<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d9439067\x26blogName\x3d%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81!!!!!\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLACK\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://halwacity.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://halwacity.blogspot.com/\x26vt\x3d-1566162084738285005', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe", messageHandlersFilter: gapi.iframes.CROSS_ORIGIN_IFRAMES_FILTER, messageHandlers: { 'blogger-ping': function() {} } }); } }); </script> <!-- Remove below comment line to show the content. Added for meta redirection --> <!--

போட்டுத் தாக்கு!!!!!

எள்ளோடு எலி புழுக்கையும் எண்ணைக்காக காயுதாம்

-ல் போட்டுத் தாக்கியது

என் பதிவுகள் இனி கைத்தொலைபேசியிலும் படிக்கலாம்

Difficulty in reading this post due to font issues? Click here for a PDF copy. Works best if you right-click the link and select 'Save target as...'
இந்த பதிவை போட்டுத் தாக்கியவர் : Vijayakumar
காலம் காலமாக நான் மென்பொருள் துறையில் குப்பைக் கொட்டிக் கொண்டிருந்தாலும் ஏதோ வயிற்றுப் பிழைப்புக்காக தான் அந்த தொழில் என்ற முறையில் தான் இருப்பேன். சில சமயம் தீடிரென்று மென்பொருளின் மீது கட்டுக்கு அடங்கா காதல் ஏற்பட்டு எதாவது மென்பொருளைப் பிடித்து நோண்டிக் கொண்டிருப்பேன். காதல் சிலகாலம் தான். அதற்குள் என் கவனமும் ஏதாவது ஒன்றில் திரும்பி பழையபடி பழைய நிலமைக்கு மாறி விடுவேன்.

இந்த வாரம் முழுக்க கைத்தொலைபேசிகளில் ஜாவா என்ற தலைப்பில் நோண்டிக் கொண்டிருக்கும் போது தற்செயலாக 'டெக்குயூலா கேட்' என்ற கைத்தொலைபேசி புத்தகத்தை உருவாக்கும் ஒரு மென்பொருள் வந்து மாட்டியது. எனக்கு ஜாவா ஒரு சதவிகிதம் தான் தெரியும். அந்த நிலையிலும் டெக்குயூலா கேட் மென்பொருளை நோண்டி நுங்கெடுத்து தமிழில் கைத்தொலைபேசி புத்தகத்தை உருவாக்க முடிந்தது.

திடீரென என் மூளையில் ஒரு பல்ப் உதிக்க, என்னுடைய தினசரி பதிவுகளை ஏன் கைத்தொலைபேசியில் வழங்கக்கூடாது எனத் தோன்றியது. அதன் வசதி என்னவென்றால், அலுவலகத்திற்கு பஸ்ஸிலோ,இரயிலிலோ பயன் செய்யும் போது GPRS வழியாகவும், இல்லையென்றால் கிளம்பும் முன் என் பதிவை உங்கள் கைத்தொலைபேசியில் போட்டுக் கொண்டால் நீங்கள் பயணம் செய்துக் கொண்டே உங்கள் கைத்தொலைபேசியில் என் பதிவை படிக்கலாம்.(வேணாம்... வேணாம்... அப்படி படிக்கிறதுக்கு என் பதிவுல என்ன இருக்குன்னு கேட்டா நான் மனசு நொந்து போயிருவேன்...அவ்வ்வ்வ்வ்)

உங்களிடம் எந்த மாடல் கைத்தொலைபேசி இருக்க வேண்டும்? மாடல் எல்லாம் எனக்கே தெரியாதுங்க. குறைந்த பட்சம் உங்களிடம் இருக்க வேண்டியது ஜாவா மென்பொருளை ஓட்டும் ஒரு கைத்தொலைபேசி அவ்வளவு தான். இப்போது தான் எல்லா கைத்தொலைபேசிகளிலும் ஜாவா கேம்களை கொடுத்து உங்களை கெடுத்து வைத்திருக்கிறார்களே. அப்படியானல் உங்களால் என்னுடைய பதிவுகளையும் உங்கள் கைத்தொலைப்பேசியில் படிக்கலாமென நினைக்கிறேன். உங்களிடம் GPRS என்ற கைத்தொலைப்பேசி இணைய வசதியிருந்தால் நல்லது. இல்லாவிட்டாலும் ஜாவா கோப்புகளை கணியில் இறக்கி கைத்தொலைப்பேசியில் ஏற்றும் வசதியிருந்தாலும் சரி. மிக எளிதாக இந்த கைத்தொலைப்பேசி புத்தகத்தை ஏற்றிப் படிக்கலாம்.

