸ்ல தலைகீழ் என நினைக்கிறேன். நேர்ல பார்த்த அவரு கோட் நல்ல இருக்கலாம்.ஆனா கேமிராவில கண்றாவியா இருக்குதே :-))

ஈஸ்ட்மென் கலர் வந்த பிறகு தமிழ்படங்களில் கூட பணக்கார கதாநாயகன்கள் மஞ்சள் சிவப்பு போன்ற நிறங்களில் கோட்சூட் போட்டு வருவார்கள். அதில் எம்.ஜி.ஆர் முன்னனியில் நின்றார். மஞ்சள் கோட் சூட் + மஞ்சள் கலர் தொப்பி அட அட அட என்ன காம்பினேஷன்.
 
"நேற்று, இன்று நாளை" என்ற தலைப்பில் எம்.ஜி.ஆர். படம் 1974-ல் வந்தது. அதில் எம்.ஜி.ஆர். ஒரேகோட்டில் பல கலர் துணிகள் வைத்து தைத்தது போன்ற ரேஞ்சில் வருவார். சத்தியமாக கூறுவேன். அவர் ஒருவருக்குத்தான் அம்மாதிரி போட்டுக்கொண்டு வர தைரியம் வரும்.
"டாப் - 10" பட விமரிசனத்துக்கு ஜேம்ஸ் வசந்தன் அவர்கள் போட்டுக்கொண்டு வரும் கோட்டை "30 ரூபாய் கோட்டு" என்று சத்தியராஜ் ஒரு படத்தில் கேலி செய்வார்.
இவர்கள் மே மாதத்தில் இம்மாதிரி கோட் எல்லாம் போட்டுக்கொண்டு வந்து ஆர்க் லைட்டின் வெளிச்சத்தில் பூச்சிகள் சூழ வியர்த்து விறுத்து செய்திகள் படிக்கும்போது, எனக்கு இங்கு வியர்வை கொட்ட ஆரம்பிக்கும். அதே வெள்ளைக்காரன் நம் நாட்டுக்கு வரும்போது கவலையே படாது நம்மூர் பத்ரி மாதிரி பெர்மூடாஸ் அணிந்து கொண்டு அமர்க்களப்படுத்துவான்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
 
கர்ணனுக்கு கவச குண்டலம்னு மகாபாரதம் சொல்லுது

பத்ரிக்கு பெர்மூடாஸ்ன்னு இந்த வலைப்பதிவு உலகம் சொல்லுது :-)))

டோண்டு அய்யா, அவர்கள் போட்டு வரும் கோட்சூட்டை பார்த்தால் 30 ரூபாயை விட கேவலாமாய் இருக்கும் போல. ஒரு வேளை தார்பாய்ல தச்சி போட்டு வர்றாங்களோ என்னமோ...
 

உங்கள் கருத்துக்களை இட


<< திரும்ப முன் பக்கத்துக்கு போ

-ல் போட்டுத் தாக்கியது

Appraisal

Difficulty in reading this post due to font issues? Click here for a PDF copy. Works best if you right-click the link and select 'Save target as...'
இந்த பதிவை போட்டுத் தாக்கியவர் : Vijayakumar
இந்தியாவில் உள்ள நிறைய கம்பெனிகளில் அப்ரைசல்(Appraisal) (இதை தமிழில் எப்படி தமிழில் சொல்வது அய்யா?) என்ற கூத்து ஒன்று நடக்கும். அதை பற்றி விரிவாக இன்னொரு நாள் எழுதுகிறேன். அது எப்படி நடைமுறைப்படுத்தப் படுகிறது என்பதை கீழ் கண்ட ஃபிளாஷில் சூட்சுமமாக சொல்லியிருக்கிறேன்.








இந்த பதிவின் வாக்கு எண்ணிக்கை: . பக்கத்திலுள்ள ஸ்டாரை மவுசால் போட்டுத் தாக்கினால் எனக்கு மவுசு ஏறும். நன்றி:-)

உங்கள் கருத்துக்களை இட

திருப்பி தாக்கியவர்கள்:
In Appraisal meeting they will speak only about your weakness,
errors, failures.


In resignation meeting they will speak only about your strength,
achievements, success.

In Appraisal you may need to cry and beg for even 10% hike.

In resignation you can demand for more than 60-70% hike.

During Appraisal, they will deny promotion saying you didn't
meet the expectation, you don't have leadership qualities.

During resignation, they will say you are the core member of
team, you have to take the project in shoulder and lead to
success.

There is 90% chance for not getting incentives after appraisal.

There is 90% chance of getting on-site opportunity after
resignation.
 
ஆ.... குழலி... இந்த forward mail இந்த போடு போடுதா... ஏற்கனவே 3 பேரு அனுப்பிச்சிட்டாங்க. அப்ரைசல் பத்தி ஏகத்துக்கும் மக்கள் கிட்ட நல்ல அபிப்ராயம் இருக்கு போலியே...
 
அந்த மின்னஞ்சலில் இருப்பது நூற்றுக்குநூறு உண்மை சொந்த அனுபவமும் கூட
 
self apprisal என்பது 'சுய மதிப்பீடு' எனப்படுமோ?
 
//அந்த மின்னஞ்சலில் இருப்பது நூற்றுக்குநூறு உண்மை சொந்த அனுபவமும் கூட //

அதை நானும் 100% ஒத்துக் கொள்கிறேன் குழலி. ஆபிஸ் வாழ்க்கையில இதெல்லாம் சகஜமப்பா...

//self apprisal என்பது 'சுய மதிப்பீடு' எனப்படுமோ? //

அப்படி தான் நானும் நினைக்கிறேன், அனானிமஸ்.
 
அல்வா குடுத்திட்டாங்களா??
 
அப்ரைசல் என்றாலே கம்பெனி கொடுக்கும் அல்வா என்று தானே பொருள்.
 

உங்கள் கருத்துக்களை இட


<< திரும்ப முன் பக்கத்துக்கு போ

-ல் போட்டுத் தாக்கியது

மனசு விம்மி பம்மி மருகுது

Difficulty in reading this post due to font issues? Click here for a PDF copy. Works best if you right-click the link and select 'Save target as...'
இந்த பதிவை போட்டுத் தாக்கியவர் : Vijayakumar
ம்ஹிம்ம்ம்... வாலிப வயசுல ஒன்றா இரண்டா... ஆயிரம் தேவதைகள் கனவில் வருவார்கள். காதலிப்பார்கள். M TV போல் சந்தோசமாக ஆடிப்பாடுவோம். ஆனால் இப்போது என் 'கனவு டிவி'யில் அந்த மாதிரி நிகழ்ச்சிகள் வருவதே இல்லை. ஏனோ தெரியவில்லை,இப்போது கனவு டிவியில் வருவதெல்லாம் அழுது வடிந்து மூக்கை சிந்த வைக்கும் மெட்டி ஒலி, கோலங்கள் போன்ற நிகழ்ச்சிகளே. போய் விட்ட/போய் கொண்டிருக்கிற வாலிப வயசை நினைத்தால் இளைஞர்களின் மேல் பொறாமை பொறாமையா வர்து தெரியுமா?

Image hosted by PicsPlace.to

அந்நியன் படத்தில் 'குமாரி குமாரி' பாட்டை கேட்டேன். ஆன் லைனில் பாடல்களை கேட்க இங்கே சொடுக்கவும். சில வரிகள் இளைஞர்களை சுருதி மீட்டு காதல் பாயசத்தை பந்தி இலையில் ஊற்றி நக்க வைக்கும் என்பதால், பொறாமையால் என் வயிறு கருகி அந்தப் பாடலை செம நக்கல் அடிக்க வேண்டும் போல் தோன்றியது. என்னோட வயித்தெறிச்சல்.... கண்டுக்காதீங்க.... கண்டுக்க மாட்டீங்கன்ன மேலே படிங்க. (பாடல் வரிகள் நீல கலரில்)

ஓ சுகுமாரி ஒ சிங்காரி
என் அலங்காரி நீ ஓ சுகுமாரி


யாரைப் பத்தி பாடுறீங்க. யாரு? இவங்களைப் பத்தி தான் பாடுறீங்களா?

Image hosted by PicsPlace.to

சரி சரி மேல பாடுப்பா...

ஓ சுகுமாரி A.குமாரி நீ

A.குமாரி யா? இனிஷியலோட வேற பாடுறீங்களா? சரி சரி மேல பாடுப்பா

குமாரி என் காதல் சிக்கி முக்கி திக்கி விக்குது குமாரி

என்னப்பா உன் காதல் மலச்சிக்கல் காதல் போலேயே? இப்படி சிக்கி முக்கி திக்கி விக்கி... என்னமோ போங்க.

குமாரி என் நெஞ்சி விம்மி விம்மி பம்மி நிக்குது குமாரி

குமாரா உனக்கு கேஸ் ட்ராபிள் வேறயா? நெஞ்சி விம்மி பம்மி நின்றால் கோலி சோடா வாங்கிச் சாப்பிடவும் குமாரா. (ப்ளீஸ் அவர் பக்கத்தில் நிற்க வேண்டுமானால் மூக்கைப் பொத்திக் கொள்ளுங்களேன்)

என் வார்த்தை கடல் வற்றி விட்டதே

வார்த்தையா? நல்ல பாருய்யா. ஜொள்ளு விட்டு உன் வாயில் ஊறும் எச்சில் கடல் வற்றியிருக்கப் போகுது.

நான் தோற்றுப் போவேன் என்று அஞ்சியே
என் தேர்வை எல்லாம் ஒத்தி வைக்கிறேன்


இப்படி தேர்வை ஒத்தி வச்சி வச்சி நீங்க 10 வது வகுப்பு கூட தேறவில்லை தலீவா. உருப்படியா படிச்சி பாஸ் பண்ணி உருப்படுகிற வேலைய பாருங்க.

ரகுமாரி சுகுமாரி என் மனம் ஒரு மலரடி
மலருக்குள் அடிதடி


10 ஆம் வகுப்பு பாஸ் பண்ற வழிய காணோம். எதுகை மோனையில பாட்டு வேற கேட்குதோ. ஓடிப்போ...

இந்த காதல் என்ன பெரும் பாராமா?

எலேய், பின்னே 100 KG குட்டியானையை காதலிச்சா உன் காதல் இப்படி தாண்டா பாரமாயிருக்கும். போடா போ...

இது பேறுகாலம் இல்லாதா கர்ப்பமா? ஓ ஓ

யோவ் நல்ல பாருய்யா. அது உன்னோட தொப்பையா இருக்கப் போகுது.

காதலை மறைத்தால் கணம் தாங்காமல்
என் உயிர் செத்துப் போகும் இல்லையா?


குண்டு கல்யாணம் மாதிரியிருக்கிற உங்கப்பன் மிதிச்சே நீ செத்துப் போகலை. இதுக்கெல்லாம் செத்துப் போயிருவியா. சும்மா தமாசு காட்டாதே கண்ணா?

காதலைச் சொல்லி இல்லையென்று மறுத்தால்
காதலே செத்துப் போகும் இல்லையா?


உன் காதலே சொல்லி அவ கிட்ட செருப்படி வாங்கி உன் மானமே செத்துப் போச்சி. பிறகு என்ன?

ஒரு காதல் கடிதம் எதுவும் காதலை முழுசாய் சொல்வது இல்லை

அப்போ ஒன்னு செய்யி. ஒரு 1000 பக்கம் புத்தகம் போட்டு உன் காதலை முழுசா சொல்லு ராசா.

நீ கண்களை அடைத்தால் காதல் நுழைய இன்னொரு வாசல் இல்லை

ஏற்கனவே எதோ சிக்கி முக்கிகிட்டு இருக்கே. இந்த லட்சணத்தில அவ பக்கம் போனேன்னா இன்னொரு வாசலான மூக்கையும் அடைச்சிக்கிடுவா.

நான் தானம் கேட்கும் ஒரு ஊமையா?
இல்லை. காதல் பிச்சை எடுக்கும் பிச்சைக்காரன் கூட.

தினம் தேய்கிறேனே இது தேவையா?
அடே மடையா... ஒழுங்க சாப்பிட்டா இப்படி தேஞ்சிப் போக மாட்டேயடா.

கூடைகள் என்றும் பூக்களை நிரப்பி கோயிலைத் தேடி நடக்கின்றேன்
கூடையைக் கொடுத்து கும்பிட்டு முடித்து கோரிக்கை வைக்க மறுக்கின்றேன்
அந்த கடவுளை விடவும் பெரியவன் ஒருவன் பூமியில் உள்ளான் எவன்?
பெண் கண்களை பார்த்து காதலைச் சொல்லும் தைரியமுள்ளவன் அவன்.


கண்ணைப் பார்த்து தைரியமா சொல்லிற முடியாதுல்லே. நாம கண்ணுக்கு தெரியாம அவ கால்ல போட்டிருக்கிற செருப்பு கன்னத்தை பதம் பார்க்குமே. தெரியாதா?

பெண் பாடுகிறாள்:

குமாரா என் காதல் சிக்கி முக்கி திக்கி விக்குதா குமாரா?
குமாரா என் நெஞ்சி விம்மி விம்மி பம்மி நிக்குதா குமாரா?
உன் வார்த்தை கடல் வற்றி விட்டதா குமாரா?

சூப்பர் ஃ பிகராக அவன் காதலி கோலி சோடாவுடன் வந்து நிற்கிறாள். நான் வாயடைத்துப் போய் வந்த வழியே திரும்பி ஓடுகிறேன்.

அந்நியன் படப் பாடல்களைப் பற்றிய ஒரு மெய்ச்சிலிர்த்த கட்டுரைக்கு இங்கே சொடுக்கவும்.

இந்த பதிவின் வாக்கு எண்ணிக்கை: . பக்கத்திலுள்ள ஸ்டாரை மவுசால் போட்டுத் தாக்கினால் எனக்கு மவுசு ஏறும். நன்றி:-)

உங்கள் கருத்துக்களை இட

திருப்பி தாக்கியவர்கள்:
//யோவ் நல்ல பாருய்யா. அது உன்னோட தொப்பையா இருக்கப் போகுது.//

:-)
 
ம்...வூட்டுலே 'அம்மா' இல்லைன்ன உடனே இப்படியெல்லாம் நடக்குதா?! அது சரி.. 'அம்மா' எங்கே? ரெண்டாவது புளிக்குட்டி.. ஸாரி.. புலிக்குட்டி?!
 
//அப்போ ஒன்னு செய்யி. ஒரு 1000 பக்கம் புத்தகம் போட்டு உன் காதலை முழுசா சொல்லு ராசா.//
:)
aiyo! aiyo!
 
:-) :-)
 
ம்ம்ம்.. நக்கலோ நக்கல்.

//இது பேறுகாலம் இல்லாதா கர்ப்பமா? ஓ ஓ

யோவ் நல்ல பாருய்யா. அது உன்னோட தொப்பையா இருக்கப் போகுது.
//

சூப்பர் தான் போங்க.
 
அந்நியன்ல இருந்து இன்னொரு பாட்டு...

"கண்ணும் கண்ணும் நோக்கியா?"

நோக்கியாவோட மாடல் நம்பர் என்னண்ணே?

"$#^%&*())"
 
நல்ல நக்கல் :-)

ஹாஹ்ஹாஹ்ஹா! கருத்துல மீதியை சிரிச்சி முடிச்சி வந்து பதிக்கறன்
 
பின்னூட்டமிட்ட எல்லா நண்பர்களுக்கும் நன்றி.
 
Pls cover the explanations for lines such as
-----
u wanna get it up i wanna check/shake it up..
---------- from Kaadal Yaanai song

http://www.mohankumars.com/lyrics/index.php?m=s&lid=1193
-------------

indha ammani ennatha solraangannu koncham viLakkunga :-)
 
«øÅ¡ º¢ðÊ Å¢ƒöìÌ

¯í¸û À¡¼ø Á¡üÚ Åâ¸û Óý¦À¡Õ ¸¡Äò¾¢ø
ÌÓ¾ò¾¢ø Å󾨾 ¿¢É× Ü÷¸¢ÈÐ.

¯¾¡Ã½õ -

±õ ƒ¢ ¬÷ À¡¼ø ´ýÚ

±ý Å¡Ùõ ¯ý ŢƢÔõ ºó¾¢ò¾¡ø
- ¸ñ ÌÕ¼¡¸¢Å¢Îõ

ºÁ£Àò¾¢ø Ó¾øÅý À¡ðÎ

Á¨ÆÂÊìÌõ ¯ý §ÀîÍ
- ´§Ã ±îºø ÐôÀø
 
அன்புள்ள சூப்பர் சுப்ரா,

எனக்கு நையாண்டி செய்து எழுதப்படும் எழுத்துக்கள் எல்லாம் ஓரளவு விரும்பிப் படிப்பேன். இந்த மாதிரி பாடல் நையாண்டி டெக்னிக் அர்த பழசு. குமுதம் மட்டுமல்ல ஆனந்த விகடன் மட்டுமல்ல சில வலைப்பதிவுகளிலும் செய்யப்படுகின்றன. அதில் இன்ஸ்பையர் ஆனது தான் இது.

நன்றி.
 

உங்கள் கருத்துக்களை இட


<< திரும்ப முன் பக்கத்துக்கு போ

-ல் போட்டுத் தாக்கியது

பக்கத்து வீட்டு புள்ளையாண்டான் IAS TOPPER

Difficulty in reading this post due to font issues? Click here for a PDF copy. Works best if you right-click the link and select 'Save target as...'
இந்த பதிவை போட்டுத் தாக்கியவர் : Vijayakumar
இந்த வருடத்துக்கான ஐ.ஏ.எஸ் தேர்வில் தமிழகத்தில் மட்டும் 54 பேர் வெற்றி பெற்றிருப்பது குறித்து பெருமகிழ்ச்சி(இந்த வருடம் மட்டுமே) அடைகிறேன். ஆண்டுக்காண்டு இந்த தேர்வு நடைப்பெற்றாலும், இந்த வருட தேர்வு என் கவனத்தை மிகவும் கவர்ந்தது. காரணம் ஐ.ஏ.எஸ் தேர்வில் முதலிடம் பெற்றிருக்கும் எஸ்.நாகராஜன் என் பக்கத்து வீட்டு பையன் (என்ன என் சுயநலம் தொக்கி நிற்கிறதா?).

திருநெல்வேலி தியாகராஜ நகர் 8வது தெருவில் இருக்கும் என் வீட்டுக்கும் அவர் வீட்டுக்கும் இடையில் இருப்பது இன்னொரு வீடு மட்டுமே. என் வீட்டிலிருந்து பார்த்தால் அவர் வீட்டு முற்றமும், அவர் படித்துக் கொண்டிருந்த அறையும் தெரியும். நான் இஞ்சினியரிங் படித்துக் கொண்டிருந்த போது லீவுக்கு வரும் சமயங்களில் மூடியிருக்கும் அவர் வீட்டு கண்ணாடி ஜன்னலை கவனித்தது உண்டு. காலை 2 மணி ஆனாலும் சரி, 5 மணி ஆனாலும் சரி வீட்டினுள் எப்போதுமே விளக்கெரியும்.அப்போது அவர் +2-க்கு படித்துக் கொண்டிருந்தார் என நினைக்கிறேன். இத்தனைக்கும் என் தந்தை வேலை செய்யும் அதே பி.எஸ்.என்.எல்லில் நாகராஜனின் தந்தையும் தாயும் வேலை செய்கிறார்கள். அவர் தந்தை மேலதிகாரி என்ற முறையில் என் தந்தைக்கு நல்ல ஒரு மதிப்பு அவர் மீது உண்டு. அவர்கள் பையன்கள் இருவரும் சிறந்த படிப்பாளிகளாக இருப்பதை சுட்டிக்காட்டி எங்களை ஊக்கப்படுத்த தவறுவதுமில்லை. "என் மண்டையில இருக்கிறது அவ்வளவு தான்" என்ற நோக்கில் நான் படித்தது என்பது வேறு விசயம்.

நாகராஜனுக்கும் எனக்கும் அவ்வளவு பழக்கமில்லை என்றாலும் ஒரு புன்னகையில் எங்களின் அறிமுகத்தை முடித்துக் கொள்வோம். அவர் பிட்ஸ் பிலானியில் இஞ்சினியரிங் படிப்புக்கு போன போது நான் வேலைத் தேடி சென்னைக்கு போக வேண்டியாதாகி விட ஆங்காங்கே நாடோடி வாழ்க்கை மேற்கொண்டு, வருடத்துக்கு ஒரு முறை வேடந்தாங்கலாக என் வீட்டுக்கு வரும் போது என் தந்தையிடம் நாகராஜனை பற்றி வினாவுவதை நான் தவற விடுவதில்லை. லட்ச லட்சமாக திருப்தியாக தனியார் கம்பெனியில் சம்பாதித்தாலும் கவர்மெண்ட் வேலையை தான் என் தந்தை தலையில் வைத்துக் கொண்டாடுவார். நாகராஜன் ரயில்வே சர்வீஸில் இருப்பதை சொன்ன போது எனக்கு ஆச்சரியம். எல்லோரும் இஞ்சினியரிங் டிகிரி முடித்தவுடன் எந்த வெளி நாட்டுக்கு போகலாம், எந்த பெரிய கம்பெனியில் சேரலாம் என கணக்குப் போடும் போது அவர் வித்தியாசமாக கவர்மெண்ட் நிர்வாகப்பணியை தேர்ந்தெடுத்திருக்கிறாரே என்ற புதிருக்கு இன்று தான் விடை கிடைத்தது.

நம்மால் சிலவற்றை சாதிக்க முடியாவிட்டாலும் நமக்கு தெரிந்த ஒருவர் சாதித்து விட்டால் ஏனோ நாம் சாதித்து விட்டோம் என்ற பெருமை நமக்குள் ஊடுருவி விடுகிறது. இந்த மனநிலையில் தான் இந்த பதிவை எழுத வைத்தது.

நாகராஜன் ஐ.ஏ.எஸ் ஆனதும் அரசியல்வாதிகளுக்கு எடுப்பார் கைப்பிள்ளையாக ஆகிவிடாமல் இந்திய திருநாட்டில் அவர் பணி மகத்தானதாக அமைந்து 'வல்லரசு இந்தியா' என்ற கனவுப் பாதையை மெய்யாக்க வேண்டுமென வாழ்த்துகிறேன்.

அடுத்த முறை ஊருக்குப் போகும் போது அவரை சந்திக்க முடியாவிட்டாலும் அவர் பெற்றோரிடம் என் வாழ்த்துக்களை நேரில் தெரிவிக்க வேண்டும்.

பரவசத்தில் ஒரு அவசரப்பதிவு :-)

சுட்டிகள்

தேட்ஸ்தமிழ்.காம்
ரிடிப்.காம்
தினமலர்.காம்

இந்த பதிவின் வாக்கு எண்ணிக்கை: . பக்கத்திலுள்ள ஸ்டாரை மவுசால் போட்டுத் தாக்கினால் எனக்கு மவுசு ஏறும். நன்றி:-)

உங்கள் கருத்துக்களை இட

திருப்பி தாக்கியவர்கள்:
நாகராஜனுக்கு வாழ்த்து, இதைப் பதிவாய் எழுதிய விஜய்க்கு நன்றி :-).
 
நாகராஜனுக்கு என் வாழ்த்துக்கள்.
 
விஜய்,,

நாகராஜனுக்கும், அவர் பக்கத்து வீட்டுக்காரரான உங்களுக்கும் வாழ்த்துக்கள்!!!
என்றும் அன்புடன்,
அக்கா
 
Good that you edited the post ;)

Anonymous :)
 
its a great feeling whenever somebody known to us achieves. thanks for sharing your 'paravasam'. I felt so elated.
 
நன்றி டிசே, ராரா, துளசியக்கா, மற்றும் இரண்டு அனானிமஸ்களுக்கும்.

//its a great feeling whenever somebody known to us achieves. //

உங்களை மாதிரி முகம் தெரியாமல் மின்னஞ்சல் வழி தொடர்பு உள்ளவர்களும் சாதிக்கும் போதும், அதே உணர்வுகள் தான் அனானிமஸ் :-)
 
என் வாழ்த்தையும் சொல்லிடுங்கோ. பக்கத்து வூட்டுக்காரங்களோட சண்டை போடறதுதான் நம்ம பழக்கம். அல்வா சிட்டியில் நிறைய ஆச்சர்யம் இருக்குதுப்பா!
 
அட... பிட்ஸில் படித்துவிட்டு உருப்படறவங்க கூட இருக்காங்க போல ;-))

விகடனில் இருந்து:

விகடன்.காம்: தமிழகத்தைச் சேர்ந்த ரயில்வே ஊழியர் ஸ்ரீநிவாசன் நாகராஜன் ஐ.ஏ.எஸ் தேர்வில் முதலிடம் பெற்றுள்ளார்.

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம்(யூ.பி.எஸ்.சி) யால் நடத்தப்படும் இந்தத் தேர்வில், மொத்தம் 422 பேர் தேர்வு பெற்றுள்ளனர். இதில் முதல் 20 இடங்களில் 6 பெண்கள் தேர்வாகியுள்ளனர். பொது வகுப்பிலிருந்து 193 பேரும், பிற்படுத்தப்பட்ட வகுப்பிலிருந்து 118 பேரும், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி வகுப்பிலிருந்து 64 மற்றும் 47 பேரும் தேர்வாகியுள்ளனர்.


இந்தத் தேர்வு முடிவுகள் நேற்று(புதன்கிழமை) வெளியிடப்பட்டன. இதில் முதல் 10 இடங்களில் ஒரு பொறியாளர், இரண்டு மருத்துவர்கள் ஆகியோரும் தேர்வு பெற்றுள்ளனர். தமிழகத்தைச் சேர்ந்த நாகராஜன் நான்காவது முறையாக இந்தத் தேர்வினை எழுதி வெற்றி பெற்றுள்ளார்.

