<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d9439067\x26blogName\x3d%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81!!!!!\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLACK\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://halwacity.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://halwacity.blogspot.com/\x26vt\x3d-1566162084738285005', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe", messageHandlersFilter: gapi.iframes.CROSS_ORIGIN_IFRAMES_FILTER, messageHandlers: { 'blogger-ping': function() {} } }); } }); </script> <!-- Remove below comment line to show the content. Added for meta redirection --> <!--

போட்டுத் தாக்கு!!!!!

எள்ளோடு எலி புழுக்கையும் எண்ணைக்காக காயுதாம்

-ல் போட்டுத் தாக்கியது

குறைபட்டோம்..பெருமைபடவில்லையே...

Difficulty in reading this post due to font issues? Click here for a PDF copy. Works best if you right-click the link and select 'Save target as...'
இந்த பதிவை போட்டுத் தாக்கியவர் : Vijayakumar
ராக்கெட்டை கோவிலுக்கு கொண்டு போய் பூஜை செய்தார் மாதவன் நாயர் என கோபப்பட்டோம். நியாயம் இருக்கிறது. ஒரே நேரத்தில் விட்ட இரண்டு செயற்கைகோள்களைப் பற்றிய பேச்சை பதிவில் இதுவரை(எனக்கு தெரிந்த வரையில்) காணோமே. குறை காண மட்டுமே நம் மனம் படைக்கப்பட்டு விட்டதோ? இல்லை இதில் பெருமைப்பட என்ன இருக்கிறதா?

என்னால் தட்டச்ச முடியாததால் தினமலரில் வந்த செய்தியின் சாரத்தை சுட்டுப் போடுகிறேன்.....

Image hosted by PicsPlace.to


ஸ்ரீஹரிகோட்டா : ஸ்ரீஹரிகோட்டா, சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2வது பிரமாண்ட ராக்கெட் ஏவு தளத்தில் இருந்து, "கார்ட்டோசாட் 1' மற்றும் "ஹாம்சாட்' ஆகிய இரு செயற்கைக் கோள்களையும் சுமந்து கொண்டு "பி.எஸ்.எல்.வி., சி 6' ராக்கெட், நேற்று காலை வெற்றிகரமாக விண்ணை நோக்கி பாய்ந்தது. ஜனாதிபதி அப்துல் கலாம் "பி.எஸ்.எல்.வி., சி 6' ராக்கெட் விண்ணுக்கு செல்லும் நிகழ்ச்சியை நேரில் பார்த்தார். ஒரே ராக்கெட்டில் இருந்து இரு செயற்கைக் கோள்கள் விண்ணிற்கு அனுப்பப்படுவது இந்திய விண்வெளி வரலாற்றில் இதுவே முதல்முறை.

சென்னையில் இருந்து 90 கி.மீ., துõரத்தில் ஆந்திர மாநிலத்தில் ஸ்ரீஹரிகோட்டாவில் அமைக்கப்பட்டுள்ள 2வது ராக்கெட் ஏவுதளத்தை அமைத்த விஞ்ஞானிகள், தொழில்நுட்ப வல்லுனர்கள், செயற்கைக் கோள்களை வடிவமைத்த திட்ட இயக்குனர்கள் என அனைத்துத் தரப்பினரும் "பி.எஸ்.எல்.வி., சி 6' ராக்கெட் விண்ணிற்கு வெற்றிகரமாக சென்றதை பார்த்ததும் மகிழ்ச்சி வெள்ளத்தில் துள்ளி குதித்தனர்.

நில வரைபடங்களைத் துல்லியமாக படமெடுக்கக் கூடிய "கார்ட்டோசாட் 1' மற்றும் அமெச்சூர் ரேடியோ சேவையை கட்டுப்படுத்தும் "ஹாம்சாட்' ஆகிய இரு செயற்கைக் கோள்களையும் இரவுப் பகலாக பாடுபட்டு இந்திய விஞ்ஞானிகள் வடிவமைத்துள்ளனர். இந்நிலையில், செயற்கைக் கோள்களை விண்ணில் ஏவுவதற்கு ஸ்ரீஹரிகோட்டா, சதீஷ் தவான் ஏவு தளத்தில் 400 கோடி ரூபாய் செலவில் 2வது பிரமாண்ட ராக்கெட் ஏவு தளம் முழுக்க, முழுக்க இந்தியத் தொழில்நுட்பத்தில் <உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஏவுதளத்தில் இருந்து, ஆண்டுக்கு எட்டு முறை ராக்கெட்டுகளை விண்ணுக்கு அனுப்பும் திறனை ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆய்வு மையம் பெற்றுள்ளது. இந்த ஏவுதளத்தை விஞ்ஞானிகள் ஐந்து ஆண்டுகளில் வடிவமைத்துள்ளனர்.

