<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar/9439067?origin\x3dhttp://halwacity.blogspot.com', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script> <!-- Remove below comment line to show the content. Added for meta redirection --> <!--

போட்டுத் தாக்கு!!!!!

எள்ளோடு எலி புழுக்கையும் எண்ணைக்காக காயுதாம்

-ல் போட்டுத் தாக்கியது

போய் வருகிறேன்

Difficulty in reading this post due to font issues? Click here for a PDF copy. Works best if you right-click the link and select 'Save target as...'
இந்த பதிவை போட்டுத் தாக்கியவர் : Vijayakumar
ப்ளாக்கரிலிருந்து தற்காலிமாக என்னை விடுவித்துக் கொள்கிறேன்.

எனக்கு பயிற்சிகளமாக இருந்த தமிழ்மணத்திற்கு நான் என்றும் கடன் பட்டவன். தமிழ்மணமும் அங்கிருக்கும் நல்ல உள்ளங்களும் உடல்நலமும் மனநலமும் என்றும் பெற்று வாழ வாழ்த்துகிறேன்.

சில நாள் வாசிப்பில் ஆழ்ந்திருக்கப்போகிறேன்.

இந்த பதிவின் வாக்கு எண்ணிக்கை: . பக்கத்திலுள்ள ஸ்டாரை மவுசால் போட்டுத் தாக்கினால் எனக்கு மவுசு ஏறும். நன்றி:-)

-ல் போட்டுத் தாக்கியது

திருவாசகத்துக்கு உருகாதார் ஒரு வாசகத்துக்கும் உருகார்

Difficulty in reading this post due to font issues? Click here for a PDF copy. Works best if you right-click the link and select 'Save target as...'
இந்த பதிவை போட்டுத் தாக்கியவர் : Online Security Tips and Tricks for Kids
அன்புள்ள மக்களே,

நேற்று ஒரு இனிய அனுபவம். ஆமாம் இசையராஜாவின் "திருவாசகம் - இசை வேள்வி" கேட்க நேர்ந்த்து.. அப்படி அனந்த கண்ணீர் வந்துவிட்டது.. இன்னும் கேட்டேயிருக்கேன்.. காசு கொடுத்து வாங்கிய ஒலிபேழையில்..

இதற்கு விமர்சனம் எழுத வராலை நான்.. இதை மற்றவர்களும் விலைகொடுத்து (இதற்கு விலை கொடுக்கு முடியாது, இதை எழுத உதவிய ஒலிபேழைக்கு வேணா கொடுக்கலாம்) வாங்கி கேட்டு இன்புறுகுங்கள்

ஞான் பெற்ற இந்த இன்பம் பெறுக இவ்வையகம்...



மக்களே, இந்த சுட்டியை உங்கள் வலைப் பக்கங்களிலும் போட்டு, இந்த முயற்சிக்கு ஒரு ஊக்கமளியுங்கள்..

இந்த பதிவின் வாக்கு எண்ணிக்கை: . பக்கத்திலுள்ள ஸ்டாரை மவுசால் போட்டுத் தாக்கினால் எனக்கு மவுசு ஏறும். நன்றி:-)

உங்கள் கருத்துக்களை இட

திருப்பி தாக்கியவர்கள்:
done...

-->> for those who're in US :: At this time we are seeking volunteers who can help with the distribution in their local cities starting July 2. If you can volunteer please send us an mail to: tisusa@NOSPAMgmail.com or call Dr. Sankar Kumar @ 919-413-3913. <<--
 
This comment has been removed by a blog administrator.
 
மிக்க நன்றி சங்கர். இன்று இரவுக்குள் இந்த பேனரை ஹல்வாசிட்டி வலைப்பதிவில் சேர்த்து விடுகிறேன்.

சிங்கப்பூர் மக்களே, இந்த ஒலிப்பேழை அல்லது குறுந்தகடு சிங்கப்பூரில் விற்பனைக்கு வந்து விட்டதா என்று தெரியுமா? லிட்டில் இந்தியா பக்கம் 2 வாரமாக போக முடியவில்லை. ஒலி 96.8 எப்.எம்-ல் ஏதாவது அறிவித்திருந்தால் சொல்லுங்களேன்.
 
அல்வா,
நீங்கள் எங்கு வாங்கினீர்கள்?..நானும் தீவிர 'மொட்டை' ரசிகன் ..சிங்கை வந்ததும் முதல் வேலை இதுதான்.
 

உங்கள் கருத்துக்களை இட


<< திரும்ப முன் பக்கத்துக்கு போ

பாடல்களும் பாடல்கள் வரியும்-2 (ராஜபார்வை)

Difficulty in reading this post due to font issues? Click here for a PDF copy. Works best if you right-click the link and select 'Save target as...'
இந்த பதிவை போட்டுத் தாக்கியவர் : Vijayakumar
இளையராஜவின் ஞானி உள்ளத்தில் மலர்ந்த இன்னொரு பூ 'ராஜபார்வை'. பாடலும் பாடல் வரிகளும் கொடுத்திருக்கிறேன். அந்த படத்தைப் பற்றி எழுத வேண்டுமென்ற ஆசையிருக்கிறது. ஆனால் அந்த படம் பார்த்து வெகுநாள் ஆகிவிட்டதால் முழுவது ஞாபகமில்லை. 'அந்திமழை' பாடல் மாதவிக்காக கண் தெரியாத கமல்ஹாசன் டூயட் பாடுவது போல வரும். 'அழகில் அழகு' பாடல் வீட்டிற்கு வரும் மாதவியை காதல் மிகக் கொண்டு ஓவ்வொரு அங்கமாக கமல் தடவி வர்ணித்துப் பாடுவது போல வரும். மயக்கும் அந்த இரு பாடல்களையும் கேளுங்கள். இந்த பாடல்களை எழுதியவரும் கவிஞர் வைரமுத்து தான் என நினைக்கிறேன்.








பாடியவர்கள் : எஸ்.பி.பி & ஜானகி

ஆண்:

அந்திமழை பொழிகிறது
ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது

அந்திமழை பொழிகிறது
ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது

இந்திரன் தோட்டத்து முந்திரியே
மன்மத நாட்டுக்கு மந்திரியே
அந்திமழை பொழிகிறது
ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது

பெண்

தேனில் வண்டு முழ்கும் போது
பாவம் என்று வந்தாள் மாது
நெஞ்சுக்குள் தீயை வைத்து மோகம் என்றாய்
தண்ணீரில் முழ்கிக் கொண்டே தாகம் என்றாய்

ஆண்

தனிமையிலே வெறுமையிலே
எத்தனை நாளடி இளைமையிலே
கெட்டன இரவுகள் சுட்டன கனவுகள்
இமைகளும் சுமையடி இளமையிலே

ஆண் : அந்திமழை பொழிகிறது
பெண் : ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது

தேகம் யாவும் தீயின் தாகம்
தாகம் தீர நீ தான் மேகம்
கண்ணுக்குள் முள்ளை வைத்து யார் தைத்தது
தண்ணீரில் நிற்கும் போதே வேர்கின்றது

பெண்:
நெஞ்சுக்கொரு கொஞ்சம் இரு
தாவணி விசிறிகள் வீசுகிறேன்
மன்மத அம்புகள் தைத்த இடங்களில்
சந்தனமாய் எனை பூசுகிறேன்

பெண் : அந்திமழை பொழிகிறது
ஆண் : ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது
பெண் ; சிப்பியில் தப்பிய நித்திலமே
ரகசிய ராத்திரி புத்தகமே
அந்திமழை பொழிகிறது
ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது

----------------------------------------------

பாடியவர் : ஜேசுதாஸ்

(ஹம்மிங்)
அழகில் அழகு தேவதை
ஆயிரம் பாவலர் எழுதும் காவியம்
அழகில் அழகு தேவதை

கூந்தல் வண்ணம் மேகம் போல
குளிர்ந்து நின்றது
கொஞ்சுகின்ற செவிகள் ரெண்டும் கேள்வி ஆனது
பொன்முகம் தாமரை
பூக்களே கண்களோ
மனக்கண்கள் சொல்லும் பொன்னோவியம்
அழகில் அழகு தேவதை

சிப்பி போல இதழ்கள் ரெண்டும் மின்னுகின்றன
சேர்ந்த பல்லின் வரிசையாவும் முல்லை போன்றன
மூங்கிலே தோள்களோ தேன்குழல் விரல்களோ
ஒரு அங்கம் கைகள் அறியாதது
அழகில் அழகு தேவதை

பூ உலவும் கொடிகள் போல இடையை காண்கிறேன்
போக போக வாளைப் போல அழகைக் காண்கிறேன்
மாவிலை பாதமோ மங்கை நீ வேதமோ
இந்த மண்ணில் உன் போல் பெண்ணில்லையே

அழகில் அழகு தேவதை
ஆயிரம் பாவலர் எழுதும் காவியம்
அழகில் அழகு

இந்த பதிவின் வாக்கு எண்ணிக்கை: . பக்கத்திலுள்ள ஸ்டாரை மவுசால் போட்டுத் தாக்கினால் எனக்கு மவுசு ஏறும். நன்றி:-)

உங்கள் கருத்துக்களை இட

திருப்பி தாக்கியவர்கள்:
அல்வாசிட்டி அண்ணாச்சியாரே.. நடுராத்திரி ஒரு மணிக்கு ஒரு பதிவா?! ரொம்ப அநியாயம் சார் இது!

ரோம் நகரம் தீப்பிடிச்சு எறிஞ்சப்ப நீரோ மன்னன் பிடில் வாசிச்ச கதையா, அங்கே ஒரு பின்னூட்டத்திலே தமிழ் வளர்க்க பொராடிட்டிருக்காங்க.. நீங்க என்னடான்னா இருக்குற சுவடே தெரியாம இப்படி ஒரு பதிவு போடுறீங்க!
 
எங்கள் தலை, கொங்கு ராசா இந்த 'அழகில் அழகு தேவதை' பாட்டை ஏற்கெனவே ஓர் இரவில் கேட்டு, இங்கே அதைப் போட்டு, அதற்கு அல்வா சிட்டியாரே, நீரும் முதலாவதாக comment கொடுத்தீர் என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன் !!

நான் சொல்ல வருவது இதுதான்:
எங்கள் கொங்கு நாட்டுத் தங்கம், ராசாவின் கலை அனுபவத்திற்கு ஈடு இணை இங்கு இல்லை என்பதை பெருமையோடு கூறிக்கொள்ள விரும்புகிறேன்.

ராசா ராசாதான். :-)

- ஞானபீடம்
 
எப்ப ஊருக்குப் போறீங்க விஜய்?

ச்சும்மாத்தான் கேக்கறேன்.

என்றும் அன்புடன்,
அக்கா
 
விஜய்,
இளையராஜா மேல கமல்ஹாசன் கொண்டிருக்கிற ஆழமான பற்றுக்கு காரணம் இந்த மாதிரி பாடல்களை கேட்டா புரியுது!
 
அல்வா சிட்டி விஜய்,

அழகே அழகு பாடலை எழுதியவர் கண்ணதாசன்.( அங்கங்களை வர்ணிக்கும் பாடல்).

ஒரு அங்கம் கைகள் அறியாதது என்ற பாடல் வரிகளும், அதற்கு கமல்ஹாசனும், மாதவியும் தரும் முகபாவங்களும் மிகவும் பிரமாதம். சற்று பிசகினாலும் ஆபாசம் என பிறர் குரல் கொடுக்கும் ஆபத்திருக்கும் சங்கதியை எவ்வளவு அழகாக கையாண்டுள்ளார்கள்
 
மாயவரத்தாரே,

//அண்ணாச்சியாரே.. நடுராத்திரி ஒரு மணிக்கு ஒரு பதிவா?! //

இதென்ன புதுசா ஒரு கேள்வி. என்னுடைய பதிவு வாரநாட்களில் பெரும்பான்மையாக இரவு 11:30 தாண்டி தான் இருக்கும்.தூக்கம் விற்று எழுதுவதால்...

//ரோம் நகரம் தீப்பிடிச்சு எறிஞ்சப்ப நீரோ மன்னன் பிடில் வாசிச்ச கதையா, அங்கே ஒரு பின்னூட்டத்திலே தமிழ் வளர்க்க பொராடிட்டிருக்காங்க//

யோவ் போங்கைய்யா உருப்படியா எதாச்சி வேலையிருந்த பாருங்கைய்யா.

மத்தப்படி மொட்டையின் இந்த பாட்டைப் பற்றி ஒன்னுமே சொல்லாம போன எப்படி?
 
ஞானபீடம்

//எங்கள் கொங்கு நாட்டுத் தங்கம், ராசாவின் கலை அனுபவத்திற்கு ஈடு இணை இங்கு இல்லை என்பதை பெருமையோடு கூறிக்கொள்ள விரும்புகிறேன். //

பொள்ளாச்சிகாரருக்கு மறுப்பு சொல்ல முடியுமா? ராசா ராசா தான்!!

அதெல்லாம் சரி ஆடியோல பாட்டு கேக்கலியா? பாட்டு எப்படி?
 
துளசியக்கா,

//எப்ப ஊருக்குப் போறீங்க விஜய்?//

கூடிய விரைவில் எதிர்பாருங்கள்

நியூசிக்கு வந்த கவனிப்பீங்கள்ள?
 
//என்னல மக்கா ஒரே பாட்டா போட்டு தாக்குர? சரி வேற ஏதும் நல்ல இனிமையான பாடல் வேணும்னா சொல்லு ;-) ??? //

மக்கா ஆடியோ சிடியை பூரா தாப்பு.
 
//இளையராஜா மேல கமல்ஹாசன் கொண்டிருக்கிற ஆழமான பற்றுக்கு காரணம் இந்த மாதிரி பாடல்களை கேட்டா புரியுது! //

ஜோ, இளையராஜா மீது கமலுக்கு மட்டுமா பற்று?
 
ராஜ்குமார்,

உங்க பின்னூட்டம் பார்க்குறதுக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு.

//அழகே அழகு பாடலை எழுதியவர் கண்ணதாசன்.( அங்கங்களை வர்ணிக்கும் பாடல்).//

நன்றி. ஆனால் அந்திமழை பாடல் வைரமுத்து தானோ?

//ஒரு அங்கம் கைகள் அறியாதது என்ற பாடல் வரிகளும், அதற்கு கமல்ஹாசனும், மாதவியும் தரும் முகபாவங்களும் மிகவும் பிரமாதம். சற்று பிசகினாலும் ஆபாசம் என பிறர் குரல் கொடுக்கும் ஆபத்திருக்கும் சங்கதியை எவ்வளவு அழகாக கையாண்டுள்ளார்கள் //

அந்த வரிகளை டிரான்ஸ்கிரிப்ட் பண்ணும் போது ஒரு நிமிடம் நீங்கள் சொன்னது என் மனதிற்குள் வந்து போனது. படம் பார்த்து வெகுநாள் ஆகிவிட்டதால் காட்சி அதிகம் ஞாபகமில்லை. நல்ல தகவல். நன்றி.
 
இது என்ன சூப்பர் ஹிட்? இதை விட சூப்பர் ஹிட்டான மேட்டரெல்லாம் பார்க்க வேண்டுமா? மக்களே.. நீங்கள் விசிட் அடிக்க வேண்டிய ஒரே இடம்.. மாயவரத்தான் வலைப்பூ..!

இப்போது பரபரப்பான பார்வையில்..!!

நம்பர் 1 கொண்டாட்டம்.

மாயவரத்தான் வலைப்பூ... எப்பவுமே நம்பர் 1.
 
//இது என்ன சூப்பர் ஹிட்? இதை விட சூப்பர் ஹிட்டான மேட்டரெல்லாம் பார்க்க வேண்டுமா? மக்களே.. நீங்கள் விசிட் அடிக்க வேண்டிய ஒரே இடம்.. மாயவரத்தான் வலைப்பூ..! //

எத்தனை பேர் சார் கிளம்பியிருக்கீங்க இதுமாதிரி. வரவர வலைப்பதிவுகள் எல்லாம் குங்குமம் பத்திரிக்கை மாதிரி ஆகிபோச்சி. நம்பர் 1-ன்னு ஆளாளுக்கு சொல்ல ஆரம்பிச்சாட்டாங்கையா. விட்டா பனகல் பார்க்ல பேனர் தான் வைக்கனும் போல ஆளுங்களை சேர்க்க.
 
//போக போக **வாளைப்** போல அழகைக் காண்கிறேன்//

அய்யா சாமி அது **வாழை**. வாளைப் போல இருந்தா குத்தும்யா..:-)
 

உங்கள் கருத்துக்களை இட


<< திரும்ப முன் பக்கத்துக்கு போ

-ல் போட்டுத் தாக்கியது

பாடலும் பாடல் வரியும்-1

Difficulty in reading this post due to font issues? Click here for a PDF copy. Works best if you right-click the link and select 'Save target as...'
இந்த பதிவை போட்டுத் தாக்கியவர் : Vijayakumar
பாரதிராஜவின் 'நிழல்கள்' படம் ஒரு அருமையான படம். 3 இளைஞர்களின்('நிழல்கள்'ரவி,ராபர்ட் ராஜசேகர், சந்திரசேகர்) வாழ்க்கை போராட்டத்தையும், முக்கோண காதல் கதையையும் சுற்றி வரும் படம். இசை அமைப்பாளராக வேண்டுமென்று லட்சிய கனவு சந்திரசேகருக்கு, வேலை வாங்கி கொடுக்காத பட்டத்தை பட்டமாக பறக்கவிடுவார். கல்லூரி இளைஞராக ராபர்ட் ராஜசேகர் ஒரு பெண்ணை காதலிக்க, நிழல்கள் ரவியும் அதே பெண்ணை காதலிக்க ஒரு முக்கோணம் உருவாகிறது. ராபர்ட் ராஜசேகர் தனக்கென்று ஒரு உலகத்தில் லயித்து விடுவார். கஞ்சா அடிக்கும் பழக்கம் உள்ளவர். மனம் மயக்கும் மாலைப்பொழுதில் அவர் இந்த பாடல் வரிகளை பாடுவதாக படத்தில் அமைக்கப்பட்டிருக்கும்.

திரைக்காக கவிஞர் வைரமுத்து முதன்முதலில் எழுதிய வைரவரிகளால் ஆனது இந்த பாடல். நம்ம மொட்டையின் இசையில் அந்த வரிகள் சேர்ந்து காலத்தால் அழியாத இந்த பாடல் உருவானது. எந்த இடத்தில் இந்த பாடலை கேட்டாலும் முழுப்பாடலையும் கேட்காமல் அந்த இடத்தை விட்டு நகர்வது கிடையாது. அவ்வளவாக என்னை ஆட்கொண்டிருக்கிறது அந்த பாடல். கீழே பாடலை கேட்க விண்டோஸ் மீடியா ப்ளேயரும், பாடல் வரிகளையும் கொடுத்திருக்கிறேன். இந்த மாதிரி வாரத்திற்கு ஓரிரு ஆடியோ ப்ளாக் கொடுக்க முடிவு செய்துள்ளேன். என்னை கவர்ந்ததை உங்களுடன் பகிர்ந்துக் கொண்டு நீங்கள் மகிழ்வது எனக்கு மகிழ்ச்சியையே அளிக்கும்.































*******************

ஹே ஹோ ஹிம் லலா

பொன் மாலைப் பொழுது
இது ஒரு பொன்மாலைப் பொழுது
வானம் மகள் நானுகிறாள்
வேறு உடை பூணுகிறாள்
இது ஒரு பொன்மாலைப் பொழுது

ஹ்ம் ஹே ஹா ஓ ஹிம்ஹூம்

ஆயிரம் நிறங்கள் ஜாலமிடும்
ராத்திரி வாசலில் கோலமிடும்
ஆயிரம் நிறங்கள் ஜாலமிடும்
ராத்திரி வாசலில் கோலமிடும்
வானம் இரவுக்கு பாலமிடும்
பாடும் பறவைகள் தாளமிடும்
பூமரங்கள் சாமரங்கள் வீசாதோ

இது ஒரு பொன்மாலைப் பொழுது
வானமகள் நானுகிறாள்
வேறு உடை பூணுகிறாள்
இது ஒரு பொன்மாலைப் பொழுது


வானம் எனக்கொரு போதிமரம்
நாளும் எனக்கது சேதி தரும்
வானம் எனக்கொரு போதிமரம்
நாளும் எனக்கது சேதி தரும்
ஒரு நாள் உலகம் நீதி பெறும்
திருநாள் நிகழும் சேதி வரும்
கேள்விகளால் வேள்விகளை நான் செய்தேன்

இது ஒரு பொன்மாலைப் பொழுது
வானம் மகள் நானுகிறாள்
வேறு உடை பூணுகிறாள்
இது ஒரு பொன்மாலைப் பொழுது

*******************


நல்லா இருந்த/இல்லேன்னா ஒரு வரி பின்னூட்டத்துல சொல்லிட்டு போயிருங்க.

இந்த பதிவின் வாக்கு எண்ணிக்கை: . பக்கத்திலுள்ள ஸ்டாரை மவுசால் போட்டுத் தாக்கினால் எனக்கு மவுசு ஏறும். நன்றி:-)

உங்கள் கருத்துக்களை இட

திருப்பி தாக்கியவர்கள்:
அன்புள்ள விஜய்,

இந்தப் பாடலுக்காகவே இப்படத்தைப் பார்க்கணுமுன்னு நினைச்சிருந்தேன். இப்பத்தான்
மார்ச் மாதம் சிங்கை வந்தப்ப அந்தப் படத்தை வாங்கற சந்தர்ப்பம் அமைஞ்சது.
படம் என்னவோ சுமார்தான். ஆனா இந்தப் பாட்டுதான்... அருமை!!!!

என்றும் அன்புடன்,
துளசி.
 
"வானமகள் நாணுகிறாள்"
என்று வரவேண்டுமே
 
நன்றி துளசியக்கா.

சில விசயங்களுக்காக அந்த படம் எனக்கு பிடித்திருந்தது. முதல் விசயம் படத்தோடு கூடிய இளையராஜாவின் இசை. அனைத்து பாடல்களும் மிக மிக அருமையாக இருக்கும்.
 
//வசந்தன்(Vasanthan) said...
"வானமகள் நாணுகிறாள்"
என்று வரவேண்டுமே //

சுட்டிகாட்டியமைக்கு நன்றி வசந்தன். அந்த வரியை மாற்றி விட்டேன். டிரன்ஸ்கிரிப்ஷன் எரர் :-)
 
அது வெறும் ராஜசேகர் என்று நினைக்கிறேன் (One flew over the cukoo's nestஐ மனசுக்குள் மத்தாப்பு என்று ராபர்ட்-ராஜசேகர் சுடுவதற்கு முன் - அதே ராஜசேகர் தானே இது?).
 
//அது வெறும் ராஜசேகர் என்று நினைக்கிறேன் //

மாண்டீ ராஜசேகராய் தான் இருக்குமென நினைக்கிறேன். எழுதும் போது ஒரு ஆளா இல்லை இரு வேறு ஆளா என்று குழப்பமாக இருந்தது.

//One flew over the cukoo's nestஐ மனசுக்குள் மத்தாப்பு என்று ராபர்ட்-ராஜசேகர் சுடுவதற்கு முன் - அதே ராஜசேகர் தானே இது?). //

அதே அதே

தற்போது அவரை 'மைடியர் பூதம்' டிவி சீரியலில் பார்த்த ஞாபகம். டைட்டில் கார்டை கவனிக்கிறேன்.
 
என்கிட்டே இந்த பாட்டு இருந்தாலும் அல்வாசிட்டி ஸ்பீக்கர்ல எப்படித்தான் இருக்குது பாக்கலாம்ன்னு க்ளிக் பண்ணினா.... ஆர்டிஸ்ட்: விஜய்குமார், காப்பிரைட் அல்வாசிட்டி... ஆனாலும் இது டூமச்யா யோவ்... அப்புறம் பாட்டு லேசா வேகமா பாடுற மாதிரி ஒரு பீலிங்
 
தலீவர் முகமூடி,

முதன் முதலில் விண்டோஸ் மீடியா என்கோடர் பயன்படுத்துனேன். அந்த காப்பிரைட் மற்றும் மற்ற மேட்டர் எல்லாம் தெரியாமல் போட்டுவிட்டேன். அதை வலையேற்றிய பிறகு தான் கவனித்தேன். திரும்ப அழித்து பிறகு டயல் அப்பில் ஏற்றுவது முடியாத காரியம் ஆகையால் விட்டுவிட்டேன்.

தெரியாமல் நிகழ்ந்துவிட்ட இந்த தவறை மட்டும் மன்னித்தருள்க :-)

அப்புறம் இங்கே ஒழுங்க தான் பாடுகிறது அந்த பாட்டு. பைலின் சைஸை குறைப்பதற்க்காக பிட் ரேட்டை குறைய வைத்து என்கோட் பண்ணியிருக்கிறேன். ஆகையால் சுதி கம்மியாகத் தான் பாடும். கேட்கும் அளவில் இருந்ததால் வெளியிட்டேன்.
 
படத்தை பற்றியெல்லாம் எனக்கு தெரியாது. ஆனால்... பாடல் மிக அருமை. மீண்டும் கேட்க கிடைத்ததில் மகிழ்ச்சி. மேலும் தொடருங்கள்.
 
நன்றி சண்முகி. முதன் முதலில் இந்த ப்ளாக்கில் பின்னூட்டமிட்டு இருக்கிறீர்கள். தங்கள் பின்னூட்டத்திற்கு மெத்த மகிழ்ச்சி. இனி வாரம் என்னை கவர்ந்த பாடல்கள் அலங்கரிக்கும். அது காட்டாயம் உங்களை போன்ற ரசிக பெருமக்களுக்கும் கவரும் என்பதில் ஐயமில்லை. இசைஞானி வடிக்கும் இசையாச்சே, சும்மாவா?
 
// மன்னித்தருள்க // என்னுடைய இயல்பான சுபாவமே அதுதானே... மன்னித்தோம் :-) << சரி.. சரி... ஒரு சந்தர்ப்பம் கிடைச்சுடக்கூடாதே >>

// இனி வாரம் என்னை கவர்ந்த பாடல்கள் அலங்கரிக்கும் // மாயவரம் வேற இதே மாதிரி ஒரு திட்டத்தோட கெளம்பியிருக்கார் (பாட்டு இல்ல, மலரும் நினைவுகளாம்). எங்களயெல்லாம் ஒரு நிமிஷம் நெனச்சி பாத்தீங்களா... சரி, விதி வலியது... நடத்துங்க...
 
அருமையான பாடலிது. சிறுவயதில் இப்பாடலை விழா ஒன்றின் போது நிஜத்திலேயே ஒரு பொன்மாலைப் பொழுதில் மலைகள் சூழ்ந்த இடமொன்றில் ஒலிக்கவிட்டிருந்தார்கள். அந்த அனுபவம் மங்கிவிட்டிருந்தாலும் மறக்கமுடியாதது.

ஃபயர்பாக்ஸில் விண்டோஸ் மீடியா பிளேயரின் படம் தெரியவில்லை.

அப்புறம் " நம்ம மொட்டையின் இசையில்" இப்படி சொல்லியிருக்க வேண்டாமே!
 
முகமூடி,

தலைவிதியை யாராலும் மாற்ற முடியாது. இதெல்லாத்தையும் ஆராயாம அனுபவிங்க :-}}} கருத்துக்கு நன்றி.
 
நன்றி ராதாகிருஷ்ணன்

//ஃபயர்பாக்ஸில் விண்டோஸ் மீடியா பிளேயரின் படம் தெரியவில்லை.//

பயர்பாக்ஸில் தெரிகிற மாதிரி தான் முதலில் பாட்டை இட்டேன். ப்ளே பட்டனை தட்டாமலே எடுத்த உடனேயே பாடல் வந்து விடுகிறது. அது இந்த ப்ளாக்கை பார்ப்பவர்க்ளுக்கு திடீர் ஒலியால் அதிர்ச்சி வரலாம்.

யாருக்காவது எந்த டேக்கை பயர்பாக்ஸில் பயன்படுத்தினால் விண்டோஸ் ப்ளேயர் தெரியும் எனத் தெரிந்தால் சொல்லுங்களேன்.

//அப்புறம் " நம்ம மொட்டையின் இசையில்" இப்படி சொல்லியிருக்க வேண்டாமே! //
இளையராஜாவை நான் எப்போதும் செல்லமாக அழைப்பது 'மொட்டை' என்று தான். இசையின் ஞானியாக விளங்கும் இளையராஜாவை இப்படி அழைக்கலாமா என்பதை விட இசையின் மூலம் எங்கள் மனதை கொள்ளைக் கொண்டவர் என்ற உரிமையில் தான் அழைக்கிறேன்.
 
இளையராஜா , பாரதிராஜா , வைரமுத்து எப்போது இணைந்து இதனை போன்ற காவியங்களை படைக்கப்போகிறார்களோ தெரிய்வில்லை ..

கொசுரு : 'ஒரு நாள் ஒரு கனவு' பாட்டு கேட்டீர்களா?? மொட்டைஸ் மொட்டைஸ்தான் (அதே உறவு தாங்க)
 
///இளையராஜாவை நான் எப்போதும் செல்லமாக அழைப்பது 'மொட்டை' என்று தான். இசையின் ஞானியாக விளங்கும் இளையராஜாவை இப்படி அழைக்கலாமா என்பதை விட இசையின் மூலம் எங்கள் மனதை கொள்ளைக் கொண்டவர் என்ற உரிமையில் தான் அழைக்கிறேன்.///
என் நண்பர்கள் பலர் இளையராஜாவின் தீவிர ரசிகர்கள், அவர்களும் "மொட்டை" என்றுதான் அழைப்பார்கள். ஒருவேளை இது "சாம்பார் - ஜெமினி" போல செல்லப் பெயரோ ? :-).
 
உண்மையிலேயே வானம் எனக்கொரு போதி மரம். இந்த வரிகள் எழுதிய வைரமுத்து நன்றாகத்தான் எழுதிகொண்டிருந்தார் ஆரம்ப கால பாடல்களிலே.
 
அண்ணாச்சி..
பாட்டோ நீர் எழுதுனது கெடயாது;
மியூஜிக்கோ நீர் போட்டது கெடயாது;
சரி வுடு, இந்தப் படத்தயாச்சும் நீர் எடுத்தீரா
அதுவும் கெடயாது. அப்புறம் எதுக்குய்யா,
right-click பண்ணாக்க
வேண்டாமே... வேண்டவே வேண்டாமே
அப்டீன்னு alert குடுக்குறீரு!

வுட்டோமா நாங்க,
view source போனோம்ல,
தேடிப் புடிச்சோம்ல,
http://www.halwacity.com/vijay/PONMALAI_small.wma
கெடச்சுதுல்லா,
எறக்கிப்போட்டோமுல்ல!

ஹே ஹோ ஹிம் லலலா


------------
புதுசா பின்னூட்டம் போட்ட சண்முகிக்கு வரவேற்பு தூக்கலா இருக்கு! ம்...... புது கஸ்டமர கவர் பண்றீங்க! ok ok.. நடத்துங்க.
------------

- ஞானபீடம். {<<= வேண்டாமே... வேண்டவே வேண்டாமே; இங்கே CLICK செய்யவே வேண்டாமே!}
 
தாஸூ, ஒரு நாள் ஒரு கனவு இன்னும் கேட்கவில்லை.

நன்றி தாஸூ

//இது "சாம்பார் - ஜெமினி" போல செல்லப் பெயரோ ? :-). //

அதே அதே. நன்றி முத்து.
 
//உண்மையிலேயே வானம் எனக்கொரு போதி மரம். இந்த வரிகள் எழுதிய வைரமுத்து நன்றாகத்தான் எழுதிகொண்டிருந்தார் ஆரம்ப கால பாடல்களிலே. //

இப்போது கூட ரொம்ப rare-ஆக நல்ல பாடல்களை சில நேரம் கொடுப்பார். நன்றி தேன் துளி
 
//அண்ணாச்சி..
பாட்டோ நீர் எழுதுனது கெடயாது;
மியூஜிக்கோ நீர் போட்டது கெடயாது;
சரி வுடு, இந்தப் படத்தயாச்சும் நீர் எடுத்தீரா
அதுவும் கெடயாது. அப்புறம் எதுக்குய்யா,
right-click பண்ணாக்க
வேண்டாமே... வேண்டவே வேண்டாமே
அப்டீன்னு alert குடுக்குறீரு!//

ஞானபீடம் நீங்க சொன்னது எல்லாம் இல்லை தான். ஆனா அதை என்கோட் எழுதி ப்ளாக்குல போட்டிருக்கோம்ல. அட ஏங்க உங்களுக்கு கஷ்டம் ஒரு சோதனைக்காக அதை கொடுத்திருந்தேன். இப்போ அதை தூக்கியாச்சில்ல. தாரளமா உள்ள புகுந்து பார்க்கலாம் கண்ணா.

நன்றி ஞானபீடம்.
 
அல்வாசிட்டிக்கு ஜே.........
விஜய்க்கு ஜே........

நன்றி.
 
அண்ணே ஞானபீடம்,

நான் ஒரு கட்சி ஆரம்பிக்கப் போறேன். அதுக்காக 'ஜே' போட 100000 தொண்டர்கள் தேவைப்படுகிறார்கள். உடனே ஏற்பாடு பண்ண முடியுமா?

:-))))
 
என்னதான் இருந்தாலும் என்ஜாய் பண்றதுனா - "மடை திறந்து..." பாட்டு, பிக்சரைசேசனோட ... அட அட அட ...
-டண்டணக்கா
 
//என்னதான் இருந்தாலும் என்ஜாய் பண்றதுனா - "மடை திறந்து..." பாட்டு, பிக்சரைசேசனோட ... அட அட அட ...//

டண்டணக்க, இந்த பாடலும் நான் அடிக்கடி கேட்கும் பாடல் தான். ஒரு இளைஞனின் இசை அமைப்பாளர் ஆகும் ஆசை, ஒரு படத்தயாரிப்பாளர் அவனுக்கு இசை அமைக்க அட்வாண்ஸ் கொடுத்தவுடன் துள்ளளுடன் ஆரம்பிக்கும் இசையில் அவனுடைய கனவுகளை காட்சி அமைப்புகள் மூலம் அசத்தியிருப்பார் பாரதிராஜா. அந்த இரண்டு பாடல்களிலும் எஸ்.பி.பியின் குரலும் ஆதிக்கம் காலத்தால் அழியாது. அந்த படத்தில் எல்லா பாடல்களும் அருமை. 'பூங்கதவே தாழ் திறவாய்' கேட்டுப்பாருங்க. நன்றி டண்டணக்கா.
 
//மடை திறந்து பாயும் நதி அலை நான்,..
அந்த படத்துல, அதுதான் டாப்பு..
அப்புறம்.. ஒரு மாதிரியா இருந்தாலும்.. 'மொட்டை'ன்னு சொல்லும் போது தான்.. ஒரு பிரியம் வருது.. நீங்க அப்படியே மெயின்டெயின் பன்னுங்க அண்ணாச்சி..
 
ஒரு சிறு குறிப்பு: இது வரை வைரமுத்து எழுதிய திரையிசைப் பாடல்களில் அவரது மனைவி பொன்மணி வைரமுத்துக்கு பிடித்தத வரிகள்

வானம் எனக்கொரு போதி மரம்
நாளும் எனக்கது சேதி தரும்
 
This comment has been removed by a blog administrator.
 
This comment has been removed by a blog administrator.
 
This comment has been removed by a blog administrator.
 
This comment has been removed by a blog administrator.
 

உங்கள் கருத்துக்களை இட


<< திரும்ப முன் பக்கத்துக்கு போ

-ல் போட்டுத் தாக்கியது

முகங்கள்

Difficulty in reading this post due to font issues? Click here for a PDF copy. Works best if you right-click the link and select 'Save target as...'
இந்த பதிவை போட்டுத் தாக்கியவர் : Vijayakumar
இவருக்கோ அலுவலகத்தில் என்ன பிரச்சனையோ தெரியவில்லை? இப்படி போட்டு உதைக்கிறார் கணணியை. சில வருடங்களுக்கு முன் மின்னஞ்சலில் கீழ்கண்ட வீடியோ க்ளிப்பிங்ஸ் சகஜமாக அலைந்தது. என்சாய். கீழே ப்ளே பட்டனை தட்டி படத்தை பாருங்கள். மோசமான படத்தின் குவாலிட்டிக்கு மன்னிக்கவும்.


id=WindowsMediaPlayer1 width=245 height=240>




























இது எப்படியிருக்கு???? "PLAY" பட்டனை தட்டி அதையும் பார்த்துவிடுங்கள்.









இந்த பதிவின் வாக்கு எண்ணிக்கை: . பக்கத்திலுள்ள ஸ்டாரை மவுசால் போட்டுத் தாக்கினால் எனக்கு மவுசு ஏறும். நன்றி:-)

உங்கள் கருத்துக்களை இட

திருப்பி தாக்கியவர்கள்:
அட... அட்ரா சக்கை
 
நன்றி தாஸ். கூடிய சீக்கிரம் கனணி மக்கள் எல்லாரும் இந்த ரேஞ்சுல ஆகியிருவோம்னு நினைக்கிறேன்.... ஏற்கனவே கீபோட்டை போட்டு உடைக்கிறோம். என்னைக்கு மானிட்டர்ன்னு தெரியல....
 
விஜய், இந்த முதலாவது MS Media Player படம் ஆண்டுக்கணக்காக இணையவலம் வந்துகொண்டிருக்கின்றது. எனக்குப் பிடித்தது, இரண்டாவதுதான். உங்களுடையது என்றால், பாராட்டைப் பிடித்துக்கொள்ளுங்கள்.
 
நன்றி பெயரிலி.

யப்பா அந்த படம் இரண்டு வருடங்களுக்கு முன்பிருந்து இன்று வரை சக்கை போடு போட்ட படம்.

இரண்டாவது படமா? ஹி ஹி ஹி ஹி....

முழுவதும் என் கைவண்ணம் கிடையாது. ஆனால் என் கைவண்ணத்தில் ஃபிளாஷில் கஷ்டமைஸ் பண்ணப்பட்ட படம் ஹி ஹி...
 
கம்ப்யூட்டர் மனிதனைப் போல் சிந்திக்க ஆரம்பித்தால் தினமும் அது மனிதனை இப்படித்தான் உதைக்கும்.
 
நல்லா படம் காட்டுறீங்கோ அண்ணாச்சி !

ஞானபீடம்.
 
நன்றி முத்து.

//கம்ப்யூட்டர் மனிதனைப் போல் சிந்திக்க ஆரம்பித்தால் தினமும் அது மனிதனை இப்படித்தான் உதைக்கும். //

மனிதனும் கம்ப்பூட்டர் மாதிரி சிந்திக்க ஆரம்பித்தால் இப்படி தான் யாரிடமாவது உதை வாங்குவான். :-)
 
நன்றி ஞானபீடம்.

ப்ளாக் விளம்பரத்துல நவீன யுக்தி எல்லாம் கடைப்பிடிக்கிறீங்க போல.... ;-}
 
:-)))))
 
நன்றி துளசியக்கா

:-}}}}}}
 
//ப்ளாக் விளம்பரத்துல நவீன யுக்தி எல்லாம் கடைப்பிடிக்கிறீங்க... vijay.//

மரங்கள் ஓய்வை விரும்பினாலும், காற்று விடுவதில்லையே!

நா மறந்தாலும், நீங்க என்னய மறக்க வுடமாட்டீங்கய்யா!

ஞானபீடம். (<<= pls.DONT click here!)
 
//மரங்கள் ஓய்வை விரும்பினாலும், காற்று விடுவதில்லையே!//

ஞானபீடம், இது உண்மையில சீன பழமொழின்னு சொல்றீங்களா? இல்லை அன்பே சிவமா?
 
ச்சீனாவிலும் அன்பே சிவம்!

- ஞானபீடம்.
 
நன்றி ஞானபீடம்.

அடுத்த ப்ளாக் விளம்பர யுக்தி என்ன?
 
போகப் போகத் தெரியும்...!
இந்த பூவின் வாசம் புரியும்...!!

- ஞானபீடம். {<<= CLICK here on your own risk!}
 
நன்றி விசிதா.

ஆக மொத்தம் அந்த பொன்மொழி சீனா தான் இல்லையா?

வீடியோ படத்தில் முகம் தெரியவில்லை என்று தான் கீழே ஃப்ளாஷில் என்னுடைய முகம் போட்டு காண்பித்தேன். :{{{
 

உங்கள் கருத்துக்களை இட


<< திரும்ப முன் பக்கத்துக்கு போ

-ல் போட்டுத் தாக்கியது

என்னுடைய ஐடெண்ட்டி திருடப்பட்டது விசயமாக

Difficulty in reading this post due to font issues? Click here for a PDF copy. Works best if you right-click the link and select 'Save target as...'
இந்த பதிவை போட்டுத் தாக்கியவர் : Vijayakumar
போலி டோண்டுவாக, போலி திருமலையாக பல இடங்களில் டகால்ட்டி வேலை செய்து கொண்டிருக்கும் நாய் பிறவி & பெயர் இல்லாத பிச்சை என் பெயரை வைத்தும் இன்று ஒரு காரியம் செய்தார். என்னுடைய இட்லி பதிவில் திருமலை என்பவர் பெயரில் அவர் சாதீ வெறி இருப்பவர் போல தோற்றத்தை உருவாக்கிவிட்டு போனார். நான் தொழில் நுட்பம் தெரியாத கபோதி என்ற நினைப்பு அந்த போலிக்கு.

புத்தகம் படித்து விட்டு டகால்ட்டி வேலையை காண்பிக்கும் அவருக்கே இந்த ஏத்தம் என்றால் மென்பொருளிலே ஊறிப் போய் இந்த web security -களைப் பற்றி எத்தனை செமினார்கள், பயிற்சி பட்டறைகள் நடத்தியிருக்கும் எனக்கு எவ்வளவு ஏத்தம் இருக்கும். Identity theft-ஐ நிரூபித்து ஸைபர் கிரைமில் தெரிவித்தால் அந்த போலியை நொங்கு எடுத்து விடுவார்கள்.

என்னுடைய மின்னஞ்சல் முகவரி திருடப்பட்டு திருமலை அவர்களுக்கு நான் எழுதியது போல மின்னஞ்சல் போனது. நல்லவேளை அவர் என்னிடம் விளக்கம் கேட்டு இருந்தார். கீழே படத்தை க்ளிக்கி பெரிசாக்கி பாருங்கள்.


Image hosted by PicsPlace.to


அது என்னுடைய பெயரில் திருமலை என்பவருக்கு அனுப்பப்பட்ட ஒரு போலி மின்னஞ்சல். அந்த மின்னஞ்சலுக்கு கீழேயே http://www.indiasec.com/ இந்த முகவரி இருக்கிறது. அந்த முகவரியினூடே சென்று பார்த்தால் http://www.indiasec.com/fakemail/sendfake.html இது வரும். இதிலிருந்து யாருக்கும் யார் பெயரிலும் போலியாக மின்னஞ்சல் அனுப்பலாம். இதே முறையில் என் பெயரில் திருமலைக்கு நான் அவரைத் திட்டியதாக அனுப்பியிருந்தார் குறி இல்லாத கபோதி.

என் பெயரை கெடுக்க நினைக்கும் அந்த போலிக்கு கடைசியாக ஒரு எச்சரிக்கை "என் பெயரை வைத்து விளையாடுவாயா விளையாடு. எப்படி நீ வந்தாலும் என்னால் இனம் காண முடியும். நான் எதற்கும் சளைக்கிறவனில்லை".

லாலலலா...லாலலலா..லாலலலா....

டியர் ரீடர்ஸ், உங்களுக்கு என் பெயரில் மின்னஞ்சல் மோசமாக வந்திருந்தால் என்னை உடனே njvijay at yahoo dot com-ல் தொடர்புக் கொள்க (போலியாக அல்ல).

இந்த பதிவின் வாக்கு எண்ணிக்கை: . பக்கத்திலுள்ள ஸ்டாரை மவுசால் போட்டுத் தாக்கினால் எனக்கு மவுசு ஏறும். நன்றி:-)

உங்கள் கருத்துக்களை இட

திருப்பி தாக்கியவர்கள்:
நல்லவேலை செய்தீர்கள். இப்படியாக ஆளைக் கையோடு பிடித்தால், பாதிச்சிக்கல் தீர்ந்துவிடும்.
 
டைனமிக் ஐபி, வெப் ரேப்பர், அனானிமஸ் மின்னஞ்சல், indiansec.com என்று சுற்றி வளைத்து டகால்ட்டி வேலை காட்டினாலும் என்னுடைய ip sniffer சுத்தி சுத்தி கடைசியாக கை காட்டும் சில விவரங்கள் கீழே...

Country Flag County / State / Province : MELAKA
City: MALACCA
ISO Country Code : MY
Country ISP : MALAYSIA ADSL-STREAMYX-TMNET

அது டைனமிக் ஐபி ஆகையால் பல ஐபிகளை காண்பிக்கும் என்பதால் ஐபியை நான் இங்கே கொடுக்க்கவில்லை + வெப் ரேப்பர் வழியாக போனால் ஐபியை அது காண்பிக்காது. அப்படியிருந்தும் வெப் ரேப்பரில் சில ஓட்டைகள் உண்டு.
 
அல்வா, அந்த அசாமியின் இந்த விளையாட்டால், தற்காலிக குழப்பத்தை தவிர, அவர் நினைக்கும் எதுவும் நிறைவேறப்போவதில்லை. ஆனால் திருமலை ஒரு 'சாதி வெறியர்' என்பதில் என்பதில் எனக்கு அணுவளவும் சந்தேகமில்லை. இதை ஒரு கயவன் சொன்னதாலேயே பொய்யாகிவிடாது. இந்த ஆசாமியின் கயமைத்தனமான வேலையால் இது போன்ற சில உண்மைகள் மழுங்கி போகக்கூடும். இதைக்கூட உணராத முட்டாளாய் அவர் இருக்கிறார்.
 
மேலே உள்ளதை எழுதியது நான்தான். அதை தெளிவாக்க என் பதிவிலும் இதை இடுகிறேன். (பொதுவாய் என் எல்லா பின்னூட்டங்களும் என் பதிவில் இருக்கும்.)
 
ரோசா அண்ணாச்சி,

//திருமலை ஒரு 'சாதி வெறியர்' என்பதில் என்பதில் எனக்கு அணுவளவும் சந்தேகமில்லை. இதை ஒரு கயவன் சொன்னதாலேயே பொய்யாகிவிடாது//

அந்த கயவன் நேருக்கு நேராய் அவரிடம் மோதிக் கொள்ளட்டுமே என்னுடைய பெயரை அனாவசியமாக பயன்படுத்தவதால் தான் எனக்கு எரிச்சலாக இருக்கிறது. முகம் கொடுத்து எதிர்க்க தெரியாதவர்களை என்னவென்று சொல்வது.அதுவும் கோழைத்தனமாக ஒருவரின் பெயரை பயன்படுத்தி. அது கூட ஒருவருடைய ஐடெண்டியை திருடி.... சுத்த கயவாளி தனமாக இருக்கிறது.

ஏற்கனவே காசியின் ஐடியை திருடியாகிவிட்டது. உங்கள் ஐடி கூட திருடப்படலாம் என்பதை உசார் படுத்த தான் இந்த பதிவு தலீவா.
 
விஜய், நீங்கள் சொல்வதை நான் ஒப்புகொள்ளத்தான் செய்கிறேன். என் பெயரில் ஒருவன் போலிப் பின்னூட்டமிட்டபோது நான் சொன்ன' உயிரினங்களில் இழிந்த ஒன்று' என்ற வர்ணணை இந்த சாமிக்கும் நிச்சயம் பொருந்தும். ஆனால் இந்த அசாமியின் செயல்களால் மட்டும் சில கருத்துக்கள் நியாயமாவதையும், சில கருத்துக்களின் உண்மைத்தனமை மழுங்கடைக்க படுவ்தையும் மட்டுமே நான் குறிப்பிட்டேன்.
 
விஜய் அவர்களே, நீங்கள் எவ்வளவுதான் கூறினாலும் அனானி பின்னூட்டங்கள் விஷயத்தில் என் மனது சமாதானம் அடைய மாட்டேன் என்கிறது. உங்களை பொருத்தவரை நீங்கள் போலியை உடனே கண்டுபிடித்து விடுவீர்கள் என்பதில் ஐயமில்லை என்றாலும், நான் கவலைப் படுவது உங்கள் பதிவில் வரும் போலி டோண்டுவின் பின்னூட்டங்களை நம்பி விடும் மற்றவர்களை குறித்தேயாகும். இதில் எல்லோரையும் விட அதிகம் பாதிக்கப்பட்டது நானே என்பது எல்லோருக்கும் தெரியும்.

இவ்வளவு நடந்த பிறகும் மணிக்கூண்டு பதிவில் மூக்கு சுந்தர் என்னைத் தவறாகப் புரிந்து கொண்டு எனக்கு "சூடான" எதிர்வினை கொடுத்தார். அப்பின்னுட்டம் 10 மணி நேரம் அப்படியே இருந்திருக்கிறது. நான்தான் அசிங்கப்பட்டேன். உண்மை தெரிந்த பிறகும் டோண்டு சாதாரணமாக இப்படி எழுதக் கூடியவர் என்பதால் இதை நம்பினோம் போல என்று சிலர் பேசினர். அதில் ஒருவர் போலி டோண்டுவிடம் பொறுமை காத்திருந்தால் உண்மை டோண்டுவே போலி கூறியதை எழுதியிருப்பார் என்று வேறு அங்கலாய்த்தார். இதெல்லாம் எனக்கு தேவையா?

மறுபடியும் உங்களைக் கேட்டு கொள்கிறேன். அனானிப் பின்னூட்டங்களை உங்கள் பதிவில் செயலிழக்கச் செய்யுங்கள். திருடன் இருக்கும் போது வீட்டைப் பூட்டுவதுதான் புத்திசாலித்தனம். சாவி தொலைந்து விடும் என அஞ்சி சிலர் வீட்டுக்கு முன்னே மிதியடியின் கீழ் சாவியை போட்டு வைப்பது போல இருக்கிறது இப்போதைய நிலை.