Image hosted by PicsPlace.to


டெக்னிகலாக அதிகம் சொல்லத் தெரியாத காரணத்தால் இத்துடன் விளக்கத்தை நிறுத்திக் கொள்கிறேன். மேலும் சந்தேகம் இருந்தால் என்னை njvijay at halwacity dot com என்ற முகவரியில் தொடர்புக் கொள்ளலாம்.

சரி. இப்போது இதில் இருக்கும் குறை/நிறைகளை பார்ப்போம். நிறை என்றால் கைத்தொலைபேசியில் தமிழிலேயே பதிவுகளை/கதைகளை படிக்கும் வாய்ப்பு. குறை என்று சொன்னால் எழுத்துரு (font) தான். யூனிகோட் பயன்படுத்தவில்லை. டிஸ்க்கி தான் பயன்படுத்துகிறேன். மேல் சொன்ன மென்பொருள் வெறும் windows font -ஐ மட்டும் சேர்க்க அனுமதிப்பதால் என்னால் TSC_AvaragalFxd மட்டுமே பயன்படுத்த முடிகிறது. இதனால் தமிழ் கொக்கி எழுத்தில் வரும் கொக்கி மட்டும் கொஞ்சம் உயரத்தில் தொங்கிக் கொண்டிருக்கும். வெகு சிறிதாக அசௌகரியம் கொடுத்தாலும் உங்களால் தமிழை கைத்தொலைபேசியில் படிக்க முடியும். படங்கள் வராது. எழுத்துருக்கள் அழகுப்படுத்தபடவில்லை/முடியாது(தற்காலிகமாக).


தற்போதைக்கு கைத்தொலைபேசியில் தமிழ் எழுத்துக்கள் இப்படி தான் தோன்றும்Image hosted by PicsPlace.to


வெள்ளோட்டமாக 'புதுமைபித்தனின்' 10 சிறுகதைகளை கைத்தொலைப்பேசி புத்தகமாக வெளியிடுகிறேன். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் GPRS தொடர்பு வழியாகவோ இல்லையென்றால் உங்கள் கணனியிலோ .jar கோப்புகளை இறக்கிக் கொண்டு உங்கள் ஜாவா கைத்தொலைபேசியில் ஏற்றிக் கொண்டு நீங்களே சோதனை பண்ணிப் பார்த்துக் கொள்ளுங்கள். கட்டாயம் உங்களின் பதில்களை எதிர்பார்க்கிறேன். ஊக்கமும், ஆர்வமும் இருந்தால் இன்னும் நிறைய பண்ணலாம். மகிழ்ச்சியான செய்தி என்னவென்றால் உங்களிடம் இருக்கும் பழைய ஜாவா கைத்தொலைபேசியிலும் வேலை செய்யும். அதாவது MIDP 1.0 & MIDP 2.0 -க்களில் எந்த தடங்கலும் இல்லாமல் வேலை செய்ய வேண்டும்,(நான் என்னுடைய கைத்தொலைபேசியில் மட்டுமே சோதித்திருக்கிறேன். அதனால் தான் அந்த பொறுப்பை உங்களிடம் கொடுக்கிறேன்)

கீழே கோப்புகளை பெற்றுக் கொள்ளுங்கள். முயற்சி செய்து பாருங்கள். உங்கள் பதிலை எனக்கு சொல்லுங்கள்.

புதுமைப்பித்தனின் 10 கதைகளும்... (.jar கோப்பு 60KB-களை கொண்டது)

http://www.geocities.com/njvijay/Java/puthumai.jar

உங்கள் கைத்தொலைபேசியில் மிகச் சிறிதளவே இடமிருந்தால் புதுமைப்பித்தனின் 'அகலியை' என்ற சிறுகதையை மட்டும் படித்துப் பாருங்கள் (இந்த .jar கோப்பு 30 KB அளவுள்ளது)

http://www.geocities.com/njvijay/Java/short.jar

கீழ்கண்ட புதுமைப்பித்தனின் சிறுகதைகள் உங்கள் கைத்தொலைபேசியில் அடங்கப்போகிறது.

