<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://draft.blogger.com/navbar.g?targetBlogID\x3d9439067\x26blogName\x3d%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81!!!!!\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLACK\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://halwacity.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://halwacity.blogspot.com/\x26vt\x3d-1566162084738285005', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe", messageHandlersFilter: gapi.iframes.CROSS_ORIGIN_IFRAMES_FILTER, messageHandlers: { 'blogger-ping': function() {} } }); } }); </script> <!-- Remove below comment line to show the content. Added for meta redirection --> <!--

போட்டுத் தாக்கு!!!!!

எள்ளோடு எலி புழுக்கையும் எண்ணைக்காக காயுதாம்

-ல் போட்டுத் தாக்கியது

தமிழ் சினிமாவின் 'துணை'யெழுத்துக்கள்

Difficulty in reading this post due to font issues? Click here for a PDF copy. Works best if you right-click the link and select 'Save target as...'
இந்த பதிவை போட்டுத் தாக்கியவர் : Vijayakumar
தமிழ் சினிமா என்றால் கொஞ்சமும் யதார்த்தம் இல்லாமல் பாடல்களை வைத்து கும்பல் கும்பலாக ஆடுவார்கள். சில சமயம் பின்னனியில் இருக்கும் பெண்கள் அரைகுறை ஆடைகளில் ஆடுவார்கள்/ஓடுவார்கள். சில சமயம் பெண்கள் ஈயம் காய்ச்சி ஊத்தப்பட்ட சிலை போன்ற ஒப்பனையுடன் நிற்பார்கள். சில சமயம் ஜோடி ஜோடியாக ஆடுவார்கள். சில சமயம் குழு குழுவாக தன் ஆடும் தன் ஜோடியின் மடியில் துவண்டுக் கொண்டிருப்பார்கள். ஆனால் பல சமயங்களில் இவர்கள் அழைக்கப்படுவதோ குரூப் டான்ஸர்ஸ்.

தமிழ் சினிமாவில் கதாநாயகன் தன்னை சூழ்ந்திருக்கும் அடியாட்களை தூக்கிப் போட்டு பந்தாடுவார். கதாநாயகன் ஓடும் ரயிலிலிருந்து குதிப்பார். மலையின் முகடிலிருந்து பல்டி அடிப்பார். தன்னை சூழ்ந்துள்ளோரை பாலத்திலிருந்து கீழ் ஓடும் ஆற்றில் தூக்கி எறிய, பல அடியாட்கள் குட்டிக்கரணம் அடித்து பாலத்திலிருந்து தண்ணீரில் விழுவார்கள். தீப்பந்தங்களுடன் கதாநாயகன் சண்டையிடும் போது அடியாட்கள் உடலில் தீப்பிடிக்க ஓடுவார்கள். கதாநாயகன் அவர்கள் தலையில் கட்டையால் அடிப்பார், சுற்றியிருக்கும் வண்டி சக்கரத்தில் அடியாளின் முகத்தை தேய்த்தே சக்கரத்தை சுக்கு நூறாக உடைப்பார். கதாநாயகன் வில்லன் அனுப்பிய அடியாட்களை அடிக்கும் போது நம் பற்கள் நறநறக்கும். அங்கு கதாநாயகன் அவர்களை அடிக்கும் போது நமக்கு நரம்பு புடைக்கும். நாமும் அதே முறுக்குடன் நாலு பேரை தூக்கிப் போட்டு மிதிக்க வேண்டுமென தோன்றும். இவைகளில் கொஞ்சம் கூட யதார்த்தம் இல்லை. இல்லையா? ஒரு நிமிஷம்...