இந்த ஏவுதளத்திலிருந்து நேற்று "கார்ட்டோசாட் 1' மற்றும் "ஹாம்சாட்' ஆகிய இரு செயற்கைக் கோள்கள் "பி.எஸ்.எல்.வி., சி 6' ரக ராக்கெட் மூலம் விண்ணுக்கு அனுப்பப்பட்டது. ராக்கெட் ஏவுதலுக்கான "கவுன்ட் டவுண்' நிகழ்ச்சி கடந்த 3ம் தேதி காலை 5.49 மணிக்குத் தொடங்கியது. நேற்று காலை 10.15 மணியளவில் இந்த ராக்கெட், நெருப்பை உமிழ்ந்தபடி பயங்கர சப்தத்துடன் விண்ணிற்கு சீறிப் பாய்ந்தது. விண்ணில் பாய்ந்த அடுத்த சில நிமிடங்களில் திட்டமிட்டபடி ராக்கெட் இயங்கியது. விண்ணில் இரு செயற்கைக் கோள்களையும் அதன் சுற்று வட்டப் பாதையில் நிறுத்தியது.

"கார்ட்டோசாட் 1' செயற்கைக் கோள் ஆயிரத்து 560 கிலோ எடையுடையது. இந்த செயற்கைக் கோள், ஐ.ஆர்.எஸ்.,(தொலை உணர்வு) ரக செயற்கைக் கோள்கள் வரிசையில் 11வது செயற்கைக் கோள். முழுக்க, முழுக்க இஸ்ரோ விஞ்ஞானிகளால் இந்தியத் தொழில்நுட்பத்தில் இந்த செயற்கைக் கோள் வடிவமைக்கப்பட்டுள்ளது. "கார்ட்டோசாட் 1' செயற்கைக் கோளில் இரண்டு பிரமாண்ட டிஜிட்டல் தொழில்நுட்பம் கொண்ட கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இவ்விரு கேமராக்களும் கறுப்பு வெள்ளை புகைப்படங்களை எடுக்கும் திறன் பெற்றவை. முப்பரிமாண (3டி) படங்களைப் பதிவு செய்யும் ஆற்றல் உடையவை. பூமியின் மேற்பரப்பில் 2.5 மீட்டர் நீளம் உள்ள எந்த பொருளையும் இந்த செயற்கைக் கோள் துல்லியமாக படமெடுக்கும். 30 கி.மீ., பரப்பளவில் ஒரே நேரத்தில் 12 ஆயிரம் படங்களை எடுத்து பூமிக்கு அனுப்பும். ஒரு நாளில் 14 முறை இந்த செயற்கைக் கோள் பூமியைச் சுற்றி வரும்.

இவ்வாறு பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்ட "கார்ட்டோசாட் 1' செயற்கைக் கோள் நில வரைபடங்களை துல்லியமாக கண்டறியும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்திய பாகிஸ்தான் எல்லைக் கோடு, இந்திய இலங்கை எல்லைக் கோடு, இந்தியாவில் உள்ள மாநிலங்களின் எல்லை வரைபடம், நகர்ப்புற மற்றும் கிராமப்புற நில வரைபடம், காட்டுவளம், நீர் வளம், நில வளம், கடல் அரிப்பினால் அழிந்த பகுதிகள், அணைகள், கால்வாய்கள், ஆறுகள் ஆகியவற்றை வரையறுக்கும் திறன் பெற்றது இந்த செயற்கைக் கோள்.

பிரதான செயற்கைக் கோளான "கார்ட்டோசாட் 1' உடன் துணை செயற்கைக் கோளான "ஹாம்சாட்' செயற்கைக் கோளும் நேற்று விண்ணுக்கு அனுப்பப்பட்டது. 42.5 கிலோ எடையுள்ள "ஹாம்சாட்' செயற்கைக் கோள் சர்வதேச மற்றும் தேசிய அளவிலான அமெச்சூர் ரேடியோ ஒலிபரப்பு சேவைக்காக <உருவாக்கப்பட்டுள்ளது. இது, தெற்காசிய நாடுகளில் அமெச்சூர் ரேடியோ ஒலிபரப்பு சேவைக்காக தயாரிக்கப்பட்டுள்ளது.

