<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d9439067\x26blogName\x3d%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81!!!!!\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLACK\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://halwacity.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://halwacity.blogspot.com/\x26vt\x3d-1566162084738285005', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe", messageHandlersFilter: gapi.iframes.CROSS_ORIGIN_IFRAMES_FILTER, messageHandlers: { 'blogger-ping': function() {} } }); } }); </script> <!-- Remove below comment line to show the content. Added for meta redirection --> <!--

போட்டுத் தாக்கு!!!!!

எள்ளோடு எலி புழுக்கையும் எண்ணைக்காக காயுதாம்

-ல் போட்டுத் தாக்கியது

ஆளை விடுங்க சாமி!

Difficulty in reading this post due to font issues? Click here for a PDF copy. Works best if you right-click the link and select 'Save target as...'
இந்த பதிவை போட்டுத் தாக்கியவர் : Vijayakumar
இந்த பதிவுடன் என்னுடைய நட்சத்திர சிறப்பு பதிவுகளை முடித்துக் கொள்கிறேன். மதி நட்சத்திர பதிவுக்கு என்னை கேட்டதும் கேட்ட நாள் முதல் நட்சத்திர நாள் வரை ஒரே குழப்பம் தான். சும்மா கிடந்த சங்கை இப்படி ஊதி வச்சிட்டாங்களே என்ற கவலை தான் மிஞ்சியதே தவிர எதை பற்றி எழுத என்ற குழப்பம். சுதந்திரமாக பதிவைப் போடும் போது மக்கள் படிக்கிறார்களோ இல்லையோ என் ஆத்ம திருப்திக்காக எதையாவது போட்டு தாக்குவது வழக்கம். நட்சத்திர வாரம் என கைகள் கட்டப்பட்ட பிறகு உருப்படியாக எதையாவது எழுதி தொலைக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டும் ஓடிக் கொண்டிருந்தது. சரி சினிமா சிறப்பு வாரமாக வைத்து விடலாமென கடந்த கால சினிமா சம்பந்தப்பட்ட முக்கியமாக சில உலக சினிமாக்களைப் பற்றியும், படத்தின் கருவோடு முக்கியமான தகவல்களையும் சேர்த்துக் கொடுத்தேன். இது நான் வழக்கமாக எழுதும் பாணியிலிருந்து கொஞ்சம் விடுபட்டு எழுதியது. எல்லா வகை ஆடியன்ஸ்களையும் என் பதிவு கட்டாயமாக திருப்தி செய்திருக்காது. மற்றவகளை தொடரும் முன்பு இன்றும் கொஞ்சம் பயனுள்ள தகவல்களை போட்டுத் தாக்கு விட்டு சிறப்பு பதிவுகளை முடித்து வைக்கிறேன்.

தமிழ்நாட்டில் ஆரம்பகால சினிமா - ஒரு சமூகவியல் நோக்கு

காலச்சுவடு இதழ் 16, டிசம்பர் 96-பிப்ரவரி 97 -ல் வெளியிடப்பட்ட ஸ்டீவன் ஹியூஸ் எழுதிய கட்டுரையின் தமிழாக்கத்தின் அடிப்படையாகக் கொண்டு சுருக்கமாக தமிழ்நாட்டில் ஆரம்பகால தமிழ்நாட்டு சினிமாவின் சமூகவியல் நோக்கு பற்றி துக்ளியூண்டு பதிவை முதலில் பார்க்கலாம்.

சென்னையில் சினிமா தோன்றி ஏறக்குறைய 75 ஆண்டுகளை கடந்து விட்டோம். சென்னையில் மௌன சகாப்தத்தில் தயாரிக்கப்பட்ட 50 தொடர்கதை படங்களும்,முப்பது செய்தி படங்களும் இன்று ஒன்று கூட இல்லை. அதுவுமில்லாமல் 1931 முதல் பேசும் தமிழ்படம் காளிதாஸூம் சரி, முதல் 6 வருடங்களில் தயாரிக்கப்பட்ட தமிழ் பேசும் படங்களும் முற்றிலும் அழிந்து விட்டன. இந்திய ஆரம்பகால திரைபடங்களை பற்றி அறிவதற்கு இருக்கும் ஒரே ஆதாரம் Report of the indian cinemato-graph committee,1927-28 என்ற ஆவணம் தான்.

சினிமா ஆரம்பகாலங்களில் அமெரிக்க படங்கள் நிறைய வரவேற்பைப் பெற்றிருந்தது.அதனால் அச்சம் கொண்ட பிரித்தானிய அரசு அமெரிக்க படங்கள் ஏற்படுத்தும் பாதிப்பை அறியவும், தணிக்கை முறைகள் பற்றி அறியவும்,பிரித்தானிய பேரரசிலும், இந்தியாவிலும் சினிமாவை ஊக்குவிப்பதற்கான வழிமுறைகள் பரிந்துரைப்பதற்காகவும் 1927-ல் சென்னை வழக்கஞறிகரான டி.ரங்கச்சாரி தலைமையில் ஒரு விசாரணைக் குழுவை அமைத்தது. அந்த குழு வெளியிட்ட ஆவணம் தான் மேல் சொன்னது.