Image hosted by PicsPlace.to

யதார்த்தம் யதார்த்தம் என்று பேசும் நாம், குரூப் டான்ஸ்களும், பைட்டுகளும் தமிழ் படத்திற்கு பிடிச்ச சனியன்கள் என்றும் பேசும் நாம், குரூப் டான்ஸர்களின் வாழ்க்கையையும், 'பைட்டு' போட வரும் அடியாட்களின் வாழ்க்கையினையும் யதார்த்தமாகவாவது நீங்கள் எண்ணிப் பார்த்திருந்தால் உங்கள் கையை தலைக்கு மேலே தூக்குங்கள். பாட்டு, பைட்டு இருக்கும் தமிழ் சினிமாவை பாட்டு, பைட்டு இல்லாத யதார்த்த உலகச் சினிமாக்களுக்கு இணையாண மாற்று சினிமாவாக பார்க்க துடிக்கும் நம்மவர்களுக்கு, சினிமாவின் பாட்டு பைட்டுகளை நம்பியிருக்கும் ஆயிரக்கணக்கான குடும்பங்களை எண்ணிப் பார்க்க மறந்து விட்டோமோ? எப்போதும் முன்னணியில் ஆடும் நாயக, நாயகிகளை பார்த்து பார்த்து பழக்கப்பட்ட நாம் பின்னணியில் இருக்கும் 'துணை'களை மறந்து விடுகிறோம். பாட்டுக்கு டான்ஸ் ஆடியும், பைட்டுக்கு அடிவாங்கியும் தன் வயிற்றையும், தன் குடும்பத்தின் வயிறுகளையும் கழுவும் 'துணை'நடிக, நடிகைகள் கோடம்பாக்கத்தில் எத்தனை பேர் இருக்கிறார்கள் தெரியுமா?

Image hosted by PicsPlace.to

சில பல கோடிகளை கண்டு மிதக்கும் தமிழ் நாயகர்களுக்கு பலம் சேர்ப்பது இந்த துணை எழுத்துக்கள் தான். இந்த துணை எழுத்துக்களுக்கும் அசோசியேஷன் உண்டு. கும்பல் கும்பலாக நூற்றுக்கணக்கில் கோடம்பாக்கத்தில் இருக்கிறார்கள். இந்த பாட்டுக்கு குரூப் டாண்ஸ்க்கு(ஆண் பெண் சேர்த்து) 50 பேர் தேவை, இந்த பைட் சீக்வன்ஸ்க்கு 10 பேர் பலசாலிகள் பத்து பேர் தேவை என்று அசோசியேஷனுக்கு தேவைகள் கேட்டு வர, அது டான்ஸ்க்கு 50 பேரையும், பைட்டுக்கு 10 பேரையும் ஒதுக்குகிறது. பாட்டுக்காக துணைகள் கொடுக்கப்பட்டுள்ள ஆடைகளை அணிந்து, கதாநாயகிகளை விட அழகு குறைவான பெண்களை பின்னணியில் முன் வரிசையில் ஆட விட்டு மற்றவர்களை பின்வரிசையில் ஆட விடுகின்றனர். பல லோகஷன்களில் மழையானாலும் குளிரானாலும் அங்கிமிங்கும் ஓடி ஆட்டத்தை காண்பித்து நாயக நாயகிகளை ஆட்டத்தில் எங்கோ தூக்கி நிறுத்துகின்றனர்.

பைட்டு சீக்வென்ஸ் ஆனால் கதாநாயகன் கையை மடக்கி முஷ்டி செய்து லேசாக குத்தினாலே அடியாட்கள் பறக்க வேண்டும். சும்மா பறக்க அவர்கள் இலை ஒன்றும் இல்லையே. எதையாவது வைத்து வேகமாக அவர்கள் தூக்கி எறியப்படுகிறார். இந்த பைட்டுகளுக்காகவே அவர் கடுமையான பயிற்சிகள் எடுத்திருந்தாலும் சில சமயம் எசகுபிசகாகி உடம்பில் எந்த பாகத்தையாவது உடைத்துக் கொள்பவர்களும் உண்டு. நிரந்தர ஊனம் ஆனவர்களும் இருக்கிறார்கள். அடிபட்டால் வீட்டில் ஓய்வெடுக்கும் காலகட்டத்தில் பூவாவுக்கு லாட்டரி தான்.