நியு இந்தியன் எக்ஸ்பிரஸ் | தி ஹிந்து | தேர்வு முடிவுகள்
 
நன்றி ராம்கி

//பக்கத்து வூட்டுக்காரங்களோட சண்டை போடறதுதான் நம்ம பழக்கம்.//

எங்க ஏரியாவில ஆடிக்கு ஒரு தடவை இல்ல அம்மாவாசைக்கு ஒரு தடவை தான் மக்கள் பக்கத்து வீட்டுக்காரங்களோட பேசுவாங்க. அதுனால சண்டை வாரதுக்கு சான்ஸ் இல்லீங்கோ.

போஸ்டன் பாலா, நிறைய தகவல்கள் கொடுத்து இருக்கிறீர்கள். நன்றி தலீவா.
 
வாவ்! என்னுடைய வாழ்த்துக்களையும் தெரிவித்து விடுங்கள்.
 
ரொம்ப பெருமையா இருக்குங்க.. நம்ம தமிழ்நாட்டுல இருந்து 54 பேரா..அதுவும் நம்ம பக்கத்தூர்காரு (ஜஸ்ட் 150 கிமீ தாங்க..) டாப்பரா...ரொம்ப சந்தோஷ்ங்க...
 
என்ன தாஸு, உங்க ஊரு திருச்சியா இல்லை மதுரையா? :-))))
 
திருநெல்வேலியிலிருந்து 150 கிமீ. மதுரைதானே!! திருச்சி 270, சென்னை 590!
 
அண்ணே மாண்ட்ரீசர் அண்ணே, நீங்க சொல்றலது சரிதான்னே. மன்னிச்சிக்கீங்கண்ணே :-))))
 
நாகராசனுக்கு வாழ்த்துகள்! முயற்சி திருவினையாக்கும் என்பதற்கு இவரும் சான்றுபோல! நான்கு முறை எழுதியிருக்கிறாராமே! சந்தோசத்தைப் பகிர்ந்துகொண்ட உங்களுக்கு பாராட்டுகள்.

இதுக்கு ஏதும் பார்ட்டி உண்டா அல்வா? வீட்டு(ல) அம்மா வேற இல்லை! புலிக்குட்டி?

எம்.கே.
 
அது என்னவோ உதாரணம் காட்டுறதுக்குண்ணே பக்கத்து வூட்டுலே பசங்க 'பழமா' வந்து மாட்டுவாங்க! நல்ல வேளை அல்வா சிட்டி... நீங்க சிங்கப்பூர்ல நல்ல நிலைமைல இருக்கீங்க..! இதுவே ஊரிலே இருந்து பக்கத்து வூட்டுக்காரரு பேரு பேப்பரிலே வந்திருந்தா நம்ம வீட்டுலே நெலமையை நெனச்சுப் பாருங்க!'

ம்.. அடுத்த தபா அவரை பாக்கும் போது வெறும் புன்னகையோட மட்டும் வந்திடாம (புன்னகைப்பீங்கள்ளே?!) கூடவே எங்க எல்லோரோட வாழ்த்தையும் சொல்லிடுங்க சாரே!
 
மதுரையும் நம்ம பக்கத்தூர்தாங்க..

//புலிக்குட்டி?//

புலிப்பாலா..
 
//புலிக்குட்டி?//

TIGER brand?! ;)
 
This comment has been removed by a blog administrator.
 
குமார், புலிக்குட்டி என்று யாரை அல்லது எதை குறிப்பிடுகிறார் என தெரியவில்லை. அனேகமாக வீட்டில் பார்ட்டி கேட்டு, குடும்பத்தைப் பற்றியும் சொன்னதால், பையனை தான் அப்படி சொல்லியிருப்பார் என நினைக்கிறேன். இல்லையென்றால் குமார் 'புலிக்குட்டி' என்று பின்னூட்டத்தில் ஏதோ சொல்ல வந்து தூங்கியிருப்பார் என நினைக்கிறேன் :-)
அதனால் தாஸு & மாயவரத்தான் அதிகமாக யோசிக்க வேண்டாம். :-)))) குமாரே சொல்லட்டும்.
 
ஓய், தலைவர் தாஸும் ஆயிரம் காணாத மாயுரத்தானும் கரெக்டா சொல்லியும் புரியாத மாதிரி நடிக்கிறியெவெ.

சிங்கப்பூர்ல புலிக்குட்டி, புலிப்பாலு இதெல்லாம் என்னான்னு தெர்யாதாக்கும்?

சரி, சரி. எப்போ வெச்சுக்கலாம் புலிப்பால் அபிஷேகம்?
எம்.கே
 
தலைவர் தாஸா.. நாந்தான் எந்த படத்துலயும் நடிக்கலியே.. அப்பறம் எப்படி தலவனாவேன் ..
 
அல்வாசிட்டியாரே.. ஊருக்கு உழைக்கிறதைவிட நமக்கு நாமே திட்டத்தை செயல் படுத்திட்டா எப்படி? வேணும்னா நாம ரெண்டு (மூணு?!) பேரும் கூட்டணி அமைப்போமா?! பரிசீலிக்கவும்!! 1000+ ஐ ஈசியா தாண்டலாம்..!! சிந்திப்பீர்.. செயல்படுவீர்..!!
 
Congrats Naagarajan. You have done it.
Date:12/05/2005 URL: http://www.thehindu.com/2005/05/12/stories/2005051212651300.htm
--------------------------------------------------------------------------------

Front Page

Railway official from Tamil Nadu is IAS topper

Staff Reporter




NEW DELHI: Railway traffic service official Srinivasan Nagarajan has bagged the top spot in the Union Public Service Commission Civil Services (Main) Examination. The results were announced here on Wednesday.

In all, 422 candidates, including 67 women, have been recommended for appointment. While the top 20 includes six women, 193 candidates have been selected from the general category, including three physically challenged persons, 118 from Other Backward Classes, 64 from Scheduled Castes and 47 from the Scheduled Tribes category. The number of vacancies reported by the Government for IAS, IFS and IPS is 91, 20 and 88, for the Central Services Group `A' 235 and the Central Services Group `B' 19.

It may have been his fourth and last attempt but for Tirunelveli-based Mr. Nagarajan, it could not have ended on a better note. A B.Tech from BITS Pilani, he had sociology and geography as options. Professionals have clearly scored, with the top 10 comprising an engineer, two doctors and an IIM graduate. Basant Garg and Gaurav Uppal are both doctors and hold the second and third ranks this year. Basant has cleared it in his first attempt.

Manish Kumar, ranked fifth, is an IIM graduate. He had to choose between a New York posting with handsome salary and one that would help him serve his own people.

"I decided to take the UPSC exam when I got the offer for a job in New York. Although the money was great, I wanted to do something here. I was not sure if coming back would be easy once I went there, so I decided to write the exam instead. It is my third attempt but I am glad to have finally made it," he said. Interestingly, at least six of the top 10 were trained at an institute here. "We were confident of having our students in the top 10 but six of them, including the top three, was completely unexpected. It has been a brilliant year for us," said Sri Rangam, the man behind the Delhi branch of Sri Ram Institute.








© Copyright 2000 - 2005 The Hindu
 

உங்கள் கருத்துக்களை இட


<< திரும்ப முன் பக்கத்துக்கு போ

-ல் போட்டுத் தாக்கியது

நெஞ்சி விம்மி பம்மி நிக்குது

Difficulty in reading this post due to font issues? Click here for a PDF copy. Works best if you right-click the link and select 'Save target as...'
இந்த பதிவை போட்டுத் தாக்கியவர் : Vijayakumar
குமாரி என் காதல் சிக்கி முக்கி திக்கி விக்குது குமாரி
குமாரி என் நெஞ்சி விம்மி விம்மி பம்மி நிக்குது குமாரி

மேலிட்ட இரண்டு வரிகளால் தமிழ்மணம் கண்டுக் கொள்ளவில்லை. அதனால் கொஞ்சம் சத்தம் போட்டு வைக்கிறேன். மன்னிக்கவும்.

ஓஓஓஒ... ஆஆஆஆஆஅ.... லாஆஆஆஆஆஅ.... ஓஓஓஓஓஓஓஓஒ.... ஆஆஆஅ.....
ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்யீயீ ... ஔல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்லலலலலலல்லலலலலலலலலலலல்லலலலலல








இந்த பதிவின் வாக்கு எண்ணிக்கை: . பக்கத்திலுள்ள ஸ்டாரை மவுசால் போட்டுத் தாக்கினால் எனக்கு மவுசு ஏறும். நன்றி:-)

உங்கள் கருத்துக்களை இட

திருப்பி தாக்கியவர்கள்:
இத்தனை ஆ, ஒ, ஓ ல், ல வயும் பொருமையாய் அடித்தது போக
இன்னும் இந்த அறிய டமில் பாடலுக்கு உறை வேரா? மகனே, உனக்கு மட்டும்
ஒரு நாளைக்கு 34 மணிநேரமோ
நடத்து ராசா நடத்து.

சுரேஷ்
 
the links at the end of atchayathiruthi blog are not proper. do correct
 
நன்றி அவதாரம், சுரேஷ்.

சுரேஷ், 34 மணி நேரம் இருந்தா நல்ல தான் இருக்கும். நடுநிசியிலே எல்லாம் பதிவு போட வேண்டாம் பாருங்க :-))

அனானிமஸ், நான் அந்த அட்சய திருதி பதிவில் பின்னூட்ட பெட்டியை எடுத்து விட்டேன். ஒருவர் குண்டு போட்டுவிட்டு சென்று விட்டார். வம்பே வேண்டாமென்று தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளேன். மன்னிக்கவும்.
 
விஜய்,

அப்படியே 'யாரோட நெஞ்சு' என்பதற்கு விளக்கமாக, சதா ஸ்டில்ஸும் போட்டிருந்தால்
சூப்பரா இருக்குமே. :-)
 
அலெக்ஸ், நெஞ்சி விம்மி பம்மி போய் கும்மி அடிக்கிறது விக்ரமாய் தான் இருக்கும். நல்லவேளை அந்த வரிகள் பெண் பாடுவது போல் இல்லை. கஷ்ட காலமில்ல :-)
 

உங்கள் கருத்துக்களை இட


<< திரும்ப முன் பக்கத்துக்கு போ

-ல் போட்டுத் தாக்கியது

அட்சய திருதி டீல்

Difficulty in reading this post due to font issues? Click here for a PDF copy. Works best if you right-click the link and select 'Save target as...'
இந்த பதிவை போட்டுத் தாக்கியவர் : Vijayakumar
எனக்கு இந்தியாவிலிருந்து கைத்தொலைபேசியில் ஒரு அழைப்பு வருகிறது.

ஹலோ என்னங்க? நான் தாங்க பேசுறேன்

(சோகமாக)ஹிம்... நீ தான் பேசுதியா? சொல்லு...

இன்னிக்கி என்ன நாள் ஞாபகமிருக்கா?

புதன் கிழமை

மடத்தனமா பேசாதீங்க. இன்னிக்கு அட்சய திருதி

என்ன எழவு டீ அது. உன்னை கல்யாணம் கட்டிக்கிட்ட பிறகு தான் புது புதுசா ஒன்னு வருது

சும்மா வீட்டுக்கு வர்ற லட்சுமியை பழிச்சி பேசாதீங்க. ஞாபகமில்லை. போனவருசம் சிங்கப்பூர்ல கடை கடையா ஏறி எறங்கி நகை வாங்கினோம். ஞாபகமில்லை?

(மனதிற்குள்) ஆகா... இன்னிக்கு பர்சுக்குள்ளே ஒரு டைம் பாமா? (எரிச்சல் பட்டும் படாதா மாதிரி போனில்) அதுக்கு என்ன இப்போ?

இன்னிக்கு ஒரு குண்டுமணியாவது நகை வாங்கினா தான் நம்ம கிட்ட ஐஸ்வர்யம் கொழிக்குமாம். இந்த வருசம் பூரா நகையா வங்கிட்டு இருக்கலாமாம்.

(மனதிற்குள்) ஆமா! இன்னிக்கே நான் என்ன பாடு படப்போறேனோ. இதுல வருசம் பூராவுமா? அடக்கடவுளே! (போனில்)நாமளே ரொம்ப சிங்கிள் பெட்ரூம் வீட்டுல கஷ்டப்படுறோம். வருசம் பூரா நகை வாங்கினா வீடு பத்தாதே. எங்கடி கொண்டுப் போய் நகைய வக்கிறது.

ஏன்? எங்க அம்மா வீடு பெரிசா தானே இருக்கு... அங்கே போய் வச்சிருவோம்...

(மனதிற்குள்) ஆஹா, வாங்குன வரதட்சணைய இப்படியெல்லாம் கறப்பாங்களா?வரதட்சனை வாங்கும் போது தெரியாமா போச்சே? (போனில்) அதெல்லாம் வேண்டாம்டீ. நம்ம தங்க பிஸ்கெட்டா வாங்கி பீரோல்லேயும், கட்டிலுக்கு அடியேயும் வச்சிருவோம். தங்கம் நம்ம வீட்டுலேயே இருந்த மாதிரி ஆகிறும்ல.

Image hosted by PicsPlace.to

ஏங்க இந்த வாட்டி உங்களுக்கு நகை வாங்கிக்கோங்க. ப்ரேஸ்லெட்.. இல்லேன்னா ஒரு பவுன்ல மைனர் செயின் வாங்கிப் போட்டுக்கோங்க. எனக்கெல்லாம் ஒன்னும் வேண்டாம்ப்பா!!!

(இந்த தீடீர் தாக்குதலால் இதயம் லேசாக வலிப்பது மாதிரி இருந்தது. பேச்சு எழவில்லை)இல்ல... இல்ல.. அது இல்லடீ. எனக்கு எதுக்கு நகையெல்லாம். நான் நகையெல்லாம் போட மாட்டேண்டி (என்று புரூடா விட்டேன்)

அப்போ நம்ம பையனுக்கு நகை வாங்குங்க. எனக்கெல்லாம் ஒன்னும் வேண்டாம்ப்பா!!!

(சோகம் என்னைத் தாக்க) பையனுக்கா? ஏண்டீ அவனை நல்ல படிக்க வைப்போம்டி. நகையெல்லாம் போட்டு மைனர் ஆக்க வேண்டாம்டீ.

(அதட்டலாக) என்ன 'டீ' எல்லாம் ஓவரா இருக்கு? (பிறகு நார்மலாகி) அதுக்கில்லேங்க, ஒரு வேளை பையன் பெரிசானதும் காலம் மாறிப் போய் நாம பொண்ணு வீட்டுக்கு வரதட்சணை கொடுக்க வேண்டியிருந்தா என்ன ஆகிறது நினைச்சிப் பாருங்க? அதுக்காக இப்போவே அவனுக்காக நகை வாங்கி வச்சிக்கிடுவோம்.

ஆஹா என்ன ஒரு அட்வான்ஸ் திங்கிங். நீ மட்டும் நம்ம ராக்கெட் சயின்ஸ்ல இருந்திருந்தா இந்நேரம் நீ நிலாவுக்கே போயிருப்பேடீ. உனக்கு உண்மையிலேயே நகை வேண்டாமா? (ஒரு பேச்சுக்காக)உனக்கும் நகை வாங்கியறவா?

(மறுமுனையில்... குரலில் கொஞ்சம் பெருமிதம் தெரிய)ஆங்ங்ங்ங்... நீங்க வாங்கிக் கொடுத்தா நான் வேண்டான்னு சொல்வேனா? வாங்குறதும் வாங்குறீங்க. சும்மா 1 கிராம் 2 கிராம் நகையெல்லாம் வாங்காதீங்க. பொடிசு பொடிசா நகைய வச்சிக்கிட்டு என்ன பண்றது. போன வருசம் லிட்டில் இந்தியாவில பார்த்தோம்ல அந்த நெத்திச்சுட்டி... அது ரொம்ப நல்ல இருந்திச்சிங்க. இல்லேன்னா மயில் படம் போட்ட பூரோச்சு வாங்குங்க. அந்த மாடல் என்கிட்ட இல்ல.

(சோகம் புடைச்சூழ்ந்தது. புத்திசாலித்தனமாக ஏதாவது இந்த நேரத்தில் கேட்டு வாங்கிக் கொண்டால் தான் உண்டு என்று மெதுவாக...)

வாங்கிரலாம். ஏண்டீ... என்கிட்ட பழைய மாடல் ப்ளாக் ஒயிட் செல் போன் தாண்டீ இருக்குது. இன்னிக்கு கலர்ல ஒரு செல் போன் வாங்கிகிடவா...

என்னாத்துக்கு செல் போன்?. உங்க கிட்ட தான் இருக்குல்ல. அப்புறம் எதுக்கு செல் போன். அதுல போன் பேசுன என்ன ப்ளாக் ஒயிட்ல தான் பேச்சு கேட்குதாக்கும்...

(போனை சபித்துக் கொண்டே) அதுக்கில்லேடி எல்லாரும் சிங்கப்பூர்ல புதுசு புதுசா போன் வச்சிருக்காங்க. இந்த பழைய மாடல் போனை வச்சி பப்ளிக் பிளேசுல பேசவே கேவலமா இருக்கு. எனக்கு கேமிரா வச்ச போன் எல்லாம் வேண்டாம். சின்னதா... அழகா... கலர் டிஸ்பிளே போன் மட்டும் வாங்கிக்கிறேன்.

சரி சரி... ஜாஸ்தி விலையில வாங்குனீங்கன்ன அப்புறம் நீங்க வாங்கிட்டு வர்ற நகையை போட்டுக்க மாட்டேன். ஆமா... காலா காலத்துல எல்லாம் வாங்கிட்டு சீக்கிரமா வீட்டுக்கு வந்து சேர்ந்து உடனே ்போன் பன்ணுங்க.

டொக்... (போன் வைக்கும் சத்தம்)

பேங்க் பேலன்ஸ், பர்ஸ் பேலன்ஸ், சட்டை பாக்கெட் பேலன்ஸ் எல்லாம் கூட்டிக் கழிச்சி கணித ரசமாகப் பிழிந்து, பாகாக காய்ச்சியதில் S$300 உதைத்தது. சரி போற வழியில நண்பன் அய்யப்பனிடன் S$300 -ஐ கடன் வாங்கிச் செல்லலாமென நினைத்து ஆபிஸ் டாய்லெட்டுக்குள் நுழைந்தேன். எப்படி நண்பனிடம் அசடு வழிந்தும், சிரித்தும் பணம் வாங்க வேண்டுமென்று டாய்லெட்டில் இருக்கும் கண்ணாடியின் முன் 2 தடவை பிராக்டிஸ் பண்ணிக் கொண்டேன்.

அட்சய திருதி என்றதும் தோன்றிய கற்பனை உரையாடல் :-))) ஹி ஹி....

இந்த பதிவின் வாக்கு எண்ணிக்கை: . பக்கத்திலுள்ள ஸ்டாரை மவுசால் போட்டுத் தாக்கினால் எனக்கு மவுசு ஏறும். நன்றி:-)

-ல் போட்டுத் தாக்கியது

meal பார்வையும் mela பார்வையும்

Difficulty in reading this post due to font issues? Click here for a PDF copy. Works best if you right-click the link and select 'Save target as...'
இந்த பதிவை போட்டுத் தாக்கியவர் : Vijayakumar
போன வாரம் சுந்தரவடிவேல் அண்ணாச்சி ஆரம்பிச்சி வைக்க தங்கமணி அண்ணாச்சியும் 'மீள் பார்வையும் மீளா பார்வையும்' என்று என் கிரகத்தை விட்டு வேற்று கிரக மொழியில் பேசிக் கொண்டிருந்தனர்.பாமரனான என்னுடைய மரமண்டைக்கு ஒன்னுமே புரியல.மன்னிச்சிக்கிடனும். அவர் பதிவுல உள்ளே போயி பார்த்தா நிறைய அறிவுஜீவிங்க பின்னூட்டத்தில கதைச்சிக்கிட்டு இருந்தாங்க. பழைய ஒயின் அடிக்கிறவங்க மத்தியில நாட்டு சரக்கு அடிக்கிறவனுக்கு என்ன வேலையின்னு சத்தம் போடாம வந்த வழியே அப்பீட்டு ஆகிட்டேன்.

தங்கமணியின் 'மீள் பார்வையும் மீளா பார்வையும்' என் மொக்கை மூளையில் 'Meal பார்வையும் Mela பார்வையும்' -ஆக தான் பட்டது.அவரோட பதிவை படிச்சி கிரங்கி போன எனக்கு எப்படி உரைத்தது என்பதை கீழேயிருக்க கிராபிக்ஸ் கார்டூன்ல பார்த்து தெரிஞ்சிக்கோங்க. அங்கேயிருக்கிற பச்சை பட்டனை தட்டுன அடுத்த கார்ட்டூனுக்கு தாவும்....








இந்த பதிவின் வாக்கு எண்ணிக்கை: . பக்கத்திலுள்ள ஸ்டாரை மவுசால் போட்டுத் தாக்கினால் எனக்கு மவுசு ஏறும். நன்றி:-)

உங்கள் கருத்துக்களை இட

திருப்பி தாக்கியவர்கள்:
attahaasam!! :)

athu eanna oru satti mandaiya pottirukkeenga? unga photava naan parththappa ippadi illayae! :))
 
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

இதுதான் உண்மையான வத்தலகுண்டு குசும்பு:-))))
 
உங்களுக்கு நம்ம கோட்டைச்சாமி ஆறுமுகத்தைத் தெரியுமா? "வத்தலக்குண்டு ஓரம் நான் தொத்தலாத் திரிஞ்ச நேரம், என் அத்த மக என்னப் பாத்தா..." அப்படின்னு ஒரு பாட்டு கேட்டதுண்டு!

நெறய படம் போடுங்க.
 
//பழைய ஒயின் அடிக்கிறவங்க மத்தியில நாட்டு சரக்கு அடிக்கிறவனுக்கு என்ன வேலையின்னு சத்தம் போடாம வந்த வழியே அப்பீட்டு ஆகிட்டேன்//

:-)))
 
நன்றி தங்கமணி, துளசியக்கா,சுந்தரவடிவேல், அனானிமஸ்,மூர்த்தி.

தங்கமணி, அந்த சட்டி தலை ரொம்ப யோசிச்ச பிறகு என்னோட மண்டை அப்படி ஆயிரும்னு நினைச்சிக்கோங்களேன். :-)

சுந்தரவடிவேல், எனக்கு வத்தலக்குண்டுல இருக்கிற கோட்டைப்பட்டி குன்றைத் தெரியும். அங்கிருக்கும் கோட்டைப்பட்டி சாமியைத் தெரியும். கோட்டைச்சாமி ஆறுமுகம் யாருன்னு தெரியாதே??? :-(

என்னுடைய கனணி ஓவியத் திறமைய அப்பப்போ காமிக்கனுமே :-) அப்பப்போ பட அவஸ்தைகள் தொடரும். (ஓவியத் திறமைன்னு சொல்லிக்கவே பேஜாரா மனசு ஃபீல் பண்ணுதுங்கிறது வேற விசயம்)
 

உங்கள் கருத்துக்களை இட


<< திரும்ப முன் பக்கத்துக்கு போ

-ல் போட்டுத் தாக்கியது

பருவகாலம்

Difficulty in reading this post due to font issues? Click here for a PDF copy. Works best if you right-click the link and select 'Save target as...'
இந்த பதிவை போட்டுத் தாக்கியவர் : Vijayakumar
எனக்கு போன ஞாயிற்றுக்கிழமை ஒரு சிறிய குறும்பட மாலையாக அமைந்தது. காலையிலிருந்து அஜீவன் சிங்கப்பூருக்கு வந்தரா, வரவில்லையா என்ற கேள்வியுடன் ஈழநாதன் எனக்கு தொலைபேசி கேட்டதும், எனக்கே ஒரு பயமும் பரபரப்பு தொற்றிக் கொண்டது. கடைசியில் அஜீவன் சிங்கப்பூருக்கு வரவில்லையென தெரிந்தும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ஈழநாதன் அருமையாக நிகழ்ச்சியை வழிநடத்திச் சென்றார்.

தாமதமாக அன் மோ கியோ நூலகத்தை அடைந்ததும் ஒரு பிரமிப்பு. எனக்கு வழக்கமான முகங்கள் தவிர நிறைய புதுமுகங்கள்(எனக்கு) அங்கே வீற்றிருக்க அஜீவன் அவர்களின் குறும்படம் எற்கனவே ஓட ஆரம்பித்திருந்தது.அஜீவனால் அன்றைய நிகழ்ச்சிக்கு கலந்து கொள்ள முடியவில்லை என்ற வருத்தம் ஒருபுறம் இருந்தாலும், புதிய சூழ்நிலையில் என் மனதின் ஆரவாரம் அடங்க, 'செருப்பு' என்ற குறும்படத்தைப் பற்றிய ஒரு முன்னுரையுடன் ஈழநாதன் படத்தை ஓட்டி விட்டார். படம் முடியும் தருவாயில் ஆங்காங்கே விசும்பல் ஒலி எழும்ப எல்லோர் முகத்திலும் சோக ரச வழிய என் மனதும் கனமானது. ஒரு நிகழ்வை எப்படி வேண்டுமானாலும் அதிக நேரத்தில் விசுவல் இம்பேக்ட்டுடன் காட்டலாம். ஆனால் அதே நிகழ்வை 10 நிமிட நேரத்தில் ஒரு குறும்படமாக கனமாக மனதை தாக்க வேண்டுமானால் ஸ்கிரிப்ட்லும் சரி, கேமிரா கவிதையிலும் சரி, இயக்கத்திலும் சரி ஒரு அசாதரண முயற்சி தேவை என்பது அந்த குறும் படங்களைப் பார்க்கும் போதே தெளிவாக தெரிந்தது.

அஜீவனின் இயக்கம் மற்றும் அவருடைய பயிற்சி பட்டறையில் எடுக்கப்பட்ட மூன்று குறும்படங்களும் இலங்கை சூழலை சார்ந்தும், புலம்பெயர்ந்தோரின் பிரச்சனைகளை சார்ந்தும் எடுக்கப்பட்டிருந்தது. அந்த மூன்று படங்களும் வெவ்வேறு பிரச்சனைகளை பேசினாலும், பாதிப்பு இருந்தது. பாதிப்பை கொஞ்சம் மட்டுப்படுத்தியது கேரக்டர்கள் பேசும் இலங்கைத் தமிழ். அஜீவனை இன்று சந்தித்த போது முழுக்க இலங்கையை சார்ந்து குறும்படம் எடுக்கும் போது இந்திய பேச்சுத் தமிழில் எடுத்தால் அதன் நோக்கம் அடிப்பட்டுப் போவதை தெளிவாக விளக்கினார். எனக்கும் அவர் சொன்னது மிகச் சரியெனப்பட்டது.