வழக்கம் போல இப்பின்னூட்டம் என் தனிப் பதிவில் நகலிடப்படும். பார்க்க http://dondu.blogspot.com/2005/05/blog-post_25.html#comments

அன்புடன்,
டோண்டு ராகவன்
 
adapaavi
 
நன்றி ரோசா. நீங்கள் சொல்வது உண்மைகூட. சொல்லும் கருத்தில் உண்மையிருக்கும் பட்சத்தில் நேருக்கு நேர் நின்று "உச்சி மீது வான் இடிந்து விழுந்தாலும்" எதிர்ப்பவர்கள் தான் ஆண்மையுள்ளவர்கள். அதை விட்டு விட்டு அடுத்தவர் ஐடியை திருடி வாழும் போது உண்மைகள் மழுங்கடிக்கப்பட்டு போவதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.
 
//அனானிப் பின்னூட்டங்களை உங்கள் பதிவில் செயலிழக்கச் செய்யுங்கள். திருடன் இருக்கும் போது வீட்டைப் பூட்டுவதுதான் புத்திசாலித்தனம். சாவி தொலைந்து விடும் என அஞ்சி சிலர் வீட்டுக்கு முன்னே மிதியடியின் கீழ் சாவியை போட்டு வைப்பது போல இருக்கிறது இப்போதைய நிலை.//

கொஞ்ச நாள் பொறுங்களேன்.
 
Dondu ..அவர் யார் தெரியும் ந்னா ஏன் சும்மா இருக்கீஙங்க ? மற்றவஙக எதுக்கு தேடி க்ண்டு பிடிக்கணும் ? யாருண்ணு சொல்ல வேண்டியது தானே ?
 
வருத்தப்படுகிறேன் விஜய். இதுபோன்று அங்குமிங்கும் ஒரே பேச்சாகி இப்போதெல்லாம், வலைப்பதிவுப்பக்கம் வருவதற்கே யோசனையாய் இருக்கிறது.

தெரியாத்தனமா இன்று குப்பையைப் பார்த்தால் யாரோ என்னோட குப்பை-யில் பைபிள் சம்பந்தமா... விக்க ஆரம்பிச்சுட்டாங்க...
அவங்கள எப்படி காலி பண்ணச்சொல்றது:(
யாராவது தாதா இருந்த சொல்லுங்களேன்.
 
//எனக்கு எவ்வளவு ஏத்தம் இருக்கும்.
அதானே.. :-)
 
அச்சச்சோ!!!! என்ன விஜய் இப்படியெல்லாம் ஆகுது!

அன்புடன்,
அக்கா
 
சே ! ஒரு குடம் பாலில் ஒரு துளி நஞ்சு இந்த டூப்ளிகேட் dondu !

இவ்ளோ பேர் திட்டியும் இந்த டூப் dondu திருந்தாவிட்டால் ---
திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம்..

வீ எம்
 
This comment has been removed by a blog administrator.
 
மிஸ்டர் பொறம்போக்கு ஒருவர் என் பெயரிலே பின்னூட்டிவிட்டு போனார். திருநெல்வேலிக்கே அல்வாவா? நான் விட்டதாக என் பெயரில் வந்த பின்னூட்டம் தூக்கப்பட்டது. பெஸ்ட் லக் நெக்ஸ் டைம்.
 
இந்த நுட்ப அறிவை நம்மெல்லோரும் பயன் பெறும் வகையில் கட்டுரைகளாகப் பாடங்களாகச் செய்யுங்களேன் விஜேய்!ரொம்ப நல்ல விடயம்.விஜேய் அப்படியே டோண்டுவைக் கருவறுக்கும் போலி டோண்டுவைச் சபைக்கு இழுத்து வாருங்கள்.
 
விஜய்,
தமிழ் வலைப்பதிவுகளில் வரும் இதுபோன்ற ஐபி-க்களையும் ( அது டைனமிக் ஐபி ஆக இருந்தாலும்), அது வரும் ஊர்களையும், போலி பின்னூட்டங்களையும் பட்டியலிட தனியாக ஒரு வலைப்பதிவு ஆரம்பிப்பது மிகப் பயனுள்ளதாய் இருக்கும் என்பது எனது எண்ணம்.
 
This comment has been removed by a blog administrator.
 
vijay sir,
ungal peyarileye poli pinnuuttam ...
 
விஜய்,

என்னதான் இருந்தாலும் உங்க 'எதிர்வினை' பதிவு கொஞ்சம் ஆரோக்கிய குறைச்சலான விஷயம்தான்.
 
ungal pryaril pinnuuttam gavanikka.....
 
This comment has been removed by a blog administrator.
 
This comment has been removed by a blog administrator.
 
ஹி ஹி ஹி ஹி... எவ்ளோ நேரம் தான் அந்த பனாதி பயலுவோ என் பெயரை திருடி பின்னூட்டம் கொடுக்க முடியும். மிஞ்சி மிஞ்சி போன காலையிலே 8 மணியிலேயிருந்து நைட்டு அதிகபட்சம் 12 மணி வரை தான் பின்னூடமிடுவார்(சிங்கப்பூர்/மலேசியா நேரப்படி). நானும் இரவில் அதிக நேரம் முழித்துக் கொண்டிருப்பவன்.

அவருடைய நேரக்கணக்கிலும் IP sniffer போடப்பட்டுள்ளது. அவருடைய அலுவலகம் முகவரியும் கூடிய சீக்கிரம் கையில் கிடைக்கும்.

கணிசமான ஐபி தகவல்கள் சேர்ந்துள்ளதால் அனானிமஸ் பின்னூட்டம் விடுவதை தூக்கியாச்சி.
 
செட்டிங்ஸ் எதோ மாற்ற போய் ஏதோ ஆகிவிட்டது. செட்டிங்ஸ் உடனே எஃபக்டுக்கு வரமாட்டேங்கிறது. நேரம் கழித்து தான் எபஃடுக்கு வருவார்.
 
விஜய், இது வருத்தமும் எரிச்சலும் தரும் விடயம் :-).
 
எங்கே போலியை காணோம். ஓ தூங்கிட்டு இருப்பாரோ??? ம்ம்.... எனிவே மிஸ்டர் போலி இன்னும் பொறம்போக்காக என் பதிவில் நீங்கள் பின்னூட்டம் விடலாம். வசதிகள் செய்யப்பட்டுள்ளது. கமான் மிஸ்டர் பொறம்போக்கு.
 
போலி டோண்டுவின் முட்டாள்தனம் அளவுக்கதிகமாகப் போகிறது. அவர் எழுதுகிறார். "எலிக்குட்டியைப் ப்ளாக்கர் ஐ.டி.யின் மேல் வைத்து கீழே அதே எண் தெரிகிறதா என்று பார்க்கவும்"

வைத்து பாருங்கள். அவர் குட்டு வெளிப்படும். இம்மாதிரி என் படத்தையும் நகலெடுப்பார் என எதிர்பார்த்தேன். இப்போது சக வலைபதிவர்கள் எலிக்குட்டியின் உபயோகத்தையே நாட வேண்டும் என கேட்டு கொள்கிறேன்.

மேலும் இப்பின்னூட்டம் என் தனிப்பதிவிலும் நகலிடப்படும். பார்க்க:
http://dondu.blogspot.com/2005/05/blog-post_25.html
அன்புடன்,
டோண்டு ராகவன்
(எலிக்குட்டியைப் ப்ளாக்கர் ஐ.டி.யின் மேல் வைத்து கீழே அதே எண் தெரிகிறதா என்று பார்க்கவும்)
 
//ஐப்பிக்கள் நிறைய சேர்ந்ததும் பேங்கில் போடவும்.//

முட்டாள் போலி, எல்லோரும் ஐபி சேர்த்திருக்குறோம். ஏன் தெரியுமா? உன் வாயில மொத்தமா போட்டு உன்னை புதைக்க.
 
Vijay, Just saw my posting again now. The smile i put, supposed to be a sad{:-(} one. Hope you wouldn't think bad of me. Sorry.
 
அட டிசே, நீங்க :-) இப்படி போட்டதே நீங்க சொல்லி தான் பார்த்தேன். தப்ப நினைக்கிறதுக்கு ஒன்னுமே இல்லை.

அவனவன் ஐடியை திருடுறான் நீங்க என்னடா என்றால் :-( போடுறதுக்கு பதிலா :-) இப்பிடி போட்டேன்னு வருந்துறீங்க. :-) போட்டாலும் சரி :-( இப்படி போட்டாலும் சரி உங்க உள்ளம் எனக்கு பளீச்சுன்னு புரியும்.
 
//தமிழ் வலைப்பதிவுகளில் வரும் இதுபோன்ற ஐபி-க்களையும் ( அது டைனமிக் ஐபி ஆக இருந்தாலும்), அது வரும் ஊர்களையும், போலி பின்னூட்டங்களையும் பட்டியலிட தனியாக ஒரு வலைப்பதிவு ஆரம்பிப்பது மிகப் பயனுள்ளதாய் இருக்கும் என்பது எனது எண்ணம்.//

http://www.navakrish.com/abuse_report/. An effort in this direction. But since then I have n't had any major comment abuses in my blog.. and so the database is not updated.
 
நவன் அண்ணாச்சி,

நீங்கள் குறிப்பிட்ட அந்த பக்கத்தை நேற்று தான் பார்த்தேன். உங்களுடைய மின்னஞ்சல் முகவரியை எனக்கு njvijay at yahoo dot com-க்கு அனுப்புறீங்களா? முடிந்தால் நீங்கள் எங்கிருக்கிறீர்கள் + உங்களுடைய தொலைபேசி எண்ணையும் அனுப்புங்களேன். முடிந்தால் இது விசயமாக இந்த வாரயிறுதியில் உங்களை அழைத்து பேசுகிறேன்.
 
//இன்னும் ஒரு விடயம், உங்களைவிட ஞானம் அதிகமுள்ளவர் என நினைக்கிறேன் இந்த பீன்னூட்டங்கள் செய்பவர்கள். //

இந்த பீன்னூட்டங்கள் செய்பவர்கள் எதுவும் பிரம்மசூத்திரமோ,மலாக்கா சூத்திரமோ, மலேசியா சூத்திரமோ என்று தெரிந்துக் கொள்வீராக. பதிவு ஐடியும்,பிளாக்கர் ஐடியும் தெரிந்தால் எதையும் தாண்டாலம் என்பது யாருக்கும் தெரியும்.அப்படி தாண்டும் போது வெட்டப்பட்டிருக்கும் குழிகளில் விழலாம் என்பது யாருக்கும் தெரியாது. ஒரு வேலி தானே தாண்டியிருக்கிறீர்... இதுக்கே இப்படியா??? ஹா ஹா ஹ
 
This comment has been removed by a blog administrator.
 
This comment has been removed by a blog administrator.
 
ஜோகூரும் மலாக்காவும் பக்கம் பக்கம் தானே இல்லையா விஜய்?
 
This comment has been removed by a blog administrator.
 
உலகத்தில் உள்ள எல்லா பார்ப்பனர்களையும் பிடித்து கட்டாய சாதி மாற்றம் செய்து தலித்துகளாக மாற்ற வேண்டும். எங்கள் திருமாவளவன் தலைமையில் ஒரே அணியாகத் திரள வேண்டும்.
 
This comment has been removed by a blog administrator.
 
விஜய்...தரமான எழுத்தாளர்கள் சங்கமிக்கும் தமிழ்மணத்தில் சில போக்கிரிகளின் கைவரிசையினால் சமீபத்தில் இந்த பெயர் திருட்டு அதிகரித்து வருகிறது. பெரும்பாலான ஃபிராடுகள், மத துவேஷத்துடன் வெறி பிடித்து அலைவதால் அவர்கள் "சொறிந்து கொள்ள" இது நல்ல இடமாக இருக்கிறது.

எனது வேண்டுகோள்... எந்த சூழலிலும் பொறுமை இழந்து விடாமல் இருங்கள். நிதானம் இழந்து தரமற்ற வார்த்தைகளை நீங்கள் உபயோகப்படுத்த வேண்டும் என்பதே இத்திருடர்களின் நோக்கம்.

தமிழ்மணத்துடன் இணைந்து போலிகளை விரைவில் அடையாளம் காட்டுவோம்.

அன்புடன், சர்தார்
 
ஊக்கமொழிக்கு நன்றி சர்தார். இந்த புல்லுருவி சிண்டு முடிச்சி விடுவதால் உண்மையறிந்து அமைதியாய் இருப்போம்.
 
உலகத்தில் உள்ள எல்லா பறையர்களையும் பிடித்து வந்து கட்டாய சாதிமாற்றம் செய்து பிராமணர்களாக மாற்றுவோம்.
 
அன்புள்ள நண்பர்களே,

மேலே 'மத்தளராயன்' என்ற புனைப்பெயரில் எழுத்தாளர் இரா.முருகன் இணைய குழுமத்தில் எழுதிவருகிறார். சிண்டு முடிக்கும் போக்கிரி அந்த பெயரை பயன்படுத்தி பின்னூட்டமிட்டிருக்கிறார். இரா.முருகன் அவர்களும் அது அவர்களின் பின்னூட்டமல்ல என்பதை தனிமின்னஞ்சலில் உறுதிப்படுத்தியிருக்கிறார். மேலே 'மத்தளராயன்' என்ற பெயரில் இடப்பட்ட பின்னூட்டத்தை புறக்கணித்துவிடவும்.

அன்புடன் அல்வாசிட்டி.விஜய்.
 
மீண்டும் சிண்டு முடிக்கும் வேலை. 'பறையன்' என்ற பெயரில் ஒரு கருத்தும், 'எஸ்.கே' என்ற பெயரில் எதிர்கருத்தும் வைத்து கோள் மூட்டியிருக்கிறார். இரண்டும் அதே அனானிமஸின் வேலை. புறக்கணிக்கவும். அடுத்து யாரு பெயரிலே சார்.

இரவு இந்த பதிவின் பின்னூட்டம் தூக்கப்படும்.
 
போலிகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம்.
 
This comment has been removed by a blog administrator.
 
This comment has been removed by a blog administrator.
 

உங்கள் கருத்துக்களை இட


<< திரும்ப முன் பக்கத்துக்கு போ

-ல் போட்டுத் தாக்கியது

குட்டி குட்டி வெண்ணிலவு

Difficulty in reading this post due to font issues? Click here for a PDF copy. Works best if you right-click the link and select 'Save target as...'
இந்த பதிவை போட்டுத் தாக்கியவர் : Vijayakumar
நான் காதலித்துக் கொண்டிருந்த போது மழையாக கொட்டிய கவிதைகள் பிறகு ஏனோ வறண்டுப் போய்விட்டது. சில நேரங்களில் சில பல சந்தோசம் தரும் விசயங்கள் என்னை கவிதைப் பாட தூண்டும். ஒரு குட்டி வெண்ணிலவும் என்னை கவிதைப் பாட வைத்தது.

"நீராவியால் வேர்த்துக் கொட்டும்
என் குட்டி குட்டி வெண்ணிலவே
உன்னை கன் பவுடரில் (Gun Powder)
பிரட்டி இருட்டு பிரங்கியில்
தள்ளியது யாரோ?"


அவள் மல்லிகைப்பூ மாதிரி என்பார்கள். மல்லிகைப்பூ அவள் அளவுக்கு மென்மையா எனத் தெரியவில்லை. வேண்டுமானால் க்ளீனிங் ஸ்பாஞ் எவ்வளவு மெத்து மெத்து என்றிருக்குமோ அவ்வளவு மெத்து மெத்தின்றிருப்பாள். க்ளீனிங் ஸ்பாஞ்சில் கைவைத்தால் எப்படி மென்மையாய் கைவிரல் உள்ளுக்குள் அமுங்கி அடங்குமோ அதே மென்மை தான் அவளை தொடும் போதும். அவள் ஸ்டீமிங் (steaming) எடுத்துவிட்டு வெளியே வரும்போது வானத்து வெள்ளி நிலவும் தோற்று விடும் போங்கள். ருசிக்க ருசிக்க திகட்டாதவள்.

மேல் சொன்ன கவிதையும், அந்த வர்ணிப்பும் என் வீட்டில் தயாரிக்கப்படும் இட்லியை பார்த்ததும் தானாக வெளியில் வந்து விழும். கவிதை என்று நான் நினைத்துக் கொண்ட மேல் வரிகளில் வெண்ணிலவு இட்லியையும், Gun powder என்பது தோசைப்பொடியையும், இருட்டு பிரங்கி வாயையும் குறிக்கும்.


இட்லி. ஏறக்குறைய 30 வருடமாக சதா வாயில் கொட்டிக் கொண்டிருந்தாலும் சலிக்காத ஒரே பதார்த்தம் இட்லி. இட்லி தயாரிப்பதென்பதே ஒரு சுகனுபவம். என் சிறுவயதில் என் தாயார் இட்லிக்கு மாவு தயாரிக்கும் போது தொலி பருப்பை மணிக்கனக்காக ஊரப்போட்டு பிறகு நன்றாக பிசைந்து மேலுள்ள தொலியையெல்லாம் நீக்கிய பிறகு அரை அரையாக பிளக்கப்பட்ட உளுந்தம் பருப்பு மணி மணியாக வெள்ளையாய் சிரிக்கும். தாயார் அதை கழுவிக் கொண்டிருக்கும் போதே அதை பார்க்கும் சாக்கில் ஊறப்போட்ட அரிசியை வாய் கையுடன் சண்டைப்போட வாய் கோபித்துக் கொண்டு அனிச்சையாக வாயிலிட்ட அரிசியை கிரைண்ட் பண்ணிக் கொண்டிருக்கும். ஒற்றைக்கண்ணால் பார்த்துக் கொண்டே "எலே அரிசி திங்கதலே. அப்புறம் ஒன் கல்யாணத்தப்பம் மழை பெய்யும்" என்பார். என் கல்யாணத்தப்பம் மழை பெய்தால் என்ன? குடை பிடிச்சிட்டு போவம்ல? என்று நான் நினைத்திருக்கும் வேளையில் என் சித்தியின் கல்யாணத்தின் போது பெய்த மழையும் கோவிலுக்கு பொண்ணு மாப்பிள்ளை சென்றிருந்த போது வேட்டியையும் சேலையையும் தூக்கிக் கொண்டு வழுக்கி விழாத குறையாக மழையில் ஓடி வந்ததை நினைத்து சிரிப்பு சிரிப்பாக வரும்.

உளுந்தம் பருப்பை கழுவிவிட்டு இட்லி அரிசியை அவர் கழுவ ஆரம்பிப்பார். அப்படி இப்படி போக்கு காட்டிவிட்டு உளுந்தம் பருப்பும் வாயில் அரைப்பட்டுக் கொண்டிருக்கும். "எலே பருப்பை திங்காதலே. காது செவ்டா போயிரும்" என்பார். பிறிதொரு நாளில் ஆசன வாய் துவாரத்தின் உள்ளிருந்து நமட்டு நமட்டு என்று ஏதோ பிராண்டி எடுக்க டவுசருக்கு வெளியே, வைச்ச கையை எடுக்காமல் ஆசனவாயில் கையை வைத்து வெளியிலிருந்து பிராண்டா, "நீயா? நானா?" என்ற போட்டிக்கிடையில் சுகமான சொறிதல் நிகழ, இந்த வினோத நிகழ்ச்சியை கண்டுகளித்து "பச்சையா அரிசியை சாப்பிடாதே. வயித்துல பூச்சி தட்டுமுன்னு சொன்ன கேட்டியா?" என்று கன்னத்தை கிள்ளி எடுப்பார் என் அம்மா. விடுவிடுவென்று டாக்டர் வீட்டுக்கு சென்றால் எதோ கொக்கிப் புழு என்பார், பாராசைட்ஸ் என்பார், கசப்பாக மருந்து கொடுப்பார். மறுநாள் கழிப்பறை கோப்பையில் முக்கி முக்கி, மருந்து குடிச்சாதனாலே பூச்சி செத்துச்சா சாகலையான்னு ஒரு போராட்டாமே நடக்கும் என்பது தனி ட்ராக்.

இத்தனை கஷ்டங்களுக்கு பிறகு வெள்ளேந்தியாக இட்லி. ஆவி பறக்க மெத்து மெத்தென்று முதல் தவணையில் ஐந்தாறு இட்லி சாப்பாட்டு தட்டில் இருக்கும். பக்கத்திலேயே நல்லெண்ணெயில் குழைத்த தோசைப்பொடி பாகாக நீ முந்தியா இல்லை தோசைப்பொடி வண்டல் முந்தியா என்று போட்டி போட்டுக் கொண்டிருக்கும். அனிச்சையாக வாயில் ஜொள் நீர் ஊற "முதல்ல பொடி வச்சி சாப்பிடு கத்திரிக்காய் பச்சடி ரெடியாகிரும்" என உள்ளிருந்து குரல் வர, முதல் சுற்று ஆரம்பம் ஆகும்.

முத்தலில்லாமல் இளசாக கத்திரிக்காய் நெடுக்கு வாக்கில் வெட்டி, கத்திரிக்காயுடன் பெரிய வெங்காயம், சிவப்பு மிளகாய் போன்றவற்றை கொதிக்க விட்டு, காய் வெந்தவுடன் உப்பு போட்டு அப்படியே கொஞ்ச நேரம் ஊறவிடுவார்கள். பிறகு தண்ணீரை வடித்து தனியாக வைத்துக் கொள்வார்கள். அப்போதெல்லாம் மிக்ஸி இல்லாத காலத்தில் அதெற்கென்றே தயாரிக்கப்பட்ட மத்தில் காலிடுக்கில் சட்டியை வைத்து வெந்துபோன கத்திரிக்காயையும், வெங்காயத்தையும், மிளகாயையும் அரைகுறையாக மசித்து, கட்டி தட்டாமல் கொஞ்சம் கூழ் பண்ணி, இதை கொதிக்க வைத்த வடிநீரை தேவையான பதத்துக்கு சேர்க்க, கத்திரிக்காய் பச்சடி ரெடி. பினிஸிங் டச் கொடுக்க, வானலியில் தழைய தழைய எண்ணை விட்டு கொதி வந்தவுடன் கடுகைப் போட்டால் "டப்பு டிப்பென்று" வெடித்து அடங்கும் தருவாயில் பொடி உளுந்தம் பருப்பையும், கறிவேப்பிலையையும் போட "சட சட" என்ற சத்தத்தோடு அடங்க, "சொய்ங்...." என்ற சத்தத்துடன் கத்திரிக்காய் பச்சடியில் ஊற்ற தாளிக்கும் மணமும் வாயில் ஊறும் எச்சிலை அதிகப்படுத்தும்.


"நெய் இருக்கு. தோசைப்பொடியில் ஊத்திக்கோ" என்று நேற்று காய்ச்சிய நெய் பதமான சூட்டுடன் இந்த பச்சடியும் நான் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் இடத்தை அடையும். காணி நிலமும், நடுவில் ஒரு கிணறும், ஓங்கி வளர்ந்த தென்னை மரமும் பாரதிக்கு. பஞ்சு பஞ்சென்ற இட்லியும், நெய் மணக்கும் தோசைப்பொடியும், சட்டி நிறைய கத்திரிக்காய் பச்சடியும்,நடுக்கென்று கடிபடும் கடுகும், மொறுமொறுவென மனத்துடன் பல்லில் உடையும் தாளித்த உளுந்தம் பருப்பும் எனக்கு.

முதல் சுற்று ஆரம்பிக்கும் தருவாயில், "டொரக் டொரக்"கென்று மாவு சட்டியை பிராண்டும் ஒலியில், ஆடை கொண்ட இட்லி தட்டு குழிகளில் மாவு ரசமாக பாயும். கம்பியூட்டர் இல்லாத காலத்தில் கால்குலேட்டர் மாதிரி குக்கர் இல்லாத காலத்தில் இட்லி அண்டா. இடை இடையே இட்லி வேகும் போது இட்லி அண்டாவின் மூடி எடுத்து தண்ணீரில் நன்றாக கையை முக்கிக் கொண்டு "வெந்திருக்கிறதா?" என்று ஆள் காட்டி விரலை வெண்ணிலவின் முகத்தில் பாய்ச்சுவார்கள். விரல் பாய்ச்சிய இடத்தில் குழி பாய்ந்து விடும். இருக்கட்டுமே.அந்த இட்லி என்னிடம் வரும் போது குழி பாய்ந்த இடத்தில் கத்திரிக்காய் பச்சடி பாய்ந்து விடும். வெந்த இட்லி தட்டு அண்டாவிலிருந்து இறக்கப்பட்டு சள்ளென்று இன்னொரு தட்டில் கவிழ்க்க இட்லி தட்டும் ஆடை அவிழ்த்து அம்மணமாக நிற்கும். "சளப் சளப்"பென்று இட்லி துணியின் பின் நீர் தெளிக்கப்பட்டு மெதுவாக மெதுவாக இட்லி துணியில் ஒரு துளி இட்லி கூட ஒட்டி விடாமல் பூப்போல பூப்போல விளக்கி விளக்கி மெதுவாக இட்லியை டாபாய்த்துக் கொண்டே இட்லி மேல் ஒட்டியிருந்த ஆடையையும் உரித்து அதையும் அம்மணமாக்கி பார்த்து விடுவார்கள். அம்மணமாக்கிப் பார்ப்பதில் எல்லோருக்கும் தான் என்ன இன்பம்?

(அடுத்த பகுதி அசைவ பிரியர்களுக்கு மட்டும். சைவர்கள் அப்பீட்டு ப்ளீஸ்)

பச்சடி பாலாறக இட்லியில் பாய முதல் ரவுண்டு இரண்டாம் ரவுண்டென சுடச் சுட நின்று நிதானமாக சதம் அடித்து தான் ஒய்வது வழக்கம். தீபாவளி வந்து விட்டாலோ இட்லிக்கு தனி மவுசு. அவிச்சுக் கொட்டி முடியாது. கறி வாங்கவிட்டால் அது என்ன தீபாவளி. நாங்கெல்லாம் கறி சாப்பிடுவதற்காக நரகாசுரனுக்கு சப்போர்ட். தீபாவளிக்கு கறி சமைப்பது என்பதில் பல்வேறு கருத்துக்கள் குடும்பத்தில் நிலவும். புனித பண்டிகைக்கு எதுக்கு மாமிசம்?. செத்தது அரக்கண்டீ. அவன் மனசு குளிர்றதுக்காகவாவது கறி எடுத்து தான் ஆகனும். எப்படியோ தீபாவளிக்கு மாமிச கறிக்கு அமோக வாக்குகள் பெற்று "சிக்கு புக்கு சிக்கன் செண்டரை" முற்றுகை இடுவோம். நாம தான் அப்படீன்ன நமக்கு முன்னால 40 பேர் தீபாவளிக்கு சிக்கன் வாங்க நிப்பானுங்க. தீபாவளிக்கு பட்சணங்களுடன் கோழி குழம்பும், இட்லியும் தூள் பறக்கும். ஒரு புரொடக்ஷன் டீம் இட்லியை அவிச்சிக் கொட்ட, users டீம் இட்லியை ஒரு கைப்பார்த்துக் கொண்டிருக்க அதுக்கு பேரு தான் தீபாவளி. பட்டாசு, புதுதுணி எல்லாம் அதுக்கு அப்புறம் தான். புதுமணப்பெண்ணை கண்ட புதுமாப்பிள்ளை போல தீபாவளி இட்லிக்கு தனி கிக்கு. ஒரு மணிக்கொருதடவை இட்லி அண்டா அண்டாவாக அவிந்துக் கொண்டிருக்கும். வயிற்று அண்டாவில் இட்லி உள்ளே போய் கொண்டிதானிருக்கும்.

இட்லிக்கு இன்னொரு ஜோடி ஆட்டுக்குடல் குழம்பு. இந்த ஆட்டுக்குடலை சுத்தம் செய்வது தான் பெரிய வேலை. கசாப்புக்கடையில் ஆட்டுக்குடலை கொடுங்கண்ணே என்று கேட்டால் ரூபாய் வாரியாக ஆட்டுகுடலை சைஸ்வாரியாக வைத்திருப்பார். பை போல இருக்கும் குடலினுள்ளே பாம்பு போல சாரை சாரையாக குடல் ட்யூப்புகள். ஒவ்வொரு ட்யூப்பிலும் அடுத்த பிராசசஸில் ஆட்டுப் புழுக்கையாக மாறலாமென ஜீரணமான ஆட்டு உணவு பித்த நீருடன் கலந்து குழம்பியாக நிரம்பியிருக்கும். ஒவ்வொரு ட்யூப்பையும் பீ இல்லாமல் நன்றாக வழித்து வழித்து கழுவி, நல்ல மஞ்சள் போட்டு கலக்கி அனாட்டாமி படித்துக் கொண்டே நமக்கு திருப்தி வரும் வரை கழுவோ கழுவென்று கழுவினால் குழம்புக்கு ஆட்டுக்குடல் ரெடி. ஆட்டுக்குடலுக்கென்ற என்ன குணமோ தெரியவில்லை. எவ்வளவு மோசமாக குழம்பு வைத்தாலும் அபார சுவையுடன் நிகழ்ந்துப் போவது தான். ஆட்டுக்குடல் குழம்புடன் இட்லியை தொட்டுச் சாப்பிடக்கூடாது. நச நசவென்று இட்லி பிரித்துபோட்டு பக்கத்தில் சட்டி நிறைய ஆட்டுக்குடல் சிறு சிறு துண்டங்களாக மிதக்க, குழம்பை இட்லியில் பொது பொதுவென ஊற்றி சோறு பிசைவது போல நல்ல பிசைந்து கவளம் கவளமாக தின்றால் தேவாமிர்தம் தோத்தது போங்க. ஆகா!!

கல்லூரி முடித்துவிட்டு வேலையில்லாமல் சென்னையில் திரிந்த போது, வீட்டில் காசு வாங்கக் கூட கூனி குறுகி கையில் இருக்கும் சொச்ச பைசாவை ஒப்பேத்த கோடம்பாக்கம் கையேந்திபவனில் இட்லி சாப்பிடும் அனுபவமே தனி. அரைகுறையாக கழுவிய அலுமினிய தட்டு. சுட சுட இட்லி. "சேர்வை" என பெயர் வைத்த சால்னாவை தட்டு நிறைய ஊற்றி பிசைந்து சாப்பிடும் போது ஆங்காங்கே மாமிசம் தட்டுப்படும். பெருநேரங்களில் அது ஆட்டுக்குடலாக தான் இருக்கும்.

கொஞ்சம் வசதியான பிறகு திருவல்லிக்கேணி "ரத்னா காபே" இட்லி அடிக்கடி அருள் புரிந்தது. ரத்னா காபேயின் பலமே அங்கு ஊற்றும் சாம்பார் தான். இரண்டு இட்லி கேட்டால் இரண்டு அண்டா சாம்பாருடன் சர்வர் வருவார். கையில் ஒரு MUG-கில் எப்போதுமே சாம்பாருடன் அலைவதை பார்த்திருக்கிறேன். சாம்பார் சாப்பிட்டு இட்லி ஊற்றிக் கொள்ள வரும் கிழடுகள் இரண்டு இட்லிக்கு சென்னை தண்ணீர் லாரியில் தான் சாம்பார் கொண்டு வந்து ஊற்ற வேண்டும். அண்டா நெறைய சாம்பார் ஊத்தினாலும் "என்ன கொறைய கொறைய சாம்பார் ஊத்துறே" என்று இன்னொடு கிழடு கோபித்துக் கொள்வதைப் பார்த்துக் கொண்டே அங்கு சாப்பிடுவது இனிமை தான். [இப்போ முருகன் இட்லி சென்னை வந்திருக்குன்னு சொன்னாங்க. அங்கே சாப்பிடுறதுக்கு சான்ஸ் கிடைக்கலே]

அதுபோக சென்னை டிரஸ்ட்புரத்தில் கோடம்பாக்கம் ஹைரோட்டின் சிக்னல் பக்கத்தில் உள்ள சந்திரபவன் இட்லி எனக்கு பிடிக்கும் என்பது கொசுறு செய்தி. சரவணபவன் மினி இட்லி, 14 இட்லியெல்லாம் பார்க்கும் போது நகர வாழ்க்கையின் ஜீவன் இழந்த, ஏமற்றப்பட்ட இட்லியின் வெர்ஷனாகத் தான் அது தோன்றுகிறது.

சிங்கப்பூரில் வாரயிறுதியானால் வீட்டு பக்கத்தில் இருக்கும் ஹாக்கரில் உள்ள தமிழர் கடையில் சாப்பிடுவது வழக்கம். சாப்பிடும் முன் என் கண்ணில் நீர் கோர்த்துக் கொள்ளும். எப்படி பூ பூவாக பார்த்த என் இட்லியை கிரிக்கெட் பந்து ரேஞ்சுக்கு இருந்தால் என் கண்ணில் நீர் வராமல் என்ன செய்யுமாம்?. இந்த கருங்கல் இட்லியை சாப்பிட நான் சீக்கிரமே வேறு வரவேண்டுமாம். 10 மணிக்கு மேல் போனால் இட்லி இல்லை என்பார். புரோட்டா சாப்பிடுங்க என்பார். காலங்கார்த்தாலேயே புரோட்டாவா? ஆண்டவா? இல்லையென்றால் தோசை சாப்பிடுங்க சார் என்பார். தமிழில் எனக்கு பிடிக்காத இன்னொரு வார்த்தை 'தோசை'. நொந்துக் கொண்டே வெறும் டீயை குடித்துக் விட்டு அப்பீட்டு ஆகிவிடுவது சகஜமாக நடக்கும்.

ஒரு நாள் அங்கு இட்லி வாங்கிக் கொண்டு சாப்பிட ஆரம்பிக்கும் போது தான் உரைத்தது, இட்லியின் நடுபாகம் ஐஸ்பெர்க்கை விட உறுதியாக இருந்தது. சுற்றியிருந்த இட்லியின் மென்மையான பகுதியை சாப்பிட்டுவிட்டு அந்த 5 இட்லியின் நடுபாகத்தையும் அப்படியே தட்டில் விட்டு விட்டு போய்விட்டேன். மறுநாள் மிக அக்கரையாக அந்த கடைக்காரன் "என்ன சார்! நேத்து இட்லியை சாப்பிடவே இல்லீயே" என்றார். நான் "அதெல்லாம் ஒன்னுமில்லையே. அது சரி செங்கள் சூளையை சிங்கப்பூர்ல எப்போ ஆரம்பிச்சீங்க" என்றேன்.

இந்த பதிவின் வாக்கு எண்ணிக்கை: . பக்கத்திலுள்ள ஸ்டாரை மவுசால் போட்டுத் தாக்கினால் எனக்கு மவுசு ஏறும். நன்றி:-)

உங்கள் கருத்துக்களை இட

திருப்பி தாக்கியவர்கள்:
//காலங்கார்த்தாலேயே புரோட்டாவா? ஆண்டவா? //

நல்ல இட்லி.. சே நல்ல பதிவு.

இட்லி தான் தமிழனின் ஆகப்பெரிய கண்டுபிடிப்பு என்பதில் எனக்கு
சந்தேகமே இல்லை.
 
//... தமிழில் எனக்கு பிடிக்காத இன்னொரு வார்த்தை 'தோசை'.

...இட்லியின் நடுபாகம் ஐஸ்பெர்க்கை விட உறுதியாக இருந்தது. ...

..."என்ன சார்! நேத்து இட்லியை சாப்பிடவே இல்லீயே" என்றார். நான் "அதெல்லாம் ஒன்னுமில்லையே. அது சரி செங்கள் சூளையை சிங்கப்பூர்ல எப்போ ஆரம்பிச்சீங்க" என்றேன்.// -- ஜோக்கடித்தது அல்வாசிட்டி.விஜய்


ஞானபீடம் சொல்வது:
நா இப்போ என்ன சொன்னாலும் அது
நீர் சொன்ன அளவுக்கு
அவ்ளோ டேஸ்ட்டா இருக்காது.
அதுனால அப்பீட்டு !

இருந்தாலும்
ம்...பரவால்ல நல்லாத்தேன் எழுதுறீரு :-)

***********
- ஞானபீடம்.
***********
 
விஜய்
இரவு இரண்டாவது ஆட்டம் திரைப் படம் பார்த்துவிட்டு, நண்பர்களோடு சைக்களில் இரவு நேர கடைகளில் நல்லா சுட சுட இட்லி மற்றும் ஆம்லெட் சாப்பிட்டுவிட்டு அப்படியே நல்ல வாழைப் பழம் சாப்பிட்டு பிரிய மனம் இல்லாமல் பிரிந்த காலங்கள் மீண்டும் வருமா?
நன்றி
மயிலாடுதுறை சிவா...
 
இரவு 1 மணிக்கு மதுரை முதலியார் கடை இட்லியும்..முட்டை தோசையும்..ஆஹா..
 
இயல்பிசம், போஸ்ட் மார்ட்டமிசம் எல்லாம் கலந்து செய்த இட்லி பிரமாதமப்பு...
 
இன்னுமே இட்லியை பாத்தாலும் தமிழ்மண ஞாபகம் தான் வரப்போதா?
 
இட்லி புரதச்சத்து மிகுந்த சுவையான பதார்த்தம்.
 
மதுரையில் முருகன் என்ற இட்லிக்கடை மிகவும் பேமஸ். இட்லி மல்லிகைப்பூ போல மிருதுவாக இருக்கும். நான் பலமுறை சாப்பிட்டு இருக்கிறேன். சு.சாமி இங்கு வந்தபோது ஏன் அந்த கடையை உடைத்தீர்கள் என பேட்டியின்போது கேட்டேன். அதற்கு அவர் என்னிடத்தில் முருகன் பிராமனர் இல்லை என்று சொன்னார். அதற்கான ஆதாரங்களையும் என்னிடம் காட்டினார். எனக்கு அவரின் பதில் பிடித்து இருந்தது.
 
ச்சும்மா இருக்க மாட்டீங்களே! இப்ப என்னாத்துக்கு இந்த இட்லி விவகாரம்?

இங்கேயே மாவு புளிக்காம 'கல் இட்டிலி' செஞ்சு செத்துக்கிட்டு இருக்கோம். இதுலே அருமையா நாலு வகைச் சட்டினியோட வாழையிலையில் வச்ச இட்டிலிப் படம் வேற!!

இட்டிலிக்கு ஏங்கற வயிறு இப்ப எரிஞ்சுக்கிட்டுவேற இருக்கு!

இந்தப் பாவம் உங்களைச் சும்மா விடாது:-)

என்றும் அன்புடன்( இப்படி எழுதறதே இப்ப ஒரு பொய்!)
துளசி.
 
மேலே ச.திருமலை என்ற பெயரில் வந்தது யார் என்பது எனக்கு தெரியாது என்றாலும், இட்லிக்கும் சாதீய சாயம் பூசி வம்புக்கு இழக்கலாம் என எண்ணும் படி தன்னை ஒரு புத்திசாலி என்ற நினைப்புடன் பின்னூட்டியிருக்கிறார். பதிவுக்கு கொஞ்சம் கூட சம்பந்தேமேயில்லாமல் மற்றொரு பெயரை பயன்படுத்தி ஓலைபாயை பார்த்த நாயாக மோண்டுவிட்டு சென்றிருக்கலாம் என்பது என் அனுமானம்.
இங்கே பின்னூட்டமிட்ட ச.திருமலை என்ற போலி பெயர் என்று தெரிகிறது. டோண்டு பிரச்சனை மாதிரியானதாக இருக்கலாம். வலைப்பதிவு வட்டாரத்தில் இந்த ச.திருமலை என்பவர் இருப்பதாக தெரியவில்லை. என்னுடைய நண்பர்களும் ப்ளாக்கர் கணக்கு இல்லாமல் பின்னூட்டவது வழக்கம். எனக்கு யாரும் திருமலை என்ற பெயரில் நண்பர்கள் இல்லை. நான் எங்கும் அவரின் பின்னூட்டம் படித்த ஞாபகமுமில்லை. ச.திருமலை என்பவர் ஒருவர் இருந்தால் அவர் மேல்கண்ட பின்னூட்டம் இடவில்லை எனில் அவர் பெயரிலிட்ட பின்னூட்டத்துக்கு மறுப்பு தெரிவித்தால் நலம். அவரை முன் வரும் படி கேட்டுக் கொள்கிறேன்.

ச.திருமலை என்ற பெயரில் எவரோ பின்னூட்டியபோது வந்த ஐபி எண் மற்றும் விவரங்கள்:


IP Address: 219.95.194.162
Country Flag County / State / Province : MELAKA
City: MALACCA
ISO Country Code : MY
Country ISP : MALAYSIA ADSL-STREAMYX-TMNET

 
என்னுடன் இட்லி உண்டு கருத்தை நவிழ்ந்த '????', தங்கமணி,ஞானபீடம், முகமூடி, பாலாஜி பாரி,மணிக்கூண்டு சிவா,எல்.எல்.தாஸூ, ரா.ரா, துளசியக்கா.

தங்கமணி,

இட்லி தமிழனின் அரிய கண்டுபிடிப்பு என்பதில் சந்தகமே இல்லை.இட்லியில் அரிய தத்துவமே அடங்கியிருக்கிறதென நண்பர் பாலுமணிமாறன் புகழ்பெற்ற ஒருவரின் மேற்கோள் ஒன்றை அடிக்கடி சொல்லுவார்.

"நாளை என்ற நம்பிக்கையில் இன்றே இட்லிக்கு மாவு ஆட்டி வைப்பவன் தமிழன்"


பாலாஜி பாரி, சரி விடுங்க இந்த வாட்டி மதுரைக்கு போகும்போது மாமியார் வீட்டு இட்லி வேண்டான்னுட்டு முதலியார் கடை இட்லியை கலக்கிற வேண்டியது தான்.

துளசியக்கா, அப்போ உங்க வீட்டுல இட்லி செய்றப்போ எல்லாம் இட்லி கிரிக்கெட் தான்னு சொல்லுங்க. பார்த்து சிக்ஸர் அடிக்கிறேன்னு கோபால் மண்டைய பதம் பார்த்துறாதீங்க:-))))
 
என் இனிய நண்பர் ச. திருமலை அவர்கள் இம்மாதிரி லூசுத்தனமாக எழுதக் கூடியவ்ரே அல்ல. அவர் பெயரில் அசட்டு பின்னூட்டம் இட்டவர் போலி டோண்டுவே என்பது வெள்ளிடை மலை.

வழக்கம் போல இப்பின்னூட்டம் என் தனிப்பதிவில் நகலிடப்படும்.

பார்க்க: http://dondu.blogspot.com/2005/05/blog-post_25.html#comments

அன்புடன்,
டோண்டு ராகவன்
 
Dear Vijay

Thanks a lot for understanding the skirmishness. Yes It was not posted by me. I dont have any blogger-id. I write only in RKK, Marathadi, Tamilviam. I occassionally post feedbacks in some blogs that allow annonymous feedback. I know who did this. Please read the warnings that I posted in RKK and Marathadi regarding that perverted bastard. He is from Singapore and Malaysia and well known lunatic in the net world. Even after exposing him, he still continues to do this dirty tricks. I sent a personal mail also to you exposing his obscene face. Since you are also in Singapore you can take some actions too.

Dear Mr.Dondu. Thanks for your timely post.

I request all other bloggers who read this to cross-check with me if you happen to read any reply on my name. I request all of you to totally ignore this perverted maniac.

Thanks
Regards
Sa.Thirumalai
I dont have any blog yet
I am not going to post any replies in blogs. If I want to send my feedback I'll do so by sending a personal mail only.
 
விஜய், இதெல்லாம் கொஞ்சம் கூட நல்லாயில்லை. இங்கே ஒருத்தன் ராத்திரிக்கும் cereal'ஐயே சாப்பிட்டுட்டு படுத்துடலாமான்னு யோசிச்சிட்டிருக்கும் போது இட்லி புராணம் வாசிக்கிறீங்களா?

எழுதுனது தான் எழுதுனீங்க.. படமும் போடனுமா என்ன? நாங்கெல்லாம் இட்லி பார்த்ததில்லையா?

நல்லாயிருங்க. :-(

(இங்கே சரவணபவன் ஆரம்பிச்சிருக்காங்களாம். வாரயிறுதியில எங்கேயிருக்குன்னு தேடனும்.)
 
This comment has been removed by a blog administrator.
 
நன்றி நவன் தலீவா.

//எழுதுனது தான் எழுதுனீங்க.. படமும் போடனுமா என்ன? நாங்கெல்லாம் இட்லி பார்த்ததில்லையா? //

உங்களையெல்லாம் வெறுபேத்தனும்னு தான். பார்த்த உடனே ஜொள்ளு வடிஞ்சதா?
 
முன் வந்து விளக்கமளித்தற்கு நன்றி ச.திருமலை.

டோண்டு, திருமலை, இந்த போலிக்கு ரொம்ப மெனக்கெடாதீர்கள். நீங்கள் சிலிர்ப்பதால் போலிகளுக்கு இளப்பமாக இருக்கிறது. ரோட்டில் கிடக்கும் பீ என ஒதுங்கிச் செல்லுங்கள்.அவருக்கு முக்கியதுவம் கொடுத்து அவரை பெரிய ஆள் ஆக்காதீர்கள். போலி எது உண்மை எது என என்னால் பிரித்தறிய இயலும். டோண்ட் ஒர்ரி.
 
யோவ் அல்வா, இதே வேலைய்யா உமக்கு!

உம்ம இட்லிப்படத்தப்பாத்து எனக்கு ஆசை வந்து நேத்து ஆனந்தபவன் ல 'கை' வைச்சிட்டேன்.

சுவையான பதிவு/ நன்றி.

எம்.கே.
 
விஜய்,
ஏங்க இப்படி வயித்தெரிச்சலை கொட்டிக்கிறீங்க.. ? இதுக்காகவேனும் தமிழ்நாட்டுக்கு 6 மாசத்துக்கு ஒரு முறை போகணும்.
 
/// "எலே அரிசி திங்கதலே. அப்புறம் ஒன் கல்யாணத்தப்பம் மழை பெய்யும்" என்பார். என் கல்யாணத்தப்பம் மழை பெய்தால் என்ன?//

விஜய்,
கடைசியில் உங்க கல்யாணத்துக்கு மழை பெய்ஞ்சுச்சா இல்லையா ?

///அதுபோக சென்னை டிரஸ்ட்புரத்தில் கோடம்பாக்கம் ஹைரோட்டின் சிக்னல் பக்கத்தில் உள்ள சந்திரபவன் இட்லி எனக்கு பிடிக்கும் என்பது கொசுறு செய்தி.////

வாழ்க்கையில் மிகவும் ரசித்துச் சாப்பிட்டவைகளில் இந்தச் சந்திரபவன் ஓட்டல் முழுச்சாப்பாடு முதலிடம் வகிக்கிறது. அடடா... என்ன சுவை.. ஆகா..ஓகோ.. பேஷ்..பேஷ்.. இதுக்கு மேலே என்ன சொல்றதுன்னு தெரியலை. அது மாதிரி சமையல் பண்ணத் தெரிஞ்ச பொண்ணு கிடைச்சா அடுத்த நிமிடமே காலில் விழுந்து கட்டிக்கலாம் :-).

///தமிழில் எனக்கு பிடிக்காத இன்னொரு வார்த்தை 'தோசை'.///
:-)

//மறுநாள் மிக அக்கரையாக அந்த கடைக்காரன் "என்ன சார்! நேத்து இட்லியை சாப்பிடவே இல்லீயே" என்றார். நான் "அதெல்லாம் ஒன்னுமில்லையே. அது சரி செங்கள் சூளையை சிங்கப்பூர்ல எப்போ ஆரம்பிச்சீங்க" என்றேன்.//

மனுசன் கடுப்பாகி அடுத்த தடவை உண்மையான செங்கல்லை கொடுக்கப்போகிறார், அப்பவும் நீங்கள் இதையேதான் சொல்லப்போகிறீர்கள் :-).
 
நன்றி எம்.கே.குமார். இன்னும் ஆனந்த பவன் தானா? எங்களுக்கெல்லாம் கல்யாணம் சாப்பாடு போட்டாச்சி, உங்களுக்கு வீட்டு சாப்பாடு எப்பய்யா?
 
முத்து, டிரஸ்ட்புரம் சந்திரபவன் தெரியுமா? கையை கொடுங்க முதல்ல. நம்ம கட்சி நீங்க.

அப்புறம் கல்யாணத்துக்கு மழையெல்லாம் பெய்யல. ஜீன் மாசத்துல எங்கெங்க மழை.

நன்றி முத்து.
 
டேய் ஓய ஓக்க. குச்சிக்காரி கூதி மகனே. அங்கே திட்டிவிட்டு இங்கே ஒன்னும் தெரியாத மாதிரியா இருக்கிறாய். ஒம்மாளபோட்டு ஒழுக்க. தேவடியா கூதி மகனே.

திருமலையும் உன் அம்மாவைப்போட்டு ஒழுத்தானா? முருகனுமா ஒழுத்தான்? டோண்டுவும் ஒழுத்தானா? எஸ்கேயும் ஒழுத்தானா? இன்னும் வேறு யாரெல்லாம் ஒழுத்தார்கள்? ஓத்தா.
 