ஹீரோ அருவியின் மேலிருந்து குதிப்பது மாதிரி தெரியும். ஆனால் அது ஹீரோ இல்லை. அவரின் டூப்பாக நடிக்கும் ஒரு ஸ்டண்ட் பார்ட்டி. ஆனால் கைதட்டலும் பாராட்டும் ஹீரோவுக்கே. நாயக/நாயகிகளின் அருமை பெருமைகளை சினிமாவில் தூக்கிப் பிடிக்கும் இந்த துணையெழுத்துக்களின் செயல் உயிர் வாழ்வதற்கு தேவையான ஒரு சில நூறுகளை சம்பாதிப்பதற்கு மட்டுமே. அந்த வட்டத்தை விட்டு வெளியே வந்தால் சமூகம் அவர்களுக்கு கொடுக்கும் பட்டம் சினிமாக்காரி இல்லையென்றால் சினிமாக்காரன். முன்னனி நடிகனையும், நடிகையையும் தெய்வமாகப் பார்க்கும் நம் சமுதாயத்தில் துணையெழுத்துகளைப் பார்ப்பது வெறும் சினிமாக்காரி/சினிமாக்காரனாக மட்டுமே. நடிகர் தெய்வங்களும் சினிமாக்காரன் என்று சொன்னாலே காதில் ஈயம் காய்ச்சி ஊத்தியது போல நிறைய மக்கள் அலறுவார்கள். இதே கடைநிலை துணையெழுத்துக்களை சினிமாக்காரர்கள் என்று அழைப்பதை மட்டும் வஞ்சகமில்லாமல் மனப்பூர்வமாக உளமகிழ்ந்து உவப்புடம் கூறி திளைப்பார்கள்.

சினிமாக்காரனாவது பரவாயில்லை ஆச்சரியமாக சில சமயங்களில் பல இடங்களில் பலரால் பார்க்கப்படுவான். சினிமாக்காரியின் பாடு தான் திண்டாட்டம். 'அவ சினிமாவில தானே இருக்கிற எவனாச்சிம் முடிச்சிருப்பான்'. தமிழ் சினிமா துறை என்பது கயவர்களும், கயவாளிகளையும் தான் பெற்றுள்ளது. சினிமாவில் நுழைபவர்கள் முக்கியமாக பெண்கள் தங்களின் மானமான ஒன்றை கொடுக்காமல் உள்ளே நுழைய முடியாது என்ற உருவம் தான் பெருவாரியானவர்களின் மனதில் இருக்கிறது. அதே சினிமாவில் தான் முன்னனி நடிகர்களாக உள்ள தெய்வங்களும் இருக்கின்றனர் என்பதை பார்க்க நிறைய பேர் மறந்து விடுவார்கள்.

திருமணத்திற்கு முன் சென்னை கோடம்பாக்கத்தில் வசித்த போது பக்கத்து வீட்டில் சினிமாவால் வாழ்ந்து வந்த ஒரு குடும்பம் இருந்தது. குடும்பத்து ஆண் ஒரு வேலைக்கும் போகாமல் வீட்டில் சோறு சமைத்து அவர்களுடைய பெண் குழந்தையை பார்த்துக் கொள்வார். அந்த அம்மணியோ கோடம்பாக்கத்தில் குரூப் டான்ஸ் வேலை பார்த்து வந்த துணை நடிகை. அவர் தான் குடும்பத்தின் ஆதாரம். சினிமா ஸ்டிரைக் காரணமாக அவர்கள் பட்ட கஷ்டம் கண் கூடாக அறிவேன். சினிமா வேலைக்கு அந்த அம்மணி செல்ல முடியாமல், கணவனோ ஒரு உதவக்கரையாக ஒரு குழந்தையை வைத்துக் கொண்டு கஷ்டப்பட்டதை அறிவேன். அவர்களை விளிக்க வேண்டும் என்றால் 'அந்த சினிமாக்காரி வீடா?" என்று விழிப்பார்கள். ஸ்டிரைக் முடிந்து வேலைக்கு போனால் அந்த அம்மணி பல நாட்கள் வீட்டுக்கு வரமுடியாது. அவுட்டோர் சூட்டிங் என ஊட்டி, பாம்பே,கல்கத்தா என குழுவுடன் சுத்த வேண்டும். அதே அப்பார்ட்மெண்டில் பல வாலிபர்கள் ஒரியாவிலிருந்து சென்னைக்கு வந்து தங்கி படித்துக் கொண்டவர்கள். அவர்கள் அந்த அம்மணியை பார்க்கும் பார்வையும் சரி இருக்காது. என்னை உட்பட என் அறையில் தங்கியிருக்கும் எல்லோர் பார்வையும் சரி இருக்காது. அந்த பெண்ணை பார்த்தால் எல்லோருக்கும் நமுட்டு சிரிப்பு தான்.