திடீர் வெள்ளச் சேதம், பூகம்பம் போன்ற இயற்கைச் சீற்றங்கள் ஏற்படும் கால கட்டங்களில் தொலைத் தொடர்பு மற்றும் மின்சாரத் தொடர்பு முற்றி<லுமாக துண்டிக்கப்படும். அந்த நேரத்தில் தகவல் தொடர்பிற்கு வசதியாக இந்த "ஹாம்சாட்' செயற்கைக் கோள் தயாரிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து விண்ணிற்கு ஏவப்பட்டுள்ள செயற்கைக் கோள்களை திருவனந்தபுரம், லக்னோ, மொரீஷியஸ், டியர்ஸ்லேக் (ரஷ்யா), பியாக் (இந்தோனேசியா) ஆகிய இடங்களில் உள்ள விண்வெளி ஆய்வுக் கட்டுப்பாட்டு மையங்கள் மூலம் கண்காணிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்திய செயற்கைக்கோள்கள் இந்திய ராக்கெட் மூலமே வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட உடன் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய தலைவர் மாதவன் நாயர் உட்பட விஞ்ஞானிகளை ஜனாதிபதி அப்துல் கலாம் பாராட்டினார். "நாடே உங்களை கவுரவிக்கிறது. இந்த நேரம் நாட்டிற்கே மிகவும் கவுரவமான நேரம்' என்று அவர் பாராட்டினார்.

பி.எஸ்.எல்.வி., ஒரு கண்ணோட்டம்!:இஸ்ரோ வரலாற்றில் ஏழாவது முறையாக செயற்கைக் கோளை வெற்றிகரமாக விண்ணுக்கு சுமந்து சென்று சாதனை படைத்துள்ளது பி.எஸ்.எல்.வி., ரக ராக்கெட்.

பி.எஸ்.எல்.வி., ரக ராக்கெட்டை முதல் முறையாக இஸ்ரோ நிறுவனம், ஆயிரம் கிலோ எடையுள்ள நுண் உணர் செயற்கைக் கோள்களை (ஐ.ஆர்.எஸ்.,) சுமந்து செல்லும் வகையில் உருவாக்கியது. ஆரம்பத்தில் பூமிக்கு மேலே 900 கி.மீ., நிர்ணயிக்கப்பட்ட சுற்று வட்டப் பாதையில் செயற்கைக் கோள்களை நிலை நிறுத்தும் வகையில் உ<ருவாக்கப்பட்டது.

முதல்முதலாக 1994ம் ஆண்டு பி.எஸ்.எல்.வி., ராக்கெட் விண்ணில் வெற்றிகரமாகப் பாய்ந்ததைத் தொடர்ந்து இவ்வகை ராக்கெட் சுமந்து செல்லும் செயற்கைக் கோள்களின் எடையும் படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கின. 44.4 மீட்டர் <உயரமுள்ள பி.எஸ்.எல்.வி., ராக்கெட் 295 டன் எடையுடையது. செயற்கைக் கோள்களுக்குத் தேவையான திட மற்றும் திரவ எரிபொருளை தனக்குள் சேமித்து வைக்கும் ஆற்றல் பெற்றது.

பி.எஸ்.எல்.வி., ராக்கெட்டில் முதல் கட்டத்தில் 138 டன் திட எரி பொருள் நிரப்பப்பட்டது. சர்வதேச அளவில் மிக அதிக அளவு திட எரிபொருளை நிரப்பிச் செல்வது இதுவே முதல்முறை. இரண்டாவது கட்டத்தில் 41.5 டன் திரவ எரி பொருளும், மூன்றாவது கட்டத்தில் 7.6 டன் திட எரி பொருளும், நான்காவது கட்டத்தில் 2.5 டன் திரவ எரி பொருளும் நிரப்பப்பட்டு விண்ணிற்கு அனுப்பப்பட்டது.

தொடர்ந்து ஏழாவது முறையாக செயற்கைக் கோள்களை விண்ணிற்கு வெற்றிகரமாக பி.எஸ்.எல்.வி., சுமந்து சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. பி.எஸ்.எல்.வி., ராக்கெட்டை திருவனந்தபுரத்தில் <உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் வடிவமைத்துள்ளது.

அந்த பரபரப்பான நிமிடங்கள்!

