<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d9439067\x26blogName\x3d%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81!!!!!\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLACK\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://halwacity.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://halwacity.blogspot.com/\x26vt\x3d-1566162084738285005', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script> <!-- Remove below comment line to show the content. Added for meta redirection --> <!--

போட்டுத் தாக்கு!!!!!

எள்ளோடு எலி புழுக்கையும் எண்ணைக்காக காயுதாம்

-ல் போட்டுத் தாக்கியது

அந்நியன் - திரைவிமர்சனம்

Difficulty in reading this post due to font issues? Click here for a PDF copy. Works best if you right-click the link and select 'Save target as...'
இந்த பதிவை போட்டுத் தாக்கியவர் : Vijayakumar
அந்நியனின் விமர்சனத்துக்கு போகும் முன் சிறிது ஆலாபனை. அந்நியன் கரூட புராணத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட புரூடா புராணம்.கரூட புராணமே ஒரு புரூட எனப்படும் போது அப்பட்டமான புரூடாக்களை எப்படி எடுத்துக் கொள்வது. அந்நியனின் தாமதத்துக்கு சந்திரமுகி ஒரு காரணமா? நிச்சயம் சந்திரமுகி தான் காரணம். பின்னே ரெண்டுமே ஒரே அடிப்படையில் எடுக்கப்பட்டால்? சந்திரமுகி ஸ்பிலிட் பெர்சனாலிட்டி டிஸ் ஆர்டர் என்றால் அந்நியன் மல்டிபிள் பெர்சனாலிட்டி டிஸ் ஆர்டர். ஆக மொத்தம் இரண்டு படத்தையும் பார்த்தவர்கள் மல்டிபிள் ஸ்பிலிட் பெர்சானாலிட்டியாகி முழு மெண்டலாகி வெளியே வருவது நிச்சயம். அந்நியன் இடைவேளை வரை பார்த்த எரிச்சலில் உட்கார்ந்திருந்த போது, ஆயுத எழுத்து பாடலை ஒலிபரப்பிக் கொண்டிருந்தார்கள். "இது என்ன படம்?" என நண்பர்கள் கேட்டதும் நான் டக்கென்று "பாய்ஸ்" என்றேன். அவர்கள் நம்பாமல் "ஹலோ பாய்ஸ் பாட்டு எங்களுக்கு தெரியாதா?" என்றதும் "சொன்ன கேட்டுக்கனும். எதுக்கெடுத்தாலும் ஆர்கியூவ்மெண்ட்" என்று ஓங்கிக் கத்திவிட்டேன். உண்மையில் இந்த மாதிரி படம் பார்த்து எனக்கு எத்தனை பெர்சானலிட்டி டிஸ் ஆர்டர் இருக்கிறது என தெரியவில்லை.

Image hosted by Photobucket.com

சரி இப்போது சாரீர சுத்தமாக கதை சுருக்கத்துக்கு போவோம். திருவல்லிக்கேணியில் காலை எழுந்தவுடன் சந்தியாவதனம் பண்ணிவிட்டு பஜனைக்கு போகும் குடுமி வைத்த வக்கீல் இராமனுஜ அய்யங்கார் என்ற அம்பி. இவருக்கு நாட்டில் எதுவுமே சரியில்லை என்ற சதா கவலை. ரோட்டுல யாரும் டிராபிக்ஸ் ரூல்ஸ் ஃபாலோ பண்றதுல்லை, அடிப்பட்டவனை யாரும் ஆஸ்பத்திரிக்கு தூக்கிட்டுப் போறதில்லை, வாங்குற கன்ஸ்யூமர் ப்ராடக்ட்ல குவாலிட்டி இல்ல இதை பத்தி சதா கவலை. தொப்புக்கடீரென்று வானத்திலிருந்து குதித்த மாதிரி படம் ஆரம்பித்தவிட்டது என்ற பிரஞ்ஞையில் கதாநாயகன்(அம்பி) நாட்டில் நடக்கும் அநியாங்களை அப்போது தான் பிறந்த குழந்தை மாதிரி வியந்து பதறி சதா கவலைப்படுகிறார். நாட்டில் யாருக்கும் பொறுப்பில்லை, யாருக்கும் மனிதாபிமானமில்லை என்று சதா கவலைப்படும் அய்யங்காருக்கு சதா 'சதா'வை(கதாநாயகி) பற்றிய நினைப்பு தான்.

'ரூல்ஸ்'ராமானுஜத்துக்கு கம்ப்ளெயிண்டும் பெட்டிஷனும் எழுதிப்போட்டு அதில் இழைக்கப்படும் அநீதிகளால் ஓயாத மன உளைச்சல். 'அந்நியன் அவதரித்து விட்டான்' என்ற லெட்டரை 10 பேருக்கு அனுப்பினால் நினைத்தது நடக்குமென சொல்லி ஒரு போஸ்ட் கார்ட் வருகிறது. அதில் www.anniyan.com என்ற வலைத்தள முகவரியும் கிடைக்கிறது. சதா மன உளைச்சலால் உழலும் அய்யங்கார் ஒரு நாள் அந்த வலைத்தளத்துக்கு போய் பார்க்கிறார். அதில் தவறு செய்பவர்கள் யாவரும் அந்நியனால் முறையே தண்டிக்கப்படுவார்கள் என்று பயங்கர பயமுறுத்தும் க்ராபிக்ஸ்ஸில் காண்பிக்கிறார்கள். அடிப்பட்டவருக்கு அய்யங்காருடன் உதவ மறுத்த கார் ஓனர் ஒருவரின் பெயரை அந்த வலைத்தளத்தில் வண்டி முதல் கொண்ட விவரங்களுடன் வலைத்தளத்தில் உள்ளீடுகிறான். அன்று இரவே தலைவிரி கோலத்தில் தன்னை 'அந்நியன்' என்று சொல்லிக்கொண்டு கோடூர முகத்துடன் அம்பியின் உருவத்தையொத்த ஒருவனால் எருமைமாடுகளை விட்டே பணக்கார கார் ஓனரை கொத்து பரோட்டா போடப்பட்டு சமஸ்கிருதத்தில் ஒரு வார்த்தையை தமிழில் இரத்ததால் எழுதிவிட்டு போய் விடுகிறான்.

இப்படியாக அம்பி இரயிலில் பயணம் செய்தால் அதுவரை அம்பி இரயிலேயே பயணம் செய்யாத மாதிரி பேன் சுத்தவில்லை, கொடுக்கும் சாப்பாடு சரியில்லை, டாய்லெட் சுத்தமாக இல்லை என சதா கம்ப்ளெயிண்ட் செய்துக் கொண்டே இருக்கிறார். கூடிய விரைவில் இரயிலுக்கு உணவு சப்ளை பண்ணும் ஏஜண்ட் அந்நியனால் எண்ணைக் கொப்பரையில் மசாலா தடவி பொறித்தெடுக்கப்படுகிறான். இதை துப்பறிபவர்கள் போலீஸ் டி.ஜி.பி பிரகாஷ்ராஜீம், விவேக்கும். அதில் விவேக் அம்பியின் இணை பிரியா நண்பர் வேறு. குவாலிட்டியான ப்ரேக் வயரை உற்பத்தி செய்யவில்லை என பேக்டரி முதலாளியை அட்டையை உடம்பு முழுக்க விட்டு இரத்தத்தை உறிஞ்சச் செய்து சாகடிக்கிறான் அந்நியன். துப்பறியும் சிங்கம் பிரகாஷ்ராஜ் அம்பியின் உதவியுடனே ஒருவன் கொல்லப்படும் போது எழுதியிருக்கும் சமஸ்கிருத தமிழ் வார்த்தைக்கு அர்த்தம் தேடுகிறார். அம்பி அவரின் சமஸ்கிருத அறிவால் அவையெல்லாம் தப்பு பண்றவாளை நரகத்தில் கொடுக்கப்படும் தண்டனைகளின் பெயர் எனக்கூறி கரூட புராணம் என்ற சமஸ்கிருத புத்தகத்திலிருந்து தண்டனை முறைகளை காண்பிக்கிறார். அந்நியன் அந்த கரூட புராணத்தில் சொல்லப்படும் தண்டனை முறைப்படியே(மாடு விட்டுக் கொல்வது,எண்ணையில் பொரித்தெடுப்பது...) தப்பு செய்கிறவர்களை கொல்கிறான் என கண்டுபிடிக்கிறார் துப்பறியும் சிங்கம்.