ஒரு நாள் ஒரு புதிய பெண்மணி அந்த அம்மையாருடன் உரையாடிக் கொண்டிருந்தது என் காதில் விழுந்தது. பேச்சுவாக்கில் சினிமாவைப் பற்றி திரும்பியதும், அந்த புதிய பெண்மணி இவர் சினிமாவில் இருப்பவர்கள் என்பது தெரியாமல் "சினிமாவுல இருக்கிறவங்க எல்லாம் ஒழுங்க?" என்று கேட்டு வைக்க, அந்த சினிமா பெண்மணி கொதித்து போனார்.'வெளியில இருக்குறவங்க மட்டும் ஒழுங்க?" என்று தொடங்கி நாக்கு புடுங்கிற மாதிரி நாலு வார்த்தைகள் பாதி கண்ணீருடன் கேட்ட அந்த சினிமா பெண்மணியின் வார்த்தைகள் என் பார்வையை மாற்றி வைத்தது.

Image hosted by PicsPlace.to

அவர்களைப் பற்றி கொஞ்சம் கொஞ்சமாகத் தெரிந்து கொள்ள அவர்கள் குடும்பமே சினிமாவை அண்டித் தான் பிழைக்கிறது. அந்த அம்மணியின் சகோதரர் ஸ்டண்டு பார்ட்டியாக இருப்பதையும் சொன்னார்.'முதல்வன்' படத்தின் பைட்டு சீக்வென்ஸில் எசகுபிசாகாக கீழே விழந்து கழுத்தில் அடிபட, 2 மாதம் பெட் ரெஸ்டில் இருந்திருக்கிறார். 'ரன்' படத்தில் எப்போதுமே வில்லனுடன் பல காட்சிகளில் அவருடைய சகோதரர் வருவதாகச் சொல்லி சந்தோசப்பட்டார். எப்படியாவது சினிமாவில் நுழைந்து விட வேண்டும் என்ற கனவுடன் வரும் பல இளைஞர்கள்/இளைஞிகள் ஒரு புறம் இருக்க, பல துணைநடிகைகள், நடிகர்கள் தங்கள் முகம் படத்தில் வராவிட்டாலும் பரவாயில்லை என்று அதை ஒரு வாழ்க்கை தொழிலாக செய்பவர்கள் சென்னையில் எத்தனையோ பேர் இருக்கிறார்கள்.

எதோ ஒரு படத்தில் துக்கடா வேடத்தில் வந்து செல்லும் பெண்மணி சில சந்தர்ப்பங்களால் போலீசில் மாட்டுக் கொள்ளும் போது "விபச்சாரம் செய்த துணை நடிகை கைது" என்ற பத்திரிக்கை செய்திகள் ஒட்டு மொத்த துணைநடிகைகள் சமுதாயத்தையும் விபச்சாரியாக பார்க்க வைக்கும் அவலம் இன்றும் நடந்துக் கொண்டிருக்கிறது. துணைநடிகை/நடிகர் டான்ஸராக இருக்கும் பட்சத்தில் யாவரும் கலாவாகவோ, புலியூர் சரோஜாவாகவோ, பிரபு தேவாவாகவோ ஆகிவிடுவதில்லை. ஸ்டண்ட் பார்ட்டியாக வரும் யாவரும் 'ஜூடோ'ரத்தினமாகவோ,கனல் கண்ணணாகவோ ஆகிவிடுவதில்லை. ஸ்ரீதர் என்ற துணை நடிகர் டான்ஸராக இருந்தவர். நிறைய மேடைகளில் தேவயானி கூட ஆட பார்த்திருக்கிறேன். அது போக புகழ்பெற்ற பாடல்களில் முன்னனியில் ஆடிக் கொண்டிருந்தவர் தன் திறமையால் இப்போது டான்ஸ் மாஸ்டராக ஆகியிருப்பதாக பெருமிதத்துடன் டிவியில் பேட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தார். பார்க்க சந்தோசமாக இருந்தது.

