<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d9439067\x26blogName\x3d%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81!!!!!\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLACK\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://halwacity.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://halwacity.blogspot.com/\x26vt\x3d-1566162084738285005', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe", messageHandlersFilter: gapi.iframes.CROSS_ORIGIN_IFRAMES_FILTER, messageHandlers: { 'blogger-ping': function() {} } }); } }); </script> <!-- Remove below comment line to show the content. Added for meta redirection --> <!--

போட்டுத் தாக்கு!!!!!

எள்ளோடு எலி புழுக்கையும் எண்ணைக்காக காயுதாம்

-ல் போட்டுத் தாக்கியது

கல்யாண மாலை

Difficulty in reading this post due to font issues? Click here for a PDF copy. Works best if you right-click the link and select 'Save target as...'
இந்த பதிவை போட்டுத் தாக்கியவர் : Vijayakumar
ஞாயிறு காலை எழுந்தவுடன் காப்பி கிடைக்கிறதோ இல்லையோ சன் டிவியின் கல்யாண மாலை டிவியில் கிடைத்துவிடும். கல்யாண மாலை நடத்துபவர் (சேகர்??? எதா இருந்த எனக்கென்ன்? இந்த பதிவுக்கு அவரை சேகர் என்றே அழைப்போம்) நிகழ்ச்சியின் மூலமாக கல்யாணமாகாதா பெண்ணையும் ஆணையும் சேர்த்து வைக்கும் தெய்வ கைங்கரியம் என்றும், அவர் செய்யும் இந்த வேலை எவ்வளவு புனிதமானது எனவும் பக்கத்து விட்டு அம்மாள் அவரை தெய்வத்துக்கு ஈடாக அங்கலாய்த்து விட்டு போனார். பாவம் அந்த அம்மாள்! அழுகிய சமூக குளத்தில் மீன் பிடிப்பவர் சேகர் என்று அவருக்குத் தெரியவில்லை. எல்லோரும் காதலித்து மணம் முடிந்தால் அவர் தெய்வ சேவை என்ன ஆகுமோ? என்றைக்காவது என்னுடைய வெளிநாட்டு நண்பர் இது என்ன ப்ரோகிராம் என்று கேட்டால் அவரிடம் என்ன சொல்லி விளக்குவதோ?

Image hosted by PicsPlace.to


மேடையில் தோன்றும் சேகருக்கு எதிரில் இரண்டு அல்லது மூன்று பேர் உட்கார்ந்திருப்பார்கள். ஒருவர் கன்செர்ண்ட் பார்ட்டி மற்ற இருவரோ அல்லது ஒருவரோ அந்த பார்ட்டியின் பாட்டி, தாத்தா, அம்மா,அப்பா, அண்ணண் அண்ணி,மாமா,அத்தை இவர்களில் யாராவது இருவராக இருப்பர். சேகர் கேட்பார் "சொல்லுங்க உங்களுக்கு எப்படிபட்ட மருமகளா வேணும்?" பார்ட்டியுடன் வந்த இருவரில் ஒருவர் "நல்ல அழகுள்ள அறிவுள்ள கண்ணுக்கு லட்சணமா குடும்பப்பாங்கான பொண்ணா வேணும்?நாங்க **** வகுப்பைச் சேர்ந்தவங்க. அந்த வகுப்புலேயே பொண்ணு வேணும்"

அது சரி, குடும்பப்பாங்கான பொண்ணை இவர் சேர்த்து வைக்கவில்லையெனில் அவர் பெயர் வேறு ஏதோ?. நானும் ஏதோ 8ம் வகுப்பு B செக்ஷன் மாதிரி ஒரு வகுப்புன்னு நினைச்சா அது நம் சமூகத்தில் நாறிக் கொண்டிருக்கும் அழுகலை தான் குறிப்பிடுகிறார் என்பது பிறகு புரிந்தது. நம்ம மட்டும் ஒழுங்க. இதுல என்ன தப்பு இருக்கு?

