<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar/9439067?origin\x3dhttp://halwacity.blogspot.com', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script> <!-- Remove below comment line to show the content. Added for meta redirection --> <!--

போட்டுத் தாக்கு!!!!!

எள்ளோடு எலி புழுக்கையும் எண்ணைக்காக காயுதாம்

-ல் போட்டுத் தாக்கியது

சொப்பன ஸ்கலிதம்

Difficulty in reading this post due to font issues? Click here for a PDF copy. Works best if you right-click the link and select 'Save target as...'
இந்த பதிவை போட்டுத் தாக்கியவர் : Vijayakumar
பதின்ம வயதுக்குள் நுழைந்திருக்கும் சோமுவுக்கு முந்தாநாள் இரவு வாழ்க்கையின் முதல் முறையாக சொப்பன ஸ்கலிதம் தனக்கு ஆகிவிட்டதென்ற கவலைத் தொற்றிக் கொண்டது. "உறுப்பு போதிய வளர்ச்சியின்மை,எழுச்சியில்லாமை,எழுச்சி நீடிக்காமை, சொப்பன் ஸ்கலிதம், கண்கள் குழிவிழுந்து கன்னம் ஒட்டிப் போதல்..." என்று பத்திரிக்கையில் போட்டிருக்கும் சேலம் சிவராஜ் வைத்தியசாலை விளம்பரத்தை பார்த்திருக்காவிட்டால் அவனது நம்பிக்கை இந்த அளவு தளர்ந்து போயிருக்காது. கண்ணாடி முன் நின்று தனக்கு லேசாக வளர ஆரம்பித்திருக்கும் அரும்பு மீசையை ரசிப்பதை விட்டு விட்டு தன் கன்னத்தில் குழி விழுந்திருக்கிறதா என்பதை அடிக்கடி பார்த்துக் கொண்டான். அந்த விளம்பரத்தில் கூறிய சகல குணாதிசயங்களையும் சரி பார்த்துக் கொண்டான். அந்த வரிகளில் சூட்சுமம் ஏதாவது இருக்கிறதா என திரும்ப திரும்ப படித்தான். "உறுப்பு போதிய வளர்ச்சியின்மை" என்பதில் கொஞ்சம் சந்தேகம். கக்கூஸை தேடி ஓடினான்.


கக்கூஸ். அதுவரை ஆணுக்கு ஆண் குழந்தையும், பெண்ணுக்கு பெண் குழந்தையும் திடீரென பிறக்கும் என்று நம்பி வந்த சோமுவுக்கு அவன் நண்பன் குழந்தை எப்படி பிறக்கிறது என்ற ரகசியத்தை சொன்னதிலிருந்து கக்கூஸ் தான் சோமுவுக்கு சொர்க்கபுரி. கழிவறைக்குள் கருவுற்றான். சில நாட்களாக கிளர்ச்சி ஏற்படும் போது பாத்ரூம் தேடி ஓடுவது அவனது வாடிக்கை ஆகிவிட்டது. இந்த செயலும் அவன் மனதை வாட்டி வதைத்தது. இதனால் தான் தனக்கு சொப்பன ஸ்கலிதம் ஆகிறதென்று உறுதியாக நம்ப ஆரம்பித்தான்.

"என்ன? ராணி உன் பையன் வர வர தேஞ்சிக்கிட்டே போறான்" என்று பக்கத்து வீட்டு கிழவி கேட்பது இவன் காதில் விழுந்து தொலைத்தது. அதற்கு அவன் அம்மா "மயினி, அவன் வளர்ற புள்ளை அப்படித்தான் இருப்பான்" என்ற சமாதானத்தால் இவன் மனம் சமாதானம் அடையவேயில்லை. சட்டையின்றி கண்ணாடி முன் நின்று பார்த்தான். மேல் நெஞ்சு எலும்பும் அதை ஓட்டிய அவன் தலையும் ஹேங்கர் மாதிரி தெரிய அவன் உடம்பு அதில் தொங்கிக் கொண்டிருந்தது.