Image hosted by Photobucket.com

இதற்கிடையில் சதாவின் மீதான காதலை அம்மாஞ்சியாக அசட்டுத்தனமாக ரூல்ஸ் பேசி காதலை வெளிப்படுத்தும் அம்பியை தனக்கு பிடிக்கவில்லை என வெறுத்து ஒதுக்குகிறாள். அவள் மார்டனை விரும்புகிறாள் என அம்பி அறிந்துக் கொண்டு ரெமோ எனும் மார்டன் பையனாக உருவெடுக்கிறார். இவர்கள் லவ்ஸ் ஒருபக்கம் இப்படியே போக நிலம் வாங்குவது விசயமாக 'சதா' அண்டர்வேல்யூ போட்டு நிலத்தை வாங்கவும், லஞ்சம் கொடுக்கவும் துணியும் போது அந்நியனான அம்பி அவள் மீது கொலை வெறிக் கொள்கிறான். இங்கு தான் நாயகி சதா அம்பியின் மல்டிப்பிள் பெர்சானாலிட்டியின் முழு அவதாரத்தையும் உணருகிறாள்.

மனோதத்துவ டாக்டர் நாசரிடம் அம்பியும், சதாவும் ஆலோசனைக்கு போக நாசர் அம்பியிடம் இருக்கும் மல்டிப்பிள் பெர்சனாலிட்டியின் முடிச்சை அவிழ்க்க முயல்கிறார். இந்த இடத்தில் ப்ளாஷ் பேக். அம்பி 10 வயதாக இருக்கும் போது அரசாங்கத்தின் மெத்தனத்தால் அவனது தங்கையை மழையால் அறுந்து விழுந்த மின்சாரகம்பியில் பலிக் கொடுக்கிறார். அம்பியின் தந்தை எவ்வளவு போராடியும் அரசாங்க ஊழியர்களின் மெத்தனத்தை அவரால் நிரூபிக்க முடியாமல் தத்தளிக்கும் போது, அநியாயம் செய்கிறவனை கொல்ல வேண்டும் என்பது பசுமரத்தாணிப் போல சிறுவன் அம்பியின் மனதில் பதிய, பெரியவனானது அந்த மன அழுத்தத்தால் அநியாயம் அக்கிரமம், கருணையின்மை நிகழும் போது அதையெல்லாம் அழிக்கும் வல்லவனாக தன்னை உருவகப்படுத்திக் கொண்டு இன்னொரு பெர்சனாலிட்டியாக மாறுகிறான். இப்படியாக அம்பி->ரெமோ->அந்நியன் என்ற மூன்று பெர்சனாலிட்டிகளுக்கிடையில் படும் அவதியாக விக்ரம் மாறி நம்மை அவஸ்தைக்கு உள்ளாக்கியிருக்கிறார்.

இதற்கிடையில் நேரு அரங்கத்தில் அந்நியன் தோன்றப்போவதாக சொல்லி மக்களுக்கு ஓப்பன் இன்விடேஷன் கொடுத்து வரவழைத்து சிங்கப்பூரை உதாரணத்துக்கு காட்டுகிறார். 25 வருடத்தில் உயர்ந்த சிங்கப்பூரை பாருங்கள் என்கிறார். ஜப்பானை பாருங்கள் என்கிறார். தைவானை பாருங்கள் என்கிறார். மொத்தத்தில் கிழக்காசிய நாடுகளைப் பாருங்கள் என்று சொல்லி அந்த நாடுகளைப் பற்றிய படம் போட்டு மக்களுக்கு காண்பிக்கிறார். இந்தியா எல்லா வளமும் இருந்தும் ஏன் உயரமுடியவில்லை என்று மக்களை நோக்கி கேட்கிறார். மக்கள் கேள்விகளுக்கு பொறுமையாக அந்நியன் கெட் அப்பில் இருக்கும் அம்பி பதில் சொல்கிறான். ஆனால் போலீஸ் அதுவரை தூங்கிக் கொண்டிருக்கிறது. அவர் கிளம்பும் நேரத்தில் சுற்றி வளைக்க நினைத்து கோட்டை விடுகிறார்கள்.

இப்படியாக அம்பி->ரெமோ->அந்நியன் பெர்சானாலிட்டிகளால் நேரும் கொடுமைகளை கூறி, போலீஸ் அதற்கு என்ன செய்தது என கூறி, கோர்ட் அவரை வைத்தியம் பார்க்க அனுப்பி வைத்து எப்படி திரும்பி வருகிறார் என்பதை காண்பிக்கிறார்கள். கடைசியில் ஆங்கிலப்படங்களில் காண்பிக்கப்படுவது போல கதாநாயகன் முற்றிலும் இந்த மனச்சிதைவிலிருந்து குணமானாலும் ஒரு கொலை செய்து அந்நியன் இன்னும் இருக்கிறான் என்றுச் சொல்லி படத்தை முடிக்கிறார்கள்.

கொஞ்சம் அலசல்:

மொத்தத்தில் விக்ரமை பாழடித்திருக்கிறார்கள். இந்த பலவேசம் கட்டுபவர்கள் சாபக்கேடோ என்னமோ போட்டோ ஸ்டில்களில் மட்டும் அவர்கள் கலக்கலாக இருக்கிறார்கள். ஆனால் படத்தில் அப்படி இருப்பதில்லை. பலப்பல கெட்-அப்களில் விக்ரம் ஜொலித்தாலும் எதுவும் மனதில் பசையாக ஓட்டவில்லை. ஸ்டில்களில் பார்த்த விக்ரமின் பல கெட்-அப்களும் பாடலில் மட்டும் தான் வரும் என்பதை ஏமாற்றவில்லை. பொதுவாக சங்கர் படங்களின் பாடல்களில் ஒரு பிரமாண்டமும் க்ராபிக்ஸ் குப்பைகளும் இருந்தாலும் சில பாடல்களின் காட்சி அமைப்பு நச்சென்று இருக்கும். இதில் எல்லா பாடல்களும் வழவழ கொழகொழ டைப்பாக இருக்கிறது. "ஓ சுகுமாரி" பாடலில் ரோஜாப்பூக்களை கண்ணுக்கெட்டிய தூரம் வரை க்ராபிக்ஸ் செய்து இயற்கை தன்மையை இழந்திருந்தது. சில ஷாட்கள் கண்ணுக்கு விருந்தளித்தாலும் பல ஷாட்கள் வெறுப்பைத்தான் தருகிறது.