சேகர் நம்ம பார்ட்டியை பார்த்துக் கேட்பார் "நீங்க சொல்லுங்க உங்களுக்கு எப்படிபட்ட பொண்ணு வேண்டும்"

என்னமோ! இவர் மேடைக்கு அந்தாண்ட உள்ள கூண்டில் பல பொண்ணுகளை பிடித்து வந்த மாதிரி, அதுல எப்படிப்பட்ட பொண்ணு வேணும் என்று கேட்கிற மாதிரி

நம்ம பார்ட்டி முகத்தில் ஆயிரம் டன் வெட்கம் வழிய ஆரம்பிப்பார் "ஹி ஹி எனக்கு படிச்சி வேலைப்பார்க்குற பொண்ணா அழகான பொண்ணா வேணும்"

அதற்குள் அந்த பார்ட்டியுடன் வந்த பெண் கண்ணில் கண்ணீர் திரண்டு சேகரை தெய்வமாக பார்த்து "அய்யா நீங்க ரொம்ப நல்ல சேவை செய்றீங்கைய்யா. உங்க சேவைக்கு அளவேயில்லை அய்யா. வீட்டுக்கு வர்ற மருமகளை என்னோட பொண்ணு மாதிரி பார்த்துகிடுவேங்கைய்யா. இது சத்தியம் அய்யா" என்று அடிச்சி சத்தியம் பண்ண சூடம் தேடிக்கொண்டிருப்பார்.

நம்ம சேகர் "கவலைப்படாதீங்கம்மா, உங்க நல்ல(அழுகை) மனசுக்கேத்த மாதிரி அழகான அறிவுள்ள லட்சணமான அடக்கமான நல்ல குணமுள்ள படிச்சி வேலைக்கு போற பொண்ணு கிடைப்பாங்க அம்மா".

ஆகா விஷ்ணு பெருமான் அருள் பாலித்து விட்டார். அவர் மேல் சொன்ன எல்லாத்துடனும் ஒரு பெண்ணை தேடிக் கட்டி வைத்தார் என்றால் உண்மையில் அவர் தெய்வம் தான் என்பதை நான் ஒத்துக் கொள்கிறேன்.

ஸ்லைடு விழுகிறது. பெயர் : சுப்பையா வயது: 30 படிப்பு : BA BEd வகுப்பு : *****

"கல்யாண மாலை இது கல்யாண மாலை சுயம்வரம் ஸ்டார்ட் ஆனாதே. ஆணுக்கும் பெண்ணுக்கும் இது போறாத காலம். பெண்ணுக்கு அடங்கி ஆண் நடந்தால்...." என்று நிகழ்கால கதையை நித்யஸ்ரீ குரலில் இழைத்து பாடிக் கொண்டிருக்க அடுத்த பகுதிக்கு கல்யாண மாலை போகிறது.

Image hosted by PicsPlace.to


தொத்தலாக "எனக்கு என்ன" என்கிற மாதிரி நடுவர் உட்கார்ந்து அவர் இருபக்கத்தையும் கொர்ர்ர்ர் என்று பார்த்துக் கொண்டிருப்பார். பேசுகிறவர்கள் ஏதோ ரொம்ப நாளாக மைக்கைப் பார்க்காத மாதிரி ஏதேதோ பினாத்துவார்கள். "நகைங்க எல்லாம் முக்கியம்கிறேன். இதோ பாருங்க இவங்க அம்மா ஆஸ்பத்திரியிலே சாக கிடந்தப்ப எங்கப்பா போட்டு அனுப்பிச்ச நகை இருக்கிற தைரியத்துல தான் அவங்களுக்கு வைத்தியம் பார்த்தோம்." என்று பாவமாக அவர் பக்கத்தில் உட்கார்ந்திருக்கும் கணவரை காட்டி. கூட்டம் விழுந்து விழுந்து சிரிக்கிறது [ஆமா! மேடையில என்ன சொன்னாலும் விழுந்து விழுந்து சிரிக்கிறதுக்கு ஒரு கூட்டம் எப்போதுமே இருக்குமே]

அட தேவுடா ஒரு பஞ்ச பரதேசிய அப்பன் வீட்டு நகையோட இவங்க கைபிடிச்சிருக்காங்க போல. அந்த தறுதலையை பெத்த அந்த சுகவீன அம்மாவுக்கு தேவைதான்.

"கல்யாண மாலை இது கல்யாண மாலை சுயம்வரம் ஸ்டார்ட் ஆனாதே. ஆணுக்கும் பெண்ணுக்கும் இது போறாத காலம். பெண்ணுக்கு அடங்கி ஆண் நடந்தால்...." திரும்ப நித்யஸ்ரீ.