"இந்த சொப்பன ஸ்கலித மேட்டரை நண்பன் சுப்பி என்ற சுப்பிரமணியன் கிட்ட கேட்டு தெரிஞ்சிக்கிட வேண்டியது தான். ஆனா எனக்கு ஸ்கலிதம் ஆகிற மாதிரி அவன் கிட்ட சொல்லிறக் கூடாது. அப்புறம் அவன் சிரிப்பான்" என்று நினைத்துக் கொண்டான். கிண்டா மாதிரி ஓங்கி நெடு நெடுவென வளர்ந்திருந்த சுப்பியுடன் தன்னை எப்போதும் ஒப்பிட்டு பார்த்துக் கொள்வது சோமுவின் வாடிக்கை.

"என்னோட உடம்பு இப்படி ஒல்லியாகிட்டே போகுது.சிவராஜ் வைத்திய சாலை விளம்பரத்தில் சொன்ன மாதிரி நான் வளர்ச்சி அடையாம ஒல்லியா இருந்தா, உறுப்பும் போதிய வளர்ச்சி பெறவில்லை என்றால் என்ன செய்ய? சரி சுப்பி ஹெல்ப் பண்றானான்னு பார்ப்போம். இல்லேன்னா எப்படியாவது டாக்டர் சிவராஜ்ஜை பார்த்து கன்சல்ட் பண்ணிற வேண்டியது தான்" என தனக்கு தானே சமாதானம் பண்ணிக் கொண்டான்.

அன்று மாலையில் வழக்கம் போல சேவியர்ஸ் பள்ளிக்கு பக்கத்திலிருக்கும் மனகாவலம் பிள்ளை பூங்காவில் நண்பர்கள் கூடினார்கள். செவண்டாலர்ஸ் ஸ்கூல் பிள்ளைங்களை எப்படி சைட் அடிச்சேன், ரோஸ்மேரி ஸ்கூல் பிள்ளை எவ்வளவு அழக இருக்குதுங்க,மேரி சார்ஜண்ட் புள்ளைங்க ஏன் சொத்தையாக இருக்கிறது,கடலை போடுவது என்றால் என்ன? என்று உரையாடல் மேம்போக்கான விசயங்களை அலசிவிட்டு சில பல ஆழமான விசயங்களை பேச ஆரம்பித்தனர். அப்போது தான் சுப்பி தன் உரையாடலை பின்ன ஆரம்பித்தான். 9-ம் வகுப்பு பய பேசுற பேச்சு மாதிரி இல்லை அது. ஏதோ நேற்று இரவு மாமா ஊருக்கு போய் விட்டதால் பக்கத்து வீட்டு மாமி துணைக்கு வீட்டில் இருக்க கூப்பிட்டதாகவும், இவன் வீட்டிலும் 9-ம் வகுப்பு படிக்கும் சின்ன பையன் தானே என்று அனுப்பி வைத்ததாகவும் அப்புறம் நிகழ்ந்ததை "இன்பரசம்" என்ற செக்ஸ் புத்தகத்தில் படித்த கதையுடன் சமைத்து கூட்டாஞ்சோறாக நண்பர்கள் எல்லாருக்கும் சுப்பி வழங்கிக் கொண்டிருந்தான்.

"ஏலே உனக்கு எங்கேயோ மச்சம் இருக்குடா" என்று எல்லோரும் சிலாகித்தார்கள். ஆனால் சோமுவோ இவனுக்கு சொப்பன ஸ்கலிதம் ஆகிவில்லையென நினைக்கிறேன். அதுனால் தான் இப்படி கலாய்க்கிறான் என்று மனதில் நினைத்தாலும் "ஆமா இதெல்லாம் எப்படி தெரியுது உனக்கு" என்று அம்மாஞ்சியாக சுப்பியைக் கேட்டான். அதற்கு "இன்பரசம் செக்ஸ் புக்கை படி. எத்தனை பேர் கொஸ்டின் கேட்டிருப்பாங்க தெரியுமா? அவ்வளவும் மணி மணியான பதிலுங்க. பதில் சொல்றது யாருன்னு நெனச்சிக்கிட்ட? நம்ம சரோஜா தேவி தான்" என்றான்.