சிங்கப்பூர் தெமோசாக் பல்கலைகழகத்தில் விசுவல் ஆர்ட்ஸ் படித்திருக்கும் அன்பர் யாசீர் அவர்களின் 'பொம்மை' என்ற குறும்படமும் காட்டப்பட்டது. அது அவருடைய இறுதியாண்டு பிராஜக்ட்டாக பண்ணியதாம். சிங்கப்பூர் சூழலில் எடுக்கப்பட்ட ஒரு மாணவனின் பொம்மை வாங்கும் கனவைப் பற்றியது. விசுவலாக அந்த குறும்படம் பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்றாலும் 21 வயது இளைஞன் செய்த இந்த முயற்சியை பாராட்டாமல் இருக்க முடியாது. இதே படத்தை லாஸ் ஏஞ்சலில் நடக்கப்போகும் விழாவுக்கு ரீமேக் பண்ணி அனுப்பப் போவதாக சொன்னார். அவருக்கு ஏகப்பட்ட அறிவுரைகளும், பிழைகளும் சுட்டிக்காட்டப் பட்டன. அவரும் நிறைய பேசினார். என்னுடைய 21 வயதை அவருடன் ஒப்பிட்டு பார்த்தேன். அந்த வயதில் படித்து முடித்து பட்டம் பெற்றேன் என்பதை விட, விசய ஞானம் எனக்கு பூஜ்ஜியமாக இருந்தது என்பதை பெருமையுடன் கூறிக் கொள்ள விரும்புகிறேன். கூடிய விரைவில் எல்லோரும் பாராட்டும் இளம் இயக்குநராக யாசீருக்கு என் வாழ்த்துக்கள். 10 ஆண்டுகள் கழித்து விஜய்,விக்ரமை வைத்து படம் எடுக்க வேண்டும் என்பது அவரது கனவாக கூறினார். "விஜய் விக்ரமை வைத்து படம் எடுக்கும் வீணாய் போன தமிழ் இயக்குநர்களின் லிஸ்டில் சேர ஆசைப்பட வேண்டாம்" என தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. மேலும் விவரங்களுக்கு இங்கே.

இன்று மாலை அஜீவனுடன் ஈழநாதன்,M.K.குமார்,அருள்குமரன், இன்னொரு நண்பர்(பெயரை மறந்துவிட்டேன்) ஆகியோருடன் இனிதே கழிந்தது. அஜீவன் பேசிசிசிசிசிக் கொண்டேயிருந்தார். நான் சினிமாத்துறையில் சந்தித்த முதல் நபர் அஜீவன் என்பதால் வழக்கம் போல என் சுபாவத்தின் படி அவர் பேசுவதை எப்போதும் போல் நான் கேட்டுக் கொண்டேயிருந்தேன். கொஞ்ச நாளாக குறும்படம் மற்றும் விவரணப்படம் எடுக்க வேண்டும் என்ற என் மனதின் பொறியை ஊதி தீயாக வளர்த்து விட்டுவிட்டார். சிங்கப்பூர் நண்பர்கள் நல்ல கதையுடன் வந்தால் அவர் தேவையான உதவி செய்வதாக வேறு சொல்லித் தொலைத்துவிட்டார். சும்மா கிடந்த சங்கு ஊதியாகி விட்டதே!. இனி எப்படி தூங்குவதோ தெரியவில்லை. அதே போல் சந்தித்த சிங்கை நண்பர்கள் மனதிலும் பெருந்தீ கிளம்பியிருக்குமென நினைக்கிறேன். இந்த பெருந்தீக்கள் ஒன்று கூடி நல்ல பண்டத்தை சமைத்தால் சரி. முன் கூட்டியே ஒரு குறும்படம் எடுக்க எவ்வளவு செலவாகுமென அஜீவனிடம் கேட்டாகி விட்டது :-) பைனான்ஸ் பண்ணும் அளவுக்கு வசதியில்லாவிட்டாலும் ஒரு நல்ல கதை மற்றும் விசயத்தை நோக்கிய பார்வையை கொடுக்க முடியுமென நம்பிக்கையிருக்கிறது. இருந்தாலும் வயிற்றுப் பொழப்பு போக தானே மத்ததெல்லாம்.


கீழேயிருக்கும் கார்டூனை பாருங்கள்... பல பருவங்களில் ஒரு ஆணும், ஒரு பெண்ணின் நிலையையும் பாருங்கள்.

சின்னஞ்சிறு வயதில்
Image hosted by PicsPlace.to

Image hosted by PicsPlace.to

பதின்ம வயதில்
Image hosted by PicsPlace.to

Image hosted by PicsPlace.to

காதலிக்கும் வயதில்
Image hosted by PicsPlace.to

திருமணமும் ஆகிறது
Image hosted by PicsPlace.to

வயதும் ஆகிவிட்டது
Image hosted by PicsPlace.to

இறுதிகாலங்களில்....
Image hosted by PicsPlace.to

ஆண் எப்போதும் 'ஹீ ஹீ ஹீ' தான்.

இந்த பதிவின் வாக்கு எண்ணிக்கை: . பக்கத்திலுள்ள ஸ்டாரை மவுசால் போட்டுத் தாக்கினால் எனக்கு மவுசு ஏறும். நன்றி:-)

உங்கள் கருத்துக்களை இட

திருப்பி தாக்கியவர்கள்:
பதிவில் சொல்ல மறந்துப் போனது...

அஜீவன் அவருடைய படத்திற்க்காக நடிக-நடிகைகளை தேடிக் கொண்டிருக்கிறார். நடிக்க ஆசையிருந்தால் தொடர்புக் கொள்ளுங்கள். மேல் விவரங்களுக்கு

http://ajeevan.blogspot.com/2005/03/blog-post_25.html
 
அந்தச் செருப்பு குறும்படத்தை இணயத்தில் பார்த்திருக்கிறேன். அருமை எனப்புகழ்வது... வறுமையையும், கண்ணிவெடியினால் ஏற்படும் அவலத்தையும் அருமை என்று சொல்வதுபோல் ஆகும் என்பதால்...சொல்கிறேன், மனம் கனக்கச் செய்யும் படைப்பு!. மற்றுமொன்று, கொடுத்த கடனைத்தான் எவ்வளவு கண்ணியமாக கேட்கிறார்கள் அங்கு?.
 
I have seen pictures acted by Vijay... i have heared the songs written by Vijay and now, am waiting to see the "Kurum( or kurumbu ) padam" directed by Halwacity Vijay ! :))))
 
அப்படி போடு போடு போடு....திருப்பி போடு பின்னூட்டத்தாலே....

ஆம். 10 நிமிட நேர படத்தில் ஏற்படுத்தும் பாதிப்பு அதிகம்.

//கொடுத்த கடனைத்தான் எவ்வளவு கண்ணியமாக கேட்கிறார்கள் அங்கு?//

காதில் கேட்க முடியாத வசவுனுடே தானே கடன் கேட்பார்கள் நம்ம ஊரில. இல்லேண்ணா ஆட்டோ வரும். அதுவும் இல்லேன்னா கட்டிபிரண்டு சண்டை போட்டு இருப்பாங்க. :-)
 
விஜயின் குறும்படத்தை ஆவலோடு எதிர்பார்க்கிறோம்.

அன்னார் எங்களை ஏமாற்றாது நல்லது செய்யவேண்டும்!

எம்.கே.
 
நன்றி பாலு, குமார்.

பாலு, இயக்குநர் விஜயை பார்க்க ஆசையா? எனக்கும் ஆசை தான். அப்படியே ஒன்னும் தெரியாத பயலுக்கு இயக்குநர் ஆகுனும்னு ஆசையான்னு என்னுடைய மனசாட்சியும் கேட்குது :-)))))

என்ன குமாரு,

//அன்னார் எங்களை ஏமாற்றாது நல்லது செய்யவேண்டும்!//

ஆக மொத்தம் நான் அல்வா கொடுத்துக் கொண்டு அலைகிறவன் என்ற நல்ல பெயர் சிங்கப்பூரில் ஏற்கனவே ஆரம்பித்து விட்டது என்று சொல்லுங்கள். :-)))))
 
விஜி! 'செருப்பு' குறும்படம் அஜீவனோடது என அல்வா கொடுத்து விடாதீர்கள்! அது கெளதமனோடது!

ஓஹோ! உங்க குறும்படத்திற்கான ஆரம்ப 'ரீலா' இது?

-மானஸாஜென்
 
'children of heaven'- ஈரானியப் படம் ஏகப்பட்ட Home Run, செருப்பு, பொம்மைகளை உருவாக்கும் போலருக்கிறது!

கமலஹாசன் சொன்னது போல வால்மீகி கதையாக இருந்தாலும் 'கம்ப'ராமாயணமாய் இருந்தால் சரி!

-மானஸாஜென்
 
நன்றி மனாஸாஜென்.

//'children of heaven'- ஈரானியப் படம் ஏகப்பட்ட Home Run, செருப்பு, பொம்மைகளை உருவாக்கும் போலருக்கிறது!//

அது ஒரு நல்ல கதைக்கு கிடைத்த வெற்றியென தான் நான் நினைக்கிறேன்.
 

உங்கள் கருத்துக்களை இட


<< திரும்ப முன் பக்கத்துக்கு போ

-ல் போட்டுத் தாக்கியது

குறைபட்டோம்..பெருமைபடவில்லையே...

Difficulty in reading this post due to font issues? Click here for a PDF copy. Works best if you right-click the link and select 'Save target as...'
இந்த பதிவை போட்டுத் தாக்கியவர் : Vijayakumar
ராக்கெட்டை கோவிலுக்கு கொண்டு போய் பூஜை செய்தார் மாதவன் நாயர் என கோபப்பட்டோம். நியாயம் இருக்கிறது. ஒரே நேரத்தில் விட்ட இரண்டு செயற்கைகோள்களைப் பற்றிய பேச்சை பதிவில் இதுவரை(எனக்கு தெரிந்த வரையில்) காணோமே. குறை காண மட்டுமே நம் மனம் படைக்கப்பட்டு விட்டதோ? இல்லை இதில் பெருமைப்பட என்ன இருக்கிறதா?

என்னால் தட்டச்ச முடியாததால் தினமலரில் வந்த செய்தியின் சாரத்தை சுட்டுப் போடுகிறேன்.....

Image hosted by PicsPlace.to


ஸ்ரீஹரிகோட்டா : ஸ்ரீஹரிகோட்டா, சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2வது பிரமாண்ட ராக்கெட் ஏவு தளத்தில் இருந்து, "கார்ட்டோசாட் 1' மற்றும் "ஹாம்சாட்' ஆகிய இரு செயற்கைக் கோள்களையும் சுமந்து கொண்டு "பி.எஸ்.எல்.வி., சி 6' ராக்கெட், நேற்று காலை வெற்றிகரமாக விண்ணை நோக்கி பாய்ந்தது. ஜனாதிபதி அப்துல் கலாம் "பி.எஸ்.எல்.வி., சி 6' ராக்கெட் விண்ணுக்கு செல்லும் நிகழ்ச்சியை நேரில் பார்த்தார். ஒரே ராக்கெட்டில் இருந்து இரு செயற்கைக் கோள்கள் விண்ணிற்கு அனுப்பப்படுவது இந்திய விண்வெளி வரலாற்றில் இதுவே முதல்முறை.

சென்னையில் இருந்து 90 கி.மீ., துõரத்தில் ஆந்திர மாநிலத்தில் ஸ்ரீஹரிகோட்டாவில் அமைக்கப்பட்டுள்ள 2வது ராக்கெட் ஏவுதளத்தை அமைத்த விஞ்ஞானிகள், தொழில்நுட்ப வல்லுனர்கள், செயற்கைக் கோள்களை வடிவமைத்த திட்ட இயக்குனர்கள் என அனைத்துத் தரப்பினரும் "பி.எஸ்.எல்.வி., சி 6' ராக்கெட் விண்ணிற்கு வெற்றிகரமாக சென்றதை பார்த்ததும் மகிழ்ச்சி வெள்ளத்தில் துள்ளி குதித்தனர்.

நில வரைபடங்களைத் துல்லியமாக படமெடுக்கக் கூடிய "கார்ட்டோசாட் 1' மற்றும் அமெச்சூர் ரேடியோ சேவையை கட்டுப்படுத்தும் "ஹாம்சாட்' ஆகிய இரு செயற்கைக் கோள்களையும் இரவுப் பகலாக பாடுபட்டு இந்திய விஞ்ஞானிகள் வடிவமைத்துள்ளனர். இந்நிலையில், செயற்கைக் கோள்களை விண்ணில் ஏவுவதற்கு ஸ்ரீஹரிகோட்டா, சதீஷ் தவான் ஏவு தளத்தில் 400 கோடி ரூபாய் செலவில் 2வது பிரமாண்ட ராக்கெட் ஏவு தளம் முழுக்க, முழுக்க இந்தியத் தொழில்நுட்பத்தில் <உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஏவுதளத்தில் இருந்து, ஆண்டுக்கு எட்டு முறை ராக்கெட்டுகளை விண்ணுக்கு அனுப்பும் திறனை ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆய்வு மையம் பெற்றுள்ளது. இந்த ஏவுதளத்தை விஞ்ஞானிகள் ஐந்து ஆண்டுகளில் வடிவமைத்துள்ளனர்.

இந்த ஏவுதளத்திலிருந்து நேற்று "கார்ட்டோசாட் 1' மற்றும் "ஹாம்சாட்' ஆகிய இரு செயற்கைக் கோள்கள் "பி.எஸ்.எல்.வி., சி 6' ரக ராக்கெட் மூலம் விண்ணுக்கு அனுப்பப்பட்டது. ராக்கெட் ஏவுதலுக்கான "கவுன்ட் டவுண்' நிகழ்ச்சி கடந்த 3ம் தேதி காலை 5.49 மணிக்குத் தொடங்கியது. நேற்று காலை 10.15 மணியளவில் இந்த ராக்கெட், நெருப்பை உமிழ்ந்தபடி பயங்கர சப்தத்துடன் விண்ணிற்கு சீறிப் பாய்ந்தது. விண்ணில் பாய்ந்த அடுத்த சில நிமிடங்களில் திட்டமிட்டபடி ராக்கெட் இயங்கியது. விண்ணில் இரு செயற்கைக் கோள்களையும் அதன் சுற்று வட்டப் பாதையில் நிறுத்தியது.

"கார்ட்டோசாட் 1' செயற்கைக் கோள் ஆயிரத்து 560 கிலோ எடையுடையது. இந்த செயற்கைக் கோள், ஐ.ஆர்.எஸ்.,(தொலை உணர்வு) ரக செயற்கைக் கோள்கள் வரிசையில் 11வது செயற்கைக் கோள். முழுக்க, முழுக்க இஸ்ரோ விஞ்ஞானிகளால் இந்தியத் தொழில்நுட்பத்தில் இந்த செயற்கைக் கோள் வடிவமைக்கப்பட்டுள்ளது. "கார்ட்டோசாட் 1' செயற்கைக் கோளில் இரண்டு பிரமாண்ட டிஜிட்டல் தொழில்நுட்பம் கொண்ட கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இவ்விரு கேமராக்களும் கறுப்பு வெள்ளை புகைப்படங்களை எடுக்கும் திறன் பெற்றவை. முப்பரிமாண (3டி) படங்களைப் பதிவு செய்யும் ஆற்றல் உடையவை. பூமியின் மேற்பரப்பில் 2.5 மீட்டர் நீளம் உள்ள எந்த பொருளையும் இந்த செயற்கைக் கோள் துல்லியமாக படமெடுக்கும். 30 கி.மீ., பரப்பளவில் ஒரே நேரத்தில் 12 ஆயிரம் படங்களை எடுத்து பூமிக்கு அனுப்பும். ஒரு நாளில் 14 முறை இந்த செயற்கைக் கோள் பூமியைச் சுற்றி வரும்.

இவ்வாறு பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்ட "கார்ட்டோசாட் 1' செயற்கைக் கோள் நில வரைபடங்களை துல்லியமாக கண்டறியும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்திய பாகிஸ்தான் எல்லைக் கோடு, இந்திய இலங்கை எல்லைக் கோடு, இந்தியாவில் உள்ள மாநிலங்களின் எல்லை வரைபடம், நகர்ப்புற மற்றும் கிராமப்புற நில வரைபடம், காட்டுவளம், நீர் வளம், நில வளம், கடல் அரிப்பினால் அழிந்த பகுதிகள், அணைகள், கால்வாய்கள், ஆறுகள் ஆகியவற்றை வரையறுக்கும் திறன் பெற்றது இந்த செயற்கைக் கோள்.

பிரதான செயற்கைக் கோளான "கார்ட்டோசாட் 1' உடன் துணை செயற்கைக் கோளான "ஹாம்சாட்' செயற்கைக் கோளும் நேற்று விண்ணுக்கு அனுப்பப்பட்டது. 42.5 கிலோ எடையுள்ள "ஹாம்சாட்' செயற்கைக் கோள் சர்வதேச மற்றும் தேசிய அளவிலான அமெச்சூர் ரேடியோ ஒலிபரப்பு சேவைக்காக <உருவாக்கப்பட்டுள்ளது. இது, தெற்காசிய நாடுகளில் அமெச்சூர் ரேடியோ ஒலிபரப்பு சேவைக்காக தயாரிக்கப்பட்டுள்ளது.

திடீர் வெள்ளச் சேதம், பூகம்பம் போன்ற இயற்கைச் சீற்றங்கள் ஏற்படும் கால கட்டங்களில் தொலைத் தொடர்பு மற்றும் மின்சாரத் தொடர்பு முற்றி<லுமாக துண்டிக்கப்படும். அந்த நேரத்தில் தகவல் தொடர்பிற்கு வசதியாக இந்த "ஹாம்சாட்' செயற்கைக் கோள் தயாரிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து விண்ணிற்கு ஏவப்பட்டுள்ள செயற்கைக் கோள்களை திருவனந்தபுரம், லக்னோ, மொரீஷியஸ், டியர்ஸ்லேக் (ரஷ்யா), பியாக் (இந்தோனேசியா) ஆகிய இடங்களில் உள்ள விண்வெளி ஆய்வுக் கட்டுப்பாட்டு மையங்கள் மூலம் கண்காணிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்திய செயற்கைக்கோள்கள் இந்திய ராக்கெட் மூலமே வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட உடன் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய தலைவர் மாதவன் நாயர் உட்பட விஞ்ஞானிகளை ஜனாதிபதி அப்துல் கலாம் பாராட்டினார். "நாடே உங்களை கவுரவிக்கிறது. இந்த நேரம் நாட்டிற்கே மிகவும் கவுரவமான நேரம்' என்று அவர் பாராட்டினார்.

பி.எஸ்.எல்.வி., ஒரு கண்ணோட்டம்!:இஸ்ரோ வரலாற்றில் ஏழாவது முறையாக செயற்கைக் கோளை வெற்றிகரமாக விண்ணுக்கு சுமந்து சென்று சாதனை படைத்துள்ளது பி.எஸ்.எல்.வி., ரக ராக்கெட்.

பி.எஸ்.எல்.வி., ரக ராக்கெட்டை முதல் முறையாக இஸ்ரோ நிறுவனம், ஆயிரம் கிலோ எடையுள்ள நுண் உணர் செயற்கைக் கோள்களை (ஐ.ஆர்.எஸ்.,) சுமந்து செல்லும் வகையில் உருவாக்கியது. ஆரம்பத்தில் பூமிக்கு மேலே 900 கி.மீ., நிர்ணயிக்கப்பட்ட சுற்று வட்டப் பாதையில் செயற்கைக் கோள்களை நிலை நிறுத்தும் வகையில் உ<ருவாக்கப்பட்டது.

முதல்முதலாக 1994ம் ஆண்டு பி.எஸ்.எல்.வி., ராக்கெட் விண்ணில் வெற்றிகரமாகப் பாய்ந்ததைத் தொடர்ந்து இவ்வகை ராக்கெட் சுமந்து செல்லும் செயற்கைக் கோள்களின் எடையும் படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கின. 44.4 மீட்டர் <உயரமுள்ள பி.எஸ்.எல்.வி., ராக்கெட் 295 டன் எடையுடையது. செயற்கைக் கோள்களுக்குத் தேவையான திட மற்றும் திரவ எரிபொருளை தனக்குள் சேமித்து வைக்கும் ஆற்றல் பெற்றது.

பி.எஸ்.எல்.வி., ராக்கெட்டில் முதல் கட்டத்தில் 138 டன் திட எரி பொருள் நிரப்பப்பட்டது. சர்வதேச அளவில் மிக அதிக அளவு திட எரிபொருளை நிரப்பிச் செல்வது இதுவே முதல்முறை. இரண்டாவது கட்டத்தில் 41.5 டன் திரவ எரி பொருளும், மூன்றாவது கட்டத்தில் 7.6 டன் திட எரி பொருளும், நான்காவது கட்டத்தில் 2.5 டன் திரவ எரி பொருளும் நிரப்பப்பட்டு விண்ணிற்கு அனுப்பப்பட்டது.

தொடர்ந்து ஏழாவது முறையாக செயற்கைக் கோள்களை விண்ணிற்கு வெற்றிகரமாக பி.எஸ்.எல்.வி., சுமந்து சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. பி.எஸ்.எல்.வி., ராக்கெட்டை திருவனந்தபுரத்தில் <உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் வடிவமைத்துள்ளது.

அந்த பரபரப்பான நிமிடங்கள்!

* காலை 10.05 மணி:

அப்துல்கலாம் உட்பட விஞ்ஞானிகள் பரபரப்பாக

காணப்பட்டனர்.

* காலை 10.10 மணி

கணினி கட்டுப்பாட்டு அறையில் மாதவன் நாயர்

பதட்டத்துடன் காணப்பட்டார்.

* காலை 10.11 மணி

செயற்கைக் கோள் விண்ணில் ஏவுதல் குறித்து இந்தியிலும்,

ஆங்கிலத்திலும் அறிவிப்புகள் வெளியிட்டன.

* காலை 10.12 மணி

நுõற்றுக்கணக்கான விஞ்ஞானிகள் உச்சக்கட்டப்

பரபரப்பிலிருந்தனர்.

* காலை 10.15 மணி

புகையை கக்கிக்கொண்டு "பி.எஸ்.எல்.வி.,சி 6' விண்ணில்

சீறிப் பாய்ந்தது.

* காலை 10.23 மணி

விஞ்ஞானிகள் ஆரவாரத்துடன் கைதட்டியும் கை குலுக்கியும் தங்களது

மகிழ்ச்சியினை பகிர்ந்து கொண்டனர்.

* காலை 10.33 மணி

"பி.எஸ்.எல்.வி., சி 6' வெற்றிகரமாக விண்ணில்

செலுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

* காலை 10.34 மணி

ஜனாதிபதி அப்துல்கலாம், மாதவன் நாயர் உட்பட

அனைத்து விஞ்ஞானிகளையும் கை குலுக்கி வாழ்த்தி தனது

மகிழ்ச்சியினை வெளிப்படுத்தினார்.

புதிய ஏவுதளத்தில் என்னென்ன உள்ளன? : கார்ட்டோசாட் 1 மற்றும் ஹாம்சாட் செயற்கைக் கோள்கள் ஸ்ரீஹரிக்கோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்திலிருந்து வெற்றிகரமாக விண்ணிற்கு ஏவப்பட்டன. இந்த ஏவுதளம் 400 கோடி ரூபாய் செலவில் பிரத்யேகமாக சர்வதேச தரத்தில் ஐந்து ஆண்டுகளில் <உருவாக்கப்பட்டது.

அடுத்த தலைமுறையில் அதிநவீன தொழில்நுட்பத்தில் உருவாக்கப்படும் செயற்கைக் கோள்கள் மற்றும் ராக்கெட்டுகளையும் தாங்கி நிற்கக் கூடிய அளவில் இந்த ஏவுதளம் மிகப் பிரமாண்டமாக விஞ்ஞான முறைப்படி வடிவமைக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது ஏவுதளத்தில் நான்கு பிரதான பிரிவுகள் உள்ளன.

<1. உதிரி பாகங்களை ஒருங்கிணைக்கும் கட்டமைப்பு (வி.ஏ.பி.,)

வி.ஏ.பி.,யில், ராக்கெட்டை துõக்கிச் செல்லும் வகையில் 30 டன் மற்றும் 200 டன் எடையைக் கையாளக் கூடிய கிரேன்கள் வைக்கப்பட்டுள்ளன. எலிவேட்டர் உள்ளிட்ட அதி நவீன தொழில்நுட்ப சாதனங்கள் வைக்கப்பட்டுள்ளன.

2. மொபைல் பெடஸ்டல் (எம்.எல்.பி.,)

பி.எஸ்.எல்.வி., மற்றும் ஜி.எஸ்.எல்.வி., ரக ராக்கெட்டுகளுக்குத் தேவையான வகையில் மொபைல் சிஸ்டம் இதில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

3. அம்பிலிக்கல் டவர் (யு.டி.,)

எரி பொருள் நிரப்புப் பணிகளைக் கண்காணிக்கும் டவர் இது. 10 டன் எடையைக் கையாளக் கூடிய கிரேனும் இதில் பொருத்தப்பட்டுள்ளது. கடைசி நேரம் வரை செயற்கைக் கோள் செல்லும் விதத்தை கண்காணிக்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

4. ஜெட் ரிப்ளெக்டர் (ஜே.டி.,)

திடீர் காலநிலை மாற்றத்தால் மின்னல் தாக்குதல் ஏற்பட்டால் அதிலிருந்து பாதுகாக்கும் வகையில் நான்கு பாதுகாப்பு கோபுரங்கள் இதில் அமைக்கப்பட்டுள்ளன. நான்கு பாதுகாப்பு கோபுரங்களும் தலா 120 மீட்டர் உயரமுடையவை. இவை ஒவ்வொன்றும் கேபிள் ஒயர்கள் மூலம் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.