1. அகலியை
2. கோபால் அய்யங்காரின் மனைவி
3. இரண்டு உலகங்கள்
4. கடவுளின் பிரதிநிதி
5. காலானும் கிழவியும்
6. மெஷின் யுகம்
7. ஒரு நாள் கழிந்து
8. படபடப்பு
9. பொன்னகரம்
10. தெருவிளக்கு

எனக்காக செய்த முயற்சி உங்களுக்கும் பயன்படலாம் என்ற யோசனையில். பயன்படுத்திவிட்டு சொல்லுங்கள்.

அடுத்து 'பின்னூட்ட எஞ்சின்' ஒன்றை தயாரிக்கலாமா என யோசித்துக் கொண்டிருக்கிறேன். அதாவது அந்த மென்பொருளை ஒரு தட்டு தட்டிவிட்டால் 1000 கணக்கில் பின்னூட்டத்தை அள்ளி வழங்கும். இதுக்கு யாருப்பா ரெடி?

இந்த பதிவின் வாக்கு எண்ணிக்கை: . பக்கத்திலுள்ள ஸ்டாரை மவுசால் போட்டுத் தாக்கினால் எனக்கு மவுசு ஏறும். நன்றி:-)

உங்கள் கருத்துக்களை இட

திருப்பி தாக்கியவர்கள்:
பின்னூட்ட எஞ்சினா??? நாம என்னா எம்மெல்லே எம்பி எலக்சன்லயா நிக்கறோம்... பின்னூட்டங்கர பேர்ல ஏதோ சாமன்ய மக்கள் "வாய்ஸ்" கொடுத்து பொளுது ஒட்டிகினு இருக்கோம், அதிலயும் ரவுசு பண்ணிறாதவே அல்வா... கம்யூனிஸ்டுங்க வேற ரீஜன்டா கொரலுட சமாச்சாரமே சிக்க மாட்டேன்னுதுன்னு கவலைலகீறாங்க... அவங்களுக்கு வேல கொத்துறாதப்பு
 
கைத்தொலைபேசியில் பதிவுகளை இட உங்கள் முயற்சியும் முறையும் பயன்படுமானால் வலைப்பதிவுகளின் இன்னொரு வளர்ச்சி சாத்தியமாகிறது.
வாழ்த்துக்கள்

பின்னூட்ட SPAM செய்யப் போறீங்களா? தேவையா?
 
விஜய்,
நம்பவே முடியவில்லை. செல்பேசியில் தமிழ் என சமீபத்தில் மிகப் பரபரப்பாய்ப் பேசப்பட்டதே உங்களுக்கு நினைவிருக்கிறதா?. முழுக்கதையும் செல்பேசியில் படிக்க இயலுமா?. நம்பவே முடியவில்லை. கதைகளை எப்படி செல்பேசிக்கு இறக்கிக்கொள்வது என்று கொஞ்சம் விளக்கமாய்ச் சொல்லுங்களேன்.
 
நல்ல முயற்சி விஜய், பாராட்டுக்கள்!
 
விஜய்,
நீங்கள் கொடுத்த முகவரியிலிருந்து நேரடியாய் ( http://www.geocities.com/njvijay/Java/puthumai.jar) என்னுடைய செல்பேசிக்கு GPRS மூலம் இறக்க முயற்சி செய்தேன், கோப்பு "unsupported file formate" என்கிறது :-(.
 
அன்புள்ள விஜய்,

'ஐடியா' நல்லா இருக்கு. இதுக்குப் பொருத்தமான 'கைத் தொலைபேசி'யை உடனே
அனுப்பிவைக்கவும். ச்சும்மா ஒரு நாலு போதும், வீட்டுலே ஆளுக்கு ஒண்ணு!!!
 