"சுப்பி எனக்கு அந்த புக்கு கொட்றா? நான் படிச்சிட்டு தர்றேன்" என்றான் சோமு. ரெடியாக வைத்திருந்தது போல புஸ்தக பையிலிருந்து கணக்கு புத்தகத்தை பிரித்து எடுக்க இன்பரசத்தில் ஏதோ ஒரு துணை நடிகை மேல் முந்தானை இல்லாமல் குனிந்து சிரித்துக் கொண்டிருந்தாள். அவசரம் அவசரமாக புத்தகத்தை எடுத்து தன்னுடை கால்சட்டைக்குள் நுழைத்து அரைஞான் கயிற்றில் இறுக்கிக் கொண்டான். வீட்டின் கழிப்பறையில் மோசமான பேப்பரில் அச்சடித்திருக்கும் அந்த புத்தகத்தை புரட்ட ஆரம்பித்தான். மலையாள நடிகைகள்,நடிகை மாதுரி என்று பல பேரின் படங்களை கடந்து சரோஜா தேவியின் கேள்வி பதில் பக்கத்துக்கு வந்தான். தேடினான். கிடைத்தது.

"சரசு மாமி! நான் அடிக்கடி சுய இன்பம் அனுபவிக்கிறேன். அடிக்கடி சொப்பன ஸ்கலிதமாகிறது? இதை எப்படி தடுப்பது?"

"இவையெல்லாம் மிகக் கொடூரமான வியாதிக்கு அறிகுறி.கூடுமான வரையில் மனதை திசைத் திருப்ப பார்க்கவும்.ஆன்மீகம் விளையாட்டு,படிப்பு என்று ஏதாவது ஒன்றில் உங்கள் கவனத்தைச் செலுத்தவும்"

இந்த பதிலை பார்த்ததும் சோமுவுக்கு பயம் அதிகரித்தது. தினமும் கோவிலுக்கு போக ஆரம்பித்தான். அவன் அம்மாவுக்கு ஏக ஆச்சரியம். "சாமி கும்பிட வா என்றால் எட்டடியில் ஓடிப் போவேனே. அவனா இது? எல்லாம் நல்லது தான்" என்று மகிழ்ந்தாள்.

சில நாள் கழித்து சுப்பி டவுணில் உள்ள லட்சுமி தியேட்டரில் "பாவம் கொடூரன்" என்ற மலையாள படம் ஓடுவதாகவும், அது செக்ஸ் எஜூகேஷன் பற்றி எனவும் கூறினான். எப்படியோ வீட்டில் டாபாய்த்து விட்டு சொப்பன ஸ்கலித கேள்விக்கு அந்த படத்தில் விடை தேடினான். நல்ல ஒரு மலையாள படம் பார்த்த திருப்தியுடன் எல்லோரும் வெளியே வர சுப்பி மட்டும் "சே! இண்டர்வல்ல தான் ஒரு பிட்டு ஓட்டுவாங்க. இன்னிக்கி போலீஸ் கெடிபிடி ஜாஸ்தின்னு அது கூட போடல சுத்த வேஸ்ட்" என்று பினாத்திக் கொண்டே வந்தான். சோமூ மிரட்சியுடன் அங்கிமிங்கும் கண்களை அலை பாயவிட்டு தன்னை தெரிந்தவர்கள் யாரும் பார்த்து விடக்கூடாதென்று விறு விறுவென்று ஓட்டமும் நடையுமாக பஸ்ஸை பிடிக்க ஓடினான்.