அது போல் புதுமையென அமெரிக்கா டைப் வீடுகளை காண்பித்து வாசலில் கோலமிடுவது,பாலத்திற்கு பல வண்ண கலர் பூசுவது,லாரிகளில் கார்டூன் செய்து விடுவது என சில காட்சிகள் பாடல்களில் கண்ணுக்கு விருந்தளிக்கின்றன. "அய்யாங்கர் வீட்டு நிலவே..." பாடல் சுத்த ஏமாற்றம் திருவையாறு சங்கீத கச்சேரியை பிடித்திருந்தார்கள். அது ஓகே. அதற்கு பிறகு வரும் டி.ராஜேந்தர் டைப் செட்டுகள் சகிக்கவில்லை.

Image hosted by Photobucket.com

இன்னொரு ஏமாற்றம் "காதல் யானை வருகிறது ரெமோ" பாடல்.பேஷன் ஷோ என்ற பெயரில் விக்ரமின் முடியை அப்படி இப்படி செய்து முழுப்பாடலையும் ஏமாற்றியிருந்தார்கள்.

"கண்ணும் கண்ணும் நோக்கியா" பாடலின் விசுவல் ஒகே டைப். ஆனால் ஒரே இடத்தில் பாட்டு முழுவதையும் எடுத்து முடித்திருந்தார்கள். இடம் என்னமோ மலேசியா பெட்ரோனக்ஸ் டவர் மாதிரி எனக்கு தோன்றியது.

விக்ரமின் நடிப்பைப் பற்றி சொல்வதற்கு அதிகம் ஒன்றுமில்லை. அம்மாஞ்சி அம்பியாக ஐய்யங்கார் குடுமியுடன் அவர் செய்யும் நடிப்பு பார்க்க சகிக்கவில்லை. ரெமோ பெர்சனாலிட்டியிலும் இயற்கைத்தன்மையை இழந்து அவர் நடிப்பு காட்சியளிக்கிறது. அந்நியன் பெர்சனாலிட்டியில் நடிப்பு ஓகே ஏனென்றால் அமைக்கப்பட்ட விசுவல் அப்படி. கடைசியில் போலீஸ் ஸ்டேசனில் அம்பியின் பெர்சனாலிட்டியும், அந்நியனின் பெர்சனாலிட்டியும் ஒரே நேரத்தில் மாறி மாறி வரும் காட்சியிலும், சதாவை கொல்ல துணியும் போது ரெமோவின் பெர்சனாலிட்டியும் அந்நியனின் பெர்சனாலிட்டியும் மாறி வரும் இடங்களில் விக்ரமின் நடிப்பு பிடித்திருந்தது.ஆனாலும் சந்திரமுகியி ஜோதிகா நடிப்புக்கு ஈடாகுமா?

சதா. கதநாயகிகளைப் பற்றி தெரியாதா? நாயகனுடன் ஆடவும் பாடவும் ஓடவும் மட்டுமே. என்ன கொடுமையோ சதாவுக்கென்றே கதாநாயகன்கள் யாவரும் ஓட்டைப் பிரித்து தான் குதிக்கிறார்கள்.

முக்கியமாக சொல்லப்படவேண்டியது பீட்டர் ஹெய்ன்ஸின் சண்டைக்காட்சி அமைப்பு. சில இடங்களில் மிகச் சாதரணமாக இருந்தாலும் பல இடங்களில் சபாஷ் வாங்குகிறார். அதுவும் பல கேமிரா கோணங்களை வைத்து எடுத்த குங்பூ பைட் சீக்வென்ஸ் அட்டகாசமாக வந்திருக்கிறது. ஆனால் அந்த புதுமைகளை மேட்ரிக்ஸ் ஹாலிவுட்டிலும், பாய்ஸ் பாடலிலும் பார்த்துவிட்டதால் அந்த புதுமை கொஞ்சம் புளிக்கிறது.

விவேக்கின் காமெடி ஆங்காங்கே சிரிக்க வைக்கிறது. கதாநாயகனுக்கு காதலிக்க ஐடியா கொடுக்கும் அதே புளித்து வெறுத்துப் போன சமாச்சாரங்களை இந்த படத்திலும் செய்கிறார் நம்ம காமெடியன்.

பல கோடிகளை கொட்டி கிராபிக்ஸ்,பிரமாண்டம் என்ற குப்பைகளை தருவதில் வல்லவர் சங்கர்.சங்கரின் அந்நியன் படமும் இதில் தப்பவில்லை. சமுதாய பிரச்சனை, நாட்டிலுள்ள பிரச்சனை என்பதை கருப்பொருளாக எடுத்துக்கொண்டு தீர்வு தருகிறேன் என்ற பெயரில் கதையை கொலை செய்வதில் வல்லவர் சங்கர். பிரச்சனைகளை ஆழமாக சொல்லாமலும் படம் பார்ப்பவர்களுக்கு பிரச்சனைகளைப் புரிய வைக்க முடியாமலும் பிரமாண்டத்தையும், கிராபிக்ஸையும் துணைக்கழைத்துக் கொள்வார் இயக்குநர் சங்கர். மேற்கத்திய பாதிப்பால் மேற்கத்திய படங்களின் சாயலை போட்டோ காப்பியடிக்க அந்நியன் வரை முயன்றும் தோற்றுப் போய்க்கொண்டிருக்கிறார்.

இடைவேளை வரை பாட்டென்றும், விக்ரமின் அச்சுபிச்சென்ற அலுப்பு நடிப்புமாக நெளியவைக்கிறது. இடைவேளைக்கு அப்புறம் கொஞ்சம் உட்கார்ந்துப் பார்க்கலாம்.

சங்கர் பிரமாண்டம் என்பதை கைவிட்டு விட்டு அவர் தயாரித்த 'காதல்' போன்ற நல்ல படங்களை தயாரிக்க முடிவு செய்யலாம். ஜாங்கிரியாக ஜெண்டில்மென்,இந்தியன் போன்றவற்றில் சொன்ன பிரச்சனையையே திருப்பி திருப்பி வேறுவிதமாக சொல்வதால் இந்தியாவை பீடித்த பிரச்சனைகளை அவர் படம் அலசி ஆராய்கிறது எனறாகிவிடுமா? கோடி கோடியாக கொட்டினாலும் சுவையான ஆரோக்கியமான பதார்த்தமாக இருந்தால் சாப்பிடலாம். சுவையிருந்து பாஸ்ட்புட் கணக்காக ஸ்லோபாய்சனாக இருந்தால் அதை ஏற்றுக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லவே இல்லை.

இந்த பதிவின் வாக்கு எண்ணிக்கை: . பக்கத்திலுள்ள ஸ்டாரை மவுசால் போட்டுத் தாக்கினால் எனக்கு மவுசு ஏறும். நன்றி:-)

உங்கள் கருத்துக்களை இட

திருப்பி தாக்கியவர்கள்:
இரண்டாவது ஆட்டம் பார்த்துவிட்டு வந்து சுட சுட விமர்சனம் போல...

நல்லவேளை இரண்டாவது ஆட்டத்துக்கு பசங்க கூப்பிட்டாங்க.... நான் தான் தமிழ்மணத்தில கொஞ்சம் வேலை இருக்குனு போகலை....