1857-களில் எம்.எட்வர்டு என்ற அமெரிக்கர் சென்னை மாநகராட்சிக் கட்டிடத்திற்கு அடுத்த விக்டோரியா பொது அரங்கத்தில் முதன்முதலில் திரைப்படங்களை காட்டினார். 400-500 அடி நீளம் கொண்டு 10 நிமிடமே ஓடக்கூடிய தொகுக்கப்படாத நகைச்சுவை காட்சிகளோ, இயற்கை காட்சிகளையோ, பல்சுவை நிகழ்ச்சிகளையோ ஒன்றன் பின் ஒன்றாக 3 மணி நேரத்திற்கு காட்டியது. ரூ5, ரூ3, ரூ2 என்று நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்பட்டதால் பணம் படைத்தோருக்கும், வசதியானோருக்கும் மட்டுமேயான சினிமாவாக விளங்கியது. இது நகரம் நகரமாக நகர்ந்து சினிமாக்களை இந்தியாவில் காட்டப்பட்டு வந்தது.

1913-ஆம் ஆண்டு அளவிலேயே தான் முழுநீளத் திரைப்படங்கள் என்று காட்டப்பட்டது. அந்த திரைப்படங்கள் லண்டனிலிருந்து உரிமை வாங்கி சென்னையில் காட்டப்பட்டது. அதற்கு முன்பாக 1907-ல் எலெக்டிரிக் பயாஸ்கோப், லிரிக் தியேட்டர் என்ற இரு திரையரங்குகள் தோன்றின. இது மவுண்ட் ரோடின் வடகிழக்குப் பகுதியில் ஆங்கில கணவான்களும், சட்டைக்காரர்களும் (ஆங்கிலோ-இந்தியன்) அதிகமாக வாழ்ந்த பகுதியில் இருந்தது. அவற்றை முழுமையான திரையரங்குகள் என்றழைக்க முடியாது. அவற்றை மது,நடனம், குத்துச்சண்டை,பல்சுவை நிகழ்ச்சிகள் போன்றவற்றை திரைப்படங்களுடன் அவ்விடங்களை பயன்படுத்தியது. இவையும் விரைவில் மூடப்பட்டன. லிரிக் தியேட்டர் தீக்கிரையாயிற்று. எலெக்ட்ரிக் பயாஸ்கோப் அஞ்சல்நிலையம் கட்டுவதற்காக அரசால் கையகப்படுத்தப்பட்டது.

1909-இல் லண்டனிலிருந்து வெங்கையா ரகுபதி என்பவர் குரோனா-மெகாபோன் என்ற சினிமா கருவியை 30000 ரூபாய் கொடுத்து வாங்கினார். அத்துடன் 12 சிறுபடங்களும் அதையொத்த இசைத்தட்டுகளும் வந்தன. டூரிங் தியேட்டர்(Touring theatre-டூரிங் டாக்கீஸ் அர்த்தம் தெரிந்ததா?) ஒன்றை அமைத்தார். இந்த டூரிங் தியேட்டரால் முதலில் விக்டோரியா அரங்கில் படம் காண்பிக்கப்பட்டு பிறகு ஜார்ஜ் டவுணில் உள்ள எஸ்பிளேனேடில் மாற்றப்பட்டது. வெங்கையா அந்த கருவியுடன் பெங்களூர், ஆந்திரா, மும்பை என சுற்றியதோடு மட்டுமல்லாமல் 1911-இல் இலங்கை பார்மாவிலும் திரையீடு செய்தார். அதைக் கொண்டு சென்னையில் கெயிட்டி, கிரௌன், குளோப் போன்ற தியேட்டர்களை ஆங்கில படங்களை காட்டுவதற்கென்றே கட்டினார்.

துணுக்கு : தமிழில் முதல் (மௌனபடம் தான்) திரைப்படத்தை தயாரித்தவர் நடராஜா.ஆர்.முதலியார். இவர் கர்சன் பிரபுவுக்கு ஆஸ்தான சினிமொட்டோ கிராஃபராக இருந்தவர். ஒரு பழைய கேமராவை வாங்கி கீழ்பாக்கம் மில்லர் ரோடில் ஒரு ஸ்டூடியோவை திறந்தார்.கீச்சக வேதம் (1916),திரௌபதி வஸ்திராபரணம்(1917),மயில் ராவணன்(1918) போன்று 7 படங்களை எடுத்தவர். அவரது ஸ்டூடியோ திக்கிரையாகி அவரது மகனும் இறந்துவிட சினிமாத் தொழிலை விட்டுவிட்டார். - நன்றி: ப்லிம் நியூஸ் ஆனந்தன்

