<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d9439067\x26blogName\x3d%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81!!!!!\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLACK\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://halwacity.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://halwacity.blogspot.com/\x26vt\x3d-1566162084738285005', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe", messageHandlersFilter: gapi.iframes.CROSS_ORIGIN_IFRAMES_FILTER, messageHandlers: { 'blogger-ping': function() {} } }); } }); </script> <!-- Remove below comment line to show the content. Added for meta redirection --> <!--

போட்டுத் தாக்கு!!!!!

எள்ளோடு எலி புழுக்கையும் எண்ணைக்காக காயுதாம்

-ல் போட்டுத் தாக்கியது

நிலாச்சோறு

Difficulty in reading this post due to font issues? Click here for a PDF copy. Works best if you right-click the link and select 'Save target as...'
இந்த பதிவை போட்டுத் தாக்கியவர் : Vijayakumar
ஏற்கனவே நடுநிசி ஆகி கடிகார முட்கள் மணி ஒன்றைக் கடந்து இரண்டைத் தொடவிருக்கிறது. தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்துப் பார்க்கிறேன். கண்கள் ஓய்வுக் கொள்ளவில்லை. பெற்ற குழந்தையை பார்த்துவிட்டு சிங்கப்பூருக்கு திரும்பிய பிறகு கொஞ்ச நாளாகவே இரவில் படுத்தால் சரியாக தூக்கம் வருவதில்லை. அன்று அழுதுக் கொண்டிருந்த குழந்தையைப் பார்த்துவிட்டு திரும்பியவன் இன்று காரணமில்லாமல் குழந்தை எதைக் கண்டாலும் வினோதித்து சிரிக்கிறான் எனத் தொலைப்பேசியில் சொல்லிக் கேட்கும் போது சந்தோஷிப்பதை விட தேவையில்லாமல் என் மேல் எனக்கே வெறுப்பு வருகிறது. "சம்பாதிக்க வேண்டிய வயசுல சம்பாதிக்கனும்னுடா" என்று என் தாத்தாவின் குரல் காதில் ஒலிக்க பணம் என்பதை பார்க்க வந்துவிட்டு என் பையனிடம் காணக்கிடைக்காத காட்சிகளை நினைத்துக் கொண்டிருப்பது மடத்தனமோ என்று நினைக்கும் வேளையில் விசும்பலின் ஊடே "என் மீதுள்ள அன்பு உங்களுக்கு குறைந்து விட்டது?" என்று மனைவியின் குரல் கேட்கிறது. "நீர் ஒட்டாத தாமரை இலையாக வாழக் கற்றுக்கொள்" என்று பேதலித்த ஒரு குரல் எங்கிருந்தோ கேட்டாலும், "என்னிடம் அது சாத்தியமில்லை.வெளியே போ" என்று என் மனசாட்சி யாரையோ இன்னமும் சாடிக் கொண்டிருக்கிறது.

அயராத என் கண்ணில் ஜன்னல் வழியாக ஓரளவு வளர்ந்த நிலா கான்கிரீட் கட்டிடத்துக்கு பின்னே தேய்த்துக் கொண்டுப் போகும் மேகம் வழியாக தெரிகிறது. தலைமாட்டில் சுற்றும் அந்த காத்தாடி நேற்று வரை என்னை குத்தூசியாக குத்திய அதன் காற்று இன்று என்னைத் தென்றலாக தழுவுகிறது. ஆள் அரவமற்ற மொட்டை மாடியில் கொடைக்கானல் மலைத் தொடரை ரசித்துக் கொண்டே கால் கைகளை அகட்டிக் கொண்டு என் தாத்தா வீட்டு மொட்டைமாடியில் சட்டையில்லாமல் படுத்துக்கிடக்கிறேன். யாரையோ தொட தவழ்ந்து சென்ற தென்றலின் காலில் நானும் மிதிப்படுகிறேன். மனதால் நைந்துப் போன என்னை தென்றல் சொஸ்தப்படுத்துகிறாள். கொடைக்கானல் மலைத் தொடர் தொட்டு என் தாத்தா வீட்டுக்கு அண்மைவரை படர்ந்திருந்த தென்னைகளுக்கு பின் முழு நிலவு காய்ந்துக் கொண்டிருக்கிறது. தென்னைகளில் தொங்கும் தூக்கணாங்குருவிக் கூட்டிலிருந்து ஒரே சலம்பல் சத்தம். சுவர்க்கோழிகள் விடாமல் க்ரீச் க்ரீச் க்ரீச் க்ரீச் ரீங்காரம் இன்னும் கேட்டுக் கொண்டுதானிருக்கின்றன.