முத்து,

நான் சோதித்து பார்த்தது nokia 6230i மாடலில் மட்டுமே.மற்றபடி மென்பொருள் வழியாக சோதித்துப் பார்த்ததில் ஜாவா ஓடும் எல்லா கைத்தொலைபேசியிலும் இதைப் படிக்கலாம் என தோன்றியது. நான் இதில் பயங்கர வல்லுனன் எல்லாம் இல்லையாதலால் தொழில்நுட்பத்தில் உங்களுக்கு அவ்வளவாக உதவ முடியாத நிலையில் உள்ளேன். முத்து உங்கள் தொலைபேசியில் ஜாவா ப்ரோகிராமை இறக்கியிருக்கிறீர்களா? எப்படி அந்த ப்ரோகிராம்களை வழக்கமாக உங்கள் கைத்தொலைபேசியில் இருக்குவீர்கள்? என்பதை எனக்கு தனி மடலில் சொல்வீர்களா? இது என்னுடைய மைக்ரோ முயற்சி மட்டுமே. பலர் இதை பரிசோதித்து சொன்னால் இன்னும் விரிவாக செய்யலாம். வழக்கமாக .jad கோப்பை மட்டும் தான் GPRS -ல் கொடுப்பார்கள் என நினைக்கிறேன். என்னால் இந்த கோப்பை எந்த செர்வரிலும் ஏற்ற முடியவில்லை. அதனால் .jar-ஐ போட்டேன். என்னுடைய மாடலில் வேலை செய்கிறது. வேண்டுமானால் தனிமடலில் அந்த இரண்டையும் உங்களுக்கு அனுப்புகிறேன். பரிசோதித்துச் சொல்லவும்.உங்கள் உதவி பேருதவியாக இருக்கலாம்.

துளசியக்கா,

நோக்கியாவின் 60 வகை தொலைபேசி எல்லாவற்றிலும் கட்டாயம் வேலை செய்ய வேண்டும். மற்றவகளை பற்றி சீக்கிரமே விரிவாக எழுதுகிறேனே?
 
GPRS வழியாக பயன்படுத்தாமல் மேல் சொன்ன ஜாவா கோப்பை உங்கள் கணியில் இறக்கி, தொலைபேசியில் நிறுவி பயன்படுத்தி பாருங்களேன். ஏற்கனவே உங்கள் தொலைபேசிகளில் ஜாவா ப்ரோகிராம்களை நிறுவியிருந்தால் உங்களுக்கு தெரியலாம். பயன்படுத்த முனைந்தவர்கள் கண்ட பிரச்சனையை சொல்லலாம்.
 
கணியில் .jar இறக்கி தொலைப்பேசியில் நிறுவ...

1. To be able to install the application onto your device, you may need .jar file. Click on the "Download" link next to these and select 'save to disk' to download the files onto your computer.
2. Use your device connectivity software to install the downloaded files onto your device using a cable or an infra-red link - see device manual for details.
3. You can also run the applications using a MIDP emulator, such as the J2ME Wireless Toolkit found on http://java.sun.com/products/j2mewtoolkit/download.html
 
அன்பின் விஜய் நல்ல முயற்சி. தொடர்ந்து வெற்றி கொடி கட்டுங்கள். நான் முதலில் எவ்வாறு கைப்பேசிக்கு அப்லோட் என்று பார்க்கவேண்டும்.

செய்துபார்த்துவிட்டு மீண்டும் வருகிறேன்.
 
ஒடம்பு பூர மூளை போலருக்கு சார் உங்களுக்கு!
 
நன்று, வாழ்த்துகள், பாராட்டுகள்.

இப்போதைக்கு என் தொலைபேசியில் ஜாவா இல்லை, ஜி.பி.ஆர்.எஸ் மட்டும்தான். InFusio என்ற விளையாட்டுக்கு மட்டுமே பயன்படும் மென்பொருள் இயங்குமென்பொருள் மட்டுமே உள்ளது.