//ஆக மொத்தம் இரண்டு படத்தையும் பார்த்தவர்கள் மல்டிபிள் ஸ்பிலிட் பெர்சானாலிட்டியாகி முழு மெண்டலாகி வெளியே வருவது நிச்சயம். //
நம்ம பசங்க படம் பார்த்துட்டு வந்து
இரண்டு மணி நேரம் ஆகின்றது... ஒருத்தவன் முகத்திலும் ஈயாடவில்லை....

இப்போ புரியுது ராசா அது ஏன்னு...

கொயலி நீ ஜஸ்ட்ல எஸ்கேப் ஆயிட்ட ம்....
 
ஹலோ கொயலி. நான் தான் இரண்டாம் ஆட்டம் பார்த்துட்டுவந்துட்டு இராத்திரி 3 மணிக்கு பேய் மாதிரி உட்கார்ந்து அந்நியன் புகழ் பரப்புறேன். நீங்க என்ன பண்றீங்க?. தூங்குங்கப்பா...
 
சூப்பர் :D)
 
அண்ணே, கவுத்திட்டீயளே..

படத்தில இத்த்னை ஓட்டையா...?? பூந்தி கரண்டி ( ஜாரணி) மாதி இல்ல இருக்கு.

என்னவோ போங்க.
 
மக்களே

யாரும் பயப்படவேனாம், நாம்ப அண்ணச்சி பத்தி நமக்கு தெரியும்ல, அவரு என்னடா ரொம்ப நாள ஒன்னுமே உருப்படியா யாரையும் திட்டலையே,எவனும் மாட்டமாடன்றானே, நயன் தாரா இடுப்பு, திருக்குறள்ல தமிழ் இல்ல, இந்த மாதிரியே எத்தன நாளைக்கு ஓட்டரது.. அப்படின்னு யோசிசுகிட்டே படத்துக்கு போயிருப்பாரு, அஙகவேற பூணூல், கருடபுராணம்,உச்சிகுடுமின்னு
போட்டு வேறுப்பேத்தீருப்பானுக அதான்,

நம்ம அண்ணன் யாரையாவது பாராட்டி இருக்காரா(இரானியான் மொழில அன்னியன் படத்த எடுத்திரு ந்த ஒருவேளை யோசிக்கலாம், நாம ஊருலதான் எல்லாரும் முட்டபயகலாச்சே)

விடுங்க அவரு சாதிபயகளை காட்டலைன்னு கோவம்,

விடுஙக அண்ணாசி ஷஙகரு பொதுமன்னிப்பு கேட்கனமுனு போரட்டத்த ஆரம்பிக்கவேண்டியதுட்தான்
 
அதுக்குள்ள பார்த்து, விமர்சனமும் எழுதி அசத்திட்டீங்க! 25+ கோ....டி ரூபாய்கள் செலவு செஞ்சு எடுத்ததுன்னு வேற சொல்றாங்க, ம்...!

எல்லா போட்டோவுலயும் Shankar's anniyan-ன்னு எழுதீருக்காங்க, படத்தையும் இங்கிலீசுலயே எடுத்திருக்கலாம் ;-))
 
அது சரி விஜய்.. விமர்சனம்னா முழு கதையையும் எழுதனுமா என்ன?

கதை சுருக்கத்தை எழுதாம 'கொஞ்சம் அலசல்' மட்டும் செய்திருந்தா போதாதா?

--
நவன் பகவதி
 
நீங்க சரியான ரஜனி பைத்தியம் அண்ணே. ரோமியோ சென்னதுசரிதான். திட்டித்தீர்கனுமெண்டே நினைச்சுக்கொண்டு அங்கபோயிபார்கிறது. இங்க எங்ககிட்டவந்து உங்களுக்கு படம் எப்படியிருந்ததோ அப்படியே போட்டுத்தாக்கிறது. திரைவிமர்சனமெண்டிரபெயரில முழுகதையும் சொன்ன அண்ணா உங்களுக்கு திரைவிமர்சனமெல்லாம் எழுத சரிவராது, உங்கதிரைவிமர்சனத்தை கேட்கிறதுக்கு நாங்கலேல்லாம் மடையங்களில்லை. எனிமேலயாவது வேற ஏதாவது பிரியேசனமா எழுதுங்கோ.
 
டேய், அய்யோ பாவம் டா சங்கரு.. 50 கோடி போட்டு படம் எடுத்த ஒரு 5 பைசா செலவில்லாம இப்படி படத்தை கவுதுறீங்க.. ஆனா, நம்ம மக்கள் எழுதுறது ஒன்னு, நடக்குறது ஒன்னு..

சினிமா-ங்குறது நீங்க எல்லாம் பறப்புறீங்களே அந்த இலக்கியம் இலக்கணம் வளர எடுக்குறதில்லை.. ஒரு பொழுதுபோக்கு அம்சம்.. இதே படத்தை ஆங்கிலத்தில் எடுத்தா பாத்துட்டு பாயிலே கவுந்து அடிச்சு படுத்துறுவீங்க.. என்னா நம்ம தமிழ் பயக எடுத்த இப்படி.. ஒரு எடுத்துகாட்டு சொல்லவா ? மாவீரன் படத்தில நம்ம சூப்பரு குதிரைகூட பேசவாரு.. அது என்னா எல்லாம் சொன்னீங்க.. அதே சுடுவர்ட் லிட் படத்தில் ஏட்டீ மர்பி பண்ணா ஆ-னு பாப்பங்க.. ஆமா தம்பி, நீ என்ன எந்த படம் தாம் நல்லாயிருக்குனு சொல்லியிருக்கே, 8:30 -யை தவிர..
 
என்னை திட்டித் திக்கிறதுனாலா மட்டும் தமிழ்ல வரும் எல்லா குப்பை படங்களும் நல்லா இருக்கிறது என ஆகி விடாது.ஆயிரம் கோடி செலவு செய்து குப்பைகளை எடுத்தாலும் அதுக்கு பெயர் குப்பை தான். தமிழில் மகேந்திரனுக்கும், பாலுமகேந்திராவுக்கும் அப்புறம் அரிய முத்தாக ஆங்கொன்றும் ஈங்கொன்றும் மென வரும் அரிய தமிழ்படங்களை பார்த்து பெருமூச்சி விடுபவன்.

சாதாரண ஹேண்டி ஹேமில் எடுக்கப்படும் ஈரானிய படங்கள் கூட தமிழில் வரும் இந்த குப்பை படங்கள் கால் தூசிக்கு ஈடு ஆகுமா? உங்கள் ரசனையை நினைத்தால் பாவமாகத் தான் இருக்கிறது.

என் பதிவுகளை முழுவதுமாக படித்து வருபவர்கள் அறிவார்கள் நான் எந்த மாதிரி சினிமாவை தமிழில் எதிர்பார்க்கிறேனென்று. ஆங்கில படங்களையும் அதிகம் விமர்சனம் செய்தது கிடையாது. அதுவும் குப்பை. அந்த குப்பையை பார்த்து கிளறும் இன்னொரு குப்பைகள் சங்கரின் படங்கள்.