* காலை 10.05 மணி:

அப்துல்கலாம் உட்பட விஞ்ஞானிகள் பரபரப்பாக

காணப்பட்டனர்.

* காலை 10.10 மணி

கணினி கட்டுப்பாட்டு அறையில் மாதவன் நாயர்

பதட்டத்துடன் காணப்பட்டார்.

* காலை 10.11 மணி

செயற்கைக் கோள் விண்ணில் ஏவுதல் குறித்து இந்தியிலும்,

ஆங்கிலத்திலும் அறிவிப்புகள் வெளியிட்டன.

* காலை 10.12 மணி

நுõற்றுக்கணக்கான விஞ்ஞானிகள் உச்சக்கட்டப்

பரபரப்பிலிருந்தனர்.

* காலை 10.15 மணி

புகையை கக்கிக்கொண்டு "பி.எஸ்.எல்.வி.,சி 6' விண்ணில்

சீறிப் பாய்ந்தது.

* காலை 10.23 மணி

விஞ்ஞானிகள் ஆரவாரத்துடன் கைதட்டியும் கை குலுக்கியும் தங்களது

மகிழ்ச்சியினை பகிர்ந்து கொண்டனர்.

* காலை 10.33 மணி

"பி.எஸ்.எல்.வி., சி 6' வெற்றிகரமாக விண்ணில்

செலுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

* காலை 10.34 மணி

ஜனாதிபதி அப்துல்கலாம், மாதவன் நாயர் உட்பட

அனைத்து விஞ்ஞானிகளையும் கை குலுக்கி வாழ்த்தி தனது

மகிழ்ச்சியினை வெளிப்படுத்தினார்.

புதிய ஏவுதளத்தில் என்னென்ன உள்ளன? : கார்ட்டோசாட் 1 மற்றும் ஹாம்சாட் செயற்கைக் கோள்கள் ஸ்ரீஹரிக்கோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்திலிருந்து வெற்றிகரமாக விண்ணிற்கு ஏவப்பட்டன. இந்த ஏவுதளம் 400 கோடி ரூபாய் செலவில் பிரத்யேகமாக சர்வதேச தரத்தில் ஐந்து ஆண்டுகளில் <உருவாக்கப்பட்டது.

அடுத்த தலைமுறையில் அதிநவீன தொழில்நுட்பத்தில் உருவாக்கப்படும் செயற்கைக் கோள்கள் மற்றும் ராக்கெட்டுகளையும் தாங்கி நிற்கக் கூடிய அளவில் இந்த ஏவுதளம் மிகப் பிரமாண்டமாக விஞ்ஞான முறைப்படி வடிவமைக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது ஏவுதளத்தில் நான்கு பிரதான பிரிவுகள் உள்ளன.

<1. உதிரி பாகங்களை ஒருங்கிணைக்கும் கட்டமைப்பு (வி.ஏ.பி.,)

வி.ஏ.பி.,யில், ராக்கெட்டை துõக்கிச் செல்லும் வகையில் 30 டன் மற்றும் 200 டன் எடையைக் கையாளக் கூடிய கிரேன்கள் வைக்கப்பட்டுள்ளன. எலிவேட்டர் உள்ளிட்ட அதி நவீன தொழில்நுட்ப சாதனங்கள் வைக்கப்பட்டுள்ளன.

2. மொபைல் பெடஸ்டல் (எம்.எல்.பி.,)

பி.எஸ்.எல்.வி., மற்றும் ஜி.எஸ்.எல்.வி., ரக ராக்கெட்டுகளுக்குத் தேவையான வகையில் மொபைல் சிஸ்டம் இதில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

3. அம்பிலிக்கல் டவர் (யு.டி.,)

எரி பொருள் நிரப்புப் பணிகளைக் கண்காணிக்கும் டவர் இது. 10 டன் எடையைக் கையாளக் கூடிய கிரேனும் இதில் பொருத்தப்பட்டுள்ளது. கடைசி நேரம் வரை செயற்கைக் கோள் செல்லும் விதத்தை கண்காணிக்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

4. ஜெட் ரிப்ளெக்டர் (ஜே.டி.,)

திடீர் காலநிலை மாற்றத்தால் மின்னல் தாக்குதல் ஏற்பட்டால் அதிலிருந்து பாதுகாக்கும் வகையில் நான்கு பாதுகாப்பு கோபுரங்கள் இதில் அமைக்கப்பட்டுள்ளன. நான்கு பாதுகாப்பு கோபுரங்களும் தலா 120 மீட்டர் உயரமுடையவை. இவை ஒவ்வொன்றும் கேபிள் ஒயர்கள் மூலம் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.