அது போக தமிழ்படத்தில் குரூப் டான்ஸ் வைத்து ஏதாவது பாட்டு வந்தால் முக்கியமாக நான் தேடுவது 'ஜப்பான்' குமார் என்பவரை. நீங்கள் எவ்வளவு பேர் அவரை கவனித்திருப்பீர்கள் என்று தெரியவில்லை. அவரது நடனத்தை ரசிக்க என் நண்பர்களில் பெரிய ரசிக பட்டாளமே இருக்கிறது. எத்தனை வேலையிருந்தாலும் அப்படியே போட்டு விட்டு ஹீரோவுக்காக அல்ல, ஜப்பான் குமாருக்காக பாடல்களை பார்ப்போம். அவரை மிக எளிதாக அடையாளம் தெரிந்துக் கொள்ள வேண்டுமென்றால் நிறைய டப்பாங்குத்து தனமான பாடல்களில் குரூப் டான்ஸ் ஆடிக்கொண்டிருக்கும் போது ஏதாவது கோணங்கி சேட்டைப் பண்ணிக் கொண்டே குறுக்காலும் நெடுக்காலும் போய் வருவார். எடுத்துக்காட்டாக, 'ஜிம்பலக்க ஜிம்பலக்க' பாடலிலும், நிறைய பிரபுதேவா படல்களிலும், "யப்பா யப்பா அய்யப்பா, கண்ணுல காசை காட்டாப்பா' பாடலிலும், 'காசு மேல காசு வந்து' பாடலிலும் அவர் செய்யும் குரங்கு சேட்டைகளை இன்றளவும் நான் இரசிப்பேன்.

இடமிருந்து வலமாக வட்டத்தில் இருப்பவர் ஜப்பான் குமார்
Image hosted by PicsPlace.to

சோகமான விசயம் என்னவென்றால் அவர் இன்னமும் பின்னனியிலும், குறுக்காகவும் நெடுக்காகவும் போய் ஆடிக் கொண்டிருக்கிறார். அது போல் அழகன் படத்தில் வரும் அந்த சிறுவன் ராபார்ட்டும் நடனத்தில் நல்ல மூவ்மெண்ட் காண்பிப்பார்.அவரையும் பலபடத்தில் குரூப் டான்ஸில் பார்த்தது மட்டுமல்லாமல் ஒரு படத்தில் ஹீரோவுக்கு இணையாக வேறு நடித்திருந்தார். இப்படி எத்தனையோ பேரை சொல்லிக் கொண்டே போகலாம்.

ஒவ்வொரு நாட்டு சினிமாவிலும் தனித்தன்மையை காட்ட ஒன்று இருக்குமானால் நம் தமிழ் சினிமாவின் தனித்தன்மை பாடல்களின் நடனமும், படத்தில் வரும் பைட்டுகளும் தான். இப்படி பல துணையெழுத்துக்களை வாழவைக்கும் தமிழ்சினிமாவில் பல படங்களில்(எல்லா படங்களிலும் எனச் சொல்ல மாட்டேன்) பாட்டும்,டான்ஸும், பைட்டும் கட்டாயம் இருக்கவேண்டும் என்பது என் கருத்து. உங்கள் கருத்து?