என்னிடம் பணம் இருக்கிறது நல்ல சினிமா பார்க்க வேண்டும் என தேடல் இருக்கிறது. அதை தேடுவது என் இஷ்டம். சங்கர் 25 கோடி போட்டு படம் எடுத்தால் என்ன? என்னை மாதிரி பல லட்சம் பேர்கள் கொடுக்கும் டிக்கெட் காசுகள் இருக்கிறதே. ஒருவர் கொடுத்து படம் பார்க்கும் ஒவ்வொரு பைசாவும் 25 கோடிக்கு சமம். ஒவ்வொருவனுக்கு கேள்வி கேட்கும் உரிமை உள்ளது. 25 கோடிக்கு குப்பையை எடுத்தால் அவரே வைத்துக் கொள்ளட்டுமே. திரையரங்கு என்னும் பொதுமக்கள் கையில் ஏன் தீர்ப்புக்காக விடப்படுகிறது?

இஷ்டமிருந்தால் படிக்கவும். இது என் பதிவு. எதையும் சொல்ல எனக்கு முழு கருத்துச் சுதந்திரம் உள்ளது. குப்பைகளை சொன்னால் உங்களுக்கு வலிக்கிறது என்றால் போய்க் கொண்டே இருங்கள். நீங்கள் சொல்வதற்காக குப்பைகளை சினிமா என்று ஒத்துக் கொள்ள முடியாது. நீங்கள் என்ன சொன்னாலும் I don't care.

நல்ல சினிமாவிற்குரிய என் தேடல் தெரிய வேண்டுமென்றால் என் பதிவுகளை ஆதியிலிருந்து படித்து விட்டு பேசுங்கள். விதண்டாவாதம் பேசவேண்டாம்.
 
//தொப்புக்கடீரென்று வானத்திலிருந்து குதித்த மாதிரி படம் ஆரம்பித்தவிட்டது என்ற பிரஞ்ஞையில் கதாநாயகன்(அம்பி) நாட்டில் நடக்கும் அநியாங்களை அப்போது தான் பிறந்த குழந்தை மாதிரி வியந்து பதறி சதா கவலைப்படுகிறார். //

அசோகமித்திரன் மாதிரி திடீர்னு ஒரு 50 வருச டெவலப்மெண்ட் மட்டும் நினைப்புக்கு வந்து கவலை தொண்டைய அடைச்சிருச்சாக்கும்...

//இந்தியா எல்லா வளமும் இருந்தும் ஏன் உயரமுடியவில்லை என்று மக்களை நோக்கி கேட்கிறார்.//

ஏன் ஏன், எல்லாம் இந்த இடஒதுக்கீட்டாலதான் சிம்ப்பிளா சொல்லவேண்டியதுதானே!

சுதந்திரத்துக்கு அப்புறம்
மந்திரத்துல மாங்காய காய்க்கும்?

சங்கருக்கு மக்கள் விழிப்புணர்வடைவதிலோ, பாரிய மக்கள் சக்தியிலோ, அனைவருக்குமான முன்னேற்றம் பற்றிய கருத்தாக்கமோ அந்நியமானது; யாராவது ஒருத்தன் வானத்தில் இருந்து குதிச்சு வந்து ஒரு நாள் முதல்வரா, ஜென்டில்மேனா, இந்தியனா டக்குனு நாட்டக் காப்பாத்துற கார்ட்டூன் கேரக்டர்/ அவதார மகிமையை 50 கோடி ரூபா ஜிகினாத்தாள்ல தரதுதானே வழக்கம். அப்படியே இப்போதும்.

50 கோடி பணம் போட்டா கோடிக்கணக்கான பார்வையாளர்களின் 3 மணிநேரத்தை கால்ல போட்டு மிதிக்கலாமா? அய்யா அவரு பணம் போட்டிருக்காருங்க என்ற தர்மகர்த்தா மெண்டாலிட்டி நமக்கு போகல, அவங்களுக்கும் போகல.

//25 கோடிக்கு குப்பையை எடுத்தால் அவரே வைத்துக் கொள்ளட்டுமே. திரையரங்கு என்னும் பொதுமக்கள் கையில் ஏன் தீர்ப்புக்காக விடப்படுகிறது?//

அதானெ!

நன்றிகள் விஜய்.
 
தங்கமணி,

ஆக்கபூர்வமான கருத்துக்கு நன்றி.

//50 கோடி பணம் போட்டா கோடிக்கணக்கான பார்வையாளர்களின் 3 மணிநேரத்தை கால்ல போட்டு மிதிக்கலாமா? அய்யா அவரு பணம் போட்டிருக்காருங்க என்ற தர்மகர்த்தா மெண்டாலிட்டி நமக்கு போகல, அவங்களுக்கும் போகல.//

25 கோடியோ 50 கோடியோ... செலவு செய்த பைசாக்களின் கணக்கை சொன்னால் உடனே தரமான உலகச்சினிமா வரிசையில் சங்கரின் படத்தை வைக்க முடியுமா? சங்கர் தயாரித்து படம் படுத்துக்கொண்டால் என்ன செய்வது? என்று முகத்தை மூடிக் கொண்டு தயாரித்த பாலாஜி சக்தியின் 'காதல்' திரைப்படம் அந்நியனை விட 200% மேம்பட்டது.இந்த தர்மகத்தா மெண்டாலிட்டி பானை சோற்றுக்கு ஒரு சோறு பதமாக மேலே வந்த படத்தைக் கூட பார்க்காமால் அந்நியனுக்கு 'ஓ' போடும் பின்னூட்டத்திலேயிருந்து பார்க்கலாம். பின்னூட்டத்தில் படம் பார்க்கமலேயே அந்நியனுக்கு ஒத்து ஊதுபவர்கள் பாதி பேருக்கு திரையரங்கு சென்று காசு கொடுத்து படம் பார்க்கும் ஐடியாவே இருக்காது. சங்கர் படங்களில் நல்லப் படங்களைத் தேடினால் இப்போது என்ன எதிர்காலத்திலும் ஏமாற்றமே மிஞ்சுமென நினைக்கிறேன்.
 
//அது சரி பொது மக்கள் அந்நியனைப் பற்றி பத்திரிகை
ரிவி இதுகளுக்கு கருத்து சொல்லுற மாதிரி காட்சி
இருக்கா?//

ஏன் இல்லை? ஒரே டெம்ப்ளெட்டில் எடுக்கப்பட்ட படம் ஆகையால் அந்த மாதிரி கட்டாயம் உண்டு. அந்நியனால் ரோட்டில் டிராபிக் ஒழுங்கா போறது, யாரும் லஞ்சம் வாங்கல, போனில் ஒரு அந்நியனால் நாடே சுபிட்சமாக இருக்கிறது என்று சொல்கிறார், பத்திரிக்கைகள் அந்நியனை பேட்டி காண்கிறது, மக்கள்கூட்டம் அவரிடம் ஆட்டோகிராஃப் வாங்க அலைமோதுகிறார்கள் எல்லாமே இருக்கு.

அது தான் 25 கோடி போட்டு எடுத்த படமாச்சே. உலக தரம் வாய்ந்த படமாச்சே. நம்மாளுங்களுக்கு அதெல்லாம் இருந்தா தானே திருப்தி. எனக்கும் நாடே சுபிட்சமா இருக்கிறதா ஒரு திருப்தி படம் பார்த்துட்டு வந்த உடனே.
 