அப்துல் கலாம், மாதவன் நாயர் வாழ்த்து : ஜனாதிபதி அப்துல் கலாம்: நமது விஞ்ஞானிகளின் இரவு பகலான உழைப்புக்கு வெற்றி கிடைத்துள்ளது. கார்ட்டோசாட் 1 மற்றும் ஹாம்சாட் ஆகிய இரு செயற்கைக் கோள்களையும் வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய விஞ்ஞானிகளுக்கு எனது பாராட்டுக்கள். அவர்களைக் குறித்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன். நமது நாடும் பெருமை அடைகிறது. 1980ம் ஆண்டு ஜூலை மாதம் 40 கிலோ எடையுள்ள மிகச்சிறிய செயற்கைக் கோள் விண்ணில் ஏவப்பட்டது. 25 ஆண்டுகளுக்குப் பிறகு அதைவிட பல மடங்கு எடையுள்ள செயற்கைக் கோளை விண்ணில் ஏவும் திறனை நாம் இன்று பெற்றுள்ளோம்.

மாதவன் நாயர்: செயற்கைக் கோள்கள் மிகத் துல்லியமாக நிர்ணயிக்கப்பட்ட பாதையில் சென்றது. "பி.எஸ்.எல்.வி.,சி 6' கடந்த இரண்டு வாரங்களாக வெட்டவெளியில் பல்வேறு வானிலை இடர்பாடுகளையும் தாங்கிக் கொண்டு நின்றது. அனைத்து விஞ்ஞானிகளுக்கும் எனது வாழ்த்துக்கள்.

இதுவரை ஏவப்பட்டவை நாற்பத்தி இரண்டு! : இந்தியாவில் 1975ம் ஆண்டு முதல் செயற்கைக் கோள்கள் விண்ணில் ஏவப்படும் பணிகள் தொடங்கின. முதன்முதலாக "ஆரியபட்டா' விண்ணில் ஏவப்பட்டது. அதன்பின் "பாஸ்கரா', "இன்சாட்' உள்ளிட்ட பலரக செயற்கைக் கோள்கள் இந்தியா மற்றும் வெளிநாடுகளிலிருந்து விண்ணில் ஏவப்பட்டன. இவற்றை ஏவுவதற்காக எஸ்.எல்.வி., ஏ.எஸ்.எல்.வி., பி.எஸ்.எல்.வி., ஜி.எஸ்.எல்.வி., உள்ளிட்ட ராக்கெட்டுகள் <உருவாக்கப்பட்டன. "கார்ட்டோசாட் 1', "ஹாம்சாட்' செயற்கைக் கோள்களுடன் சேர்த்து இதுவரை மொத்தம் 42 இந்திய செயற்கைக் கோள்கள் விண்ணில் ஏவப்பட்டுள்ளன.

2001 முதல் 2005 வரை:

ஜீ சாட் 1 2001 1530 கிலோ ஜி.எஸ்.எல்.வி., டி., 1

டி.ஈ.எஸ்., 2001 1108 கிலோ பி.எஸ்.எல்.வி., சி3

இன்சாட் 3 2002 2750 கிலோ ஏரியன்

கல்பனா 1 2002 1060 கிலோ பி.எஸ்.எல்.வி.,சி., 4

இன்சாட் 3 ஏ 2003 2950 கிலோ ஏரியன் 2

ஜிசாட் 2 2003 1825 கிலோ ஜி.எஸ்.எல்.வி., டி2

இன்சாட் 3 ஈ 2003 2775 கிலோ ஏரியன்

ரிசோசாட் 1 2003 1360 கிலோ பி.எஸ்.எல்.வி.,சி., 5

எஜுசாட் 2004 1950 கிலோ ஜி.எஸ்.எல்.வி., 7

கார்ட்டோசாட் 2005 1560 கிலோ பி.எஸ்.எல்.வி.,சி., 6

இந்தியா விண்ணில் ஏவிய சர்வதேச செயற்கைக் கோள்கள்:

எண் பெயர் தேதி எடை ராக்கெட்

1. டி.எல்.ஆர்.டியூப்சாட் 26.05.1999 45 கிலோ பி.எஸ்.எல்.வி.,சி2

(ஜெர்மன்)