விரிந்த வானமும், தூவிக்கிடக்கும் நட்சத்திரங்களும்,நிலவின் வெளிச்சத்தில் நிழலாகத் தெரியும் தென்னையில் பச்சை மட்டைகளின் உரசல் ஒலியும்,பக்கத்து வீட்டு தாத்தா இருமலும்,எங்கோ ஒரு கோவிலில் நடக்கும் கொடைவிழாவில் நாட்டுப்புற பாடல் படிக்கும் கிழவியின் குரலும் என் தென்றல் பெண்ணோடு சேர்ந்தே வருகிறார்கள்.மற்றுமொரு முறை தென்றல் பெண் போகிறவழியில் தெரியாமல் என்னை விடாமல் சிறிது நேரம் தழுவிவிட்டாள். என் காதில் செல்லமான ஒலிக்கலவைகளை சிணுங்கவிட்டாள். இதை எதிர்ப்பார்க்காத என் உடம்பு ஒருமுறை சில்லிட்டு சிலிர்க்கிறது. சென்றவள் பக்கத்து வயலின் நெற்பயிரின் மணத்தையும் என் நாசிக்குள் ஊடுருவ செய்கிறாள். இன்னமும் என்னை அறியமால் நான் கிடக்கிறேன். இதன் பெயர் எனக்குத் தெரியவில்லை. கனவா? ஏகாந்தமா? பிரம்மையா?

Image hosted by PicsPlace.to

"நீங்கள் நினைத்திருந்தால் எப்போதோ வந்திருக்கலாம். உங்கள் குழந்தையை பார்க்க எப்போது வருகிறீர்கள்?" மற்றுமொரு முறை என் மனைவியின் குரல் கேட்க, சட்டென்ற விழிப்பு நிலையில் ஜன்னல் வழித் தெரிகிறது நிலவு.எங்கிருந்தோ பிரகாசிக்கும் நிலவு சுவாசிக்க முடியாமல் இக்காலம் வரை காற்றில்லாமல் மூச்சித் திணறிக் கொண்டுதானிருக்கிறது. பாவமாக இன்னும் வளராமல் இருக்கும் அந்த நிலவைப் பார்க்கிறேன். அந்த நிலவும் கூடிய விரைவில் வளர்ந்துவிடும் என்ற நம்பிக்கையில் மீண்டும் நான் துயில முயற்சிக்கிறேன்.

இந்த பதிவின் வாக்கு எண்ணிக்கை: . பக்கத்திலுள்ள ஸ்டாரை மவுசால் போட்டுத் தாக்கினால் எனக்கு மவுசு ஏறும். நன்றி:-)

உங்கள் கருத்துக்களை இட

திருப்பி தாக்கியவர்கள்:
நன்றாக எழுதியுள்ளீர்கள் விஜய்.
 
********************
comment by ஞானபீடம்
********************

பணமா? பாசமா?

இருதலைக் கொள்ளி எறும்பாகத் தவிப்பது என்பது இதுதானோ?

********************
comment by ஞானபீடம்
********************

பின் குறிப்பு: இங்கு நான் எனக்காக எந்த விளம்பரமும் இடவில்லை !.
விளம்பரத்தையே ஒரு பதிவாக எனது வலைப்பக்கத்திலேயே இட்டுள்ளேன்.
 
அன்புள்ள விஜய்,

நிலாவோட படம் அருமையா இருக்கு. கொஞ்ச நாள் லீவு போட்டுட்டு ஊரைப் பாக்க போங்க.
குழந்தையோட சிரிப்பைக் காலாகாலத்துலே அனுபவிக்க வேணாமா?

இல்லேன்னா, பேசாம குடும்பத்தை இங்கே கொண்டுவந்துருங்க!!!!

என்றும் அன்புடன்,
அக்கா
 
அன்புள்ள விஜய், நல்ல நடையில் எழுதப்பட்டுள்ள பதிவு. சில சமயம் இப்படித்தான் எழுத்தும், எழுத்தின் வழியாக உறவாடி வரும் நினைவுகளும், இயற்கையும், வெறுமையைப் போக்க உதவும் உற்ற தோழர்கள். அப்படி ஒரு தோழமையோடு உங்களுக்கு எழுத முடிகிறது. நன்று. உங்கள் மனையோடும் மகவோடும் களிப்புற்றிருக்கும் நாட்கள் வரும். உற்சாகமாய் இருங்கள்.
 