பரணி லாட்ஜில் பல தலைமுறை வைத்தியர் சித்த சிரோன்மணி சிவராஜ் வைத்தியர் காலை 6 மணி முதல் 5 மணி வரை இரண்டு நாட்கள் வீரியம் இல்லாமைக்கு வைத்தியம் பார்க்கப் போகிறார் என்ற விளம்பரம் பத்திரிக்கையில் பார்த்தான். எப்படியாவது சிவராஜை சந்தித்து சொப்ன ஸ்கலிதத்துக்கு விடிவு காண வேண்டுமென நினைத்தான். மெதுவாக பரணி லாட்ஜ் பக்கம் போனது தான் தெரியும் தலையில் துண்டுப் போட்டுக் கொண்டு பல 40, 50 வயது மதிக்கத்தக்க பல உருவங்கள் படையெடுத்துக் கொண்டிருந்தன.

"இருப்பதிலேயே சின்ன பையன் நான். எனக்கு இந்த பிரச்சனையா? எப்படி எனக்கு மட்டும் இப்படி ஆனது?" சோமூவுக்கு வெட்கம் பிடுங்கி திங்க திரும்பி வீட்டை நோக்கி நடந்தான்.

சொல்லி வைத்தாற் போல அன்று இரவு அவனுக்கு மப்பும் மந்தாரமாக இருந்தது. தூங்கியவனின் எண்ணத்தில் கனவொன்று உதித்தது. அவன் நண்பண் அமெரிக்காவில் அம்மண பீச் ஒன்று இருப்பதாக சொல்லியிருந்தான். அதே போல் கனவிலும் ஒரு நியூடு பீச். கால் கடுக்க சோமூ உள்ளாடையுடன் நடக்கிறான். எட்டிய தூரம் வரை ஒன்றும் கண்ணில் தென்படவில்லை. சிறிது தூரம் சென்றவனுக்கு மல்லாக்கப் படுத்திருந்த மோகினி ஒருவள் கண்ணில் பட்டாள். இளஞ்சூடான மணலின் நிறமும் அவளின் மேனியும் பொன்னிறமாயிருந்தன. ஒரே ஒரு துண்டை மட்டும் இடுப்புக்கு மேலே போட்டு மறைத்திருந்தாள். மணல் சரசரக்கும் சத்தத்தை கேட்டவள் லேசாக திரும்பி பார்த்தாள். சோமூவுக்கு கால்கள் அவளை நோக்கி தானாக நடைபயின்றன. ஓங்கி ஒரு காற்று அடிக்கவும்,அவள் மேல் போட்டிருந்த ஒரே துண்டு அந்த காற்றில் பறக்கவும், அதைப் பார்த்து சோமூ அதிர்ச்சியில் உறையவும், ஒரு பெரிய அலை அவன் எதிர்பாராத அளவு திடீரென தாக்கவும் சரியாயிருந்தது. இந்த நிகழ்ச்சிகளால் சோமூ நிலை குலைந்து போனான். ஆனால் எதையோ ரிலீஸ் செய்து விட்ட மாதிரி திருப்தியாக இருந்தது. உடம்பே பிசு பிசுத்துப் போனது. ஈரம் ஈரம் அவன் போட்டிருந்த ஒரே உள்ளாடை எல்லாம் ஈரம். அந்த திசையை நோக்கினான். மோகினியை காணவில்லை.

சோமூவின் பிடறியில் யாரோ ஓங்கி தட்டினார்கள் "ஏலே! எந்திரிலே படுக்கையில ஒன்னுக்கு அடிச்சி வச்சிருக்கே மூதேவி.இந்த மாசத்துல இரண்டாவது தடவையா ஒன்னுக்கு போயிருக்கே நீ. சின்ன புள்ளையா நீ? மாடு மாதிரி வளர்ந்திருக்கே. அறிவில்லை உனக்கு. நைட்டு மூக்கு முட்ட தண்ணி குடிச்சா, இப்படி தான் மூத்திரமா போவே. எந்திரிச்சி ஒன்னுக்கு அடிச்சி படுக்கனும்னு அக்கறை கூட இல்லை. ஏண்டா தத்தியா இருக்கே? எந்திரி போ... போயி குளிச்சிட்டு வா. தலையெழுத்து உன் மூத்திர படுக்கையெல்லாம் துவைக்க வேண்டியிருக்கிறது?"