2. கிட்சாட் 3 (கொரியா) 26.05.1999 110 கிலோ பி.எஸ்.எல்.வி., சி2

3. பேர்டு (ஜெர்மன்) 22.10.2001 92 கிலோ பி.எஸ்.எல்.வி.,சி3

4. ப்ரோபா 22.10.2001 94 கிலோ பி.எஸ்.எல்.வி.,சி3

(பெல்ஜியம்)

தற்சமயம் சேவையில் உள்ள ஐ.ஆர்.எஸ்., செயற்கைக்கோள்கள்:



விண்ணில் செயற்கைக்கோள் ராக்கெட் விண்ணுக்கு

செலுத்தப்பட்ட செலுத்தப்பட்ட

தினம்: இடம்



டிச.,28, 1995 ஐ.ஆர்.எஸ்.டி., இ.சி மோல்னியா ஸ்ரீஹரிகோட்டா

செப்.,29,1997 ஐ.ஆர்.எஸ்., சி.டி பி.எஸ்.எல்.வி.,சி4 ஸ்ரீஹரிகோட்டா



மார்ச் 25,1996 ஐ.ஆர்.எஸ்.,"பி3' பி.எஸ்.எல்.வி.,டி3 ஸ்ரீஹரிகோட்டா



மே 26, 1999 ஓசன் சாட் பி.எஸ்.எல்.வி.2 ஸ்ரீஹரிகோட்டா



அக்.10, 2001 டி.ஈ.எஸ்., பி.எஸ்.எல்.வி.சி டி ஸ்ரீஹரிகோட்டா



அக்.17,2003 ரிசோசாட் 1 பி.எஸ்.எல்.வி.சி5 ஸ்ரீஹரிகோட்டா



மே 5, 2005 கார்ட்டோசாட் 1 பி.எஸ்.எல்.வி.சி6 ஸ்ரீஹரிகோட்டா





எடை ஆயுள் சக்தி உபரி சாதனங்கள்



1250 கிலோ 3 ஆண்டுகள் 800 வாட் கேமரா

1250 கிலோ 3 ஆண்டுகள் 800 வாட் கேமரா

920 கிலோ ஓராண்டு 800 வாட் எக்ஸ்ரே,ஸ்கேனர்,

டிரான்ஸ்பாண்டர்

1050 கிலோ 5 ஆண்டுகள் 750 வாட் மானிட்டர்,ஸ்கேனர்,

ரேடியோமீட்டர்

1108 கிலோ 3 ஆண்டுகள் 850 வாட் கேமரா

1360 கிலோ 5 ஆண்டுகள் 1250 வாட் கேமரா, ஸ்கேனர்

1560 கிலோ 5 ஆண்டுகள் 1100 வாட் 2 டிஜிட்டல் கேமரா

இந்த பதிவின் வாக்கு எண்ணிக்கை: . பக்கத்திலுள்ள ஸ்டாரை மவுசால் போட்டுத் தாக்கினால் எனக்கு மவுசு ஏறும். நன்றி:-)

உங்கள் கருத்துக்களை இட

திருப்பி தாக்கியவர்கள்:
சுட்ட பழத்தையும் தகுந்த முன்னுரைகளோடு சுவையாக வழங்கியதற்கு நன்றி :)
 
விஜய்,
//ராக்கெட்டை கோவிலுக்கு கொண்டு போய் பூஜை செய்தார் மாதவன் நாயர் என கோபப்பட்டோம். நியாயம் இருக்கிறது. ஒரே நேரத்தில் விட்ட இரண்டு செயற்கைகோள்களைப் பற்றிய பேச்சை பதிவில் இதுவரை(எனக்கு தெரிந்த வரையில்) காணோமே//

முன்னதை எழுதியவர்கள், பின்னதை ஏன் எழுதவில்லை என கேட்கும் நீங்கள், பின்னதை மட்டுமே எழுதிய ஊடகங்கள், முன்னதற்கு ஏன் கோபப்படவில்லை என கேட்டீர்களா?

நம்மை போன்ற தனி நபர் வலைதளங்கள், மாற்று ஊடக தளமாக வளர வேண்டும்.

அல்லாது, வெகுஜன ஊடகங்களை மறுபதிப்பிக்கும்/ பிரதியெடுக்கும் இயந்திரங்களாக இருப்பது, நேர விரயம் மட்டுமே.

ஒரு சுட்டியுடன் முடிக்க வேண்டிய வேலையை, முழுதும் தட்டச்ச இருக்கும் நேரத்தில், சொந்தமாகவே ஏதாவது எழுதியிருக்கலாம் தானே.