உங்கள் கருத்துக்களை இட


<< திரும்ப முன் பக்கத்துக்கு போ

-ல் போட்டுத் தாக்கியது

சத்தியராஜின் இங்கிலீஷ்காரன் அலும்பு

Difficulty in reading this post due to font issues? Click here for a PDF copy. Works best if you right-click the link and select 'Save target as...'
இந்த பதிவை போட்டுத் தாக்கியவர் : Vijayakumar
யப்பா! இந்த சத்தியராஜோட அலும்பு தாங்கமுடியல சாமி. சத்தியராஜின் படங்களில் இந்த மாதிரி நையாண்டியை வசமாக பிடித்துக் கொண்டார். இன்னும் நையாண்டிகளை சத்தியராஜ் எஃபக்டிவாக போட்டுத்தாக்கினால் சத்தியமாக அவர் மகன் சிபி தலையெடுக்க முடியாது. கீழே கொடுக்கப்பட்ட படங்களை பார்த்து பார்த்து சிரித்தேன். ரசித்தேன். யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம். லக்க லக்க லக்க லக்க லக்க



லக்க லக்க லக்க லக்க லக்க

லக்க லக்க லக்க லக்க லக்க

லக்க லக்க லக்க லக்க லக்க

லக்க லக்க லக்க லக்க லக்க

லக்க லக்க லக்க லக்க லக்க



படங்கள் உபயம்: தினமனி

இந்த பதிவின் வாக்கு எண்ணிக்கை: . பக்கத்திலுள்ள ஸ்டாரை மவுசால் போட்டுத் தாக்கினால் எனக்கு மவுசு ஏறும். நன்றி:-)

உங்கள் கருத்துக்களை இட

திருப்பி தாக்கியவர்கள்:
இதெல்லாம் ஜூஜூபியப்பா, படத்தோட டைட்டிலை கவனிச்சு பாருங்க.. 'இங்கிலீஷ்காரன்' கீழே சின்னதா 'தமிழ் வாழ்க'

கொஞ்ச நாள் முன்னாடிதான் தமிழ் பாதுகாப்பு பேரவை கூட்டத்தில சத்யராஜ் தலையை பார்த்த ஞாபகம்!
 
யோவ் அலுவலகத்தில் ஒன்று வேலை செய்யுங்க அல்லது வேலை செய்கிற எங்களை நிம்மதியா இருக்க விடுங்க.சிரிச்சா ஆளாளுக்கு எட்டிப் பார்க்கிறாங்க
 
ராம்கி, இந்த 'தமிழ் வாழ்க' மேட்டரை அந்த படத்தோட சன் டிவி ட்ரெய்லர்ஸ்லேயே பார்த்தேன். எழுதும் போது ஞாபகம் வரலையப்பா. நல்ல வேளை ஞாபகப்படுத்துனீங்க.

ஈழநாதன், எனக்கு அதே நிலமை தான். நண்பர் எனக்கு இந்த படத்தை அனுப்ப இன்னும் அடக்க முடியாமல் சிரித்துக்கொண்டிருக்கிறேன்.

உண்மையில் சத்தியராஜ் இன்னும் நிறைய சிரத்தை எடுத்தால் நக்கல் நாயகனாக மிளிரலாம்.
 
சத்தியமுகி சூப்பர்
 
போட்டுதாக்குங்க அல்வா சிட்டி !
ஏற்கனவே நம்ம தலவரு ரசிகர்கள் promiseraj மேலே கோவமா இருக்காங்க.. இதுல இப்படி வேற சந்திரமுகி ய நக்கல் பன்னா என்ன நடக்குமோ !!

வீ எம்
 
ஹலோ வீ.எம்,

ரஜினி ரசிகர்கள் இதில் கோபப்பட என்ன இருக்கிறது? ரஜினி மாதிரி வேஷம் போடலையே. நம்ம சந்திரமுகி ஜோதிகா வேஷம் தானே... எல்லாரும் என் ஜாய் பண்ணட்டும்.
 
சத்யராஜ் அவர்கள் படத்தினைப் பார்த்து சிரித்தேன். தமிழ் தமிழ் என்று சொல்பவர்கள் தன்னைத்தானே நக்கிக்கொள்ளும் நாய்கள். இந்த தமிழ் வாழ்க என்ற கோஷத்தினை தமிழ்சினிமா வரை கொண்டு சென்று காசு பார்க்க அலைகிறார்கள். இதெல்லாம் தமிழ்குடிதாங்கிகளின் வேலையாகத்தான் இருக்கவேண்டும். இதனை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். மற்ற மொழிகளை பயில்வதில் தவறொன்றும் இல்லை.

இப்படித்தான் 1657ல் ஒருமுறை நேதாஜி ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தின்போது... வேண்டாம் தனிப்பதிவாகவே இடுகிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்
ப்ளாக்கர் எண் 4800161
(எலிக்குட்டியைப் ப்ளாக்கர் ஐ.டி.யின் மேல் வைத்து கீழே அதே எண் தெரிகிறதா என்று பார்க்கவும்)
 
நன்றி டோண்டு அய்யா.

//தமிழ் தமிழ் என்று சொல்பவர்கள் தன்னைத்தானே நக்கிக்கொள்ளும் நாய்கள்//

அய்யகோ!!! ஏற்கனவே இது விவகாரமான ஸ்டேட்மெண்ட் ஆச்சே....
 
ஆணுக்கு பெண் வேஷம் போடுவதை ப.ம.க வரவேற்கும் அதே நேரத்தில் லேசாக இடுப்பு தெரிவதை ப.ம.க கண்டிக்கிறது... இனி இளைஞர்கள் சமுதாயம் சீர்திருந்தும் வகையில் பெண் கதாபாத்திரத்துக்கு ஆண்கள் மாறுவேஷம் போட்டு மட்டுமே (இடுப்பு தெரியாமல்) நடிக்க வேண்டும் என்று சட்டம் இயற்றப்படும். மேலும் தப்பி தவறி அந்த வேஷத்தை பார்த்தே யாராவது இளைஞர்கள் உணர்ச்சி வசப்படலாம் என்பதால் "இது ஆண், பெண் அல்ல" என்று கொட்டை எழுத்துக்களில் படம் முழுக்க திரையில் தோன்றும்படியும் சட்டம் இயற்றப்படும்...
 
Halwacity அவர்களே,

மேலே என் பெயரில் வந்த பின்னூட்டம் என்னுடையதல்ல. போலி டோண்டு மீண்டும் வந்து விட்டார். ப்ளாக்கர் எண்ணை சரி பாருங்கள். இப்பதிவு அனானி பின்னூட்டங்களை ஏற்காததால் இம்மாதிரி சரி பார்த்து கொள்ளலாம்.

ஆனால் அனானி கமெண்டுகள் ஏற்றுக்கொள்ளும் பதிவுகளில் அந்தப் போலி பேர்வழி என் பெயர் மற்றும் ப்ளக்கர் எண்ணுடன் பதிவு செய்கிறார். என் பெயரில் வரும் பின்னூட்டங்கள் என்னுடைய இதற்காகவே போட்டுள்ளப் பதிவிலும் வருகிறதா என்று பார்க்கவும். அங்கும் அது வந்தால் ப்ளாக்கர் எண்ணைப் பார்க்கவும். See my latest blog as well to this effect.

என்னுடைய பிரத்தியேகப் பதிவின் உரல் கீழே.

http://dondu.blogspot.com/2005/05/blog-post_25.html

அன்புடன்,
டோண்டு ராகவன்
ப்ளாக்கர் எண் 4800161
(எலிக்குட்டியைப் ப்ளாக்கர் ஐ.டி.யின் மேல் வைத்து கீழே அதே எண் தெரிகிறதா என்று பார்க்கவும்)
(அனானிப் பதிவுகளைச் செயலிழக்கச் செய்யும் வரை இதில் பலன் உண்டா எனத் தெரியவில்லை. என் குறிப்பிட்டப் பதிவிலும் பார்த்துக் கொள்ளுங்கள்.)

P.S.
Bloggers retaining the anoymous comments' enabling do so for the simple reason that many of their friends are not bloggers and this facility is meant for them. But as long as this Poli Dondu is there, no one is safe. Kindly do disable the anonymous comments in your respective blogs. Otherwise a great injustice is being done to targeted persons like me. Please remember that while today I am being targeted, tomorrow it may be anybody's turn.

By the way, opening a blogger account is a child's play.

Regards,
Dondu Raghavan
 
டோண்டு அய்யா,

என்ன நடக்கிறது இங்கே(ப்ளாக்கில்)?. பெரும் குழப்பமாக இருக்கிறது.
 
"இப்படித்தான் 1657ல் ஒருமுறை நேதாஜி ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தின்போது... வேண்டாம் தனிப்பதிவாகவே இடுகிறேன்."
நேதாஜி 1657-ஆம் வருடத்தில்? அது இருக்கட்டும். அனானி பின்னூட்டங்களை செயலிழக்கச் செய்தாலே பாதித் தலைவலி தீர்ந்து விடும். இப்பதிவின் நகல் என்னுடைய பிரத்தியேகப் பதிவிலும் வரும். பார்க்க:
http://dondu.blogspot.com/2005/05/blog-post_25.html#comments

அன்புடன்,
டோண்டு ராகவன்
ப்ளாக்கர் எண் 4800161
(எலிக்குட்டியைப் ப்ளாக்கர் ஐ.டி.யின் மேல் வைத்து கீழே அதே எண் தெரிகிறதா என்று பார்க்கவும்)
(அனானிப் பதிவுகளைச் செயலிழக்கச் செய்யும் வரை இதில் பலன் உண்டா எனத் தெரியவில்லை. என் குறிப்பிட்டப் பதிவிலும் பார்த்துக் கொள்ளுங்கள்.)
 
//அல்வாசிடி போன்ற நண்பர்களிடம் எவ்வளவு கேட்டு கொண்டாலும் அனானிப் பின்னூட்டங்களைச் செயலிழக்கச் செய்ய மாட்டேன் என்கிறார்கள். அப்படியே செயலிழக்கச் செய்த தளங்களிலும் ப்ளாக்கர் எண்ணைச் சரி பார்க்க மாட்டேன் என்கிறார்கள். என்னதான் செய்வது எனப் புரியவில்லை.//


டோண்டு சார், சனி,ஞாயிறு வலைப்பக்கம் அதிக நேரம் செலவழிக்க முடிவதில்லை. இப்போது தான் உங்கள் பின்னூட்டமும் இந்த பதிவையும் பார்த்தேன். என்னுடைய சிறிய சுயதேவைக்காக நான் இன்னும் அனானிமஸ் பின்னூட்டத்தை வைத்திருக்கிறேன். எத்தனையோ கெட்ட வார்த்தை வசவுகள் அதில் வந்து விழுந்தாலும் சிறிதுகாலத்திற்கு பிறகு தான் என்னால் அனானிமஸ் பின்னூட்டத்தை தூக்க முடியுமென நினைக்கிறேன்.

முதலில் உங்கள் பின்னூட்டத்தை என் பதிவில் பார்த்ததும், எலிக்குட்டியை பிளாக்கர் ஐடியில் வைத்து பார்த்த போது எண் சரியாக வந்ததால் உண்மையிலேயே நீங்கள் தான் பின்னூட்டம் விட்டுவிட்டீர்கள் என நினைத்தேன். மன்னிக்கவும். பிறகு என்னுடைய மின்னஞ்சலில் சரி பார்க்கும் போது முதலில் பின்னூட்டமிட்டதாக வந்த கோழையின் மின்னஞ்சலில் உங்கள் இ-மெயில் ஐடி இல்லை. நீங்கள் விட்ட பின்னூட்டத்தில் வந்த இ-மெயிலில் உங்கள் ஐடி இருந்தது. அதை வைத்து தான் நான் உறுதிப்படுத்தினேன்.

மிகவருத்தமாக இருக்கிறது. இந்த மாதிரி கேவலமான முறையில் அடுத்தவர் பெயரைக் கெடுக்க நினைப்பவர்கள் நாக்கை பிடிங்கி நாண்டுக் கொண்டு சாகலாம்.பிடிக்காதவராக இருந்தால் நேருக்கு நேர் மோத தைரியம் இல்லாத கோழைகள்.
 
This comment has been removed by a blog administrator.
 
நன்றி விஜய் அவர்களே. இப்போது நிலைமை சற்று பரவாயில்லை. என் பின்னூட்டங்கள் என் புகைபடத்துடன் வரும். என் ப்ளாக்கர் எண்ணும் என் டிஸ்ப்ளே பெயருடன் சேர்ந்தே வரும். என்ன, புகைப்படம் பின்னூட்டங்களை இடும் பக்கத்தில் மட்டும் வரும். மேலும் என் பின்னூட்டங்கள் என் தனிப்பட்டப் பதிவிலும் நகலிடப்படும்.

ஒரு வேளை போலி நபர் என் புகைபடத்தையும் ப்ளாக்கர் எண்ணையும் ஒட்டி நகலெடுத்தால் அவற்றை அவர் ஒரு புது ப்ளாக்கர் பெயரில்தான் போட முடியும். அப்போது எலிக்குட்டி அவ்ர் புது ப்ளாக்கர் எண்ணைக் காட்டிக் கொடுக்கும். இருப்பினும் அந்த மனம் பிறழ்ந்தவன் ஏதாவது செய்து வைப்பான் என்ற பயமும் இருக்கிறது. பார்க்கலாம், எல்லாம் கடவுள் விட்ட வழி.

அன்புடன்,
டோண்டு ராகவன்
 
போலியாக பல கம்மானாட்டிகள் ஒருவரின் ஐடியை திருடி பின்னூட்டம் இட்டு வருகிறார்கள்.

அதே போல் போலி டோண்டுவாக பல பேர் அவதாரம் எடுத்திருக்கிறார்கள் என்பது என் கணிப்பு. அதில் ஒரு போலி டோண்டுவாக இந்த பதிவில் ஒருவர் காலை 9:52-க்கு பின்னூட்டமிட்டு சென்றுள்ளார்.

சிங்கப்பூர் நேரப்படி 25 ஜீன் 2005-ல் காலை 9:52-க்கு என் பதிவில் வந்த ஐபியை பார்த்ததில் கீழ்கண்ட ஐபியை தான் சந்தேகப் பட வேண்டியிருக்கிறது. அந்த பின்னூட்டத்தை தூக்கிவிட்டேன். காலை 7:41-க்கு பிறகு, எனக்கு அப்புறம், 9:52-க்கு தான் மற்றொருவர் என் பதிவுக்குள் வந்துள்ளார்(என்னுடைய ஐபி கணக்கில் வராது என்பதால்). ஆனால் அவரின் ஐபி தோராயமாக என் கைவசம். உங்கள் நன்மைக்காக இதை வெளியிடுகிறேன். கொஞ்சம் எல்லோரும் ஐபியில் கண்ணாக இருந்தால் ரொம்ப ரொம்ப அக்கியூரட்டாக இல்லாவிட்டாலும் எங்கிருந்தென்று ஓரளவு ஊகிக்கலாம்.

அந்த ஐபி: 24.30.75.81
ஐபி கடைசியாக சென்றடையும் இடம்: Mount Laurel, NJ.
இண்டெர்நெட் சர்வீஸ் ப்ரொவிடர்: camcast cable communication

கீழே தொடர்பை க்ளிக்கி படம் பார்க்கவும்

சுட்டி இங்கே

கொஞ்சம் இந்த ஐபியின் மீது நீங்களும் கண் வையுங்களேன்.

இனி பின்னூட்டம் என்ற பெயரில் அசிங்கம் பண்ணி செல்லும் ஒவ்வொரு ஐபியும் கணக்கில் வைத்துக் கொள்ளப்படும். கொஞ்ச நாள் குறைந்தது என் பதிவுக்கு மட்டுமாவது இணைய போலீஸாக இருக்கலாமென ஒரு ஆவல்.

மேல் கண்ட ஐபி ஒரு தோராயமான கணிப்பேயின்று 100% உத்திரவாதம் தரமுடியாது.
 
மலாக்காவிலிருந்து போலிடோன்டு என் பதிவில் பின்னூட்டமிட்டிருந்தார் .

புகைப்படம் சேர்ப்பது நல்ல யோசனை என்று நினைக்கிறேன் ..
 

உங்கள் கருத்துக்களை இட


<< திரும்ப முன் பக்கத்துக்கு போ

-ல் போட்டுத் தாக்கியது

நிலாச்சோறு

Difficulty in reading this post due to font issues? Click here for a PDF copy. Works best if you right-click the link and select 'Save target as...'
இந்த பதிவை போட்டுத் தாக்கியவர் : Vijayakumar
ஏற்கனவே நடுநிசி ஆகி கடிகார முட்கள் மணி ஒன்றைக் கடந்து இரண்டைத் தொடவிருக்கிறது. தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்துப் பார்க்கிறேன். கண்கள் ஓய்வுக் கொள்ளவில்லை. பெற்ற குழந்தையை பார்த்துவிட்டு சிங்கப்பூருக்கு திரும்பிய பிறகு கொஞ்ச நாளாகவே இரவில் படுத்தால் சரியாக தூக்கம் வருவதில்லை. அன்று அழுதுக் கொண்டிருந்த குழந்தையைப் பார்த்துவிட்டு திரும்பியவன் இன்று காரணமில்லாமல் குழந்தை எதைக் கண்டாலும் வினோதித்து சிரிக்கிறான் எனத் தொலைப்பேசியில் சொல்லிக் கேட்கும் போது சந்தோஷிப்பதை விட தேவையில்லாமல் என் மேல் எனக்கே வெறுப்பு வருகிறது. "சம்பாதிக்க வேண்டிய வயசுல சம்பாதிக்கனும்னுடா" என்று என் தாத்தாவின் குரல் காதில் ஒலிக்க பணம் என்பதை பார்க்க வந்துவிட்டு என் பையனிடம் காணக்கிடைக்காத காட்சிகளை நினைத்துக் கொண்டிருப்பது மடத்தனமோ என்று நினைக்கும் வேளையில் விசும்பலின் ஊடே "என் மீதுள்ள அன்பு உங்களுக்கு குறைந்து விட்டது?" என்று மனைவியின் குரல் கேட்கிறது. "நீர் ஒட்டாத தாமரை இலையாக வாழக் கற்றுக்கொள்" என்று பேதலித்த ஒரு குரல் எங்கிருந்தோ கேட்டாலும், "என்னிடம் அது சாத்தியமில்லை.வெளியே போ" என்று என் மனசாட்சி யாரையோ இன்னமும் சாடிக் கொண்டிருக்கிறது.

அயராத என் கண்ணில் ஜன்னல் வழியாக ஓரளவு வளர்ந்த நிலா கான்கிரீட் கட்டிடத்துக்கு பின்னே தேய்த்துக் கொண்டுப் போகும் மேகம் வழியாக தெரிகிறது. தலைமாட்டில் சுற்றும் அந்த காத்தாடி நேற்று வரை என்னை குத்தூசியாக குத்திய அதன் காற்று இன்று என்னைத் தென்றலாக தழுவுகிறது. ஆள் அரவமற்ற மொட்டை மாடியில் கொடைக்கானல் மலைத் தொடரை ரசித்துக் கொண்டே கால் கைகளை அகட்டிக் கொண்டு என் தாத்தா வீட்டு மொட்டைமாடியில் சட்டையில்லாமல் படுத்துக்கிடக்கிறேன். யாரையோ தொட தவழ்ந்து சென்ற தென்றலின் காலில் நானும் மிதிப்படுகிறேன். மனதால் நைந்துப் போன என்னை தென்றல் சொஸ்தப்படுத்துகிறாள். கொடைக்கானல் மலைத் தொடர் தொட்டு என் தாத்தா வீட்டுக்கு அண்மைவரை படர்ந்திருந்த தென்னைகளுக்கு பின் முழு நிலவு காய்ந்துக் கொண்டிருக்கிறது. தென்னைகளில் தொங்கும் தூக்கணாங்குருவிக் கூட்டிலிருந்து ஒரே சலம்பல் சத்தம். சுவர்க்கோழிகள் விடாமல் க்ரீச் க்ரீச் க்ரீச் க்ரீச் ரீங்காரம் இன்னும் கேட்டுக் கொண்டுதானிருக்கின்றன.

விரிந்த வானமும், தூவிக்கிடக்கும் நட்சத்திரங்களும்,நிலவின் வெளிச்சத்தில் நிழலாகத் தெரியும் தென்னையில் பச்சை மட்டைகளின் உரசல் ஒலியும்,பக்கத்து வீட்டு தாத்தா இருமலும்,எங்கோ ஒரு கோவிலில் நடக்கும் கொடைவிழாவில் நாட்டுப்புற பாடல் படிக்கும் கிழவியின் குரலும் என் தென்றல் பெண்ணோடு சேர்ந்தே வருகிறார்கள்.மற்றுமொரு முறை தென்றல் பெண் போகிறவழியில் தெரியாமல் என்னை விடாமல் சிறிது நேரம் தழுவிவிட்டாள். என் காதில் செல்லமான ஒலிக்கலவைகளை சிணுங்கவிட்டாள். இதை எதிர்ப்பார்க்காத என் உடம்பு ஒருமுறை சில்லிட்டு சிலிர்க்கிறது. சென்றவள் பக்கத்து வயலின் நெற்பயிரின் மணத்தையும் என் நாசிக்குள் ஊடுருவ செய்கிறாள். இன்னமும் என்னை அறியமால் நான் கிடக்கிறேன். இதன் பெயர் எனக்குத் தெரியவில்லை. கனவா? ஏகாந்தமா? பிரம்மையா?

Image hosted by PicsPlace.to

"நீங்கள் நினைத்திருந்தால் எப்போதோ வந்திருக்கலாம். உங்கள் குழந்தையை பார்க்க எப்போது வருகிறீர்கள்?" மற்றுமொரு முறை என் மனைவியின் குரல் கேட்க, சட்டென்ற விழிப்பு நிலையில் ஜன்னல் வழித் தெரிகிறது நிலவு.எங்கிருந்தோ பிரகாசிக்கும் நிலவு சுவாசிக்க முடியாமல் இக்காலம் வரை காற்றில்லாமல் மூச்சித் திணறிக் கொண்டுதானிருக்கிறது. பாவமாக இன்னும் வளராமல் இருக்கும் அந்த நிலவைப் பார்க்கிறேன். அந்த நிலவும் கூடிய விரைவில் வளர்ந்துவிடும் என்ற நம்பிக்கையில் மீண்டும் நான் துயில முயற்சிக்கிறேன்.

இந்த பதிவின் வாக்கு எண்ணிக்கை: . பக்கத்திலுள்ள ஸ்டாரை மவுசால் போட்டுத் தாக்கினால் எனக்கு மவுசு ஏறும். நன்றி:-)

உங்கள் கருத்துக்களை இட

திருப்பி தாக்கியவர்கள்:
நன்றாக எழுதியுள்ளீர்கள் விஜய்.
 
********************
comment by ஞானபீடம்
********************

பணமா? பாசமா?

இருதலைக் கொள்ளி எறும்பாகத் தவிப்பது என்பது இதுதானோ?

********************
comment by ஞானபீடம்
********************

பின் குறிப்பு: இங்கு நான் எனக்காக எந்த விளம்பரமும் இடவில்லை !.
விளம்பரத்தையே ஒரு பதிவாக எனது வலைப்பக்கத்திலேயே இட்டுள்ளேன்.
 
அன்புள்ள விஜய்,

நிலாவோட படம் அருமையா இருக்கு. கொஞ்ச நாள் லீவு போட்டுட்டு ஊரைப் பாக்க போங்க.
குழந்தையோட சிரிப்பைக் காலாகாலத்துலே அனுபவிக்க வேணாமா?

இல்லேன்னா, பேசாம குடும்பத்தை இங்கே கொண்டுவந்துருங்க!!!!

என்றும் அன்புடன்,
அக்கா
 
அன்புள்ள விஜய், நல்ல நடையில் எழுதப்பட்டுள்ள பதிவு. சில சமயம் இப்படித்தான் எழுத்தும், எழுத்தின் வழியாக உறவாடி வரும் நினைவுகளும், இயற்கையும், வெறுமையைப் போக்க உதவும் உற்ற தோழர்கள். அப்படி ஒரு தோழமையோடு உங்களுக்கு எழுத முடிகிறது. நன்று. உங்கள் மனையோடும் மகவோடும் களிப்புற்றிருக்கும் நாட்கள் வரும். உற்சாகமாய் இருங்கள்.
 
உங்கள் மனநிலையை இயற்கையோடு இணைத்து நன்றாக எழுதியிருக்கிறீர்கள். விரைவில் உங்கள் குழந்தையின் சிரிப்பில் முழுநிலவினைக் காண வாழ்த்துகள்!
 
விஜய்:

நல்ல பதிவு; உணர்வு பூர்வமாய் எழுதியுள்ளீர்கள். உங்கள் மனைவிக்கு கேம்கார்டரில் ரெக்கார்ட் செய்து வலையேற்றக் கற்றுக்கொடுத்துவிட்டால் - 2 அல்லது 3 நாளுக்கு ஒரு முறை, குழந்தையின் சேட்டைகளைப் பார்த்து மகிழலாமே

- அலெக்ஸ்
 
ஹப்பா...
போட்டுத் தாக்குறதுல்ல இருந்து விலகி
இன்னிக்காவாது பொண்டாட்டி, புள்ள யாவகம் வந்துச்சே. சீக்கிரம் ஒருவாட்டி ஊருக்குப் போய்ட்டு வாய்யா (அப்பத்தான் இதுமாதிரி அடிக்கடி நிலாச்சோறு போடமுடியும்:)

(சும்மா குசும்புக்கு!)
 
எல்லாம் ????? தெரியறதுனால பின்னூட்டமிட்ட அனைவரூக்கும் நன்றி. இருந்தாலும் பெயரை தெரிந்துக் கொள்ள முயற்சி செய்ததில்,

கார்த்திக், ஞானபீடம், துளசியக்கா,சம்மி,செல்வராஜ்,தங்கமணி,அலெக்ஸ்,அன்பு ஆகியோருக்கு என் நன்றிகள்.

சிங்கப்பூர் க்ளையண்டுக்கு என்னுடைய பங்கு தொங்கு பாராளுமன்றம் மாதிரி தொங்கிக் கொண்டிருக்கிறது. இன்னிக்கோ நாளைக்கோ அடுத்த மாசமோ வேலை முடியும், இந்தியாக்கு திரும்பலாம் என்று நினைத்தாலும் அடுத்தடுத்த குறுகிய நாட்கள் வேலை நீட்டிப்பு எல்லாவற்றையும் இழுத்துப் பிடித்துக் கொண்டிருக்கிறது.(எனக்கு தெரிந்து கடந்த 1 வருடமாக இதே நிலை தான்) சில நேரங்களில் இதை தவிர்க்கமுடியாது. ஆனால் அதுவும் இந்த நேரத்தில் கசப்பாக இருக்கிறது. என்ன செய்ய?

//இப்படி அலுவலகம் வீடுனு இருக்காம அப்ப அப்ப எங்கையாவது வெளியபோய் கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கொள். //

சம்மி மக்கா, பதிவு எழுதவும், படுக்கவும் தான் வீட்டுக்கே போகிறேன்.இல்லையென்றால் நம்ம ஊரு பண்டாரம் மாதிரி எஸ்பிளனேட் குட்டை சுவரும்,நூலக திண்டும், சினிமா தியேட்டர் இருக்கையும்,உணவுச் சாலை இருக்கையும் தான் என்னுடன் துணையிருக்கிறது. :-))))

அட அலெக்ஸ்,

நீங்க வேற, இண்டர்நெட்டே இல்ல ஊருல. அப்புறம் எங்கெங்க கேம்கார்டரும் படமும்.

எல்லாம் நன்மைக்கே.
 
***************
comment by ஞானபீடம்
***************
எலே.. மக்கா.. ஒம்ம ஜோக்குக்கு பதிலு போட்டாச்சுவே... (சித்தி அடைய வழி)

ps.நா, வெளம்பரம் எதுனா இங்க குடுத்துருக்கனாய்யா!

***************
comment by ஞானபீடம்
***************
 
என்ன அண்ணச்சி, home sick ஆ....

எப்பவுமே மனுசன் மனசு கூழுக்கும் ஆசை மீசைகும் ஆசை கணக்கு தான்,
கவலை படதீங்க, It is all part of life ணு எடுத்துக்கவென்டியதுதான்.
 
என்ன சொல்றது?? நல்லா எழுதிருக்கீங்கன்னு சொல்றதா.. கவலைப்படாதீங்கன்னு சொல்றதா..

எல்லாம் நல்லதுக்குத்தான்.. ஒரு நடை போயிட்டு வந்துராலாம்ல..
 

உங்கள் கருத்துக்களை இட


<< திரும்ப முன் பக்கத்துக்கு போ

-ல் போட்டுத் தாக்கியது

அந்நியன் - திரைவிமர்சனம்

Difficulty in reading this post due to font issues? Click here for a PDF copy. Works best if you right-click the link and select 'Save target as...'
இந்த பதிவை போட்டுத் தாக்கியவர் : Vijayakumar
அந்நியனின் விமர்சனத்துக்கு போகும் முன் சிறிது ஆலாபனை. அந்நியன் கரூட புராணத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட புரூடா புராணம்.கரூட புராணமே ஒரு புரூட எனப்படும் போது அப்பட்டமான புரூடாக்களை எப்படி எடுத்துக் கொள்வது. அந்நியனின் தாமதத்துக்கு சந்திரமுகி ஒரு காரணமா? நிச்சயம் சந்திரமுகி தான் காரணம். பின்னே ரெண்டுமே ஒரே அடிப்படையில் எடுக்கப்பட்டால்? சந்திரமுகி ஸ்பிலிட் பெர்சனாலிட்டி டிஸ் ஆர்டர் என்றால் அந்நியன் மல்டிபிள் பெர்சனாலிட்டி டிஸ் ஆர்டர். ஆக மொத்தம் இரண்டு படத்தையும் பார்த்தவர்கள் மல்டிபிள் ஸ்பிலிட் பெர்சானாலிட்டியாகி முழு மெண்டலாகி வெளியே வருவது நிச்சயம். அந்நியன் இடைவேளை வரை பார்த்த எரிச்சலில் உட்கார்ந்திருந்த போது, ஆயுத எழுத்து பாடலை ஒலிபரப்பிக் கொண்டிருந்தார்கள். "இது என்ன படம்?" என நண்பர்கள் கேட்டதும் நான் டக்கென்று "பாய்ஸ்" என்றேன். அவர்கள் நம்பாமல் "ஹலோ பாய்ஸ் பாட்டு எங்களுக்கு தெரியாதா?" என்றதும் "சொன்ன கேட்டுக்கனும். எதுக்கெடுத்தாலும் ஆர்கியூவ்மெண்ட்" என்று ஓங்கிக் கத்திவிட்டேன். உண்மையில் இந்த மாதிரி படம் பார்த்து எனக்கு எத்தனை பெர்சானலிட்டி டிஸ் ஆர்டர் இருக்கிறது என தெரியவில்லை.

Image hosted by Photobucket.com

சரி இப்போது சாரீர சுத்தமாக கதை சுருக்கத்துக்கு போவோம். திருவல்லிக்கேணியில் காலை எழுந்தவுடன் சந்தியாவதனம் பண்ணிவிட்டு பஜனைக்கு போகும் குடுமி வைத்த வக்கீல் இராமனுஜ அய்யங்கார் என்ற அம்பி. இவருக்கு நாட்டில் எதுவுமே சரியில்லை என்ற சதா கவலை. ரோட்டுல யாரும் டிராபிக்ஸ் ரூல்ஸ் ஃபாலோ பண்றதுல்லை, அடிப்பட்டவனை யாரும் ஆஸ்பத்திரிக்கு தூக்கிட்டுப் போறதில்லை, வாங்குற கன்ஸ்யூமர் ப்ராடக்ட்ல குவாலிட்டி இல்ல இதை பத்தி சதா கவலை. தொப்புக்கடீரென்று வானத்திலிருந்து குதித்த மாதிரி படம் ஆரம்பித்தவிட்டது என்ற பிரஞ்ஞையில் கதாநாயகன்(அம்பி) நாட்டில் நடக்கும் அநியாங்களை அப்போது தான் பிறந்த குழந்தை மாதிரி வியந்து பதறி சதா கவலைப்படுகிறார். நாட்டில் யாருக்கும் பொறுப்பில்லை, யாருக்கும் மனிதாபிமானமில்லை என்று சதா கவலைப்படும் அய்யங்காருக்கு சதா 'சதா'வை(கதாநாயகி) பற்றிய நினைப்பு தான்.

'ரூல்ஸ்'ராமானுஜத்துக்கு கம்ப்ளெயிண்டும் பெட்டிஷனும் எழுதிப்போட்டு அதில் இழைக்கப்படும் அநீதிகளால் ஓயாத மன உளைச்சல். 'அந்நியன் அவதரித்து விட்டான்' என்ற லெட்டரை 10 பேருக்கு அனுப்பினால் நினைத்தது நடக்குமென சொல்லி ஒரு போஸ்ட் கார்ட் வருகிறது. அதில் www.anniyan.com என்ற வலைத்தள முகவரியும் கிடைக்கிறது. சதா மன உளைச்சலால் உழலும் அய்யங்கார் ஒரு நாள் அந்த வலைத்தளத்துக்கு போய் பார்க்கிறார். அதில் தவறு செய்பவர்கள் யாவரும் அந்நியனால் முறையே தண்டிக்கப்படுவார்கள் என்று பயங்கர பயமுறுத்தும் க்ராபிக்ஸ்ஸில் காண்பிக்கிறார்கள். அடிப்பட்டவருக்கு அய்யங்காருடன் உதவ மறுத்த கார் ஓனர் ஒருவரின் பெயரை அந்த வலைத்தளத்தில் வண்டி முதல் கொண்ட விவரங்களுடன் வலைத்தளத்தில் உள்ளீடுகிறான். அன்று இரவே தலைவிரி கோலத்தில் தன்னை 'அந்நியன்' என்று சொல்லிக்கொண்டு கோடூர முகத்துடன் அம்பியின் உருவத்தையொத்த ஒருவனால் எருமைமாடுகளை விட்டே பணக்கார கார் ஓனரை கொத்து பரோட்டா போடப்பட்டு சமஸ்கிருதத்தில் ஒரு வார்த்தையை தமிழில் இரத்ததால் எழுதிவிட்டு போய் விடுகிறான்.

இப்படியாக அம்பி இரயிலில் பயணம் செய்தால் அதுவரை அம்பி இரயிலேயே பயணம் செய்யாத மாதிரி பேன் சுத்தவில்லை, கொடுக்கும் சாப்பாடு சரியில்லை, டாய்லெட் சுத்தமாக இல்லை என சதா கம்ப்ளெயிண்ட் செய்துக் கொண்டே இருக்கிறார். கூடிய விரைவில் இரயிலுக்கு உணவு சப்ளை பண்ணும் ஏஜண்ட் அந்நியனால் எண்ணைக் கொப்பரையில் மசாலா தடவி பொறித்தெடுக்கப்படுகிறான். இதை துப்பறிபவர்கள் போலீஸ் டி.ஜி.பி பிரகாஷ்ராஜீம், விவேக்கும். அதில் விவேக் அம்பியின் இணை பிரியா நண்பர் வேறு. குவாலிட்டியான ப்ரேக் வயரை உற்பத்தி செய்யவில்லை என பேக்டரி முதலாளியை அட்டையை உடம்பு முழுக்க விட்டு இரத்தத்தை உறிஞ்சச் செய்து சாகடிக்கிறான் அந்நியன். துப்பறியும் சிங்கம் பிரகாஷ்ராஜ் அம்பியின் உதவியுடனே ஒருவன் கொல்லப்படும் போது எழுதியிருக்கும் சமஸ்கிருத தமிழ் வார்த்தைக்கு அர்த்தம் தேடுகிறார். அம்பி அவரின் சமஸ்கிருத அறிவால் அவையெல்லாம் தப்பு பண்றவாளை நரகத்தில் கொடுக்கப்படும் தண்டனைகளின் பெயர் எனக்கூறி கரூட புராணம் என்ற சமஸ்கிருத புத்தகத்திலிருந்து தண்டனை முறைகளை காண்பிக்கிறார். அந்நியன் அந்த கரூட புராணத்தில் சொல்லப்படும் தண்டனை முறைப்படியே(மாடு விட்டுக் கொல்வது,எண்ணையில் பொரித்தெடுப்பது...) தப்பு செய்கிறவர்களை கொல்கிறான் என கண்டுபிடிக்கிறார் துப்பறியும் சிங்கம்.

Image hosted by Photobucket.com

இதற்கிடையில் சதாவின் மீதான காதலை அம்மாஞ்சியாக அசட்டுத்தனமாக ரூல்ஸ் பேசி காதலை வெளிப்படுத்தும் அம்பியை தனக்கு பிடிக்கவில்லை என வெறுத்து ஒதுக்குகிறாள். அவள் மார்டனை விரும்புகிறாள் என அம்பி அறிந்துக் கொண்டு ரெமோ எனும் மார்டன் பையனாக உருவெடுக்கிறார். இவர்கள் லவ்ஸ் ஒருபக்கம் இப்படியே போக நிலம் வாங்குவது விசயமாக 'சதா' அண்டர்வேல்யூ போட்டு நிலத்தை வாங்கவும், லஞ்சம் கொடுக்கவும் துணியும் போது அந்நியனான அம்பி அவள் மீது கொலை வெறிக் கொள்கிறான். இங்கு தான் நாயகி சதா அம்பியின் மல்டிப்பிள் பெர்சானாலிட்டியின் முழு அவதாரத்தையும் உணருகிறாள்.

மனோதத்துவ டாக்டர் நாசரிடம் அம்பியும், சதாவும் ஆலோசனைக்கு போக நாசர் அம்பியிடம் இருக்கும் மல்டிப்பிள் பெர்சனாலிட்டியின் முடிச்சை அவிழ்க்க முயல்கிறார். இந்த இடத்தில் ப்ளாஷ் பேக். அம்பி 10 வயதாக இருக்கும் போது அரசாங்கத்தின் மெத்தனத்தால் அவனது தங்கையை மழையால் அறுந்து விழுந்த மின்சாரகம்பியில் பலிக் கொடுக்கிறார். அம்பியின் தந்தை எவ்வளவு போராடியும் அரசாங்க ஊழியர்களின் மெத்தனத்தை அவரால் நிரூபிக்க முடியாமல் தத்தளிக்கும் போது, அநியாயம் செய்கிறவனை கொல்ல வேண்டும் என்பது பசுமரத்தாணிப் போல சிறுவன் அம்பியின் மனதில் பதிய, பெரியவனானது அந்த மன அழுத்தத்தால் அநியாயம் அக்கிரமம், கருணையின்மை நிகழும் போது அதையெல்லாம் அழிக்கும் வல்லவனாக தன்னை உருவகப்படுத்திக் கொண்டு இன்னொரு பெர்சனாலிட்டியாக மாறுகிறான். இப்படியாக அம்பி->ரெமோ->அந்நியன் என்ற மூன்று பெர்சனாலிட்டிகளுக்கிடையில் படும் அவதியாக விக்ரம் மாறி நம்மை அவஸ்தைக்கு உள்ளாக்கியிருக்கிறார்.

இதற்கிடையில் நேரு அரங்கத்தில் அந்நியன் தோன்றப்போவதாக சொல்லி மக்களுக்கு ஓப்பன் இன்விடேஷன் கொடுத்து வரவழைத்து சிங்கப்பூரை உதாரணத்துக்கு காட்டுகிறார். 25 வருடத்தில் உயர்ந்த சிங்கப்பூரை பாருங்கள் என்கிறார். ஜப்பானை பாருங்கள் என்கிறார். தைவானை பாருங்கள் என்கிறார். மொத்தத்தில் கிழக்காசிய நாடுகளைப் பாருங்கள் என்று சொல்லி அந்த நாடுகளைப் பற்றிய படம் போட்டு மக்களுக்கு காண்பிக்கிறார். இந்தியா எல்லா வளமும் இருந்தும் ஏன் உயரமுடியவில்லை என்று மக்களை நோக்கி கேட்கிறார். மக்கள் கேள்விகளுக்கு பொறுமையாக அந்நியன் கெட் அப்பில் இருக்கும் அம்பி பதில் சொல்கிறான். ஆனால் போலீஸ் அதுவரை தூங்கிக் கொண்டிருக்கிறது. அவர் கிளம்பும் நேரத்தில் சுற்றி வளைக்க நினைத்து கோட்டை விடுகிறார்கள்.

இப்படியாக அம்பி->ரெமோ->அந்நியன் பெர்சானாலிட்டிகளால் நேரும் கொடுமைகளை கூறி, போலீஸ் அதற்கு என்ன செய்தது என கூறி, கோர்ட் அவரை வைத்தியம் பார்க்க அனுப்பி வைத்து எப்படி திரும்பி வருகிறார் என்பதை காண்பிக்கிறார்கள். கடைசியில் ஆங்கிலப்படங்களில் காண்பிக்கப்படுவது போல கதாநாயகன் முற்றிலும் இந்த மனச்சிதைவிலிருந்து குணமானாலும் ஒரு கொலை செய்து அந்நியன் இன்னும் இருக்கிறான் என்றுச் சொல்லி படத்தை முடிக்கிறார்கள்.

கொஞ்சம் அலசல்:

மொத்தத்தில் விக்ரமை பாழடித்திருக்கிறார்கள். இந்த பலவேசம் கட்டுபவர்கள் சாபக்கேடோ என்னமோ போட்டோ ஸ்டில்களில் மட்டும் அவர்கள் கலக்கலாக இருக்கிறார்கள். ஆனால் படத்தில் அப்படி இருப்பதில்லை. பலப்பல கெட்-அப்களில் விக்ரம் ஜொலித்தாலும் எதுவும் மனதில் பசையாக ஓட்டவில்லை. ஸ்டில்களில் பார்த்த விக்ரமின் பல கெட்-அப்களும் பாடலில் மட்டும் தான் வரும் என்பதை ஏமாற்றவில்லை. பொதுவாக சங்கர் படங்களின் பாடல்களில் ஒரு பிரமாண்டமும் க்ராபிக்ஸ் குப்பைகளும் இருந்தாலும் சில பாடல்களின் காட்சி அமைப்பு நச்சென்று இருக்கும். இதில் எல்லா பாடல்களும் வழவழ கொழகொழ டைப்பாக இருக்கிறது. "ஓ சுகுமாரி" பாடலில் ரோஜாப்பூக்களை கண்ணுக்கெட்டிய தூரம் வரை க்ராபிக்ஸ் செய்து இயற்கை தன்மையை இழந்திருந்தது. சில ஷாட்கள் கண்ணுக்கு விருந்தளித்தாலும் பல ஷாட்கள் வெறுப்பைத்தான் தருகிறது.

அது போல் புதுமையென அமெரிக்கா டைப் வீடுகளை காண்பித்து வாசலில் கோலமிடுவது,பாலத்திற்கு பல வண்ண கலர் பூசுவது,லாரிகளில் கார்டூன் செய்து விடுவது என சில காட்சிகள் பாடல்களில் கண்ணுக்கு விருந்தளிக்கின்றன. "அய்யாங்கர் வீட்டு நிலவே..." பாடல் சுத்த ஏமாற்றம் திருவையாறு சங்கீத கச்சேரியை பிடித்திருந்தார்கள். அது ஓகே. அதற்கு பிறகு வரும் டி.ராஜேந்தர் டைப் செட்டுகள் சகிக்கவில்லை.

Image hosted by Photobucket.com

இன்னொரு ஏமாற்றம் "காதல் யானை வருகிறது ரெமோ" பாடல்.பேஷன் ஷோ என்ற பெயரில் விக்ரமின் முடியை அப்படி இப்படி செய்து முழுப்பாடலையும் ஏமாற்றியிருந்தார்கள்.

"கண்ணும் கண்ணும் நோக்கியா" பாடலின் விசுவல் ஒகே டைப். ஆனால் ஒரே இடத்தில் பாட்டு முழுவதையும் எடுத்து முடித்திருந்தார்கள். இடம் என்னமோ மலேசியா பெட்ரோனக்ஸ் டவர் மாதிரி எனக்கு தோன்றியது.

விக்ரமின் நடிப்பைப் பற்றி சொல்வதற்கு அதிகம் ஒன்றுமில்லை. அம்மாஞ்சி அம்பியாக ஐய்யங்கார் குடுமியுடன் அவர் செய்யும் நடிப்பு பார்க்க சகிக்கவில்லை. ரெமோ பெர்சனாலிட்டியிலும் இயற்கைத்தன்மையை இழந்து அவர் நடிப்பு காட்சியளிக்கிறது. அந்நியன் பெர்சனாலிட்டியில் நடிப்பு ஓகே ஏனென்றால் அமைக்கப்பட்ட விசுவல் அப்படி. கடைசியில் போலீஸ் ஸ்டேசனில் அம்பியின் பெர்சனாலிட்டியும், அந்நியனின் பெர்சனாலிட்டியும் ஒரே நேரத்தில் மாறி மாறி வரும் காட்சியிலும், சதாவை கொல்ல துணியும் போது ரெமோவின் பெர்சனாலிட்டியும் அந்நியனின் பெர்சனாலிட்டியும் மாறி வரும் இடங்களில் விக்ரமின் நடிப்பு பிடித்திருந்தது.ஆனாலும் சந்திரமுகியி ஜோதிகா நடிப்புக்கு ஈடாகுமா?

சதா. கதநாயகிகளைப் பற்றி தெரியாதா? நாயகனுடன் ஆடவும் பாடவும் ஓடவும் மட்டுமே. என்ன கொடுமையோ சதாவுக்கென்றே கதாநாயகன்கள் யாவரும் ஓட்டைப் பிரித்து தான் குதிக்கிறார்கள்.

முக்கியமாக சொல்லப்படவேண்டியது பீட்டர் ஹெய்ன்ஸின் சண்டைக்காட்சி அமைப்பு. சில இடங்களில் மிகச் சாதரணமாக இருந்தாலும் பல இடங்களில் சபாஷ் வாங்குகிறார். அதுவும் பல கேமிரா கோணங்களை வைத்து எடுத்த குங்பூ பைட் சீக்வென்ஸ் அட்டகாசமாக வந்திருக்கிறது. ஆனால் அந்த புதுமைகளை மேட்ரிக்ஸ் ஹாலிவுட்டிலும், பாய்ஸ் பாடலிலும் பார்த்துவிட்டதால் அந்த புதுமை கொஞ்சம் புளிக்கிறது.

விவேக்கின் காமெடி ஆங்காங்கே சிரிக்க வைக்கிறது. கதாநாயகனுக்கு காதலிக்க ஐடியா கொடுக்கும் அதே புளித்து வெறுத்துப் போன சமாச்சாரங்களை இந்த படத்திலும் செய்கிறார் நம்ம காமெடியன்.

பல கோடிகளை கொட்டி கிராபிக்ஸ்,பிரமாண்டம் என்ற குப்பைகளை தருவதில் வல்லவர் சங்கர்.சங்கரின் அந்நியன் படமும் இதில் தப்பவில்லை. சமுதாய பிரச்சனை, நாட்டிலுள்ள பிரச்சனை என்பதை கருப்பொருளாக எடுத்துக்கொண்டு தீர்வு தருகிறேன் என்ற பெயரில் கதையை கொலை செய்வதில் வல்லவர் சங்கர். பிரச்சனைகளை ஆழமாக சொல்லாமலும் படம் பார்ப்பவர்களுக்கு பிரச்சனைகளைப் புரிய வைக்க முடியாமலும் பிரமாண்டத்தையும், கிராபிக்ஸையும் துணைக்கழைத்துக் கொள்வார் இயக்குநர் சங்கர். மேற்கத்திய பாதிப்பால் மேற்கத்திய படங்களின் சாயலை போட்டோ காப்பியடிக்க அந்நியன் வரை முயன்றும் தோற்றுப் போய்க்கொண்டிருக்கிறார்.

இடைவேளை வரை பாட்டென்றும், விக்ரமின் அச்சுபிச்சென்ற அலுப்பு நடிப்புமாக நெளியவைக்கிறது. இடைவேளைக்கு அப்புறம் கொஞ்சம் உட்கார்ந்துப் பார்க்கலாம்.

சங்கர் பிரமாண்டம் என்பதை கைவிட்டு விட்டு அவர் தயாரித்த 'காதல்' போன்ற நல்ல படங்களை தயாரிக்க முடிவு செய்யலாம். ஜாங்கிரியாக ஜெண்டில்மென்,இந்தியன் போன்றவற்றில் சொன்ன பிரச்சனையையே திருப்பி திருப்பி வேறுவிதமாக சொல்வதால் இந்தியாவை பீடித்த பிரச்சனைகளை அவர் படம் அலசி ஆராய்கிறது எனறாகிவிடுமா? கோடி கோடியாக கொட்டினாலும் சுவையான ஆரோக்கியமான பதார்த்தமாக இருந்தால் சாப்பிடலாம். சுவையிருந்து பாஸ்ட்புட் கணக்காக ஸ்லோபாய்சனாக இருந்தால் அதை ஏற்றுக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லவே இல்லை.

இந்த பதிவின் வாக்கு எண்ணிக்கை: . பக்கத்திலுள்ள ஸ்டாரை மவுசால் போட்டுத் தாக்கினால் எனக்கு மவுசு ஏறும். நன்றி:-)

உங்கள் கருத்துக்களை இட

திருப்பி தாக்கியவர்கள்:
இரண்டாவது ஆட்டம் பார்த்துவிட்டு வந்து சுட சுட விமர்சனம் போல...

நல்லவேளை இரண்டாவது ஆட்டத்துக்கு பசங்க கூப்பிட்டாங்க.... நான் தான் தமிழ்மணத்தில கொஞ்சம் வேலை இருக்குனு போகலை....

//ஆக மொத்தம் இரண்டு படத்தையும் பார்த்தவர்கள் மல்டிபிள் ஸ்பிலிட் பெர்சானாலிட்டியாகி முழு மெண்டலாகி வெளியே வருவது நிச்சயம். //
நம்ம பசங்க படம் பார்த்துட்டு வந்து
இரண்டு மணி நேரம் ஆகின்றது... ஒருத்தவன் முகத்திலும் ஈயாடவில்லை....

இப்போ புரியுது ராசா அது ஏன்னு...

கொயலி நீ ஜஸ்ட்ல எஸ்கேப் ஆயிட்ட ம்....
 
ஹலோ கொயலி. நான் தான் இரண்டாம் ஆட்டம் பார்த்துட்டுவந்துட்டு இராத்திரி 3 மணிக்கு பேய் மாதிரி உட்கார்ந்து அந்நியன் புகழ் பரப்புறேன். நீங்க என்ன பண்றீங்க?. தூங்குங்கப்பா...
 
சூப்பர் :D)
 
அண்ணே, கவுத்திட்டீயளே..

படத்தில இத்த்னை ஓட்டையா...?? பூந்தி கரண்டி ( ஜாரணி) மாதி இல்ல இருக்கு.