ஆனா இப்படியே நிறுத்திடாதீங்க அதுக்காக. கூடியவிரைவில் எல்லாருக்கிட்டயும் ஜாவா வந்துடும். அப்போ இணையத்துல தேடிப்பார்க்கும்போது தமிழ் மென்பொருட்கள் இருந்தா எவ்வளவு சந்தோஷமா இருக்கும் தெரியுமா! எனவே நீங்கள் பாட்டுக்கு தொடரவும். பலன் கூடியவிரைவில் கிடைக்கும் (எங்களுக்குத்தான்).

geocitiesல் கோப்புகளுக்கு restrictionஇருக்கு, இல்ல. எனவே, brinksterல் ஒரு கணக்கு துவங்கி வேண்டியதை அப்லோட் பண்ணிக்கோங்க (audio files & executable files மட்டும் கிடையாது). அதுல WAP support கூட இருக்கு. இந்த மாதிரி புதுப்புது விஷயங்கள் எல்லாம் முயன்று பார்க்க ஒரு சொந்த சர்வரோ அல்லது serverside scripting வசதி இருக்கும் இலவசதளத்தில் ஒரு கணக்கோ மிகவும் அத்யாவசியம். ப்ளாக்ஸ்பாட், ஜியோசிடீஸ் எல்லாம் சரிப்பட்டு வராது.

மற்றபடி துளசிகோபால் சொன்னதை நானும் வழிமொழிகிறேன். ஆனால் எனக்கு ஒரே ஒரு தொலைபேசி அனுப்பி வைத்தால் போதும். :-)
 
நன்றி தமிழ்வாணம். பயன்படுத்து விட்டு சொல்லுங்களேன்.

//பயங்கர மண்ட ஸார் உங்களுக்கு//
//ஒடம்பு பூர மூளை போலருக்கு சார் உங்களுக்கு! //

ஹரி, மாயவரத்தான் இந்த மண்டையும், உடம்பு பூரா மூளையும் டெக்குலா கேட் தயாரிச்ச Tequilacat, Panya என்ற ரஷ்யரை தான் சேரும். கீழே போய் பாருங்க

http://tequilacat.nm.ru/dev/br/

நான் அதை தமிழ் படுத்தி மட்டுமே பார்த்தேன். அந்த மென்பொருளை பயன்படுத்தி எப்படி உடம்பெல்லாம் மூளை பெறுவது எப்படின்னு சொல்லி சீக்கிரமே பதிவு போடுகிறேன்.

க்ரூபா, உங்களின் ஊக்கத்திற்கும் ஆக்கத்திற்கும் நன்றி. என்னோட ஆர்வம் எப்படி போகலாமென பார்த்து விட்டு காசு கொடுத்து செர்வார் வாங்கி வைத்துக் கொள்ளலாமென நினைக்கிறேன். அதுவுமில்லாமல் ஜாவா கைத்தொலைபேசியில் ஏகத்துக்கு வந்து விட்டது.

நன்றி.
 
என்ன விஜய், என்னாச்சு நல்லாத்தான இருந்தீங்க!?

வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்.

என்னுடைய 6610ல் Page Not Supportedனுதான் வந்தது. Jar கோப்பை அப்படியே இறக்கமுடியுமான்னு தெர்ல...சரி நாளைக்கு சந்திக்கும்போது நேரில் பார்க்கலாம், முயற்சி செய்யலாம்.

அப்புறம், துளசியக்கா, கிருபா மாதிரி பேராசையெல்லாம் எனக்கு கிடையாதுப்பா. எனக்கு டோர்டெலிவரில்லாம் வேணாம், நானே நேரில் பெற்றுக்கொள்கிறேன்:)
 
நம்ம 'தல' ஒரு சூப்பர் மேட்டர் சொல்லியிருக்காரு.. உடனே அவருகிட்ட போய் எனக்கு நாலு செல்லு அனுப்பு, ஒண்ணு அனுப்பு, நானே வந்து வாங்கிக்கிறேன் அப்படீன்னு எல்லம் பின்னோட்டம் கொடுத்து ஏம்ப்பா அவரு மனசை புண் படுத்துறீங்க?! ஒழுங்கா வரிசையிலே வந்து பின்னோட்டம் கொடுத்தா நாம கொடுக்குற பின்னோட்டத்துக்கு தகுந்தா மாதிரி அவரே செல் அவரு செலவிலே தர்றதா முடிவெடுத்திருக்காராம். அதுவுமில்லாமா நம்ம தலயோட சகா சம்மி அண்ணாச்சி வேற அவரு பங்குக்கு ஒரு செல் தருவாராம்... எல்லாரும் அல்ல்க்கட்டுங்க.. அல்லக்கட்டுஙோய்...!
 