உங்கள் மனதை ஊனப்படுத்த அல்ல, ஊக்கப்படுத்தவே இதை எழுதினேன்.

நன்றி,
நந்தலாலா
 
This comment has been removed by a blog administrator.
 
நந்தலாலா!!, நான் ஆத்திரத்தில் எழுதவில்லை. ஆதங்கத்தில் அந்த பதிவைப் போட்டேன். தவறாக புரிந்துக் கொள்ள வேண்டாம். நான் வெகுஜன ஊடகத்தில் வந்ததை வலைப்பதிவில் திருப்பி அதையே இட வேண்டுமென பதிவு போடவில்லை. எதாவது நிகழ்வு நடந்தால் நாம் எழுதி குவிப்போமே. இதைப் பற்றி ஒன்றும் சத்தமே காணமோ என்று கொஞ்சம் ஆதங்கப்பட்டேன். செயற்கைக் கோள் விடுவது வழக்கமான நிகழ்ச்சியாக இருந்தால் விட்டு விடலாம். எப்போதோவது தான் அது நடக்கும். நமது விண்வெளி ஆராய்ச்சியில் மைல்கல்கள்.

//வெகுஜன ஊடகங்களை மறுபதிப்பிக்கும்/ பிரதியெடுக்கும் இயந்திரங்களாக இருப்பது, நேர விரயம் மட்டுமே.//

இந்த பதிவு வெறும் ஞாபகப்படுத்துதல் மட்டுமே. அத்துடன் என்னுடைய மகிழ்வையும் வெளிப்படுத்த 5 நிமிடத்தில் பண்ணிய பதிவு அது. 5 நிமிடம் தான்... ஏனென்றால்...


//ஒரு சுட்டியுடன் முடிக்க வேண்டிய வேலையை, முழுதும் தட்டச்ச இருக்கும் நேரத்தில், சொந்தமாகவே ஏதாவது எழுதியிருக்கலாம் தானே.//

சுட்டி கொடுக்க தோணவில்லை என்பதை நான் அனுமதித்தே ஆக வேண்டும். ஆனால் நானே முழுவதும் தினமலரில் வந்ததை தட்டச்சு செய்யவில்லை(அய்யகோ எனக்கும் வேலை இருக்கும்). இந்த மாதிரி ஃபாண்ட் கன்வெர்சனுக்கு சுராதா http://www.suratha.com அருமையான நிரலை (பொங்குத் தமிழ்) கொடுத்திருக்கிறாரே. மேல் சொன்ன சுட்டிக்கு போய், பொங்கு தமிழை காணவும். சுட்டி கொடுக்கும் அதே நேரத்தை தான் அந்த நிரல் தினமலர் எழுத்துருவை ஒருங்குறிக்கு மாற்ற எடுத்துக் கொள்ளும். தினமலர் இணையத்தில் காப்பி பண்ணி பொங்குதமிழில் பேஸ்ட் பண்ணினால் வேலை முடிந்தது. அதுவில்லாமல் தட்டச்ச நேரமில்லாமல் தான் அங்கிருந்து சுட்டதாக வேறு சொல்லியிருக்கிறேன்.

கோபம் கொள்ள வேண்டாம். பொதுவான ஆதங்கத்தை தான் சொன்னேன் நந்தலாலா.
 
hats off to suratha and suratha.com for their wonderful online service. wherever and whenever goodness (rocket launch incl.) happens , small or big, one shld have the heart to appreciate it "WHOLEHEARTEDLY". adhuthaan unMaiyaana manidha naeyam.

let me see whether you find out who this anonymous is. I will keep checking my inbox repeatedly.

- 'known' anonymous :)
 
விஜய் அதுதான், நீங்க போட்டுட்டீங்க இல்ல?. விட்டுத் தள்ளுங்க!
 
விஜய்,
உங்கள் ஆதங்கம் தேவையற்ற ஒன்று என்பதை சுட்டவே நான் எழுதினேன்.

பெருமாள் கோவில் வழிபாடு முரண். செயற்கைகோளை விடுவதே கடன்.

தினமலரை குறித்த நீங்கள், கணி தமிழ் வளர்ச்சிக்கு உதவும் சுரதா பற்றி பதிவிலேயே ஒரு வரி போட்டு தாக்கியிருந்தால் எனக்கு ஒரு வரி மிச்சம். ;-)

பிரதியெடுக்கும் இயந்திரம் என சொன்னது நிச்சயம் உங்களை அல்ல. சில பதிவுகளில் 100% மறுபதிப்பை படித்ததால் வந்த ஆதங்கம்.