அப்துல் கலாம், மாதவன் நாயர் வாழ்த்து : ஜனாதிபதி அப்துல் கலாம்: நமது விஞ்ஞானிகளின் இரவு பகலான உழைப்புக்கு வெற்றி கிடைத்துள்ளது. கார்ட்டோசாட் 1 மற்றும் ஹாம்சாட் ஆகிய இரு செயற்கைக் கோள்களையும் வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய விஞ்ஞானிகளுக்கு எனது பாராட்டுக்கள். அவர்களைக் குறித்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன். நமது நாடும் பெருமை அடைகிறது. 1980ம் ஆண்டு ஜூலை மாதம் 40 கிலோ எடையுள்ள மிகச்சிறிய செயற்கைக் கோள் விண்ணில் ஏவப்பட்டது. 25 ஆண்டுகளுக்குப் பிறகு அதைவிட பல மடங்கு எடையுள்ள செயற்கைக் கோளை விண்ணில் ஏவும் திறனை நாம் இன்று பெற்றுள்ளோம்.

மாதவன் நாயர்: செயற்கைக் கோள்கள் மிகத் துல்லியமாக நிர்ணயிக்கப்பட்ட பாதையில் சென்றது. "பி.எஸ்.எல்.வி.,சி 6' கடந்த இரண்டு வாரங்களாக வெட்டவெளியில் பல்வேறு வானிலை இடர்பாடுகளையும் தாங்கிக் கொண்டு நின்றது. அனைத்து விஞ்ஞானிகளுக்கும் எனது வாழ்த்துக்கள்.

இதுவரை ஏவப்பட்டவை நாற்பத்தி இரண்டு! : இந்தியாவில் 1975ம் ஆண்டு முதல் செயற்கைக் கோள்கள் விண்ணில் ஏவப்படும் பணிகள் தொடங்கின. முதன்முதலாக "ஆரியபட்டா' விண்ணில் ஏவப்பட்டது. அதன்பின் "பாஸ்கரா', "இன்சாட்' உள்ளிட்ட பலரக செயற்கைக் கோள்கள் இந்தியா மற்றும் வெளிநாடுகளிலிருந்து விண்ணில் ஏவப்பட்டன. இவற்றை ஏவுவதற்காக எஸ்.எல்.வி., ஏ.எஸ்.எல்.வி., பி.எஸ்.எல்.வி., ஜி.எஸ்.எல்.வி., உள்ளிட்ட ராக்கெட்டுகள் <உருவாக்கப்பட்டன. "கார்ட்டோசாட் 1', "ஹாம்சாட்' செயற்கைக் கோள்களுடன் சேர்த்து இதுவரை மொத்தம் 42 இந்திய செயற்கைக் கோள்கள் விண்ணில் ஏவப்பட்டுள்ளன.

2001 முதல் 2005 வரை:

ஜீ சாட் 1 2001 1530 கிலோ ஜி.எஸ்.எல்.வி., டி., 1

டி.ஈ.எஸ்., 2001 1108 கிலோ பி.எஸ்.எல்.வி., சி3

இன்சாட் 3 2002 2750 கிலோ ஏரியன்

கல்பனா 1 2002 1060 கிலோ பி.எஸ்.எல்.வி.,சி., 4

இன்சாட் 3 ஏ 2003 2950 கிலோ ஏரியன் 2

ஜிசாட் 2 2003 1825 கிலோ ஜி.எஸ்.எல்.வி., டி2

இன்சாட் 3 ஈ 2003 2775 கிலோ ஏரியன்

ரிசோசாட் 1 2003 1360 கிலோ பி.எஸ்.எல்.வி.,சி., 5

எஜுசாட் 2004 1950 கிலோ ஜி.எஸ்.எல்.வி., 7

கார்ட்டோசாட் 2005 1560 கிலோ பி.எஸ்.எல்.வி.,சி., 6

இந்தியா விண்ணில் ஏவிய சர்வதேச செயற்கைக் கோள்கள்:

எண் பெயர் தேதி எடை ராக்கெட்

1. டி.எல்.ஆர்.டியூப்சாட் 26.05.1999 45 கிலோ பி.எஸ்.எல்.வி.,சி2

(ஜெர்மன்)

2. கிட்சாட் 3 (கொரியா) 26.05.1999 110 கிலோ பி.எஸ்.எல்.வி., சி2

3. பேர்டு (ஜெர்மன்) 22.10.2001 92 கிலோ பி.எஸ்.எல்.வி.,சி3

4. ப்ரோபா 22.10.2001 94 கிலோ பி.எஸ்.எல்.வி.,சி3

(பெல்ஜியம்)

தற்சமயம் சேவையில் உள்ள ஐ.ஆர்.எஸ்., செயற்கைக்கோள்கள்:



விண்ணில் செயற்கைக்கோள் ராக்கெட் விண்ணுக்கு

செலுத்தப்பட்ட செலுத்தப்பட்ட

தினம்: இடம்



டிச.,28, 1995 ஐ.ஆர்.எஸ்.டி., இ.சி மோல்னியா ஸ்ரீஹரிகோட்டா

செப்.,29,1997 ஐ.ஆர்.எஸ்., சி.டி பி.எஸ்.எல்.வி.,சி4 ஸ்ரீஹரிகோட்டா



மார்ச் 25,1996 ஐ.ஆர்.எஸ்.,"பி3' பி.எஸ்.எல்.வி.,டி3 ஸ்ரீஹரிகோட்டா



மே 26, 1999 ஓசன் சாட் பி.எஸ்.எல்.வி.2 ஸ்ரீஹரிகோட்டா



அக்.10, 2001 டி.ஈ.எஸ்., பி.எஸ்.எல்.வி.சி டி ஸ்ரீஹரிகோட்டா



அக்.17,2003 ரிசோசாட் 1 பி.எஸ்.எல்.வி.சி5 ஸ்ரீஹரிகோட்டா



மே 5, 2005 கார்ட்டோசாட் 1 பி.எஸ்.எல்.வி.சி6 ஸ்ரீஹரிகோட்டா





எடை ஆயுள் சக்தி உபரி சாதனங்கள்



1250 கிலோ 3 ஆண்டுகள் 800 வாட் கேமரா

1250 கிலோ 3 ஆண்டுகள் 800 வாட் கேமரா

920 கிலோ ஓராண்டு 800 வாட் எக்ஸ்ரே,ஸ்கேனர்,

டிரான்ஸ்பாண்டர்

1050 கிலோ 5 ஆண்டுகள் 750 வாட் மானிட்டர்,ஸ்கேனர்,

ரேடியோமீட்டர்

1108 கிலோ 3 ஆண்டுகள் 850 வாட் கேமரா

1360 கிலோ 5 ஆண்டுகள் 1250 வாட் கேமரா, ஸ்கேனர்

1560 கிலோ 5 ஆண்டுகள் 1100 வாட் 2 டிஜிட்டல் கேமரா

இந்த பதிவின் வாக்கு எண்ணிக்கை: . பக்கத்திலுள்ள ஸ்டாரை மவுசால் போட்டுத் தாக்கினால் எனக்கு மவுசு ஏறும். நன்றி:-)

உங்கள் கருத்துக்களை இட

திருப்பி தாக்கியவர்கள்:
சுட்ட பழத்தையும் தகுந்த முன்னுரைகளோடு சுவையாக வழங்கியதற்கு நன்றி :)
 
விஜய்,
//ராக்கெட்டை கோவிலுக்கு கொண்டு போய் பூஜை செய்தார் மாதவன் நாயர் என கோபப்பட்டோம். நியாயம் இருக்கிறது. ஒரே நேரத்தில் விட்ட இரண்டு செயற்கைகோள்களைப் பற்றிய பேச்சை பதிவில் இதுவரை(எனக்கு தெரிந்த வரையில்) காணோமே//

முன்னதை எழுதியவர்கள், பின்னதை ஏன் எழுதவில்லை என கேட்கும் நீங்கள், பின்னதை மட்டுமே எழுதிய ஊடகங்கள், முன்னதற்கு ஏன் கோபப்படவில்லை என கேட்டீர்களா?

நம்மை போன்ற தனி நபர் வலைதளங்கள், மாற்று ஊடக தளமாக வளர வேண்டும்.

அல்லாது, வெகுஜன ஊடகங்களை மறுபதிப்பிக்கும்/ பிரதியெடுக்கும் இயந்திரங்களாக இருப்பது, நேர விரயம் மட்டுமே.

ஒரு சுட்டியுடன் முடிக்க வேண்டிய வேலையை, முழுதும் தட்டச்ச இருக்கும் நேரத்தில், சொந்தமாகவே ஏதாவது எழுதியிருக்கலாம் தானே.

உங்கள் மனதை ஊனப்படுத்த அல்ல, ஊக்கப்படுத்தவே இதை எழுதினேன்.

நன்றி,
நந்தலாலா
 
This comment has been removed by a blog administrator.
 
நந்தலாலா!!, நான் ஆத்திரத்தில் எழுதவில்லை. ஆதங்கத்தில் அந்த பதிவைப் போட்டேன். தவறாக புரிந்துக் கொள்ள வேண்டாம். நான் வெகுஜன ஊடகத்தில் வந்ததை வலைப்பதிவில் திருப்பி அதையே இட வேண்டுமென பதிவு போடவில்லை. எதாவது நிகழ்வு நடந்தால் நாம் எழுதி குவிப்போமே. இதைப் பற்றி ஒன்றும் சத்தமே காணமோ என்று கொஞ்சம் ஆதங்கப்பட்டேன். செயற்கைக் கோள் விடுவது வழக்கமான நிகழ்ச்சியாக இருந்தால் விட்டு விடலாம். எப்போதோவது தான் அது நடக்கும். நமது விண்வெளி ஆராய்ச்சியில் மைல்கல்கள்.

//வெகுஜன ஊடகங்களை மறுபதிப்பிக்கும்/ பிரதியெடுக்கும் இயந்திரங்களாக இருப்பது, நேர விரயம் மட்டுமே.//

இந்த பதிவு வெறும் ஞாபகப்படுத்துதல் மட்டுமே. அத்துடன் என்னுடைய மகிழ்வையும் வெளிப்படுத்த 5 நிமிடத்தில் பண்ணிய பதிவு அது. 5 நிமிடம் தான்... ஏனென்றால்...


//ஒரு சுட்டியுடன் முடிக்க வேண்டிய வேலையை, முழுதும் தட்டச்ச இருக்கும் நேரத்தில், சொந்தமாகவே ஏதாவது எழுதியிருக்கலாம் தானே.//

சுட்டி கொடுக்க தோணவில்லை என்பதை நான் அனுமதித்தே ஆக வேண்டும். ஆனால் நானே முழுவதும் தினமலரில் வந்ததை தட்டச்சு செய்யவில்லை(அய்யகோ எனக்கும் வேலை இருக்கும்). இந்த மாதிரி ஃபாண்ட் கன்வெர்சனுக்கு சுராதா http://www.suratha.com அருமையான நிரலை (பொங்குத் தமிழ்) கொடுத்திருக்கிறாரே. மேல் சொன்ன சுட்டிக்கு போய், பொங்கு தமிழை காணவும். சுட்டி கொடுக்கும் அதே நேரத்தை தான் அந்த நிரல் தினமலர் எழுத்துருவை ஒருங்குறிக்கு மாற்ற எடுத்துக் கொள்ளும். தினமலர் இணையத்தில் காப்பி பண்ணி பொங்குதமிழில் பேஸ்ட் பண்ணினால் வேலை முடிந்தது. அதுவில்லாமல் தட்டச்ச நேரமில்லாமல் தான் அங்கிருந்து சுட்டதாக வேறு சொல்லியிருக்கிறேன்.

கோபம் கொள்ள வேண்டாம். பொதுவான ஆதங்கத்தை தான் சொன்னேன் நந்தலாலா.
 
hats off to suratha and suratha.com for their wonderful online service. wherever and whenever goodness (rocket launch incl.) happens , small or big, one shld have the heart to appreciate it "WHOLEHEARTEDLY". adhuthaan unMaiyaana manidha naeyam.

let me see whether you find out who this anonymous is. I will keep checking my inbox repeatedly.

- 'known' anonymous :)
 
விஜய் அதுதான், நீங்க போட்டுட்டீங்க இல்ல?. விட்டுத் தள்ளுங்க!
 
விஜய்,
உங்கள் ஆதங்கம் தேவையற்ற ஒன்று என்பதை சுட்டவே நான் எழுதினேன்.

பெருமாள் கோவில் வழிபாடு முரண். செயற்கைகோளை விடுவதே கடன்.

தினமலரை குறித்த நீங்கள், கணி தமிழ் வளர்ச்சிக்கு உதவும் சுரதா பற்றி பதிவிலேயே ஒரு வரி போட்டு தாக்கியிருந்தால் எனக்கு ஒரு வரி மிச்சம். ;-)

பிரதியெடுக்கும் இயந்திரம் என சொன்னது நிச்சயம் உங்களை அல்ல. சில பதிவுகளில் 100% மறுபதிப்பை படித்ததால் வந்த ஆதங்கம்.

இணையத்தில் கிடைக்கின்ற/இருக்கின்ற ஒன்றை மறுபடியும் பதிய மெனக்கெடும் இவர்களை என்ன சொல்ல?

குறைந்த பட்சம் (உங்களைப்போல) தொடக்கத்திலேயே 'சுட்ட'தை சொல்லாமல், இடையில் எங்கோ பதிந்தவரின் கருத்து இருக்கலாமோ என்ற தேடலில், நாம் ஏற்கனவே வாசித்த ஒன்றை மறுபடி முழுதுமாக வாசிக்கும் போது ஏற்படும் அலுப்பு இருக்கிறதே....

சுட்டதை ஆரம்பிக்கும் போதே சுட்டிவிட்ட உங்கள் பதிவில் வந்து இதை கொட்டியதன் காரணம் - சுயமாக எழுதவரும் நீங்கள், சுயமாகவே எழுதலாமே என கூறத்தான்.

மற்றபடி இதில் கோபம்கொள்ள எந்த இடத்திலும் வாய்ப்பில்லாமல் போனமைக்காக வருந்துகிறேன்.

//(அய்யகோ எனக்கும் வேலை இருக்கும்)//
அதே அய்யகோ! எனக்கும் தெரியுமே!
உங்கள் நாட்டில் (நகரிலில்?) இருக்கும், அடிக்கடி பறந்து என்னை சந்திக்க வரும் நண்பர் சொல்வார் "மனிதனாக உணரவே வெளிநாட்டுக்கு போகவேண்டியுள்ளது".

ஆனால் இப்போது எனக்கு ஏகப்பட்ட நேரம் கை வசமுள்ளது - குறைந்தது அடுத்த ஒரு வாரத்துக்காவது. :)

உலகில் நடக்கும் அனைத்தையும், எல்லாவற்றையும் தேடிப்பிடித்து, அவைகளை இதயப்பூர்வமாக பாராட்டும் - 'known' anonymous சொல்லும் - உண்மையான மனித நோய் எனக்கில்லை.

மற்றபடி இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி(?) வெற்றி குறித்து, ஒவ்வொரு சராசரி இந்தியனின் மகிழ்வுக்கு சமமானதே எனது மன்நிலையும்.
நன்றி,
நந்தலாலா
 
//முன்னதை எழுதியவர்கள், பின்னதை ஏன் எழுதவில்லை என கேட்கும் நீங்கள், பின்னதை மட்டுமே எழுதிய ஊடகங்கள், முன்னதற்கு ஏன் கோபப்படவில்லை என கேட்டீர்களா?//

//ராக்கெட்டை கோவிலுக்கு கொண்டு போய் பூஜை செய்தார் மாதவன் நாயர் என கோபப்பட்டோம்//

ராக்கெட்டையா? ஏதோ கோப்பு என்று நினைக்கிறேன் .. அது சரி யார் கோபப்பட்டார்கள் ? சுட்டி இருக்கா? ஏன் கோபப்படவேண்டும் ? ஏதோ வேலை செய்தோம்...போனால் போகிறது..விழுந்தால் விழுகிறது..என நினைக்காமல், கண்டிப்பாக வெற்றியடையவேண்டும் என்னும் அவரது எண்ணம் தானே இதில் பிரதிபலிக்கிறது ..
 
கோவிலுக்கு கொண்டு போனதற்கு பதிலாக ஒரு சர்ச்சுக்கோ, மசூதிக்கோ கொண்டு போயிருந்தால் அப்போ மதசார்பின்மையை நிருபித்திருக்கலாம்.. அரசியல்வாதிகளிடம் பாடம் கற்பித்துக் கொள்ளத்தவறியதன் மூலம் மகா புத்திசாலிகளான ஒரு சில வலைப்பதிவர்களின் கடும் கண்டனத்திற்கு ஆளாகிவிட்டார் பாவம்..!
 
Good recognition. I agree with you. Nesa Kumar has written an informative article in thise week's thinnai on this launch http://thinnai.com/sc0506051.html

Thanks
Sa.Thirumalai
 

உங்கள் கருத்துக்களை இட


<< திரும்ப முன் பக்கத்துக்கு போ

-ல் போட்டுத் தாக்கியது

மூன்றாவது கண்-1

Difficulty in reading this post due to font issues? Click here for a PDF copy. Works best if you right-click the link and select 'Save target as...'
இந்த பதிவை போட்டுத் தாக்கியவர் : Vijayakumar
ஒரு சின்ன மீன் பெரிய மீனிடம் கேட்டது "கடல் என்பதைப் பற்றி மற்றவர்கள் நிறைய பேசுகிறார்கள். கடல் என்றால் என்ன?"

பெரிய மீன் சொன்னது "உன்னை சூழ்ந்துள்ள அனைத்துமே கடல் தான்"

சின்ன மீனுக்கு ஏக குழப்பம் "அப்போது ஏன் என்னால் கடலை பார்க்க முடியவில்லை?"

"ஏனென்றால் நீ கடலினுள்ளேயே வாழ்கிறாய்,நகருகிறாய். அதனால் கடல் உன்னுள்ளும் இருக்கிறது. வெளியேயும் இருக்கிறது. கடல் தான் உனக்கு வாழ்க்கையும் கொடுத்தது. உன் சாவையும் கொடுக்கும். கடல் உன்னுடைய சொந்தமாக உன்னை சூழ்ந்துள்ளது" என்றது பெரிய மீன்.

கந்துவின் கருத்து: மீன் கடலிலும், ஆற்றிலும், ஏரியிலும் வாழ்ந்தாலும் அது அவற்றை உணருவதில்லை. மக்கள் ஜென்னிலே வாழ்ந்தாலும், ஜென்னை பற்றி அறிந்துக் கொள்வதில்லை. அப்படியென்றால் ஜென் என்றால் என்ன என்பதை உங்கள் சிந்தனைக்கே விட்டு விடுகிறேன்.

மேலே சொன்னது புரிஞ்ச நீங்க புத்திசாலி டே... அதையும் சொல்லிற்றேன்.

கொஞ்ச நாளாக 'தினம் ஒரு ஜென்' கங்காவை காணவில்லையே? கருத்துக்கு மருந்தாக ஜென்னை படித்துக் கொண்டிருந்த போது அதன் ஒரு துகளை உங்களிடம் பகிர்ந்துக் கொள்ள விரும்பினேன். அதான் அது.

படத்தில் க்ளிக்கி விஸ்வரூபத்தைப் பார்க்கவும்
Image hosted by PicsPlace.to

நம்ம பசங்க எல்லாரும் போட்டோ புட்ச்சி புட்ச்சி போடுறதுனால எனக்கும் நான் புட்ச்ச போட்டவை போடனும்னு ஆசையா இருக்கு. கேமிரா வாங்குன புத்சுல ஆர்வ கோளாறுல நிறைய படம் புட்சேன். ஒவ்வொன்னா நேரம் கிடைக்கும் போது போடுறேன். இன்னிக்கு எனக்கு புட்ச போட்டோ இங்கேயிருக்கு. படத்தை க்ளிக் பண்ணீங்கன்ன பெரிசா படம் பார்க்கலாம். என்னோட மூன்றாவது கண் பார்வையை பிடிச்சாலும் பிடிக்காட்டியும் உங்க கருத்தை சொல்லிட்டு போயிருங்க.

இந்த பதிவின் வாக்கு எண்ணிக்கை: . பக்கத்திலுள்ள ஸ்டாரை மவுசால் போட்டுத் தாக்கினால் எனக்கு மவுசு ஏறும். நன்றி:-)

உங்கள் கருத்துக்களை இட

திருப்பி தாக்கியவர்கள்:
கங்கா விடுமுறையில் தாயகம் சென்றுள்ளார் விஜய், சீக்கிரம் திரும்புவார் என நினைக்கிறேன்.
 
நன்றி ஜீவா. ஜென் கதைகளே தமிழ் மணத்தில் காணோமே என்று நினைத்தேன். ஊருக்கு போயிருக்காரா? ம்ஹீம்.... நானே கூகிளி அங்கிருந்து ஆங்கிலத்திலே ஜென் கதைகளை படிக்க ஆரம்பித்துவிட்டேன் :-)
 
விஜய்,
அன்னியன் படப்பாடல்களை கேட்டுவிட்டீர்களா?
பாடல்களை கேட்டவுடன் உங்கள் ஞாபகம்தான் வந்தது...நீங்கள் போட்டுத்தாக்குவதற்கு நிறைய விஷயம் இருக்கு;-)
 
அது என்ன 'கந்துவின் கருத்து'?
 
ஜீவா, இன்னும் அந்நியன் பாடலை கேட்கவில்லையே. கேட்டுட்டா போச்சி. பதிவு போட்டுட்டா போச்சி...

நன்றி பாண்டியன்.

'கருத்து கந்தசாமி' தான் மாறிப்போய் 'கந்துவின் கருத்து' ஆகி விட்டது... :-)))))
 

உங்கள் கருத்துக்களை இட


<< திரும்ப முன் பக்கத்துக்கு போ

-ல் போட்டுத் தாக்கியது

தமிழ் சினிமாவின் 'துணை'யெழுத்துக்கள்

Difficulty in reading this post due to font issues? Click here for a PDF copy. Works best if you right-click the link and select 'Save target as...'
இந்த பதிவை போட்டுத் தாக்கியவர் : Vijayakumar
தமிழ் சினிமா என்றால் கொஞ்சமும் யதார்த்தம் இல்லாமல் பாடல்களை வைத்து கும்பல் கும்பலாக ஆடுவார்கள். சில சமயம் பின்னனியில் இருக்கும் பெண்கள் அரைகுறை ஆடைகளில் ஆடுவார்கள்/ஓடுவார்கள். சில சமயம் பெண்கள் ஈயம் காய்ச்சி ஊத்தப்பட்ட சிலை போன்ற ஒப்பனையுடன் நிற்பார்கள். சில சமயம் ஜோடி ஜோடியாக ஆடுவார்கள். சில சமயம் குழு குழுவாக தன் ஆடும் தன் ஜோடியின் மடியில் துவண்டுக் கொண்டிருப்பார்கள். ஆனால் பல சமயங்களில் இவர்கள் அழைக்கப்படுவதோ குரூப் டான்ஸர்ஸ்.

தமிழ் சினிமாவில் கதாநாயகன் தன்னை சூழ்ந்திருக்கும் அடியாட்களை தூக்கிப் போட்டு பந்தாடுவார். கதாநாயகன் ஓடும் ரயிலிலிருந்து குதிப்பார். மலையின் முகடிலிருந்து பல்டி அடிப்பார். தன்னை சூழ்ந்துள்ளோரை பாலத்திலிருந்து கீழ் ஓடும் ஆற்றில் தூக்கி எறிய, பல அடியாட்கள் குட்டிக்கரணம் அடித்து பாலத்திலிருந்து தண்ணீரில் விழுவார்கள். தீப்பந்தங்களுடன் கதாநாயகன் சண்டையிடும் போது அடியாட்கள் உடலில் தீப்பிடிக்க ஓடுவார்கள். கதாநாயகன் அவர்கள் தலையில் கட்டையால் அடிப்பார், சுற்றியிருக்கும் வண்டி சக்கரத்தில் அடியாளின் முகத்தை தேய்த்தே சக்கரத்தை சுக்கு நூறாக உடைப்பார். கதாநாயகன் வில்லன் அனுப்பிய அடியாட்களை அடிக்கும் போது நம் பற்கள் நறநறக்கும். அங்கு கதாநாயகன் அவர்களை அடிக்கும் போது நமக்கு நரம்பு புடைக்கும். நாமும் அதே முறுக்குடன் நாலு பேரை தூக்கிப் போட்டு மிதிக்க வேண்டுமென தோன்றும். இவைகளில் கொஞ்சம் கூட யதார்த்தம் இல்லை. இல்லையா? ஒரு நிமிஷம்...

Image hosted by PicsPlace.to

யதார்த்தம் யதார்த்தம் என்று பேசும் நாம், குரூப் டான்ஸ்களும், பைட்டுகளும் தமிழ் படத்திற்கு பிடிச்ச சனியன்கள் என்றும் பேசும் நாம், குரூப் டான்ஸர்களின் வாழ்க்கையையும், 'பைட்டு' போட வரும் அடியாட்களின் வாழ்க்கையினையும் யதார்த்தமாகவாவது நீங்கள் எண்ணிப் பார்த்திருந்தால் உங்கள் கையை தலைக்கு மேலே தூக்குங்கள். பாட்டு, பைட்டு இருக்கும் தமிழ் சினிமாவை பாட்டு, பைட்டு இல்லாத யதார்த்த உலகச் சினிமாக்களுக்கு இணையாண மாற்று சினிமாவாக பார்க்க துடிக்கும் நம்மவர்களுக்கு, சினிமாவின் பாட்டு பைட்டுகளை நம்பியிருக்கும் ஆயிரக்கணக்கான குடும்பங்களை எண்ணிப் பார்க்க மறந்து விட்டோமோ? எப்போதும் முன்னணியில் ஆடும் நாயக, நாயகிகளை பார்த்து பார்த்து பழக்கப்பட்ட நாம் பின்னணியில் இருக்கும் 'துணை'களை மறந்து விடுகிறோம். பாட்டுக்கு டான்ஸ் ஆடியும், பைட்டுக்கு அடிவாங்கியும் தன் வயிற்றையும், தன் குடும்பத்தின் வயிறுகளையும் கழுவும் 'துணை'நடிக, நடிகைகள் கோடம்பாக்கத்தில் எத்தனை பேர் இருக்கிறார்கள் தெரியுமா?