திகலடைந்து எழுந்திருந்த சோமூவுக்கு பயங்கர அதிர்ச்சி "திரும்பவும் எனக்கு சொப்பன ஸ்கலிதம் ஆகிவிட்டது. திரும்பவும் சொப்பனத்தில் மூத்திரத்தை ஸ்கலிதித்து விட்டேன். அடக்கடவுளே!"

சோமூவின் தாய் தன் கணவரிடம் இதை சொல்லிக் கொண்டிருக்க "அவனுக்கு யூரினரில ஏதாச்சும் பிரச்சனை இருக்கும்டி. டாக்டர் கிட்ட காண்பிப்போம்"

டாக்டர் என்ற வார்த்தையை கேட்டவுடன் தலைமுறை சித்த வைத்திய சிரோன்மணி சிவராஜ் ஞாபகத்திற்கு வர ஸ்கலிதப் பிரச்சனை தனக்கு உண்மையிலே இருப்பதாக எண்ணி மூர்ச்சையடைந்தான்.

இப்போது 50 வயதாகிப் போன சோமூ ஒரு நாள் பத்திரிக்கையை திருப்பும் போது சேலம் சிவராஜ் வைத்தியசாலை, 6வது தலைமுறையான சிவராஜ் சஞ்செய் ஆஸ்தான வைத்தியராக இருப்பதையும் எதிர்கால வைத்தியராகப் போகும் 10 வயது பையன் சிவராஜ் சிபியின் படத்துடன் வந்திருந்த விளம்பரத்தை பார்த்தும் அந்த ப்ளாஷ் பேக் தோன்றியது. சொப்பன ஸ்கலிதத்துக்கு விடையும் கண்டுபிடித்து விட்டார். இப்போது பேரக்குழந்தைகளுடன் சௌக்கியமாக பெருவாழ்வு வாழ்ந்துக் கொண்டிருக்கிறார் சோமு.

இந்த பதிவின் வாக்கு எண்ணிக்கை: . பக்கத்திலுள்ள ஸ்டாரை மவுசால் போட்டுத் தாக்கினால் எனக்கு மவுசு ஏறும். நன்றி:-)

உங்கள் கருத்துக்களை இட

திருப்பி தாக்கியவர்கள்:
யோவ்! அல்வாசிட்டி விஜய், எப்படியா இப்படி எழுதறீங்க, கலக்குங்க... சொப்பனஸ்கலிதத்துக்கு இப்படி ஒரு அர்த்தமா?
 
அண்ணாச்..சீ ;-)
 
good one keep it up......looking forwrd for more..

radha
 
விஜய்,
இப்பதான் எனக்கு அர்த்தம் புரியுது.:-)
 
அதெல்லாம் கிடக்கட்டும் விஜய் அண்ணாச்சி... உங்களுக்கு 50 வயசாகிடிச்சின்னு சொல்லவேயில்லை?!
 
டேய் மாப்ஸ்,

கலக்கிட்டே போ.. எனக்கு தெரிஞ்சு லட்சுமி தியேட்டரில் அந்த படம் போடலை..

விஜி, நீ சொன்ன இந்த மேட்டரை பத்தி நான் விரைவில் இன்னொரு பதிப்பு எழுதுறேன்..

சங்கர்
 
sorry Alva I am under 16 (*_*)
 
உங்களுக்கு இது தேவையா விஜய்..?? ஒழுங்கா எழுதிகிட்டு இருந்தீங்க..?? என்னாச்சு..?? இதையே கட்டுரை வடிவத்தில் முயற்சித்திருந்தால் நன்றாயிருந்திருக்கும்..