இங்கு பலர் சங்கர் 25 கோடியில் இப் படத்தை எடுத்ததாகச் சொல்கிறார்கள். ஆனால் உண்மையில் 25 கோடியில் இப் படத்தைத் தயாரித்தவர் ஆஸ்கார் ரவிச்சந்திரன். அவர் சங்கருக்கு 5 கோடி சம்பளம் கொடுத்துள்ளார். அதோடு ஏறத்தாழ 35 கோடிக்கு (10 கோடி இலாபம்) விநியோகிஸ்தர்களிடம் விற்று இலாபமும் பார்த்துவிட்டார். ஆக படம் ரசிக்கத் தக்கதாக இல்லாவிட்டால் முதலீடு செய்த சில விநியோகிஸ்தர்கள் நஷ்டப் படுவர். எத்தனை கோடி யார் கொட்டி எடுத்தாலும் யார் நஷ்டப் பட்டாலும், நுகர்வோரான நாங்கள் நாம் கொடுக்கும் விலைக்கு பெறுமதியாக இருந்தால் தான் செல்வழிக்கலாம் (அது எந்தப் பொருள் ஆனாலும் சரி). அப்படி காசு கொடுத்துப் பார்க்கும் நாம், அதன் தரம் பற்றி சக நுகர்வோருக்கு நம் கருத்தைச் சொல்ல உரிமையுண்டு.

சங்கரின் சம்பளம் பற்றிய இணைப்பு: http://thatstamil.indiainfo.com/specials/
cinema/specials/shankar2.html

அந்நியன் விலை பற்றிய இணைப்பு:http://thatstamil.indiainfo.com/
specials/cinema/specials/anniyan2.html
 
சங்கர் படங்களில் இருக்கும் இன்னொரு மோசமான ஆளுகை அவர் படைக்கும் கேரக்டர்களின் ஜாதீய குறியீடு தான். அவருடைய நிறைய படங்களில் பார்பணர்கள் மட்டுமே இந்தியாவின் பிரச்சனைகளை சந்திப்பது போலவும்(ஜெண்டில்மேன், இந்தியன், இப்போது அந்நியன்), பிரச்சனைகளை அழிக்க தோன்றும் அவதாரங்கள் ஒன்று பார்ப்பனர்களை போற்றி அவர்களின் வழக்கத்தை மேற்கொண்டவனாகவோ (ஜெண்டில்மேன்) அல்லது பார்ப்பனனாகவோ (அந்நியன்) மட்டுமாக தான் இருப்பார்கள்.அதுவும் அன்னியனில் சமஸ்கிருத ஸ்லோகங்களை சொல்லி அவதாரம் அக்கிரம காரர்களை கொல்கிறாராம்.

சோம்பேறியின் குறியீடாக காட்டப்படும் சார்லி அடித்தட்டு மக்களின் பிரச்சனைகளின் பிரதி பிம்பம். அவர் சோம்பேறியாக திரிகிறார் என்பதற்காக அந்நியன் அவரை கொல்கிறாராம்.சார்லி ஏன் அப்படியிருக்கிறார், அவர் சோம்பேறியாக இருக்க காரணம் என்ன என்று தெரியாமல் படத்தில் சொல்லாமல் அந்த கேரக்டரை அன்னியனால் சாகடிப்பது மாதிரி காண்பிக்கிறார். அது உண்மையில் சமூக அக்கறை மிக்க படமாக சங்கர் எடுக்கவில்லை. பிரமாண்டம் என்ற பெயரில் வாய் பிளந்து பார்க்கும் மக்களின் வாயில் அரிசி போடும் வேலை.

சாதீய குறியீடுகள் இல்லாமல் சங்கரால் எந்த பிரச்சனைகளையும் படத்தில் சொல்ல முடியாது. அவதாரங்கள் பார்பனனாக தோன்றாமல் ஒரு மனிதனாக, சாதீ குறியீடு இல்லாதவனாக காட்டவே முடியாது. இது அவர் தெரிந்தோ தெரியாமலோ கையாண்டாலும் விஷம். அவதாரங்களை படிக்காத மக்கள் தொழுவதற்கான உக்தி. அன்னியனை புகழ்ந்து பின்னூட்டமிட்ட நண்பர்களின் மழுங்கி போன மூளைகளை மேலும் மழுங்கச் செய்வதற்காக....
 
குவாலிட்டி இல்லாத பொருட்களை உற்பத்தி செய்பவனை நுகர்வோர்கள் கொல்லலாமென நியாயம் கற்பிக்கும் அன்புள்ள (மக்கள் மேல்,இந்தியா மேல் அக்கறையுள்ள)இயக்குநர் சங்கருக்கு,

இந்த மாதிரி மட்டரக ரசனையுள்ள சினிமாவை உற்பத்தி செய்யும் உங்களை என்ன செய்யலாம் என்று நீங்களே சொல்லுங்கள்.

இப்படிக்கு,
குடும்பத்துடன் படம் பார்க்கப் போய் ரூபாய் 250-ஐ அழுதுவிட்ட வந்த பாவப்பட்ட சினிமா நுகர்வோன்.
 
தல!!... இவ்ளோ ஸ்பீடா இருக்கீங்க.. ச்சே.. நான் நேத்து சாயதாரமே முதலாட்டமே பார்த்துட்டேன்... இங்க மழையில டெலிபோன் கட்டாகி.. பதிவு பக்கம் வர முடியல.. அதுக்குள்ள.. நீங்க முந்திகிட்டீங்க..

ஆனா ஷங்கர் இந்த வெறுப்பேத்துவாருன்னு நினைக்கவே இல்லீங்க .. :-(
 
அப்பாடா..நல்ல வேளை அந்நியன் பார்க்கலாம்னு இருந்தேன்..150 ரூபாய் இழப்புல இருந்து அல்வாசிட்டி நம்லே காப்பாத்திட்டார். தாங்ஸ்ப்பா!
 
அடப்பாவிகளா...நான் இப்பத்தான் சந்திரமுகியே பார்த்திருக்கேன் . அதுக்குள்ளே அடுத்த ரவுண்டு வந்துட்டீங்களே..

//எனக்கும் நாடே சுபிட்சமா இருக்கிறதா ஒரு திருப்தி படம் பார்த்துட்டு வந்த உடனே.// என்று கருத்து சொன்ன அன்பர் ?????? (அப்படித்தான் தெரியுது) கருத்தை ஆமோதிக்கிறேன் ..பலராலும் பாராட்டப்படுகிற மணிரத்னம் படங்களில் கூட இதனைக் காணாலாம் ..'ரோஜா'வில் கதாநாயகன் கொல்லப்பட்டிருந்தால் , (படம் ஓடியிருக்குமோ இல்லையோ) , உண்மை உணர்த்தப்பட்டிருக்கும் .

ரொம்ப நாள் கழிச்சு தியேட்டர்ல பாக்கலாம்னு இருந்த என் நினப்புல மண்ணையள்ளிப்போட்ட உங்களை........?
 
thanks for the review.i hope that no one will become an anniyan after seeing the film and do what anniyan did to others to shankar and sujatha.
 
அண்ணாச்சி,
நல்லா எழுதிருக்கீங்க. கோச்சுக்காதீங்க. ஆனா முழு படம் தியேட்டருக்கு போகாமலேயே பாத்த திருப்தி. :)

ஷங்கர்ட போய் வேறென்ன எதிர்ப்பார்க்க முடியும்? 5 நிமிஷம் மட்டுமே கதைக்கரு, மிச்ச நேரம் வெறும் அபத்த கிராபிக்ஸ், பிரம்மாண்டம். அந்த வகையில் அவரோட மிச்ச படங்களைவிட பாய்ஸ் எனக்கு தேவலேன்னு பட்டது.