இணையத்தில் கிடைக்கின்ற/இருக்கின்ற ஒன்றை மறுபடியும் பதிய மெனக்கெடும் இவர்களை என்ன சொல்ல?

குறைந்த பட்சம் (உங்களைப்போல) தொடக்கத்திலேயே 'சுட்ட'தை சொல்லாமல், இடையில் எங்கோ பதிந்தவரின் கருத்து இருக்கலாமோ என்ற தேடலில், நாம் ஏற்கனவே வாசித்த ஒன்றை மறுபடி முழுதுமாக வாசிக்கும் போது ஏற்படும் அலுப்பு இருக்கிறதே....

சுட்டதை ஆரம்பிக்கும் போதே சுட்டிவிட்ட உங்கள் பதிவில் வந்து இதை கொட்டியதன் காரணம் - சுயமாக எழுதவரும் நீங்கள், சுயமாகவே எழுதலாமே என கூறத்தான்.

மற்றபடி இதில் கோபம்கொள்ள எந்த இடத்திலும் வாய்ப்பில்லாமல் போனமைக்காக வருந்துகிறேன்.

//(அய்யகோ எனக்கும் வேலை இருக்கும்)//
அதே அய்யகோ! எனக்கும் தெரியுமே!
உங்கள் நாட்டில் (நகரிலில்?) இருக்கும், அடிக்கடி பறந்து என்னை சந்திக்க வரும் நண்பர் சொல்வார் "மனிதனாக உணரவே வெளிநாட்டுக்கு போகவேண்டியுள்ளது".

ஆனால் இப்போது எனக்கு ஏகப்பட்ட நேரம் கை வசமுள்ளது - குறைந்தது அடுத்த ஒரு வாரத்துக்காவது. :)

உலகில் நடக்கும் அனைத்தையும், எல்லாவற்றையும் தேடிப்பிடித்து, அவைகளை இதயப்பூர்வமாக பாராட்டும் - 'known' anonymous சொல்லும் - உண்மையான மனித நோய் எனக்கில்லை.

மற்றபடி இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி(?) வெற்றி குறித்து, ஒவ்வொரு சராசரி இந்தியனின் மகிழ்வுக்கு சமமானதே எனது மன்நிலையும்.
நன்றி,
நந்தலாலா
 
//முன்னதை எழுதியவர்கள், பின்னதை ஏன் எழுதவில்லை என கேட்கும் நீங்கள், பின்னதை மட்டுமே எழுதிய ஊடகங்கள், முன்னதற்கு ஏன் கோபப்படவில்லை என கேட்டீர்களா?//

//ராக்கெட்டை கோவிலுக்கு கொண்டு போய் பூஜை செய்தார் மாதவன் நாயர் என கோபப்பட்டோம்//

ராக்கெட்டையா? ஏதோ கோப்பு என்று நினைக்கிறேன் .. அது சரி யார் கோபப்பட்டார்கள் ? சுட்டி இருக்கா? ஏன் கோபப்படவேண்டும் ? ஏதோ வேலை செய்தோம்...போனால் போகிறது..விழுந்தால் விழுகிறது..என நினைக்காமல், கண்டிப்பாக வெற்றியடையவேண்டும் என்னும் அவரது எண்ணம் தானே இதில் பிரதிபலிக்கிறது ..
 
கோவிலுக்கு கொண்டு போனதற்கு பதிலாக ஒரு சர்ச்சுக்கோ, மசூதிக்கோ கொண்டு போயிருந்தால் அப்போ மதசார்பின்மையை நிருபித்திருக்கலாம்.. அரசியல்வாதிகளிடம் பாடம் கற்பித்துக் கொள்ளத்தவறியதன் மூலம் மகா புத்திசாலிகளான ஒரு சில வலைப்பதிவர்களின் கடும் கண்டனத்திற்கு ஆளாகிவிட்டார் பாவம்..!
 
Good recognition. I agree with you. Nesa Kumar has written an informative article in thise week's thinnai on this launch http://thinnai.com/sc0506051.html

Thanks
Sa.Thirumalai
 

உங்கள் கருத்துக்களை இட


<< திரும்ப முன் பக்கத்துக்கு போ

This page is powered by Blogger. Isn't yours? தமிழ் அசைபட இணையச் செயலி தமிழ் விக்கிபீடியா

-->