1915-க்கு முன்பு வரை சென்னை மாகாணத்தில் சினிமா எந்த வகையிலும் பரவலான சமூக நிகழ்வாக இருக்கவில்லை. ஏராளமான மௌனப்படங்கள் சென்னையில் தயாரிக்கப்பட்டாலும் சென்னை மாகாணத்தில் பரவலாக திரையிடப்பட்ட படம் தாதாசாகிப் பால்கேயின் 'ஸ்ரீகிருஷ்ண ஜன்மா' (1919). பால்கேயும் தென்னக பயணம் மேற்கொண்டு புதுக்கோட்டை மன்னரின் அவையில் திரையிட்டு காட்டிய பிறகு பரவலாக திரையிடப்பட்டது மக்களுக்குகிடையே அதற்கு அமோகமான வரவேற்பு கிட்டியது. அப்படம் எதிர்பாராத வகையில் 3 வாரங்கள் ஓடியது. போலீசார் அனுமதியுடன் மாலை 6 மணியிலிருந்து இரவு 3 மணி வரை நான்கு காட்சிகளாக இந்தப் படம் காட்டப்பட்டது. இத்திரைப்படம் திரையிட்ட வெல்லிங்டன் தியேட்டர் மட்டும் 60000 ரூபாய் பார்த்தது. சென்னையில் மட்டும் ஏறத்தாழ 2 லட்சம் பேர் பார்த்ததாகச் சொல்லப்படுகிறது. இந்த படம் தான் புராண படங்களை எடுப்பது வெற்றிப்பெறக் கூடிய பார்மூலாவாக கருதப்பட்டது. காதல் காட்சிகளையும், மற்றக் காட்சிகளையும் கொண்டிருந்த ஹாலிவுட்டோடு மக்கள் இந்த படங்களை ஒப்பிட்டு இதற்கு வாய்ப்பளிக்க ஆரம்பித்தனர்.

பார்வையாளர்களின் பாகுபாடுகள் இந்த காலக்கட்டத்தில் நிகழந்ததாக அந்த விவரணம் கூறுகிறது. பார்வையாளர்களை இந்தியர்/ஐரோப்பியர்,மேல்வர்க்கம்/கீழ் வர்க்கம், படித்தோர்/படிக்காதோர் என வகைப்பிரித்தது. அத்துடன் திரைப்பட வகைமைகளிலும் திரைப்பட ரசனைகளை பிரித்தனர். ஆங்கிலம் படித்த மேல் தட்டு மக்கள் அமெரிக்க, ஐரோப்பிய படங்களை பார்க்கும் வகையினராகவும்.படிப்பறிவற்ற தாழ்ந்த நிலையிலிருந்த உழைக்கும் பாமர மக்கள் சண்டைகாட்சிகளும், பாலியலும், நகைச்சுவையும், விறுவிறுப்பும் மிகுந்த படங்களை விரும்பினர் எனவும், பெரும்பான்மையான இந்து சமூகம் புராணபடங்களை பார்த்ததாகவும் கூறுகிறது

அயல்நாட்டுப் படங்கள் சார்லி சாப்ளின், ஹரால்டு லாய்டு படங்கள் எல்லா வர்க்கங்களையும் கவர்ந்ததாக தெரிகிறது.

சென்னைத் திரையரங்களும் பார்வையாளர்களின் அந்தஸ்தைப் பொறுத்து பிரிக்கப்பட்டிருந்தன. அந்த திரையங்கள் அமைந்திருந்த பேட்டையை பொறுத்து இந்த வகைமை அமைந்திருந்தது. எடுத்துக்காட்டாக மவுண்ட் ரோடில் அமைந்திருந்த எல்லா திரையரங்குகளும் ஹைகிளாஸ் சொசைட்டு மக்களுக்காவே 'உயர்தரம்' என பெயர் பெற்ற மேல்நாட்டுப் படங்களை தொடர்ந்து திரையிட்டு வந்தது. மற்ற திரையரங்களை விட கட்டண விலையும் உயர்வாகயிருந்தன. இதைப் போன்று புகழ்பெற்ற அரங்குகள் வெல்லிங்டனும், எல்பின்ஸ்டனுமாகும். அதே போல் ஜார்ஜ் டவுணில் அமைந்திருந்த லிபர்ட்டி திரையரங்கு அப்பகுதியில் வாழ்ந்த முஸ்லீம்களுக்கு உகுந்த திரை தொடர்ப்படங்களை வெளியிட்டு வந்தது. சாகசங்களை நிரம்பிய படங்கள் பார்க்க வருகைபுரியும் கீழ்தட்டு திரையரங்கென இதனை சினிமா செண்ட்ரல் மேலாளர் எஸ்,கே.வாசகம் வருணித்தார்.