தண்டனை கொடுக்கற காரணமும், செயல்படுத்தும் கொடூரமுறைகள் இதெல்லாம் Pitt, Freeman நடித்த "Seven" லேர்ந்து ஐடியா சுட்டமாதிரி தெரியுதே.

//அடப்பாவிகளா...நான் இப்பத்தான் சந்திரமுகியே பார்த்திருக்கேன் . அதுக்குள்ளே அடுத்த ரவுண்டு வந்துட்டீங்களே..//

தாஸண்ணே, உங்க நிலம தான் எனக்கும். இவங்கள்ளாம் கொடுத்துவெச்சவங்கோ! :(

--
இராமநாதன்
 
Dear Vijay

My review of this film is here.

http://groups.yahoo.com/group/Maraththadi/message/25962

I'll recommend the cinmea goers (not our intellectual reviewers) to go this in a theatre only just as an entertainment.

Rgds
Sa.Thirumalai
 
//சங்கர் படங்களில் நல்லப் படங்களைத் தேடினால் இப்போது என்ன எதிர்காலத்திலும் ஏமாற்றமே மிஞ்சுமென நினைக்கிறேன்//

எதிர்காலமென்ன.... கடந்த காலத்திலும் ஏமாற்றம் தான் மிஞ்சியது...

//சங்கர் படங்களில் இருக்கும் இன்னொரு மோசமான ஆளுகை அவர் படைக்கும் கேரக்டர்களின் ஜாதீய குறியீடு தான். //
//சாதீய குறியீடுகள் இல்லாமல் சங்கரால் எந்த பிரச்சனைகளையும் படத்தில் சொல்ல முடியாது. //

நானும் ஜென்டில்மேன் படம் பார்த்து கையை தட்டி பாராட்டிக்கொண்டு திரிந்தேன் ஜென்டில்மேன் வந்த புதிதில்....

இதே ஜென்டில்மேன் திரைப்படத்தை மீண்டும் குறுவட்டில் பார்த்தபோது தான் மற்ற அனைத்தும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் புரிந்தது....
 
குழலி.. அதே காண்ணோட்டத்தோடு தமிழ்குடிதாங்கியையும் பாருங்கள். எல்லாம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் புரியும்.

அப்புறம் மக்களே.... எனக்கு இன்னும் அந்நியனைப்பார்க்கும் பாக்கியம் கிட்டவில்லை. கண்டிப்பாக பார்க்கலாம் என்றிருக்கிறேன் இங்கே பின்னூட்டமிட்டு செல்பவர்களின் 'பிண்ணனி' காரணத்திற்காகவே.

அல்வாசிட்டி விஜயை குறை சொல்லி அர்த்தமில்லை. அவருக்கு பிடித்த விஷ்யங்களைப் பற்றியும், பிடிக்காத விஷயங்களைப் பற்றியும் பட்டியலிடவே இந்த வலைப்பூ. மற்றவர்களுக்கு பிடித்திருந்தால் அவரவர் பதிவில் போய் நல்லபடியாக எழுதிக் கொள்ளலாமே!

ஷங்கர் பிராமணர்களைப் பற்றி படம் எடுத்தால் எத்தனை பேருக்கு பொத்துக் கொண்டு வருகிறது? மற்ற ஜாதிக்காரர்கள் அவர்களது ஜாதிக்காரர்களைப் பற்றி எடுத்தாலோ, கதை, கட்டுரை வரைந்தாலோ உடனடியாக உச்சி குளிரும் இவர்களைப் பார்த்தால் சிரிப்பு தான் வருகிறது. (ஷன்கர் மேற்படி ஜாதியைச் சேர்ந்தவர் தானா என்பது எனக்கு தெரியாது!)


எல்லாவற்றிலும் ஜாதிய கண்ணோட்டத்தோடு பார்த்து அலைபவர்கள் யார் யார் என்பது நடுநிலையாளர்கள்க்கு நன்கு புரியும்.

//no one will become an anniyan after seeing the film and do what anniyan did to others to shankar and sujatha. //

இதற்கு என்ன அர்த்தம்?! தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரனையும் இந்த லிஸ்ட்டில் சேர்க்காததற்கு என்ன காரணமென்று விளக்க முடியுமா?!

எது எப்படியோ.. ஒன்று மட்டும் நிச்சயமாக தெரிகிறது.. 'அந்நியன்' நிச்சயமாக நன்றாக வசூலிக்கப்போகிறது.
 
AnionMass எ. அனோனிமாசு சொல்வதாவது:
|அல்வாசித்தி அன்பரே தாங்கள் முதலாவதாக இட்டிருக்கும் அந்நியன் விளம்பரப்படம். சோர்சு உலூகாசுவின் அண்மைய இச்தார் உவார்சு - இரிவஞ்சு ஆப்பு சித்து படத்தின் விளம்பரப்படத்தினையல்லவா நினைவூட்டுகிறது? என்னே விந்தை! இது தற்செயலாக நிகழ்வுற்றதோ அல்லது சங்கர் ஒற்றிக்கொண்டதோ?|
 
http://singaimurasu.blogspot.com/2005/06/blog-post_18.html

இந்தப்பதிவின் கருத்துப்பெட்டி திறக்கப்படவில்லை.... சற்று கவனியுங்கள் என்னவென்று
 
This comment has been removed by a blog administrator.
 
அடிக்கடி இடிக்கும் லாஜிக்கை ( இதுக்கு தமிழ்ல என்னது? ) மறந்து விட்டால்....படத்தை ஒரு வாட்டி கண்டிப்பாக பார்க்கலாம். படத்திலுள்ள பிரம்மாண்டத்திற்காகவும் மெனக்கெட்டிருப்பதற்காகவும்.

சுஜாதாவை விட்டு வெளி வர வேண்டிய நேரம் வந்து விட்டது ஷங்கருக்கு. அடுத்த படத்தில் அதைச் செய்யா விட்டால் மக்கள் ஷங்கரிடமிருந்து வெளியே வந்து விடுவார்கள்.
 
படத்தைப் பத்தி என் வலைப்பூவில் எழுதலாம்னு நெனச்சேன். அப்றம் எதுக்கு ஒரு பதிவை வீணாக்கனும்முன்னு விட்டுட்டேன்.

தெலுங்கு "அபரிச்சிதுடு" படம் பாத்துக்கிட்டு இருக்கும் போது அம்மணி கிட்ட இருந்து தொலைபேசி அழைப்பு

"என் கிட்ட கேக்காம எந்தப் படத்துக்கு போனீங்கன்னாலும் இப்புடித்தான்! அனுபவிங்க!" (சே! ஏற்கனவே இந்திப்படம் "வக்த்" படம் பாத்த வெறுப்புல இருந்தேன் இவ வேற)

"அபரிச்சிதுடு" பாத்ததுல ஒரே நன்மை, இடைவேளையில ரூ.15 குச்சி ஐஸை ரூ.20 க்கு வித்த தியேட்டர் கடைக்காரனிடம் "அபரிச்சிதுடு" சண்டை (ஹி..ஹி.. வாய்ச் சண்டைதான்) போட்டு ரூ.15க்கே வாங்கிச் சாப்பிட்டது தான்.

வாளுக ச்சங்கர். வாளுக அவர் படங்கள்!
 