என்னவோ போங்க.
 
மக்களே

யாரும் பயப்படவேனாம், நாம்ப அண்ணச்சி பத்தி நமக்கு தெரியும்ல, அவரு என்னடா ரொம்ப நாள ஒன்னுமே உருப்படியா யாரையும் திட்டலையே,எவனும் மாட்டமாடன்றானே, நயன் தாரா இடுப்பு, திருக்குறள்ல தமிழ் இல்ல, இந்த மாதிரியே எத்தன நாளைக்கு ஓட்டரது.. அப்படின்னு யோசிசுகிட்டே படத்துக்கு போயிருப்பாரு, அஙகவேற பூணூல், கருடபுராணம்,உச்சிகுடுமின்னு
போட்டு வேறுப்பேத்தீருப்பானுக அதான்,

நம்ம அண்ணன் யாரையாவது பாராட்டி இருக்காரா(இரானியான் மொழில அன்னியன் படத்த எடுத்திரு ந்த ஒருவேளை யோசிக்கலாம், நாம ஊருலதான் எல்லாரும் முட்டபயகலாச்சே)

விடுங்க அவரு சாதிபயகளை காட்டலைன்னு கோவம்,

விடுஙக அண்ணாசி ஷஙகரு பொதுமன்னிப்பு கேட்கனமுனு போரட்டத்த ஆரம்பிக்கவேண்டியதுட்தான்
 
அதுக்குள்ள பார்த்து, விமர்சனமும் எழுதி அசத்திட்டீங்க! 25+ கோ....டி ரூபாய்கள் செலவு செஞ்சு எடுத்ததுன்னு வேற சொல்றாங்க, ம்...!

எல்லா போட்டோவுலயும் Shankar's anniyan-ன்னு எழுதீருக்காங்க, படத்தையும் இங்கிலீசுலயே எடுத்திருக்கலாம் ;-))
 
அது சரி விஜய்.. விமர்சனம்னா முழு கதையையும் எழுதனுமா என்ன?

கதை சுருக்கத்தை எழுதாம 'கொஞ்சம் அலசல்' மட்டும் செய்திருந்தா போதாதா?

--
நவன் பகவதி
 
நீங்க சரியான ரஜனி பைத்தியம் அண்ணே. ரோமியோ சென்னதுசரிதான். திட்டித்தீர்கனுமெண்டே நினைச்சுக்கொண்டு அங்கபோயிபார்கிறது. இங்க எங்ககிட்டவந்து உங்களுக்கு படம் எப்படியிருந்ததோ அப்படியே போட்டுத்தாக்கிறது. திரைவிமர்சனமெண்டிரபெயரில முழுகதையும் சொன்ன அண்ணா உங்களுக்கு திரைவிமர்சனமெல்லாம் எழுத சரிவராது, உங்கதிரைவிமர்சனத்தை கேட்கிறதுக்கு நாங்கலேல்லாம் மடையங்களில்லை. எனிமேலயாவது வேற ஏதாவது பிரியேசனமா எழுதுங்கோ.
 
டேய், அய்யோ பாவம் டா சங்கரு.. 50 கோடி போட்டு படம் எடுத்த ஒரு 5 பைசா செலவில்லாம இப்படி படத்தை கவுதுறீங்க.. ஆனா, நம்ம மக்கள் எழுதுறது ஒன்னு, நடக்குறது ஒன்னு..

சினிமா-ங்குறது நீங்க எல்லாம் பறப்புறீங்களே அந்த இலக்கியம் இலக்கணம் வளர எடுக்குறதில்லை.. ஒரு பொழுதுபோக்கு அம்சம்.. இதே படத்தை ஆங்கிலத்தில் எடுத்தா பாத்துட்டு பாயிலே கவுந்து அடிச்சு படுத்துறுவீங்க.. என்னா நம்ம தமிழ் பயக எடுத்த இப்படி.. ஒரு எடுத்துகாட்டு சொல்லவா ? மாவீரன் படத்தில நம்ம சூப்பரு குதிரைகூட பேசவாரு.. அது என்னா எல்லாம் சொன்னீங்க.. அதே சுடுவர்ட் லிட் படத்தில் ஏட்டீ மர்பி பண்ணா ஆ-னு பாப்பங்க.. ஆமா தம்பி, நீ என்ன எந்த படம் தாம் நல்லாயிருக்குனு சொல்லியிருக்கே, 8:30 -யை தவிர..
 
என்னை திட்டித் திக்கிறதுனாலா மட்டும் தமிழ்ல வரும் எல்லா குப்பை படங்களும் நல்லா இருக்கிறது என ஆகி விடாது.ஆயிரம் கோடி செலவு செய்து குப்பைகளை எடுத்தாலும் அதுக்கு பெயர் குப்பை தான். தமிழில் மகேந்திரனுக்கும், பாலுமகேந்திராவுக்கும் அப்புறம் அரிய முத்தாக ஆங்கொன்றும் ஈங்கொன்றும் மென வரும் அரிய தமிழ்படங்களை பார்த்து பெருமூச்சி விடுபவன்.

சாதாரண ஹேண்டி ஹேமில் எடுக்கப்படும் ஈரானிய படங்கள் கூட தமிழில் வரும் இந்த குப்பை படங்கள் கால் தூசிக்கு ஈடு ஆகுமா? உங்கள் ரசனையை நினைத்தால் பாவமாகத் தான் இருக்கிறது.

என் பதிவுகளை முழுவதுமாக படித்து வருபவர்கள் அறிவார்கள் நான் எந்த மாதிரி சினிமாவை தமிழில் எதிர்பார்க்கிறேனென்று. ஆங்கில படங்களையும் அதிகம் விமர்சனம் செய்தது கிடையாது. அதுவும் குப்பை. அந்த குப்பையை பார்த்து கிளறும் இன்னொரு குப்பைகள் சங்கரின் படங்கள்.

என்னிடம் பணம் இருக்கிறது நல்ல சினிமா பார்க்க வேண்டும் என தேடல் இருக்கிறது. அதை தேடுவது என் இஷ்டம். சங்கர் 25 கோடி போட்டு படம் எடுத்தால் என்ன? என்னை மாதிரி பல லட்சம் பேர்கள் கொடுக்கும் டிக்கெட் காசுகள் இருக்கிறதே. ஒருவர் கொடுத்து படம் பார்க்கும் ஒவ்வொரு பைசாவும் 25 கோடிக்கு சமம். ஒவ்வொருவனுக்கு கேள்வி கேட்கும் உரிமை உள்ளது. 25 கோடிக்கு குப்பையை எடுத்தால் அவரே வைத்துக் கொள்ளட்டுமே. திரையரங்கு என்னும் பொதுமக்கள் கையில் ஏன் தீர்ப்புக்காக விடப்படுகிறது?

இஷ்டமிருந்தால் படிக்கவும். இது என் பதிவு. எதையும் சொல்ல எனக்கு முழு கருத்துச் சுதந்திரம் உள்ளது. குப்பைகளை சொன்னால் உங்களுக்கு வலிக்கிறது என்றால் போய்க் கொண்டே இருங்கள். நீங்கள் சொல்வதற்காக குப்பைகளை சினிமா என்று ஒத்துக் கொள்ள முடியாது. நீங்கள் என்ன சொன்னாலும் I don't care.

நல்ல சினிமாவிற்குரிய என் தேடல் தெரிய வேண்டுமென்றால் என் பதிவுகளை ஆதியிலிருந்து படித்து விட்டு பேசுங்கள். விதண்டாவாதம் பேசவேண்டாம்.
 
//தொப்புக்கடீரென்று வானத்திலிருந்து குதித்த மாதிரி படம் ஆரம்பித்தவிட்டது என்ற பிரஞ்ஞையில் கதாநாயகன்(அம்பி) நாட்டில் நடக்கும் அநியாங்களை அப்போது தான் பிறந்த குழந்தை மாதிரி வியந்து பதறி சதா கவலைப்படுகிறார். //

அசோகமித்திரன் மாதிரி திடீர்னு ஒரு 50 வருச டெவலப்மெண்ட் மட்டும் நினைப்புக்கு வந்து கவலை தொண்டைய அடைச்சிருச்சாக்கும்...

//இந்தியா எல்லா வளமும் இருந்தும் ஏன் உயரமுடியவில்லை என்று மக்களை நோக்கி கேட்கிறார்.//

ஏன் ஏன், எல்லாம் இந்த இடஒதுக்கீட்டாலதான் சிம்ப்பிளா சொல்லவேண்டியதுதானே!

சுதந்திரத்துக்கு அப்புறம்
மந்திரத்துல மாங்காய காய்க்கும்?

சங்கருக்கு மக்கள் விழிப்புணர்வடைவதிலோ, பாரிய மக்கள் சக்தியிலோ, அனைவருக்குமான முன்னேற்றம் பற்றிய கருத்தாக்கமோ அந்நியமானது; யாராவது ஒருத்தன் வானத்தில் இருந்து குதிச்சு வந்து ஒரு நாள் முதல்வரா, ஜென்டில்மேனா, இந்தியனா டக்குனு நாட்டக் காப்பாத்துற கார்ட்டூன் கேரக்டர்/ அவதார மகிமையை 50 கோடி ரூபா ஜிகினாத்தாள்ல தரதுதானே வழக்கம். அப்படியே இப்போதும்.

50 கோடி பணம் போட்டா கோடிக்கணக்கான பார்வையாளர்களின் 3 மணிநேரத்தை கால்ல போட்டு மிதிக்கலாமா? அய்யா அவரு பணம் போட்டிருக்காருங்க என்ற தர்மகர்த்தா மெண்டாலிட்டி நமக்கு போகல, அவங்களுக்கும் போகல.

//25 கோடிக்கு குப்பையை எடுத்தால் அவரே வைத்துக் கொள்ளட்டுமே. திரையரங்கு என்னும் பொதுமக்கள் கையில் ஏன் தீர்ப்புக்காக விடப்படுகிறது?//

அதானெ!

நன்றிகள் விஜய்.
 
தங்கமணி,

ஆக்கபூர்வமான கருத்துக்கு நன்றி.

//50 கோடி பணம் போட்டா கோடிக்கணக்கான பார்வையாளர்களின் 3 மணிநேரத்தை கால்ல போட்டு மிதிக்கலாமா? அய்யா அவரு பணம் போட்டிருக்காருங்க என்ற தர்மகர்த்தா மெண்டாலிட்டி நமக்கு போகல, அவங்களுக்கும் போகல.//

25 கோடியோ 50 கோடியோ... செலவு செய்த பைசாக்களின் கணக்கை சொன்னால் உடனே தரமான உலகச்சினிமா வரிசையில் சங்கரின் படத்தை வைக்க முடியுமா? சங்கர் தயாரித்து படம் படுத்துக்கொண்டால் என்ன செய்வது? என்று முகத்தை மூடிக் கொண்டு தயாரித்த பாலாஜி சக்தியின் 'காதல்' திரைப்படம் அந்நியனை விட 200% மேம்பட்டது.இந்த தர்மகத்தா மெண்டாலிட்டி பானை சோற்றுக்கு ஒரு சோறு பதமாக மேலே வந்த படத்தைக் கூட பார்க்காமால் அந்நியனுக்கு 'ஓ' போடும் பின்னூட்டத்திலேயிருந்து பார்க்கலாம். பின்னூட்டத்தில் படம் பார்க்கமலேயே அந்நியனுக்கு ஒத்து ஊதுபவர்கள் பாதி பேருக்கு திரையரங்கு சென்று காசு கொடுத்து படம் பார்க்கும் ஐடியாவே இருக்காது. சங்கர் படங்களில் நல்லப் படங்களைத் தேடினால் இப்போது என்ன எதிர்காலத்திலும் ஏமாற்றமே மிஞ்சுமென நினைக்கிறேன்.
 
//அது சரி பொது மக்கள் அந்நியனைப் பற்றி பத்திரிகை
ரிவி இதுகளுக்கு கருத்து சொல்லுற மாதிரி காட்சி
இருக்கா?//

ஏன் இல்லை? ஒரே டெம்ப்ளெட்டில் எடுக்கப்பட்ட படம் ஆகையால் அந்த மாதிரி கட்டாயம் உண்டு. அந்நியனால் ரோட்டில் டிராபிக் ஒழுங்கா போறது, யாரும் லஞ்சம் வாங்கல, போனில் ஒரு அந்நியனால் நாடே சுபிட்சமாக இருக்கிறது என்று சொல்கிறார், பத்திரிக்கைகள் அந்நியனை பேட்டி காண்கிறது, மக்கள்கூட்டம் அவரிடம் ஆட்டோகிராஃப் வாங்க அலைமோதுகிறார்கள் எல்லாமே இருக்கு.

அது தான் 25 கோடி போட்டு எடுத்த படமாச்சே. உலக தரம் வாய்ந்த படமாச்சே. நம்மாளுங்களுக்கு அதெல்லாம் இருந்தா தானே திருப்தி. எனக்கும் நாடே சுபிட்சமா இருக்கிறதா ஒரு திருப்தி படம் பார்த்துட்டு வந்த உடனே.
 
இங்கு பலர் சங்கர் 25 கோடியில் இப் படத்தை எடுத்ததாகச் சொல்கிறார்கள். ஆனால் உண்மையில் 25 கோடியில் இப் படத்தைத் தயாரித்தவர் ஆஸ்கார் ரவிச்சந்திரன். அவர் சங்கருக்கு 5 கோடி சம்பளம் கொடுத்துள்ளார். அதோடு ஏறத்தாழ 35 கோடிக்கு (10 கோடி இலாபம்) விநியோகிஸ்தர்களிடம் விற்று இலாபமும் பார்த்துவிட்டார். ஆக படம் ரசிக்கத் தக்கதாக இல்லாவிட்டால் முதலீடு செய்த சில விநியோகிஸ்தர்கள் நஷ்டப் படுவர். எத்தனை கோடி யார் கொட்டி எடுத்தாலும் யார் நஷ்டப் பட்டாலும், நுகர்வோரான நாங்கள் நாம் கொடுக்கும் விலைக்கு பெறுமதியாக இருந்தால் தான் செல்வழிக்கலாம் (அது எந்தப் பொருள் ஆனாலும் சரி). அப்படி காசு கொடுத்துப் பார்க்கும் நாம், அதன் தரம் பற்றி சக நுகர்வோருக்கு நம் கருத்தைச் சொல்ல உரிமையுண்டு.

சங்கரின் சம்பளம் பற்றிய இணைப்பு: http://thatstamil.indiainfo.com/specials/
cinema/specials/shankar2.html

அந்நியன் விலை பற்றிய இணைப்பு:http://thatstamil.indiainfo.com/
specials/cinema/specials/anniyan2.html
 
சங்கர் படங்களில் இருக்கும் இன்னொரு மோசமான ஆளுகை அவர் படைக்கும் கேரக்டர்களின் ஜாதீய குறியீடு தான். அவருடைய நிறைய படங்களில் பார்பணர்கள் மட்டுமே இந்தியாவின் பிரச்சனைகளை சந்திப்பது போலவும்(ஜெண்டில்மேன், இந்தியன், இப்போது அந்நியன்), பிரச்சனைகளை அழிக்க தோன்றும் அவதாரங்கள் ஒன்று பார்ப்பனர்களை போற்றி அவர்களின் வழக்கத்தை மேற்கொண்டவனாகவோ (ஜெண்டில்மேன்) அல்லது பார்ப்பனனாகவோ (அந்நியன்) மட்டுமாக தான் இருப்பார்கள்.அதுவும் அன்னியனில் சமஸ்கிருத ஸ்லோகங்களை சொல்லி அவதாரம் அக்கிரம காரர்களை கொல்கிறாராம்.

சோம்பேறியின் குறியீடாக காட்டப்படும் சார்லி அடித்தட்டு மக்களின் பிரச்சனைகளின் பிரதி பிம்பம். அவர் சோம்பேறியாக திரிகிறார் என்பதற்காக அந்நியன் அவரை கொல்கிறாராம்.சார்லி ஏன் அப்படியிருக்கிறார், அவர் சோம்பேறியாக இருக்க காரணம் என்ன என்று தெரியாமல் படத்தில் சொல்லாமல் அந்த கேரக்டரை அன்னியனால் சாகடிப்பது மாதிரி காண்பிக்கிறார். அது உண்மையில் சமூக அக்கறை மிக்க படமாக சங்கர் எடுக்கவில்லை. பிரமாண்டம் என்ற பெயரில் வாய் பிளந்து பார்க்கும் மக்களின் வாயில் அரிசி போடும் வேலை.

சாதீய குறியீடுகள் இல்லாமல் சங்கரால் எந்த பிரச்சனைகளையும் படத்தில் சொல்ல முடியாது. அவதாரங்கள் பார்பனனாக தோன்றாமல் ஒரு மனிதனாக, சாதீ குறியீடு இல்லாதவனாக காட்டவே முடியாது. இது அவர் தெரிந்தோ தெரியாமலோ கையாண்டாலும் விஷம். அவதாரங்களை படிக்காத மக்கள் தொழுவதற்கான உக்தி. அன்னியனை புகழ்ந்து பின்னூட்டமிட்ட நண்பர்களின் மழுங்கி போன மூளைகளை மேலும் மழுங்கச் செய்வதற்காக....
 
குவாலிட்டி இல்லாத பொருட்களை உற்பத்தி செய்பவனை நுகர்வோர்கள் கொல்லலாமென நியாயம் கற்பிக்கும் அன்புள்ள (மக்கள் மேல்,இந்தியா மேல் அக்கறையுள்ள)இயக்குநர் சங்கருக்கு,

இந்த மாதிரி மட்டரக ரசனையுள்ள சினிமாவை உற்பத்தி செய்யும் உங்களை என்ன செய்யலாம் என்று நீங்களே சொல்லுங்கள்.

இப்படிக்கு,
குடும்பத்துடன் படம் பார்க்கப் போய் ரூபாய் 250-ஐ அழுதுவிட்ட வந்த பாவப்பட்ட சினிமா நுகர்வோன்.
 
தல!!... இவ்ளோ ஸ்பீடா இருக்கீங்க.. ச்சே.. நான் நேத்து சாயதாரமே முதலாட்டமே பார்த்துட்டேன்... இங்க மழையில டெலிபோன் கட்டாகி.. பதிவு பக்கம் வர முடியல.. அதுக்குள்ள.. நீங்க முந்திகிட்டீங்க..

ஆனா ஷங்கர் இந்த வெறுப்பேத்துவாருன்னு நினைக்கவே இல்லீங்க .. :-(
 
அப்பாடா..நல்ல வேளை அந்நியன் பார்க்கலாம்னு இருந்தேன்..150 ரூபாய் இழப்புல இருந்து அல்வாசிட்டி நம்லே காப்பாத்திட்டார். தாங்ஸ்ப்பா!
 
அடப்பாவிகளா...நான் இப்பத்தான் சந்திரமுகியே பார்த்திருக்கேன் . அதுக்குள்ளே அடுத்த ரவுண்டு வந்துட்டீங்களே..

//எனக்கும் நாடே சுபிட்சமா இருக்கிறதா ஒரு திருப்தி படம் பார்த்துட்டு வந்த உடனே.// என்று கருத்து சொன்ன அன்பர் ?????? (அப்படித்தான் தெரியுது) கருத்தை ஆமோதிக்கிறேன் ..பலராலும் பாராட்டப்படுகிற மணிரத்னம் படங்களில் கூட இதனைக் காணாலாம் ..'ரோஜா'வில் கதாநாயகன் கொல்லப்பட்டிருந்தால் , (படம் ஓடியிருக்குமோ இல்லையோ) , உண்மை உணர்த்தப்பட்டிருக்கும் .

ரொம்ப நாள் கழிச்சு தியேட்டர்ல பாக்கலாம்னு இருந்த என் நினப்புல மண்ணையள்ளிப்போட்ட உங்களை........?
 
thanks for the review.i hope that no one will become an anniyan after seeing the film and do what anniyan did to others to shankar and sujatha.
 
அண்ணாச்சி,
நல்லா எழுதிருக்கீங்க. கோச்சுக்காதீங்க. ஆனா முழு படம் தியேட்டருக்கு போகாமலேயே பாத்த திருப்தி. :)

ஷங்கர்ட போய் வேறென்ன எதிர்ப்பார்க்க முடியும்? 5 நிமிஷம் மட்டுமே கதைக்கரு, மிச்ச நேரம் வெறும் அபத்த கிராபிக்ஸ், பிரம்மாண்டம். அந்த வகையில் அவரோட மிச்ச படங்களைவிட பாய்ஸ் எனக்கு தேவலேன்னு பட்டது.

தண்டனை கொடுக்கற காரணமும், செயல்படுத்தும் கொடூரமுறைகள் இதெல்லாம் Pitt, Freeman நடித்த "Seven" லேர்ந்து ஐடியா சுட்டமாதிரி தெரியுதே.

//அடப்பாவிகளா...நான் இப்பத்தான் சந்திரமுகியே பார்த்திருக்கேன் . அதுக்குள்ளே அடுத்த ரவுண்டு வந்துட்டீங்களே..//

தாஸண்ணே, உங்க நிலம தான் எனக்கும். இவங்கள்ளாம் கொடுத்துவெச்சவங்கோ! :(

--
இராமநாதன்
 
Dear Vijay

My review of this film is here.

http://groups.yahoo.com/group/Maraththadi/message/25962

I'll recommend the cinmea goers (not our intellectual reviewers) to go this in a theatre only just as an entertainment.

Rgds
Sa.Thirumalai
 
//சங்கர் படங்களில் நல்லப் படங்களைத் தேடினால் இப்போது என்ன எதிர்காலத்திலும் ஏமாற்றமே மிஞ்சுமென நினைக்கிறேன்//

எதிர்காலமென்ன.... கடந்த காலத்திலும் ஏமாற்றம் தான் மிஞ்சியது...

//சங்கர் படங்களில் இருக்கும் இன்னொரு மோசமான ஆளுகை அவர் படைக்கும் கேரக்டர்களின் ஜாதீய குறியீடு தான். //
//சாதீய குறியீடுகள் இல்லாமல் சங்கரால் எந்த பிரச்சனைகளையும் படத்தில் சொல்ல முடியாது. //

நானும் ஜென்டில்மேன் படம் பார்த்து கையை தட்டி பாராட்டிக்கொண்டு திரிந்தேன் ஜென்டில்மேன் வந்த புதிதில்....

இதே ஜென்டில்மேன் திரைப்படத்தை மீண்டும் குறுவட்டில் பார்த்தபோது தான் மற்ற அனைத்தும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் புரிந்தது....
 
குழலி.. அதே காண்ணோட்டத்தோடு தமிழ்குடிதாங்கியையும் பாருங்கள். எல்லாம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் புரியும்.

அப்புறம் மக்களே.... எனக்கு இன்னும் அந்நியனைப்பார்க்கும் பாக்கியம் கிட்டவில்லை. கண்டிப்பாக பார்க்கலாம் என்றிருக்கிறேன் இங்கே பின்னூட்டமிட்டு செல்பவர்களின் 'பிண்ணனி' காரணத்திற்காகவே.

அல்வாசிட்டி விஜயை குறை சொல்லி அர்த்தமில்லை. அவருக்கு பிடித்த விஷ்யங்களைப் பற்றியும், பிடிக்காத விஷயங்களைப் பற்றியும் பட்டியலிடவே இந்த வலைப்பூ. மற்றவர்களுக்கு பிடித்திருந்தால் அவரவர் பதிவில் போய் நல்லபடியாக எழுதிக் கொள்ளலாமே!

ஷங்கர் பிராமணர்களைப் பற்றி படம் எடுத்தால் எத்தனை பேருக்கு பொத்துக் கொண்டு வருகிறது? மற்ற ஜாதிக்காரர்கள் அவர்களது ஜாதிக்காரர்களைப் பற்றி எடுத்தாலோ, கதை, கட்டுரை வரைந்தாலோ உடனடியாக உச்சி குளிரும் இவர்களைப் பார்த்தால் சிரிப்பு தான் வருகிறது. (ஷன்கர் மேற்படி ஜாதியைச் சேர்ந்தவர் தானா என்பது எனக்கு தெரியாது!)


எல்லாவற்றிலும் ஜாதிய கண்ணோட்டத்தோடு பார்த்து அலைபவர்கள் யார் யார் என்பது நடுநிலையாளர்கள்க்கு நன்கு புரியும்.

//no one will become an anniyan after seeing the film and do what anniyan did to others to shankar and sujatha. //

இதற்கு என்ன அர்த்தம்?! தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரனையும் இந்த லிஸ்ட்டில் சேர்க்காததற்கு என்ன காரணமென்று விளக்க முடியுமா?!

எது எப்படியோ.. ஒன்று மட்டும் நிச்சயமாக தெரிகிறது.. 'அந்நியன்' நிச்சயமாக நன்றாக வசூலிக்கப்போகிறது.
 
AnionMass எ. அனோனிமாசு சொல்வதாவது:
|அல்வாசித்தி அன்பரே தாங்கள் முதலாவதாக இட்டிருக்கும் அந்நியன் விளம்பரப்படம். சோர்சு உலூகாசுவின் அண்மைய இச்தார் உவார்சு - இரிவஞ்சு ஆப்பு சித்து படத்தின் விளம்பரப்படத்தினையல்லவா நினைவூட்டுகிறது? என்னே விந்தை! இது தற்செயலாக நிகழ்வுற்றதோ அல்லது சங்கர் ஒற்றிக்கொண்டதோ?|
 
http://singaimurasu.blogspot.com/2005/06/blog-post_18.html

இந்தப்பதிவின் கருத்துப்பெட்டி திறக்கப்படவில்லை.... சற்று கவனியுங்கள் என்னவென்று
 
This comment has been removed by a blog administrator.
 
அடிக்கடி இடிக்கும் லாஜிக்கை ( இதுக்கு தமிழ்ல என்னது? ) மறந்து விட்டால்....படத்தை ஒரு வாட்டி கண்டிப்பாக பார்க்கலாம். படத்திலுள்ள பிரம்மாண்டத்திற்காகவும் மெனக்கெட்டிருப்பதற்காகவும்.

சுஜாதாவை விட்டு வெளி வர வேண்டிய நேரம் வந்து விட்டது ஷங்கருக்கு. அடுத்த படத்தில் அதைச் செய்யா விட்டால் மக்கள் ஷங்கரிடமிருந்து வெளியே வந்து விடுவார்கள்.
 
படத்தைப் பத்தி என் வலைப்பூவில் எழுதலாம்னு நெனச்சேன். அப்றம் எதுக்கு ஒரு பதிவை வீணாக்கனும்முன்னு விட்டுட்டேன்.

தெலுங்கு "அபரிச்சிதுடு" படம் பாத்துக்கிட்டு இருக்கும் போது அம்மணி கிட்ட இருந்து தொலைபேசி அழைப்பு

"என் கிட்ட கேக்காம எந்தப் படத்துக்கு போனீங்கன்னாலும் இப்புடித்தான்! அனுபவிங்க!" (சே! ஏற்கனவே இந்திப்படம் "வக்த்" படம் பாத்த வெறுப்புல இருந்தேன் இவ வேற)

"அபரிச்சிதுடு" பாத்ததுல ஒரே நன்மை, இடைவேளையில ரூ.15 குச்சி ஐஸை ரூ.20 க்கு வித்த தியேட்டர் கடைக்காரனிடம் "அபரிச்சிதுடு" சண்டை (ஹி..ஹி.. வாய்ச் சண்டைதான்) போட்டு ரூ.15க்கே வாங்கிச் சாப்பிட்டது தான்.

வாளுக ச்சங்கர். வாளுக அவர் படங்கள்!
 
//படத்திலுள்ள பிரம்மாண்டத்திற்காகவும் மெனக்கெட்டிருப்பதற்காகவும்//

எல்லாத்துக்கும் 25 கோடி பணம் தான் அந்நியன்ல தெரியுது போல?

25 கோடி நல்ல தான் இருக்கும். 25 கோடி தவிர்த்து படம் எப்படியிருக்கு சொல்லுங்கப்பா?

நன்றி ராகவன்.

கோபி, நீங்க சரியான 'அல்லூரி அல்லுடு' போல.

எல்லாருக்கும் ஒரு கேள்வி?

'அந்நியன் நமக்கு உணர்த்தும் நீதி என்ன?'

தமிழ் சினிமா நமக்கு என்னைக்கு நீதி சொல்லிச்சின்னு சொல்றீங்களா?:-)))))))

இன்னொரு கேள்வி.

DTS தியேட்டரில் பார்த்தால் தான் அந்நியன் படம் நல்லாயிருக்கும் என்றார்கள்.நான் பார்த்த தியேட்டரில் DTS உடைந்த பானையாக கேட்டது. இப்போ கேள்வி.

'அந்நியன் DTS தியேட்டரில் பார்த்தால் தான் நல்லா இருக்குமா?'
 
//குழலி.. அதே காண்ணோட்டத்தோடு தமிழ்குடிதாங்கியையும் பாருங்கள். எல்லாம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் புரியும்.
//

எல்லாம் புரிந்தது என்று தான் சொன்னேன் என்ன புரிந்தது என நீங்கள் எடுத்துக்கொண்டால் அதற்கு நான் பொறுப்பல்ல....

அதுவுமின்றி எதற்கெடுத்தாலும் சிலரால் தேவையின்றி விவாதத்தை திசை திருப்பும் போக்கு ஆரோக்கியமான மனப்பாண்மையாக என்னால் காணமுடியவில்லை... இந்த பதிவிற்கும் நடந்துகொண்டிருக்கும் விவாதத்திற்கும் சம்பந்தமில்லாமல் ஒருவரை இழுப்பது தேவையில்லாதது... அதற்குதான் மாற்றி மாற்றி நானும், மற்ற சிலரும் பதிவு போட்டுக்கொண்டிருக்கின்றோமே...
அங்கே வைத்துக்கொள்ளலாம்...

சிலர் கொஞ்சம் கொஞ்சமாக நிதானமிழப்பது எனக்கு நன்றாக புரிகின்றது....

தமிழ்மணத்தில் ஆளில்லாத மைதானத்தில் தமிழ்குடிதாங்கியை தாக்கி கோல் போட்ட காலம் மலையேறிவிட்டது என்ற எரிச்சல் போல என்ன செய்வது...
 
//மாயவரத்தான் : குழலி.. அதே காண்ணோட்டத்தோடு தமிழ்குடிதாங்கியையும் பாருங்கள். எல்லாம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் புரியும்.
//குழவி: எல்லாம் புரிந்தது என்று தான் சொன்னேன் என்ன புரிந்தது என நீங்கள் எடுத்துக்கொண்டால் அதற்கு நான் பொறுப்பல்ல.... //

யப்பா! என்னை பிரச்சனையப்பா உங்களுக்குள்ள. காவேரி பிரச்சனை தீர்ந்தாலும் தீர்ந்துரும் போல. உங்கப்பிரச்சனை தீர மாட்டாங்குதே. அடங்கு அடங்கு....
 
Shankar is Ambi - Shankar is Anniyan - He himself says.

http://www.newindpress.com/NewsItems.asp?ID=IEE20050620003656&Page=E&Title=Startrek&Topic=0

- Alex
 
படத்தின் கருத்தை விடுங்க....அதையெல்லாம் வெச்சி யார் படமெடுக்குறா?

பொழுது போக்கு என்கிற வகையில் மட்டும்தான் என்னால் இந்தப் படத்தை நினைக்க முடிகிறது.

சரக்கே இல்லாத ஒரு கதையைப் படமெடுக்க வேண்டுமானால் 25 கோடி தேவைதான்.

ஹாரிஸ் ஜெயராஜ்.....நீங்கள் செல்ல வேண்டிய தூரம் அதிகமோ அதிகம்.......

விவேக்.....சமீபத்தில் உங்களை இந்தப் படத்தில் மட்டும்தான் ரசிக்க முடிந்தது.

விக்ரம்......நீங்கள் சிவாஜி, கமலுக்கு வாரிசு என்றார்கள்....நம்புகிறேன்.

சுஜாதா......சொல்வதற்கு ஒன்றுமில்லை

பிரகாஷ்ராஜ்.....ஒன்றுமில்லாத பாத்திரத்திற்கு இவ்வளவு மெனக்கெட்டு நடித்திருக்கின்றீர்களே....விழலுக்கிறைத்த நீர்.

சதா.....வெங்காயச் சட்டினியோடு வரும் சாதா தோசை. சோதா தோசை அல்ல.

ஷங்கர்........பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்

அன்புடன்,
கோ.இராகவன்
 
நன்றி அலெக்ஸ்.

ஒவ்வொண்ணும் 'நச்'சுன்னு சொல்லியிருக்கீங்க ராகவன். நன்றி.
ஆமா,

//பிரகாஷ்ராஜ்.....ஒன்றுமில்லாத பாத்திரத்திற்கு இவ்வளவு மெனக்கெட்டு நடித்திருக்கின்றீர்களே....விழலுக்கிறைத்த நீர்.//

உண்மை உண்மை.ஆமா இவரு ஏன் வேஷம் போட்டுக்கிட்டே கொலை நடக்கிற இடத்துக்கெல்லாம் வாராரு. இவரு டி.ஜி.பி தானே.
 
//பிரகாஷ்ராஜ்.....ஒன்றுமில்லாத பாத்திரத்திற்கு இவ்வளவு மெனக்கெட்டு நடித்திருக்கின்றீர்களே....விழலுக்கிறைத்த நீர்.//

உண்மை உண்மை.ஆமா இவரு ஏன் வேஷம் போட்டுக்கிட்டே கொலை நடக்கிற இடத்துக்கெல்லாம் வாராரு. இவரு டி.ஜி.பி தானே.

விஜய்....அதுக்குதான் ஒரு வசனம் இருக்கே.....யூனிபார்ம்ல வந்த கொலையாளிங்க உஷாராயிடுவாங்களாம்... (யாரந்த உஷா? )

அந்தத் தெத்துப்பல்லோடு வந்து உதவி கேட்கும் காட்சியில் குரலும் நடித்திருக்கிறது.
 
//// விக்ரமின் நடிப்பு பிடித்திருந்தது.ஆனாலும் சந்திரமுகியி ஜோதிகா நடிப்புக்கு ஈடாகுமா? ////

விக்ரமின் நடிப்பை ஜோதிகா நடிப்புடன் ஒப்பிட்டது சரி.. ஜோதிகாவின் நடிப்புக்கு ஈடாகுமா என்ற கேள்வியுடன் விகரமுக்கே அல்வா கொடுத்திட்டிங்களே..

படத்தை புட்டு புட்டு வைச்சிட்டிங்க.. சபாஷ்.....
 

உங்கள் கருத்துக்களை இட


<< திரும்ப முன் பக்கத்துக்கு போ

-ல் போட்டுத் தாக்கியது

தாலி செண்டிமெண்ட் + லைசன்ஸ் டூ செக்ஸ்

Difficulty in reading this post due to font issues? Click here for a PDF copy. Works best if you right-click the link and select 'Save target as...'
இந்த பதிவை போட்டுத் தாக்கியவர் : Vijayakumar
"என்னைத் தொட்டு தாலி கட்டினவர்" அவர் என்று தாலியை உயர்த்திப் பிடித்து கதறும் அம்மா, "எனக்கு தாலிபிச்சை தாங்க?" என்று வில்லனின் காலை பிடித்து கதறும் மனைவி, நோயில் படுத்திருக்கும் கணவனுக்கு Representative-ஆக தாலியை கோவில் சாமிக்கு முன் பிடித்து கதறும் நங்கை என்று தாலி செண்டிமெண்ட் சினிமாவில் மட்டுமல்ல நிகழ்காலத்திலும் நிஜவாழ்க்கையில் தாலியை சுற்றியிருக்கிற செண்டுமெண்டுகள் ஏராளம்.

அண்மைக்காலமாக தாலி என்பது ஒரு பெண்ணிற்கு தேவையா என்ற குரல் எங்கும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. தாலி தேவையில்லை என்பவர்கள் மார்டன் பெண்கள் என்ற முத்திரையும், தாலி வேண்டுமென்பவர்கள் தான் குடும்பப்பெண்கள் என்ற முத்திரையும் தான் சமுதாயத்தாலும், ஒரு பெண்ணைச் சூழ்ந்த குடும்பத்தாராலும் குத்தப்படுகின்றன. 'குடும்ப பெண்கள்' என்ற வார்த்தைக்கு சரியான இலக்கணம் எங்கு வகுக்கப்பட்டிருக்கிறது என்று தெரியவில்லை ஆனால் தாலி அணிந்தவர்கள் எல்லாம் குடும்பப் பெண்கள். படு நல்லவர்கள் என்ற தோற்றம் சில நேரங்களில் வெறும் தாலி என்ற அரணால் மட்டும் நிர்ணயிக்கப்படுகின்றன. திருமணம் என்பது பையனுக்கு கால்கட்டு, பெண்ணுக்கு நூல்கட்டு. கால்கட்டு கண்ணுக்கு தெரியாது. நூல்கட்டு கண்ணுக்கு தெரியும்.

தெருநாய்களுக்கும் வீட்டு நாய்களுக்கும் வித்தியாசப்படுத்த நாயின் கழுத்தில் லைசன்ஸ் வைத்துக் கட்டுவார்கள். தாலியைப் பற்றி நினைக்கும் போது இந்த நாய் லைசன்ஸ் தான் கண் முன் வந்து நிற்கும்.பெண்களை திருமணம் ஆனவள், இவள் திருமணம் ஆகாதவள் என்று வகைப்பிரித்த ஆணாதிக்கம், ஆணுக்கு எவ்வித கட்டுப்பாடும் கொடுக்காமல் சுதந்திரமாக அலையவிட்டார்கள். இதனால் தெருப்பொறுக்கிக்கும், நல்லவனுக்கும், திருமணம் ஆனவனுக்கும், திருமணம் ஆகாதவனுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. உண்மையில் தாலியும் அதை சார்ந்த திருமண முறைகளும் மறுபரிசீலனை செய்யவேண்டிய காலக்கட்டத்தில் இருக்கிறோமென நினைக்கிறேன்.

நேற்று முன் தினம் சிங்கை தமிழ் சேனல் வசந்தம் சென்ட்ரலில் "திருமணமான பெண் தாலி அணிய வேண்டியது அவசியமா?" என்ற கேள்வி பொதுமக்கள் முன் வைக்கப்பட்டது.

"இது வெறும் லைசன்ஸ் டூ செக்ஸ்,எனக்கு இதில் விருப்பமில்லை" என்று ஒரு பெண்மணியும்

"ஒரு பெண் தாலி அணிந்தால் தான் திருமணம் ஆனவளா? மனது ஒத்துப்போன இடத்தில் பெண்ணுக்கு மட்டும் அடையாளக்குறி எதற்கு?" என்று இளம்பெண்மணியும்

"தாலி என்பது ஒரு பெண்ணுக்கு உயிர். அது கணவன் மீது நாங்கள் வைத்திருக்கும் நம்பிக்கையின் அடையாளம். அதை சுமப்பது பெண்களின் கடமை" என்று கொஞ்சம் வயதான பெண்மணியும் பதில் கூறினார்கள்.

அதில் கருத்து தெரிவித்த நிறைய ஆண்களின் தொனி எப்படி இருந்ததென்றால் "அது எப்படீங்க?. பெரியவங்க கூடி மந்திரம் சொல்லி எல்லாரும் வாழ்த்தி பெண்ணிற்கும் கட்டும் தாலியில் அர்த்தம் இல்லாமல் போய்விடுமா? இல்லையென்றால் அர்த்தமில்லை என்றால் அது இக்காலம் வரை நடைமுறைப்படுத்தப்பட்டு இருக்குமா? தாலி என்பது அவசியம்".

தாலி என்பதில் என்ன அர்த்தம் இருக்கிறதென்று புரியவில்லை. திருமண சடங்கில் ஆண் பெண்ணுக்கு தாலி கட்டும் போது ஏன் ஆணால் பெண் தொட்டுத் தாலி கட்ட இன்றுவரை சம்மதிக்கவில்லை? தெள்ளத்தெளிவாக இதில் தெரிவது ஆணாதிக்கம் மட்டுமே. சாஸ்திரங்களும் சம்பிரதாயங்களைப் பற்றியும் வலைப்பூக்கள் சொல்வதை நாம் எல்லோரும் அறிவோம். அதுவும் வெறும் ஆணாதிக்கத்தை நிலைநாட்ட மட்டுமே ஏற்படுத்தப்பட்டது.

ஆனால் "தாலி என்பது மட்டுமே லைசன்ஸ் டூ செக்ஸ்" ஆகி விடாது. தாலி என்பது திருமணத்தை வலியுறுத்தி முன்னிறுத்தப்பட்ட வரட்டு குறியீடு. மொத்தத்தில் திருமணமே லைசன்ஸ் டூ செக்ஸ் தான். எனக்கு இந்த வகை "லைசன்ஸ் டூ செக்ஸ்"ஸில் ஆட்சேபம் எதுவுமில்லை. என்னைப் பொருத்தவரையில் திருமணம் என்பது ஒரு ஆண் ஒரு பெண் இருவரின் அன்பின் அடிப்படையில் ஒழுக்கம்+சுயக்கட்டுப்பாடு என்ற இருவருக்குமான மீயூசுவல் அண்டஸ்டாங்கில் வரும் ஒப்பந்தமே தவிர வேறு எதுவுமில்லை. திருமண முறைகள் கடுமையாக மறுபரீசலனைக்கு உட்படுத்தவேண்டுமே தவிர திருமணம் என்ற ஒப்பந்தத்தை அல்ல என்பது என் கருத்து."லைசன்ஸ் டூ செக்ஸ்" என்ற வார்த்தைகளில் தவறும் இருப்பதாகத் தெரியவில்லை. செக்ஸ் இன்றி இன உற்பத்தி ஏது? திருமணம் லைசன்ஸ் டூ செக்ஸாக இருப்பதில் ஆட்சேபம் ஏதுவுமில்லை.

தாலி வேலி என்று நினைத்தால் அந்த வேலியை சுற்றி மண்டியுள்ள மூட நம்பிக்கைகள் ஏராளம். கோவிலுக்கு சென்றால் சாமி கும்பிட்டு விட்டு குங்குமத்தை தாலியில் வைத்துக் கொள்வதை சகஜமாக காணலாம். தாலியில் குங்குமம் வைத்தால் புருஷன் நீடுழி வாழ்வார் என்பது நம்பிக்கை என்பார்கள்.தாலியில் குங்குமம் வைக்காமல் புருஷன் வாயில் சோறு வைத்தாலே அவன் நீடுழி வாழ்வான் என்பது தான் உண்மை. சுமங்கலி பூஜை என்ற கூத்து ஒன்று நடக்கும். தாலி கெட்டிப்பட நடத்தும் பூஜையாம் அது. ஆண்களுக்கு அங்கே அனுமதி இல்லாமல் நடக்கும் பூஜை அதை. தாலி கழன்று விட்டாலோ அறுந்து விட்டாலோ கணவனுக்கு உடனடியாக ஏதாவது நடக்கும் என்பது அதீத நம்பிக்கை.

தமிழ்படங்களில் தாலி செண்டிமெண்டை பார்ப்போம். 'அந்த 7 நாட்கள்' என்ற படத்தில் பாக்கியராஜ் தான் காதலித்த பெண்(அம்பிகா) மற்றொருவரை கட்டாயத்தால் திருமணம் செய்துக் கொள்கிறாள்.கணவனுக்கு இந்த பெண்ணின் காதல் விசயம் தெரியவர பாக்கியராஜையே நினைத்து உருகும் அவளை ஒப்படைக்க பிராயசித்தம் எடுக்கிறான் அந்த கணவன். க்ளைமாக்ஸ் காட்சியில் "கட்டிய தாலியை எடுத்து கீழே வைத்து விட்டு என்னுடன் வா" என்று பாக்கியராஜ் அம்பிகாவைப் பார்த்து சொல்ல, அதுவரை கட்டிய கணவனுடன் வாழாமல் மனதால் பாக்கியராஜ்ஜையே நினைத்து உருகும் அம்பிகாவுக்கு தாலியை பற்றி பேசியதும் மிராக்கிளாக தாலிப் பற்றிய பிரஞ்ஞை தொற்றிக் கொள்ள தாலியை பிடித்து கதறி கட்டிய கணவனை தெய்வமாக மதிக்க ஆரம்பிப்பாலாம்.அழுகையில் பிச்சி உதறுவாள். கடைசியில் பாக்கியராஜ் "பார்த்தீங்களா!இது தான் தாலியோட மகிமை.இது தான் தமிழச்சியின் பண்பாடு" என்று நீளமான வசனம் பேசி அரங்கில் பலத்த கைத்தட்டல்களோடு வெளியேறுவார். அந்த படம் சிறந்த படம். சக்கைப் போடு போட்ட படம். மக்கள் மனதில் இருக்கும் உணர்வே சினிமாவில் பிரதிபலிக்கும் என்ற போது அந்த தாலி செண்டிமெண்ட் படம் வெற்றிப்பெற்றதில் வியப்பேதுமில்லை.

கணவன் கொடுமைக்காரனாக இருந்தால் உச்சகட்டமாக கதாநாயகி கதாநாயகனின் முகத்தில் தூக்கி எறிவது தாலியை தான்.பின்னனி இசை பிரளயாமாக ஒலிக்கும்.திரையில் காண்பிக்கப்படும் எல்லோர் முகத்திலும் ஓர் அதிர்ச்சி. அது வேறு எதுவுமில்லை. நாயகி திருமண ஒப்பந்தத்தை முறிக்கிறார் என்பதை திருமணத்துக்கு குறியீடாக பயன்படுத்தும் தாலியை தூக்கி எறிவது மூலம் இயக்குநர் சொல்கிறாராம். இராம.நாராயணன் படத்தில் அம்மையில் விழுந்து துடிக்கும் கணவனுக்காக தாலியை கடவுளுக்கு முன் ஏந்தி கணவனுக்காக துடிக்கும் பெண்கள் ஏராளம்.

அண்மையில் 'வாசிப்போம் சிங்கப்பூர்' விளைவாக மறைந்த சிங்கப்பூர் எழுத்தாளர் நா.கோவிந்தசாமியின் அறிமுகம் அவரின் "தேடி..." கதைத்தொகுப்பின் வாயிலாக கிடைத்தது. அருமையான எழுத்தாளர் அவர். இன்று கணியில் தமிழ் படித்துக் கொண்டிருப்பதற்கு வித்திட்ட பிரம்மா அவர். அந்த கதைதொகுப்பில் இருந்த ஒரு கதை தாலியையும், திருமண முறைப் பற்றியும் சிந்திப்பதாக இருந்தது.

அந்த கதையில் நாயகி சிறுவயதில் தந்தையால் சித்ரவதைக்கு உட்படும் அம்மாவை பார்த்து பார்த்து திருமணம் என்ற உறவில் நம்பிக்கையற்றுப் போகிறாள். ஒரு ஆணை நண்பணாகவே மட்டுமே பார்க்க முடியுமே தவிர சுதந்திரத்தை பரிகொடுக்கும் திருமணம் என்ற பந்தத்தால் ஒருவனை கணவனாக ஏற்றுக் கொள்ள முடியாது என சாடுகிறாள். ஆயினும் ஒருவனுடன் காதல் வசப்படுகிறாள். அவள் அவனிடம் திருமணம் செய்துக் கொள்ளாமல் இணைந்து வாழ்வதென்றால் சரி, இல்லாவிட்டால் நட்பை துண்டித்துக் கொள்ளவும் தயார் என்று உறுதியாகக் கூறுகிறாள். இருவரும் ஒரு ஒப்பந்தத்திற்கு வருகிறார்கள். ஒருவர் சுதந்திரத்தில் மற்றவர் தலையிடுவதில்லை என்றும்,இருவரும் வேறு வேறு சுதந்திரத்துடன் ஒன்றாக வாழ்வதென்றும் முடிவெடுக்கிறார்கள்.

திருமணம் என்ற முடிச்சில்லாமல் இருவரும் சேர்ந்தே வாழ ஆரம்பிக்கின்றனர். இருவரும் சந்தோசமாகவே காலத்தை கழிக்கின்றனர். சில வருடங்கள் கழித்து இருவரும் ஒன்றாக வாழ்க்கையை கழித்தாலும் இருவரிடம் ஒருவர் மேல் மற்றொருவருக்கு ஒருவித எதிர்பார்ப்பு தொற்றிக் கொள்கிறது. அதிலும் அந்த பெண் தன் கணவன் மற்றவர்கள் புகழும்படி ஒன்றை செய்து விட்டு வரும்போது அவரை பாராட்ட வேண்டுமென நினைக்கும் போது அவளின் ஈகோ தடுக்க, வாழ்த்து சொல்ல முடியாமல் தவிக்கிறாள். அதே போல் அனைவரும் மெச்சும் படி இவள் ஒரு காரியம் செய்து விட்டு வரும் போது மற்றவர்கள் பாராட்டுவதை விட கூட ஒன்றாக வாழ்பவன் வாழ்த்துச் சொல்லி இவள் முதன்முதலாக கேட்க வேண்டுமென தவிக்கிறாள். தினமும் "நீ சாப்பிட்டாயா? ஏன் இவ்வளவு நேரம் முழுத்துக் கொண்டிருக்கிறாய்?" என்று அவன் கேட்கவில்லை. இவள் அதையெல்லாம் எதிர்பார்க்கிறாள். ஒருவருக்கொருவர் அனுசரனையாக இருக்கலாம், அன்பின் பரிமாற்றத்தைச் சுதந்திரம் என்ற பெயருக்கு பலி கொடுக்காமல் ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்ளலாம் என்று நினனக்கிராள். அதற்காக தன் லட்சியத்தை பலிக் கொடுத்து விடலாமா என்று கூட யோசிக்கிறாள். இங்கேயும் அவளின் ஈகோ தடுக்கிறது. தன் வயிற்றில் வளரும் அவனின் கரு வந்தாவது இருவருக்குள் இருக்கும் இடைவெளியை குறைக்கும் என்ற நம்பிக்கையோடு இருக்கிறாள் என்பதுடன் கதை முடிகிறது.