துளசியக்கா, க்ருபா, அன்பு, மாயவரத்தான்,

ஹி ஹி ஹி :-)... உங்களுக்கு போன் தானே வேனும். இந்த மென்பொருளை விலை கொடுத்து வாங்கிக் கொள்ளுங்கள். ஒரு போன் இலவசம். இது எப்படியிருக்கு. மென்பொருள் விலை அதிகம் ஒன்னுமில்லை பாய்ஸ்&கேர்ள்ஸ், ஜஸ்ட் 600 சிங்கப்பூர் டாலர் தான். மென்பொருளுடன் போன்+ ப்ளூ தூத் (Bluetooth) வசதி கூட தருகிறேன். இந்த டீல் நல்லாயிருக்கா :-))))))
 
அன்பு,

மன்னிக்கவும். கைத்தொலைபேசி புத்தகத்தை GPRS வழியாக இறக்க முடியவில்லை.(நான் பதிவில் தவறுதலாக குறிப்பிட்டி விட்டேன் ). GPRS பற்றி பார்த்துக் கொண்டிருக்கிறேன். க்ருபா சொன்ன மாதிரி தொழில் நுட்பம் நல்லபடியாக போனால் காசு கொடுத்து செர்வரில் இடம் வாங்கி தொலைப்பேசி புத்தகத்தை போட வேண்டும். தற்சமயம் இதை உங்கள் கணியில் இறக்கி SYNC தான் பண்ண வேண்டும்.
 
ஆகா என்னே உங்கல் சேவை?! என்னக்கு இப்போதைக்கு போன் மட்டும் போதும். மென்பொருள் அப்பாலிக்கா வாங்கிக்கிறேன்! ஓ.கே.வா?! (போற போக்கைப் பார்த்தா 100+ஐ தொட்டுடும் போலருக்கே?!)

ஹி ஹி ஹி :-)...
 
உங்கல் ---> உங்கள்
 
மாயவரத்தான் அண்ணே, உங்கல் என்று சொல்லி பொங்கல் கொடுக்குறீங்களே.

உங்களுக்கு இல்லாத போனா? சிங்கப்பூருக்கு வந்து நேரடியாக என்னிடம் பெற்றுக் கொள்ளலாம். (இந்த சலுகை சிங்கப்பூரில் வசிக்காதவர்களுக்கு மட்டுமே) :-)))
 
விஜை, எல்லோருக்கும் ஓசியில் செல்பேசி தரும் வரைக்கும் உங்களுக்கு சொந்த இணையதளம் கிடைக்காமல் இருக்கக்கடவது! காசு குடுத்து வாங்கற வரைக்கும் இப்போதைக்கு ப்ரின்க்ஸ்டர் தளத்தையே பயன்படுத்திக்கோங்களேன்!

<a href="http://www.brinkster.com">http://www.brinkster.com</a>க்குப் போய் ஒரு கணக்க துவக்கிக்கோங்க.

அப்பறம் கீழ்க்கண்ட கோடிங்கை ஒரு ASP fileஆ சேமிச்சு, அந்த ஜார் கோப்போட சேர்த்து அப்லோட் பண்ணிட்டா போதும். ப்ரிங்க்ஸ்டர்ல wap/gprs support இருக்கு, பல ஈபுக் வெளியிடலாம்.

<%Response.ContentType="text/vnd.wap.wml" %>
<!DOCTYPE wml PUBLIC "-//WAPFORUM//DTD WML 1.1//EN" "http://www.wapforum.org/DTD/wml_1.1.xml">
<wml>
<card id="Tamil" title="Tamil eBook">
<p>
<a href="short.jar">short.jar</a>
</p>
</card>
</wml>


ரிமோட் லிங்கிங்கை அனுமதிக்கும் ஜியோசிடீஸ் கூட ஏனோ 'செல்' கண்டண்டில் நிறைய மக்கர் பண்ணுகிறது. ப்ரிங்க்ஸ்டர் ரிமோட் லிங்கிங்கை அநுமதிப்பதில்லை. ஆனால் அத்தளத்தில் இருக்கும் ஒரு ஏ.எஸ்.பி./ஹெச்.டி.எம்.எல் கோப்பின் வழியாக பைனரி கோப்புக்களைப் பதிவிறக்க அனுமதி உண்டு.
 