பார்வையாளர்களின் இருக்கை அமைப்பும் சமூக சமத்துவத்தை நிலைநாட்டவில்லை. சினிமா என்ற ஒரு கூரையின் கீழ் அனைவரும் சமம் என்ற கருத்து தவறானது. திரையரங்கின் இருட்டினிலும் சமூக வேறுபாடுகள் மறைந்து விடவில்லை. பார்வையாளர்கள் சமத்துவமடைந்துவமடைந்தும் விடவில்லை. இருக்கைக்கான கட்டண விகிதம் பார்வையாளர்களின் பொருளாதார அடிப்படையில் பிரித்து வைத்தது. அக்காலத்தில் முதல் வகுப்பு(பால்கனி) ஒரு ரூபாய் எனவும்,இரண்டாம் வகுப்பு சேர் எட்டணாவும், மூன்றாம் வகுப்பு பெஞ்சு நான்கணாவும், நான்காம் வகுப்பு தரை இரண்டணா எனவும் பரவலாக கட்டண விகிதம் தியேட்டர்களில் கடைபிடிக்கப்பட்டு வந்தன. ஏறக்குறைய எல்லா தியேட்டர்களிலும் இரண்டனா தரை டிக்கெட்டுகள் தான் அதிகமாக விற்றன. 'ஏழை வர்க்கத்தினரி'டமிருந்தே 90 விழுக்காரு வருவாய் கிடைத்ததாக சினிமா பப்புலர் திரையரங்கின் மேலாளர் நாராயணன் அந்த ஆய்வு அறிக்கையிலே கூறியிருக்கிறார். மற்ற வகுப்புகள் எல்லாம் பெரும்பாலும் காலியாகவே இருந்ததாகவும் அவர் கூறுகிறார்.

ஆக மொத்தம், ஆரம்பகாலத்தில் சினிமா சந்தை அதன் வர்க்க அடிப்படை ஆகியன பற்றிய தெளிவான துணிபுகளைத் திரையிடும் தொழிலில் ஈடுப்பட்டிருந்தோர் கொண்டிருந்தனர் என்பது அந்த ஆய்விலிருந்து புலப்படுகிறது. சென்னைத் திரைத்தொழில் 1930-களில் ஏற்ப்பட்ட வளர்ச்சிக்குப் பார்வையாளர்கள் பற்றிய இத்துணிபுகளே அடிப்படையாக அமைந்தன.

------------------------------------------

ஒகே... இத்தோடு சினிமா பற்றிய சிறப்புப் பதிவு தொடரினை நிறுத்திக் கொள்கிறேன். வாழ்க்கையே சினிமா போலத்தான் இருக்கிறது. நமக்கு எதுக்கு சினிமா என்று கேட்கிறீர்களா? அப்படி கேட்டால் அப்போது நீங்கள் தான் உங்கள் வாழ்க்கை சினிமாவில் கதாநாயகன்/கதாநாயகிகள்.

அது போகட்டும். எனக்கு பிடித்தவர்களை கதாநாயகர்களாக உருவகப்படுத்தி பார்ப்பதும் பிடிக்கும். நமது குடியரசு தலைவர் அப்துல் கலாம், டெர்மினேட்டர் அர்னால்டு கெட்டப்பில் வந்தால் எப்படியிருக்குமென நினைத்துப் பார்த்தேன். விளைவு கீழ் உள்ள படம்


நாட்டுல உள்ள சில தடைகளை இந்த துப்பாக்கியில போட்டுத் தள்ளுனாலே இந்திய உடனே வல்லரசு ஆகிறும் - கலாம்


துணுக்கு: காலையில் ஏதோ மேதின சிறப்பு நிகழ்ச்சியென சன் டிவி போட்ட நிகழ்ச்சிகளைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அதில் எஸ்.ஜே சூர்யா பெரிய பிஸ்துவாக பேசிக் கொண்டிருந்தார். அதில் நான் விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருந்தது BF படத்தைப் பற்றி அவர் சொன்னது. BF என்ற பெயர் மாற்றப்பட்டு 'அ ஆ' என்ற வரப்போகும் அவரது படத்தை ஆகா ஓகோவென பேசிக் கொண்டிருந்தார். தமிழ்நாட்டு காதலர்கள் எல்லாம் 'புரண்டு புரண்டு' பார்க்கப் போகிறார்கள் என சவால் விட்டார். அவருடைய முந்தைய படங்களின் கவர்ச்சி டோஸ்களை வைத்து என்னால் கொஞ்சம் கனிக்க முடிந்து. கவலை தொற்றிக் கொண்டது. பாவம் அந்த படத்தை வெளியிடப்போகும் தியேட்டர்கள் தான்.காதலர்கள் அந்த படத்தை (கட்டி) புரண்டு புரண்டு பார்த்தால் என்னாவது. அடக்கடவுளே!.

அது போக இந்த வாரம் வழக்கமாக நான் காண்பிக்கும் ஃபிளாஷ் படத்தை போட முடியவில்லை. இந்த பதிவில் இடுகிறேன். இங்கே சொடுக்கி ஃபிளாஷ் படத்தைப் பார்க்கவும், (கவனம்: ஒலியுடன் உங்கள் திரையை ஆக்கிரமிக்கும்)

இந்த பதிவில் கடைசியாக...