இப்போது திரும்ப மேடை சேகருடன் மாப்பிள்ளையை தேடி வந்த அந்த பெண்ணும் துணைக்கு இருவர்.

சேகர் கேட்கிறார் "சொல்லும்மா. உனக்கு எப்படிப்பட்ட மாப்பிள்ளை வேணும்"

அந்த பெண் கண்ணில் நீர் முட்ட (வேற எதுக்கு கேமிராவுக்கு பயந்து தான்) "எனக்கு எனக்கு எனக்கு படிச்சி நல்ல வேலை பார்க்கிற மாப்பிள்ளையா வேணும். நான் வீட்டு வேலையெல்லாம் நல்ல செய்வேன்" [மே 22 அன்றைய கல்யான மாலை ப்ரோகிராமில் ஒரு பெண் உண்மையில் சொன்ன வார்த்தைகள் தான் அது]

சில பேர் சொல்வது "எனக்கு படிச்சி நல்ல அழகுள்ள அறிவுள்ள க்ளீன் ஹேபிட் உள்ளவரா வேணும். [முக்கியமா வீட்டுக்கு அடங்குன புருஷனா இருக்கனும்?]"

உடனே சேகர் "கவலைபடாதீங்கம்மா! உங்களுக்கு படிச்சி நல்ல வேலைப்பார்க்குற மாப்பிளையா கிடைப்பாங்க"

மேடைக்கு அந்தப்பக்கத்தில் இன்னொரு கூண்டில் மாப்பிளைகள் உள்ள தைரியத்தில் சேகர் வார்த்தைகளை அவுத்து விடுவார்.

ஸ்லைடு விழுகிறது. பெயர் : அம்பிகா வயது: 28 படிப்பு : B.Com (fail) வகுப்பு : ***** [10 ஆம் வகுப்பு டி செக்ஷன்]

அப்படியே கல்யாணமாலை புக்கு வேற வருகுது என விளம்பரம் வருகிறது.

ஆக மொத்தம் சமூகத்தின் அழுகல்கள் நர்த்தனம் ஆட டிவியில் சந்தைப்படுத்தபடுவது கல்யாணமும் கூட. பெரிய லெவல் கல்யாண புரோக்கர் சேகர். பெரிய லெவல் ப்ரோக்கரின் ப்ரோகிராம் கல்யாணமாலை.

இந்த பதிவின் வாக்கு எண்ணிக்கை: . பக்கத்திலுள்ள ஸ்டாரை மவுசால் போட்டுத் தாக்கினால் எனக்கு மவுசு ஏறும். நன்றி:-)

உங்கள் கருத்துக்களை இட

திருப்பி தாக்கியவர்கள்:
Ithai padithapin, ungalai patriya konja nanja mathippum poivittathu. I am sorry.
 
அது சரி அல்வாசிட்டி விஜய் நீங்க எதுக்கு கல்யாணமாலை பார்க்கின்றீர்கள்,உங்க வீட்டம்மாவுக்கு தெரியுமா நீங்கள் கல்யாணமாலை பார்ப்பது? இல்லையென்றால் அவர்களிடம் போட்டு கொடுக்கனுமா? ஹி ஹி...

எவ்வளவு முக்கியமான விடயம் எழுதியுள்ளீர் ஆனால் இங்கே கிண்டல் அடித்துக்கொண்டுள்ளேன், நமது சமூகத்திலே திருமணம், வரன் பார்த்தல் என்ற பெயரிலே அடிக்கும் கூத்துகளுக்கு அளவே இல்லை, ஆனாலும் என்ன செய்வது??!!@#$%
 
/*
என்றைக்காவது என்னுடைய வெளிநாட்டு நண்பர் இது என்ன ப்ரோகிராம் என்று கேட்டால் அவரிடம் என்ன சொல்லி விளக்குவதோ?
*/
உங்கள் வெளிநாட்டு நண்பரிடம், அவர் ஊர் டிவியில் வரும் 'Blind Date' நிகழ்ச்சி போன்றது இது என்றும், ஆனால் அதைப்போன்று 'வேறு விஷயங்களுக்கு' அல்லாமல் வாழ்க்கை முழுதும் இணைந்து இருப்பதற்கு (இந்த விஷயம் அவருக்குப்புரிவது கொஞ்சம் சிரமம் தான்) நடக்கும் ஒரு நல்ல விஷயம் என்றும் விளக்குங்கள். முக்கியமாக நீங்கள் புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள்.
 