//சிங்கப்பூருக்கு வந்து நேரடியாக என்னிடம் பெற்றுக் கொள்ளலாம்//

நல்லதாப்போச்சு...வர்ற ஜூன் 5-ம் தேதி நீங்க ப்ரீயா? எங்கே வந்து செல் போனை பெற்றுக் கொள்ளலாம்?! (நெசம்மாவே சிங்கப்பூர் வர்றேன்! வாழ்க 'ஏர்-ஆசியா')
 
என்ன செல்ஃபோனுள்ள தமிழா?
Technolgy improved so much..?

நானும் சிங்கப்பூர் வந்து(!)செல்ஃபோன் வாங்கிக்கவா??
 
க்ரூபா சங்கர்,

உங்கள் சாபத்திற்கு நன்றி:-))) உவகையுடன் ஏற்றுக் கொள்கிறேன். .jar, .jad-க்கு MIME setting பண்ண வேண்டியிருக்கிறது. ஏறக்குறைய காசுக் கொடுத்து வலைத்தளம் வாங்கும் பிராசசில் உள்ளேன். அடுத்தவாரத்தில் ஒரு நல்ல செய்தி வரலாம். நீங்க முயற்சி பண்ணி பார்த்து கட்டாயம் சொல்லவேண்டும்.

மாயவரத்தான்,

//நல்லதாப்போச்சு...வர்ற ஜூன் 5-ம் தேதி நீங்க ப்ரீயா? எங்கே வந்து செல் போனை பெற்றுக் கொள்ளலாம்?!//
(வடிவேலு சொல்கிற மாதிரி) ஆஹா... தெரியாமத்தனமா வாயை விட்டு மாட்டிக்கிட்டேன். வந்துட்டான்யா வந்துட்டான்யா...

ஹி ஹி... நான் ஜூன் 5 ப்ரீயா இல்லையே ஹி ஹி...

எல்.எல்.தாஸூ,

Technolgy improved so much, you know ';-). ஆமாம் நீங்கள் பார்த்திருப்பீர்களே. சிங்கப்பூரில் செல் எவ்வளவு முக்கியமென. கட்டாயம் ஒன்றை வாங்கிக் கொள்ளுங்கள்.
 
வணக்கம் விஜய்,
இன்று
http://mobile.halwacity.com
மூலம் என்னுடைய கைத்தொலைபேசியிலிருந்தே (Nokia 6610) GPRS உதவியுடன் மிக சுலபமாக புதுமைப்பித்தன் சிறுகதைகள் இறக்கமுடிந்தது.

இங்கு நீங்கள் போட்டிருப்பதைவிட வெகுஅழகான தமிழில் படிக்கமுடிகிறது, நன்றி.

நல்ல முயற்சி, வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.

கைத்தொலைபேசி போன்ற உபகரணங்களுக்கு கதையை விட கவிதை/ஹைகூ வடிவம் இன்னும் சிறப்பாக இருக்கும். சில நல்ல கவிதைகளை இடுங்கள்:)
 
எனது LG ரக பேசியிலும் தெளிவாக தெரிகிறது. புதுமை என்ற தொகுப்பை இறக்கி பார்த்தேன். வாழ்த்துக்கள். அன்பு சொன்னது போல சின்ன கவிதைகள் இடுங்கள்.
 
நன்றி அன்பு, சயந்தன்.

சீக்கிரமே நிறைய விசயங்கள் உங்கள் கைத்தொலைபேசியில் வரலாம். உங்களிடமும் சப்போஸ் GPRS இருந்தால் சப்போஸ் ஜாவா இருந்தால் சப்போஸ் இந்த http://mobile.halwacity.com -ஐ முயற்சி செய்துப் பாருங்களேன்.
 