இந்த வாரம் முழுவதும் போட்ட பதிவு எப்படியிருந்தது?+ஏதாவது குறைகள் இருந்தால்+உங்களிடம் ஏதாவது எனக்கு ஆலோசனைகள் இருந்தால் பின்னூட்டமிடவும். இல்லையேல் எனக்கு தனிமடல் njvijay at halwacity dot com என்ற முகவரிக்கு அனுப்பவும்.


இந்த பதிவின் வாக்கு எண்ணிக்கை: . பக்கத்திலுள்ள ஸ்டாரை மவுசால் போட்டுத் தாக்கினால் எனக்கு மவுசு ஏறும். நன்றி:-)

உங்கள் கருத்துக்களை இட

திருப்பி தாக்கியவர்கள்:
சென்னையின் முதல் தியேட்டர் இப்போது அண்ணா சாலையில் தபால் அலுவலகமிருந்த இடத்தில் இருந்தது என்று எப்போதோ படித்திருக்கிறேன்.

//ஜார்ஜ் டவுணில் அமைந்திருந்த லிபர்ட்டி திரையரங்கு அப்பகுதியில் வாழ்ந்த முஸ்லீம்களுக்கு//

லிபர்ட்டி திரையரங்கு கோடம்பாக்கத்தில் உள்ளது. ஜார்ஜ் டவுணில் இருந்த திரையரங்கு மினர்வா. என் தந்தையும் நானும், சில விவரணப் படங்களை மினர்வாவில் தான் பார்த்திருக்கிறோம் (இது 80களில்) இப்போது அந்த திரையரங்கு இடித்து காம்பெளக்ஸாகப்பட்டது.

சினிமாவென்று பேசுவதால் சொல்வது இது. சந்திரலேகா படத்தில் ட்ரம் டான்ஸ் பார்த்திருப்பீர்கள். மிகப் புகழ்பெற்ற காட்சியது. அது இடம்பெற்ற இடம், இன்றைக்கு சென்னை நுங்கம்பாக்கத்தில் பார்க் நட்சத்திர ஹோட்டல் இருக்குமிடமும், அதனை சுற்றியுள்ள பார்சன் மேனர் இடத்திலும்தான். 3-6 மாதங்கள் அரங்கமைத்தெடுக்கப்பட்ட காட்சியது.

மற்றபடி, குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா, குறையொன்றுமில்லை கண்ணா :)
 
அன்புள்ள விஜய்,
'ஜமாய்ச்சுட்டீங்க!!!!
நல்லா இருங்க. வாழ்த்துக்கள்!!!!

என்றும் அன்புடன்,
துளசி.
 
நல்ல பதிவுகள்: சந்தர்ப்பம் வாய்க்கும்போதெல்லாம் இதேமாதிரித் தொடரவும். அப்துல் கலாமை டெர்மினேட்டர் கலாமாகப் பார்ப்பதற்குக்கூட நன்றாகத்தான் இருக்கிறது! நல்ல பதிவுகள் - வாழ்த்துக்கள். டவுட்டனில் உள்ள பழங்காலத் தியேட்டர் பெயர் என்ன? இப்போது அதை மாற்றி துணி விற்பனைசெய்யும் மையமாக்கிவிட்டார்கள்....
 
விஜய் வாரம், சூப்பர் வாரமாக இருந்தது, Hats off விஜய்!

என் பங்கிற்கு ஒரு துணுக்கு:
அந்த காலத்தில் பாடல் பதிவுகள் செய்ய, out-door இல் கதாநாயகன் பாடிக்கொண்டு போக, பின்னாலேயே, தபலா, ஹார்மோனியம் போன்ற இசைக்கருவிகளோடு செல்வார்கள். எல்லாம் மொத்தமாக வீடியோ பிலிமில் பதிவு செய்யப்படுமாம்! (இதில் சமயத்தில் காக்கா, குருவி சப்தமும் இருக்குமாம்!)
 
கலக்கிட்டீங்க..
சினிமா பற்றி எழுதி, அதுவும் மக்களோடு இணைந்து அவர்களை பற்றி பேசும் படங்களை எழுதி, சினிமா என்ற ஊடகத்தின் தாக்கத்தை தெளிவா போட்டு தாக்கிட்டீங்க.
உண்மையிலேயே எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது இந்த வாரப் பதிவுகள். உங்கள் சிரத்தையும் பதிவுகளின் நேர்த்தியும் குறிப்பிடத் தக்கது.
சினிமா பற்றி எழுதி, இந்த வார star-ஆக இருந்த நீங்கள் சூப்பர் ஸ்டார் ஆயிட்டீங்க...வாழ்த்துக்கள். உப்பு போன்ற தமிழ் படங்களை கண்டு அவைகளைப் பற்றியும் தொடர்ந்து எழுதுங்கள்
அன்புடன்
பாலாஜி-பாரி
 
பாலாஜி,

'உப்பு' பத்தி நான் எழுதுனாதான் உண்டு போல. நேத்து 'கரகாட்டக்காரி'ன்னுகூட ஒரு
படம் பார்த்தேன். இசை யாரு தெரியுமா? நம்ம இளையராஜாதான்!