Image hosted by PicsPlace.to

சில பல கோடிகளை கண்டு மிதக்கும் தமிழ் நாயகர்களுக்கு பலம் சேர்ப்பது இந்த துணை எழுத்துக்கள் தான். இந்த துணை எழுத்துக்களுக்கும் அசோசியேஷன் உண்டு. கும்பல் கும்பலாக நூற்றுக்கணக்கில் கோடம்பாக்கத்தில் இருக்கிறார்கள். இந்த பாட்டுக்கு குரூப் டாண்ஸ்க்கு(ஆண் பெண் சேர்த்து) 50 பேர் தேவை, இந்த பைட் சீக்வன்ஸ்க்கு 10 பேர் பலசாலிகள் பத்து பேர் தேவை என்று அசோசியேஷனுக்கு தேவைகள் கேட்டு வர, அது டான்ஸ்க்கு 50 பேரையும், பைட்டுக்கு 10 பேரையும் ஒதுக்குகிறது. பாட்டுக்காக துணைகள் கொடுக்கப்பட்டுள்ள ஆடைகளை அணிந்து, கதாநாயகிகளை விட அழகு குறைவான பெண்களை பின்னணியில் முன் வரிசையில் ஆட விட்டு மற்றவர்களை பின்வரிசையில் ஆட விடுகின்றனர். பல லோகஷன்களில் மழையானாலும் குளிரானாலும் அங்கிமிங்கும் ஓடி ஆட்டத்தை காண்பித்து நாயக நாயகிகளை ஆட்டத்தில் எங்கோ தூக்கி நிறுத்துகின்றனர்.

பைட்டு சீக்வென்ஸ் ஆனால் கதாநாயகன் கையை மடக்கி முஷ்டி செய்து லேசாக குத்தினாலே அடியாட்கள் பறக்க வேண்டும். சும்மா பறக்க அவர்கள் இலை ஒன்றும் இல்லையே. எதையாவது வைத்து வேகமாக அவர்கள் தூக்கி எறியப்படுகிறார். இந்த பைட்டுகளுக்காகவே அவர் கடுமையான பயிற்சிகள் எடுத்திருந்தாலும் சில சமயம் எசகுபிசகாகி உடம்பில் எந்த பாகத்தையாவது உடைத்துக் கொள்பவர்களும் உண்டு. நிரந்தர ஊனம் ஆனவர்களும் இருக்கிறார்கள். அடிபட்டால் வீட்டில் ஓய்வெடுக்கும் காலகட்டத்தில் பூவாவுக்கு லாட்டரி தான்.

ஹீரோ அருவியின் மேலிருந்து குதிப்பது மாதிரி தெரியும். ஆனால் அது ஹீரோ இல்லை. அவரின் டூப்பாக நடிக்கும் ஒரு ஸ்டண்ட் பார்ட்டி. ஆனால் கைதட்டலும் பாராட்டும் ஹீரோவுக்கே. நாயக/நாயகிகளின் அருமை பெருமைகளை சினிமாவில் தூக்கிப் பிடிக்கும் இந்த துணையெழுத்துக்களின் செயல் உயிர் வாழ்வதற்கு தேவையான ஒரு சில நூறுகளை சம்பாதிப்பதற்கு மட்டுமே. அந்த வட்டத்தை விட்டு வெளியே வந்தால் சமூகம் அவர்களுக்கு கொடுக்கும் பட்டம் சினிமாக்காரி இல்லையென்றால் சினிமாக்காரன். முன்னனி நடிகனையும், நடிகையையும் தெய்வமாகப் பார்க்கும் நம் சமுதாயத்தில் துணையெழுத்துகளைப் பார்ப்பது வெறும் சினிமாக்காரி/சினிமாக்காரனாக மட்டுமே. நடிகர் தெய்வங்களும் சினிமாக்காரன் என்று சொன்னாலே காதில் ஈயம் காய்ச்சி ஊத்தியது போல நிறைய மக்கள் அலறுவார்கள். இதே கடைநிலை துணையெழுத்துக்களை சினிமாக்காரர்கள் என்று அழைப்பதை மட்டும் வஞ்சகமில்லாமல் மனப்பூர்வமாக உளமகிழ்ந்து உவப்புடம் கூறி திளைப்பார்கள்.

சினிமாக்காரனாவது பரவாயில்லை ஆச்சரியமாக சில சமயங்களில் பல இடங்களில் பலரால் பார்க்கப்படுவான். சினிமாக்காரியின் பாடு தான் திண்டாட்டம். 'அவ சினிமாவில தானே இருக்கிற எவனாச்சிம் முடிச்சிருப்பான்'. தமிழ் சினிமா துறை என்பது கயவர்களும், கயவாளிகளையும் தான் பெற்றுள்ளது. சினிமாவில் நுழைபவர்கள் முக்கியமாக பெண்கள் தங்களின் மானமான ஒன்றை கொடுக்காமல் உள்ளே நுழைய முடியாது என்ற உருவம் தான் பெருவாரியானவர்களின் மனதில் இருக்கிறது. அதே சினிமாவில் தான் முன்னனி நடிகர்களாக உள்ள தெய்வங்களும் இருக்கின்றனர் என்பதை பார்க்க நிறைய பேர் மறந்து விடுவார்கள்.

திருமணத்திற்கு முன் சென்னை கோடம்பாக்கத்தில் வசித்த போது பக்கத்து வீட்டில் சினிமாவால் வாழ்ந்து வந்த ஒரு குடும்பம் இருந்தது. குடும்பத்து ஆண் ஒரு வேலைக்கும் போகாமல் வீட்டில் சோறு சமைத்து அவர்களுடைய பெண் குழந்தையை பார்த்துக் கொள்வார். அந்த அம்மணியோ கோடம்பாக்கத்தில் குரூப் டான்ஸ் வேலை பார்த்து வந்த துணை நடிகை. அவர் தான் குடும்பத்தின் ஆதாரம். சினிமா ஸ்டிரைக் காரணமாக அவர்கள் பட்ட கஷ்டம் கண் கூடாக அறிவேன். சினிமா வேலைக்கு அந்த அம்மணி செல்ல முடியாமல், கணவனோ ஒரு உதவக்கரையாக ஒரு குழந்தையை வைத்துக் கொண்டு கஷ்டப்பட்டதை அறிவேன். அவர்களை விளிக்க வேண்டும் என்றால் 'அந்த சினிமாக்காரி வீடா?" என்று விழிப்பார்கள். ஸ்டிரைக் முடிந்து வேலைக்கு போனால் அந்த அம்மணி பல நாட்கள் வீட்டுக்கு வரமுடியாது. அவுட்டோர் சூட்டிங் என ஊட்டி, பாம்பே,கல்கத்தா என குழுவுடன் சுத்த வேண்டும். அதே அப்பார்ட்மெண்டில் பல வாலிபர்கள் ஒரியாவிலிருந்து சென்னைக்கு வந்து தங்கி படித்துக் கொண்டவர்கள். அவர்கள் அந்த அம்மணியை பார்க்கும் பார்வையும் சரி இருக்காது. என்னை உட்பட என் அறையில் தங்கியிருக்கும் எல்லோர் பார்வையும் சரி இருக்காது. அந்த பெண்ணை பார்த்தால் எல்லோருக்கும் நமுட்டு சிரிப்பு தான்.

ஒரு நாள் ஒரு புதிய பெண்மணி அந்த அம்மையாருடன் உரையாடிக் கொண்டிருந்தது என் காதில் விழுந்தது. பேச்சுவாக்கில் சினிமாவைப் பற்றி திரும்பியதும், அந்த புதிய பெண்மணி இவர் சினிமாவில் இருப்பவர்கள் என்பது தெரியாமல் "சினிமாவுல இருக்கிறவங்க எல்லாம் ஒழுங்க?" என்று கேட்டு வைக்க, அந்த சினிமா பெண்மணி கொதித்து போனார்.'வெளியில இருக்குறவங்க மட்டும் ஒழுங்க?" என்று தொடங்கி நாக்கு புடுங்கிற மாதிரி நாலு வார்த்தைகள் பாதி கண்ணீருடன் கேட்ட அந்த சினிமா பெண்மணியின் வார்த்தைகள் என் பார்வையை மாற்றி வைத்தது.

Image hosted by PicsPlace.to

அவர்களைப் பற்றி கொஞ்சம் கொஞ்சமாகத் தெரிந்து கொள்ள அவர்கள் குடும்பமே சினிமாவை அண்டித் தான் பிழைக்கிறது. அந்த அம்மணியின் சகோதரர் ஸ்டண்டு பார்ட்டியாக இருப்பதையும் சொன்னார்.'முதல்வன்' படத்தின் பைட்டு சீக்வென்ஸில் எசகுபிசாகாக கீழே விழந்து கழுத்தில் அடிபட, 2 மாதம் பெட் ரெஸ்டில் இருந்திருக்கிறார். 'ரன்' படத்தில் எப்போதுமே வில்லனுடன் பல காட்சிகளில் அவருடைய சகோதரர் வருவதாகச் சொல்லி சந்தோசப்பட்டார். எப்படியாவது சினிமாவில் நுழைந்து விட வேண்டும் என்ற கனவுடன் வரும் பல இளைஞர்கள்/இளைஞிகள் ஒரு புறம் இருக்க, பல துணைநடிகைகள், நடிகர்கள் தங்கள் முகம் படத்தில் வராவிட்டாலும் பரவாயில்லை என்று அதை ஒரு வாழ்க்கை தொழிலாக செய்பவர்கள் சென்னையில் எத்தனையோ பேர் இருக்கிறார்கள்.

எதோ ஒரு படத்தில் துக்கடா வேடத்தில் வந்து செல்லும் பெண்மணி சில சந்தர்ப்பங்களால் போலீசில் மாட்டுக் கொள்ளும் போது "விபச்சாரம் செய்த துணை நடிகை கைது" என்ற பத்திரிக்கை செய்திகள் ஒட்டு மொத்த துணைநடிகைகள் சமுதாயத்தையும் விபச்சாரியாக பார்க்க வைக்கும் அவலம் இன்றும் நடந்துக் கொண்டிருக்கிறது. துணைநடிகை/நடிகர் டான்ஸராக இருக்கும் பட்சத்தில் யாவரும் கலாவாகவோ, புலியூர் சரோஜாவாகவோ, பிரபு தேவாவாகவோ ஆகிவிடுவதில்லை. ஸ்டண்ட் பார்ட்டியாக வரும் யாவரும் 'ஜூடோ'ரத்தினமாகவோ,கனல் கண்ணணாகவோ ஆகிவிடுவதில்லை. ஸ்ரீதர் என்ற துணை நடிகர் டான்ஸராக இருந்தவர். நிறைய மேடைகளில் தேவயானி கூட ஆட பார்த்திருக்கிறேன். அது போக புகழ்பெற்ற பாடல்களில் முன்னனியில் ஆடிக் கொண்டிருந்தவர் தன் திறமையால் இப்போது டான்ஸ் மாஸ்டராக ஆகியிருப்பதாக பெருமிதத்துடன் டிவியில் பேட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தார். பார்க்க சந்தோசமாக இருந்தது.

அது போக தமிழ்படத்தில் குரூப் டான்ஸ் வைத்து ஏதாவது பாட்டு வந்தால் முக்கியமாக நான் தேடுவது 'ஜப்பான்' குமார் என்பவரை. நீங்கள் எவ்வளவு பேர் அவரை கவனித்திருப்பீர்கள் என்று தெரியவில்லை. அவரது நடனத்தை ரசிக்க என் நண்பர்களில் பெரிய ரசிக பட்டாளமே இருக்கிறது. எத்தனை வேலையிருந்தாலும் அப்படியே போட்டு விட்டு ஹீரோவுக்காக அல்ல, ஜப்பான் குமாருக்காக பாடல்களை பார்ப்போம். அவரை மிக எளிதாக அடையாளம் தெரிந்துக் கொள்ள வேண்டுமென்றால் நிறைய டப்பாங்குத்து தனமான பாடல்களில் குரூப் டான்ஸ் ஆடிக்கொண்டிருக்கும் போது ஏதாவது கோணங்கி சேட்டைப் பண்ணிக் கொண்டே குறுக்காலும் நெடுக்காலும் போய் வருவார். எடுத்துக்காட்டாக, 'ஜிம்பலக்க ஜிம்பலக்க' பாடலிலும், நிறைய பிரபுதேவா படல்களிலும், "யப்பா யப்பா அய்யப்பா, கண்ணுல காசை காட்டாப்பா' பாடலிலும், 'காசு மேல காசு வந்து' பாடலிலும் அவர் செய்யும் குரங்கு சேட்டைகளை இன்றளவும் நான் இரசிப்பேன்.

இடமிருந்து வலமாக வட்டத்தில் இருப்பவர் ஜப்பான் குமார்
Image hosted by PicsPlace.to

சோகமான விசயம் என்னவென்றால் அவர் இன்னமும் பின்னனியிலும், குறுக்காகவும் நெடுக்காகவும் போய் ஆடிக் கொண்டிருக்கிறார். அது போல் அழகன் படத்தில் வரும் அந்த சிறுவன் ராபார்ட்டும் நடனத்தில் நல்ல மூவ்மெண்ட் காண்பிப்பார்.அவரையும் பலபடத்தில் குரூப் டான்ஸில் பார்த்தது மட்டுமல்லாமல் ஒரு படத்தில் ஹீரோவுக்கு இணையாக வேறு நடித்திருந்தார். இப்படி எத்தனையோ பேரை சொல்லிக் கொண்டே போகலாம்.

ஒவ்வொரு நாட்டு சினிமாவிலும் தனித்தன்மையை காட்ட ஒன்று இருக்குமானால் நம் தமிழ் சினிமாவின் தனித்தன்மை பாடல்களின் நடனமும், படத்தில் வரும் பைட்டுகளும் தான். இப்படி பல துணையெழுத்துக்களை வாழவைக்கும் தமிழ்சினிமாவில் பல படங்களில்(எல்லா படங்களிலும் எனச் சொல்ல மாட்டேன்) பாட்டும்,டான்ஸும், பைட்டும் கட்டாயம் இருக்கவேண்டும் என்பது என் கருத்து. உங்கள் கருத்து?

இந்த பதிவின் வாக்கு எண்ணிக்கை: . பக்கத்திலுள்ள ஸ்டாரை மவுசால் போட்டுத் தாக்கினால் எனக்கு மவுசு ஏறும். நன்றி:-)

உங்கள் கருத்துக்களை இட

திருப்பி தாக்கியவர்கள்:
//அது போக தமிழ்படத்தில் குரூப் டான்ஸ் வைத்து ஏதாவது பாட்டு வந்தால் முக்கியமாக நான் தேடுவது 'ஜப்பான்' குமார் என்பவரை. நீங்கள் எவ்வளவு பேர் அவரை கவனித்திருப்பீர்கள் //

Hey! i like him too. first read abt him somewhere. Etho oru scene'la muzukka vanthathukku treat kuduthaarnu padicha koncha naaLla antha paatu paarthaen. some prabhu deva or his bro(forgot the name)'s song. then started looking for him in songs. :)

have to admit that i am quite surprised that you wrote abt him :)
 
விஜய்,

பாலசந்தரின் 'ஒரு வீடு இரு வாசல்' திரைப்படம் பாத்தீங்களா? அதில் கோடம்பாக்கம் துணை நடிகர்களில் வாழ்க்கையைப் பற்றி ரொம்ப அருமையாக காட்டியிருப்பார் பாலசந்தார். கதானாயகி படிகட்டின் மேலிருந்து கீழே உருண்டு விழுகிற ஒரு காட்சியில் ஒரு துணை நடிகையை டூப்பாகப் போட்டு அந்த காட்சியை பல டேக்குகள் எடுப்பார்கள். அந்தப் பெண்ணுக்கு கை கால்களில் எல்லாம் அடிபட்டுவிடும். வலியைப் பொறுத்துக்கொண்டு அத்தனை டேக்குகளிலும் உருண்டு விழுவாள். ரொம்ப உருக்கமான காட்சி அது.

தாரா.
 
இப்போது தான் ஹோட்டல் ருவாண்டா பார்த்த திகைப்பில் இருக்கிறேன். கிடைச்சா பாருங்க. கண்களில் நீர் வராத குறை. துணை நடிகர்/கைகள் பற்றி ரெண்டு நாள் கழிச்சு பதிகிறேன். ருவாண்டாவின் பாதிப்பு இன்னும் கொஞ்ச நாளைக்கு இருக்கும். அதன் பிறகுதான் எல்லாம்.
 
/இப்போது தான் ஹோட்டல் ருவாண்டா பார்த்த திகைப்பில் இருக்கிறேன்./
அட நீங்களுமா! நேற்றிரவுதான் நான் பார்த்தேன்

விஜய் இது நல்ல பதிவு.
 
ஆமாம் விஜய், துணை நடிகர்/நடிகைங்களைப் பத்தி நீங்கள் எழுதினது நிஜம்தான்.
நம்ம மாமிகூட சாலிகிராமத்துலேதான் இருக்காங்க. அங்கே சில துணைநடிகைகளுடன் பேச
வாய்ப்புக்கிடைத்தது. அப்ப அவுங்க எப்படியெல்லாம் மனக்கஷ்டத்தோட அவுங்க வாழ்க்கையைப்
பத்திச் சொன்னாங்கன்றது இப்ப உங்க பதிவைப் பார்த்ததும் நினைவுக்கு வருது.

என்றும் அன்புடன்,
துளசி.
 
ஆகா மதி, நீங்களும் ஜப்பான் குமார் டான்ஸை ரசிப்பீங்களா? அவர் பாடலில் செய்யும் சேட்டைகள் கலக்கல். இல்லையா?

தாரா, இந்த படத்தை பற்றியும் குறிப்பிட வேண்டுமென நினைத்தேன். படம் பெயர் ஞாபகத்துக்கு வரவில்லை. நெடுநாள் முன்பு இந்த படத்தை பார்த்திருந்ததால் கதையும் ஓரளவு மறந்து விட்டது. பின்னூட்டத்தில் சொல்லியமைக்கு நன்றி. படிப்பவர்களுக்கு பயனுள்ளதாய் இருக்கும்.

நரேன், ஹோட்டல் ரூவாண்டா டிவிடியும், விசிடியும்(ஒரிஜினல்) விற்பனைக்கு இங்கு வந்து விட்டது. வந்த புதிதில் விலை அதிகம் என்பதால் இன்னும் வாங்கவில்லை. நல்ல படம் என கேள்விப் பட்டிருக்கிறேன். போற்றிப் பாதுக்காக்கப்பட வேண்டிய படம் என்றால் சொல்லுங்கள், நான் இப்போதே வாங்கி பார்த்து என்னுடைய சிறிய பட நூலகத்தில் வைத்துக் கொள்கிறேன்.

நரேன் அது மாதிரி நீங்கள் 'துணை'யெழுத்துக்களை கட்டாயமாக விவரித்து எழுதுங்கள். சென்னையில் பிறந்து வளர்ந்தவரகையால் உங்களுக்கு இந்த துணைகளை பற்றிய பார்வை, தெரிதல் ஆகியவை அதிகமாக இருக்கும்.

நன்றி -/பெயரிலி.

நன்றி துளசியக்கா. ஒரு துணை நடிகை பற்றிய குடும்பத்தை அறிந்ததால் இந்த பதிவை எழுத தூண்டியது. ஒருவரின் வாழ்க்கையே இவ்வளவு கஷ்டமாக இருக்கும் போது....
 
சினிமாப்பதிவுகளைப் பற்றிப் பெரிதாகப் பார்ப்பதில்லை என்றாலும் இதில் உள்ள மனிதம் என்னைக் கவர்கிறது. நன்று விஜய்.
 
நன்றி செல்வராஜ், சம்மி.

சம்மி, நோபால்-லை பார்த்திருப்பேன் என் நினைக்கிறேன். ஆள் தெரிந்தால் அவர் அடையாளம் தெரியலாம்.
 
நல்ல பதிவு அல்வாசிட்டி.. இந்தப்பின்னூட்டம் தாரா என்பவருக்காக.. 'ஒரு வீடு இரு வாசல்' கதையில் இயக்குனர் 'டூப்' நடிகர்களின் வாழ்க்கையை சோகத்தோடு சொன்னாலும், நீதிமன்றப்படிகளில் இருந்து உருண்டு விழும் காட்சியில் அங்கு இயக்குநர் (கதைப்படி) 'டூப்'புக்கேஇன்னொரு (நிஜமான) 'டூப்பைப் போட்டு எடுத்திருப்பார். அதைப்பார்த்ததும், இயக்குநரின் மீதிருந்த மதிப்பே போய் விட்டது...
 
விஜய், வாங்கிவிடுங்கள். இது தவிர கீழ்க்காணும் படங்கள் இருக்கிறதா என்று பாருங்கள். கிடைத்தால் வாங்கி சேருங்கள். சென்னை வரும்போது பார்த்து கொள்கிறேன். நான் பார்க்க நினைக்கும் படங்கள் எவற்றையும், இங்கிருக்கும் டிவிடி கடைகள் வைத்திருப்பதில்லை.

1. Microcosmos
2. Carandiru
3. Abril Despedaçado
4. Savior (இந்தப்படம் பற்றி தனியாக எழுதுகிறேன்)
 
நன்றி இனியவன்,பனசை.

நரேன்,

அந்தப் படங்களை தேடிப்பார்க்கிறேன். அது எந்த வகைப்படங்கள்(குறும்படம்,விவரணபடம்...) என்ற குறிப்பையும் சேர்த்தால் தேடுவதற்கு வசதியாக இருக்கலாம்.
நீங்கள் முன்னாடி கொடுத்திருந்த ஒரு படத்தொகுப்பையும் தேடிக் கொண்டிருக்கிறேன். அகப்பட மாட்டேங்கிறது. வழக்கமாக போகும் இரு கடைகளில் தான் தேடினேன். ஊரை சுத்தி நிறைய கடைகள் இருக்கு. ஒரு வாரயிறுதியில் இதற்கென்றே நேரம் ஒதுக்கி தேடுகிறேன்.
 
நான் சொன்னதில் Microcosmos தவிர மற்றவை திரைப்படங்கள் தான். Microcosmos மட்டுமே விவரண படம்.
 

உங்கள் கருத்துக்களை இட


<< திரும்ப முன் பக்கத்துக்கு போ

-ல் போட்டுத் தாக்கியது

தொய்-சூங்-சங்கின் சீன கவிதை

Difficulty in reading this post due to font issues? Click here for a PDF copy. Works best if you right-click the link and select 'Save target as...'
இந்த பதிவை போட்டுத் தாக்கியவர் : Vijayakumar
எனக்கு தெரிந்த வரையில் தமிழில் மொழி பெயர்க்கப் படாதா சில மொழி இலக்கியங்களில் சீன இலக்கியங்களும் ஒன்றாகும். நிறைய பேருக்கு படம் வரைந்த மாதிரி இருக்கும் சீன எழுத்துக்களைப் பார்த்தால் அலர்ஜியோ என்னவோ, உலகிலேயே அதிக மக்களால் பேசப்படும் சீன மொழியிலிருந்து இலக்கிய படைப்புகள் தமிழில் மொழிப் பெயர்க்கப்படவில்லையென நினைக்கிறேன்.

சீன எழுத்துகளில் ஒரு எழுத்தே ஒராயிரம் மொழிப் பேசும். அத்தகைய சீன மொழியில் 20-ம் நூற்றாண்டில் இணையற்ற இலக்கியத்தைப் படைத்தவர் தொய்-சூங்-சங். சீனாவெங்கும் அவரது படைப்புகளே பரவலாக பேசப்பட்டு வருகிறது. அத்தகைய படைப்புகளிலிருந்து ஒரு சில கெய்தியோவை(Kway Teow)* உங்களுக்காக தமிழில் மொழிப்பெயர்த்து வழங்குகிறேன். என்னால் உண்மையான படைப்புக்கு இணையாக உணர்ச்சிகளை தமிழில் உரைநடையாக கொட்ட முடியாது என்றாலும், உங்களுக்காக அவர் சீன மொழியில் எழுதிய அந்த கெய்தியோவை உங்களுக்காக அதே சீன மொழியிலேயே தருகிறேன். சீனமொழி தெரிந்தவர்கள் நேரடியாகவே அதைப் படித்து கவிச்சுவையை பருகி தள்ளாடலாம். குறிப்பு: சிம்பிளிபைட் சைனீஸ், ட்ரடீஷனல் சைனீஸ் என பல இருந்தாலும், கீழே கொடுக்கப்பட்டது சீன மொழியின் உட்பிரிவான மாண்டரின் ஆகும்.

*கெய்தியோ - அப்படியென்றால் சீன மொழியில் கவிதை அடிகள் ஆகும்.

இந்த வரிகளில் தொய் சூங் சங் தன் காதலி டிங் ஹூவாங்கின் நினைத்து ஏங்கி இந்த கவிதையை வடித்திருக்கிறார்.

日出東南隅,照我秦氏樓,秦氏有好女,自名為羅敷。羅敷喜蠶桑,采桑城南隅。
青絲為籠系,桂枝為籠鉤。頭上倭墮髻,耳中明月珠。緗綺為下裙,紫綺為上襦

"டிங் உன் விழிகளில் நான் புதைந்த நாட்கள் எத்தனை?
தோ பையோ(Toa Pyoah) வேனிர்காலத்தில் மழையாக வந்தவள் நீ.
காக்கை போன்ற கருவிழியை கொண்ட என் மஞ்சள் மேனியழகே"

行者見羅敷,下擔捋鬍鬚,少年見羅敷,脫帽著帩頭。 耕者忘其耕,鋤者忘其鋤。
來歸相怨怒,但坐觀羅敷?。使君從南來,五馬立踟躕。使君遣吏往,問是誰家姝?