//படத்திலுள்ள பிரம்மாண்டத்திற்காகவும் மெனக்கெட்டிருப்பதற்காகவும்//

எல்லாத்துக்கும் 25 கோடி பணம் தான் அந்நியன்ல தெரியுது போல?

25 கோடி நல்ல தான் இருக்கும். 25 கோடி தவிர்த்து படம் எப்படியிருக்கு சொல்லுங்கப்பா?

நன்றி ராகவன்.

கோபி, நீங்க சரியான 'அல்லூரி அல்லுடு' போல.

எல்லாருக்கும் ஒரு கேள்வி?

'அந்நியன் நமக்கு உணர்த்தும் நீதி என்ன?'

தமிழ் சினிமா நமக்கு என்னைக்கு நீதி சொல்லிச்சின்னு சொல்றீங்களா?:-)))))))

இன்னொரு கேள்வி.

DTS தியேட்டரில் பார்த்தால் தான் அந்நியன் படம் நல்லாயிருக்கும் என்றார்கள்.நான் பார்த்த தியேட்டரில் DTS உடைந்த பானையாக கேட்டது. இப்போ கேள்வி.

'அந்நியன் DTS தியேட்டரில் பார்த்தால் தான் நல்லா இருக்குமா?'
 
//குழலி.. அதே காண்ணோட்டத்தோடு தமிழ்குடிதாங்கியையும் பாருங்கள். எல்லாம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் புரியும்.
//

எல்லாம் புரிந்தது என்று தான் சொன்னேன் என்ன புரிந்தது என நீங்கள் எடுத்துக்கொண்டால் அதற்கு நான் பொறுப்பல்ல....

அதுவுமின்றி எதற்கெடுத்தாலும் சிலரால் தேவையின்றி விவாதத்தை திசை திருப்பும் போக்கு ஆரோக்கியமான மனப்பாண்மையாக என்னால் காணமுடியவில்லை... இந்த பதிவிற்கும் நடந்துகொண்டிருக்கும் விவாதத்திற்கும் சம்பந்தமில்லாமல் ஒருவரை இழுப்பது தேவையில்லாதது... அதற்குதான் மாற்றி மாற்றி நானும், மற்ற சிலரும் பதிவு போட்டுக்கொண்டிருக்கின்றோமே...
அங்கே வைத்துக்கொள்ளலாம்...

சிலர் கொஞ்சம் கொஞ்சமாக நிதானமிழப்பது எனக்கு நன்றாக புரிகின்றது....

தமிழ்மணத்தில் ஆளில்லாத மைதானத்தில் தமிழ்குடிதாங்கியை தாக்கி கோல் போட்ட காலம் மலையேறிவிட்டது என்ற எரிச்சல் போல என்ன செய்வது...
 
//மாயவரத்தான் : குழலி.. அதே காண்ணோட்டத்தோடு தமிழ்குடிதாங்கியையும் பாருங்கள். எல்லாம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் புரியும்.
//குழவி: எல்லாம் புரிந்தது என்று தான் சொன்னேன் என்ன புரிந்தது என நீங்கள் எடுத்துக்கொண்டால் அதற்கு நான் பொறுப்பல்ல.... //

யப்பா! என்னை பிரச்சனையப்பா உங்களுக்குள்ள. காவேரி பிரச்சனை தீர்ந்தாலும் தீர்ந்துரும் போல. உங்கப்பிரச்சனை தீர மாட்டாங்குதே. அடங்கு அடங்கு....
 
Shankar is Ambi - Shankar is Anniyan - He himself says.

http://www.newindpress.com/NewsItems.asp?ID=IEE20050620003656&Page=E&Title=Startrek&Topic=0

- Alex
 
படத்தின் கருத்தை விடுங்க....அதையெல்லாம் வெச்சி யார் படமெடுக்குறா?

பொழுது போக்கு என்கிற வகையில் மட்டும்தான் என்னால் இந்தப் படத்தை நினைக்க முடிகிறது.

சரக்கே இல்லாத ஒரு கதையைப் படமெடுக்க வேண்டுமானால் 25 கோடி தேவைதான்.

ஹாரிஸ் ஜெயராஜ்.....நீங்கள் செல்ல வேண்டிய தூரம் அதிகமோ அதிகம்.......

விவேக்.....சமீபத்தில் உங்களை இந்தப் படத்தில் மட்டும்தான் ரசிக்க முடிந்தது.

விக்ரம்......நீங்கள் சிவாஜி, கமலுக்கு வாரிசு என்றார்கள்....நம்புகிறேன்.

சுஜாதா......சொல்வதற்கு ஒன்றுமில்லை

பிரகாஷ்ராஜ்.....ஒன்றுமில்லாத பாத்திரத்திற்கு இவ்வளவு மெனக்கெட்டு நடித்திருக்கின்றீர்களே....விழலுக்கிறைத்த நீர்.

சதா.....வெங்காயச் சட்டினியோடு வரும் சாதா தோசை. சோதா தோசை அல்ல.

ஷங்கர்........பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்

அன்புடன்,
கோ.இராகவன்
 
நன்றி அலெக்ஸ்.

ஒவ்வொண்ணும் 'நச்'சுன்னு சொல்லியிருக்கீங்க ராகவன். நன்றி.
ஆமா,

//பிரகாஷ்ராஜ்.....ஒன்றுமில்லாத பாத்திரத்திற்கு இவ்வளவு மெனக்கெட்டு நடித்திருக்கின்றீர்களே....விழலுக்கிறைத்த நீர்.//

உண்மை உண்மை.ஆமா இவரு ஏன் வேஷம் போட்டுக்கிட்டே கொலை நடக்கிற இடத்துக்கெல்லாம் வாராரு. இவரு டி.ஜி.பி தானே.
 
//பிரகாஷ்ராஜ்.....ஒன்றுமில்லாத பாத்திரத்திற்கு இவ்வளவு மெனக்கெட்டு நடித்திருக்கின்றீர்களே....விழலுக்கிறைத்த நீர்.//

உண்மை உண்மை.ஆமா இவரு ஏன் வேஷம் போட்டுக்கிட்டே கொலை நடக்கிற இடத்துக்கெல்லாம் வாராரு. இவரு டி.ஜி.பி தானே.

விஜய்....அதுக்குதான் ஒரு வசனம் இருக்கே.....யூனிபார்ம்ல வந்த கொலையாளிங்க உஷாராயிடுவாங்களாம்... (யாரந்த உஷா? )

அந்தத் தெத்துப்பல்லோடு வந்து உதவி கேட்கும் காட்சியில் குரலும் நடித்திருக்கிறது.
 
//// விக்ரமின் நடிப்பு பிடித்திருந்தது.ஆனாலும் சந்திரமுகியி ஜோதிகா நடிப்புக்கு ஈடாகுமா? ////

விக்ரமின் நடிப்பை ஜோதிகா நடிப்புடன் ஒப்பிட்டது சரி.. ஜோதிகாவின் நடிப்புக்கு ஈடாகுமா என்ற கேள்வியுடன் விகரமுக்கே அல்வா கொடுத்திட்டிங்களே..

படத்தை புட்டு புட்டு வைச்சிட்டிங்க.. சபாஷ்.....
 

உங்கள் கருத்துக்களை இட


<< திரும்ப முன் பக்கத்துக்கு போ

This page is powered by Blogger. Isn't yours? தமிழ் அசைபட இணையச் செயலி தமிழ் விக்கிபீடியா

-->