திருமண பந்தத்தில் அன்பும் அனுசரனையும் பரிவும் ஒருவருக்கொருவர் பகிர்ந்துக்கொள்ளும் போது தாலி என்ற பெண்ணின் மீதுள்ள ஆணாதிக்க குறியீடு தேவையில்லை என்பது என் கருத்து.

பின் குறிப்பு&Disclaimer: இந்த தலைப்பில் என் கருத்தைச் சொன்னது சரியா? தவறா? என்று யோசிக்கவில்லை. நான் குடும்பம் என்ற சூழலில் புரட்சிக்காரன் அல்ல. நானும் தாலி கட்டி தான் மனைவியை கூட்டி வந்தேன். இன்னும் அவர்கள் கழுத்தில் தாலி தொங்கிக் கொண்டுதானிருக்கிறது. இதை எழுதும் போது ஊருக்கு உபதேசமா? என்று உள்மனம் குத்தினாலும், என்னால் என் பெற்றோர்களையும் சுற்றங்களையும் பகைத்துக் கொள்ள முடியாது என்ற நிலையில் எனக்கு நானே கோழையாக தெரிந்தாலும் என் பிள்ளைகளின் வழியாக அவர்களிக்கு சுதந்திர சிந்தனைகளை ஊட்டி ஒரு மாற்றத்தைக் கொண்டு வர முடியும் என்ற நம்பிக்கையில் இந்த கருத்தைச் சொன்னேன்.

நானும் "தாலி அணிவது தேவையா?" என்ற முக்கியமான கேள்வியை என் மனைவியிடமும் கேட்டு வைத்தேன். "தாலி கட்டாயம் தேவை. பின்னே! ஊக்கு மாட்டுறதுக்கு ஸ்டாண்டை நான் எங்கே போய் தேடுவேன்?" என்று பதில் வந்தது. தாலியால் இப்படி கூட ஒரு பயன் இருக்கிறதா?

உங்கள் கருத்தை அறிய ஆவல்.

இந்த பதிவின் வாக்கு எண்ணிக்கை: . பக்கத்திலுள்ள ஸ்டாரை மவுசால் போட்டுத் தாக்கினால் எனக்கு மவுசு ஏறும். நன்றி:-)

உங்கள் கருத்துக்களை இட

திருப்பி தாக்கியவர்கள்:
//"அது எப்படீங்க?. பெரியவங்க கூடி மந்திரம் சொல்லி எல்லாரும் வாழ்த்தி பெண்ணிற்கும் கட்டும் தாலியில் அர்த்தம் இல்லாமல் போய்விடுமா? இல்லையென்றால் அர்த்தமில்லை என்றால் அது இக்காலம் வரை நடைமுறைப்படுத்தப்பட்டு இருக்குமா? தாலி என்பது அவசியம்".//

இப்படி அர்த்தமும், அவசியமும் பொதிந்த தாலியை ஆண்களும் அணிந்துகொள்ளலாமே. (இதற்கு கண்ணதாசன் அ.உ.இந்துமத்தில் திருமணமான ஆண்கள் மெட்டியணியும் வழக்கம் அக்காலத்தில் இருந்தது, தலை குனிந்து பெண்கள் நடந்த காலத்தில் அதைக் கண்டு பெண்கள் திருமணமான ஆடவனை அறிவார்கள் என்று ஜல்லியடித்திருப்பார்.)
 
திரு. அல்வாசிட்டி விஜய்,
தாலி செண்டிமெண்ட் நீங்கள் சொல்வது போல் over-rated ஆகவே இருப்பதாய் எனக்கும் தோன்றுகிறது. நான் யாரையும் இன்னும் தொட்டு தாலி கட்டவில்லை என்றாலும் அவ்வாறு செய்யும் நேரத்தில் நீங்கள் செய்ததையே தான் செய்ய முடியும்.

இதற்கு ஒரு நல்ல உதாரணம். அலைபாயுதே படத்தில் ஷாலினியிடம் வீட்டுக்காரம்மா "என்னமா, தாலி அங்க தொங்குது.. இது ஒழுங்கான கல்யாணந்தானே" ன்னு ஷாலினி மாதவன் உறவையே அந்த 2ரூ மஞ்ச கயிற வச்சு ஜட்ஜ் பண்ணப்பாப்பார்.

வெளிநாடுகளில் கட்டாயமில்லாவிட்டாலும், மோதிரம் இதைக் குறிக்கிறது. அதுபோல் நமக்கு தாலி.

ஆண்களுக்கு ஏன் இல்லை என்பதற்கு பதில் தெரியவில்லை! :(

//கோவிலுக்கு சென்றால் சாமி கும்பிட்டு விட்டு குங்குமத்தை தாலியில் வைத்துக் கொள்வதை சகஜமாக காணலாம். தாலியில் குங்குமம் வைத்தால் புருஷன் நீடுழி வாழ்வார் என்பது நம்பிக்கை என்பார்கள்.தாலியில் குங்குமம் வைக்காமல் புருஷன் வாயில் சோறு வைத்தாலே அவன் நீடுழி வாழ்வான் என்பது தான் உண்மை.//

சூப்பர் :)
 
// பின்னே! ஊக்கு மாட்டுறதுக்கு ஸ்டாண்டை நான் எங்கே போய் தேடுவேன்?//

சூப்பர். என்னோட அம்மிணியும் ஊக்கு மாட்டுறதுக்கு மட்டுமே தாலியை பயன்படுத்துறாங்க.
 
//தாலி கட்டாயம் தேவை. பின்னே! ஊக்கு மாட்டுறதுக்கு ஸ்டாண்டை நான் எங்கே போய் தேடுவேன்//

Suuuuuuuuuuuuupppper!

//இதை எழுதும் போது ஊருக்கு உபதேசமா? என்று உள்மனம் குத்தினாலும்//

unnecessary guilt. Again, let your wife decide whether Thaali is required or not!
 
// "தாலி கட்டாயம் தேவை. பின்னே! ஊக்கு மாட்டுறதுக்கு ஸ்டாண்டை நான் எங்கே போய் தேடுவேன்?" //

Vijay,

super mudivu/nach
rasiththEn.siriththEn.

anbudan, J
 
//பின்னே! ஊக்கு மாட்டுறதுக்கு ஸ்டாண்டை நான் எங்கே போய் தேடுவேன்?" என்று பதில் வந்தது//

ரவியா
 
//பின்னே! ஊக்கு மாட்டுறதுக்கு ஸ்டாண்டை நான் எங்கே போய் தேடுவேன்?" என்று பதில் வந்தது//

படித்துக் கொண்டிருக்கும்போதே இதைதான் நினைத்தேன் . :)

ரவியா
 
'வாசிப்போம் சிங்கப்பூர்' இயக்கத்தில் அறிவிக்கப்பட்ட மூன்று புத்தகங்களின் ஆசிரியர்களான 'ஜெயகாந்தன்','நா.கோவிந்தசாமி','சிவசங்கரி' ஆகியோர்களின் பயோடேட்டாக்களையும் அவர்களின் படைப்புகளையும் சின்ன அறிமுகத்திற்கு இங்கே செல்க.

http://readsingapore.nlb.gov.sg/kits.html
 
//திருமண பந்தத்தில் அன்பும் அனுசரனையும் பரிவும் ஒருவருக்கொருவர் பகிர்ந்துக்கொள்ளும் போது தாலி என்ற பெண்ணின் மீதுள்ள ஆணாதிக்க குறியீடு தேவையில்லை என்பது என் கருத்து//

உங்கள் கருத்து எந்த அளவிற்கு சீரியசான கருத்து என்று நீங்களே சொல்லிவிட்டீர்கள். உங்களாலேயே நடைமுறை படுத்த முடியாத கருத்துக்களை தயவு செய்து சொல்லாதீர்கள்.அல்லது தலைப்புக்கு கீழ் பின்குறிப்பாக இந்த பதிவு படித்து ரசிப்பதற்கு மட்டுமே; சிந்திப்பதற்கோ செயல்படுத்துவதற்கோ அல்ல- என்று குறிப்பிடுங்கள்.
நாலு முறை உங்கள் மனைவி தாலியை எடுத்து கண்ணில் ஒற்றிக்கொள்வதை உங்கள் பிள்ளைகள் பார்த்தால் போதும் - அதுவே அவர்கள் மனதில் பசுமரத்தாணி போல் பதிந்துவிடும்.
அப்புரம் உங்கள் இஷ்டம்.தவறேதும் இருந்தால் மன்னிக்கவும்.
 
படிப்பதற்க்கு சுவாரசியமாக இருந்தது.

ஆனால், நாம் இப்படி நம்மை நாமே கேட்டுக்கோள்ள வேண்டிய நிறைய விஷயங்கள் இருக்கின்றன.

கலாச்சாரம் என்ற மாயையை சொல்லி வளர்க்கப்பட்டு, படிப்பு மற்றும் உலகம் பார்த்த அறிவில் அதை கேள்வி கேட்பதன் விளைவு தான் இது.

நாம் ஏன் இப்படி இருதலை கொள்ளி எரும்பாக இருக்கிறோம்?

நமது அடுத்த தலைமுறைக்காவது தெளிவான முடிவெடுக்க சுதந்திரம் கொடுப்போம்.
 
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி தங்கமணி, இராமநாதன்,ராரா,சுரேஷ், ஜெயந்திசங்கர்,ரவியா,அனானிமஸ்,காஞ்சி பிலிம்ஸ் & சுரேஷ்.
 
//உங்கள் கருத்து எந்த அளவிற்கு சீரியசான கருத்து என்று நீங்களே சொல்லிவிட்டீர்கள். உங்களாலேயே நடைமுறை படுத்த முடியாத கருத்துக்களை தயவு செய்து சொல்லாதீர்கள்.//

அடேடே! காஞ்சி இப்படி டென்ஷன் ஆனா எப்படி? நான் ஏற்கனவே சொல்லவந்ததை டிஸ்க்ளைமரில் சொல்லிவிட்டேன். அதைவிட தெளிவாக உங்களுக்கு பின் பின்னூட்டமிட்ட சுரேஷ் வெகு அழகாக விளக்கியிருக்கிறார். உங்கள் கோபத்திலும் நியாயத்தைப் பார்க்கிறேன். எனக்கு தோன்றியதை என் பதிவில் தான் சொல்லியிருக்கிறேனே தவிர மற்றவர்கள் பதிவில் சென்று அதை கடைப்பிடிக்கும்படி நான் கட்டாயப்படுத்தவில்லை. ஏற்றுக்கொள்வதும் ஏற்றுக்கொள்ளாததும் உங்கள் கையில் என்பதை நான் சொல்லி உங்களுக்கு தெரியவேண்டுமென்பதில்லை என்று நினைக்கிறேன்.

Less tension More Work. More Work less tension - யாரு நடிகர் செந்தில் தான் சொல்லியிருக்காரு.
 
சிங்கங்கள் என்ன
தாலி கட்டியா குடும்பம் நடத்தி,
குட்டி போடுகின்றன?

எல்லாம் சிங்கத் தமிழர்கள் !


(சிங்கத்திற்குப் பதில் வேற எதயாவது சொல்லி, அப்புறம்,
"மன்னியுங்கள் நண்பர்களே மன்னியுங்கள்" என்று கதற நான் தயாரில்லை !)


*******************
இந்த பின்னூட்டத்தை வழங்கியவர்: ஞானபீடம் .
*******************
ஒரு crime story படிக்க இங்கே ... கொல், கவனி, செல்
*******************
 
அல்வா அன்னே,
அடேங்கப்பா ... மாங்கு மாங்கு னு ஒரு 250 வரி போட்டு தாக்கியிருக்கீங்க... ஆனா பாருங்க வந்த கருத்துல 80% அந்த கடைசி 2 வரி (அதான்பா ..ஊக்கு மாட்ற ஸ்டான்டு) பத்தி தான் ...
பாவம் நீங்க.. !இப்படினு தெரிஞ்சிருந்தா .. அந்த கடைசி 2 வரியை மட்டும் ஒரு ஜோக் மாதிரி போட்டு முடிச்சிருக்கலாம் ...இவ்ளோ மெனகெட்டிருக்க வேண்டாம்ல... ?

சின்ன தம்பி படம் பாத்திருகீங்களா??
நல்ல பதிவு ...!! சரி சரி ஒரு சந்தேகம் ..சராசரியா எத்தனை ஊக்கு மாட்டலாம் பா.. ?? ஹீ ஹீ ஹீ

வீ எம்
 
இந்த ஞானபீடம் போற இடமெல்லாம் மார்க்கெட்டிங் பண்ணுகிறாரே. அவர் சொல்லவிட்டாலும் இந்த பதிவை படிப்போமே. பின்னூட்ட விட்டதற்காகவே இரண்டாவது முறை வேண்டுமானாலும் படிக்கிறேன். இன்னொரு கருத்து நீங்க பின்னூட்டம் விட்டா உங்களுக்கு ஒரு பின்னூட்டம் ப்ரீ. கடைசியில ட்ரேடிங் ஆகிப்போச்சி போங்க.

ஞானபீடம் படிக்க முடியாவிட்டாலும் குறைந்தது ஸ்டாரை அமுக்கியாவது ஓட்டு போட்டுறது.
 
வீ.எம்,

கருத்து எழுதும் போது எழுதுவதை தானே ரசிக்கும் போது 250 வரிகள் எல்லாம் சாதரணமுங்கோ. ஆனா அது படிக்கிறவங்களுக்கு தான் கஷ்டக்காலம். ஜோக்கா சொன்ன ஒரு குவர்ட்டார்ல 2 லிட்டர் தண்ணி ஊத்தி அடிச்ச மாதிரி. அதுவே பதிவா சொன்ன குவார்ட்டரை ராவா அடிச்ச மாதிரி. எப்படி வசதி. உங்களுக்கு புரியிர மாதிரி சொல்லியிருக்கேன்னு நினைக்கிறேன்.
 
நல்ல பதிவு ...!! சரி சரி ஒரு சந்தேகம் ..சராசரியா எத்தனை ஊக்கு மாட்டலாம் பா.. ?? ஹீ ஹீ ஹீ

வீ.எம்.

அது ஊக்குவித்தவரின் (வாங்கியவரின்?) தேவையை / திறமையைப் பொருத்திருக்கு.... ஹீ ஹீ ஹீ
 
This comment has been removed by a blog administrator.
 
விஜய்
வெளிநாட்டில் ஆண்களும் திருமண மோதிரம் அணியும் வழக்கம் இருக்கிறது. இதை வைத்து திருமணம் ஆனவர்களா என்று சொல்லலாம். என்னை பொறுதுணமையான அன்பை ஊருக்கு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இது அவரவர் விருப்பம் என்றே நினைக்கிறேன்
 
செந்தூரன் என்று பெயர் வைத்துக் கொண்டு சம்பந்தா சம்பந்தமில்லாமல் இங்கு வந்து பின்னூட்டமிட்டவரே,

ராயர்கிளப்பில் வருவது எதுவுமே நான் படிப்பது கிடையாது. அங்கு என்ன நடக்கிறது என்பதை நான் கவனிப்பது கிடையாது. ஏன் சம்பந்தா சம்பந்தமில்லாமல் இங்கு வந்து ஒருவரைப் பற்றி அசிங்கமாக பின்னூட்டமிட்டீர்கள் என தெரியவில்லை. எனக்கு நீங்கள் கொடுத்த சுட்டியை கூட படிக்க தோன்றவில்லை. மன்னிக்கவும். உங்களுக்கு யாரையாவது திட்ட வேண்டுமென்று தோன்றினால் தனிப்பதிவு ஆரம்பித்து திட்டிக் கொள்ளுங்கள். தேவையில்லாத திசைத் திருப்பல்கள் வேண்டாம். என்னுடைய பதிவு என்ற உரிமையில் அந்த பின்னூட்டத்தை அழிக்கிறேன்.
 
//இந்த ஞானபீடம் போற இடமெல்லாம் மார்க்கெட்டிங் பண்ணுகிறாரே...
ட்ரேடிங் ஆகிப்போச்சி.... ஸ்டாரை அமுக்கியாவது ஓட்டு போட்டுறது.//


ஒருவேள, இந்த ஓட்டு கேக்குறது, trading ஆகாதோ?
அப்டீன்னா, மக்கா, எனக்கு நீயி ஓட்டு போடு, நா ஒனக்கு ஓட்டு போடுறேன். சரியா !
"நமக்கு நாமே திட்டம்"-னா இதான மக்கா?

எச்சரிக்கை: இங்கே ரெண்டு + ஓட்டு போட்டுருக்கேன், ஆமா !

*****************
இந்த பின்னூட்டத்தை வழங்கியவர்: ஞானபீடம்
*****************
 
தாலி என்ற சொல்லே தமிழ் சொல் இல்லை யாமே...? தாலி= பனை என்று வடமொழியில் அர்தம் வருவதாக திணமனியின் இணையப்பக்கத்தில் தாலியை பற்றிய ஒரு கட்டுரை வாசித்ததாக ஞாபகம் ( 97,98 ம் ஆண்டாக இருக்கவேண்டும்...) யாரிடமாவது அந்த கட்டுரை இருந்தால் தயவு செய்து பிரசுரியுங்கள்...!!!!!
 
பின்னூட்டமிட்டவர்கள் பெயர்கள் எல்லாம் ??????? இப்படி தான் வருகிறது. எல்லோரும் எல்லோருக்கும் கேள்விக்குறியாகி வருகிறோமோ?

இருந்தாலும் பின்னூட்டமிட்ட நண்பர்கள் அனைவருக்கும் பொதுவாக நன்றி. மேல்விவரங்கள் விரைவில். - அன்புடன் விஜய்.
 
விஜய்,
பொண்ணுக்குத் தாலி மாதிரி பையனுக்குக் காலில் மெட்டி போடுவது வழக்காமாயிருந்திருக்கிறது. மெட்டியைப் பார்த்தவுடன் ".. அடடே.. இவன் ஏற்கனவே லைசன்ஸ் வச்சுருக்கான், இவன் வேறொருத்தியோட ஆளு, பொழைச்சிப் போகட்டும்.." என மற்ற பெண்கள் விலகிப் போவதற்காய் அந்த அடையாளாம் மாட்டப்பட்டிருந்திருக்கிறது.

ஆண்கள் பெரும்பாலும் தீர்மானிக்கும் அதிகாரத்தில் இருந்ததால்/இருப்பதால் அசௌகரியமாய் இருக்கிறதென அந்தப் பழக்கத்தையே விட்டுவிட்டார்கள் போலிருக்கிறது போலிருக்கிறது. சரி, கவலையைவிடுங்கள். இன்னும் 50 வருடம் போனால் எல்லோரும் "தாலி" என்ற காட்டுமிராண்டி வழக்கம் நம்ம அப்பா, தாத்தா காலத்துல கூட இருந்ததாம் என வரும் தலைமுறையினர் பேசிக்கொண்டிருப்பார்கள் :-).
 
எனக்கும் இப்படி தமிழில் பின்னூட்டம் இட்ட்பவர்களின் பெயர்கள் எல்லாம் ??????? இப்படித்தான் தெரிகிறார்கள்.
 
அல்வாசிட்டி அண்ணாச்சி,
என் பட்டிமன்ற தலைப்புக்கு ஏத்த மாதிரி அருமையான கருத்துக்களை எழுதியிருக்கீங்க. அதுவும் அந்த ஊக்கு ஸ்டாண்டு தூக்கல். உபயோகிச்சிக்கலாமா?

அன்புடன்
நம்பி
 
நன்றி நம்பி. ஆமா நீங்க சிங்கப்பூர்ல இருந்ததா நம்ம மக்கள் சொல்லிக்கிட்டு இருந்தாங்க. நீங்க எப்ப நியூசி போனீங்க.
 

உங்கள் கருத்துக்களை இட


<< திரும்ப முன் பக்கத்துக்கு போ

-ல் போட்டுத் தாக்கியது

மீமீ.. மீமீ.. புத்தக மீமீ..

Difficulty in reading this post due to font issues? Click here for a PDF copy. Works best if you right-click the link and select 'Save target as...'
இந்த பதிவை போட்டுத் தாக்கியவர் : Online Security Tips and Tricks for Kids

என்ன நண்பர்களே, நம்ம விஜிக்கு (அல்வாசிட்டி விஜயை இப்படி தான் கூப்பிடுவேன்) ஒரு நன்றி சொல்லிருவோம்.. ஆனா, நான் இந்த ஆட்டைக்கு வரலே.. ஏன் பாக்குறியா ? வேறும் ஒரு அஞ்சு கேள்விதானே இந்த புத்தக மீமீ.. (மீமீ ஒரு சீன பெண் எங்க அலுவலகத்திலிருந்தா.. அவ ஞாபகம் தான் வருது).சரி நம்ம இந்த புத்தக மீமீயில் கேக்காத பல கேள்விகளுக்கும்
விடையளிச்சுறுவோம்..


பிடித்த சஞ்சிகைகள்:
விகடன் குடும்ப சஞ்சிகைகள்
துக்ளக்
நக்கீரன்
கல்கி
ஒரு பேப்பர் (இணைய சஞ்சிகை) (நண்பர்களே, கண்டிப்பாக வாசியுங்கள்.. )

தமிழ் புத்தகங்கள், படித்ததில் மிகவும் பிடித்தது :
கடல் புறா, யுவனராணி - சாண்டியன்
பொன்னியின் செல்வன், பார்த்திபன் கனவு, சிவகாமியின் சபதம் - கல்கி
உடையார், அப்பா, கிருஷ்ன அர்ச்சுனன் - பாலகுமாரன்
அக்னி சிறகுகள் - அப்துல்கலாம்
வந்தார்கள், வென்றார்கள் - மதன்
உதிரிபூக்கள் (கதை வசனம்) - மகேந்திரன்
கோட்டைபுரத்து வீடு - இந்திரா செளந்திராஜன்
மனம் மலரட்டும் - சுவாமி சுகபோகனந்தா

தமிழ் கவிதைத் தொகுப்புகள் படித்ததில் மிகவும் பிடித்தது :
பாரதியார் கவிதைகள்
பாரதிதாசன் கவிதை தொகுப்புகள் (மதுரை தொகுப்புகளின் மின்பதிப்பு)
வைரமுத்து கவிதைத் தொகுப்பு
பா. விஜயின் - உடைந்த நிலா
புதுவை ரத்தினதுரையின் - உணர்ச்சி வரிகள் (PDF from web)

முதலில் படித்த ஆங்கில நாவல்:
The Almighty - Irvine Wallace

ஆங்கில நாவல்கள், புத்தகங்கள், படித்ததில் மிகவும் பிடித்தது :
Not a penny More, Not a penny Less - Jeffrey Archer
Master of Game, If tommorow Comes - Sidney Sheldon
Icon, Negogiator - Fredrick Forsyth
Patriot Games - Tom Clancy
Harry Potter & Globet of Fire - J K Rowling
Face off - Emma Brooks


திரும்ப திரும்ப படிக்கும் புத்தகங்கள்:
திருக்குறள் - தமிழன் பண்பாட்டு கையேடு
பொன்னியின் செல்வன்
கடல் புறா
அவ்வையின் அமுத மொழிகள்
குடும்ப விளக்கு

படிக்க நினைத்த புத்தகங்கள்:
சத்திய சோதனை - மகாத்மா
தொல்காப்பிய பூங்கா - கருணாநிதி
மோகமுள் - தி. ஜானகிராமன்

படிக்க காத்திருக்கும் புத்தங்கள்:
Harry potter & The Half blood Prince - JK Rowling (Reserved @ borders already)
Da Vinci Code
தொல்காப்பிய பூங்கா - கருணாநிதி

சரி சரி.. நம்ம இந்த புத்தக மீமீ விளையாட்டுக்கான விடைகளை கொடுத்துறுவோம்..

சொந்த புத்தகங்கள் : 30+ சுட்ட புத்தகங்கள் : 30+
விலைக்கு வாங்கிய கடைசி புத்தகம்: The Red Sun Rising - Tom Clancy விலை : 50 யூ.எஸ் செண்ட்
படித்ததில் கடைசி (இன்னைக்கு காலையில்): தி டித் ஆப் டைகர்
ஐப்பெரும் புத்தகங்கள் : பொன்னியின் செல்வன், கடல்புறா, யுவனராணி, அக்னிசிறகுகள், திருக்குறள்-தமிழன பண்பாட்டு கையேடு
செம்மறி ஆட்டுக் கூட்டம், என் அப்பால் தொடர :
அருணாச்சலம், ஜேம்ஸ்ராஜ், கணேசஷ் பாலுறு, செல்வராசன், மரு. நடராசன் (யாருக்கு வலைபூக்களில்லை)

ஆமா, இந்த பதிவை அல்வாசிட்டியில் போடவா, இல்லை என்னோட இன்னொரு பிளாக்கில் போடாவா-னு ரொம்ப யோசனை.. அடே, கட் அண்ட் பேஸ்ட் தானே.. இரண்டு இடத்திலும் போட்டுறுவோம்.. என்னா நான் சொல்லுறது..

அடுத்து நம்ம சினிமா சீசீ அரம்பிச்சுரலாமா ?




இந்த பதிவின் வாக்கு எண்ணிக்கை: . பக்கத்திலுள்ள ஸ்டாரை மவுசால் போட்டுத் தாக்கினால் எனக்கு மவுசு ஏறும். நன்றி:-)

உங்கள் கருத்துக்களை இட

திருப்பி தாக்கியவர்கள்:
//புதுவை ரத்தினதுரையின் - உணர்ச்சி வரிகள் (PDF from web)//

அப்படியே சுட்டியையும் கொடுத்தால் நல்லாயிருக்குமில்ல.

//ஒரு பேப்பர் (இணைய சஞ்சிகை) (நண்பர்களே, கண்டிப்பாக வாசியுங்கள்.. )//

இது நம்ப பேவரிட்டும் கூட. அடிக்கடி நம்ம பதிவையும் போட்டு காலாய்க்கிறதுனால ஒரு பேப்பர் மேல தனி பாசம்.

//சொந்த புத்தகங்கள் : 30+ சுட்ட புத்தகங்கள் : 30+//

உன்கிட்ட இருந்து சுட்ட 'தமிழ் பண்பாட்டு கழகத்தின் திருக்குறள்' என்கிட்ட தான் இருக்கு. தெரியுமில்ல :-)
 
பதிவுக்கு நன்றி சங்கர்.

இப்படி ஒரு பேப்பர் இருக்கிறது எனக்கு இன்னிக்குதாம்பா தெரியும். இதுக்குத்தான் சொல்றது - எல்லாம் தெரிஞ்ச "பெரியவங்க" சிலர் பலரும் எழுதிய புத்தக மீமீ பற்றி எள்ளினாலும், இதுபோன்ற புதுவிஷயங்கள் (யாருக்காவது) வந்துகொண்டுதான் இருக்கிறது.

அதனால் எப்பவும்போல் திரும்பவும் சொல்கிறேன் (இதுவரை யார்ட்ட/எங்க சொன்னேன்லாம் கேக்கக்கூடாது:)

நமக்குத்தெரிந்த, எழுதத்ததோன்றிய, பிறருக்குப் பயன்படுமென்று ஒரு மூலையில் உதித்தாலும் எழுதுங்கள் - என்றாவது, யாருக்காவது பயன்படும். அதற்குத்தான் இந்த வலைப்பூக்கள்...
 
அட பாவிங்களா ? திருக்குறள் பண்பாட்டு கையேட்டை காணும் தேடிட்டிருந்தேன்..நீங்க தானா ? இங்க நான் அந்த புத்தகத்தை நூலகத்தில் எடுத்து வைச்சுறுக்கேன்..

அந்த புதுவை ரத்தினதுரை உணர்ச்சி கவிதைகளை ஹரி என்பவரின் பிளாக்கிலிருந்து படிக்கிறேன்..

http://harinet.blogspot.com

ஒரு பேப்பர் நல்ல பண்ணிருக்காங்க.. ஒரு வாழ்த்து பதிவொன்று போட்டு தாக்கணும்..
 

உங்கள் கருத்துக்களை இட


<< திரும்ப முன் பக்கத்துக்கு போ

-ல் போட்டுத் தாக்கியது

தரம்.. குணம்.. மணம்.. திடம்...

Difficulty in reading this post due to font issues? Click here for a PDF copy. Works best if you right-click the link and select 'Save target as...'
இந்த பதிவை போட்டுத் தாக்கியவர் : Vijayakumar
எழுத முடியவில்லை. ஒரு எழவும் எழுத முடியவில்லை. நான் கீழ்பாக்கம் ஆஸ்பத்திரியில் நர்சாக வேலைப் பார்த்தாலும் பஸ் ஸ்டாப்பில் நிற்கும் போது என்னையே அடிக்கடி ஓரக்கண்ணால் பார்க்கிறாளே லாவண்யா அவளுக்கு தான் இந்த காதல் கடிதம் எழுதிக் கொண்டிருக்கிறேன். நியூஸ் பேப்பரிடை அகப்பட்ட பஜ்ஜி போல மூளையை கசக்கிப் பிழிகிறேன். எழுதவே வரமாட்டேங்கிறது. அவள் பெயர் எனக்கு எப்படித் தெரியும் என்கிறீர்களா? அவளுக்கு என் பெயரும் தெரியும் தெரியுமா? ஆனாலும் நாங்கள் அவ்வளவு அன்னியோன்யம் கிடையாது. அவள் நான் நர்ஸ் உடையில் இருக்கும் போது என் சட்டையில் குத்தியிருக்கும் பெயர் பட்டியிலிருந்து பெயரை கட்டாயம் படித்திருப்பாள். என்னையே திரும்பி திரும்பி பார்க்கிறவள் என் பெயர் பட்டியிலிருந்து பெயரை படிக்காமலா இருப்பாள். நீங்களே சொல்லுங்கள். நான் அப்படி நினைப்பதில் என்ன தவறு. அட! இன்னமும் எனக்கு அவளின் பெயர் எப்படி தெரியுமென்று சொல்லவே இல்லை இல்லையா? கொஞ்சம் இருங்க கையிலிருக்கும் பால்பாயிண்ட் பேனாவை உதறினாலாவது அவளுக்கு எழுத எதாவது பாயிண்ட் கிடைக்கிறதா என்று பார்க்கிறேன். பேனா மயிரும் சரியா எழுத மாட்டேங்குது.

ஆங்! அவளும் நான் வேலைப்பார்க்கும் அதே ஆஸ்பத்திரிக்கு பக்கத்து ஏரியாவில் இருக்கும் பிரைவேட் க்ளினிக்கில் நர்ஸாக வேலைபார்க்கிறாள். என்னுடைய உடுப்பை விட அவள் உடுப்பு படு சோக்கா இருக்கும். காலை 9 மணிக்கு நான் பஸ்ஸை விட்டு இறங்கும் போதே என்னை வரவேற்பது போல பஸ் ஸ்டாண்டிலேயே நிற்பாள். படிய வாரிய தலை பின்னாடி சின்ன பன் கொண்டை குட்டி தேவதை மாதிரியே என்னை பார்த்துக் கொண்டே நிற்பாள். என்ன இருந்தாலும் அவளுக்கு தலையில் முடி ரொம்ப ரொம்ப கம்மி. பரவாயில்லை கல்யாணத்துக்கு பிறகு குழந்தை அபிவிருத்தி திட்டத்திற்கு ப்ளான் போடுகிறேனோ இல்லையோ அஸ்வினி ஹேர் ஆயில் வாங்கிக் கொடுத்து அவளின் கூந்தல் வளர்ப்பு திட்டத்திற்கு தான் என் முதல் ப்ளான் போடுவேன். என்னது இது? உங்களிடம் கண்டதைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறேன். பார்த்தீங்களா! கடைசி வரை அவள் பெயரை எனக்கு எப்படித் தெரியும் என சொல்லவே இல்லை பார்த்தீங்களா!.

என்னைப் போலவே அவளும் நர்ஸ் உடுப்பு போட்டு வரும் போது என்னைப் போலவே அவளும் ஒரு பெயர் பட்டி குத்தியிருந்தாள். ஆரம்பத்தில் நான் அவளின் பெயர் பட்டியை உத்து உத்து பார்த்து பெயரை தெரிந்துக் கொள்ள எவ்வளவோ கஷ்டப்பட்டேன். நான் அவளின் மாரை தான் பார்க்கிறேனென்று உடுப்பின் மாராப்பை இழுத்து இழுத்து விட்டுக் கொண்டிருந்தாள். எனக்கே சங்கடமாகி விட்டது.எப்படியாவது அவளின் பெயரை நான் தெரிந்துக் கொள்ள வேண்டும். கஷ்டப்பட்டு எச்சில் விழுங்கி அவளிடம் நெருங்கினேன். மணி கேட்க. "எக்ஸ்கியூஸ் மீ, என்ன மணி?" என்று நெருங்கி கேட்ட சாக்கில் அவளின் பெயரையும் "லாவண்யா" என்று படித்துவிட்டேன். அவளுக்கு தெரியும் ஆம்பளை பசங்க வாட்ச் கட்டியிருந்தாலும் மணி கேட்பார்கள் என்று அதனால் என் கையில் வாட்ச் இருந்தாலும் நான் வெட்கப்படாமல் மணி கேட்டேன்.

இன்னிக்கு ஞாயிற்றுகிழமை. எனக்கு இன்னிக்கு ராத்திரி ஷிப்ட். எப்படியும் லாவண்யாவுக்கு காலை ஷிப்டா தான் இருக்கும். இந்த லவ் லெட்டர் எழுதி முடிச்சவுடனே அவங்க ஏரியா பக்கம் போய் நின்னா அவ பிரண்டுக்கிட்ட பேசிக்கிட்டே அந்தப்பக்கம் வருவா.

"எக்ஸ்கியூஸ் மீ, இந்தாங்க லெட்டர்" இது எப்படியிருக்கு? போஸ்ட்மென் கூப்பிடுகிறமாதிரி இருக்கா?. இப்போ நான் லைட்டா சிரிக்கிறேன். எப்படியிருக்குன்னு பார்த்துச் சொல்லுங்க. "எக்ஸ்கியூஸ் மீ மேடம். தி இஸ் எ லெட்டர்". இந்த இடத்தில "தி இஸ் எ லெட்டர்"ன்னு சொன்ன "இது ஒரு லெட்டர்"ன்னு தமிழ்ல அர்த்தமாகும் இல்லையா? நான் நல்ல புன்முறுவலித்தேனா? ஓ! கொஞ்சம் நல்ல சிரிக்கனுமா? கொஞ்சம் இருங்க. அந்த வாக்கியத்தில 'எ லெட்டர்' வராது இல்லை. இங்கிலீஸ் கிராமர் படி இது ரைட்டு தான். ஆனா இவளுக்குன்னே 'எ லெட்டர்' உதைக்குதே. 'எ லெட்டரை' 'லவ் லெட்டர்'ன்னு மாத்துனா என்ன? 'எக்ஸ் க்யூஸ் மீ. திஸ் இஸ் லவ் லெட்டர்'. சீ சீ நான் ஒரு அசடு. லவ் லெட்டர்ன்னு ஊரெல்லாம சத்தம் போட்டா கொடுப்பாங்க?. 'எ'வும் வேண்டாம் 'லவ்'வும் வேண்டாம், வெறும் 'தி இஸ் லெட்டர்'ன்னு சொல்லிக் கொடுத்திடலாம். அவ தனியா வந்தா பரவாயில்லை. பிரண்டுகளோட வந்த என்ன செய்றது. இன்னாத்துக்கு தைரியாம அவங்க முன்னாடியே கொடுத்திட வேண்டியது தான். எனகென்ன பயமா? அவங்களும் சாட்சியா இருப்பாங்கல்ல. 'ஹி ஹி ஹி ஹி எக்ஸ் க்யூஸ் மி திஸ் இஸ் லெட்டர்'. சரி ஏதோ ஒன்னு இப்படியே சொல்லி கொடுத்திர வேண்டியது தான்.


ஒரு வழியாக எழுதிய லவ் லெட்டரை பாக்கெட்டில் பத்திரப்படுத்திக் கொண்டு நேர நான் கமலா தியேட்டர் ஸ்டாப்புல 37B எடுக்குறேன். அதாங்க 37B, திரு.வி.க நகர் போகும்ல அந்த பஸ் தான். எழவு ஞாயிற்றுக்கிழமை ஆனாலும் இந்த பஸ்ல கூட்டம் கொறய மாட்டேங்குது. வாசலில் ஏறியது தான் தெரியும் பலாப்பழத்தின் கொட்டையை பிதுக்குவது போல என்னை பிதுக்கு உள்ளே தள்ளி விட்டுவிட்டார்கள். ராம் தியேட்டர் பக்கம் வர பஸ்ஸில் துரும்பு நிற்க கூட இடமில்லை. எனக்கு திக்கு திக்குன்னு அடிச்சிக்குது. அந்த பக்கம் ஒரே பொம்மனாட்டிங்களா நிக்கிறாங்க. ஒருவாட்டி இப்படி தான் தெரியாதனமா பொம்மனாட்டி ஸீட்டுல உட்கார்ந்துட்டேன்னு ஒரு பொம்மனாட்டி என்னை கம்மனாட்டி கணக்காக எரித்துப் பார்த்து "இந்தாப்ப பொம்பளைங்க நிக்கிறாங்க. கண்ணி தெரியலா. இன்ன பொம்பளை ஸீட்டுல உட்கார்ந்துகின்னு" என்று 50 பேருக்கு முன்னியில் என்னை எழுப்பி விட்டதற்கு பதிலாக அந்த ஜன்னல் வழியாக உருட்டி விட்டுருக்கலாம். ஸீட்ல உட்கார்ந்ததுக்கே இப்படின்னா? இடிச்சா? இருந்தாலும் மிடில் ஏஜ் பொம்மனாட்டிங்க ஸீட் கேட்டு எழுப்பி விட்ட மட்டும் தான் கோபம் பொத்துக்கிட்டு வருது. மானம் காத்துல பறக்குது. அது ஏன்னு தெரியல, ஜிலு ஜிலுன்னு ஜீன்ஸ் போட்டுக்கிட்டு எந்த பொண்ணாச்சும் "ஹலோ! எக்ஸ்க்யூஸ் மீ திஸ் இஸ் பார் லேடிஸ்" என்று லேடிஸ் ஸீட் கேட்டால் அப்படி என் மானம் ஒன்றும் பெரிதாகப் போய்விடுவதில்லை.

ஸ்ஸ்ஸ்ஸ்... அப்பா வியர்த்துக் கொட்டுகிறது. இவன் என்னடாவென்றால் ஓவ்வொரு ஸ்டாப்பாக நிப்பாட்டுகிறான். அது சரி இது என்ன கால் டாக்ஸியா கப்புன்னு ஏறி உட்கார்ந்தால் 'கப்புஜிக்கால்' என்று போற இடத்துல இறக்கி விடுறதுக்கு. இது கவர்மெண்டு பஸ்ஸூ அப்படித்தான் போவான். நான் பயணம் செய்துக் கொண்டிருக்கிற 37B மாநகர பேருந்து கோடம்பாக்கம் ஹைரோடு வழியாக ஆட்டோ ஓட்டுபவனை போல பஸ்ஸூம் புட்டத்தை ஒரு தினுசாக சாய்த்துக் கொண்டு ரோடில் பெயருக்கு ஓடிக்கொண்டிருக்கிறது.

வந்தது பாரு மீனாட்சி காலேஜூ. கலர் கலரா பிகருங்க. அய்யோ அய்யோ ரெண்டு கண்ணும் பத்தலையே ரெண்டு கண்ணும் பத்தலையே. சே என்ன கலரு? என்ன பிகரு? என்ன ட்ரெஸ்ஸூ? நாமளும் ஒன்னை தேடிப்போகிறோம் என்ற நெஞ்சுக்கு நீதி கூட இல்லாமல் சைஸ்வாரியாக மானவாரியாக கண்கள் மேய்ந்து கொண்டிருக்கிறது. இருந்தாலும் நான் பஸ்ஸூல லேடிஸ் பக்கம் போயிரக்கூடாதுன்னு உசாரா இருக்கேன். எருமை மாடுங்க மாதிரி என் பின்னாடியிருந்து ஆம்பிளைங்க முட்டித்தள்ளுறாங்க. நானும் பல கொண்ட மட்டும் ஹெர்குலிஸ் தனமாக அவர்களின் பாரம் முழுவதும் என் முதுகில் தாங்கிக் கொண்டிருக்கிறேன். கால்கள் எல்லாம் தினவெடுத்துப் போகின்றன. முன்னாடி நிற்பவளுக்கும் எனக்கு ஒரு அடி ஸ்கேல் தூரம் தான்.

சனியன் பிடிச்ச கண்டக்டர் முன்னாடி போ முன்னாடி போ என்று கூவுகிறார். எங்கே முன்னாடி போன இந்த பொம்பளை மேல இடிக்க வேண்டியது தான். ஆயிரம் தான் இருந்தாலும் ஒரு உரசு உரசித்தான் பார்த்துடலாமே என்று என்னுடைய ஈவில் மனம் கூவுகிறது. கூட்டமா தானே இருக்கு. அது அவங்களுக்கு தெரியாதாக்கும். அதுக்கு என்ன செய்ய முடியும். கூட்டமின்னு இருந்தா இடிபட தான் செய்யும். இந்த பக்கம் நிக்கிற பொண்ணை பாரு அது என்னை உரசிக்கிட்டு தானே நிக்குது. நானும் இந்த சாக்குல இப்படியே நவுந்து போய் உரசிப் பார்த்தா தான் என்னவாம். ஆகா! பஸ்ஸூ முக்கி முக்கி கோடம்பாக்கம் பிரிட்ஜ்ல ஏறிக்கிட்டு இருக்குதே. டிரைவரும் கியரை மாத்தி மாத்தி போடுகிறார். வண்டி பயங்கர ஜெர்க் ஆகிறது. இதோ ஒரு தடவை அந்த பொம்மனாட்டிக்கு பின்னாடி இடிச்சுட்டேன்.

என்னுடைய லட்சிய பயணம் தடம் மாறுகிறது. என் ரம்பையை காணச் செல்லும் இந்த பயணம் தடம் மாறி சொர்க்கப்புரிக்கு செல்கிறது. இது மாநகர பேருந்து அல்ல. இன்பச்சுற்றுலா பேருந்து. இன்னொரு ப்ரேக். இன்னொரு இடி. என் பெயர் ராகுலா? இல்லை இடி அமீனா? கலக்கிட்டேடா கண்ணா என்று லாவண்யாவை மறந்த சுகத்தில், அவளுக்கு எழுதிய லவ் லெட்டர் என் பாக்கெட்டில் இருந்தும் உறுத்தாத நிலையில் நான். அடுத்த ப்ரேக் போடும் வேகத்தில் ஏதோ ஒன்று மரக்கட்டை என என் அடிப்பாகத்தை தாக்கிய வேகத்தில் காயடிக்கப்பட்ட மாடாக "பரதேசி நாய்ங்க உரசுரதுக்குன்னே பஸ்ஸூல வரனுக" என்று வாழ்த்தொலியும்,மங்கல வாத்தியங்களும் முழங்க வள்ளுவர் கோட்ட ஸ்டாப்பில் தூக்கி எறியப்பட்டேன். யப்பா! என்ன வலி வலிக்கிறது சாமீ.... என்று அடிவயிற்றை பிடித்துக் கொண்டு பஸ் ஸ்டாப்பிலேயே சுருண்டு விழுகிறேன். அடிவயிற்று வலியால் வாயில் எடுக்க முயற்சிக்கிறேன். சளி சளியாக வாயிலிருந்து வழிகிறது.

(இந்த கதையில் ஒரு 'தரம்' இருக்க வேண்டும் என்பதற்காக) வழக்கமாக வள்ளுவர் கோட்டம் பக்கம் லாவண்யா இருக்கமாட்டாள். எதற்கோ அந்த பக்கம் வந்தவள், நான் சுருண்டுக் கிடப்பதை 'ஒரு தரம்' அதே பார்வையில் பார்த்துச் செல்கிறாள்.'ஈவு இரக்கம் இல்லாத ராட்சசி'. இன்னும் அவளுக்கு எழுதிய லவ் லெட்டர் பாக்கெட்டிலேயே இருக்கிறது.

(இந்த கதையில் 'குணம்' இருக்க வேண்டும் என்பதற்காக) நான் வயிற்றைப்பிடித்து சுருண்டு கிடப்பதை கண்டு கிராமத்து பெரியவர் தோற்றதில் இருக்கும் அந்த வயதானவர் தண்ணீர் பாட்டிலுடன் நெருங்கி வருகிறார். தண்ணீருக்கே சென்னை தவம் இருக்க, அவரின் உதவும் 'குணம்' கண்டு வாங்கிய இடியும், அதனால் வந்த வலியும் ஓடப்பார்க்கிறது. "இந்தாங்க தம்பீ! தண்ணி குடிங்க சரியாப் போயிரும்" என்று என்னவென்றே தெரியாமல் என்னை அசுவாசப்படுத்துகிறார்.

(இந்த கதையில் 'மணம்' இருக்க வேண்டும் என்பதற்காக) வலி இப்போது தேவலாம் போலிருக்கிறது. ஆனால் இன்னும் வலிக்கிறது. அந்த நேரத்தில் வள்ளுவர் கோட்ட குப்பைக் கிடங்கை நோக்கி சென்னையில் குப்பைகளை அள்ளிக் கொண்டு ஓனிக்ஸ் லாரி ஓன்று சுகந்த 'மணம்' பரப்பிக் கொண்டே என்னைக் கடந்து செல்கிறது.

(இந்த கதையில் திடம் இருக்க வேண்டும் என்பதற்காக) என்னை மேலும் மேலும் அசுவாசப்படுத்திக் கொள்கிறேன். குணம் நிறைந்த பெரியவர் நான் உட்காருவதற்காக பஸ் ஸ்டாப் திண்டில் இடம் ஒதுக்கிக் கொடுக்கிறார். ஏறக்குறைய இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர்தான் வாய்த்தது இந்த மாதிரியான இடிஅமீன் வாழ்க்கை. அப்போதெல்லாம் பெண்கள் அவ்வளவு முன்னேறவில்லையே?.நான் ஒன்றும் அந்த மாதிரி அடிவாங்கவில்லையே?. இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் அதற்கு இப்போது வாய்ப்பு கிடைக்க, அப்பப்பா எவ்வளவு முன்னேறி விட்டார்கள் இந்தப் பெண்கள். ஒளிபடைத்த கண்ணிணாய் வா வா வா... இடி படைத்த கையினாய் வா வா வா....

(கதைக்கு பின்-நவீனத்துவ டச்சப்)

மின்சார கம்பியில் சாக்கடித்து தொங்கும் அந்த காக்கையின் வாயிலிருந்து புலி பல் தெரித்து உதிரமாக புழுக்கள் கொட்டிக் கொண்டிருக்கிறது. என் சாம்பல் நிற குறுதியில் அந்த புழுக்கள் விழுந்து பாதரசமாக தெரித்து வள்ளுவர் கோட்டம் ஹை ரோடெங்கும் ஓடுகிறது. அதி பயங்கரி ஆதி சூலினி சூன்யகாரி கிழவி வழிந்தோடும் என் பாதரச குறுதியை தொட்டு தொட்டு ருசி ஊறுகாய் போல நக்குகிறாள். தன் நெற்றிக்கண் குழந்தைக்கு கையிலுள்ள கமண்டலத்தில் பாதரசத்தை அள்ளி அள்ளி பருக வைக்கிறாள். பல்லின பல்லிகள் ராட்சத டைனோக்கள் பக்கத்திலிருந்த கூவத்திலிருந்து என் பாதரச குறுதியில் நனைந்து விளையாட எம்பிக் குதித்து எக்காளமிடுகின்றன. வாய் வாய் புலி வாயென்று கம்பியில் தொங்கு காக்கையும், கொட்டும் இரும்பு புழுக்களும், கண்ணாடி பூக்களும் ஓலமிடும் என்னைப் பார்த்துக் கொக்கரிக்கின்றன.

இந்த பதிவின் வாக்கு எண்ணிக்கை: . பக்கத்திலுள்ள ஸ்டாரை மவுசால் போட்டுத் தாக்கினால் எனக்கு மவுசு ஏறும். நன்றி:-)

உங்கள் கருத்துக்களை இட

திருப்பி தாக்கியவர்கள்:
தாங்க முடியலப்பா உன் ரவுசு, படிக்க நல்லா இருந்துச்சி, ஆனா யின்னா சொல்லவறனு கட்சி வரிக்கும் புர்யலப்பா...(பின் நவீனத்துவம்??)

போயி தூங்குப்பா நேரம் ஆயிடுச்சியில்லயா...
 
பின் நவீனத்துவம் சூப்பரு , பிரேம் - ரமேஷ் மட்டும் இதைப் பார்த்தாங்கன்னா
உமக்கு பெரிய பட்டமே கொடுத்துருவாங்க :-)
 
:-))
 
:00
 
அன்புள்ள விஜய்,

வீட்டிலே 'அம்மிணி' திரும்பிவர்ற வரைக்கும் கதை முயற்சியா?

நல்லாப் புரிஞ்சுக்கிட்டு இருந்த கதை பின் நவீனத்துவம் வந்ததும் ஒண்ணுமே பி(பு)ரியாமப் போச்சே!
 
பின் நவீனத்துவத்தில கலக்கிட்டியப்பா? அது உண்மையிலேயே பின் நவீனத்துவம் தானா? அல்லது கதாநாயகன் பின்னாடி உரசுனதுனால கதை 'பின்' நவீனத்துவம் (காயடிக்கப்பட்டது) ஆனதா?
 
ரொம்ப மெனக்கிடாம... பின்னூட்டம் மட்டும் படிச்சேன்... சூப்பர்:)
 
ரொம்ப எதார்த்தமா இருந்தது.. கொஞ்சம் பதார்த்தமாவும் இருந்தது.. நான் ரொம்ப ரசிச்சேன் விஜய்...
 
பஸ்ஸூல உரசுறவனை எல்லாம் அப்படிதான் காயடிக்கனும்னு நவீனத்துவமா சொல்றீங்க போல :-))) அப்படின்னா பஸ்ல போற எல்லா பொண்ணுங்களும் பாக்கு வெட்டியோட தான் அலையனும்.