இந்த பதிவின் வாக்கு எண்ணிக்கை: . பக்கத்திலுள்ள ஸ்டாரை மவுசால் போட்டுத் தாக்கினால் எனக்கு மவுசு ஏறும். நன்றி:-)

உங்கள் கருத்துக்களை இட

திருப்பி தாக்கியவர்கள்:
//அது போக தமிழ்படத்தில் குரூப் டான்ஸ் வைத்து ஏதாவது பாட்டு வந்தால் முக்கியமாக நான் தேடுவது 'ஜப்பான்' குமார் என்பவரை. நீங்கள் எவ்வளவு பேர் அவரை கவனித்திருப்பீர்கள் //

Hey! i like him too. first read abt him somewhere. Etho oru scene'la muzukka vanthathukku treat kuduthaarnu padicha koncha naaLla antha paatu paarthaen. some prabhu deva or his bro(forgot the name)'s song. then started looking for him in songs. :)

have to admit that i am quite surprised that you wrote abt him :)
 
விஜய்,

பாலசந்தரின் 'ஒரு வீடு இரு வாசல்' திரைப்படம் பாத்தீங்களா? அதில் கோடம்பாக்கம் துணை நடிகர்களில் வாழ்க்கையைப் பற்றி ரொம்ப அருமையாக காட்டியிருப்பார் பாலசந்தார். கதானாயகி படிகட்டின் மேலிருந்து கீழே உருண்டு விழுகிற ஒரு காட்சியில் ஒரு துணை நடிகையை டூப்பாகப் போட்டு அந்த காட்சியை பல டேக்குகள் எடுப்பார்கள். அந்தப் பெண்ணுக்கு கை கால்களில் எல்லாம் அடிபட்டுவிடும். வலியைப் பொறுத்துக்கொண்டு அத்தனை டேக்குகளிலும் உருண்டு விழுவாள். ரொம்ப உருக்கமான காட்சி அது.

தாரா.
 
இப்போது தான் ஹோட்டல் ருவாண்டா பார்த்த திகைப்பில் இருக்கிறேன். கிடைச்சா பாருங்க. கண்களில் நீர் வராத குறை. துணை நடிகர்/கைகள் பற்றி ரெண்டு நாள் கழிச்சு பதிகிறேன். ருவாண்டாவின் பாதிப்பு இன்னும் கொஞ்ச நாளைக்கு இருக்கும். அதன் பிறகுதான் எல்லாம்.
 
/இப்போது தான் ஹோட்டல் ருவாண்டா பார்த்த திகைப்பில் இருக்கிறேன்./
அட நீங்களுமா! நேற்றிரவுதான் நான் பார்த்தேன்

விஜய் இது நல்ல பதிவு.
 
ஆமாம் விஜய், துணை நடிகர்/நடிகைங்களைப் பத்தி நீங்கள் எழுதினது நிஜம்தான்.
நம்ம மாமிகூட சாலிகிராமத்துலேதான் இருக்காங்க. அங்கே சில துணைநடிகைகளுடன் பேச
வாய்ப்புக்கிடைத்தது. அப்ப அவுங்க எப்படியெல்லாம் மனக்கஷ்டத்தோட அவுங்க வாழ்க்கையைப்
பத்திச் சொன்னாங்கன்றது இப்ப உங்க பதிவைப் பார்த்ததும் நினைவுக்கு வருது.

என்றும் அன்புடன்,
துளசி.
 
ஆகா மதி, நீங்களும் ஜப்பான் குமார் டான்ஸை ரசிப்பீங்களா? அவர் பாடலில் செய்யும் சேட்டைகள் கலக்கல். இல்லையா?

தாரா, இந்த படத்தை பற்றியும் குறிப்பிட வேண்டுமென நினைத்தேன். படம் பெயர் ஞாபகத்துக்கு வரவில்லை. நெடுநாள் முன்பு இந்த படத்தை பார்த்திருந்ததால் கதையும் ஓரளவு மறந்து விட்டது. பின்னூட்டத்தில் சொல்லியமைக்கு நன்றி. படிப்பவர்களுக்கு பயனுள்ளதாய் இருக்கும்.

நரேன், ஹோட்டல் ரூவாண்டா டிவிடியும், விசிடியும்(ஒரிஜினல்) விற்பனைக்கு இங்கு வந்து விட்டது. வந்த புதிதில் விலை அதிகம் என்பதால் இன்னும் வாங்கவில்லை. நல்ல படம் என கேள்விப் பட்டிருக்கிறேன். போற்றிப் பாதுக்காக்கப்பட வேண்டிய படம் என்றால் சொல்லுங்கள், நான் இப்போதே வாங்கி பார்த்து என்னுடைய சிறிய பட நூலகத்தில் வைத்துக் கொள்கிறேன்.