அனானிமஸ்,

//Ithai padithapin, ungalai patriya konja nanja mathippum poivittathu. I am sorry. //

I don't care. உங்களை என் மீது மதிப்பு வைக்க நான் கேட்டுக் கொள்ளவில்லையே. அப்படியே வைத்து அது போய் விட்டால் நான் சொல்வதில் எங்கே தவறு என்று சொல்லலாமே.

குழலி,

ஞாயிறு காலை அந்த நேரத்திற்கு படுக்கையிலிருந்து எழுந்து நடமாடுவதே பெரிய விசயம். நேற்று தெரியாமல் அந்த நிகழ்ச்சி கண்ணில் பட்டுத் தொலைத்தது. அது தான் :-)))).

//நமது சமூகத்திலே திருமணம், வரன் பார்த்தல் என்ற பெயரிலே அடிக்கும் கூத்துகளுக்கு அளவே இல்லை, ஆனாலும் என்ன செய்வது?//

பாயிண்டை கரெக்டா பிடிச்சீங்களே.

கல்யாணமாலை அபிமானிகளே, அதனால் நீங்கள் அடைந்த பயனென்ன? இல்லை இந்த சமூகபணியால் நம் சமுதாயம் அடைந்த முன்னேற்றமென்ன?. டிவியில் வரும் இந்த கண்றாவிகளை பார்க்க சகிவில்லை. தெரியாமல் பார்த்து தொலைத்துவிட்டேன்.
 
அல்வா..

கலக்கிட்டேம்மா... நீங்கள் சொன்ன வார்த்தைகள் நிஜம்.. விடுமுறைக்கு ஊர் சென்றிருந்த போது என் சகோதரி இந்த நிகழ்ச்சியை ஆஹா.. ஓஹோ என்றார்.. பார்த்ததும்.. உங்களைப்போலவே நானும் நினைத்தேன்.. அவரிடமும் கூறினேன்.. அவர் ஒத்துக்கொள்ளவில்லை..
 
இனியவன், டீவிகளும் சமூக பொறுப்பும் என்ற அளவில் ஒரு பெரியதொரு பதிவே போடலாமென நினைக்கிறேன். ஏறக்குறைய தமிழ் கேபிள் சேனல்கள் வந்த காலத்திலிருந்து மூடநம்பிக்கைகளையும், கல்யாணமாலை மாதிரி சமூக நோய்களை நோண்டிப் பார்க்கும் நிகழ்ச்சிகளும் நிறையவே வருகின்றன. நான் ஏறக்குறைய சிலவருடங்களாக டிவி கவனிக்க ஆரம்பித்தது முதல் பார்த்தால், சிவசங்கர பாபாவின் நடனமும், பால் தினகரன் சொஸ்தப்படுத்தும் முறையும், ராசிக்கல் விளம்பரமும், காந்தி ஜெயந்திக்கு சினிமா படம் வைத்து சிறப்பு நிகழ்ச்சிகளும் இந்த டிவிக்கார பசங்களுக்கு மண்டையில மசாலா கம்மியோ என்று தோன்றுகிறது.

சமூகத்தின் நாடிப்பிடித்து அதுக்கேத்த மாதிரி கல்யாணம் பண்ணி வைத்து பணக்காரர்களாக திரியும் எத்தனையோ தரகர்கள் நாட்டில் நடமாடிக் கொண்டிருக்கிறார்கள். இவர் கல்யாணமாலை நிகழ்ச்சி நடத்தி மட்டுமே நாட்டில் உள்ள அனைவருக்கும் கல்யாணம் ஆகிற மாதிரி வீட்டுப் பெண்களின் கேடு கெட்ட நம்பிக்கையை வளர்த்து வருகிறார்கள். எத்தனையோ கல்யாண ப்ரோக்கர்கள் வித விதமாக மார்க்கெட்டில் அலைகிறார்கள். இன்ஞ்சினியர் படித்த பொண்ணு என்றால் 70000, டாக்டர் படித்த பொண்ணு என்றால் 10000 ரூபாய் பீஸ் என்று வாங்கிக் கொண்டு அலையும் எத்தனையோ பேரை பார்த்திருக்கிறேன். அவர்கள் கல்யாணம் மட்டும் தான் பண்ணி வைக்கிறார்களா என்ற சந்தேகம் எனக்கு எப்போது உண்டு. இதனால் தான் இந்த மாதிரி நிகழ்ச்சிகளை காணச் சகிக்கவில்லை டிவிகளில்.
 
neengal kalyaana maalai nigalchiyai kurai sollukireergal...