"உன்னை காணாத
கோடையில் ஒரு நாள் மழை வரலாம்
என் கோலத்தில் இனிமேல் எழில் வருமோ?
பாலையில் ஒரு நாள் கொடி வளரலாம்
என் பார்வையில் இனிமேல் சுகம் வருமோ?

秦氏有好女,自名為羅敷。羅敷年幾何?二十尚不足,十五頗有餘。
使君謝羅敷,寧可共載不?羅敷前置辭,使君一何愚。
...........

ஊமையின் கனவை யார் அறிவார்
என் உள்ளத்தின் கதவை யார் திறப்பார்
மூடிய மேகம் கலையும் முன்னே
நீ பாட வந்தாயோ என் வெண்ணிலவே
அமைதியில்லாத நேரத்திலே
அந்த ஆண்டவன் எனையே படைத்துவிட்டான்
நிம்மதி இல்லாமல் நான் அலைந்தேன்
இந்த நிலையில் உனை ஏன் தூது விட்டான்?"
...........

கவனிக்க.முதல் வரிகளில் "காக்கை போன்ற கருவிழி" என்று காதலியை கவிஞர் விளிக்கிறார். சீனர்கள் வெளிர் மஞ்சளான தோலினை கொண்டவர்களாக இருப்பதால் சீனாவில் வசிக்கும் காக்கையும் வெளிர் மஞ்சளாக இருக்குமென நாம் நினைப்பது தவறு என்பதை இந்த பாடலின் மூலம் விளக்குகிறார். அப்புறம் காக்கை மஞ்சளாக இருந்திருந்தால் காதலியின் விழியும் மஞ்சாளாகி பார்ப்பதற்கு பேய் போல இருந்திருப்பாள். இப்படியான தேவையற்ற விளக்கங்களை தவிர்பதற்காகவே 'கருவிழி' என்பதை ரொம்ப ஸ்பெஸிஃப்பிக்காக(specific) சொல்கிறார்.

வேணாம்.... வேணாம்... அழுதுருவேன்.... பின்னூட்டத்தில திட்டுனீங்கன்னா... நான் அழுதுருவேன்.... ம்ம்ம்ம்ய்ய்ய்ய்ய்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்......













இந்த பதிவின் வாக்கு எண்ணிக்கை: . பக்கத்திலுள்ள ஸ்டாரை மவுசால் போட்டுத் தாக்கினால் எனக்கு மவுசு ஏறும். நன்றி:-)

உங்கள் கருத்துக்களை இட

திருப்பி தாக்கியவர்கள்:
கவிதையும் இடையிடையே போட்டிருந்த 'சீனப் படங்களும்' நன்று.
:-)
 
/சிம்பிளிபைட் சைனீஸ், ட்ரடீஷனல் சைனீஸ் என பல இருந்தாலும், கீழே கொடுக்கப்பட்டது சீன மொழியின் உட்பிரிவான மாண்டரின் ஆகும்./

விஜய் சிம்பிளிபைட் சைனீஸ், ட்ரடீஷனல் சைனீஸ் ஆகியன சீன எழுத்துருக்களினைக் குறித்து ஆக்கப்பட்டவை என்று ஞாபகம்; தாய்வான், ஹொங்கொங் ஆகிய இடங்களிலே மரபார்ந்த சீன எழுத்துவடிவங்கள் இன்னும் பாவனையிலிருக்க, மக்கள்சீனம் இக்குறியீடுகளை இலகுவாக்கி, இலகுபடுத்திய சீன எழுத்துவடிவத்தினை நடைமுறைப்படுத்தியிருக்கின்றது. மாண்டரின் என்பது பொதுவாகச் சீனாவிலே அரசுசார் செயற்பாடுகளுக்காகச் சட்டப்படுத்தியிருக்கும் பெய்ஜிங்கின் பேச்சுவடிவம். அதனை விரும்பினால், எந்த எழுத்துருவிலும் எழுதலாம்; ஆனால், இலகுபடுத்தப்பட்ட வடிவிலேயே எழுதப்படுகின்றது. Kway Teow என்பது சீனாவிலே சொல்லப்படும் மாண்டரினிலே இருக்கும் சொல்லாகத் தெரியவில்லை. சிங்கப்பூரிலே மாண்டரின் என்று வழங்கப்படும் சீனாவின் தெற்கிலே (ஹுவாந்தொங் மாகாணம்) இருந்து வந்தவர்களாலே பேசப்படும் (ஹொங்கொங் மக்களும் இதேமொழியைத்தான் பேசுகின்றார்கள்) ஹுவாந்தொங் ஹுவாவிலேதான் இப்படியான உச்சரிப்பு இருக்குமென்று தோன்றுகின்றது. மக்கள் சீனத்திலே சீனச்சொற்களை ஆங்கிலப்படுத்துவதும் ஹொங்கொங்கிலே ஆங்கிலப்படுத்துவதிலும் வித்தியாசமுண்டு. ஒரு வடிவிலே Beijing என்றால், மறுவடிவிலே Peking.
 
-/பெயரிலி தலீவா, உண்மைய தெரிஞ்சா அடிக்க வருவீங்கன்னு நினைக்கிறேன். அதுக்கு இப்போவே மன்னிப்பு கேட்டுக்கிறேன். அதுக்காக கோவிச்சுகாதீங்க. சும்மா ஜாலியா ஒரு பதிவு போட்டேன். என்னாதுன்னு பிறகு சொல்கிறேன்.

ஆனால் -/பெயரிலி மிக அருமையான விளக்கம் கொடுத்திருக்கிறீர்கள். மிக மிக நன்றி. சீனத்தை பற்றி அறிந்ததில் மிக கொஞ்சமே என்றாலும் நீங்கள் கொடுத்த இந்த சிறு தகவலும் பேரூதவியாக இருக்கும்... சீன மொழியைப் பற்றி ஒன்றுமே தெரியாமல் போட்டு வாங்குவதற்காக இதை எழுதியது.
 
//முதல் வரிகளில் "காக்கை போன்ற கருவிழி" என்று காதலியை கவிஞர் விளிக்கிறார். சீனர்கள் வெளிர் மஞ்சளான தோலினை கொண்டவர்களாக இருப்பதால் சீனாவில் வசிக்கும் காக்கையும் வெளிர் மஞ்சளாக இருக்குமென நாம் நினைப்பது தவறு என்பதை இந்த பாடலின் மூலம் விளக்குகிறார்.//
ஆஹா, என்ன அற்புதமான விளக்கம் -).
...
எனக்குச் சிறுவயது முதலே சீனா ஓவியங்கள் மீது பெருவிருப்புண்டு. ஏன் சீனா, ஜப்பானிய எழுத்துக்களே ஒருவிதமான ஓவியத்தன்மையக் கொண்டதுமாதிரி இருக்கும். Tattoos குத்தும் ஆசை தற்சமயம் வந்துள்ளது. அப்படிக் குத்தினால் சீனா அல்லது ஜப்பானிய எழுத்துக்களில்தான் குத்துவது என்று, விஜயின் இந்தப்பதிவிலுள்ள சீன எழுத்துக்களைப் பார்த்தவுடன் முடிவெடுத்துள்ளேன் :-).
 
//கோடையில் ஒரு நாள் மழை வரலாம்
என் கோலத்தில் இனிமேல் எழில் வருமோ?//

இதை எங்கோ கேட்டிருக்கிறேனே...
நிலவே என்னிடம் நெருங்காதே..
 
ஆகா... ஆகாக... ஆகாக... ஒருத்தர் பயிண்ட்டை கரெக்டா பிடிச்சுட்டாரே.... :-)
 
நன்றி பொடிச்சி, -/பெயரிலி,டிசே, சயந்தன்.

கவிதை சயந்தன் சொன்ன மாதிரி கண்ணதாசன் எழுதி PB ஸ்ரீனிவாஸ் பாடிய 'நிலவே என்னிடம் நெருங்காதே' பாடலிலிருந்து வந்தது.

Kway Teow என்றால் சிங்கப்பூரில் கிடைக்கும் ஒரு வகை உணவு வகை.

யாராவது கோபம் கொண்டால் மன்னிக்கனும்.... ச்ச்ச்ச்ச்சுசுசுசுசும்ம்ம்ம்ம்ம்மா.....ஜாலிக்கு
 
我读了你的文章。这是好感谢但有不象这首诗用我们的语 言
 
ஹி ஹி... ஹி... :-)
 

உங்கள் கருத்துக்களை இட


<< திரும்ப முன் பக்கத்துக்கு போ

-ல் போட்டுத் தாக்கியது

ஆளை விடுங்க சாமி!

Difficulty in reading this post due to font issues? Click here for a PDF copy. Works best if you right-click the link and select 'Save target as...'
இந்த பதிவை போட்டுத் தாக்கியவர் : Vijayakumar
இந்த பதிவுடன் என்னுடைய நட்சத்திர சிறப்பு பதிவுகளை முடித்துக் கொள்கிறேன். மதி நட்சத்திர பதிவுக்கு என்னை கேட்டதும் கேட்ட நாள் முதல் நட்சத்திர நாள் வரை ஒரே குழப்பம் தான். சும்மா கிடந்த சங்கை இப்படி ஊதி வச்சிட்டாங்களே என்ற கவலை தான் மிஞ்சியதே தவிர எதை பற்றி எழுத என்ற குழப்பம். சுதந்திரமாக பதிவைப் போடும் போது மக்கள் படிக்கிறார்களோ இல்லையோ என் ஆத்ம திருப்திக்காக எதையாவது போட்டு தாக்குவது வழக்கம். நட்சத்திர வாரம் என கைகள் கட்டப்பட்ட பிறகு உருப்படியாக எதையாவது எழுதி தொலைக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டும் ஓடிக் கொண்டிருந்தது. சரி சினிமா சிறப்பு வாரமாக வைத்து விடலாமென கடந்த கால சினிமா சம்பந்தப்பட்ட முக்கியமாக சில உலக சினிமாக்களைப் பற்றியும், படத்தின் கருவோடு முக்கியமான தகவல்களையும் சேர்த்துக் கொடுத்தேன். இது நான் வழக்கமாக எழுதும் பாணியிலிருந்து கொஞ்சம் விடுபட்டு எழுதியது. எல்லா வகை ஆடியன்ஸ்களையும் என் பதிவு கட்டாயமாக திருப்தி செய்திருக்காது. மற்றவகளை தொடரும் முன்பு இன்றும் கொஞ்சம் பயனுள்ள தகவல்களை போட்டுத் தாக்கு விட்டு சிறப்பு பதிவுகளை முடித்து வைக்கிறேன்.

தமிழ்நாட்டில் ஆரம்பகால சினிமா - ஒரு சமூகவியல் நோக்கு

காலச்சுவடு இதழ் 16, டிசம்பர் 96-பிப்ரவரி 97 -ல் வெளியிடப்பட்ட ஸ்டீவன் ஹியூஸ் எழுதிய கட்டுரையின் தமிழாக்கத்தின் அடிப்படையாகக் கொண்டு சுருக்கமாக தமிழ்நாட்டில் ஆரம்பகால தமிழ்நாட்டு சினிமாவின் சமூகவியல் நோக்கு பற்றி துக்ளியூண்டு பதிவை முதலில் பார்க்கலாம்.

சென்னையில் சினிமா தோன்றி ஏறக்குறைய 75 ஆண்டுகளை கடந்து விட்டோம். சென்னையில் மௌன சகாப்தத்தில் தயாரிக்கப்பட்ட 50 தொடர்கதை படங்களும்,முப்பது செய்தி படங்களும் இன்று ஒன்று கூட இல்லை. அதுவுமில்லாமல் 1931 முதல் பேசும் தமிழ்படம் காளிதாஸூம் சரி, முதல் 6 வருடங்களில் தயாரிக்கப்பட்ட தமிழ் பேசும் படங்களும் முற்றிலும் அழிந்து விட்டன. இந்திய ஆரம்பகால திரைபடங்களை பற்றி அறிவதற்கு இருக்கும் ஒரே ஆதாரம் Report of the indian cinemato-graph committee,1927-28 என்ற ஆவணம் தான்.

சினிமா ஆரம்பகாலங்களில் அமெரிக்க படங்கள் நிறைய வரவேற்பைப் பெற்றிருந்தது.அதனால் அச்சம் கொண்ட பிரித்தானிய அரசு அமெரிக்க படங்கள் ஏற்படுத்தும் பாதிப்பை அறியவும், தணிக்கை முறைகள் பற்றி அறியவும்,பிரித்தானிய பேரரசிலும், இந்தியாவிலும் சினிமாவை ஊக்குவிப்பதற்கான வழிமுறைகள் பரிந்துரைப்பதற்காகவும் 1927-ல் சென்னை வழக்கஞறிகரான டி.ரங்கச்சாரி தலைமையில் ஒரு விசாரணைக் குழுவை அமைத்தது. அந்த குழு வெளியிட்ட ஆவணம் தான் மேல் சொன்னது.

1857-களில் எம்.எட்வர்டு என்ற அமெரிக்கர் சென்னை மாநகராட்சிக் கட்டிடத்திற்கு அடுத்த விக்டோரியா பொது அரங்கத்தில் முதன்முதலில் திரைப்படங்களை காட்டினார். 400-500 அடி நீளம் கொண்டு 10 நிமிடமே ஓடக்கூடிய தொகுக்கப்படாத நகைச்சுவை காட்சிகளோ, இயற்கை காட்சிகளையோ, பல்சுவை நிகழ்ச்சிகளையோ ஒன்றன் பின் ஒன்றாக 3 மணி நேரத்திற்கு காட்டியது. ரூ5, ரூ3, ரூ2 என்று நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்பட்டதால் பணம் படைத்தோருக்கும், வசதியானோருக்கும் மட்டுமேயான சினிமாவாக விளங்கியது. இது நகரம் நகரமாக நகர்ந்து சினிமாக்களை இந்தியாவில் காட்டப்பட்டு வந்தது.

1913-ஆம் ஆண்டு அளவிலேயே தான் முழுநீளத் திரைப்படங்கள் என்று காட்டப்பட்டது. அந்த திரைப்படங்கள் லண்டனிலிருந்து உரிமை வாங்கி சென்னையில் காட்டப்பட்டது. அதற்கு முன்பாக 1907-ல் எலெக்டிரிக் பயாஸ்கோப், லிரிக் தியேட்டர் என்ற இரு திரையரங்குகள் தோன்றின. இது மவுண்ட் ரோடின் வடகிழக்குப் பகுதியில் ஆங்கில கணவான்களும், சட்டைக்காரர்களும் (ஆங்கிலோ-இந்தியன்) அதிகமாக வாழ்ந்த பகுதியில் இருந்தது. அவற்றை முழுமையான திரையரங்குகள் என்றழைக்க முடியாது. அவற்றை மது,நடனம், குத்துச்சண்டை,பல்சுவை நிகழ்ச்சிகள் போன்றவற்றை திரைப்படங்களுடன் அவ்விடங்களை பயன்படுத்தியது. இவையும் விரைவில் மூடப்பட்டன. லிரிக் தியேட்டர் தீக்கிரையாயிற்று. எலெக்ட்ரிக் பயாஸ்கோப் அஞ்சல்நிலையம் கட்டுவதற்காக அரசால் கையகப்படுத்தப்பட்டது.

1909-இல் லண்டனிலிருந்து வெங்கையா ரகுபதி என்பவர் குரோனா-மெகாபோன் என்ற சினிமா கருவியை 30000 ரூபாய் கொடுத்து வாங்கினார். அத்துடன் 12 சிறுபடங்களும் அதையொத்த இசைத்தட்டுகளும் வந்தன. டூரிங் தியேட்டர்(Touring theatre-டூரிங் டாக்கீஸ் அர்த்தம் தெரிந்ததா?) ஒன்றை அமைத்தார். இந்த டூரிங் தியேட்டரால் முதலில் விக்டோரியா அரங்கில் படம் காண்பிக்கப்பட்டு பிறகு ஜார்ஜ் டவுணில் உள்ள எஸ்பிளேனேடில் மாற்றப்பட்டது. வெங்கையா அந்த கருவியுடன் பெங்களூர், ஆந்திரா, மும்பை என சுற்றியதோடு மட்டுமல்லாமல் 1911-இல் இலங்கை பார்மாவிலும் திரையீடு செய்தார். அதைக் கொண்டு சென்னையில் கெயிட்டி, கிரௌன், குளோப் போன்ற தியேட்டர்களை ஆங்கில படங்களை காட்டுவதற்கென்றே கட்டினார்.

துணுக்கு : தமிழில் முதல் (மௌனபடம் தான்) திரைப்படத்தை தயாரித்தவர் நடராஜா.ஆர்.முதலியார். இவர் கர்சன் பிரபுவுக்கு ஆஸ்தான சினிமொட்டோ கிராஃபராக இருந்தவர். ஒரு பழைய கேமராவை வாங்கி கீழ்பாக்கம் மில்லர் ரோடில் ஒரு ஸ்டூடியோவை திறந்தார்.கீச்சக வேதம் (1916),திரௌபதி வஸ்திராபரணம்(1917),மயில் ராவணன்(1918) போன்று 7 படங்களை எடுத்தவர். அவரது ஸ்டூடியோ திக்கிரையாகி அவரது மகனும் இறந்துவிட சினிமாத் தொழிலை விட்டுவிட்டார். - நன்றி: ப்லிம் நியூஸ் ஆனந்தன்

1915-க்கு முன்பு வரை சென்னை மாகாணத்தில் சினிமா எந்த வகையிலும் பரவலான சமூக நிகழ்வாக இருக்கவில்லை. ஏராளமான மௌனப்படங்கள் சென்னையில் தயாரிக்கப்பட்டாலும் சென்னை மாகாணத்தில் பரவலாக திரையிடப்பட்ட படம் தாதாசாகிப் பால்கேயின் 'ஸ்ரீகிருஷ்ண ஜன்மா' (1919). பால்கேயும் தென்னக பயணம் மேற்கொண்டு புதுக்கோட்டை மன்னரின் அவையில் திரையிட்டு காட்டிய பிறகு பரவலாக திரையிடப்பட்டது மக்களுக்குகிடையே அதற்கு அமோகமான வரவேற்பு கிட்டியது. அப்படம் எதிர்பாராத வகையில் 3 வாரங்கள் ஓடியது. போலீசார் அனுமதியுடன் மாலை 6 மணியிலிருந்து இரவு 3 மணி வரை நான்கு காட்சிகளாக இந்தப் படம் காட்டப்பட்டது. இத்திரைப்படம் திரையிட்ட வெல்லிங்டன் தியேட்டர் மட்டும் 60000 ரூபாய் பார்த்தது. சென்னையில் மட்டும் ஏறத்தாழ 2 லட்சம் பேர் பார்த்ததாகச் சொல்லப்படுகிறது. இந்த படம் தான் புராண படங்களை எடுப்பது வெற்றிப்பெறக் கூடிய பார்மூலாவாக கருதப்பட்டது. காதல் காட்சிகளையும், மற்றக் காட்சிகளையும் கொண்டிருந்த ஹாலிவுட்டோடு மக்கள் இந்த படங்களை ஒப்பிட்டு இதற்கு வாய்ப்பளிக்க ஆரம்பித்தனர்.

பார்வையாளர்களின் பாகுபாடுகள் இந்த காலக்கட்டத்தில் நிகழந்ததாக அந்த விவரணம் கூறுகிறது. பார்வையாளர்களை இந்தியர்/ஐரோப்பியர்,மேல்வர்க்கம்/கீழ் வர்க்கம், படித்தோர்/படிக்காதோர் என வகைப்பிரித்தது. அத்துடன் திரைப்பட வகைமைகளிலும் திரைப்பட ரசனைகளை பிரித்தனர். ஆங்கிலம் படித்த மேல் தட்டு மக்கள் அமெரிக்க, ஐரோப்பிய படங்களை பார்க்கும் வகையினராகவும்.படிப்பறிவற்ற தாழ்ந்த நிலையிலிருந்த உழைக்கும் பாமர மக்கள் சண்டைகாட்சிகளும், பாலியலும், நகைச்சுவையும், விறுவிறுப்பும் மிகுந்த படங்களை விரும்பினர் எனவும், பெரும்பான்மையான இந்து சமூகம் புராணபடங்களை பார்த்ததாகவும் கூறுகிறது

அயல்நாட்டுப் படங்கள் சார்லி சாப்ளின், ஹரால்டு லாய்டு படங்கள் எல்லா வர்க்கங்களையும் கவர்ந்ததாக தெரிகிறது.

சென்னைத் திரையரங்களும் பார்வையாளர்களின் அந்தஸ்தைப் பொறுத்து பிரிக்கப்பட்டிருந்தன. அந்த திரையங்கள் அமைந்திருந்த பேட்டையை பொறுத்து இந்த வகைமை அமைந்திருந்தது. எடுத்துக்காட்டாக மவுண்ட் ரோடில் அமைந்திருந்த எல்லா திரையரங்குகளும் ஹைகிளாஸ் சொசைட்டு மக்களுக்காவே 'உயர்தரம்' என பெயர் பெற்ற மேல்நாட்டுப் படங்களை தொடர்ந்து திரையிட்டு வந்தது. மற்ற திரையரங்களை விட கட்டண விலையும் உயர்வாகயிருந்தன. இதைப் போன்று புகழ்பெற்ற அரங்குகள் வெல்லிங்டனும், எல்பின்ஸ்டனுமாகும். அதே போல் ஜார்ஜ் டவுணில் அமைந்திருந்த லிபர்ட்டி திரையரங்கு அப்பகுதியில் வாழ்ந்த முஸ்லீம்களுக்கு உகுந்த திரை தொடர்ப்படங்களை வெளியிட்டு வந்தது. சாகசங்களை நிரம்பிய படங்கள் பார்க்க வருகைபுரியும் கீழ்தட்டு திரையரங்கென இதனை சினிமா செண்ட்ரல் மேலாளர் எஸ்,கே.வாசகம் வருணித்தார்.

பார்வையாளர்களின் இருக்கை அமைப்பும் சமூக சமத்துவத்தை நிலைநாட்டவில்லை. சினிமா என்ற ஒரு கூரையின் கீழ் அனைவரும் சமம் என்ற கருத்து தவறானது. திரையரங்கின் இருட்டினிலும் சமூக வேறுபாடுகள் மறைந்து விடவில்லை. பார்வையாளர்கள் சமத்துவமடைந்துவமடைந்தும் விடவில்லை. இருக்கைக்கான கட்டண விகிதம் பார்வையாளர்களின் பொருளாதார அடிப்படையில் பிரித்து வைத்தது. அக்காலத்தில் முதல் வகுப்பு(பால்கனி) ஒரு ரூபாய் எனவும்,இரண்டாம் வகுப்பு சேர் எட்டணாவும், மூன்றாம் வகுப்பு பெஞ்சு நான்கணாவும், நான்காம் வகுப்பு தரை இரண்டணா எனவும் பரவலாக கட்டண விகிதம் தியேட்டர்களில் கடைபிடிக்கப்பட்டு வந்தன. ஏறக்குறைய எல்லா தியேட்டர்களிலும் இரண்டனா தரை டிக்கெட்டுகள் தான் அதிகமாக விற்றன. 'ஏழை வர்க்கத்தினரி'டமிருந்தே 90 விழுக்காரு வருவாய் கிடைத்ததாக சினிமா பப்புலர் திரையரங்கின் மேலாளர் நாராயணன் அந்த ஆய்வு அறிக்கையிலே கூறியிருக்கிறார். மற்ற வகுப்புகள் எல்லாம் பெரும்பாலும் காலியாகவே இருந்ததாகவும் அவர் கூறுகிறார்.

ஆக மொத்தம், ஆரம்பகாலத்தில் சினிமா சந்தை அதன் வர்க்க அடிப்படை ஆகியன பற்றிய தெளிவான துணிபுகளைத் திரையிடும் தொழிலில் ஈடுப்பட்டிருந்தோர் கொண்டிருந்தனர் என்பது அந்த ஆய்விலிருந்து புலப்படுகிறது. சென்னைத் திரைத்தொழில் 1930-களில் ஏற்ப்பட்ட வளர்ச்சிக்குப் பார்வையாளர்கள் பற்றிய இத்துணிபுகளே அடிப்படையாக அமைந்தன.

------------------------------------------

ஒகே... இத்தோடு சினிமா பற்றிய சிறப்புப் பதிவு தொடரினை நிறுத்திக் கொள்கிறேன். வாழ்க்கையே சினிமா போலத்தான் இருக்கிறது. நமக்கு எதுக்கு சினிமா என்று கேட்கிறீர்களா? அப்படி கேட்டால் அப்போது நீங்கள் தான் உங்கள் வாழ்க்கை சினிமாவில் கதாநாயகன்/கதாநாயகிகள்.

அது போகட்டும். எனக்கு பிடித்தவர்களை கதாநாயகர்களாக உருவகப்படுத்தி பார்ப்பதும் பிடிக்கும். நமது குடியரசு தலைவர் அப்துல் கலாம், டெர்மினேட்டர் அர்னால்டு கெட்டப்பில் வந்தால் எப்படியிருக்குமென நினைத்துப் பார்த்தேன். விளைவு கீழ் உள்ள படம்


நாட்டுல உள்ள சில தடைகளை இந்த துப்பாக்கியில போட்டுத் தள்ளுனாலே இந்திய உடனே வல்லரசு ஆகிறும் - கலாம்


துணுக்கு: காலையில் ஏதோ மேதின சிறப்பு நிகழ்ச்சியென சன் டிவி போட்ட நிகழ்ச்சிகளைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அதில் எஸ்.ஜே சூர்யா பெரிய பிஸ்துவாக பேசிக் கொண்டிருந்தார். அதில் நான் விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருந்தது BF படத்தைப் பற்றி அவர் சொன்னது. BF என்ற பெயர் மாற்றப்பட்டு 'அ ஆ' என்ற வரப்போகும் அவரது படத்தை ஆகா ஓகோவென பேசிக் கொண்டிருந்தார். தமிழ்நாட்டு காதலர்கள் எல்லாம் 'புரண்டு புரண்டு' பார்க்கப் போகிறார்கள் என சவால் விட்டார். அவருடைய முந்தைய படங்களின் கவர்ச்சி டோஸ்களை வைத்து என்னால் கொஞ்சம் கனிக்க முடிந்து. கவலை தொற்றிக் கொண்டது. பாவம் அந்த படத்தை வெளியிடப்போகும் தியேட்டர்கள் தான்.காதலர்கள் அந்த படத்தை (கட்டி) புரண்டு புரண்டு பார்த்தால் என்னாவது. அடக்கடவுளே!.