நரேன் அது மாதிரி நீங்கள் 'துணை'யெழுத்துக்களை கட்டாயமாக விவரித்து எழுதுங்கள். சென்னையில் பிறந்து வளர்ந்தவரகையால் உங்களுக்கு இந்த துணைகளை பற்றிய பார்வை, தெரிதல் ஆகியவை அதிகமாக இருக்கும்.

நன்றி -/பெயரிலி.

நன்றி துளசியக்கா. ஒரு துணை நடிகை பற்றிய குடும்பத்தை அறிந்ததால் இந்த பதிவை எழுத தூண்டியது. ஒருவரின் வாழ்க்கையே இவ்வளவு கஷ்டமாக இருக்கும் போது....
 
சினிமாப்பதிவுகளைப் பற்றிப் பெரிதாகப் பார்ப்பதில்லை என்றாலும் இதில் உள்ள மனிதம் என்னைக் கவர்கிறது. நன்று விஜய்.
 
நன்றி செல்வராஜ், சம்மி.

சம்மி, நோபால்-லை பார்த்திருப்பேன் என் நினைக்கிறேன். ஆள் தெரிந்தால் அவர் அடையாளம் தெரியலாம்.
 
நல்ல பதிவு அல்வாசிட்டி.. இந்தப்பின்னூட்டம் தாரா என்பவருக்காக.. 'ஒரு வீடு இரு வாசல்' கதையில் இயக்குனர் 'டூப்' நடிகர்களின் வாழ்க்கையை சோகத்தோடு சொன்னாலும், நீதிமன்றப்படிகளில் இருந்து உருண்டு விழும் காட்சியில் அங்கு இயக்குநர் (கதைப்படி) 'டூப்'புக்கேஇன்னொரு (நிஜமான) 'டூப்பைப் போட்டு எடுத்திருப்பார். அதைப்பார்த்ததும், இயக்குநரின் மீதிருந்த மதிப்பே போய் விட்டது...
 
விஜய், வாங்கிவிடுங்கள். இது தவிர கீழ்க்காணும் படங்கள் இருக்கிறதா என்று பாருங்கள். கிடைத்தால் வாங்கி சேருங்கள். சென்னை வரும்போது பார்த்து கொள்கிறேன். நான் பார்க்க நினைக்கும் படங்கள் எவற்றையும், இங்கிருக்கும் டிவிடி கடைகள் வைத்திருப்பதில்லை.

1. Microcosmos
2. Carandiru
3. Abril Despedaçado
4. Savior (இந்தப்படம் பற்றி தனியாக எழுதுகிறேன்)
 
நன்றி இனியவன்,பனசை.

நரேன்,

அந்தப் படங்களை தேடிப்பார்க்கிறேன். அது எந்த வகைப்படங்கள்(குறும்படம்,விவரணபடம்...) என்ற குறிப்பையும் சேர்த்தால் தேடுவதற்கு வசதியாக இருக்கலாம்.
நீங்கள் முன்னாடி கொடுத்திருந்த ஒரு படத்தொகுப்பையும் தேடிக் கொண்டிருக்கிறேன். அகப்பட மாட்டேங்கிறது. வழக்கமாக போகும் இரு கடைகளில் தான் தேடினேன். ஊரை சுத்தி நிறைய கடைகள் இருக்கு. ஒரு வாரயிறுதியில் இதற்கென்றே நேரம் ஒதுக்கி தேடுகிறேன்.
 
நான் சொன்னதில் Microcosmos தவிர மற்றவை திரைப்படங்கள் தான். Microcosmos மட்டுமே விவரண படம்.
 

உங்கள் கருத்துக்களை இட


<< திரும்ப முன் பக்கத்துக்கு போ

This page is powered by Blogger. Isn't yours? தமிழ் அசைபட இணையச் செயலி தமிழ் விக்கிபீடியா

-->