நவீனத்துவம் பின் நவீனத்துவம் எல்லாம் என்ன எழவு (அந்த ராகுல் ஸ்டைலில்)?
 
//
குழலி said...
ஆனா யின்னா சொல்லவறனு கட்சி வரிக்கும் புர்யலப்பா...(பின் நவீனத்துவம்??)//

//துளசி கோபால் said...
நல்லாப் புரிஞ்சுக்கிட்டு இருந்த கதை பின் நவீனத்துவம் வந்ததும் ஒண்ணுமே பி(பு)ரியாமப் போச்சே! //

//அல்வாசிட்டி.சம்மி said...
பின் நவீனத்துவம் முன்னாடி வர படிக்கிறதுக்கு நல்லாத்தான் இருந்துச்சி, ஆனா அதுக்கு அப்புறம் ஒன்னும் புரியலை. //

பின் நவீனத்துவம்ன்னு அதை எழுதுன எனக்கே புரியல. உங்களுக்கு எப்படி புரியும்?. அப்படி புரிஞ்சிருந்த நீங்க ஒரு ஞானி தான் :)
 
தனியா தனியா சொல்லாவிட்டாலும் பதிவை படித்த பிறகு பின்னூட்டமிட்ட எல்லா நண்பர்களுக்கும் நன்றி.
 
கதைக்கு பின்-நவீனத்துவ டச்சப்பில் நல்ல சிந்தனை ..

மின்சார கம்பியில் சாக்கடித்து தொங்கும் புழுக்கள் விழுந்த ருசி ஊறுகாய், தொட்டு அள்ளி அள்ளி பருக வாய் ஓலமிடும்..

டேஸ்ட் நல்லாயிருந்துச்சா.??
 
நன்றி லபக்கு தாஸ்.

//மின்சார கம்பியில் சாக்கடித்து தொங்கும் புழுக்கள் விழுந்த ருசி ஊறுகாய், தொட்டு அள்ளி அள்ளி பருக வாய் ஓலமிடும்..//

உவ்வே ஒரே இனிப்பு கசப்பு புளிப்பு துவர்ப்பு ஈயம் இரும்பு டேஸ்ட்
 

உங்கள் கருத்துக்களை இட


<< திரும்ப முன் பக்கத்துக்கு போ

-ல் போட்டுத் தாக்கியது

கண்மணி கமலாவுக்கு...

Difficulty in reading this post due to font issues? Click here for a PDF copy. Works best if you right-click the link and select 'Save target as...'
இந்த பதிவை போட்டுத் தாக்கியவர் : Vijayakumar
வாழ முடியாமல் போன ஒரு எழுத்தாளரின் நெஞ்சத்தின் சோகம் அவரின் கடிதத்தின் வாயிலாக படிக்கும் போது ஆற்றாமையால் படிப்பவரின் நெஞ்சமும் துடித்துப் போகும் என்பது உண்மை. அவரின் அந்தரங்க கடிதங்களை படிப்பது மூலம்(படிப்பது சரியா? தவறா? என்பதை தவிர்த்து) அவரின் அந்தரங்கங்கள் தெரிவதுடன் அவரின் அந்தரங்க துன்பங்களும் நம்மை கவ்விக் கொள்கிறது. வாழ்க்கை சரிவர வாழாமல் எழுதி மறைந்த எழுத்தாளர் புதுமைப்பித்தன் தன் மனைவிக்கு எழுதிய கடிதங்களை புத்தகத் தொகுப்பாக படிக்கும் போது ஒருவரின் அந்தரங்கத்தை படிக்கிறோமே என்ற குறுகுறுப்பும், அறிந்துக் கொள்ளும் மனிதனின் இயல்பு குணத்துடன் படித்து முடிக்கும் போது ஆசை இருந்தும் வாழ்க்கையை வாழமுடியாமல் இறந்துப் போகிற மனிதர்கள் இருக்கும் போது,வாழ்க்கை இருந்தும் வாழத் தெரியாமல் வீணடிக்கும் ஒவ்வொரு கணமும் கண் முன் மின்னி விட்டு மறைகின்றன.

தொடக்கமும் இல்லாமல் முடிவும் இல்லாமல் தொடுக்கப்பட்டவையாக, புதுமைப்பித்தன் தன் மனைவிக்கு எழுதிய கடிதங்களைத் தொகுத்து "கண்மணி கமலாவுக்கு..." என்ற புத்தகமாக வெளிவந்துள்ளது. புதுமைப்பித்தனின் மீது ஆயிரம் குற்றசாட்டுகள் இருந்தாலும் அவரின் சுயத்தை எறிந்துவிட்டு படைப்புகளை கவனித்தால் தமிழில் முக்கிய எழுத்தாளர்களில் அவரும் ஒருவர் என்பது விளங்கும். நக்கல்,நையாண்டி, மூர்க்கம், ரௌத்ரம் முதலியவைகள் மின்னும் எழுத்துக்களுக்குச் சொந்தக்காரர் புதுமைப்பித்தன். அவரின் காதல்+சோகம்+இயலாமை நிறைந்த கடிதங்களை படிக்கும் போது அவரின் இன்னொரு முகம் தரிசனமாகும்.


புதுமைப்பித்தன்
Image hosted by PicsPlace.to

தொகுப்பட்ட அவரின் கடிதங்களில் எல்லாமே பணத்தை சுற்றியும், அவரின் தேவையை பூர்த்திசெய்யாத பணத்தை காண முடியாத இயலாமையும், பிரிந்த மனைவியின் ஆசைகளை நிறைவேற்ற முடியாத கையாலாகத கணவனாக தன்னை சித்தரித்து அவர் படும் வேதனையும், தன் மனைவியை கதைகள் எழுத அவர் கொடுக்கும் ஊக்கமும், மனைவி மீது இருக்கும் தன் காதல் என்றைக்குமே மாறாது என்று சித்தரிக்கும் வார்த்தைகளும்,மனைவிக்கு அவர் கொடுக்கும் ஊக்கமொழிகளும், பிறந்த குழந்தையை காண முடியாமல், கொஞ்ச முடியாமல், தழுவ முடியாமல் போகும் இயலாமைகள் மட்டுமே அந்த கடிதங்களில் பிரதானமாக ஒலிக்கின்றன.

எஸ்.ராவின் 'துணையெழுத்தில்' புதுமைபித்தனைப் பற்றி சொல்லிமிடத்தில் புதுமைப்பித்தன் தன் தந்தையுடன் சண்டையிட்டு பிரிந்து சென்னைக்கு வந்ததாக குறிப்பிட்டிருப்பார். திருமணமான 16 ஆண்டு காலத்தில் ஏறக்குறைய 10 ஆண்டுகள் 1938 முதல் 1948 வரை மனைவி பிரிந்தும் சொற்ப நாட்களில் இணைந்து வாடியிருக்கும் வேதனைகள் அந்த கடிதத்தில் ஒலிக்கின்றன. புதுமைபித்தனின் மனைவி கமலா திருவனந்தபுரம், உத்தமப்பாளையம், அம்பாசமுத்திரம்,பளையங்கோட்டை என்று பந்தாடப்படும் போதெல்லாம் சென்னையிலிருந்து கமலா எங்குச் சென்றாலும் துரத்தி துரத்தி கடிதம் எழுதியிருக்கிறார். அவர்களின் கணவன் மனைவி என்ற உறவில் கடிதமே பிரதான பாலமாக செயல்பட்டிருக்கிறது.

புதுமைப்பித்தனின் இயற்பெயரான 'சொ.விருத்தாசலம்' என்ற பெயரிலேயே எல்லா கடிதங்களையும் எழுதியிருக்கிறார்.கணவன் மனைவிக்கு எழுதும் எல்லா அந்தரங்க வார்த்தைகளும் சென்ஸார் இல்லாமல் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது படிப்பவரை கொஞ்சம் அதிகமாகவே நெளியச் செய்கிறது.

"குஞ்சு என் உயிர். நீ என் உடம்பு" என்று கடிதத்தில் குறிப்பிட்டுருக்கும் குஞ்சு என்ற தன் குழந்தையை சென்னைக்கு புறப்படும் முன் ஆசை தீர கன்னத்தை தொட்டு விட்டு கிளம்பியவர் தான், பிறகு கமலாவுக்கு எழுதும் கடிதத்தில்,

"...........
எப்பொழுதும் நீயும் குஞ்சுவும் தான் என் மனசில் தோன்றிக் கொண்டிருக்கிறீர்கள்.இன்னும் ஒரு விசேஷம். போனவாரம் நான் பகலில் படுத்துக் கொண்டிருக்கையில் சிறிது கண்ணயர்ந்தேன். அப்பொழுது நீ உட்கார்ந்துகொண்டு என்னை ஏறிட்டு பார்க்கிற மாதிரி முகம் மட்டும் மார்பு வரை தெரிந்தது. உன் கண்கள் கலங்கியிருந்தன. நீ அண்ணாந்து பார்த்துக் கொண்டிருந்தாய். "கண்ணா" என்று நான் அலறிக்கொண்டு எழுந்திருந்தேன். அது வெறும் சொப்பனம் என மனதில் பட வெகுநேரமாயிற்று. இப்படியாக நான் இங்கு கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறேன். என் மன கொந்தளிப்புகள் உன்னை இன்னும் அதிக துயரத்தில் ஆழ்த்திவிடக்கூடாது என அஞ்சுகிறேன்.. நீ எதற்கும் மலைத்து விடாதே. விதி நம்மை சோதிக்கிறது அவ்வளவு தான். நமது சங்கடங்கள் எல்லாம் இன்னும் இரண்டொரு மாதத்தில் பனி போல மறைந்து விடும். பயப்படாதே.
......................."

பிறகு 30-5-40 அன்று புதுமைப்பித்தன் எழுதும் கடிதத்தில் மனைவியின் அவசர தேவைக்காக எங்கெங்கோ கஷ்டப்பட்டு பணம் பிரட்டியதை குறிப்பிட்டு "குஞ்சுவைக் காட்டி பிச்சை எடுத்த மாதிரி" இந்த பணத்தை பிரட்டினேன் என்னும் தொனியில் எழுதிய கடிதத்தை அஞ்சல் செய்யும் முன்னரே குஞ்சு இறந்த செய்தி கிடைத்திருக்க வேண்டும்.எந்த காரணத்தால் தன் இறந்த குழந்தையை பார்க்க செல்ல முடியவில்லை என தெரியவில்லை.யுத்த நேரம் சென்னையில் தாண்டவம் ஆடிக் கொண்டிருக்கும் சமயத்தில், இயலாமையோ அல்லது ஊருக்கு செல்லக் கூட காசு இல்லாத வறுமையோ தெரியவில்லை. இறந்த குழந்தைக்காக தான் விடும் கண்ணீரால் கடிதத்தில் மனைவிக்கு ஆறுதல் சொல்லியிருப்பார். 31-05-40 என்ற தேதியிட்ட கடிதத்தில்...

"கண்ணா,

இன்றாவது எனது கடிதம் உனக்கு ஆறுதல் அளிக்குமாக. எனக்கு இங்கு நிம்மதி இல்லை. தந்தி எழுதுகையில் உனது கலங்கிய கண்களும், முகமும் தான் தெரிகிறது. ஒன்றும் ஓடவில்லை. நான் என்னை விட்டு ஓடினால் தான் எனக்கு நிம்மதி. தன்னை மறக்க மயக்க மருந்தால் அல்லது 'எழுந்திராத தூக்கத்தால்' தான் முடியும்.இந்த நிலையில் நான் உனக்கு ஆறுதல் சொல்ல வருவது நொண்டி இன்னும் ஒரு நொண்டியைக் கூட்டிக் கொண்டு புறப்பட்டது போலத்தான். இருந்தாலும் பொறுப்பு எனக்குத்தானே. அதனால் என் மனம் என்னைத் தின்றுக் கொண்டிருக்க உனக்கு ஆறுதல் சொல்லிவிட முடியும் என ஆசைக்கொண்டு அசட்டுத்தனமாக முயற்சி செய்கிறேன். என் முயற்சியைப் பார்த்து நானே சிரித்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. கண்ணம்மா துக்கம் எல்லை மீறிவிட்டதால்-இதற்கெல்லாம் நான் தான்,இந்தப் பாவியாகிய நான் தான் காரணம் என்பதால், நெஞ்சு ஒரு புறம் என்னைக் குத்த ஓங்கி அழுது மனச் சுமையைத் தீர்த்துக் கொள்ளவும் சக்தியற்று, இடமற்று, தனிப் பிணமாக, பேயாக அலைகிறேன். நான் உனக்குச் செய்ய தவறிய கடமைகள் தினம் தினம் என் மனசை, மனச்சுமையை அதிகரிக்கிறது. என்னை நானே தேற்றிக் கொள்கிறேன். எப்படி என்றாலோ நான் செய்த குற்றஞ்களுக்கெல்லாம் எனக்குத் தண்டனை என்று. ஆனால் இந்த விஷயத்தில் என் தவறுகளுக்கு என் மேல் மட்டும் பலன்களைப் போடாமல் நான் யாரை உயிருக்குயிறாய் மதிக்கிறேனோ அவள் புழுவாகத் துடிக்கும் படி வைத்துப் பார்த்து உதவ வழி இல்லாமல் நின்று தவிக்கும்படி செய்து விட்டது. குஞ்சு என் மனசில் குடியிருக்கிறாள். அவள் இனிமேல் தேவதையாகி என் வாழ்வின் வழிகாட்டியாக, குருவாக, தெய்வமாக மாறிவிட்டாள்.
........."

அதைத் தொடர்ந்து தினமும் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கடிதங்களை கமலாவுக்கு எழுதித் தள்ளுகிறார். கமலா குழந்தை இறந்த துக்கம் தாளாமல் தற்கொலையைப் பற்றி பேசியிருக்க வேண்டும். அடுத்த கடிதங்களில் தற்கொலை என்பது கோழைச்செயல் என்று மனைவிக்கு பெரும் ஆறுதல் சொல்லும் கடிதங்களும் இடம் பெறுகின்றன.

அவ்வப்போது பட்டினியால் கிடந்து வாடி பணம் கிடைக்கும் போது கிடைத்ததை எல்லாம் சாப்பிட்டு வந்த புதுமைப்பித்தனுக்கு அடிக்கடி வயிற்றுப்போக்கு வந்து படுத்துக்கொள்கிறார். அடிக்கடி நோக்காடு வந்து கவனிப்பாரற்றுக் கிடந்தாலும், மனைவியின் உடல்நிலையை மட்டுமே பிரதானமாக கவனித்தில் கொண்டு அறிவுரை வழங்கியிருப்பார். தன் உடல் நிலையைக் குறித்து ஒரே வரியில் எழுதி, உடனே அதற்கு பின் 'இதெல்லாம் ஒன்றுமில்லை. நான் பார்த்துக் கொள்வேன்" என்று பெரிதாக மனைவியிடம் கடிதத்தில் அலட்டிக் கொள்ள மாட்டார்.

பின்வரும் வருடங்களில் தன் மனைவியை சென்னைக்கு கூட்டிவரும் முயற்சிகளாக தன் கடிதத்தில் ஒலிக்கிறது. கடன் ஏதும் இல்லாத துவக்கத்தில் தான் மனைவியுடன் சென்னை வாழ்க்கை ஆரம்பிக்க வேண்டும் என்ற ஆவலில் தொடர்ந்து கடன் அடைத்து வர, திரும்ப கடன் வாங்க என்று பல மாதங்கள் ஓடி விடுவதும், ஒவ்வொரு கடிதத்திலும் அடுத்தவாரம் சென்னைகு வர தயாராக இரு என்று வாக்குறுதி அளிப்பதும், பிறகு எந்த காரணத்தாலோ அந்த வாரம் கமலாவை கூட்டிவர முடியாமல் நாட்கள் தள்ளிக் கொண்டே போயிருப்பதையும் கடிதத்தில் காணலாம். அப்படி பார்த்தால் ஏறக்குறைய 'இந்தா அந்தா'வென்று கடிதத்தில் சொல்லி சொல்லியே 6 மாதம் வரை நீட்டித்திருப்பார் .இந்த இடத்தில் ஆசை அடைந்து மோசம் போய், புதுமைப்பித்தனை விட அவரின் மனைவி கமலாவின் நிலமை தான் மிக பாவமாக இருக்கிறது.

சென்னை வந்து சிலகாலம் வாழ்ந்து விட்டு திரும்பவும் கமலா பிரசவத்திற்காக ஊருக்கு செல்கிறார் என்று நினைக்கிறேன். திரும்ப தனிமை. கடிதம், தனிமை, கடிதம் என புதுமைப்பித்தனின் வாழ்க்கைத் தொடர்கிறது. அவருக்கு மகள் பிறக்க, மகளுக்கு பார்வத குமாரி,சாமளா போன்ற பெயர்களில் பர்வதகுமாரி என்பது தனக்கு படித்திருப்பதைப் பற்றியும், பர்வதகுமாரி என்பதற்கு தினகரி என்ற பொருள் உண்டு என்றும், தினகரி தான் ரொம்ப பிடித்திருக்கிறது என்றும் கடிதத்திலேயே குழந்தைக்கு பெயர் சூட்டியிருப்பார்.

சென்னையில் யுத்தகாலத்தில் நடக்கும் அரசியல் நடப்புகளையும், சுவராஸ்யமான விசயங்களையும் விளக்கியிருப்பார். பத்திரிக்கையிலிருந்து சினிமாவிற்கு வாய்ப்புகள் வர, கையில் கொஞ்சம் தாரளமாக பண புழக்கம் இருப்பதையும், சென்னையில் பங்களா டைப் வீடு வாங்கினால் சினிமா துறையில் இருப்பதற்கு கொஞ்சம் 'கெத்'தாக இருக்கும் என்பதையும் அந்த கடிதப் போக்குவரத்தில் அறியலாம்.

காமவல்லி,அமராவதி போன்ற படங்களில் வேலைப்பார்த்த சுவராஸ்யமான விசயங்களையும், தியாகராஜ பாகவதர் சிறையிலிருந்து மீண்ட பின் செய்யும் சொந்தத் தாயரிப்பு படமான 'ராஜமுக்தி'யில் வசனம் எழுத வாய்ப்பு கிடைத்ததையும் கடிதத்திலேயே பேசியிருப்பார். 'என்.எஸ்.கிருஷ்ணன் வர மறுத்துவிட்டானம்' என்று ஒருமையில் குறிப்பிட்டு ராஜமுக்தியில் என்.எஸ்.கே கொடுத்த தடையால் பாகவதரின் அந்த படம் சந்தித்த தடங்களைப் பற்றிய பீடிகையை ஆரம்பித்து விட்டு 'நேரில் இதையெல்லாம் கதைகதையாகச் சொல்கிறேன்' என்று கடிதத்தை முடித்திருப்பார்.

பிறகு ராஜமுக்தி படத்திற்காக புதுமைபித்தன் புனேவிற்கு செல்ல காந்திஜி சுடப்பட்டதையும்,'முஸ்லீம் தீவிரவாதி தான் செய்திருப்பார், புனேவில் பிரச்சனையில்லை' என்று அனுமானத்தில் அவர் முதல் நாள் கமலாவுக்கு கடிதம் எழுதி அனுப்ப, மறுநாள் இந்து தீவிரவாதி தான் காந்தியை கொன்றான் அதுவும் புனேவில் இருந்தவன் என்று தெரியவும் புனேவில் கலவரம் வெடிக்கிறது. இதனால் படபிடிப்பு தடைப்படுகிறது.

ராஜமுக்தி கதையில் சில மாற்றங்கள் செய்வதற்கு கடைசிகட்ட வேலையில் ஈடுபடும் போது டி.பி என்ற கொடிய நோய் புதுமைபித்தனை பீடிக்கிறது. அடுத்து அவர் எழுதும் கடிதங்கள் ஒரு கை ஓசையாகவே ஒலிக்கிறது. கமலா புதுமைப்பித்தனுடன் ஏதோ பிணக்குடன் இருப்பாதான தொனியில் அவர் எழுதிய கடிதங்களில் ஒலிக்கிறது. டி.பி நோய் மிக கடுமையாக, தினமும் 104 டிகிரி காய்ச்சலுடன் 'என்னால் எழுத முடியவில்லை. கை வலிக்கிறது. தினகரியை பற்றியாவது ஒரு வரி எழுது' என்று கமலாவை கெஞ்சி கதறியிருப்பார். நோயால் படும் அவதியை "கை வலிக்கிறது கை வலிக்கிறது" என்ற அவரின் ஓலம் கடைசியில் எழுதிய எல்லா கடிதங்களிலும் காணமுடியும். ஒரு டாக்டர் சொன்னதை வைத்து எதுவும் எடுத்துக் கொள்ள முடியாது, இரண்டு பெரிய டாக்டர்களை பார்க்கப் போகிறேன் என்று அவரின் கடைசிக்கட்ட வாழ்க்கை போரட்டதுடன் "எனக்கு யாராவது செய்வினை வைத்து விட்டார்களா?" என்று யாரையாவது கேட்டுச் சொல் என்று உறுதியிழந்து அவர் எழுதும் அந்த கடிதங்களை படித்து என்னால் கண்ணில் கண்ணீர் துளிர்க்காமல் இருக்க முடியவில்லை. டி.பி என்ற தொற்றுவியாதி குழந்தைக்கும் பரவிவிடக்கூடாது என மனைவியை காண தவிர்க்கும் அவர், நோய் முற்றி இருமிக் கொண்டே பெங்களூர் கன்னையாவுடன் புனேவிலிருந்து திரும்புகிறார்.

அதுவரை "எனது கண்ணாளுக்கு" என்று கமலாவுக்கே எழுதிய கடிதங்கள் இடம் பெற்றிருக்கும் அந்த புத்தகத்தில் அவர் நண்பர் சிதம்பரத்துக்கு எழுதிய கீழ்கண்ட புதுமைப்பித்தனின் ஒரே கடிதம் இதயத்தை நொறுக்கிப் போடுகிறது.

" 26-5-48
அன்புள்ள சிதம்பரத்துக்கு,

நான் பெங்களூரிலிருந்து திரும்பி வந்துவிட்டேன்.

அங்கே நிபுணர்கள் என்னைப் பரிசோதனை செய்து இரண்டு சுவாசப்பையிலும் துவாரம் விழுந்து விட்டதினால் இனி ஒன்றும் செய்வதற்கில்லை என்று சீட்டு கிழித்து விட்டார்கள். இனி அவர்களைப் பொறுத்தவரை மரணம் தான் முடிவு. இங்கு வந்து வேறு சிகிச்சை முறை அனுஷ்டிக்க உத்தேசம். கைவசம் பணம் இல்லை. பாகவதர் அனுப்ப வேண்டியது தாமதமாகியது. ஒரு நூறு ரூபா இருந்தால் சிகிச்சைக்கு வசதி உண்டு. எதற்கும் என்னை 10 மணிக்கு சந்திக்க முடியுமா?

உனது,
சோ.வி... "

சிகிச்சைக்கு 100 ரூபாய் கூட இல்லாமல் தவித்த புதுமைப்பித்தன் 30 ஜீன் 1948-ல் உலகை நீத்தார்.

புதுமைப்பித்தனை பற்றிய சின்ன அறிமுகத்திற்கு இங்கே சொடுக்கவும்.

இந்த பதிவின் வாக்கு எண்ணிக்கை: . பக்கத்திலுள்ள ஸ்டாரை மவுசால் போட்டுத் தாக்கினால் எனக்கு மவுசு ஏறும். நன்றி:-)

உங்கள் கருத்துக்களை இட

திருப்பி தாக்கியவர்கள்:
சரியான நேரத்தில் சரியான பதிவு, தமிழ் அன்னை ஒரு ஓரவஞ்சனைகாரி தமிழன்னையை மதிக்காமல் வேறு அன்னையை தேடும் சில ர*டி பிள்ளைகளுக்கு, பொருளை வாரிக்கொடுத்தாள், ஆனால் அவளின் காலையே சுற்றி வந்து அவள் காலையே நக்கிக்கொண்டிருந்த பிள்ளைகளை வறுமையில் ஆழ்த்திவிட்டாள்...
 
vijay,
nalla pathivu !!! He was a great writer, no doubt !!!

Also, Did you see

http://balaji_ammu.blogspot.com/2005/06/blog-post_10.html :)))
 
அன்புள்ள விஜய்,

நல்ல பதிவு!

நான் இதுவரை 'புதுமைப் பித்தன்' படித்ததில்லை.
இப்பத்தான் ஒரு சைட் கிடைச்சிருக்கு. ஒவ்வொண்ணாப் படிக்கப்போறேன்.

கமலாவும் பாவம்தானே?
 
//ஆனால் அவளின்(~தமிழன்னை) காலையே சுற்றி வந்து அவள் காலையே நக்கிக்கொண்டிருந்த பிள்ளைகளை வறுமையில் ஆழ்த்திவிட்டாள்... //

குழலி, பாரதியைப் போலவே புதுமைப்பித்தனையும் வாழும் காலத்திலேயே இனம் கண்டுக் கொள்ளாமல் போனது தமிழ்.
 
என்றென்றும் கொம்புடன் பாலா,

சனி, ஞாயிறுகளில் அதிகம் இணையம் பக்கம் வரமுடியாததால் தாங்களின் பதிவை தவற விட்டுவிட்டேன். பார்த்தாகி விட்டது. நன்றி.

துளசியக்கா,

எழுத்தாளரின் மனைவி என்று பெருமைப்படுவதை விட வறுமையின் மனைவி என்ற பெருமை மட்டுமே கிடைக்கும் போது அந்த மனைவி எப்படி சந்தோசமாக இருக்க முடியும்??

கண்மணி கமலா... பாவம்.
 
Thanks for writing this nice article.

I was not aware of this site of Pudumai Pittan. I felt very bad for him.

Regards
 
போட்டுத் தாக்கிட்டீங்க விஜய்!

இதைப் படிக்கும்போது, ஏனோ அவரின் "ஒரு நாள் கழிந்தது" சிறுகதை ஞாபகத்திற்கு வருகிறது. அவர் நிஜ வாழ்க்கையும் 'நாளை' என்ற நாளே இலக்காக இருந்திருக்கிறது போலும்.

இன்னும் இதை வாங்கிப் படிக்கவேண்டும் என்று தோன்றவில்லை. இரவலாகக் கிடைத்தால் மேலோட்டமாக ஒரு முன்னோட்டம் விட வேண்டும்.
 
//இன்னும் இதை வாங்கிப் படிக்கவேண்டும் என்று தோன்றவில்லை. இரவலாகக் கிடைத்தால் மேலோட்டமாக ஒரு முன்னோட்டம் விட வேண்டும். //

அந்த புத்தகம் இலக்கியம் என்பது பொருந்தாது. அது ஒரு துயர சரித்திரம். இரவலாக வாங்கி படிப்பது தான் உத்தமம் கண்ணண். நன்றி.
 

உங்கள் கருத்துக்களை இட


<< திரும்ப முன் பக்கத்துக்கு போ

-ல் போட்டுத் தாக்கியது

முய்முய் புத்தக பிடிச்சி விளையாட்டு

Difficulty in reading this post due to font issues? Click here for a PDF copy. Works best if you right-click the link and select 'Save target as...'
இந்த பதிவை போட்டுத் தாக்கியவர் : Vijayakumar
இவன் எழுதுவதிலிருந்து தெரிகிறது. இவனெல்லாம் என்ன வாசித்து இருக்கப் போறான் என்று எல்லாரும் நேர்மையாக என்னைத் தவிர்த்து விட பாவம் என்றென்றும் அன்புடன் பாலா என்னை தப்பாக கணித்து இந்த விளையாட்டுக்கு அறை(ர)க்கூவலில் என்னை அழைத்து விட்டார். ரொம்ப தேங்ஸ்பா. விளையாட்டு என்றாலே கதா தூரம் ஓடும் என்னையும் "அட! இந்த மேட்டர் ஒரு பதிவுக்கு ஆச்சி" என்று இழுக்க, நீங்கள் அவஸ்தையில் நெளிய என் ஊத்தை எண்ணத்தால் என் வாசிப்பின் பயோகிராஃபியை எழுதப் போகிறேன்.

இந்த பதிவுக்கு சம்பந்தமாக ஏற்கனவே 'என் அப்பாவின் ட்ரெங்க் பெட்டியில்' சொல்லியிருக்கிறேன்.

என் வாசிப்பின் வசந்தகாலம்

என் வாசிப்பின் வசந்தகாலம் சிறுவயது பருவம் தான். அப்போது நான் படக்கதைகளுக்கு அடிமையாயிருந்தேன். நண்பன் ராம்குமாரின் வீட்டில் ஓசிப்பேப்பர் படிக்க ஆரம்பித்திருந்த நேரம். சிந்துபாத்தின் கன்னித்தீவில் ஆரம்பித்த படக்கதை புயல் தினமலர் 'சிறுவர் மலரில்' மையம் கொண்டு முத்து காமிக்ஸ், ராணி காமிக்ஸ்களை போட்டுத் தாக்கிவிட்டு பதின்ம வயது ஆரம்பத்தில் கரையைக் கடந்து மறைந்தே விட்டது. படக்கதைகளின் வழியாக எனக்கு ஆதர்ஷ புருஷர்களாகத் திகழ்ந்தவர்கள் சிந்துபாத், இரும்புக் கை மாயாவி, ஜேம்ஸ்பாண்ட் 007, ஸ்பைடர் மேன், சுட்டிக் குரங்கு கப்பீஸ், பலமுக மன்னன் ஜோ, மந்திரவாதி மாண்ட்ரேக், துப்பறியும் சாம்பு (தினமணி கதிரில் வந்தது. சாம்பு என்பது ரொம்ப ரொம்ப இண்டெலிஜண்ட் ஆன ஒரு நாயின் பெயர்). நேரம் காலம் தெரியாமல் காமிக்ஸ் படக்கதையை படிக்க நண்பன் வீட்டுக்குச் சென்று வெகு நேரம் கழித்து திரும்பி வர என் அம்மா கன்னத்தை பிடித்து இழுத்து இழுத்து வழக்கமாக முதுகில் இரண்டு தோசை விடுவார்.

என் வாசிப்பின் இலையுதிர் காலம்

படக்கதைகள் என்னை விட்டு நழுவ நழுவ எழுத்துக் கதைகளை எழுத்துக் கூட்டி படிக்க ஆரம்பித்தது தினதந்தியில் வந்த கதைகளைத் தான். பாதி அர்த்தம் புரிந்து புரியாமலும் எதைப் பற்றி சொல்கிறார்கள் என்பதை அறிந்தும் அறியாமலும் தட்டுத் தடுமாறி படித்த கதைகள் ஏராளம். அதில் தினத்தந்தியில் 'பி.டி.சாமி'யின் பேய்க்கதைகள் தொடராக வந்துக் கொண்டிருந்த காலத்தில் திகிலோடு திக் திக் மனசோடு படிச்ச காலமும் உண்டு. சடாரென்று கதையில் யாரோ கதாநாயகியின் மார்பை அறுத்துக் கொண்டு சென்று விட தொலைந்த மார்பைத் தேடி கதாநாயகன் புறப்பட நானும் என் நண்பர்களும் கதாநாயகனோடு எங்கள் தேடலைத் தொடர்வோம்.

அடுத்து உருப்பட கைக்கொடுத்தது பாளையங்கோட்டையில் சேவியர்ஸ் பள்ளிக்கு அருகில் உள்ள மாவட்ட மைய நூலகம். அரும்பாடு பட்டு மெம்பர்ஷிப் வாங்கி உளவியல் முதல் அனடாமி வரை வசிக்கக் கற்றுக் கொடுத்தது அந்த நூலகம் தான். ஏன் எப்படி எதற்கு மாதிரியான அறிவியல் புத்தகங்கள் ஆனாலும் சரி கஜினி முகமதுவை அறிய வேண்டுமானாலும் சரி, புரியாமல் சுஜாதாவை என்னை படிக்க வைத்ததும் சரி அந்த நூலகத்துக்கே முக்கிய பங்கு. உருப்படியாக முதல் பக்கத்திலிருந்து கடைசிபக்கம் வரை படித்து முடித்து தமிழ்வாணனின் கதைகள் தான். அக்காலக்கட்டத்தில் எனக்கு தெரிந்த ஒரே பிரசுரம் 'மணிமேகலை பிரசுரம்' தான். கருப்புக் கண்ணாடியும், கருப்பு கௌபாய் தொப்பியும் இருந்தாலே தமிழ்வாணன் அங்கிருப்பார் எனத் தெரியும். அவர் துப்பறியும் பாங்கு, கதாபாத்திரங்களுக்கு அவர் பயன்படுத்தும் தமிழ்பெயர்கள் முதற்கொண்டு என்னை அந்த காலத்தில் கிறுக்கு பிடித்து அலையவைத்தது தமிழ்வாணன் கதைகள் தான்.

தமிழ்வாணன் முடிய மெதுவாக ராஜேஷ் குமார் பக்கம் ஒதுங்கினேன்.ராஜேஷ் குமாரின் வெறிப்பிடித்த வாசகனாகி விட அவர் க்ரைம் கதைகளை தேடி தேடி படித்த காலமும் உண்டு. பதின்ம வயதின் சூடு ஏற ஏற பட்டுக்கோட்டை பிரபாகரின் கதைகள் கிறங்கடித்தன. பரத்தும், சுசீலா போட்டு வரும் இரட்டை அர்த்த பனியனும், PKP-யின் பெண் வர்ணிப்பும் சூட்டை கிளப்பி விட்ட காலங்களும் உண்டு. இவற்றிலெல்லாம் கவனம் திரும்ப விடக்கூடாதென புரியாமல் படித்தது விவேகானந்தர், ராமகிருஷ்ணர், ஓசோ, ஜேகே. அத்துடன் பி.சி.கணேசன், மெர்வின் மாதிரியான டப்பா ஆசிரியர்களின் புத்தகங்களான 'தியானம் செய்வது எப்படி?', 'மெஸ்மெரிசத்தை கற்றுக் கொள்ளுங்கள்' போன்றவற்றை படித்து விட்டு பூட்டிய அறைக்குள் சாதகம் பண்ணி கண் அவிந்து கஷ்டப்பட்ட காலங்களும் உண்டு.

என் வாசிப்பின் கோடைக்காலம்

கல்லூரிக்குள் நுழைந்ததும் கவனம் எல்லாம் சினிமாவில் திரும்பியதால் மருந்துக்கு கூட புத்தகங்களை தொடவில்லை (படப்புத்தகங்களையும் சேர்த்து). கற்றுக் கொண்ட பாடங்களும் ரொம்ப கம்மி. அங்கு கற்றது உல்லாசம் ஆட்டம்பாட்டம் கொண்டாட்டம் மட்டுமே. வேலைத்தேடி சென்னைக்கு வந்தப்போது புதிய சூழலைக் கற்றுக் கொள்ளவே நேரம் சரியாக இருந்தது. வேலைதேடி தோல்விகளை மட்டுமே தழுவிய சமயத்தில் திடீரென ஆங்கிலத்தின் மேல் காதல் வந்து விட "பணக்காரர் ஆவது எப்படி?", "எதை வேண்டுமானாலும் அடைவது எப்படி?" போன்ற காப்மேயர் புத்தகங்கள் தான் தெய்வம். வார இதழ், நாளிதழ் என்பது அறவே அற்றுப் போனது.

வேலையும் கிடைத்து விட துறை சார்ந்த புத்தகங்களை மட்டுமே வெறி கொண்டு வாங்கி அடுக்கி வைத்தேன். அத்துடன் கண்ணில் பார்த்த தமிழ் புத்தகங்களை எல்லாம் வாங்கி அடுக்கினேன். ஆனால் இது வரை அதில் 10% கூட படித்து முடிக்கவில்லை. ஏறக்குறைய 8 வருடங்களுக்கு மேல் என் வாசிப்பு கோடைகாலமாக வறண்டே இருந்தது. இப்போது நினைத்தாலும் வீணாக்கிய அந்த காலங்களை நினைத்து துக்கம் தாளவில்லை. இழந்ததை எட்டிபிடிக்க முயலுவது மூடத்தனம் என மனதை தேற்றிக் கொள்ள வேண்டியிருக்கிறது.

என் வாசிப்பின் குளிர்காலம்

வேலை அமெரிக்காவுக்கு ட்ரான்ஸ்வராகி விட தனிமையை கொல்ல மெல்ல மெல்ல புத்தகத்தை கைப்பிடிக்க ஆரம்பித்தேன். ஆனால் இணையம் என்னை சுருட்டிக் கொண்டது.'இணையத்தில் தமிழ்' என்று வெறிக்கொண்ட மட்டும் இணையத்தில் என்னை தாறுமாறாக படிக்க வைத்தது. அப்படியே அமெரிக்கவில் கிடைக்கும் நூல்களையும் படிக்கலாமென நினைத்திருந்தேன்.

முதல் நாள் இரவு நியூயார்க் WTC-ஐ ஒட்டியிருந்த Border புத்தகக் கடையில் 'அமெரிக்காவின் சரித்திரம்' என்ற ஆங்கில புத்தகத்தை வாங்கி WTC-க்கு கீழேயே உட்கார்ந்து இருட்டும் வரை படித்து விட்டு அங்கு நடந்த ஜாஸ் மேடை நிகழ்ச்சியை பார்த்து விட்டு வர, மறுநாள் WTC மண்ணோடு மண்ணாகி விட அதிர்ச்சியில் உறைந்தேன். இதனால் நியூயார்க்கில் வேலைக்கு போகமுடியாமல் 15 நாட்களும் வீட்டில் முடங்கிக் கிடந்த நாட்கள் மறந்தே போய் விட்ட வாசிப்பை தூசி தட்ட வைத்தது.

மீண்டும் என் வாசிப்பின் வசந்தகாலம்

திருமணத்திற்கு பிறகு புதிய பரிமாணத்தில் வாசிக்க கற்றுக் கொண்டேன். அதாங்க அவங்க படிச்சி படிச்சி எனக்கு கதை சொல்லுவாங்க, கருத்துச் சொல்லுவாங்க. ஆனால் நான் புத்தகத்தை தொட்டு நானே வாசிக்க மாட்டேன். என்னுடைய வாய்ஸ் ரீடராக இருந்து வாசிப்பின் புதிய பரிமாணத்தை காட்ட மீண்டும் வாசிப்பு பழக்கம் துளிர் விட ஆரம்பித்தது. என் மனைவி தி.ஜானகிராமனின் மோகமுள்ளை வாசித்து சொல்லிக் கொண்டிருக்க பாதியிலேயே ஊருக்கு போய் விட புத்தகத்தை நானே வாசிக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டேன்.

அத்துடன் தமிழ்மணமும் சேர்ந்துக் கொள்ள இவ்வளவு மேட்டர் இருக்குதா என்ற ஆச்சரியத்துடன் நிறைய படிக்க ஆரம்பித்திருக்கிறேன். வாசிப்பு பழத்தை தின்று கொட்டை போட்டும் இன்னமும் தின்று கொண்டிருக்கும் ஜெயந்தி சங்கர், ஈழநாதன் முதலானோர் உள்ள சிங்கப்பூர் இணைய நண்பர்கள் குழு அறிமுகம் கிடைத்ததும் நிறைய படிக்கும் உத்வேகத்தை கொடுத்தது. சிங்கப்பூர் நூலகம் வஞ்சகமில்லாமல் தமிழ் புத்தகங்களையும், உலகப்படங்களையும் அள்ளி விட படிப்புக்கு பஞ்சமில்லாமல் போய் கொண்டிருக்கிறது. தமிழ்மண புலிகளை பார்த்து இந்த பூனையும் சூடு போட்டுக் கொண்டது.

சரி இப்போ வழக்காமான முய்முய் விளையாட்டின் பாரம்பரிய முறைக்கு வருகிறேன்.

என்னிடம் இருக்கும் புத்தகங்கள் - இந்தியாவில் ஏறக்குறைய 300 புத்தகங்கள் (மனைவி சீதனமாக அள்ளி வந்த அவருடைய புத்தகங்களையும் சேர்த்து) , சிங்கப்பூரில் 30 புத்தகங்கள்

அண்மையில் படித்த தமிழ் புத்தகங்கள்:

1. எஸ்.ராவின் துணையெழுத்து
2. எஸ்.ராவின் உலக சினிமா
3 பாஸ்கர் சக்தியின் 'பழுப்பு நிறப்புகைப்படம்'
4. ஜெயகாந்தன் சிறுகதை தொகுப்பு (இன்னும் படித்துக் கொண்டிருக்கிறேன்)
5. புதுமைப்பித்தனின் சிறுகதைகள்
6. கல்கியின் சிறுகதைகள்
7. மேக்ஸீம் கார்க்கியின் தாய்
8. பட்டாம்பூச்சி விற்பவன் - நா,முத்துக்குமார்
9. ஜனகனமன - மாலன்
10. சொல்லாத சொல் - மாலன்

படித்துக் கொண்டிருக்கும் புத்தகங்கள்

1. கடவு - திலீப் குமார்
2. எஸ்.ராவின் தாவரங்களின் உரையாடல்

அண்மையில் படித்த ஆங்கில புத்தகங்கள் (மொத்தமாக சொல்லவேண்டுமானால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட இரஷ்ய இலக்கியங்கள்)

1. Short stories - Leo Tolstoy
2. Anton chekov short stories
3. The Double - Fydor dostoyevsky (படித்துக் கொண்டிருக்கிறேன்)
4. Little prince - Antonie de saint exupery
5. R.K.Narayanan - Malgudi Days
6. Aeosop's Fables

பட்டியலில் படிக்க காத்திருக்கும் புத்தகங்கள்:

1. Anna karenina & war and peace- Leo Tolstoy
2. Crime and Punishment, The idiot, The possessed - Fydor dostoyevsky
3. Selected short stories - Maxim Gorky
4. One hundred year of solitude - Marquez
5. எஸ்.ராவின் உபபாண்டவம்
6. புயலிலே ஒரு தோணி - பா.சிங்காரம்
7. தேடி - நா. கோவிந்தசாமி

சிங்கப்பூரில் புத்தகங்களை தாராளமாக அள்ளி வழங்கி இன்னொரு நூலகமாக நடமாடிக் கொண்டிருக்கும் சிங்கப்பூர் அன்புக்கு இந்த நேரத்தில் நன்றி சொல்லிக் கொள்கிறேன்.

இந்த விளையாட்டு தொடர்ச்சியாக எனக்கு தெரிஞ்ச அல்வாசிட்டிக்காரங்களையே கூப்பிடுகிறேன்.

1. அல்வாசிட்டி.சங்கர்
2. அல்வாசிட்டி.சம்மி
3. நவன் பகவதி
4. ரோசா வசந்த்
5. கே.ஜே.ரமேஷ்

சரிங்க, நிறைய எழுது எனக்கே அறுக்குது. அப்புறம் பார்க்கலாம்.

இந்த பதிவின் வாக்கு எண்ணிக்கை: . பக்கத்திலுள்ள ஸ்டாரை மவுசால் போட்டுத் தாக்கினால் எனக்கு மவுசு ஏறும். நன்றி:-)

உங்கள் கருத்துக்களை இட

திருப்பி தாக்கியவர்கள்:
இப்போது தான் கவனித்தேன்.

பத்மா அர்விந்த அவர்களும் என்னை புத்தக பிடிச்சி விளையாட்டுக்கு அழைத்திருந்தார். அவர்களுக்கு மிக்க நன்றி.
 
நல்ல பதிவு விஜய்
பட்டுக்கோட்டைப் பிரபாகரின் "தொட்டால் தொடரும்" படித்தது உண்டா?
எஸ்.ராவின் "துணை எழுத்து" உங்களை பாதித்ததா?
நன்றி
மயிலாடுதுறை சிவா...
 
vijay,
nanRi :)
arumaiyAga (nErmaiyAgavum !!!) ezuthiyirukkiRIrkaL.
suvArasiyamAka irunthathu.
sila puththakangkaLai enakku aRimukam seythuLLIrkaL.
nanRi !!!
 
hello Vijay,

good post.You took me back to my golden days. I use to read whatever books i landed on.Of course wasted a few years in just reading mills and boons and harlequin romance.I hardly find time to read now...have you tried?? Lloyd.c. Douglas (Citadel is my favorite)and Nevil Shute(Ruined city,A town Like Alice)

Thanks
Radha Sriram
 
//பட்டாம்பூச்சி விற்பவன் - நா,முத்துக்குமார்//

ஆஹா! நீ நம்மாளுய்யா!!
 
vijay
I was working at wall street then! I used to travel in NJTransit and take path.
 
விஜய், பதிவு போட்டாச்சு. http://tamil.navakrish.com/?p=133

--
நவன் பகவதி
 
மணிக்கூண்டு சிவா,

//பட்டுக்கோட்டைப் பிரபாகரின் "தொட்டால் தொடரும்" படித்தது உண்டா?
எஸ்.ராவின் "துணை எழுத்து" உங்களை பாதித்ததா?//

பி.கே.பி படித்து ரொம்ப நாள் ஆகிவிட்டது. அது என்னோட பதின்ம வயதில் தான் என்று சொல்ல வேண்டும். இப்போது இல்லை.

எஸ்.ராவின் எழுத்தை முதன் முதலில் படித்தது துணையெழுத்தில் தான். பாதிக்காமல் இருக்குமா. அதற்கே தனிப்பதிவு போட வேண்டும்.

இன்னும் ஆழமாக பாதித்த புத்தகங்களைப் பற்றி எழுதியிருக்கலாம். பதிவு நீளம் தான் படிப்பவரின் பொறுமையை சோதிக்கும் என்பதால் அத்தோடு நிறுத்திவிட்டேன்.

நன்றி.
 
பின்னூட்டியதற்கு நன்றி பாலா.

நன்றி ராதா ஸ்ரீராம்,

// hardly find time to read now...have you tried?? Lloyd.c. Douglas (Citadel is my favorite)and Nevil Shute(Ruined city,A town Like Alice)//

ஆங்கில எழுத்துக்களை இப்போது தான் படிக்க ஆரம்பித்திருக்கிறேன். இருந்தாலும் நீங்கள் சொன்ன ஆசிரியரைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். புத்தக அறிமுகத்திற்கு நன்றி. நேரம் கிடைக்கும் போது அதையும் படித்து விடலாம்.


//I hardly find time to read now...//

நேரம் கிடைக்கும் போது சரியான நூல் அறிமுகம் கிடைக்காமல் எதுவுமே படிக்க கிடைக்காது. படிக்க கிடைக்கும் போது நேரம் கிடைக்காது.
 
////பட்டாம்பூச்சி விற்பவன் - நா,முத்துக்குமார்//

ஆஹா! நீ நம்மாளுய்யா!! //

கவிதை என்றாலே 10 அடி தூரம் ஓடும் எனக்கு முத்துகுமார் எழுதிய கவிதைகள் ரொம்ப simplified -ஆக இருந்ததால் ரசித்துப் படித்தேன். அதிலும் 'ங்கோத்தா' என்ற விளித்து ஒரு கவிதை கூட சொல்லியிருப்பார். அது வெகு இயல்பாக ஒரு நண்பனிடன் பேசுவது போல இருந்ததால் பிடித்து போய்விட்டது.
 
காலங்களில் அவள் வசந்தம் என்று வசந்தத்தை (புத்தக)வாசிப்புக்கும் பொருத்தியது அருமையான, நயமான வெளிப்பாடு.

நானும் 'Handle with care' பிரயோகத்தையெல்லாம் சுசீலாவிடமிருந்து தெரிந்துகொண்டதுதான்.

நீங்க நிறைய ரஷ்ய இலக்கியங்கள் படிக்கிறீங்க போல. கண் தெரியாத இசைஞன் கிடைத்தால் படியுங்கள். அதே போல கன்னி நிலம் (virgin land up turned), அவன் விதி இதெல்லாம் அருமையான புத்தகங்கள். கன்னிநிலத்தை எழுதிய ஷோலகோவ் ஒரு நோபல் பரிசும், லெனின் பரிசும் வாங்கியவர் அவரது தான் அமைதியாக ஓடுகிறது நான் படிக்கவேண்டும் என்று நினைத்திருப்பது. கன்னிநிலம் சொத்துக்கள் அரசுடமையாக்கப்பட்ட சோவியத் காலகட்டத்தில் நிகழும். சொத்தின் ஆளுமையை நமக்குள் இருந்து அசைத்து எடுத்து நம்முன் காட்டும். நம் மதங்களை நம்பி மேலுக்கு நாமெல்லாம் எப்படி சொத்தின் மீது பற்று குறைந்தவர்களாக எண்ணிக்கொள்கிறோம் என்று நமக்கு புரியும்.

ஆமாம், நீங்கள் திருநெல்வேலிகாரர், ஆனால் வண்ணதாசன், வண்ணநிலவன் இவர்களைக் காணோம். கலாப்பிரியாவும் (கவிதை) அருமையானவர். ஆனால் தயவு செய்து வண்ணதாசன் சிறுகதைகள் கிடைத்தால் (வாசிக்கவில்லையானால்) வாசியுங்கள். என்னை விட நீங்கள் மண்ணின் மணத்தால் அதிகம் அனுபவிக்கலாம்.

Little prince எப்படி? எனக்கு மிகவும் பிடித்த புத்தகம். அதை ஒரு மாதிரி நாடகமாக IISc யில் போட்டோம்.

நான் சிங்காரத்தின் புத்தகத்தைத்தான் படிக்கவேண்டும் என்று நினைத்திருந்தேன். உங்கள் பதிவு நினைவூட்டியது. நன்றிகள்
 
நன்றி தங்கமணி.

நான் பதிவில் சொன்னபடி இறந்தகாலத்தில் வாசிப்பென்று ஒன்றும் பெரிதாக இல்லை.நூல் ஆசிரியர்கள் அறிமுகமும் மிக மிக குறைவு. இப்போது தான் ஒரு கூட்டம் சேர சேர பல அறிமுகங்கள் தெரிகின்றன. வண்ணதாசன் சிறுகதைகளை சிங்கப்பூர் நூலகத்தில் எடுத்து குறிப்பிட்ட நாளில் படித்து முடிக்காமல் அபராதம் கட்டியது தான் மிச்சம். திரும்ப எடுக்கலாம் என்று பார்த்தால் இன்று வரை என் கையில் கிடைக்கவில்லை.