உங்கள் மனநிலையை இயற்கையோடு இணைத்து நன்றாக எழுதியிருக்கிறீர்கள். விரைவில் உங்கள் குழந்தையின் சிரிப்பில் முழுநிலவினைக் காண வாழ்த்துகள்!
 
விஜய்:

நல்ல பதிவு; உணர்வு பூர்வமாய் எழுதியுள்ளீர்கள். உங்கள் மனைவிக்கு கேம்கார்டரில் ரெக்கார்ட் செய்து வலையேற்றக் கற்றுக்கொடுத்துவிட்டால் - 2 அல்லது 3 நாளுக்கு ஒரு முறை, குழந்தையின் சேட்டைகளைப் பார்த்து மகிழலாமே

- அலெக்ஸ்
 
ஹப்பா...
போட்டுத் தாக்குறதுல்ல இருந்து விலகி
இன்னிக்காவாது பொண்டாட்டி, புள்ள யாவகம் வந்துச்சே. சீக்கிரம் ஒருவாட்டி ஊருக்குப் போய்ட்டு வாய்யா (அப்பத்தான் இதுமாதிரி அடிக்கடி நிலாச்சோறு போடமுடியும்:)

(சும்மா குசும்புக்கு!)
 
எல்லாம் ????? தெரியறதுனால பின்னூட்டமிட்ட அனைவரூக்கும் நன்றி. இருந்தாலும் பெயரை தெரிந்துக் கொள்ள முயற்சி செய்ததில்,

கார்த்திக், ஞானபீடம், துளசியக்கா,சம்மி,செல்வராஜ்,தங்கமணி,அலெக்ஸ்,அன்பு ஆகியோருக்கு என் நன்றிகள்.

சிங்கப்பூர் க்ளையண்டுக்கு என்னுடைய பங்கு தொங்கு பாராளுமன்றம் மாதிரி தொங்கிக் கொண்டிருக்கிறது. இன்னிக்கோ நாளைக்கோ அடுத்த மாசமோ வேலை முடியும், இந்தியாக்கு திரும்பலாம் என்று நினைத்தாலும் அடுத்தடுத்த குறுகிய நாட்கள் வேலை நீட்டிப்பு எல்லாவற்றையும் இழுத்துப் பிடித்துக் கொண்டிருக்கிறது.(எனக்கு தெரிந்து கடந்த 1 வருடமாக இதே நிலை தான்) சில நேரங்களில் இதை தவிர்க்கமுடியாது. ஆனால் அதுவும் இந்த நேரத்தில் கசப்பாக இருக்கிறது. என்ன செய்ய?

//இப்படி அலுவலகம் வீடுனு இருக்காம அப்ப அப்ப எங்கையாவது வெளியபோய் கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கொள். //

சம்மி மக்கா, பதிவு எழுதவும், படுக்கவும் தான் வீட்டுக்கே போகிறேன்.இல்லையென்றால் நம்ம ஊரு பண்டாரம் மாதிரி எஸ்பிளனேட் குட்டை சுவரும்,நூலக திண்டும், சினிமா தியேட்டர் இருக்கையும்,உணவுச் சாலை இருக்கையும் தான் என்னுடன் துணையிருக்கிறது. :-))))

அட அலெக்ஸ்,

நீங்க வேற, இண்டர்நெட்டே இல்ல ஊருல. அப்புறம் எங்கெங்க கேம்கார்டரும் படமும்.

எல்லாம் நன்மைக்கே.
 
***************
comment by ஞானபீடம்
***************
எலே.. மக்கா.. ஒம்ம ஜோக்குக்கு பதிலு போட்டாச்சுவே... (சித்தி அடைய வழி)

ps.நா, வெளம்பரம் எதுனா இங்க குடுத்துருக்கனாய்யா!

***************
comment by ஞானபீடம்
***************
 
என்ன அண்ணச்சி, home sick ஆ....

எப்பவுமே மனுசன் மனசு கூழுக்கும் ஆசை மீசைகும் ஆசை கணக்கு தான்,
கவலை படதீங்க, It is all part of life ணு எடுத்துக்கவென்டியதுதான்.
 
என்ன சொல்றது?? நல்லா எழுதிருக்கீங்கன்னு சொல்றதா.. கவலைப்படாதீங்கன்னு சொல்றதா..

எல்லாம் நல்லதுக்குத்தான்.. ஒரு நடை போயிட்டு வந்துராலாம்ல..
 

உங்கள் கருத்துக்களை இட


<< திரும்ப முன் பக்கத்துக்கு போ

This page is powered by Blogger. Isn't yours? தமிழ் அசைபட இணையச் செயலி தமிழ் விக்கிபீடியா

-->