அது போக இந்த வாரம் வழக்கமாக நான் காண்பிக்கும் ஃபிளாஷ் படத்தை போட முடியவில்லை. இந்த பதிவில் இடுகிறேன். இங்கே சொடுக்கி ஃபிளாஷ் படத்தைப் பார்க்கவும், (கவனம்: ஒலியுடன் உங்கள் திரையை ஆக்கிரமிக்கும்)

இந்த பதிவில் கடைசியாக...

இந்த வாரம் முழுவதும் போட்ட பதிவு எப்படியிருந்தது?+ஏதாவது குறைகள் இருந்தால்+உங்களிடம் ஏதாவது எனக்கு ஆலோசனைகள் இருந்தால் பின்னூட்டமிடவும். இல்லையேல் எனக்கு தனிமடல் njvijay at halwacity dot com என்ற முகவரிக்கு அனுப்பவும்.


இந்த பதிவின் வாக்கு எண்ணிக்கை: . பக்கத்திலுள்ள ஸ்டாரை மவுசால் போட்டுத் தாக்கினால் எனக்கு மவுசு ஏறும். நன்றி:-)

உங்கள் கருத்துக்களை இட

திருப்பி தாக்கியவர்கள்:
சென்னையின் முதல் தியேட்டர் இப்போது அண்ணா சாலையில் தபால் அலுவலகமிருந்த இடத்தில் இருந்தது என்று எப்போதோ படித்திருக்கிறேன்.

//ஜார்ஜ் டவுணில் அமைந்திருந்த லிபர்ட்டி திரையரங்கு அப்பகுதியில் வாழ்ந்த முஸ்லீம்களுக்கு//

லிபர்ட்டி திரையரங்கு கோடம்பாக்கத்தில் உள்ளது. ஜார்ஜ் டவுணில் இருந்த திரையரங்கு மினர்வா. என் தந்தையும் நானும், சில விவரணப் படங்களை மினர்வாவில் தான் பார்த்திருக்கிறோம் (இது 80களில்) இப்போது அந்த திரையரங்கு இடித்து காம்பெளக்ஸாகப்பட்டது.

சினிமாவென்று பேசுவதால் சொல்வது இது. சந்திரலேகா படத்தில் ட்ரம் டான்ஸ் பார்த்திருப்பீர்கள். மிகப் புகழ்பெற்ற காட்சியது. அது இடம்பெற்ற இடம், இன்றைக்கு சென்னை நுங்கம்பாக்கத்தில் பார்க் நட்சத்திர ஹோட்டல் இருக்குமிடமும், அதனை சுற்றியுள்ள பார்சன் மேனர் இடத்திலும்தான். 3-6 மாதங்கள் அரங்கமைத்தெடுக்கப்பட்ட காட்சியது.

மற்றபடி, குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா, குறையொன்றுமில்லை கண்ணா :)
 
அன்புள்ள விஜய்,
'ஜமாய்ச்சுட்டீங்க!!!!
நல்லா இருங்க. வாழ்த்துக்கள்!!!!

என்றும் அன்புடன்,
துளசி.
 
நல்ல பதிவுகள்: சந்தர்ப்பம் வாய்க்கும்போதெல்லாம் இதேமாதிரித் தொடரவும். அப்துல் கலாமை டெர்மினேட்டர் கலாமாகப் பார்ப்பதற்குக்கூட நன்றாகத்தான் இருக்கிறது! நல்ல பதிவுகள் - வாழ்த்துக்கள். டவுட்டனில் உள்ள பழங்காலத் தியேட்டர் பெயர் என்ன? இப்போது அதை மாற்றி துணி விற்பனைசெய்யும் மையமாக்கிவிட்டார்கள்....
 
விஜய் வாரம், சூப்பர் வாரமாக இருந்தது, Hats off விஜய்!

என் பங்கிற்கு ஒரு துணுக்கு:
அந்த காலத்தில் பாடல் பதிவுகள் செய்ய, out-door இல் கதாநாயகன் பாடிக்கொண்டு போக, பின்னாலேயே, தபலா, ஹார்மோனியம் போன்ற இசைக்கருவிகளோடு செல்வார்கள். எல்லாம் மொத்தமாக வீடியோ பிலிமில் பதிவு செய்யப்படுமாம்! (இதில் சமயத்தில் காக்கா, குருவி சப்தமும் இருக்குமாம்!)
 
கலக்கிட்டீங்க..
சினிமா பற்றி எழுதி, அதுவும் மக்களோடு இணைந்து அவர்களை பற்றி பேசும் படங்களை எழுதி, சினிமா என்ற ஊடகத்தின் தாக்கத்தை தெளிவா போட்டு தாக்கிட்டீங்க.
உண்மையிலேயே எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது இந்த வாரப் பதிவுகள். உங்கள் சிரத்தையும் பதிவுகளின் நேர்த்தியும் குறிப்பிடத் தக்கது.
சினிமா பற்றி எழுதி, இந்த வார star-ஆக இருந்த நீங்கள் சூப்பர் ஸ்டார் ஆயிட்டீங்க...வாழ்த்துக்கள். உப்பு போன்ற தமிழ் படங்களை கண்டு அவைகளைப் பற்றியும் தொடர்ந்து எழுதுங்கள்
அன்புடன்
பாலாஜி-பாரி
 
பாலாஜி,

'உப்பு' பத்தி நான் எழுதுனாதான் உண்டு போல. நேத்து 'கரகாட்டக்காரி'ன்னுகூட ஒரு
படம் பார்த்தேன். இசை யாரு தெரியுமா? நம்ம இளையராஜாதான்!

ஜனங்க அடிக்க அடிக்கவராங்கன்னுதான் ச்சும்மா இந்த படங்களைப் பத்தியெல்லாம்
எழுதாம இருக்கேன்:-)
 
நன்றி விஜய்!
நட்சத்திரப் பதிவுகளில் உங்கள் உழைப்புத் தெரிகிறது.
சிரத்தையெடுத்துச் செய்துள்ளீர்கள்.
சினிமா பற்றிக் கதைப்பது சுவாரசியமானது தான். ஆனால் இப்படி பன்முகப்படுத்தப்பட்ட தன்மையாய் இருக்க வேண்டும். இல்லாவிட்டால்....
 
ஓய்!
என்ன தனிய ஊளையிடுறது மட்டுந்தானா?
நானும் அடுத்தது என்ன எண்டு பாத்துக்கொண்டேயிருந்து கடசியா ஊழையிடத் தொடங்கினதுதான் மிச்சம்.
 
நல்ல வாரம் நாட்டாமை!

ஆனால், உங்கள் வழக்கத்தில்/பழக்கத்திலிருந்து மாறியதுதான் கொஞ்சம் நன்றாக இல்லை. நட்சத்திர வாரம் என்ன பெரிய கொம்பா? ;) அதற்கெல்லாம் போய் அலட்டிக்கலாமா? வழக்கம்போலவே தாக்கியிருக்கலாம்!

பொதுவாகவே ஒரு கேள்வி. நாம் நம்முடைய தன்மைகளை எதற்கு மாற்றிக்கொள்ள வேண்டும்? அதுவும் யாரையும் பாதிக்காதபோது?

சரிசரி... அப்ப நான் எழுதினது நன்றாக இல்லையா என்று கேட்காதீர்கள். நன்றாக இருந்தது. ரொம்ப நன்றாக இருந்தது. இயல்பாக இல்லை.

===

//டவுட்டனில் உள்ள பழங்காலத் தியேட்டர் பெயர் என்ன? இப்போது அதை மாற்றி துணி விற்பனைசெய்யும் மையமாக்கிவிட்டார்கள்....//

மாண்டி, ராக்ஸி தியேட்டரா?
 
ராக்ஸி தியேட்டரே தான். அதேப் போல் இப்போது மண்ணடித் தெருவில் இருக்கும் பிபிசி அடுக்கத்தில் முன்னாடி இருந்த திரையரங்கு பிரபாத். இன்றைக்கு வெலிங்க்டன் பிளாசா இருக்கிற இடத்தில் இருந்த திரையரங்கு வெலிங்க்டன் (ஒரு காலத்தில் ஆங்கிலப் படங்களின் சொர்க்கம் இது) சென்னையில் முதலில் கட்டப்பட்ட திரையரங்குகளில் ஒன்றான மின் ட் தெருவுக்கு ஒட்டிய படி இருக்கும், முருகன் திரையரங்கில் மலையாள பிட் படங்கள் ஒட்டிக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் பாரகன், கெயிட்டி இருக்கிறது என்று நினைக்கிறேன். சென்னையின் முதல் காம்பெளைக்ஸ் அரங்காக இருந்ததை அ.தி.மு.க கட்சி வாங்கி நாசம் செய்து அது இன்னமும், வெத்தாக நின்றுக் கொண்டிருக்கிறது. அதில் புளுடைமண்டு என்றொரு திரையரங்கு இருந்தது. அதில் தொடர்ச்சியாக படங்கள் ஒடிக் கொண்டிருக்கும். ஒரு தடவை டிக்கெட் வாங்கி உள்ளேப் போனால் எவ்வளவு படங்கள் வேண்டுமானால் பார்க்கலாம். பிற்காலத்தில், அது "மேட்டர்" திரையரங்காக மாறி ஒரே தியேட்டருக்குள் கசமுசாக்கள் நடக்க தொடங்கியது. ஜாக்கிசான் படத்திற்காகவே இருந்த திரையரங்கு அலங்கார், இடித்து காம்பெள்க்ஸினை கொண்டுவந்து விட்டார்கள். ராம் தியேட்டர் இப்போது கல்யாண மண்டபமாகிவிட்டது. இன்னும், கிருஷ்ணா, கிரெளவுன் பாக்கி. அதுவும் கூடியவிரைவில் ஆகிவிடும் என்று தோன்றுகிறது. ம்ஹூம்... அது ஒரு காலம்.
 
பின்னூட்டமிட்ட அனைத்து நண்பர்களுக்கும் நன்றி.

நரேன்,

//சென்னையின் முதல் தியேட்டர் இப்போது அண்ணா சாலையில் தபால் அலுவலகமிருந்த இடத்தில் இருந்தது என்று எப்போதோ படித்திருக்கிறேன். //

ஆம், எலெக்டிரிக் பயாஸ்கோப் என்ற ஆதிகாலத்து தியேட்டர் தபால் அலுவலகமானது என்று குறிப்பிட்டுள்ளது.

//லிபர்ட்டி திரையரங்கு கோடம்பாக்கத்தில் உள்ளது. //

அந்த கட்டுரையில் சொல்லும் லிபர்ட்டி தியேட்டர் கோடம்பாக்கம் லிபர்ட்டி தியேட்டராக தெரியவில்லை. அதுவும் அது 1920 ரேஞ்சில் கட்டப்பட்டதா என தெரியவில்லை.

ஜீவா,

//அந்த காலத்தில் பாடல் பதிவுகள் செய்ய, out-door இல் கதாநாயகன் பாடிக்கொண்டு போக, பின்னாலேயே, தபலா, ஹார்மோனியம் போன்ற இசைக்கருவிகளோடு செல்வார்கள். எல்லாம் மொத்தமாக வீடியோ பிலிமில் பதிவு செய்யப்படுமாம்! (இதில் சமயத்தில் காக்கா, குருவி சப்தமும் இருக்குமாம்!) //

ஆம். இதைப்பற்றி எம்.கே.டி பதிவில் கொஞ்சூண்டு சொல்லியிருக்கிறேன்.

பாலாஜி-பாரி,

//உப்பு போன்ற தமிழ் படங்களை கண்டு அவைகளைப் பற்றியும் தொடர்ந்து எழுதுங்கள்//

இதையும் விடலையே. எழுதியாச்சே. இங்கே http://halwacity.blogspot.com/2005/03/blog-post_27.html போய் பாருங்க தலீவா.

துளசியக்கா,

//'உப்பு' பத்தி நான் எழுதுனாதான் உண்டு போல. நேத்து 'கரகாட்டக்காரி'ன்னுகூட ஒரு //

:-)))))

வசந்தன்,

//என்ன தனிய ஊளையிடுறது மட்டுந்தானா?
நானும் அடுத்தது என்ன எண்டு பாத்துக்கொண்டேயிருந்து கடசியா ஊழையிடத் தொடங்கினதுதான் மிச்சம்//

நீங்களும் சேர்ந்து ஊளையிட தானே அந்த படம் ;-)

மாண்டீ,

//டவுட்டனில் உள்ள பழங்காலத் தியேட்டர் பெயர் என்ன? இப்போது அதை மாற்றி துணி விற்பனைசெய்யும் மையமாக்கிவிட்டார்கள்//
மதி சொன்ன,
//மாண்டி, ராக்ஸி தியேட்டரா? //

வேப்பேரியில் புரசைவாக்கம் நெடுஞ்சாலையில் இருந்த பழங்கால குளோப் தான் ராக்ஸி தியேட்டர் ஆகியிருக்கிறது என கேள்விப்பட்டேன். மேல் சொன்ன இடம் தான் டவுட்டனோ. மெட்ராஸ்-ல 8 வருசத்துக்கு மேலயிருந்தும் அந்த இடத்துக்கு எல்லாம் போனதில்லை.

மதி,

//உங்கள் வழக்கத்தில்/பழக்கத்திலிருந்து மாறியதுதான் கொஞ்சம் நன்றாக இல்லை. நட்சத்திர வாரம் என்ன பெரிய கொம்பா? ;) அதற்கெல்லாம் போய் அலட்டிக்கலாமா? வழக்கம்போலவே தாக்கியிருக்கலாம்!//

அதானே! பெரிய கொம்பா என்ன? நட்சத்திர பக்கத்துல பெயரை பார்த்தவுடனே கொம்பு முளைச்சிறுதே. ஹி ஹி.... :-)

வழக்கத்திலிருந்து மாறுயிருக்கிறேனோன்னு நினைச்சிட்டிருக்கும் போது நீங்க சொன்ன பின்னூட்டை வைத்து பார்க்கும் போது, சைக்காலஜி படி நான் மனசுல தோனுற படி உங்கள் ஸ்டேட்மெண்டுக்கு எதிர்த்து பதில் சொல்லனும் இல்லையா? அதுனால, "அதை ஏன் என் இயல்பிலிருந்து மாறியதா நினைக்கிறீங்க. அதுவும் என்னோட ஒரு இயல்புன்னு நினைச்சுக்கோங்களேன்"

//பொதுவாகவே ஒரு கேள்வி. நாம் நம்முடைய தன்மைகளை எதற்கு மாற்றிக்கொள்ள வேண்டும்? அதுவும் யாரையும் பாதிக்காதபோது?//

நல்ல கேள்வி. எத்தனை நாளைக்கு தான் சும்மா போட்டுத் தாக்கிட்டு இருக்கிறது. கொஞ்சம் விசயம் செறிந்தவைகளையும் போட்டு தாக்காலமென்று தான். :-)

//சரிசரி... அப்ப நான் எழுதினது நன்றாக இல்லையா என்று கேட்காதீர்கள். நன்றாக இருந்தது. ரொம்ப நன்றாக இருந்தது. இயல்பாக இல்லை.//

இந்தா இயல்பு நிலைக்கு வந்தாச்சில்ல.வழக்கம் போல அர்த்தமற்றவைகளை போட்டுத் தாக்கலாம் விடுங்க.

//நல்ல வாரம் நாட்டாமை!//

தீர்பை மாத்தி எழுதியாச்சி :-))))
 
சொல்ல மறந்து போனது...

தமிழ்மணத்தின் பயணப்போக்கில் நான் அப்போது வலைப்பதிவில் இருந்தால், தமிழ்மணம் மீண்டும் வாய்ப்பு தந்தால், மற்றுமொரு புதிய கருத்துக்களுடன் போட்டுத் தாக்கலாமெனயிருக்கிறேன்.... பார்க்கலாம் :-))
 
இளைய தளபதி போட்டுத்தாக்காமல் போட்டுக் கலக்கீட்டிங்கள்.நன்று நன்று.அதுசரி உங்களுக்கு இரண்டு சகோதரர்கள் மட்டும்தானா(உங்கள் Flash படத்தைப் பார்த்துவிட்டுக் கேட்கிறேன்)
 
விஜய், சில காரணங்களால் உங்கள் பதிவுகளிற்கு பின்னூட்டம் இடமுடியாமற்போனதற்கு முதலில் மன்னிக்கவும்.
மிக அழகாகவும், விரிவாகவும் திரைப்படங்கள் பற்றி இந்த ஒருவாரத்தில் கலக்கியிருக்கின்றீர்கள். சரி, அடுத்தமுறை திருநெல்வேலிக்கோ அல்லது மதுரைக்கோ வரும்போது உங்களோடு இருந்து டூரிங் டாக்கீஸில் படங்கள் பார்த்துவிட்டால் போச்சு :-).
 
ஈழநாதன்,

//அதுசரி உங்களுக்கு இரண்டு சகோதரர்கள் மட்டும்தானா(உங்கள் Flash படத்தைப் பார்த்துவிட்டுக் கேட்கிறேன்) //

ஃபிளாஷ் போக நெஜமாலுமே எனக்கு 2 சகோதரர்கள் இருக்கிறார்கள்.

//சரி, அடுத்தமுறை திருநெல்வேலிக்கோ அல்லது மதுரைக்கோ வரும்போது உங்களோடு இருந்து டூரிங் டாக்கீஸில் படங்கள் பார்த்துவிட்டால் போச்சு :-). //

ஹி ஹி... அங்கெல்லாம் டூரிங் டாக்கீஸ் எல்லாம் DTS தியேட்டர் ஆகியாச்சி. வாங்க வாங்க... நம்ம பக்கத்து கிராமத்துக்கு போய் படம் பார்த்திரலாம். நான் கடைசியா டூரிங் டாக்கீஷ்ல படம் பார்த்தது நிலக்கோட்டை என்ற கிராமத்துக்கு கொஞ்சம் மேலேயான ஊருல. அதுவும் 5 வருஷத்துக்கு முன்னாடி.'தாயகம்' என்ற விஜயகாந்த் படமென நினைக்கிறேன்.

//Nari oolai iduvathai, rendu varusham munbu Halwacity.com-la partha mathiru irukke...//

இப்பக் கூட ஆயிரத்தில் ஒருவன் படம் போட்டா தியேட்டர்ல போய் எம்.ஜி.ஆரை பார்க்கிறது இல்லையா. அது போல 2 வருஷத்துக்கு முன்னாடி பால் ஊத்தி மூடிய நம்ம ஹல்வாசிட்டி.காம்ல போட அதே படம், புத்தம் புதிய IE-ல போட்டேன். ஹி ஹி...
 
வழக்கமாக உங்கள் பதிவுகளுக்கு பின்னூட்டமிடுவேன்... நீங்கள் நட்சத்திரமானதும்...உங்களுக்கு வந்த பின்னூட்டங்களைப் படிப்பதே நல்ல பொழுது போக்காக மாறிவிட்டதால்,பார்வையாளனாகவே தங்கிப் போனேன்..

எல்லோரும் சொல்ற மாதிரி நல்லாவே கலக்குனீங்க விஜய்! மதி சொன்ன மாதிரி கொஞ்சம் இயல்பு திரிந்த தன்மை எட்டிப்பார்த்தற்கு, உங்களின் அதீத உழைப்புதான் ( நட்சத்திரமாக்கிட்டாங்களே...சரியா போட்டுத்தாக்கனுமே!) காரணம்னு தோணுது...

சந்திரனின் பதிவில் சொன்ன மாதிரி, உங்களால் வீட்டு வரவு செலவு கணக்கைக்கூட சுவாரஸ்யமாத்தான் எழுத முடியும்னு மறுபடி, மறுபடி நிருபிசிட்டீங்க!!!
 

உங்கள் கருத்துக்களை இட


<< திரும்ப முன் பக்கத்துக்கு போ

ஷூ

Difficulty in reading this post due to font issues? Click here for a PDF copy. Works best if you right-click the link and select 'Save target as...'
இந்த பதிவை போட்டுத் தாக்கியவர் : Vijayakumar
என் தங்கையிடம் இருந்த ஒரே செட் ஷூ நேற்று கொஞ்சம் பிய்ந்து விட்டது. அந்த ஷூவை தான் அவள் பள்ளிக்கு அணிந்துச் சென்றுக் கொண்டிருந்தாள். என் தங்கையை விட நான் இரண்டு வயது தான் மூத்தவன். ஒரு நல்ல ஷூ வாங்க கூட எங்கள் குடும்பத்தின் வறுமை அனுமதிக்கவில்லை. என் தந்தை வீட்டுக்கு கொண்டு வரும் பணம் பத்துவதில்லை. இந்த நிலையில் புது ஷூவை பற்றி எண்ணிக் கூட பார்க்க முடியாது. எப்படியாவது என் தங்கையின் ஷூவை செருப்பு தைப்பவரிடம் கொடுத்து தைத்து விட வேண்டும். ஷூவை எடுத்துக் கொண்டு தைக்க கிளம்புகிறேன்.

"வரும் போது அந்த முக்கு கடையிலே உருளைக்கிழங்கு ஒரு அரைக்கிலோ வாங்கிட்டு வாடா" என்றது என் தாயாரின் குரல். என் தாய் இப்போது தான் மூன்றாவதாக என் தம்பியை ஈன்றெடுத்திருந்தாள். ஷூவை செருப்பு தைப்பவரிடம் கொடுத்து தைத்த பிறகு 2 ரூபாய் கொடுத்து விட்டு கிளம்பினேன். நேராக முக்கு பலசரக்கு கடைக்கு போய் உருளைக் கிழங்கு வாங்க போனேன். கையில் இருந்த ஷூவை ஒரு பாலிதீன் பையில் சுருட்டி கடைக்கு முன்னாடி அந்த பழைய டப்பா பக்கத்தில் வைத்து விட்டு உள்ளே சென்று உருளைக்கிழங்கை பொறுக்கிக் கொண்டிருந்தேன். அப்போது பழைய சாமான் வாங்குகிறவன் கடைக்கு முன் வந்து கடைக்காரனிடம் அங்கிருக்கும் பழைய சாமான்களை எடுத்துக் கொள்வதாக சொன்னது என் காதில் விழுந்தது.

உருளைகிழங்கை நிறுத்தி விட்டு கடைக்காரனிடம் அக்கவுண்டில் சேர்த்துக் கொள்ளும்படி சொன்னேன். கடைக்காரன் கடுப்பில் என்னை முறைத்துக் கொண்டே "ஏற்கனவே பழைய பாக்கி நிறைய இருக்கு சீக்கிரம் எல்லாத்தையும் வீட்டுல அடைக்கச் சொல்லு" என்று சொன்னார். வீட்டில் சொல்கிறேன் என்று கடைக்காரனுக்கு பதில் சொல்லிவிட்டு என் தங்கையின் ஷூ வைத்த கவரை எடுக்கச் சென்றேன். அதிர்ச்சி. நான் வைத்த இடத்தில் அந்த ஷூ உள்ள பாலிதீன் பை இல்லை. முக்கு கடையில் காய்கறி வைத்திருந்த பெட்டிகளுக்கு இடையில் தேடுகிறேன். என் இதயம் படபடவென்று அடிக்கிறது. ஷூவை காணோம். தக்காளி வைத்திருந்த பெட்டியை கொஞ்சம் முன்னாடி இழுத்து இடைவெளியை பெரிதாக்கி கையை நுழைத்து தேடுகிறேன். எதிர்பாராமல் தக்காளி பெட்டி முன்னிருந்த மற்ற பெட்டிகளையும் சேர்த்து இழுத்துக் கொண்டு சரிய, கடைக்காரன் அலறி கொண்டு ஓடி வந்தான். வாயில் சொல்லக் கூடாத கெட்டவார்த்தையால் என்னை துஷித்தான். நான் என் ஷூவை தேடுவதாக சொன்னேன். அங்கிருந்த ஒரு கட்டையைக் எடுத்துக் கொண்டு என்னை அடிக்க ஓடிவந்தான்.

நான் ஓடினேன். என் அழுகை கண்ணில் முட்டிக் கொண்டு வந்தது. பாவம் என் தங்கை. ரொம்ப சின்ன பெண். நாளைக்கு பள்ளிக்கு எந்த ஷூவை போட்டுச் செல்வாளோ. நான் எப்படி அவளுக்கு சமதானம் சொல்லப் போகிறேன். என் கண்ணில் வழிந்த நீரை துடைத்துக் கொண்டே வீட்டுக்கு ஓடுகிறேன். வீட்டில் நுழைந்ததும் வீட்டுக்காரர் பல மாதங்களாக கொடுக்க வேண்டிய வாடகையை கேட்டு என் தாயாரிடம் சண்டை போட்டுக் கொண்டிருந்தார். "உம் புருஷனுக்க்கு வருமானம் சரியில்லைன்னா நீ வேலை செய்ய வேண்டியது தானே. இப்படியே சொகுசா இருக்கனும்னு நினைச்ச எனக்கு வீட்டு வாடகையே வராது" என்று கத்திக் கொண்டிருந்தார். என் தாயார் பக்கத்து மச்சி வீட்டு துணிகளை துவைத்துக் கொண்டிருந்தார். குழந்தை பிறந்து சில மாதங்களே ஆகியிருந்ததால் மிகவும் பலவீனமாகயிருந்தால் என் தாய். அதே பலவீனத்துடன் ஒரு பெரிய போர்வையை நீரில் நனைத்து துவைத்துக் கொண்டிருந்தாள்.