//இங்கு நீங்கள் போட்டிருப்பதைவிட வெகுஅழகான தமிழில் படிக்கமுடிகிறது//

அடேங்கப்பா.. ஆச்சரியமாயிருக்கே.. இவரு போட்டிருப்பதை விட வெகு அழகான தமிழிலா?! ஓ.. இவரு கொஞ்சம் ஆங்கிலம் கலப்பா எழுதுவாரு.. அதான் குடிதாங்கிகளுக்கு பயந்து அதுவே மாத்திகிடுச்சி போல! அப்படியிருந்தாலும் அது புதுமைப்பித்தன் தமிழாச்சே!
 
எப்படி மாயவரத்தான் இப்படியெல்லாம்? :-) இந்த கிண்டல் உங்க கூடவே பிறந்ததா... இல்லை வளரும் போது கடவுள் கிண்டல் வரம் கொடுத்தாரா? எப்படிங்க இப்படி?
 
மயவரத்தான் அண்ணே, ராமதாஸ் தொண்டர் படையில சேர்ந்துகிட்டீங்களா என்ன? அவர் அழகான தமிழ் என்று சொன்னது தமிழ் எழுத்துருவை. நம்ம தமிழை அழகான தமிழ்ன்னு யாருமே சொல்லமாட்டாங்க :-))))))))
 
விஜய்,
அருமை. மின்னஞ்சலில் ஏற்கனவே சொன்னபடி
http://www.halwacity.com/jar/puthumai.jad -ல் இருந்து எனது சாம்சங்E-700 செல்பேசிக்கு இறக்கினேன். தமிழ் எழுத்துக்குக்கள் அழகாய்த்தான் இருக்கின்றன. கீ, சி போன்ற எழுத்துக்கள் மட்டும் கொஞ்சம் (கொஞ்சம்தான்) வித்தியாசமாய்த் தெரிகின்றன. மிக அருமை.

WAP மூலம் http://mobile.halwacity.com பார்த்தேன். மோகினித்தீவு இறக்கியிருக்கிறேன். ஒரு சுவாரசியமான விஷயம், இப்புத்தகங்களை நான் முதன்முதலாய் செல்பேசியின் மூலமாகத்தான் படிக்கப்போகிறேன். இதுவரை இதைப் படித்ததில்லை.

நீங்கள் முதலில் கொடுத்த jar கோப்புகள் எனக்கு வேலைசெய்யவில்லை, பின்னால் கொடுத்த jad கோப்புகள்தாம் செல்பேசிநூலைப் படிக்க உதவின.

நீங்கள் இந்த jad கோப்புகளின் முகவரிகளைக் குறிப்பிட்டு புதிதாய் ஒரு பதிவு எழுதினால் நல்லது எனத் தோன்றுகிறது.
 
நன்றி முத்து.

ஆம் கொம்பு எழுத்துக்கள் கொஞ்சம் ஓட்டு பிரிந்து தான் தெரிகிறது. 'கீ' இந்த மாதிரி சுழி கொம்பெழுத்து அதை விட கொடுமை. காலப்போக்கில் இதை சரி செய்து விடலாம். மொத்தத்தில் முதலில் சிறு தடங்கல் இருந்தாலும் பழகிவிட்டால் தடங்கல் இல்லாமல் படிக்கலாம் என்பது என் அபிப்ராயம்.

கொஞ்சம் பொறுங்கள். ஒரு வடிவத்துக்கு இதை கொண்டு வந்த பிறகு விரிவாக எழுதுகிறேன்.
 
எனக்கும் வடிவாக வேலைசெய்கிறது... (கொம்புப் பிரச்கனையை தவிர...) மற்றது தெளிவாகவும் தெரிகிறது...
 
மிக்க நன்றி நோநோ. கொஞ்சம் பொறுத்துக் கொள்ளுங்கள். இன்னும் நிறைய வசதிகளுடன் கூடிய விரைவில்....
 

உங்கள் கருத்துக்களை இட


<< திரும்ப முன் பக்கத்துக்கு போ

This page is powered by Blogger. Isn't yours? தமிழ் அசைபட இணையச் செயலி தமிழ் விக்கிபீடியா

-->