ஜனங்க அடிக்க அடிக்கவராங்கன்னுதான் ச்சும்மா இந்த படங்களைப் பத்தியெல்லாம்
எழுதாம இருக்கேன்:-)
 
நன்றி விஜய்!
நட்சத்திரப் பதிவுகளில் உங்கள் உழைப்புத் தெரிகிறது.
சிரத்தையெடுத்துச் செய்துள்ளீர்கள்.
சினிமா பற்றிக் கதைப்பது சுவாரசியமானது தான். ஆனால் இப்படி பன்முகப்படுத்தப்பட்ட தன்மையாய் இருக்க வேண்டும். இல்லாவிட்டால்....
 
ஓய்!
என்ன தனிய ஊளையிடுறது மட்டுந்தானா?
நானும் அடுத்தது என்ன எண்டு பாத்துக்கொண்டேயிருந்து கடசியா ஊழையிடத் தொடங்கினதுதான் மிச்சம்.
 
நல்ல வாரம் நாட்டாமை!

ஆனால், உங்கள் வழக்கத்தில்/பழக்கத்திலிருந்து மாறியதுதான் கொஞ்சம் நன்றாக இல்லை. நட்சத்திர வாரம் என்ன பெரிய கொம்பா? ;) அதற்கெல்லாம் போய் அலட்டிக்கலாமா? வழக்கம்போலவே தாக்கியிருக்கலாம்!

பொதுவாகவே ஒரு கேள்வி. நாம் நம்முடைய தன்மைகளை எதற்கு மாற்றிக்கொள்ள வேண்டும்? அதுவும் யாரையும் பாதிக்காதபோது?

சரிசரி... அப்ப நான் எழுதினது நன்றாக இல்லையா என்று கேட்காதீர்கள். நன்றாக இருந்தது. ரொம்ப நன்றாக இருந்தது. இயல்பாக இல்லை.

===

//டவுட்டனில் உள்ள பழங்காலத் தியேட்டர் பெயர் என்ன? இப்போது அதை மாற்றி துணி விற்பனைசெய்யும் மையமாக்கிவிட்டார்கள்....//

மாண்டி, ராக்ஸி தியேட்டரா?
 
ராக்ஸி தியேட்டரே தான். அதேப் போல் இப்போது மண்ணடித் தெருவில் இருக்கும் பிபிசி அடுக்கத்தில் முன்னாடி இருந்த திரையரங்கு பிரபாத். இன்றைக்கு வெலிங்க்டன் பிளாசா இருக்கிற இடத்தில் இருந்த திரையரங்கு வெலிங்க்டன் (ஒரு காலத்தில் ஆங்கிலப் படங்களின் சொர்க்கம் இது) சென்னையில் முதலில் கட்டப்பட்ட திரையரங்குகளில் ஒன்றான மின் ட் தெருவுக்கு ஒட்டிய படி இருக்கும், முருகன் திரையரங்கில் மலையாள பிட் படங்கள் ஒட்டிக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் பாரகன், கெயிட்டி இருக்கிறது என்று நினைக்கிறேன். சென்னையின் முதல் காம்பெளைக்ஸ் அரங்காக இருந்ததை அ.தி.மு.க கட்சி வாங்கி நாசம் செய்து அது இன்னமும், வெத்தாக நின்றுக் கொண்டிருக்கிறது. அதில் புளுடைமண்டு என்றொரு திரையரங்கு இருந்தது. அதில் தொடர்ச்சியாக படங்கள் ஒடிக் கொண்டிருக்கும். ஒரு தடவை டிக்கெட் வாங்கி உள்ளேப் போனால் எவ்வளவு படங்கள் வேண்டுமானால் பார்க்கலாம். பிற்காலத்தில், அது "மேட்டர்" திரையரங்காக மாறி ஒரே தியேட்டருக்குள் கசமுசாக்கள் நடக்க தொடங்கியது. ஜாக்கிசான் படத்திற்காகவே இருந்த திரையரங்கு அலங்கார், இடித்து காம்பெள்க்ஸினை கொண்டுவந்து விட்டார்கள். ராம் தியேட்டர் இப்போது கல்யாண மண்டபமாகிவிட்டது. இன்னும், கிருஷ்ணா, கிரெளவுன் பாக்கி. அதுவும் கூடியவிரைவில் ஆகிவிடும் என்று தோன்றுகிறது. ம்ஹூம்... அது ஒரு காலம்.
 
பின்னூட்டமிட்ட அனைத்து நண்பர்களுக்கும் நன்றி.

நரேன்,

//சென்னையின் முதல் தியேட்டர் இப்போது அண்ணா சாலையில் தபால் அலுவலகமிருந்த இடத்தில் இருந்தது என்று எப்போதோ படித்திருக்கிறேன். //

ஆம், எலெக்டிரிக் பயாஸ்கோப் என்ற ஆதிகாலத்து தியேட்டர் தபால் அலுவலகமானது என்று குறிப்பிட்டுள்ளது.