என்னை பார்த்ததும் "உள்ளே உன் தங்கச்சி குழந்தைய தூங்க வச்சிட்டிருக்கா. நீயும் அவளும் உருளை கிழங்கை உரிச்சி வைங்க" என்றாள். மெள்ள தயங்கியபடியே வீட்டினுள் காலடி எடுத்து வைத்தேன்.என் தங்கையை எதிர்கொள்ள எனக்கு தைரியமில்லை. என் தலையைப் பார்த்ததும் என் தங்கையின் முகம் மலர்ந்தது. என்னை பார்த்து கேட்டாள் "ஷூ ரிப்பேர் பண்ணீட்டியா அண்ணா". என் கண்ணில் நீர் துளி லேசாக எட்டிப்பார்த்ததைக் கண்டு அவள் முகம் சுருங்கியது. மெதுவாக தயங்கியபடியே ஷூ தொலைத்துப் போனதைச் சொன்னேன். உணர்ச்சிகள் கொப்பளிக்க "நாளைக்கு எதை போட்டு ஸ்கூலுக்கு போவேன். நல்ல அந்த கடையில் தேடிப்பார்த்தியா?" என்றாள்.

திரும்ப அந்த கடைக்கு சென்று பார்த்துவிடுவது என்ற உறுதியுடன் வீட்டை விட்டு கிளம்பினேன். என் தாயார் நான் ஒடுவதைப் பார்த்து "உருளைகிழங்கு சரி பண்ணாமா எங்க ஓடுறான் எல்லாம் ஒரே மனுசியா பார்க்கனும்னா முடியுதா?" என்று கத்தினாள். அந்த கடை பக்கம் போனதும் திரும்ப கடைக்காரன் என் தலையைப் பார்த்ததும் விரட்டினான். என் தந்தை வேலையிலிருந்து திரும்பியிருந்தார். அம்மா என்னைப் பற்றி அப்பாவிடம் சொன்னதும் என்னை திட்டினார். "நான் உன் வயதில் இருந்த போது வீட்டுக்கு எத்தனை வேலை செஞ்சிருக்கேன் தெரியுமா? சாப்பிடுறது, விளையாடுறது, படிக்கிறது, தூங்கிறது மட்டும் உன் வேலையில்லை. அம்மாக்கு உடம்பு சரியில்லை. நீயும் தான் வீட்டு வேலையை பார்க்கனும்" என்றார். என் அம்மாவை பார்த்து பக்கத்து வீட்டு துணி துவைத்ததை கண்டித்து சத்தம் போட்டுக் கொண்டிருந்தார். "நீ இந்த நிலமையில ரெஸ்ட் தான் எடுக்கனும். இப்படி எல்லாம் வேலை செஞ்சா பிடிக்காது" என்றார்.

நானும் என் தங்கையும் படிக்க உட்கார்ந்தோம். என் அப்பாவின் ரத்தக் கொதிப்பு அடங்காமல் இன்னும் எதை எதையோ சொல்லி கத்திக்கொண்டிருந்தார். என் தங்கை ஒரு பேப்பரில் "நான் ஷூவுக்கு என்ன செய்வேன். நான் அப்பாவிடம் நீ ஷூ தொலைத்ததைச் சொல்லப் போகிறேன்" என்று எழுதி என் அப்பாவுக்கு தெரியாமல் மெதுவாக அவள் பக்கத்தில் உட்கார்ந்திருந்த என்னிடம் அனுப்பினாள். நான் "நீ அப்பாவிடம் சொன்னால் இருவருக்கும் தான் அடி விழும். மேலும் அப்பாக்கு ரொம்ப பண கஷ்டம். நாம கஷ்டம் கொடுக்கக் கூடாது" என்று அதே பேப்பரில் பதில் எழுதி என் தங்கையிடம் கொடுத்தேன். கொஞ்ச நேரத்தில் அவள் எதையோ எழுதி திரும்ப என்னிடம் கொடுத்தாள். "அப்போ நாளைக்கு பள்ளிக்கு எப்படி போவேன்?" என்று எழுதியிருந்தாள்."நீ என் ஷூவை போட்டுச் செல்" என்று மறுபடியும் எழுது அனுப்பினேன். அவளுக்கு அதிகாலை பள்ளி ஆரம்பித்து மதியம் வரை தான். எனக்கு மதியம் ஆரம்பித்து மாலை வரை பள்ளியிருந்ததால் எப்படியாவது என் ஷூவை வைத்து சமாளித்து விடலாம் என்ற தைரியத்தில் சொல்லியிருந்தேன். என் தங்கை முகத்தில் லேசான நிம்மதி புன்னகை.

மறுநாள் காலை என் தங்கை எங்கள் பெற்றொருக்கு தெரியாமல் என் ஷூவை அணிய முயற்சி பண்ணினாள். அவள் பாவம். என் ஷூ மிகவும் அழுக்காகயிருந்தது.வெறுப்புடனே அவள் அதை அணிந்ததை உணர முடிந்தது. அந்த ஷூ வேறு அவளுக்கு ரொம்ப லூசாகயிருந்தது. நடப்பதற்கு கொஞ்சம் சிரமப்பட்டாள். பள்ளிக்கு அந்த அழுக்கான ஷூவை அணிந்து செல்வதற்கு அவளுக்கு மிக அவமானமாகயிருந்தது. அசெம்பிளி வேளையில் அவள் குனிந்து மற்ற மாணவர்கள் அணிந்திருந்த ஷூவை தான் ஏக்கமுடம் பார்த்துக் கொண்டிருந்தாள். தன் ஷூ யாருக்கு தெரிந்து விடக்கூடாது என காலை உள்ளுக்கு இழுத்து அந்த அவமான சின்னத்தை மறைக்க முயற்சித்துக் கொண்டிருந்தாள்.

மதியம் நெருங்கிக் கொண்டிருந்தது. நான் பள்ளிகூட பையை எடுத்துக் கொண்டு தெரு முனையில் என் தங்கையின் வரவுக்காக காத்திருந்தேன். பள்ளி தொடங்க இன்னும் சற்று நேரம் தான் இருந்தது. என் தங்கையை காணவில்லை. பல நிமிடங்கள் கழித்து வேகமாக ஓடி வந்தாள். எனக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது. என் தங்கை பள்ளி முடிந்த கையோடு எங்கும் நிற்காமல் ஓடி வந்ததாகச் சொன்னாள். நான் காலில் போட்டிருந்த அந்த செருப்பை அவளுக்கு கழற்றி கொடுத்து விட்டு, தெருமுனையிலேயே, அவள் கழற்றிய ஷூவை போட்டுக் கொண்டு பள்ளியை நோக்கி ஓடினேன். நேரம் ஆகிவிட்டது. மணி அடித்து பள்ளி ஆரம்பித்து வெகு நேரம் ஆகிவிட்ட உணர்வு. யாருமே மைதானத்தில் இல்லை. பள்ளிக்குள் நுழையும் போது தலைமையாசிரியர் என்னை பார்த்தார். ஒன்றும் சொல்லவில்லை. நான் வகுப்புக்குள் ஓடினேன்.

சயாங்காலம் திரும்பி வந்த என்னை பார்த்து என் தங்கை "அண்ணா! ஷூ ரொம்ப அழுக்காயிருக்கு. போட்டு போகவே வெட்காமயிருக்கு" என்றாள். உடனே ஷூவை சோப்பு போட்டு கழுவ ஆரம்பித்தேன். என் தங்கை என்னை பார்த்து மகிழ்ச்சியாய் சிரித்தாள். எனக்கும் மிகச் சந்தோஷமாகயிருந்தது. ஷூவை கழுவி ஒரு திண்டின் மேல் காயவைத்தேன். அன்று இரவு சரியான மழை. என் தங்கைக்கு அந்த ஷூவின் மேல் தான் நினைவு. என்னை எழுப்பி "மழை பெய்து. ஷூ நனைஞ்சா நாளைக்கு ஸ்கூலுக்கு போட்டுப் போக முடியாது" என்றாள். அந்த மழையில் வெளியில் சென்று ஷூவை பத்திரப்படுத்தினேன்.

மறுநாளும் அதே கதை தான். மதியம் பள்ளியை விட்டு ஓடி வந்துக் கொண்டிருந்த என் தங்கையின் காலிலிருந்த என் ஷூ லூசாகயிருந்ததால் ஒரு ஷூ கழண்டு சாக்கடைக்குள் விழுந்தது. சாக்கடைக்குள் தண்ணீர் வேகமாக ஓடி கொண்டிருந்ததாள் ஷூவும் வேகமாக மிதந்து ஓடுகிறது.அவளும் அதைப் பிடிக்க ஓடுகிறாள். சாக்கடை உயரமாகயிருந்ததால் எட்ட வில்லை. ஒரு சிறிய பாலத்தின் கீழ் இருந்த குப்பையில் ஷூ சிக்கியது. கவலையோடு உட்கார்ந்திருந்த என் தங்கைக்கு ஒரு வயதானவர் உதவி பண்ணி ஷூவை எடுத்துக் கொடுத்தார். எனக்கு இங்கே இருப்புக் கொள்ளவில்லை. என் தங்கையை இவ்வளவு நேரமாகியும் காணவில்லை. ஒடி வந்தவள் ஷூவை கழற்றினாள். ஈரமாகயிருப்பதை கேட்டு கடிந்துக் கொண்டேன். அது சாக்கடையில் விழுந்ததாக சொன்னாள். நான் கோபப்பட்டத்தை எதிர்த்து "நான் அப்பாகிட்ட சொல்ல போறேன். நீ தான் என் ஷூவை தொலைச்சே" என்றாள். அவளை ஒரு வழியாக சமாதானப்படுத்தி விட்டு திரும்ப பள்ளிக்கு ஓட, இன்றைக்கும் லேட். இன்று தலைமையாசிரியர் என்னைப் பிடித்துக் கொண்டார். ஏன் லேட் என்று கேட்டதற்கு பல காரணங்களை சொல்லி தப்பித்தேன். வகுப்பில் நுழைந்ததும் ஆசிரியர் என்னை மிகவும் பாராட்டினார். ஏனென்றால் போன பரீட்சையில் தேறிய மூன்று பேரில் நான் தான் முதலாவது.

அன்று மாலை என் தங்கையிடம் ஆசிரியர் பாராட்டிக் கொடுத்த பேனாவை அவளிடம் ஆசையாய் வைத்துக் கொள்ளும் படிச் சொன்னேன். அவள் முகத்தில் திரும்ப ஒரு மகிழ்ச்சி. அவளின் முகத்தில் என் வாழ்நாள் பூராவும் மகிழ்ச்சி ஒன்றையே காண வேண்டும். என் தந்தை அன்று இரவு தனக்கு தோட்டக்கருவிகள் இலவசமாக கிடைத்ததாகவும், லீவு நாளில் வீடு வீடாக தோட்டவேலை செய்து காசு சம்பாதிக்கப் போவதாகச் சொன்னார். நாளை விடுமுறையாகையால் என்னையும் அழைத்துக் கொண்டு நகரத்திற்க்கு தோட்ட வேலைக்கு போகலாம் என்றார்.

பல மைல்களுக்கு அப்பால் இருக்கும் நகரத்துக்கு என்னை உட்காரவைத்து, தோட்டக்கருவிகளுடன் என் அப்பா சைக்கிளில் புறப்பட்டார். நீண்ட நெடிய களைப்பான பயணத்திற்கு பிறகு நகரத்தை அடைந்தோம். வீடுவீடாக அலைந்து தோட்ட வேலையை கேட்க, யாரும் தோட்ட வேலை கொடுக்க ரெடியாயில்லை.கடைசியில் ஒரு வயதானவர் அவர் பங்களாவில் தோட்ட வேலையும் கொடுத்து, முடிந்தவுடன் செழிப்பாக பணமும் கொடுத்தார். என் தந்தைக்கு மிகுந்த சந்தோஷம். என்னை சைக்கிளில் வைத்துக் கொண்டு திரும்பும் போது "நாம நல்ல வீட்டுக்கு போயிரலாம்.உங்களையெல்லாம் நல்ல படிக்க வச்சிரலாம். அம்மாவை உட்கார வச்சி சோறு போடுவேன்" என்று சொல்லிக் கொண்டு வந்தவரை குறுக்கிட்டு "அப்பா! தங்கச்சிக்கு ஒரு ஷூ வாங்கனும்பா. பாவம் அவ பிஞ்சு போன ஷூ போட்டு ஸ்கூலுக்கு போறா" என்றேன். அப்பா "அதுக்கு என்னடா உனக்கும் சேர்த்து புது ஷூ வாங்கிரலாம்" என்றவர் சைக்கிளில் ப்ரேக் பிடிக்காமல் மரத்தில் முட்டி இருவரும் கீழே விழுந்தோம். சைக்கிளை ஒட்ட முடியாத நிலமை. ஒரு வண்டியை பிடித்து அன்று சம்பாதித்த காசை அதற்கு அழுது விட்டு வீட்டுக்கு திரும்பினோம். திரும்ப புது ஷூ என்பது எட்டாக்கனி தான்.

பள்ளியில் அன்று பள்ளி கூடத்துக்கு இடையேயிலான நெடுந்தூர ஓட்டப்பந்தயம் என்று அறிவித்திருந்தனர். விளையாட்டில் எனக்கு விருப்பம் இருந்தாலும் நான் அணிந்திருந்த ஷூவைப் பார்த்து தாழ்வு மனப்பான்மை என்னை கொஞ்ச கொஞ்சமாக அரித்துக் கொண்டிருந்தல் ஓட்டப்பந்தயத்திற்கான செலக்ஷனிலும் கலந்துக் கொள்ளவில்லை. மறுநாள் செலக்ஷன் லிஸ்டுடன் ஓட்டபந்தயத்தில் ஜெயித்தால் கிடைக்கப் போகும் பரிசுகளையும் அறிவித்திருந்தார்கள். முதல் பரிசை விடவும், இரண்டாம் பரிசை விடவும் மூன்றாம் பரிசு என்னை கவர்ந்தது. மூன்றாம் பரிசு ஒரு அழகான ஷூ என்றிருந்தது. செலக்ஷன் முடிந்து விட்டதால் நான் போட்டியில் கலந்துக் கொள்ள வாய்ப்பில்லை.

என்னுடைய PT மாஸ்டர் அறைக்கு சென்று என்னையும் போட்டியில் சேர்த்துக் கொள்ளும்படி வேண்டினேன். அவர் செலக்ஷன் முடிந்து விட்டது, இனிமேல் சேர்க்க முடியாது என்று சொன்னார். அவரிடம் அழுதேன். நான் ஜெயித்துக் காட்டுவேனென சபதம் போட்டேன். என்னை மைதானத்திற்கு கூட்டிச் சென்று ஓடச் சொன்னார். என்னுடைய ஓட்டம் அவருக்கு பிடித்திருந்தது. போட்டியில் சேர்ந்து விட்டேன்.

மாலை என் தங்கையிடம் சொன்னேன் "இந்த ஓட்டப்பந்தியத்தில நான் மூணாவது பரிசு எப்படியாவது வாங்கிரனும்" என்றேன். என் தங்கை கேட்டாள் "ஏன் அண்ணா மூன்றாவது பரிசு. முதல் பரிசு வாங்கினால் என்ன?" என்று கேட்டாள். "மூன்றாவது பரிசு வாங்கினால் தான் ஷூ கொடுப்பார்கள். முதல் இரண்டாம் பரிசில் ஷூ இல்லை அதனால் அது வேஸ்ட். ஷூ கிடச்ச உனக்கு கொடுத்திருவேன்" என்றேன். "அய்யோ அம்பளை ஷூ தானே கொடுப்பாங்க. நான் எப்படி யூஸ் பண்ணுவேன்" என்றாள். "நான் பொண்ணுங்க போடுகிற ஷூ கொடுங்கன்னு கேட்டு வாங்கிகிடுவேன்" என்றேன்.

ஓட்டப்பந்தய போட்டி நாளும் வந்தது. பல பள்ளிகளிலிருந்து ஏறக்குறைய 40 பேருக்கு மேல் கலந்துக் கொள்ள போகிறார்கள். அவர்களை பார்க்க பார்க்க எனக்கு பயமாகயிருந்தது. எல்லாரும் பணக்கார வீட்டு புள்ளைங்க மாதிரியிருந்தாங்க. எல்லாருடைய அம்மா அப்பாவும் பையனுக்கு ஒட்டபந்தியத்தில கலந்துகிறதுக்குன்னே புது ஷூ வாங்கிக் கொடுத்திருந்தாங்க. என்னுடைய பழைய ஷூவைப் பார்க்க பார்க்க அவமானம் பிடுங்கி தின்றது. என் ஆசிரியர் பள்ளிக்குரிய டீ சார்ட் போடச் சொல்லிக் கொடுத்தார். அது ஒரு பெரிய ஏரி. அந்த ஏரியின் மறுமுனையில் யார் முதல், இரண்டாவது, மூன்றாவது சென்றடைகிறார்களோ அவர்களுக்கு தான் பரிசு.

பந்தயம் தொடங்கியது. எல்லோரும் ஓடினோம். ஓடினோம். ஓடிக் கொண்டிருக்கிறோம். ஓடிக் கொண்டிருப்போம். சோர்வு என்னை ஆட்கொண்டது. பல பேர் எனக்கு முன்னால் ஓடுகிறார்கள். என் தங்கையின் பாவப்பட்ட முகம் என் கண் முன் வருகிறது. ஷூவின்றி பள்ளிக்கு செல்லும் அவள் கால்கள் எனக்கு தெரிகிறது. ஓடுகிறேன். ஆக்ரோஷத்தில் ஓடுகிறேன். முன் செல்லும் பல பேரை முந்திக் கொண்டு ஓடுகிறேன். எல்லோருக்கும் முன்னிலையில் ஓடுகிறேன்.

ஓடும் ஓட்டத்தில் இதயம் வலிக்கிறது. மூச்சை அடைத்துக் கொண்டு வருகிறது. ஆ!!! முதலாவதாக ஓடுகிறேன். கூடாது.கூடாது. நான் மூன்றாவதாகத் தான் வரவேண்டும். ஓடும் கால்களை கொஞ்சம் மெதுவாக்குகிறேன். இருவர் முந்திச் செல்கின்றனர். மூன்றாவதாக என்னை தொடர்ந்து வந்த இன்னொருவன் என்னை தள்ளி விட்டு ஓடுகிறான். நிலைகுலைந்து கீழே விழுகிறேன். சமாளித்து எழுந்து ஓடுவதற்குள் பல பேர் என்னை முந்திவிட்டார்கள். எனக்கு ஷூ வேண்டும்... எனக்கு ஷூ வேண்டும்.... எனக்கு ஷூ வேண்டும்.... என் தங்கையின் பாவப்பட்ட மூகம்.....ஹ ஹ ஹ ஹ (மூச்சிரைப்பு) எனக்கு அந்த ஷூ வேண்டும்... எனக்கு ஷூ வேண்டும்... எனக்கே தெரியாது நான் எத்தனையாவது இடத்தில் ஓடி வருகிறேனென்று. ஓடுகிறேன். உலகம் மறந்த வெறியில் ஓடுகிறேன். ஷூவுக்காக ஓடுகிறேன். என் தங்கைக்கு புதிய ஷூவைப் பெற்றுக் கொடுத்து என்னுடைய மனதில் அரித்துக் கொண்டிருக்கும் நிலையை தூர எறிய ஓடுகிறேன். ஓடுகிறேன். கடைசி முனைக்கு வந்து ரிப்பனை தள்ளிக் கொண்டே சென்று நிலைக் குலைந்து விழுகிறேன்.

PT மாஸ்டர் என்னை எழுப்புகிறார். அவரிடம் கேட்கிறேன் "நான் மூன்றாம் பரிசு பெற்றேனா?". PT மாஸ்டர் சொல்கிறார் "நீ முதல் பரிசு பெற்றிருக்கும் போது உனக்கு எதுக்கு மூன்றாம் பரிசு". மாஸ்டருக்கு பெருமை தாங்க முடியவில்லை. ஆனால் எனக்கு தோல்வியே. எனக்கு பரிசாக ஷூ கிடைக்கவில்லை. என் தங்கைக்கு திரும்ப வெற்றுக்கால்கள் தான். பல பேர் என்னுடன் நின்று போட்டோ எடுத்துக் கொண்டார்கள். என் குனிந்த தலையுடனேயே என் கண்ணில் ஒழுகிய கண்ணீரை துடைத்துக் கொண்டிருக்கிறேன். என் தங்கைக்கு ஷூ.....

தொங்கிய தலையுடனே வீட்டிற்கு திரும்புகிறேன். ஆர்வமுடன் என்னை கண்ட என் தங்கை என் வாடிய முகத்தை கண்டு முகம் சுருங்கினாள். என் தாய் அவளை கூப்பிட ஓடி சென்று விட்டாள். மெதுவாக என் காலில் உள்ள ஷூவை கழற்றுகிறேன். ஷூவின் அடிப்பாகம் முழுவது தேய்ந்து ஓட்டை விழுந்திருந்தது. இன்னொரு ஷூவின் அடிப்பாகம் பிய்ந்து தொங்கியது. என் காலின் பெரு விரல், அடிப்பாகம்,குதிகால் என பல இடங்களில் தோல் உரிந்திருந்தது. என் காலில் தோல் உரிந்த இடத்திலிருந்த எரிச்சலை விட என் மனதில் எரிச்சல் ஜாஸ்தியாக இருந்தது. குளிர்ந்த நீர் உள்ள அந்த தொட்டியில் காலை வைத்தேன்.

என் தந்தையாரின் கையில் கொஞ்சம் காசு சேர்ந்திருக்க அவள் சைக்கிளில் பல பொருள்களை வாங்கி அடுக்கிக் கொண்டிருந்தார். அதில் எனக்கும் என் தங்கைக்குமாக இரண்டு செட் ஷூக்களும் இருந்தன.

இந்த கதையை என் கதையாக சொல்லி பதிவாக போட்டுவிடலாமென நினைத்திருக்கும் போது ஒலி 96.8 எப்.எம் ரேடியோ வழியாக "திருட்டு.. திருட்டு...திருட்டு ராஸ்கல் திருட வாயேண்டா" என்ற ஜீ பாடல் ஒலிக்க அந்த திருட்டு பட்டம் வேண்டாமென முடிவு செய்து, மேல் சொன்ன கதை Bacheha-Ye aseman என்று பார்சி மொழியிலும், "Children of Heaven" என்று ஆங்கிலத்திலும் அழைக்கப்படும் ஈரானிய திரைப்படத்தை அடிப்படையாக வைத்து எழுதியது என்று ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கிறேன்.

Image hosted by PicsPlace.to

மேல் சொன்ன கதையில் 'நான்' என்று சொல்லிய இடத்தில் 'அலி மண்டேகர்' என்ற பள்ளிக்கு போகும் சிறுவனையும், ஜாஃரா என்ற அவனது தங்கையையும் உருவகப்படுத்துக் கொண்டு அந்த கதை படித்தால் அது தான் "Children of heaven" என்ற ஈரானிய படத்தின் கதையுமாகும். Montreal film festival, newport film festival, singapore film festival போன்றவற்றில் பல விருதுகளைப் பெற்ற படம். அருமையான படம். காட்சிகளில் காட்டப்படும் உணர்ச்சிகள் மேல் சொன்ன கதையின் வழியாக காட்ட முடியாது. இருந்தாலும் கொஞ்சம் மாறுபட்ட முயற்சியாக...

இந்த படத்தை பற்றி மேலும் அறிந்துக் கொள்ள இங்கே சொடுக்கவும்.

இந்த பதிவின் வாக்கு எண்ணிக்கை: . பக்கத்திலுள்ள ஸ்டாரை மவுசால் போட்டுத் தாக்கினால் எனக்கு மவுசு ஏறும். நன்றி:-)

உங்கள் கருத்துக்களை இட

திருப்பி தாக்கியவர்கள்:
விஜய், நீங்கள் சொன்ன அந்த ஈரானியப் படத்தை மூன்று வருடங்களுக்கு முன்னர் ஒரு ஆஸ்திரேலியத் தொலைக்காட்சி வழியாகப் பார்த்தேன். அந்தக் கதையை அருமையாக மொழியாக்கம் செய்திருக்கிறீர்கள். பாராட்டுக்கள். அந்தச் சிறுவனாய் நடித்தவனின் கண்கள்!
 
அன்புள்ள விஜய்,

முழுப்படமும் பார்த்த உணர்வு வந்துச்சு!

அருமையா கதை சொல்லி இருக்கீங்க!

என்றும், அன்புடன்,
துளசி
 
vijay
you made me go down memory lane!!
beautiful translation
 
நன்றி செல்வராஜ், துளசியக்கா, தேன் துளி.
 
அருமையான கதை விஜய்
 
நன்றாக கதை சொல்லியிருக்கிறீர்கள். ஆக மொத்தம் இந்த வாரம் திருவாரமாக போனதற்கு நன்றிகள் பல. தொடர்ந்து எழுதுங்கள்.
 
நன்றாகச் சொல்லியிருக்கிறீர்கள் விஜய், நன்றி!
 
நன்றி சந்திரவதனா, நரேன், இராதாகிருஷ்ணன்.

படம் பார்க்கும் போது அந்த பையன் கேரக்டரில் முழ்கியதாலும், பால்ய கஷ்டங்கள் என் கண் முன் வந்ததாலும் ஒரு கதையை போலவே என்ன சொல்ல வைத்தது.
 
விஜய்,

அருமையான கதை, மிக அருமையான மொழிபெயர்ப்பு. படத்தை எங்களால பொறுமையா பாக்க முடியுமான்னு தெரியல. பார்த்தாலும் புரியுமான்னும் தெரியல. ஆனா நீங்க எழுதினது புரியும்படியாவும், மனச தொடும்படியாவும் இருந்தது. நன்றி. உங்களுக்கு ஏதோ மனசாட்சி இருக்கப்போய் இது உங்க கதை இல்லேன்னு சொல்லிட்டீங்க. சில பேர் மாதிரி 'ஷூ' வ 'செருப்பு' ன்னு மாத்தி, என் சொந்தக்கதைன்னு சொல்லாம விட்டீங்க (தேவுடா... தேவுடா)!!
 

உங்கள் கருத்துக்களை இட


<< திரும்ப முன் பக்கத்துக்கு போ

This page is powered by Blogger. Isn't yours? தமிழ் அசைபட இணையச் செயலி தமிழ் விக்கிபீடியா

-->