மானசஜென் இரண்டு கலாபிரியா புத்தகங்களை பரிச்சளித்திருந்தார். என் கையில் இருக்கிறது. படிக்க வேண்டும்.

குட்டி இளவரசன் ரொம்ப பிடித்து போய் விட்டது. அதுவும் நீங்கள் மானசஜென் ரமேஷின் பதிவில் பின்னூட்டத்தில் நீங்கள் கொடுத்த இணைய முகவரியின் வழியாக தான் படித்தேன். அதை மென்புத்தகமாக்கி வைத்துக் கொண்டேன்.

ருஷ்ய இலக்கியங்களை இப்போது தான் படிக்க ஆரம்பித்தேன். முதலில் செகாவின் தமிழ்மொழிப்பெயர்ப்பு கதைகளை படித்தவுடன் பிடித்து எல்லோருடைய படைப்புகளையும் இப்போது தான் வாசிக்க ஆரம்பித்துள்ளேன். 19,20-ம் நூற்றாண்டின் வாக்கில் எழுதப்பட்ட செகாவின் கதைகள் இன்றைய காலக்கட்டத்திலும் பொருந்துவதை பார்க்க மிக ஆச்சரியமாக இருந்தது. சில ரஷ்ய நூல் அறிமுகத்துக்கு நன்றி.
 
நா. முத்துக்குமாரின் நியூட்டனின் மூன்றாவது விதி -கவிதை தொகுப்பை படியுங்கள்.

நன்றாக இருக்கும்.
 
//நா. முத்துக்குமாரின் நியூட்டனின் மூன்றாவது விதி -கவிதை தொகுப்பை படியுங்கள்.//

புத்தக அறிமுகத்திற்கு நன்றி ராஜ்குமார்.
 
//விஜய், பதிவு போட்டாச்சு. http://tamil.navakrish.com/?p=133

--
நவன் பகவதி
//

உங்க புண்ணியத்தாலே நாலஞ்சி புத்தகத்தோட அறிமுகம் கிடைத்தது. நன்றி தலீவா. பதிவு அருமை.
 
//தேன் துளி said...
vijay
I was working at wall street then! I used to travel in NJTransit and take path.
//

தேன் துளி,

என்னுடைய parent company வால்ஸ்ட்ரீட்டில் NYSE-க்கு எதிராக இருந்தது. என்னுடைய மேலதிகாரியை காண வரும்போதெல்லாம் 30வது மாடியிலிருந்து NYSE பார்த்து உணர்ச்சி வயப்படுவது உண்டு. வரலாற்று பெருமை வாய்ந்த பணக்கார வீதியான வால் ஸ்ட்ரீட்டுக்கு அடிக்கடி வந்த காலங்களும் உண்டு.

என்னுடைய க்ளையண்ட் சைட் நியூயார்க் ப்ரூக்ளீனில் (Brooklyn) இருந்தது. அங்கு தான் என்னுடைய அலுவலக ஜாகையும். காலையில் 7:30-க்கு முன் NJT-ஐ பிடித்தால் நெவார்க்கில் இறங்கி PATH -ட்ரெய்னை பிடித்து WTC போய் அங்கிருந்து A அல்லது C அல்லது Q சப்வேயில் பயணித்து ப்ரூக்ளினில் இறங்கும் போது காலை 9:15 ஆகிவிடும். விதம் விதமான மனிதர்களை படித்துக் கொண்டே செய்யும் அந்த பயணம் வாழ்க்கையில் என்றுமே மறக்காது.

முதல் விமானம் WTC-ல் முட்டிய நேரத்தில் நான் அங்கு நின்றிருக்க எதோ விபத்து என்று தெரிந்து என்ன விபத்து என்று தெரியாமல் இருக்க, என்ன விபத்து என்பதை அறிய ஒரு உந்துதலில் எஸ்களேட்டரை பிடித்து வெளியே வர, நேரம் ஆகிவிட்டது என்று மயிரிழையில் எடுத்த முடிவால், அலுவலகம் சென்றடைய, இரண்டாம் விமானம் மோத, கொஞ்ச நேரத்தில் என்னுடைய அலுவலக சீட்டிலிருந்து அந்த இரட்டை கோபுரம் இடிந்து விழுவதை என் கண்ணால் கண்டு அதிர்ச்சியில் உறைந்து நின்றேன். இதை ஒரு தனிப்பதிவில் பிறகு எழுதுகிறேன்.
 
Thanks moorthy
 
அல்வாவுக்கும், மற்றவர்களுக்கும் நான் பரிந்துரைப்பது,

1. 18ஆவது அட்சக்கோடு - அசோகமித்திரன். ஹைதராபாத்தின் 1925 - 1950 காலகட்டத்தை பிண்ணனியாகக் கொண்ட நாவல்.
2. சின்ன நூல்கண்டா நம்மைச் சிறைப்படுத்துவது - சிவசங்கரி.
3. இது ராஜபாட்டை அல்ல - நடிகர் சிவக்குமார்.
4. அந்த உலகத்தில் இந்த மனிதர்கள் - மாத்தளை சோமு. இலங்கையின் ரத்தினச் சுரங்கங்களில் அல்லல்பட்ட தமிழர்களின் கதை.
5. தலைகீழ் விகிதங்கள் - நாஞ்சில் நாடன் - தங்கர் பச்சானால் சின்னாபின்னமாக்கப்பட்ட 'சொல்ல மறந்த கதையின்' மூலம்.
6. மாநி - ஹெப்ஸிபா ஜேசுதாசன். பர்மாவில் சுதந்திரத்திற்கு முன்னால் இருந்த குமரியைச் சேர்ந்த வனக்கண்காணிப்பாளரின் குடும்பத்தைப் பற்றிய கதை.
7. எட்டுத் திக்கும் மத யானை - நாஞ்சில் நாடன் . குமரியில் தொடங்கி மும்பையில் முடியும் racy thriller.
 
நன்றி வெற்றி. வேறுபட்ட வித்தியாசமான புத்தக பட்டியல்

சிவக்குமாரின் 'இது ராஜபாட்டை அல்ல' படித்திருக்கிறேன். ஆனால் முழுவதும் படித்து முடிக்கவில்லை. பரிந்துரைத்த மற்றவைகளை தேடிப்படிக்கிறேன்.
 
//5. தலைகீழ் விகிதங்கள் - நாஞ்சில் நாடன் - தங்கர் பச்சானால் சின்னாபின்னமாக்கப்பட்ட 'சொல்ல மறந்த கதையின்' மூலம்.
//

கதைக்கும் படமாக்கப்பட்டதிற்கும் மிகச்சில வித்தியாசங்களே எனக்கு தெரிந்தது, மூன்று மணி நேரத்தில் எடுக்க வேண்டுமென்று பல காட்சிகள் சுருக்கப்பட்டிருந்தன, பலருக்கு நாவலிற்கும் படத்திற்கும் வித்தியாசம் நிறைய தெரிவதற்க்கான காரணம், நாவலில் கதைக்களம் தென் மாவட்டம், பேச்சு மொழி தென் மாவட்டத்தை ஒத்திருக்கும், படத்தில் கதைக்களம் கடலூரைச்சுற்றி... பேச்சு மொழியும் கடலூர் வட்டார மொழி... நான் முதலில் படம் பார்த்துவிட்டு பிறகுதான் கதை படித்தேன்
 
பொதுவாக நாவலை திரைப்படம் ஆக்குவது கொஞ்சம் ரிஸ்கான வேலை. 3 மணி நேரத்திற்குள் கதை சுருக்குவது மிக மிக கடினம். அதுவும் தழுவலாக எடுக்காமல் நாவலையே படமாக்கும் போது புத்தகத்தில் சொல்லும் எல்லாவற்றையும் கொண்டு வருவது முடியாத காரியம.

புத்தகத்தில் வரும் வர்ணைகள் உங்கள் கற்பனைக்கு விடப்படுகிறது. சுதந்திரம் உங்களிடம். அதுவே சினிமா என்று வரும் போது கதையின் ஆசிரியரின் வர்ணிப்பு இருந்தாலும் அது சிதைக்கப் படமால் கேரக்டர் எஸ்டாபிளிஸ்மெண்டில் கொண்டு வருவது முழுக்க முழுக்க இயக்குநரின் கையிலேயே உள்ளது.உங்கள் கற்பனை உருவத்துக்கும் திரை உருவத்துக்கும் வேறுபாடு நிகழும் போது நம்மால் ஏற்றுக் கொள்ள முடிவதில்லை.

மகேந்திரன் மாதிரி இயக்குநர்கள் இந்த பிரச்சனையே வேண்டாமென்று மூலக்கதையை எடுத்து தன் இஸ்டத்துக்கு மாற்றி படம் எடுத்திருக்கிறார்கள்.இங்கு இயக்குநருக்கும் முழு சுதந்திரம் கிடைக்கிறது.
 

உங்கள் கருத்துக்களை இட


<< திரும்ப முன் பக்கத்துக்கு போ

பி.எஸ்.என்.எல்லின் ஐ.எஸ்.டி கட்டணங்கள் குறைப்பு

Difficulty in reading this post due to font issues? Click here for a PDF copy. Works best if you right-click the link and select 'Save target as...'
இந்த பதிவை போட்டுத் தாக்கியவர் : Vijayakumar
விகடன் ஆன்லைனில் வந்திருந்த செய்தி:

ஈரோடு ஜூன் 8:& வெளிநாடுகளுக்கான ஐ.எஸ்.டி கட்டணங்களை ஜூன் 1 ஆம் தேதி முதல் பி.எஸ்.என்.எல் குறைத்துள்ளது.

4 வினாடிகளுக்கு 18 ரூபாயாக இருந்த ஐ.எஸ்.டி. கட்டணம், 6 வினாடிகளுக்கு 12 ரூபாயாகக் குறைக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டணக் குறைப்பு அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, ஐரோப்பா, சிங்கப்பூர், தாய்லாந்து, மலேசியா, இந்தோனேஷியா, ஹாங்காங் மற்றும் ஸ்ரீலங்காவுக்கு செல்லுபடியாகாது.

இவை தவிர உலகெங்கும் உள்ள நாடுகளுக்கு இந்த குறைந்த கட்டண விகிதத்தில் பேசலாம். இத்தகவலை பி.எஸ்.என்.எல் கோவை பொது மேலாளர் நடராஜன் தெரிவித்தார்.

எல்லாம் சரி தானுங்கோ

ஆனால்

"4 வினாடிகளுக்கு 18 ரூபாயாக இருந்த ஐ.எஸ்.டி. கட்டணம், 6 வினாடிகளுக்கு 12 ரூபாயாகக் குறைக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டணக் குறைப்பு அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, ஐரோப்பா, சிங்கப்பூர், தாய்லாந்து, மலேசியா, இந்தோனேஷியா, ஹாங்காங் மற்றும் ஸ்ரீலங்காவுக்கு செல்லுபடியாகாது. "

அப்புறம் இன்னாத்துக்கு இந்த கட்டண குறைவு. ஒரு எழவும் புரியல.

இந்த பதிவின் வாக்கு எண்ணிக்கை: . பக்கத்திலுள்ள ஸ்டாரை மவுசால் போட்டுத் தாக்கினால் எனக்கு மவுசு ஏறும். நன்றி:-)

உங்கள் கருத்துக்களை இட

திருப்பி தாக்கியவர்கள்:
ம்ம்ம்ம்க்க்கும்.. கவர்மெண்ட் ஆபிஸ் சொல்ற ரூல்ஸ் எல்லாம் புரியுமா? போய் போனை போடுங்கப்பா.
 
சின்ன திருத்தம்

//கவர்மெண்ட் ஆபிஸ் // இல்ல அது பி.எஸ்.என்.எல் ஆபிஸ்
 
விசயகுமாரூ... ஆமா பி.எஸ்.என்.எல்-க்கு என்னாதுக்கு போன்.. உங்க வீட்டு போடு.. உங்க நைனா தானே கண்ணு ஆபிசரூ.. அவருகிட்டே கேளு..

அப்புறம் அந்த நாடுகளை விட அரபு நாடுகளில் இந்தியர்கள் நிறைய பணம் கூடுத்து போன் பண்ணுகிறார்கள்.. அவர்களுக்கு இது வசதி.. சிங்கப்பூரிலிருந்து இப்போ இந்தியாவிற்கு பேச 10 C தான்.. அதே மாதிரி தான் அமெரிக்காவிலிருந்து பேசவும்.. ஆனா அரபு நாடுகளில் கட்டணம் கூட..
 
இன்னாபா இப்படி சொல்லிட்டே. ஊட்லேயிருந்து சிங்கப்பூருக்கு அம்மணியும்,அம்மாவும்,அப்பாவும் கால் பண்ணுவாங்க. அடிக்கடி அவங்க வேற பேசுவாங்க.

அதுக்கு தான் ஐ.எஸ்.டி கட்டணம் குறையுதுன்னு சொன்னவுடனே சந்தோஷப்பட்டேன்பா. திடுதிப்புன்னு சில நாட்டுக்கு தான்னு சொன்ன எப்படி? அதுக்கு பதிலா "சில நாடுகளுக்கு ஐ.எஸ்.டி கட்டணம் குறையுதுன்னு" சொன்ன ஏமாற்றம் இருக்காதுல்ல...
 
annaci yepdi tamil-la post panrathu.
 

உங்கள் கருத்துக்களை இட


<< திரும்ப முன் பக்கத்துக்கு போ

-ல் போட்டுத் தாக்கியது

அலுவலக தலைகளும் பிரசவங்களும்

Difficulty in reading this post due to font issues? Click here for a PDF copy. Works best if you right-click the link and select 'Save target as...'
இந்த பதிவை போட்டுத் தாக்கியவர் : Vijayakumar
Project Manager : ஒன்பது பெண்கள் ஒரு குழந்தையை ஒரு மாதத்தில் பிரசவிப்பார்கள் என்று நம்புவன்.

Developer : ஒரு குழந்தையை பிரசவிக்க 18 மாதங்கள் ஆகலாம் என நினைப்பவன்.

Onsite Coordinator: ஒரு பெண் 9 பிள்ளைகளை ஒரே மாதத்தில் பிரசவிப்பாள் என்று நம்புவன்.

Client : ஏன் அவனுக்கு குழந்தை வேண்டும் என்று தெரியாமல் குழந்தையை கேட்பவன்.

Marketing Manager: ஆணோ பெண்ணோ இல்லாமல் அவனால் ஒரு குழந்தையை டெலிவர் பண்ண முடியுமென நினைப்பவன்.

Resource Optimization Team : ஆணோ பெண்ணோ தேவையில்லை. யாருமே இல்லாமல் (With zero resources) ஒரு குழந்தையை உருவாக்க முடியும்.

Document Team: குழந்தை டெலிவர் ஆனதா இல்லையா என்ற கவலையில்லை. 9 மாதத்தில் அதை ஆவணப்படுத்த வேண்டும். அவ்வளவு தான்.

Quality Auditor: குழந்தை பிறக்கும் முறையில் (PROCESS) எப்போதுமே திருப்தி இல்லாதவர் (the person who is never happy with the PROCESS to produce a baby)

குறிப்பு: கணனி துறையில் இருக்கும் யாவருக்கும் இந்த கருத்துக்கள் மின்னஞ்சலில் வந்து போய் படித்து போர் அடித்திருக்கும். கொஞ்சம் அரைகுறை தமிழில் மொழிப்பெயர்த்ததில் இந்த பதிவு. ஆராய்ச்சி பண்ணாமல் ஜாலியாக படித்தால் அலுவலக தலைகளின் எண்ண ஓட்டம் 100% இதை ஒட்டி தான் இருக்கிறது. அனுபவிங்க!!... ஆராயாதீங்க!!

இந்த பதிவின் வாக்கு எண்ணிக்கை: . பக்கத்திலுள்ள ஸ்டாரை மவுசால் போட்டுத் தாக்கினால் எனக்கு மவுசு ஏறும். நன்றி:-)

உங்கள் கருத்துக்களை இட

திருப்பி தாக்கியவர்கள்:
Enna, Pammal K.Sammandam
Stylaaa....

anyway nice...
 
முந்தியே படிச்சதுதான்!!
ஆனாலும் :-))))))))))))))
 
This comment has been removed by a blog administrator.
 
This comment has been removed by a blog administrator.
 
இது என்ன சம்பந்தமில்லாத பின்னூட்டம்? நாகராஜன் செய்தது பெருமைக்குரியதுதான். அதற்காக? வேறு வேலை இல்லையா இவர்களுக்கு? சம்பந்தப்பட்ட நாகராஜனே விரும்ப மாட்டார் இதை என நினைக்கிறேன்.
சங்கிலித் தொடர் கடிதங்கள் ரேஞ்சுக்கு இது என்ன அசட்டுத்தனம்? அந்த 15 பேர்கள் இவ்வாறு செய்து நேரத்தை வீணாக்குவதை விட நாகராஜனை பின்பற்றி முன்னுன்க்கு வரும் வழியைப் பார்ப்பது நலம்.

அன்புட,
டோண்டு ராகவன்
ப்ளாக்கர் எண் 4800161
(எலிக்குட்டியைப் ப்ளாக்கர் ஐ.டி.யின் மேல் வைத்து கீழே அதே எண் தெரிகிறதா என்று பார்க்கவும்)
 
டோண்டு அய்யா, நானும் இப்போது தான் அவர்களின் பின்னூட்டத்தை கவனித்து படித்தேன். சிரிப்பு தான் வருகிறது. முன்னாளில் நாகராஜன் பற்றிய பதிவுக்கு இங்கு பின்னூட்டமென நினைத்தேன். நல்லவேளை எனக்கு தெரிந்து அவர்கள் இந்த அசட்டு வேலையை வேறு எந்த வலைப்பதிவிலும் காணவில்லை. அப்படியிட்டால் நான் முதலில் அவர்கள் பின்னூட்டத்தை அழித்து எதிர்ப்பை தெரிவிப்பேன்.
 
Don't be glad too early. They have already started. Please see http://alaiyosai.blogspot.com/2005/05/blog-post_13.html.
This is but one example. Mr. Nagarajan seems to have friends, who are bent upon embarrassing him. With friends like them he needs no enemies.
Regards,
டோண்டு ராகவன்
ப்ளாக்கர் எண் 4800161
(எலிக்குட்டியைப் ப்ளாக்கர் ஐ.டி.யின் மேல் வைத்து கீழே அதே எண் தெரிகிறதா என்று பார்க்கவும்)
 
Just now I saw same comment in 'Endrendrum anbudan Bala' blog also.
 

உங்கள் கருத்துக்களை இட


<< திரும்ப முன் பக்கத்துக்கு போ

-ல் போட்டுத் தாக்கியது

நடிகை நயந்தாராவின் அங்கங்கள் படும்பாடு

Difficulty in reading this post due to font issues? Click here for a PDF copy. Works best if you right-click the link and select 'Save target as...'
இந்த பதிவை போட்டுத் தாக்கியவர் : Vijayakumar
குமுதம் என்பது ஒரு மூன்றாம் தர மஞ்சள் பத்திரிக்கையை விட கேவலமானது என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்து வருகிறது. சினிமா நடிகைகளை படம் எடுக்கும் போட்டோகிராபர்களையும், அதற்கு கமெண்ட் எழுதுபவர்களையும், சினிமா பத்திக்காக கான்சப்ட் சொல்லும் மரமண்டைகளையும் எவ்வளவு திறமையிருக்கிறது என்பதை சோதிப்பதை விட அவர்களுக்கு எவ்வளவு வக்கிர புத்தியிருக்கிறது என்பதை பரிசோதித்து தான் குமுதம் என்ற மஞ்சள் பத்திரிக்கை ஆட்களை வேலைக்கு எடுப்பார்கள் என்று நினைக்கிறேன். இணையத்தில் பிராக்ஸி பிரச்சனையிருந்ததால் இவ்வளவு நாள் வரை குமுதம் படிக்க முடியாமல் இருந்தது. மேலும் என்னுடைய புதிய அறைவாசி 13/6/2005 என்று தேதியிட்ட குமுதத்தை போன ஞாயிற்றுக்கிழமை வாங்கி வந்தார்.

நெடுநாள் கழித்து குமுதத்தின் Hard copy பார்த்ததும் மகிழ்ச்சியில் திருப்பினால் நடிகை நயந்தாராவை வைத்து வக்கிரம் குமுதத்தின் சில பக்கங்களில் தலைவிரித்து ஆடிக் கொண்டிருந்தது. ஒரு வழியாக பிராக்ஸியை சரி பண்ணி குமுதம் ஆன்லைனில் தேடினால் இதில் ஒன்று கூட ஆன்லைனில் வரவில்லை.ஆன்லைனில் ஓசியில் படிப்பதால் நிறைய சென்ஸார் பண்ணியிருக்கிறார்கள். பரவாயில்லை. குமுதம் hard copy படிக்காதவர்களுக்காவும், உங்கள் கருத்துக்காகவும் அந்த கொடுமைகளை குமுதத்திலிருந்து படம் பிடித்து இந்த பதிவில் இடுகிறேன் (குமுதம், இந்த கண்றாவிகளுக்கும் காப்பிரைட் எதாவது வாங்கி வச்சிருக்கீங்களா? என்ன?).

முதல் படம் 'பிப்ரவரி 14' என்ற விஜய் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் நயந்தாரா கலந்துக் கொண்ட நிகழ்ச்சியைப் பற்றியது. அதில் ரேணுகா மேனன் என்ற புது நடிகையும், நயந்தாராவும் அமர்ந்திருக்கும் அந்த படத்தில் ரேணுகா மேனன் தற்செயலாக எதையோ பார்ப்பதை நயந்தாராவின் மார்பை பார்ப்பது போல ஃபோகஸ் செய்யப்பட்டு அந்த புகைப்படத்திற்கு "எவ்வளவு பெரிசு... நயந்தாராவோட வாட்சு" என்று ரேணுகா மேனன் நினைப்பதாக கமெண்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஒரு வேளை எனக்கு தான் அந்த கமெண்ட்டை படிப்பதில் பிரச்சனையோ என்று நினைத்தால் என் நண்பரும் இதையே சுட்டிக் காட்டி சாடினார். வக்கிர புத்தி என் பார்வையிலா? இல்லை குமுதத்திலா? நீங்களே சொல்லுங்கள்.

அடுத்த பகுதி, எஸ்.ஜே.சூர்யாவும், நயந்தாராவும் நடிக்கும் "கள்வனின் காதலி" படத்தின் சூட்டிங் இடைவேளையில் சூர்யாவுடன் நடக்கும் ஒரு பேட்டி போல வந்துள்ளது.

இது வக்கிரத்தின் உச்சக்கட்டம். அந்த படத்தில் வக்கிர நடிகர் எஸ்.ஜே.சூர்யா நயந்தார கழுத்தில் போட்டிருக்கும் டாலரை கேட்கிறராம். இது கட்டுரை படிச்சி முடிச்ச பிறகு தான் அந்த கட்டுரையின் தலைப்பும் புரியும்,படமும் புரியும். அதற்கு தலைப்பு "புடிச்சிருக்குன்னா வச்சிக்குங்க".

ஏற்கனவே நயந்தாராவின் உதட்டை கடிக்கும் சிம்பு படம் பற்றி ஏகப்பட்ட சர்ச்சைகள் கிளம்பின.அந்த செய்திகளுக்கு காஞ்சி பிலிம்ஸ் மற்றும் இட்லி பதிவை பாருங்கள்.

கொடுமை கொடுமை நடிகையாய் இருத்தல் கொடுமை. நடிகையின் அங்கங்கள் பொறம்போக்கு நிலமாக நினைக்கும் அவலம் என்று மறையுமோ?

விற்பனையை கூட்டுவதற்காக இந்த மாதிரி ஆபாச படங்களை வெளியிடும் பத்திரிக்கைகளை என்ன சொல்வதென்றே தெரியவில்லை. இதற்கு காரணமானவர்களுக்கு ரோசாவசந்த் அறிவுறுத்தும் ட்ரீமெண்ட் தான் வலியுறுத்துவேன்.

இந்த பதிவின் வாக்கு எண்ணிக்கை: . பக்கத்திலுள்ள ஸ்டாரை மவுசால் போட்டுத் தாக்கினால் எனக்கு மவுசு ஏறும். நன்றி:-)

உங்கள் கருத்துக்களை இட

திருப்பி தாக்கியவர்கள்:
yelei....nee kumdam la sidela vela paakurio...ippadi ellam eluthi engala kumudam boook vaanga vachuduva pola irukke....unakku naanga kumudam book padikurathu pudikalayaakkumm....
 
ஐயய்யோ அசிங்கமெண்டு சொல்லிக்கொண்டு நீங்கள் வேற அதே படங்களை ஏன் போட்டுத் தாக்கியிருக்கிறியள்??
 
படிக்கும் மக்களே இந்த மாதிரி படங்களை போட்டதற்கு மன்னிக்க வேண்டும். சுட்டி கொடுக்க நினைத்தேன். ஆன்லைனில் இது இல்லை. வெறும் வார்த்தையில் சொன்னால் நான் சொல்ல வந்தது புரியாது என்பதால் தவிர்க்க முடியாமல் இந்த படம் போடப்பட்டது. வெகுஜென பத்திரிக்கை வளர்க்கும் வக்கிரங்களை நினைத்தால் கவலையாக இருக்கிறது. பதிவை படிப்பவர்கள் ஓரளவு புரிந்துக் கொள்வீர்கள் என்ற நம்பிக்கையுடன் இட்டேன்.

பெயரிலி, உங்க கேள்விக்கு பதிலும்.
 
சே... இந்த குமுதம் ரெம்ப மோசம். குமுதம் ஒளிக. ( ஆனா, படம் தெரிய மாட்டிங்குது. band width ஜாஸ்தி இருக்கிற சர்வராப் பாத்து படத்தை ஏத்துங்க. படத்தை பாத்துட்டு இன்னும் ஸ்டராங்கா கமண்ட்டு உடறேன் :-)
 
விஜய்,
கூல்டவுன். எல்லாம் மக்களின் ரச்னையை மாற்றும் முயற்சிதான், ( மக்கள் ரசனை இன்னும் மாறாமலா இருக்கிறது?.) :-).

நீங்க நயனதாராவுக்கு பரிதாபப்படுகிறீர்கள். ஆனால் அவர், சிம்பு-நயனதாரா முத்தக்காட்சி போல் நடிக்க தனியாக ஸ்பெஷல் ரேட் வாங்கிக்கொண்டு சந்தோஷமாய் நடிக்கிறாராம்.
 
இந்த வார விகடன் ஹாய் மதன்:

க.நா.இராஜேஸ்வரன், மொரட்டுப்பாளையம்.

நடிகைகள் சினிமாக்களில் அணியும் ஆடைகள் ரெடிமேடாக வாங்கப்படுமா... அல்லது வடிவமைத்து தையல்காரர் வைத்து ஸ்பெஷலாகத் தைத்துக்கொள்ளப்படுமா?



அநேகமாக தையல்காரர்தான் தைப்பார். சில சமயம், உடையை ஹீரோயின் அணிந்துகொண்ட பிறகும்கூட, தையல் வேலை தொடரும்! பல நடிகைகளின் அழகுப் பிரதேசங்களை ரசிக்கிறீர்களே... அதெல்லாமேகூடப் பொய்! ஒரு முறை, பாதி ஷ¨ட்டிங்கில் ஹீரோயினின் மார்புக் கச்சையில் தையல் விட்டுப்போக, காஸ்ட்யூம்காரர் வந்து ஊசியால் நேரடியாக அங்கே குத்திக்குத்தித் தையல் போட்டதாக ஒருவர் என்னிடம் சொன்னார். இது நடந்தபோது, ஹீரோயின் தான்பாட்டுக்கு ஹீரோ சொன்ன ஏதோ ஜோக்குக்குச் சிரித்துக் கொண்டு இருந்தாராம். அதாவது, ப்ளவுஸில் ஊசி இறங்கியதையே அவர் உணரவில்லை!

விஜய்... படங்களை Hello பயன்படுத்தி வலையேற்றினால் பிரச்சினை வராது :-)
 
//'பிப்ரவரி 14' என்ற விஜய் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில்//

அது 'பரத்' படம்!
 
குமுதம் கு'முத்தம்' ஆகிப் பலகாலமாச்சேப்பா!!

இப்பத்தான் கண்டிக்கிட்டீங்களா?
 
பத்மா அர்விந்த் அவர்களின் இந்த பதிவில் எழுதிய பின்னூட்டம் இதற்கும் தொடர்புடையது போல எனக்குத் தோன்றியதால்...

****************
பத்மா, நல்ல பதிவு. முதலில் இந்த கருத்தை வெளிக் கொண்டுவந்ததற்கு வாழ்த்துக்கள்.

பிறந்த உடன் பசி போக்க தாயின் மார்பங்களை தேடுபவர்கள் வளர்ந்த பின் பார்வை மாறி சுகத்துக்காக பிறர் மார்புக்காக அலையும் அவல நிலை. உயிர் ஜனிப்புக்கு எதிர்பாலிடம் தோன்றும் கவர்ச்சிக்கு ஆணுக்கும் பெண்ணுக்கும் சில உறுப்புகள் இருக்கிறது என்ற அறிவியல் சொல்லலாம். இந்த பார்வை மாற்றத்துக்கு ஹார்மோன் என்று அறிவியல் பூர்வமாக சொல்லப்பட்டாலும் இனப்பெருக்கத்துக்கு மட்டுமே எதிர்பாலிடம் தோன்ற வேண்டிய அந்த இனகவர்ச்சியை வக்கிர புத்தியாக மாற்றி யாரை பார்த்தாலும் அதே வக்கிர புத்தியோடு பார்க்க வைப்பதில் மீடியாக்களும், புத்தகங்களும் தவறுவதில்லை.

என் அத்தை மார்பக புற்றுநோய் வந்து சிறிது சிறிதாக ரத்தம் வடிந்து, கட்டி பரவி,அழுகிய நாற்றத்தில் வாழ்ந்து இறந்துப் போனதை கண்கூடாக பார்த்து பாதிக்கப்பட்டவன். வக்கிர பார்வை தோன்றும் போது அந்த பாதிப்பு என்னை பயமுறுத்தி மீண்டும் மீண்டும் வக்கிரபார்வையிலிருந்து மீளச்செய்கிறது.

மீடியாக்கள் ஏற்படுத்திய பாதிப்புகள் கொஞ்ச நஞ்சமல்ல என்பதை வலியுறுத்த எழுதிய என் http://halwacity.blogspot.com/2005/06/blog-post_111816007671502502.html... இந்த பதிவு அறைகுறையாக எழுதி ஏறக்குறைய குமுதத்துக்கு விளம்பரம் மாதிரி ஆகிப்போனது.

***************************

தோல்வி.
 
பத்மா பதிவில் நாராயணன் சொல்லியது:

//விஜய்யின் பதிவில் நயன்தாரா பற்றி எழுதிய சில கருத்துக்களில் எனக்கு உடன்பாடில்லை. குமுதம் வக்கிரபுத்தி படைத்தது என்பது உலகறிந்தது. இதனை படம்போட்டு காட்டி மேலும், கிளர்ச்சியுற வைத்தல் தேவையில்லாதது. //

நானும் முதலில் படம் போட ரொம்ப யோசித்தேன். கொஞ்சம் ஆழ யோசித்ததில் படங்கள் கொச்சையாகப் பட்டதால் படங்களை எடுத்துவிட்டேன். அப்புறம் குமுதம் படித்து 3 வருடங்கள் ஆகிவிட்ட நிலையில் திடீரென புத்தகவடிவில் படித்தவுடன் ஏற்பட்ட அதிர்ச்சி தான். இனிமேல் அந்த புத்தகம் அடிக்கடி படிக்க, எனக்கும் அந்த அதிர்ச்சி சிறிது காலத்தில் அடங்கி விட்டு "குமுதம் தானே... அவன் இப்படிதாம்பா" என்றாகி விடுவேன். ;-))
 
இது குமுதத்துக்கேயுரிய குறும்பாச்சே... இயற்கை படத்தின் விமர்சனத்துக்குப் போட்ட இந்த படத்தை பாருங்க...

அது சரி, கடந்த சனிக்கிழமை StraitsTimesல் வந்திருந்த பரபரப்பான இந்த உள்ளூர் வலைப்பதிவு பார்த்தீர்களா மன்னிக்கவும் படித்தீர்களா?
(பி.கு: கவனம்...!)
 
நடிகைகள் மார்பு மேல குமுதத்துக்கு அப்படி என்ன ஈர்ப்போ? அதை வைத்தே குமுதம் பிஸினஸ் நடத்துகிறார்கள்.

நல்ல படங்கள் அனுப்பிச்சீங்க போங்க.
 

உங்கள் கருத்துக்களை இட


<< திரும்ப முன் பக்கத்துக்கு போ

-ல் போட்டுத் தாக்கியது

ஹாக்கர்(Hawker) உணவு=சிங்கப்பூர்

Difficulty in reading this post due to font issues? Click here for a PDF copy. Works best if you right-click the link and select 'Save target as...'
இந்த பதிவை போட்டுத் தாக்கியவர் : Vijayakumar
(இந்த பதிவு Nonvegeterian-களுக்கு மட்டும்)


நடப்பன, ஊர்வன, பறப்பன, நீந்துவன போன்றவற்றில் ஏதாவது ஒன்றை கடித்துக் கொள்ளவிட்டால் சாப்பாடு ஏனோ லாவகமாக என் வயிற்றுக்குள் இறங்காது. சிறுவயது முதலே நான் பகுதி நேர மாமிசப்பட்சினியாக வளர்க்கப்பட்டு விட்டதால் வாரத்தின் ஞாயிற்றுக் கிழமை மட்டுமே மாமிசத்திற்கு தவமிருந்த என் வயிறு, படிப்பை முடித்து விட்டு கூட்டை விட்டு பறந்து சென்ற பிறகு ஏதாவது மாமிசம் இல்லாவிட்டால் அது உணவை முற்றிலும்அனுமதிக்கவில்லை. எங்கள் வீட்டில் ஞாயிற்றுக்கிழமை மட்டும் அசைவ உணவு கட்டாயம் உண்டு. குழம்பிலும்,குருமாவிலும்,வருவலிலும் ஏற்கனவே விலங்குகளின் அனாட்டமி(Anatomy) படித்து விட்டதால் கால்நடை மருத்துவம் வேண்டாமென்று ஒதுக்கி விட்டு பொறியியல் படித்தவன்.

ஏறக்குறைய இரண்டரை வருட அமெரிக்காவாசம் பல வகை உணவுகளை அசூயையின்றி விட்டு விலாசுவதற்கு கற்றுக் கொடுத்திருந்தது. சாப்பாட்டை ஊடுகட்டி என்னால் சாப்பிட முடியாவிட்டாலும் பரிசோதனையாக எல்லா வகை உணவுகளையும் ஒரு கைப்பார்க்கும் திறம் என்னையும் மீறி வளர்ந்திருந்தது. நல்ல வேளை காந்தி "வெளிநாட்டில் புலால் உண்ணமாட்டேன்" என்று அன்னைக்கு கொடுத்த வாக்குறுதி மாதிரி நான் எதுவும் கொடுக்கவில்லை. வாய் தவறி பீப்(Beef) சாப்பிட்டேன் என்றால் "கண்டதை சாப்பிட்டு உடம்பைக் கெடுத்துக்காதே" என்பார் என் அன்னை. 2 காலோ, 4 காலோ மனிதனை விட குட்டியாக நடந்து சென்றால் நல்ல உணவு, அதுவே உருவத்திலும்/எடையிலும் கொஞ்சம் பெரிசாக இருந்தால் அதன் பெயர் "கண்டது". ஆகவே இனிமேல் யாரிடமும் சொல்லாமல் ஒரு கை பார்க்க வேண்டும் என்று என் மனது அப்போதே தயாராகி விட்டது.

சைவ உணவுகளால் விளையும் நன்மைகள், அசைவ உணவுகளால் விளையும் தீமைகள் என்பது நாக்குக்கு தெரியாது. என் மூளை நாக்குக்கு அடிமை என்பதால் நான் எப்போதுமே இந்த விசயத்தில் "Don't care". அமெரிக்காவுக்கு புதிதாக வரும் சைவர்கள் உணவுக்கு அல்லல்படுவதை மனதின் ஒரு ஓரத்தில் குரூரமாக ரசித்துக் கொண்டே கிடைக்கும் உணவுகளை பெருமிதத்துடன் சாப்பிடுவேன். அது நான் எப்போதும் பின்பற்றும் சாடிஸம். மீன்,கோழி,ஆடு போன்றவற்றை மட்டுமே சுவைத்திருந்த என் நாக்கு மெல்ல மெல்ல பீப்(Beef), போர்க்(Pork), டர்க்கி(Trukey) என்று புதியவகை உணவுக்கு ஏற்ற பரிணாமம் அடைந்தது அமெரிக்காவில் தான். அங்கு பேச்சுலராக வாழ்ந்ததால் பாதி நேரம் வெளியிலும், மீதி நேரம் அறைவாசிகளுடன் ஈகோ மோதல் ஏற்பட்டு சமைக்காமல் உறைய வைத்த உணவுகளை மட்டுமே சாப்பிட்டு காலம் தள்ளினேன். வெறும் அசைவத்திற்கு சைடிஸ் வேண்டுமென்று பியரும் சேர்ந்து என்னுடன் கலக்கியதில் கூடவே குட்டியாக தொப்பையும் வளர ஆரம்பித்தது. தொப்பை வைத்துக் கொள்வது பிரஸ்டீஜ்க்கு நல்லது ஆகையால், அப்படியே விட்டுவிட்டேன். கல்யாண சமயத்தில் எல்லோரும் செய்வதை போல 'தொப்பை குறைப்பு' விளிப்புணர்வு ஏற்பட, நோ சான்ஸ் இறுதியில் சோம்பலே வென்றது.

பர்க்கர்,பீசா,டாக்கோஸ்கள் போரடிக்க ஆரம்பித்ததும் சைனீஸ் உணவுகள், மெக்சிகன் உணவுகள், ஜப்பானீஸ் உணவுகள் என்று பலவற்றையும் சோதிக்க ஆரம்பித்தேன். எனக்கு மிகுந்த சிரமம் கொடுத்து பிறகு காதலாகிப் போனது ஜப்பானீய உணவு வகைகள் தான். வேக வைக்காத சால்மன் (Solmon) மீனை அழகாக ஏதோ அரிசி வகையில் சுருட்டி பல வண்ணங்களில் டப்பாவில் அடைத்து ஐஸின் மேல் வைத்திருக்கும் சூசி(Sushi)-ஐ பார்த்து பார்த்து மனம் ஏங்கியது. ஒரு நாள் சூசி வாங்கி சாப்ஸ்டிக்கில் சாப்பிட தெரியாமல் முள் கரண்டியில் குத்தி சாப்பிட்டு பார்த்தேன். ஒகே ரகம். அதற்கு பக்கத்தில் துவையல் மாதிரி ஏதோ இருக்க, அப்படியே எடுத்து மொத்தமாக வாயில் போட்டதில் கந்தகத்தை முழுங்கிய காட்டம் என் உச்சி மூளையை தாக்க முகத்திலிருக்கும் அத்தனை ஓட்டையிலும் நீர்வரத்து அதிகமாகியதை என்னுடைய அலுவலக அன்பர்கள் விநோதமாக கண்டு ரசித்தனர். பிறகு அதைப்பற்றி ஆராய்ச்சியில் இறங்க, அது 'வசாபி' எனப்படும் ஜப்பானிய கடுகை துவையலாக அரைத்திருக்கிறார்கள் என்று தெரிந்தது. இன்னும் பலருடன் ஜப்பானிய ரெஸ்டாரண்டுக்கு போய் பழகியதில் அந்த வசாபி துவையலை சோயா சாஸில் கரைத்து நீர்த்துப் போக செய்து சூசிக்கு சட்டினி மாதிரி தொட்டுச் சாப்பிட வேண்டுமென தெரிந்தது. அப்புறம் சூசிக்கு நான் அடிமை.

உலகத்தின் எந்த மூலைக்கு சென்றாலும் எனக்கு உணவு பிரச்சனை இருக்காது என்றதில் சிங்கப்பூர் ஒரு அடி கொடுத்து "உன்னாலும் சிலவற்றை சாப்பிட முடியாதுடா மடையா!!" என்று திட்டியது. அந்த விசயத்துக்கு பிறகு வருகிறேன். இப்போது "உணவுகளின் சொர்க்கம்" சிங்கப்பூரை பற்றி பார்ப்போம்.


span >சிங்கப்பூரின் ஒரு ஹாக்கர் செண்டர்


ஆங்கொன்றும் இங்கொன்றுமாக உணவு கடைகளை அமெரிக்காவில் பார்த்துவிட்டு அடிக்கு ஒரு உணவுக்கடைகளை சிங்கப்பூரில் பார்த்ததும் என் மகிழ்ச்சி தலைவிரித்தாடியது. சிங்கப்பூரில் பெரும்பாலானோர் கணவன் மனைவி இருவரும் வேலைக்குப் போவதால் அவர்கள் கிட்சனை துடைத்து அழகாக கோலம் போட்டு கலைக்காமல் அழகு பார்ப்பார்கள். எல்லா வேளையும் வெளியில் தான் சாப்பாடு என்பதால் இங்கு உணவு தொழிற்சாலை கொடிக்கட்டிப் பறக்கிறது. இங்கு எங்குப் பார்த்தாலும் உணவுகளை கூவி கூவி விற்கும் ஹாக்கர் செண்டர்கள் இருக்கும். சிறுசும் பெருசுமாக சிங்கப்பூரை சுற்றியுள்ள உணவு விடுதிகள் பல ஆயிரங்களை தேறும். மனைவிக்கு ஊருக்கு போன பின் எல்லா நேரமும் வெளியில் சாப்பிட வேண்டும் என்ற நிலமைக்கு வந்த பின், என் நாக்கு மீண்டும் மீண்டும் ராட்சதனாக உயிர் பெற்று எழுந்தது.

இட்லி தோசை, இடியாப்பம்,புட்டு என்று இந்திய உணவு வகைகள் எங்கும் கிடைக்கும் என்ற நிலை இருந்தாலும் சீன,மலேய பாஸ்புட் வகைகள் ஒர் ஆயிரத்துக்கும் மேல். இந்தியனோ, சீனனோ, மலேயனோ எந்த உணவு கடைக்கு சென்றாலும் தட்டில் குவியல் குவியலாக வைத்திருக்கும் உணவு வகைகள்(குறைந்தது 8 வகைகள்). எங்கும் சோறு கிடைக்கும். குவித்து வைத்திருக்கும் உணவு வகைகளில் எந்த எந்த வகை வேண்டும் என்று சுட்டிக்காட்ட அவரும் சோறு வைத்திருக்கும் அதே தட்டில் நீங்கள் கேட்ட சைடிஸ்களை குவித்து தந்து நீங்கள் அதை தூக்கிக் கொண்டு வரும்போது அது அப்படியே பிச்சைகாரன் தட்டுப்போல பலவெரைட்டியில் காட்சியளிக்கும். கோமளாஸ், ஆனந்தபவன், அன்னபூர்ணா என்று பல இந்திய ரெஸ்டாரண்டுகள் இருக்கும். அவையெல்லாம் போரிங். KFC, மெக்டொனால்ட்,பர்கர் கிங் எல்லாம் எப்போதாவது. ஆனால் ஹாக்கரில் கிடைக்கும் உணவுகள் தான் மஜா.

மீ கோரிங், நாசி கோரிங், நாசி லெமாக், கெத்தியோ, ஹொர்பன்,நாசி படாங், டாம்யாம் சூப்,முர்தாபா,டக் ரைஸ், பிரைட்ரைஸ்கள், டோஃபூ, பிரைட் வெரைட்டிகள், சிக்கன் சாத்தே, பொரிட்ஜ் வெரைட்டிகள் என்று பலவற்றையும் சுவைத்து மகிழ்ந்த நிலையில் என் நாக்குக்கும் சோதனை வந்தது.

சிக்கன்,பீப்,மட்டன்,போர்க் என்ற வரிசையில் ஆமைக்கறி,தவளைக்கறி, முதலைக்கறி, ஆக்டோபஸும் சிங்கப்பூரில் கிடைக்கிறது. இந்த மெனு வகைகளை பார்த்ததும் என் நாக்கின் கொட்டமும் அடங்கியது. பாம்பு என்பது கொஞ்சம் பளபளவென்று அழகாக இருப்பதால் அதை சாப்பிடும் ஆசையில் அசூயை ஏற்படவில்லை. ஆனால் ஆனால்.... தவளையும் முதலையும்.... நினைத்துப் பார்க்க கொஞ்சம் கஷ்டமாக இருக்கிறது. காரணம் அதன் தோல் சொரசொரவென்று நீர் ஊறியிருப்பதால் தான் என நினைக்கிறேன். நெடுநாளாக பாம்புகறி சாப்பிட வேண்டும் என்ற ஆசையிருக்கிறது. நானும் சிங்கப்பூரில் தேடு தேடென்று தேடுவிட்டேன் கிடைக்கவில்லை. அது ஜப்பானிலும்,கொரியாவிலும் தான் கிடைக்கும் என்ற பதில் வந்தது. [வேண்டுகோள்: சிங்கப்பூர்வாசிகளுக்கு இதைப்பற்றி தெரிந்தால் எனக்கு ஒரு தனிமின்னஞ்சல் தட்டிவிடவும்].

அதிலும் முதலைக்கறி என்பது பெரிய முதலையிலிருந்து இல்லையாம். முதலை குஞ்சு என்று சொன்னார்கள். அது சாப்பிட்டால் ஆஸ்துமாக்கு நல்லதென்று வேறு என் அப்பார்ட்மெண்டுக்கு கீழிறுக்கும் ரெஸ்டாரண்டில் நோட்டீஸ் ஒட்டியிருந்தார்கள். இவ்வளவு நாள் கழித்து இப்போது தான் தவளை சாப்பிட எனக்கு கொஞ்சம் தைரியம் வந்திருக்கிறது. அது தகுந்த துணையுடன் போய் பரிசோத்தித்து விடலாமென நினைத்திருக்கிறேன்.

சிங்கப்பூர் மக்களுக்கும் வாயில் நீர் ஊறவைக்க வேண்டுமானால் "மீன் தலைக்கறி" என்று சொல்லிப்பாருங்கள். ஆக குறைந்தது S$25-லிருந்து கிடைக்கிறது. ஒரு மீன் தலைக்கறி வாங்கி குடும்பமே அதை சூழ்ந்து கபளீகரம் பண்ணுவது சிங்கப்பூரர்களுக்கு பரிபூரண சாப்பாடு. பெரிய்ய்ய்யய மீன் தலை 'ஆ'வென்று வாய்பிளந்து குழம்பில் மிதக்க, வாயில் செர்ரி பழத்துடன் கொண்டுவந்து வைக்கும் அழகே அழகு. 'முத்துஸ் கறி' ரெஸ்டாரண்ட் அதுக்கு பேமஸ்.

நெளி நெளியாக நீந்தும் மீன் வகைகளில் Squid-ம், ஆக்டோபஸும் அதிகமாக கிடைக்கிறது. சவக் சவக்கென்று ரப்பராக இருக்கும் squid என்னுடைய ரெகுலர் உணவில் அதுவும் ஒன்று. பணியாரமாக சுட்டு ஆக்டோபஸை உள்ளே வைத்து சமைக்கும் ஜப்பானிய உணவை சுவைக்கும் வாய்ப்பு கிட்டவில்லை. சிப்பிகளையும், நத்தைகளையும் சுவைத்தாகி விட்டது. சிப்பியை பிளந்து உள்ளே வெந்திருக்கும் சிப்பியை ஒரு உறி உறிந்தால்... ஆகா... பிரான்(Prawn) தோத்து விட்டது போங்க. எல்லா உணவுகளில் கட்டாயம் இடம் பெறும் ஒன்று நெத்திலி வகை (IKON BILIS) கருவாடும் ஒன்று. நாம் எப்படி வாசனைக்காக வெங்காயம் சேர்ப்போமோ அது மாதிரி நெத்திலி மீன் எங்கும் எதிலும் உண்டும். என் தாயார் சிங்கப்பூர் வந்து இந்த கருவாடு தான் முக்கியமாக வாங்கிச் சென்றார்.


கறியாக ரெடியாக இருக்கும் தவளைகள்


தவளைகளை உணவு விடுதியில் தொட்டியில் போட்டு வைத்திருப்பது போலவே மெகா சைஸ் நண்டுகளை உயிருடன் கட்டிப்போட்டிருப்பார்கள். நீங்கள் உங்களுக்கு பிடித்த நண்டை சுட்டிக் காட்ட சுவையான பதார்த்தமாக அதை மாற்றி தருவார்கள். அதில் Chilly Crab சூப்பர்.


ஊரும் நண்டே உணவாகப் போகிறாயா?

கொஞ்சம் நாள் முன்பு மலேசியாவில் புலிக்கறி கிடைக்கிறதென்று சொல்லி ஒரு நியூஸ் வந்தது. புலி மயிர் முதல் கறி வரை பல பயன்பாடுகளையும் விவரித்திருந்தார்கள். புலியின் மீசை மயிறு பல்லின் இடுக்கில் குத்திய புலிக்கறியை குத்தி எடுக்க உதவுகிறதாம். மேல் விவரங்களுக்கு இங்கே.


டூரியன் பழமும் நாத்தமும்

அப்புறம் ஊரெல்லாம் நாறும் ஒரு விசயம் டூரியன் பழம். சிங்கப்பூருக்கு ஒரு வாசம் இருக்குமென்றால் அது டூரியன் பழத்தின் வாசமாக(நாற்றமாக)த் தான் இருக்கும். பலாப்பழத்தை போல தோற்றமளிக்கும் டூரியன் பழம் ஆசியாவின் ஒரு சில இடங்களில் மட்டுமே கிடைக்கிறது. பழங்களின் ராஜா என்றழைக்கப்படும் டூரியனின் நாற்றம் குடலைப்பிரட்டினாலும் அதை மிகுந்த மோகத்துடன் சாப்பிடுகிறார்கள். ஒரு தடவை சாப்பிட முயற்சித்து நாள் முழுக்க வாய் நாற்றத்துடன் அலைந்தது வேறு விசயம். டூரியன் வயக்கராக்கு ஈடு என்று சில நம்பிக்கைகளும் இங்கு உண்டென்று கேள்விப்பட்டுள்ளேன்.