Tamilmatrimony.com is creating history for making arranged marriages. So, same likek matrimony website, this is also helping peoples to find the best groom and bride. this is more reliable and peoples are getting chance to see the bride and groom.

neril senru pen or maapilai paarpathu, pennai or maapilai vendaam enpathu ithu ellam kuraya vaaipu ullathu.

ithu ponra nigalchigalai varaverpoam. mudinthaal athai meruhetra "TIPS" kudungal. thayavu seithu kindal seyya vendaam. because may be many marriages happening because of this..who knows?

neengal ethirpaarkum thirumanangal INDIA vil adutha thalai muraiyil nadakkum.
 
Well, in fact what the host is doing on TV is done by many others in houses. Lets be honest, didnt we all look for a gal from our own community ??
 
Namma oorule ethulada kutram kandupidikkirathunnu alaiyira koottam...vittu thallanum...eluthirathukku vizhayame illennu ninaikkiren.....varatchi...
 
//ஏறக்குறைய தமிழ் கேபிள் சேனல்கள் வந்த காலத்திலிருந்து மூடநம்பிக்கைகளையும், கல்யாணமாலை மாதிரி சமூக நோய்களை நோண்டிப் பார்க்கும் நிகழ்ச்சிகளும் நிறையவே வருகின்றன//

ஒரு பெரியார் மிகக்கடினப்பட்டு ஓரளவுக்கு மூடப்பழக்கம்,பேய் பிசாசு என்பதை அழித்த சமூகத்தை மீண்டும் அதில் தள்ளுகின்றன தொலைக்காட்சிகள், காலையில் ராசிப்பலனில் ஆரம்பித்து மைடியர் பூதம்,ராஜராஜேஸ்வரி,அது மட்டும் ரகசியம்,சிதம்பர ரகசியம் எத்தனை எத்தனையோ மூடப்பழக்க தொடர்கள்,ராசிக்கல் என பல நிகழ்ச்சிகள், இதெல்லாம் பெரியாரின் சீடரின் தொலைக்காட்சியிலேயே என்னத்த சொல்ல
 
டேய் விசயகுமாரு, அப்படி என்னடா உனக்கு மோகன் மேல கோபம் ? அவரு படத்தை போட்டாச்சு, பின்னே பெயரை மட்டும் ஏன் மாத்தி போடனும் ? அவரு ஏதோ பண்ணிட்டுயிருக்காரு ? இந்த சேவைக்கு எதாவது காசு வாங்குறாருனா, நீ சொல்லுறது சரிதான். ஆனா காசு வாங்கம தானே செய்யுறார்.. இப்போ யார் கிட்டையாவது நீ ஆசிர்வாதம் வாங்கிருகீயா ? அதே மாதிரி தாண்டா அவர் நல்ல பையனோ பொண்ணோ கிடைக்கும் செல்லுறது.. எல்லாத்துக்கும் குதர்க்கம் பேசலாம்..

எதோ எனக்கு பட்டத சென்னேன் போ...

நன்றி..

என்றும் அன்புடன்
சங்கர்..
 
ஐயோ கலக்குறீங்க..இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து பார்த்து கொண்டிருக்கும் சக உழியன் , 'கவலைப்படாதீங்கம்மா, உங்க நல்ல மானசுக்கேத்த மாதிரி அழகான அறிவுள்ள லட்சணமான அடக்கமான நல்ல குணமுள்ள படிச்சி வேலைக்கு போற பொண்ணு கிடைப்பாங்க என்ற பேச்சில் மயங்கி ' அவர் நல்ல மனுஷனா இருக்காரு.. எவ்வளவு அமைதியா ஆறுதலா பேசுறாரு' . அட பாவிங்களா!! இப்படி ஒவ்வொருத்தனையா நினைச்சு முதல்வர் ஆக்கிவுட்ருங்கடா..
 
Nice Post . Same feeling with me.
 

உங்கள் கருத்துக்களை இட


<< திரும்ப முன் பக்கத்துக்கு போ

This page is powered by Blogger. Isn't yours? தமிழ் அசைபட இணையச் செயலி தமிழ் விக்கிபீடியா

-->