ம்..என்னமோ போங்க..
 
அன்புள்ள மூக்கன், மூர்த்தி,

Fantasyஆக இந்த கதை என உங்களுக்கு தோனியிருந்தால் மன்னிக்கவும். Fantasy-க்காக எழுதிய கதை இல்லை. செக்ஸ் ஆகட்டும், உறவு முறைகள் ஆகட்டும், புரிந்துக் கொள்வது ஆகட்டும் பதின்ம வயதில் மிஞ்சி நிற்பது குழப்பமே. இந்த பதின்ம வயது குழப்பத்துக்கு சூழ்நிலைகளும் மிக முக்கிய காரணம் ஆகின்றன. நாமெல்லம் பதின்ம வயதைக் கடந்து தான் வந்திருப்போம். இந்த கதையில் உள்ளது உள்ளபடி இல்லாவிட்டாலும் இதன் தொடர்பாக வேறுவிதத்தில் அடைந்திருக்கும் குழப்பங்கள் எல்லார் பதின்ம வயதிலும் நிகழ்ந்திருக்கும் என்பதை என்னால் 100% அடித்து கூற முடியும்.

இந்த குழப்பத்தை விடை காண நான் கதை வழியாக முயலவில்லை. பதின்ம பிரச்சனையின் ஒரு துகளை பதிவாக எழுத முயன்றேன். அது வேறு மாதிரியாக உங்களுக்கு தெரிந்திருந்தால் நான் சொன்ன கதை சொன்ன விதத்தில் எதோ பிரச்சனை என நான் எடுத்துக் கொள்ள வேண்டும்.

நன்றி குழலி, மாண்ட்ரீஸர்,ராதா,முத்து.

மயாவரத்தான்,

ஒவாரா தான் நக்கல் அடிக்கிறீங்க அண்ணாச்சி.::-)

சங்கர், லட்சுமி தியோட்டர் என்பது கதைக்காக மட்டுமே. ஒரு காலத்தில் கொடிக்கட்டி பறந்த கலைவாணி தியேட்டரை மூடி விட்ட பிறகு, என் மனதில் வந்து நின்றது லட்சுமி தியேட்டர் தான்.

கறுப்பி,

உங்க ஊருல மேஜருக்கு ஆகக் குறைந்த வயது 16. எங்க ஊரில எல்லாம் 18ப்பா.

ராமன்,

PDA -ல் உங்களால் தமிழ் உள்ளீட முடிகிறதா என்ன? எனக்கு தெரிந்து இன்னும் பிடிஏ-க்களிலும், கைத்தொலைபேசியிலும் தமிழ் பாண்ட்டுகள் வருவதில்லை. அதில் தமிழ்ல் எழுத முடியாது என நினைக்கிறேன். எதிர்காலத்தில் வரலாம். உங்கள் கணியில் தமிழ் எழுத அழகி நம்பர்1, இ-கலப்பை,முரசு,குறள் எழுதி என நிறைய மென்பொருள்கள் உள்ளன. விவரங்களை கீழ்கண்ட முகவரியிலிருந்துப் பெற்றுக் கொள்ளலாம்.

http://www.thamizmanam.com/xblog/index.php?itemid=9
 
:)|(:
 
!!!!!! :-)))))))
 
நன்றி நரேன்,பாண்டியன் & துளசியக்கா... எல்லாரிடமும் ஒரு அவஸ்தையான சிரிப்பை தான் நான் பார்க்கிறேனோ?
 
kalakkitteeenga annnachi! This is the best blog entry I have read in 2005 and I mean it!
 
vijay,
samma kalakkalA ezuthi irukkIngka :-)
"சொப்பன ஸ்கலிதம்" kuRiththu oru viththiyAsamAna kaNNOttam !!!!
pArAttukkaL !!!!
 