//லிபர்ட்டி திரையரங்கு கோடம்பாக்கத்தில் உள்ளது. //

அந்த கட்டுரையில் சொல்லும் லிபர்ட்டி தியேட்டர் கோடம்பாக்கம் லிபர்ட்டி தியேட்டராக தெரியவில்லை. அதுவும் அது 1920 ரேஞ்சில் கட்டப்பட்டதா என தெரியவில்லை.

ஜீவா,

//அந்த காலத்தில் பாடல் பதிவுகள் செய்ய, out-door இல் கதாநாயகன் பாடிக்கொண்டு போக, பின்னாலேயே, தபலா, ஹார்மோனியம் போன்ற இசைக்கருவிகளோடு செல்வார்கள். எல்லாம் மொத்தமாக வீடியோ பிலிமில் பதிவு செய்யப்படுமாம்! (இதில் சமயத்தில் காக்கா, குருவி சப்தமும் இருக்குமாம்!) //

ஆம். இதைப்பற்றி எம்.கே.டி பதிவில் கொஞ்சூண்டு சொல்லியிருக்கிறேன்.

பாலாஜி-பாரி,

//உப்பு போன்ற தமிழ் படங்களை கண்டு அவைகளைப் பற்றியும் தொடர்ந்து எழுதுங்கள்//

இதையும் விடலையே. எழுதியாச்சே. இங்கே http://halwacity.blogspot.com/2005/03/blog-post_27.html போய் பாருங்க தலீவா.

துளசியக்கா,

//'உப்பு' பத்தி நான் எழுதுனாதான் உண்டு போல. நேத்து 'கரகாட்டக்காரி'ன்னுகூட ஒரு //

:-)))))

வசந்தன்,

//என்ன தனிய ஊளையிடுறது மட்டுந்தானா?
நானும் அடுத்தது என்ன எண்டு பாத்துக்கொண்டேயிருந்து கடசியா ஊழையிடத் தொடங்கினதுதான் மிச்சம்//

நீங்களும் சேர்ந்து ஊளையிட தானே அந்த படம் ;-)

மாண்டீ,

//டவுட்டனில் உள்ள பழங்காலத் தியேட்டர் பெயர் என்ன? இப்போது அதை மாற்றி துணி விற்பனைசெய்யும் மையமாக்கிவிட்டார்கள்//
மதி சொன்ன,
//மாண்டி, ராக்ஸி தியேட்டரா? //

வேப்பேரியில் புரசைவாக்கம் நெடுஞ்சாலையில் இருந்த பழங்கால குளோப் தான் ராக்ஸி தியேட்டர் ஆகியிருக்கிறது என கேள்விப்பட்டேன். மேல் சொன்ன இடம் தான் டவுட்டனோ. மெட்ராஸ்-ல 8 வருசத்துக்கு மேலயிருந்தும் அந்த இடத்துக்கு எல்லாம் போனதில்லை.

மதி,

//உங்கள் வழக்கத்தில்/பழக்கத்திலிருந்து மாறியதுதான் கொஞ்சம் நன்றாக இல்லை. நட்சத்திர வாரம் என்ன பெரிய கொம்பா? ;) அதற்கெல்லாம் போய் அலட்டிக்கலாமா? வழக்கம்போலவே தாக்கியிருக்கலாம்!//

அதானே! பெரிய கொம்பா என்ன? நட்சத்திர பக்கத்துல பெயரை பார்த்தவுடனே கொம்பு முளைச்சிறுதே. ஹி ஹி.... :-)

வழக்கத்திலிருந்து மாறுயிருக்கிறேனோன்னு நினைச்சிட்டிருக்கும் போது நீங்க சொன்ன பின்னூட்டை வைத்து பார்க்கும் போது, சைக்காலஜி படி நான் மனசுல தோனுற படி உங்கள் ஸ்டேட்மெண்டுக்கு எதிர்த்து பதில் சொல்லனும் இல்லையா? அதுனால, "அதை ஏன் என் இயல்பிலிருந்து மாறியதா நினைக்கிறீங்க. அதுவும் என்னோட ஒரு இயல்புன்னு நினைச்சுக்கோங்களேன்"

//பொதுவாகவே ஒரு கேள்வி. நாம் நம்முடைய தன்மைகளை எதற்கு மாற்றிக்கொள்ள வேண்டும்? அதுவும் யாரையும் பாதிக்காதபோது?//

நல்ல கேள்வி. எத்தனை நாளைக்கு தான் சும்மா போட்டுத் தாக்கிட்டு இருக்கிறது. கொஞ்சம் விசயம் செறிந்தவைகளையும் போட்டு தாக்காலமென்று தான். :-)

//சரிசரி... அப்ப நான் எழுதினது நன்றாக இல்லையா என்று கேட்காதீர்கள். நன்றாக இருந்தது. ரொம்ப நன்றாக இருந்தது. இயல்பாக இல்லை.//

இந்தா இயல்பு நிலைக்கு வந்தாச்சில்ல.வழக்கம் போல அர்த்தமற்றவைகளை போட்டுத் தாக்கலாம் விடுங்க.