என்னமோ போங்க... இப்போதெல்லாம் சாம்பர், ரசம், கொழம்பு என்று எதுவுமே பிடிக்கவில்லைங்க.

வாங்க சார் வாங்க சார்... வாங்கம்மா.. வாங்கம்மா.. சில்லி கிராப்... சில்லி கிராப்.... வாங்க சார் வாங்க சார்... வாங்கம்மா வாங்கம்மா.. டேஸ்டி பிராக்(Frog) டேஸ்டி பிராக் வாங்க வாங்க வாங்க.... டேஸ்டி டேஸ்டி... வாங்க வாங்க.

இந்த பதிவின் வாக்கு எண்ணிக்கை: . பக்கத்திலுள்ள ஸ்டாரை மவுசால் போட்டுத் தாக்கினால் எனக்கு மவுசு ஏறும். நன்றி:-)

உங்கள் கருத்துக்களை இட

திருப்பி தாக்கியவர்கள்:
//மீதி நேரம் அறைவாசிகளுடன் ஈகோ மோதல் ஏற்பட்டு சமைக்காமல் உறைய வைத்த உணவுகளை மட்டுமே சாப்பிட்டு காலம் தள்ளினேன்.//

உங்களுக்குமா?

//கல்யாண சமயத்தில் எல்லோரும் செய்வதை போல 'தொப்பை குறைப்பு' விளிப்புணர்வு ஏற்பட, நோ சான்ஸ் இறுதியில் சோம்பலே வென்றது.
//

அட ஆண்டவா உங்களுக்கு நேற்று நடந்தது எனக்கு இன்று நடக்கின்றது, நானும் ஒரு மாதமாக தொப்பை குறைப்பு நடவடிக்கையில் இறங்குகின்றேன், ம்... இதுவரை சோம்பலே வென்று கொண்டிருக்கின்றது
 
குழலி, நீங்க இன்னும் பேச்சுலர் தான்னு நினைக்கிறேன். சரியா? அப்போ இந்த தொப்பை வளர்ப்பு + தொப்பை குறைப்பு எல்லாம் திருமண வாழ்க்கை ஆரம்பத்திற்கு அறிகுறிகள்.
 
// நீங்க இன்னும் பேச்சுலர் தான்னு நினைக்கிறேன். சரியா?//

சரிதான் அல்வாசிட்டி விஜய்,நான் இன்னும் பேச்சுலர் தான் விரைவில் என்னை பேச்சிலர்(பேச்சு+இலர்) ஆக்க சிலர் சதி(?!) செய்து கொண்டுள்ளனர், அந்த சதிகார கூட்டத்தில் ஒருவரின் அறிவுரைதான் தொப்பையை குறைக்கை சொன்னதும்
 
சிங்கப்பூரில மிருக காப்பாளர் சங்கம் எல்லாம் என் செய்யுது.. இப்படி மிருகங்களை கூண்டுக்குள் கட்டி வைத்து.. சீ..சீ...காட்டு மிரான்டித்தனம்.. சிங்கப்ரபூரில் எனக்கு பிடித்த உனவகம் சிரங்கூன் ரோட்டில இருக்கே அதன் பேரு கோவிந்தாஸ் என நினைக்கிறேன் (இப்பவும் இருக்குதோ தெரியாது) என்ன அருமையான சைவ உணவுகள்.. நினைக்கவே வாய்யூறுகிறது..
உடனடியாக அங்கை போய் சாப்பிடுங்கள்..... (8 வருடங்களுக்கு முன் நானும் பறப்பன ஊர்வன எல்லாம் சாப்பிட்டவன்தான்... எல்லா பழக்கத்தையும் மனம் இருந்தால் மாற்றலாம்...) தொப்பையை குறைப்பதற்கு ஒரே வளி.. தெடர்ந்து ஒவ்வரு நாளும் உடற்பயிற்சி செய்ய வேன்டியது தான், பியர் அதிகம் குடிக்காமல் விஷ்கி, வொட்கா.. அப்படி வேற எதாவதும் குடிக்கவும்...
 
ஐயோ, கருமம் கருமம்; எப்டிதான் இந்த ஆட்டு பொணம், மாட்டு பொணம், பன்னி பொணம், கோழி பொணத்தயெல்லாம் சாப்டுறாங்களோ தெரியல.
உவ்வே...சீ...சீ.
 
Annachi,

http://www.petatv.com/tvpopup/video.asp?video=meet_your_meat&Player=wm&speed=_med

allathu

www.meetyourmeat.com poi parunga

Ana kandippa antha video fullum parkanum

Parthuttu sollunga appadi irunthathunnu

Ramesh
Ram_kum75@yahoo.com
 
விஜய்.

// கோமளாஸ், ஆனந்தபவன், அன்னபூர்ணா என்று பல
இந்திய ரெஸ்டாரண்டுகள் இருக்கும். அவையெல்லாம் போரிங். //

அங்கங்கே ஆளுங்க நாக்கு செத்து வாழ்ந்துக்கிட்டு இருக்கோம், இதுலே கோமளாஸ்
போரிங்கா? இது ஒண்ணுக்கே உங்களைப் 'போட்டுத்தாக்கலாம்"!!!
 
உவ்வே...கனியிருக்க காய் கவர்ந்தற்று...
 
அச்சச்சோ வியஜ் இவ்வளவு மரக்கறிகாரர் இருப்பார்கள் என்று தெரியாமல் பொய்விட்டதே உங்களைப் போட்டுத்தாக்குகிறார்களே.
எனக்கென்ன நான் 40 கிலோமீற்றர்/மணி வேகத்துக்கு குறைய ஓடும் நகரும் எதையுமே சாப்பிடுவேன் என்று தம்பட்டமடிப்பார் ஒரு நண்பர்.அவர் அருகில் போகவே பயமாயிருக்கு நான் கூட அதைவிட மெதுவாகத் தான் ஓடுவேன்
 
ஹாக்கர் செண்டர் என்ன ஸ்டர்லிங் ரோடா? பிலோக் 164?165?
பதிப்பு நன்று.
 
குழலி.. ஆல் தி வெரி பெஸ்ட்..! (அப்பாடா.. மாட்டிக்கினாருப்பா!)

விஜய்.. இதெல்லாம் த்ரீ மச்..! விட்டா கொரியாவிலே போய் நாய்க்கறி டேஸ்ட் பண்ணுவீரு போலருக்கே!
 
இங்கே பின்னூட்டமிட்ட அசைவ வெறுப்பாளர்களுக்கு,

நம்ம விஜய் அண்ணாச்சி உங்க எல்லாரையும் அவர் சாப்பிட்டதை எல்லாம் சாப்பிடச் சொல்லி கட்டாயப் படுத்தினாரா? அவருக்கு பிடிக்குது அவரோட ப்ளாகில எழுதுறார். உங்களுக்கு பிடிக்கலைன்னா பிடிக்கலைன்னு சொல்லிட்டு போரதை விட்டுட்டு, பிணம், மிருக வதை அது இதுன்னு உபதேசம் செய்ய வேண்டாம். அதை எல்லாம் உங்க உங்க ப்ளாகில வச்சிக்கோங்க.
 
குழலி சதிகாரர்களின் வஞ்சக வலையில் விழுந்து விடாதீர்கள். தொப்பையே நமக. தொப்பையே அழகு. ஆனா பொண்ணு பார்க்க போகும் போது மட்டும் நல்ல வயித்துல பெல்ட்டை இருக்க கட்டி தொப்பையை மறச்சிகிடுங்க. சும்மா ஒரு முன்னெச்சரிக்கைக்கு தான்.
 
//கொல்லான் புலான் மறுத்தானை கைகூப்பி
எல்லா உயிரும் தொழும்.//

நாடோடி அண்ணே,

எதுக்கு? எல்லா உயிரும் கைகூப்பி தொழுது hero ஆகி அப்புறம் முதலமைச்சர் நாற்காலியை பிடிக்கவா? வேண்டாமைய்யா இந்த விபரீத ஆசை.
 
//சிங்கப்பூரில மிருக காப்பாளர் சங்கம் எல்லாம் என் செய்யுது.. இப்படி மிருகங்களை கூண்டுக்குள் கட்டி வைத்து.. சீ..சீ...காட்டு மிரான்டித்தனம்.. //

நோநோ,

இது என்னைய்யா வம்பா இருக்கு. கூண்டுக்குள்ளே இருக்கிற மிருகத்தை இப்போ தான் பார்த்தீங்களா? உலகமெல்லாம் அசைவ பிரியர்களுக்காக இப்படி தான்யா அதை அடைச்சி வச்சிருப்பாங்க. விநோதம்.

அப்புறம் நீங்க சொல்லும் அந்த கோவிந்தாஸ் என்பது Hare ராமா Hare கிருஷ்ணா மக்கள் வைத்திருக்கும் உணவுக்கடை என நினைக்கிறேன். அது அங்கேயே தான் இருக்கிறது. சுற்றிலும் அசைவ கடைகள் இருப்பதால் கூட்டம் கம்மி தான்.

முழுநேர நான்வெஜ் மனைவி ஊரிலிருந்து வரும் வரை தான்.
 
//ஐயோ, கருமம் கருமம்; எப்டிதான் இந்த ஆட்டு பொணம், மாட்டு பொணம், பன்னி பொணம், கோழி பொணத்தயெல்லாம் சாப்டுறாங்களோ தெரியல.
உவ்வே...சீ...சீ. //
அண்ணே ஞானபீடம்,

அதுவா செத்து போனா தான் பிணம். சாவடிச்சா அதுக்கு பேரு இறைச்சி. ஆகையால் அசைவர்கள் தின்பது இறைச்சியே தவிர பிணமில்லை

அதுனால நீங்க சொல்லும் 'பிணம்' கான்சப்ட் தப்பு :-))))))
 
நன்றி ரமேஷ். நீங்கள் கொடுத்த சுட்டியை பார்க்கிறேன். என்ன ஆனாலும் மனது மாறதென்று நினைக்கிறேன்.
 
துளசியக்கா, இந்த கோமளாஸ், ஆனந்த பவன் எல்லாம் உண்மையிலேயே ஒரே அறுவை தாங்க. அடிக்கடி சாப்பிட்டு பாருங்க. அதோட டேஸ்டே எரிச்சலா இருக்கு. நான் சொல்வது உணவின் ருசியை தான் சொல்கிறேன். சாப்பிட்டால் நெஞ்சில் ஒரு எரிச்சல் மற்றும் வாந்தி வரும் உணர்வு எப்போதும் உண்டு.
 
ஜீவா, கனியும் திங்க பழகனும். காயும் திங்க பழகனும்.

ஈழநாதன், மரக்கறி சாப்பிடுபவர்கள் கொடுத்து வைத்தவர்கள் தான்.உலகமே மரக்கறி பக்கம் போய் கொண்டிருக்கிறது. ம்ம்ம்ம்ம்ம்... நமக்கு தான் அந்த கொடுப்பினை இல்லையே.


மயாவரத்தான், நாய் கறியா? வ்வ்வ்வ்வ்வேவேவே.... ஒன்லி டீசன்ட்/அப்பாவி அனிமல்ஸ்க்கு தான் வயித்துக்குள்ளே இடம்.
 
தினேஷ், நீங்கள் சொல்லும் அதே ஸ்டெர்லிங்க் ரோடு உணவு விடுதி தான். நீங்களும் அந்த ஏரியா தானோ? ஆனால் வேற ப்ளாக்குங்க. நீங்கள் அந்த ஏரியாவாக இருந்தால் njvijay at yahoo dot com என்னை தொடர்புக் கொள்ளுங்களேன்.
 
//உங்களுக்கு பிடிக்கலைன்னா பிடிக்கலைன்னு சொல்லிட்டு போரதை விட்டுட்டு, பிணம், மிருக வதை அது இதுன்னு உபதேசம் செய்ய வேண்டாம். அதை எல்லாம் உங்க உங்க ப்ளாகில வச்சிக்கோங்க.//

அனானிமஸ் அண்ணே,

ரொம்ப உணர்ச்சி வசப்படாதீங்கப்பா...டேக் இட் ஈஸி. அருவருப்பா சொன்னதால அடிக்க வர்றாங்க. இதுல என்ன இருக்கு. தாவர வதை சட்டம் இல்லை. மிருகவதை சட்டம் இருக்கிறதுனால சொல்றாங்க.
 
அசைவ உண்ணிகளுக்கு ஏற்ற பதிவு. ஆனா தவளை, முதலை எல்லாம் கொஞ்சம் ஓவர்.

-ரவி
 
//துளசியக்கா, இந்த கோமளாஸ், ஆனந்த பவன் எல்லாம் உண்மையிலேயே ஒரே அறுவை தாங்க. அடிக்கடி சாப்பிட்டு பாருங்க. அதோட டேஸ்டே எரிச்சலா இருக்கு. நான் சொல்வது உணவின் ருசியை தான் சொல்கிறேன். சாப்பிட்டால் நெஞ்சில் ஒரு எரிச்சல் மற்றும் வாந்தி வரும் உணர்வு எப்போதும் உண்டு.
//

அல்வாசிட்டி அண்ணாச்சி இது என்னவோ உண்மைதானுங்க, நான் கூட இதுமாதிரி எண்ணியதுண்டு, இருந்தாலும் அண்ணப்பூரனா பொங்கலுக்கும் கோமளாஸ் பட்டுராவிற்கும் நான் அடிமை
 
//குழலி.. ஆல் தி வெரி பெஸ்ட்..! (அப்பாடா.. மாட்டிக்கினாருப்பா!)//

மாயவர்த்தான் உங்கள் வாழ்த்துக்கு நன்றி விரைவில் சேதி சொல்கின்றேன்,

//ஆனா பொண்ணு பார்க்க போகும் போது மட்டும் நல்ல வயித்துல பெல்ட்டை இருக்க கட்டி தொப்பையை மறச்சிகிடுங்க.//
நாம் சந்திக்கும்போது இதுமாதிரி இன்னும் சில யோசனைகள் சொல்லுங்கள்

//பியர் அதிகம் குடிக்காமல் விஷ்கி, வொட்கா.. அப்படி வேற எதாவதும் குடிக்கவும்... //
நோநோ... இப்படி எதுவுமே இல்லாமல் எனக்கு மட்டும் எப்படி 3 மாதத்திற்கு ஒரு முறை இடுப்பளவு எகிறுகின்றது எனத்தெரியவில்லை... :-(
 
அண்ணாச்சி, தாய்(லாந்து), மங்கோலிய உணவு வகைகள் பற்றி ஏதாவது? நாய்க்கறிக்கு ஏன் கொரியா போகவேணும்? பக்கத்திலிருக்கும் பிலிப்பைன்ஸ்லையே கிடைக்கும் என்று கேள்வி.

எனக்கு க்ரேக்க, மேற்க்காசிய உணவு வகைகள் ரொம்ப பிடிக்கும்.
 
தினமலர் வாரமலரில் அந்துமணி பா.கே.ப.ல் எழுதிய நாகாலாந்து நாய்பிரியாணி பற்றி படித்துள்ளீர்களா?
 
//அதுவா செத்து போனா தான் பிணம். சாவடிச்சா அதுக்கு பேரு இறைச்சி.//

இனிமே தமிழ் சினிமாவிலெல்லாம் டயலாக்கை மாத்தணும்ப்பா...

"டேய்.. எனக்கு துரோகம் செஞ்ச அவனை அடிச்சு சாகடிச்சு, இறைச்சியோட வாங்கடா..!"

"ஐய்யோ.. கலையிலே போகும் போது நல்லாதானே போனீங்க. இப்போ அந்த சதிகாரங்க உங்களை சாகடிச்சு இறைச்சியா போட்டுட்டு போயிட்டாங்களே"

"இன்ஸ்பெக்டர் ஸார்.. இங்கே ஊரு குளத்து பக்கத்திலே ஒரு மனுஷ இறைச்சி கெடக்குது ஸர். யாரோ அடிச்சு போட்டுட்டு போயிருக்காங்க!"
 
//ஞானபீடம் said...
ஐயோ, கருமம் கருமம்; எப்டிதான் இந்த ஆட்டு பொணம், மாட்டு பொணம், பன்னி பொணம், கோழி பொணத்தயெல்லாம் சாப்டுறாங்களோ தெரியல.
உவ்வே...சீ...சீ. //

ஞானபீடம் சார்.. நீங்க காடை, கவுதாரி ரேஞ்சா?! :)
 
//அண்ணாச்சி, தாய்(லாந்து), மங்கோலிய உணவு வகைகள் பற்றி ஏதாவது? நாய்க்கறிக்கு ஏன் கொரியா போகவேணும்? பக்கத்திலிருக்கும் பிலிப்பைன்ஸ்லையே கிடைக்கும் என்று கேள்வி. //

அனானிமஸ், தாய் உணவு எனக்கு ரொம்ப பிடிக்கும். அது கொஞ்சம் நம்மூரு ஸ்டைலில் இருக்கும். பைனாப்பிள் பிரைட்ரைஸ் பிடிச்சிருக்கு. நாய்கறியா? நோ சான்ஸ்.
 
//தினமலர் வாரமலரில் அந்துமணி பா.கே.ப.ல் எழுதிய நாகாலாந்து நாய்பிரியாணி பற்றி படித்துள்ளீர்களா?
//

அனானிமஸ், அந்துமணி மேட்டர் படிச்சதில்லை. ஆனால் என்னுடைய பெங்காலி நண்பர் இதைப்பற்றி சொல்வதுண்டு. சிறிதுகாலம் அவர் நாகலாந்தில் வசித்திருக்கிறார்.அவர் நாகலாந்து மக்கள் சாப்பிடும் யானை கறியையும் பற்றி சொல்வார். என்னால் நம்ப முடியவில்லை.
 
//"டேய்.. எனக்கு துரோகம் செஞ்ச அவனை அடிச்சு சாகடிச்சு, இறைச்சியோட வாங்கடா..!"//

யோவ் மயாவரத்தான். உங்களுக்கு நகைச்சுவை உணர்ச்சி ஜாஸ்தியோ? எப்படிங்க இயற்கையிலேயே இப்படியா? இல்ல வளரும் போது இந்த நகைச்சுவை உணர்வு ஒட்டிக் கொண்டதா? :-)))))))

அந்த வரிகளை சும்மா சாமாளிபிகேஷனுக்கு சொன்னது.
 
Meat:
the flesh of animals (including fishes and birds and snails) used as food,

இந்த முறை ஊருக்கு செல்லும் போது தமிழ்-தமிழ் அகராதியில் பார்த்து சொல்கின்றேன்,

ஹி ஹி நைனா தமிழ் வாத்தியாரா, அவுரு தமிழ் வார்த்தைக்கு மீனிங் தெரிஞ்சிக்க சொல்ல கூட தமிழ் - தமிழ் அகராதி வச்சிக்குனு கீராரு
 
குழலி,

அய்யா தமிழ் வாத்தியாரா? அதானே பார்த்தேன். தமிழ் மேல கொஞ்சம் ஒரு ஸ்டெப் மேலேயே உங்களுக்கு பற்று இருப்பதில் ஆச்சரியமில்லை.
 
This comment has been removed by a blog administrator.
 
//இந்த முறை ஊருக்கு செல்லும் போது தமிழ்-தமிழ் அகராதியில் பார்த்து சொல்கின்றேன்,//

அய்யா தான் தமிழ் வாத்தியராச்சே. போன் போட்டு கேட்டா புல்லரிச்சி போய் நிக்க மாட்டாரா? "பையன் இது வரைக்கும் தமிழில் சந்தேகம் கேட்டதில்லை. இப்போது கேட்கிறான் என்று ஆனந்தமாகி நிற்பார்". ஊருக்கு போய் தான் கேட்கனுமா? இல்லை போனில் கேட்பதற்கு அப்பா மீது மரியாதை கலந்த பயமா?
 
பாண்டியன்,

ஜப்பானில் வாக்கிங் போய் விட்டு பாம்பு சூப் குடிப்பார்கள் என்று எங்கோ படித்த ஞாபகம். அதனால் பாம்பு-ஜப்பான் என்றேன்.
 
பாம்பு கறி Hong Kong-ல் 'சூப்'பரா கிடைக்கும் என்று கேள்வி..!!
 
சிங்கப்பூரில் பாம்புக்கறி 3 இடங்களில் கிடைக்கும் என கேள்விப்பட்டேன், விரைவில் விசாரித்து எங்கு கிடைக்கும் என் சொல்கின்றேன் விஜய் :-)
 
பாண்டியன்,

நீங்களும் சாப்பாட்டு விசயத்துல நம்ம மாதிரி தானா? நீங்க கொடுத்த லிஸ்டுல ஆக்டோபஸ்க்கு மட்டும் இன்னும் விமோசனம் கிடைக்கல. மத்த வகை நத்தை,கடல்பாசி எல்லாம் அடிச்சி முழக்கியாச்சி.
 
மயாவரத்தான், பாம்புக்காக ஹாங்காங்.... இப்போதைக்கு முடியாதப்பு...
 
குழலி கட்டாயம் பாம்புகறி பற்றி சொல்லுங்கள். சிங்கை இணைய இலக்கிய குழு மாதிரி சிங்கை வித்தியாசமான சாப்பாட்டு குழு நண்பர்கள் வேறு இருக்கிறார்கள். நெடுநாளாக அந்த குழுவுக்கு பாம்பை ஒரு கை பார்க்க ஆசை.
 
விஜய், லிஸ்ட் ரொம்ப சின்னதா இருக்கே.. இங்கே ஊர்ல சாப்பிடற ஐட்டம் எல்லாம் சொல்லலியே. இது வித்தியாசமான ஐட்டம் லிஸ்ட் மட்டுமா..
 
சுதர்சன், இது வித்தியாசமான பட்டியலுக்கு மட்டுமே. நம்ம ஊரு சாப்பாடை பத்தி எழுத ஒரு பதிவு போதுமா என்ன? காடை கவுதாரி, உடும்பு என்று நம்ம ஊரு லிஸ்டே நிறைய இருக்கு.
 
ஐயா நல்ல கட்டுரை....நானும் அசைவந்தான்.....என்னாலயே செல எடங்கள்ள தாங்க முடியலையே...........சைவாள நெனச்சுப் பாத்தேன். இந்தக் கட்டுரையைப் படிக்க விடாம ஆண்டவன் அவங்கள காப்பாத்தட்டும்.

டூரியன் பழத்தப் பத்திக் கேள்விப் பட்டிருக்கேன். நாறினாலும் நல்லாருக்குமாமே....அப்படியா? வாய் நாறுச்சுன்னு சொன்னவரு....சுவையச் சொல்லலையே!
 
டுரியன் நாறுமா?! அடப்போங்கய்யா.. தமிழ் பழமொழி ஒண்ணு நியாபகத்துக்கு வந்து தொலைக்குது!
 
ராகவன்,

டூரியன் பழத்தின் நாத்ததில் அந்த பழத்தை முழுவதுமாக சாப்பிடவில்லை. அதுவும் அந்த பழம் பயங்கர ஹீட். சாப்பிட்டு வாய் வயிறு எங்கும் புகை தான். ஆற அமர விரும்பி சாப்பிடுவது டூரியன் கேக் மட்டுமே.
 
மாயவரத்தான்,

//டுரியன் நாறுமா?! அடப்போங்கய்யா.. தமிழ் பழமொழி ஒண்ணு நியாபகத்துக்கு வந்து தொலைக்குது! //

அந்த பழத்தின் நாத்தத்தை உணர்ந்தால் பழமொழியே ஞாபகத்துக்கு வராதுன்னு நினைக்கிறேன்
 
அடப்பாவி, சரியான 'சாரு நிவேதிதாத்தன' ஆளா இருக்கிறீயே மக்கா, உம்மகூட சேர்ந்து சுத்துறதே தப்பு.

பாம்பு கறி கெடக்கீற இடம் எனக்கு நல்லாத்தெரியும். வாரும் அடுத்த வேட்டை அங்கெ வெச்சுக்கலாம், ஆனா அதைச் சாப்பிட்டப்புறம் 'படுக்கையில் பாம்பு நெளியுமாம்' பரவாயில்லையா? :-)

நல்லா எழுதியிருக்கெ மக்கா மொத்த விஷயத்தையும்! கிரேட்!

நமக்கு இப்போ ஆடு கோழியெல்லாம் திடீர்ர்ன்னு பாவமுன்னு தோண ஆரம்பிச்சுடுச்சி. அதனால கடற்பக்கம் கரை ஒதுங்க ஆரம்பித்துவிட்டேன். அதிலும் நண்டும் பிரானும் ஃபேவரைட்.

நத்தை ஒரு நாளோடு போச்சு. மத்த எதையும் சே சே தொடுறதில்லை.

மான், நரி, முயல், உடும்பு, கவுதாரி, காடை, ஆட்காட்டி இப்படி இருந்தது காலம், முன்னாடி.! இப்போ ஊருக்குப்போனா மோர்க்கஞ்சியும் மோர்மிளகாயும் கேக்குறேன்!

கொஞ்சம் போல பிலிக்குட்டி உள்ளே போனா, அசைவமா ஏதாவது அது கேக்கும், அதாவது புலி கேக்கும். அவ்ளோதான்! :-)


எம்.கே.குமார்
 
This comment has been removed by a blog administrator.
 
//பாம்பு கறி கெடக்கீற இடம் எனக்கு நல்லாத்தெரியும். வாரும் அடுத்த வேட்டை அங்கெ வெச்சுக்கலாம், ஆனா அதைச் சாப்பிட்டப்புறம் 'படுக்கையில் பாம்பு நெளியுமாம்' பரவாயில்லையா? :-)//

யோவ் குமாரு! நான் ரெடி. நீங்க ரெடியா.சாப்பிட்டுட்டு படுக்கையில நான் பாம்பா நெளியாம இருந்தா சரி :-))

புலிக்குட்டி புலிக்குட்டின்னு சொல்றியேப்பா. புலிக்குட்டிக்கு அடிமை ஆகி விட்டீரா? அதுக்கும் ஒரு நாள் மீட்டிங் போட்டிரலாமா?
 

உங்கள் கருத்துக்களை இட


<< திரும்ப முன் பக்கத்துக்கு போ

-ல் போட்டுத் தாக்கியது

இந்தியா எயிட்ஸில் வல்லரசாகலாம்?

Difficulty in reading this post due to font issues? Click here for a PDF copy. Works best if you right-click the link and select 'Save target as...'
இந்த பதிவை போட்டுத் தாக்கியவர் : Vijayakumar
டைம்ஸ் ஏசியாவில் வந்திருந்த ஒரு கவர் ஸ்டோரி படிப்பவரின் மனதை ஆட்டிப் பார்க்க தவறவில்லை. "Beyond Deniel-India's war on AIDS" என்று தலைப்பில் வந்த கட்டுரை இந்தியாவில் நிகழ்ந்துக் கொண்டிருக்கும் எயிட்ஸ் பாதிப்புகளை அரசாங்கம் குறைவாக மதிப்பிடுகிறது என்று சாடுகிறது. மூச்சுக்கு முன்னூறு தடவை பில் கேட்ஸை புகழ்ந்தும் அவர் எயிட்ஸ்க்காக ஒதுக்கிய பணத்தையும் வியந்தும் அந்த கட்டுரை அடிக்கடி பாராட்டினாலும் அவர்கள் பேச்சில் பொய்ப்புரை கலந்திருப்பதாக எடுத்துக் கொள்ள முடியவில்லை.


Image hosted by PicsPlace.to
Thanks: TimeAsia.com

பொத்தி வச்ச மல்லிகை மொட்டாக செக்ஸை மூடி வைத்திருக்கும் இந்திய சமூகம் உள்ளுக்குள் எயிட்ஸால் அழுகிக் கொண்டிருக்கிறது என்பதை நினைத்தாலே மனம் நடுங்குகிறது. இதே பொத்தி வைக்கும் நிலமை நீடித்தால் 2010-ஆம் ஆண்டிற்குள் இந்தியாவில் செழிப்பாக 20 மில்லியனிலிருந்து 25 மில்லியன் எயிட்ஸ் நோயாளிகளாகி வாழ்ந்தும் செத்தும் போய் கொண்டிருப்பார்கள். இந்தியா வல்லராசாகிறதோ இல்லையோ 2010-க்குள் 'உலகிலேயே அதிக எயிட்ஸ் நோயாளிகள்' என்ற பட்டத்தை பெருமையுடன் நாம் ஆப்பிரிக்காவிடமிருந்து பறித்துக் கொள்வோம்.

நிலமை இப்படியிருக்க, அரசாங்கம் எயிட்ஸ் என்பது வெளிநாட்டு நோய் எங்களவர்களுக்கு அதிகமில்லை,நிலமை கட்டுக்குள் தான் இருக்கிறது என்று கூறினாலும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களும், UN-ம் பல அதிர்ச்சி புள்ளி விவரங்களையும் அள்ளி விடுகின்றன. அரசாங்கள் 5.13 மில்லியன் எயிட்ஸ் நோயாளிகள் மட்டுமே இருக்கிறார்கள் என்று கூறும் அதே வேளையில் UN அது 8.5 மில்லியன் என்று கணித்து சொன்னாலும், டெல்லியை சார்ந்த NAZ Foundation அது 15 மில்லியனுக்கு பக்கத்தில் என்று கூறி மூர்ச்சையடைய வைக்கிறது.

கடைசி நிலையில் இருக்கும் எயிட்ஸ் நோயாளி
Image hosted by PicsPlace.to
Thanks: TimeAsia.com

அரசாங்கத்தின் கூற்றுப்படி 5.13 மில்லியன் எயிட்ஸ் நோயாளிகளில் 100,000 பேர் மட்டுமே தாங்களாக முன் வந்து எயிட்ஸ் பரிசோதனை செய்து HIV-ஐ உறுதிப்படுத்திக் கொள்கிறார்கள். இரண்டரை ஆண்டுகளுக்கு முன் பில் கேட்ஸ் 100 மில்லியன் டாலர்களை எயிட்ஸ்க்காக ஒதுக்கிய போது, நன்றி காட்டாமல் அரசியல்வாதிகள் "இது தப்பான புள்ளி விவரத்தின் அடிப்படையில் கூறுகிறார்" என்றும் "பீதியை கிளப்புகிறார்" என்றும் "கோடிக்கணக்கில் சம்பாதித்த பணத்தை எயிட்ஸ்க்கு நிவாரணம் என்ற பெயரில் இந்தியாவில் அவர் மருந்து தொழிற்சாலைகளை நிறுவ முயற்சிக்கிறார்" என்று தூற்றினார்கள்.

காமசூத்ராவிலிருந்து தாந்திரிக் ஆர்கஸம் என்பது வரை உலகுக்கு கற்பித்த இந்தியாவில் இன்னும் செக்ஸ் என்பது இலைமறை கனியாகவே இருக்கிறது. கலாச்சாரம் பண்பாடுகள் தான் இந்த மாதிரி கண்ட கண்ட நோய்களிலிருந்து காக்கிறது என்று மூடத்தனமான எண்ணத்தினால் மறைக்கப்பட்டாலும் நிலமை வேறுவிதமாக இருக்கிறது. ஒரின சேர்க்கைகளில் தெனிந்தியா கொடிக் கட்டி பறக்கு அதே வேளைகளில் ஆண்கள் பிராத்தால்களை தேடிப் போவதும், மனைவிகளை குழுக்களில் மாற்றிக் கொள்வதும், ஹைகிளாஸ் சொசைட்டி செக்ஸ் என்பதும், அது போக மிடில் கிளாஸ் பெண்கள் செக்ஸை தேடி டீன் - ஏஜர்களை நோக்கி போவதும் என பல உண்மைகளை பத்திரிக்கை வாயிலாக நாம் அறிந்து தெரிந்தும் கொண்டுதானியிருக்கிறோம். இன்னும் கற்பனைக்கு எட்டாத நிறங்களில் இந்த செக்ஸ் இந்தியாவில் மறைத்து உலவிக் கொண்டிருக்கின்றன என்கிறார்கள்.

குஷ்வந்த் சிங் ஜோக் ஒன்று ஞாபகம் வருகிறது. "செக்ஸ் முடித்தவுடன் என்ன செய்வீர்கள்?" என்று அபிப்ராயம் கேட்டறிய ஒரு குழு இந்தியாவில் இறங்கியது. அதில் கொஞ்ச பேர் சொன்னார்கள் "நான் ரிலாக்ஸாக குளிப்பேன்" என்றார்கள். சில பேர் சொன்னார்கள் "வயிற்றுக்கு ஏதாவது ஆகாரம் சாப்பிடுவேன்" என்றார்கள். ஆனால் நிறைய பேர் சொன்னார்கள் "நான் வீட்டிற்கு போவேன்". இந்த நிலமை ஆண் பெண் இருபாலருக்கும் பொருந்தும். கணவனுக்கு தெரியாமல் மனைவியும், மனைவிக்கு தெரியாமல் கணவனும் வேறு வேறு ஆட்களுடன், பல பேருடன் உறவு வைத்திருப்பவர்கள் இந்தியாவில் அதிகம் பேர் இருக்கிறார்கள் என்பதை நம்பாமல் இருக்க முடியவில்லை. இவைகள் எல்லாம் தான் இந்தியாவில் எயிட்ஸ் வேகமாக பரவுவதற்கு காரணமா? கொஞ்சம் ஆழ்ந்து யோசித்தால் 'ஆம் செக்ஸ் அறிவு இல்லாததும்' தான் விடையாக வரும்.

எயிட்ஸ் நோயாளிக்கு வைத்தியம்
Image hosted by PicsPlace.to
Thanks: TimeAsia.com

மும்பையில் அதிகமாக பணம் புரளும் கைகள், அதை செலவழிக்க அவர்கள் நாடிச் செல்லும் பார்கள், அதில் 80,000 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் மும்பையைச் சுற்றியுள்ள ஆயிரக்கணக்கான பார்களில் ஆடுகின்றனர். அந்த ஆட்டத்தில் ஆபாசம் கிடையாது, தொடுதல் கிடையாது. வாடிக்கையாளர் ராஜா தோரணையில் சோபாவில் சாய்ந்துக் கொண்டு ஆட்டத்தை ரசிப்பார். பல நூறு ரூபாய் நோட்டுக்கள் ஆடும் பெண்மணியின் மீது மழையாக பொழியும். கடைசியில் ஒவ்வொரு கஸ்டமரும் ஏதாவது ஒரு ஆட்டக்காரியுடன் உறவுக் கொள்ளாமல் திரும்ப மாட்டார்கள். பார் முதலாளிகள் இதை வெளியில் தெரியாமல் செய்தாலும் பாதுக்காப்பான உறவை வலியுறுத்துவதால் எயிட்ஸ் 10%-க்கு கீழே இருப்பதாக டைம்ஸ் பத்திரிக்கை சொல்கிறது. ஏப்ரல் 12-ல் மகராஷ்ட்ராவின் துணை முதல்வர் R.R.படேல் "இது இளைஞர்களை சீரழிக்கிறது" என்று இந்த பார்களை இழுத்து மூடப்போவதாக அறிவித்திருந்தது. இந்த நிலைமைக்கு அவர் சென்றால் பார் ஆட்டக்காரிகள் மும்பை சிவப்பு விளக்கு பகுதியில் சென்று சேர எயிட்ஸ் தொழிற்சாலை அங்கு சூடு பிடிக்கலாம் என கணிக்கிறது.

இந்த பிரச்சனைகளில் அலிகளின் முக்கிய பங்குப் பற்றியும் விவாதிக்கிறது அந்த கட்டுரை. தனி சமூகமாக்கப்பட்டு ரேஷன் கார்டு, ஓட்டு உரிமை" என்ற எந்த உரிமையும் அனுபவிக்க முடியாமல் பரிதவிக்கும் அலிகள் சமூகம் ஏறக்குறைய நிறைய பேர் பாலியல் தொழில்களிலேயே ஈடுபடுகின்றனர். நீலு என்ற 26 வயது அலி சொல்லும் போது சென்னை இரயில் நிலையங்களில் அங்குமிங்கும் நின்று 20 ஆண்கள் வரை ஒரு நாளைக்கு சமாளிக்கும் அவருக்கு கூலி ஒரு தலைக்கு 10-லிருந்து 20 ரூபாய் தான். அவர்களை நாடி வரும் கஸ்டமர்கள் கூட அவர்களுடன் பேச விரும்பாத நிலையில் தன்னார்வ நிறுவனங்கள் எயிட்ஸ் பிரச்சனைக்காக அவர்களை கவனிப்பது மகிழ்ச்சி அளிப்பதாக கூறுகிறார் நீலு.

படுக்கையிலிருந்து விழுந்தவர் எழுந்திருக்க கூட முடியாமல்
Image hosted by PicsPlace.to
Thanks: TimeAsia.com

எயிட்ஸ்க்கு மருந்து என்ற நிலமையை விட தடுப்பு மருந்து தயாரிக்கும் நோக்கத்தில் தான் இருக்கிறது International AIDS Vaccine Initiative(IAVI). இந்த தடுப்பு மருந்து மனிதர்களின் மேல் சோதிக்கும் முயற்சி ஏற்கனவே இந்தியாவில் ஆரம்பித்து விட்டது. IAVI-ன் தலைவர் சேத் பார்க்ளே "எயிட்ஸ்க்கு தடுப்பு மருந்து தான் சாத்தியமா? குணமாக்கும் மருந்துக்கு சாத்தியம் இல்லையா?" என்ற கேள்விக்கு "எங்களிடம் பூட்டு தான் இருக்கிறதே தவிர சாவி இல்லை" என்கிறார்.

எயிட்ஸ் விசயத்தில் அசிரத்தையாக இருக்கும் இந்திய அரசாங்கம் எந்த விதத்தில் வளர்ந்து வரும் எயிட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தப் போகிறதோ தெரியவில்லை. இந்தியா வல்லராசாகிறதோ இல்லையோ எயிட்ஸ் விசயத்தில் அதிக சிரத்தை எடுக்க வேண்டும். அவர்கள் மூடிய போர்வையிலிருந்து வெளிவந்து துணிச்சலான நடவடிக்கை எடுப்பதை தலையாய கடமையாக கொள்ளட்டும்.

மேலும் பல விசயங்களை தெரிந்துக் கொள்ள இங்கே க்ளிக்கவும்.

ஆசியாவின் எயிட்ஸ் பிரச்சனையைப் பற்றிய சிறு படத்தொகுப்பு இங்கே. (சென்சார் செய்யப்பட வேண்டியிருப்பதால் பொது இடத்தில் பதிவை படிப்பவர்கள் கொஞ்சம் உஷார்)

இந்த பதிவின் வாக்கு எண்ணிக்கை: . பக்கத்திலுள்ள ஸ்டாரை மவுசால் போட்டுத் தாக்கினால் எனக்கு மவுசு ஏறும். நன்றி:-)

உங்கள் கருத்துக்களை இட

திருப்பி தாக்கியவர்கள்:
HIV is 'out of control' in India - "BBC" 19 April 2005

Clinton lauds India Aids campaign - "BBC" 26 May 2005

--
Navan Bhagavathi
 
அவசியமான நேர்த்தியான பதிவு விஜய். நான் இதைப்படித்தபின் எழுத எண்ணியிருந்தேன். நீங்கள் நன்றாக எழுதியிருக்கிறீர்கள்.

இன்னும் கலச்சார குன்றாக நம்மை நாமே எண்ணிக்கொண்டு அடுத்தவரை எல்லாம் ஒழுக்கங்கெட்டவர்கள் என்று சொல்லிக்கொண்டு பொத்தி வைத்து நமது அழுகல்களை சமாளித்து வந்தால் நிலமை மோசமாகும். செக்ஸ் கல்வி, பாலியல் தொழிலை அங்கீகரித்து முறைப்படுத்துதல், ஓரினைச்சேர்க்கையாளர்களை அங்கீகரித்தல், திருமணத்தைப் பற்றிய மாற்று சிந்தனை, இந்திய மருத்துவமுறைகளில் இருக்கும்/ இருந்த மருந்துக்களை மீளக்கண்டுபிடித்து ஆய்வுகளை மேற்கொண்டு பயன்படுத்துதல், குடும்பக்கட்டுப்பாடு பிரச்சாரம் போன்று பாரிய அளவில் மக்களிடம் கொண்டுசெல்லல், ஆணாதிக்க சிந்தனைகளுக்கு எதிரான கடுமையான பிரச்சாரம், கல்வி இவைகளை இந்தியா உடனே மேற்கொள்ள வேண்டும்.

பதிவுக்கு நன்றிகள்!
 
முக்கியமான இன்னொன்று விடுபட்டு விட்டது. அது மிகப்பெரிய அளவில் பெண் கல்வியை ஊக்குவித்தலும், அதிகப்படுத்துதலும் மிக அவசியமானது.
 
விஜய்,

இது ஒருபக்கம் கஷ்டமா இருக்குன்னா, அடுத்தபக்கம் அவுங்க பிள்ளைங்களும்
இந்த நோயால் பாதிக்கப்பட்டு, உறவினர்களால் வெறுத்து ஒதுக்கப்பட்டு அனாதைகளா
ஆயிடறாங்களே!!!

நம்ம நண்பரும் அவர் மனைவியும் அவுங்க செஞ்சுக்கிட்டிருந்த வேலையை விட்டுட்டு
இப்ப சென்னையிலே இருக்கற 'எய்ட்ஸ் ஹோம் ( பேரு ஹோப் ஃபவுண்டேஷன்)லே
வேலை செஞ்சுக்கிட்டு இருக்காங்க!

என்ன கண்ராவிப்பா!!!! அந்தப் புள்ளைங்களைப் பாக்கறப்பவே மனசு பிழிஞ்சுடுது.
 
//கலாச்சாரம் பண்பாடுகள் தான் இந்த மாதிரி கண்ட கண்ட நோய்களிலிருந்து காக்கிறது என்று மூடத்தனமான எண்ணத்தினால்//

மிகச்சரியாக கூறினீர்கள்,

மிக நல்ல மற்றும் அவசியமான பதிவும் கூட
 
பண்பாட்டைக் கட்டிக் காக்க முயல்வதால்தான் எய்ட்ஸ் பெருகுகிறது என்பதும் பொயானதே. கீழ்க்காணும் நாடுகளில் சவுதி மிகவும் காட்டமாக க(ல்)லாச்சாரத்தை கடைப்பிடிக்கிறது அதே போல் தான் நைஜீரியாவும் ஆனால் அவற்றின் எய்ட்ஸ் விகிதங்கள் இரு துருவம் போல் உள்ளன. அதே போல் பண்பாடுகளைத் தளர்த்தியுள்ள நாடுகளானா நெதர்லாந்தும் தென் ஆபிரிக்காவும்.

HIV/AIDS - adult prevalence rate:

Saudi Arabia - 0.01%
Nigeria - 5.4%
South Africa - 21.5%
Netherlands - 0.2%
Pakistan - 0.1%
India - 0.9%

source: cia.gov (world fact book).
 
பண்பாட்டைக் கட்டிக் காக்க முயல்வதால்தான் எய்ட்ஸ் பெருகுகிறது என்பதும் பொயானதே. கீழ்க்காணும் நாடுகளில் சவுதி மிகவும் காட்டமாக க(ல்)லாச்சாரத்தை கடைப்பிடிக்கிறது அதே போல் தான் நைஜீரியாவும் ஆனால் அவற்றின் எய்ட்ஸ் விகிதங்கள் இரு துருவம் போல் உள்ளன. அதே போல் பண்பாடுகளைத் தளர்த்தியுள்ள நாடுகளானா நெதர்லாந்தும் தென் ஆபிரிக்காவும்.

HIV/AIDS - adult prevalence rate:

Saudi Arabia - 0.01%
Nigeria - 5.4%
South Africa - 21.5%
Netherlands - 0.2%
Pakistan - 0.1%
India - 0.9%

source: cia.gov (world fact book).
 
நவன்,

இந்த கட்டுரைக்கு தொடர்புள்ள சுட்டிகளுக்கு நன்றி. கிளிண்டன் இந்தியாவின் எயிட்ஸ் தடுப்பு நடவடிக்கைகளை பாராட்டினாலும், உண்மை என்னவோ வேறுவிதமாக இருக்கலாமென தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் கருதுகின்றன. அரசின் புள்ளி விவரங்களை எப்படி நம்புவது? களப்பணிகளில் இருக்கும் ஆர்வலர்கள் சொல்லுவது தான் சரியென தோனுகிறது.
 
தங்கமணி,

நான் கட்டுரை ஒட்டியே இந்த பதிவை எழுதினேன். கட்டாயமாக உங்கள் பார்வை இன்னும் விசாலமாக உங்கள் பதிவில் சொல்லப்படலாம். இதைப் பற்றியும் பதியுங்ளேன்.

நீங்கள் சொல்லும் கருத்துக்கள் அனைத்தும் ஏற்புடையது. நன்றி.
 
துளசியக்கா,

எயிட்ஸால் பாதிக்கபட்ட பெரியவர்களின் எண்ணிக்கைக்கு ஏறக்குறைய சமமாக பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை இருக்கிறது. பெற்றோர்கள் செய்யும் தவறு ஒன்னுமறியாத பச்சிளங்களை காவு வாங்குகிறது என்று அறிந்தால் நம்மால் கண்ணீர் விட முடியாமல் இருக்க முடியாது.

நன்றி குழலி.
 
அனானிமஸ்,

பண்பாடு என்ற பெயரில் செக்ஸ் பற்றிய அறிவுகள் பொத்தி வைக்கப்படுவதாலும், செக்ஸ் என்பது மிகப்பெரிய குற்றம் என்று பார்க்கப்படுவதும் முறையற்ற உறவுக்கு அடிகோலுகிறது. முறையற்ற/பாதுகாப்பற்ற உறவே எயிட்ஸ்க்கு வழிவகுக்கிறது. மேலே தங்கமணி அவர்களின் பின்னூட்டத்தையும் பார்க்கவும். சவுதியில் கலாச்சாரம் கடுமையாக கடைப்பிடிக்கும் அதே வேளையில் கலாச்சாரத்தை மீறினால் கொடுக்கப்படும் தண்டனையும் எவ்வளவு கொடுமையானது என்று ஒப்பிட வேண்டும் என்பது என் கருத்து. நைஜீரியாவின் நிலமை தெரியவில்லை. கலாச்சாரம் என்பதை பொருட்டாக கருதாத நாடாக இருந்தாலும் எயிட்ஸ் பற்றிய விழிப்புணர்ச்சி இல்லாதவர்களுக்கும் அதே நிலை தான். விழிப்புணர்வு என்பது கொஞ்சம் அறிவு சார்ந்த விசயமாகையால் அந்நாட்டின் கற்றோர்களின் எண்ணிக்கையும் பொருத்து அமையலாம். பண்பாடு,கலாச்சாரம் என்பது எயிட்ஸ்க்கு ஒரு Factor. அதுபோகவும் நிறைய Factors இருக்கலாமில்லையா?

நம்ம மக்களிடையே செக்ஸ்/எயிட்ஸ் பற்றிய விழிப்புணர்வை மாத்ருபூதம் ஜோக்காக ஒரிடத்தில் சொல்லி இருந்தார். அதாவது எயிட்ஸ் விழிப்புணவுக்கு லாரி, வண்டி ஓட்டுபவர்களுக்கும், கிராமபுறத்திலும் பாதுகாப்பான உறவுக்கு எப்படி ஆணுறை உபயோகப்படுத்த வேண்டும் என்பதை கை விரலில் மாட்டி Demo செய்து காண்பித்தார்களாம். அந்த Training-ல் கலந்துக் கொண்டவர் சிறிதுநாள் கழித்து பாலியல் நோயிடன் வர, பாதுகாப்பு முறைகள் சொல்லிக் கொடுத்தோமே இருந்தும் எப்படி நடந்தது என்று விசாரிக்கும் போது, அவர் முறையற்ற உறவு கொள்ளும் போது Training-ல் சொல்லிக் கொடுத்த மாதிரி கை விரலில் ஆணுறை மாட்டி உறவுக் கொண்டாராம்.

எப்படியிருக்கிறது பாதுகாப்பான செக்ஸ்ஸைப் பற்றிய விழிப்புணர்வு?
 
இந்தியாவில் எயிட்ஸ் சம்பந்தப் பட்ட செய்திகளும் மற்றும் பல விவரங்களைப் பற்றியும் தரும் ஒரு ஆங்கில வலைப்பூ http://aidsindia.blogspot.com/

நேரமிருக்கும் போது படித்துப் பாருங்கள்
 
சுட்டிக்கு நன்றி கோபி. நேரம் கிடைக்கும் போது போய் படித்துப் பார்க்கிறேன் சார்.
 
நேற்றைய சன் நியூஸில் இந்தியாவில் வளர்ந்து வரும் எயிட்ஸ் பிரச்சனைக்கு மந்திராபேடி மற்றும் இன்னொரு ஹிந்தி நடிகரும்(பெயர் தெரியவில்லை) எயிட்ஸ் விழிப்புணர்வு விளம்பர படத்தில் நடித்துள்ளதாக சொன்னார்கள். பாலியல் தொழிலாளிகளுக்கு மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் குழுக்கள் இருந்தாலும் குடும்ப பெண்மணிகளுக்கு இதைப்பற்றிய விழிப்புணர்வு கொண்டுவருவதும் இந்த விழிப்புணர்வு படத்தின் நோக்கம் என்றார்கள்.

அந்த குழுவுக்கு என் நன்றிகளும் வாழ்த்துக்களும்.இது மகத்தான பணி.
 

உங்கள் கருத்துக்களை இட


<< திரும்ப முன் பக்கத்துக்கு போ

This page is powered by Blogger. Isn't yours? தமிழ் அசைபட இணையச் செயலி தமிழ் விக்கிபீடியா

-->