ஆரம்பம் பார்த்ததும் "A" certificate கொடுக்கப்பட வேண்டிய படம் sorry கதை என்று தோன்றியது. பரவாயில்லை சமாளிச்சிட்ட்டீங்க..

ராமன் (எழுதுகருவி தொடர்பாக) என்னைத் தனிமடலில் தொடர்பு கொள்ள முடியுமா? sanuragc at yahoo dot com.
 
நன்றி கூத்து(ரவுசு,பிலுமு). சூப்பர் பெயரை வச்சிருக்கீங்க.

நன்றி பாலு, அனுராக்.

திரு.ராமன் அவர்களே, எழுதுகருவி விசயமாக அனுராக்கை தொடர்புக் கொள்ள முடியுமா?

வேலு, நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. ஏற்கனவே செக்ஸ் என்பது நமது ஊரில் இலை மறைகாய் என தெரிந்து அதில் குழம்பிய மக்கள் மனது குட்டையில் தலை தலைமுறையாக மீன் பிடிப்பவர்கள் இந்த சிவராஜ் வைத்தியசாலை.
 
விஜய், கிட்டத்தட்ட மூக்கரின் கருத்தே எனக்கும். கதை என்று எழுதி அதில் ஐம்பது வயது சோமுவெல்லாம் காட்டாமல் பதின்ம வயது குழப்பங்களை மட்டும் வைத்தே நல்ல கட்டுரையாக வடித்திருக்கலாம்.
 
நன்றி கே.வி.ஆர்

அய்யய்யோ... கட்டுரை எழுத வராம தானே நான் கதையா போட்டேன். இருந்தாலும் அடுத்த முறை கட்டுரையே முயற்சி பண்றேன்.
 
யோவ் இப்பம்தான் படிச்சேன், கலக்கிட்டீரய்யா? (உம்ம நடையில் மிகுந்த முதிர்ச்சி(முன்னைவிட) தெரிகிறது.)
 
நன்றி ரோசா அண்ணாச்சி. முதிர்ச்சி என்கிறது எல்லாம் நம்ம சகவலைப்பதிவர்களின் பின்னூட்ட ஊக்கமும், 'செந்தமிழும் நாப்பழக்கம்' என்று சொல்லப்படுவது போல தொடர் பதிவு பயிற்சியும்/முயற்சியும் தான்.
 
//(உம்ம நடையில் மிகுந்த முதிர்ச்சி(முன்னைவிட) தெரிகிறது.) //

இப்படி சொல்லிட்டீங்கல்ல. இப்போ தக்க வச்சிக்கிறதுக்கு பயம் தான் வருது :-))
 
அல்வா!
இந்த ஸ்கலிதம் மட்டுமில்லை, அந்த ஸ்கலிதத்தையும் மற்ற பதின்ம வயதுக் குழப்பங்களையும் எழுதுவது அவசியமே!
 
வடிவேல் அண்ணாச்சி,

நீங்கள் சொல்லுவதை முழுவதுமாக ஒத்துக் கொள்கிறேன். ஏறக்குறைய வலைப்பதிவர்கள்/படிப்பவர்கள் எல்லோரும் பதின்ம வயதை கடந்திருந்தாலும், பதின்ம வயது பிள்ளைகளை கொண்டோர்களாக கூடிய சீக்கிரம் ஆவர்கள். எண்ணங்கள் பதியப்படும் போது எல்லோருக்கும் பயனுள்ளதாக அமையும். காலம் செல்ல செல்ல கூடிய சீக்கிரமே எழுதி விடலாம்.
 
kr;rp eP vd;d brhy;y te;njd;nd bjhpany. brhg;gd !;fypjk; vdf;Fk; ,Uf;F ehd; vd;d bra;a?
 

உங்கள் கருத்துக்களை இட


<< திரும்ப முன் பக்கத்துக்கு போ

This page is powered by Blogger. Isn't yours? தமிழ் அசைபட இணையச் செயலி தமிழ் விக்கிபீடியா

-->