//நல்ல வாரம் நாட்டாமை!//

தீர்பை மாத்தி எழுதியாச்சி :-))))
 
சொல்ல மறந்து போனது...

தமிழ்மணத்தின் பயணப்போக்கில் நான் அப்போது வலைப்பதிவில் இருந்தால், தமிழ்மணம் மீண்டும் வாய்ப்பு தந்தால், மற்றுமொரு புதிய கருத்துக்களுடன் போட்டுத் தாக்கலாமெனயிருக்கிறேன்.... பார்க்கலாம் :-))
 
இளைய தளபதி போட்டுத்தாக்காமல் போட்டுக் கலக்கீட்டிங்கள்.நன்று நன்று.அதுசரி உங்களுக்கு இரண்டு சகோதரர்கள் மட்டும்தானா(உங்கள் Flash படத்தைப் பார்த்துவிட்டுக் கேட்கிறேன்)
 
விஜய், சில காரணங்களால் உங்கள் பதிவுகளிற்கு பின்னூட்டம் இடமுடியாமற்போனதற்கு முதலில் மன்னிக்கவும்.
மிக அழகாகவும், விரிவாகவும் திரைப்படங்கள் பற்றி இந்த ஒருவாரத்தில் கலக்கியிருக்கின்றீர்கள். சரி, அடுத்தமுறை திருநெல்வேலிக்கோ அல்லது மதுரைக்கோ வரும்போது உங்களோடு இருந்து டூரிங் டாக்கீஸில் படங்கள் பார்த்துவிட்டால் போச்சு :-).
 
ஈழநாதன்,

//அதுசரி உங்களுக்கு இரண்டு சகோதரர்கள் மட்டும்தானா(உங்கள் Flash படத்தைப் பார்த்துவிட்டுக் கேட்கிறேன்) //

ஃபிளாஷ் போக நெஜமாலுமே எனக்கு 2 சகோதரர்கள் இருக்கிறார்கள்.

//சரி, அடுத்தமுறை திருநெல்வேலிக்கோ அல்லது மதுரைக்கோ வரும்போது உங்களோடு இருந்து டூரிங் டாக்கீஸில் படங்கள் பார்த்துவிட்டால் போச்சு :-). //

ஹி ஹி... அங்கெல்லாம் டூரிங் டாக்கீஸ் எல்லாம் DTS தியேட்டர் ஆகியாச்சி. வாங்க வாங்க... நம்ம பக்கத்து கிராமத்துக்கு போய் படம் பார்த்திரலாம். நான் கடைசியா டூரிங் டாக்கீஷ்ல படம் பார்த்தது நிலக்கோட்டை என்ற கிராமத்துக்கு கொஞ்சம் மேலேயான ஊருல. அதுவும் 5 வருஷத்துக்கு முன்னாடி.'தாயகம்' என்ற விஜயகாந்த் படமென நினைக்கிறேன்.

//Nari oolai iduvathai, rendu varusham munbu Halwacity.com-la partha mathiru irukke...//

இப்பக் கூட ஆயிரத்தில் ஒருவன் படம் போட்டா தியேட்டர்ல போய் எம்.ஜி.ஆரை பார்க்கிறது இல்லையா. அது போல 2 வருஷத்துக்கு முன்னாடி பால் ஊத்தி மூடிய நம்ம ஹல்வாசிட்டி.காம்ல போட அதே படம், புத்தம் புதிய IE-ல போட்டேன். ஹி ஹி...
 
வழக்கமாக உங்கள் பதிவுகளுக்கு பின்னூட்டமிடுவேன்... நீங்கள் நட்சத்திரமானதும்...உங்களுக்கு வந்த பின்னூட்டங்களைப் படிப்பதே நல்ல பொழுது போக்காக மாறிவிட்டதால்,பார்வையாளனாகவே தங்கிப் போனேன்..

எல்லோரும் சொல்ற மாதிரி நல்லாவே கலக்குனீங்க விஜய்! மதி சொன்ன மாதிரி கொஞ்சம் இயல்பு திரிந்த தன்மை எட்டிப்பார்த்தற்கு, உங்களின் அதீத உழைப்புதான் ( நட்சத்திரமாக்கிட்டாங்களே...சரியா போட்டுத்தாக்கனுமே!) காரணம்னு தோணுது...

சந்திரனின் பதிவில் சொன்ன மாதிரி, உங்களால் வீட்டு வரவு செலவு கணக்கைக்கூட சுவாரஸ்யமாத்தான் எழுத முடியும்னு மறுபடி, மறுபடி நிருபிசிட்டீங்க!!!
 

உங்கள் கருத்துக்களை இட


<< திரும்ப முன் பக்கத்துக்கு போ

This page is powered by Blogger. Isn't yours? தமிழ் அசைபட இணையச் செயலி தமிழ் விக்கிபீடியா

-->