<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar/9439067?origin\x3dhttp://halwacity.blogspot.com', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script> <!-- Remove below comment line to show the content. Added for meta redirection --> <!--

போட்டுத் தாக்கு!!!!!

எள்ளோடு எலி புழுக்கையும் எண்ணைக்காக காயுதாம்

-ல் போட்டுத் தாக்கியது

ஹாக்கர்(Hawker) உணவு=சிங்கப்பூர்

Difficulty in reading this post due to font issues? Click here for a PDF copy. Works best if you right-click the link and select 'Save target as...'
இந்த பதிவை போட்டுத் தாக்கியவர் : Vijayakumar
(இந்த பதிவு Nonvegeterian-களுக்கு மட்டும்)


நடப்பன, ஊர்வன, பறப்பன, நீந்துவன போன்றவற்றில் ஏதாவது ஒன்றை கடித்துக் கொள்ளவிட்டால் சாப்பாடு ஏனோ லாவகமாக என் வயிற்றுக்குள் இறங்காது. சிறுவயது முதலே நான் பகுதி நேர மாமிசப்பட்சினியாக வளர்க்கப்பட்டு விட்டதால் வாரத்தின் ஞாயிற்றுக் கிழமை மட்டுமே மாமிசத்திற்கு தவமிருந்த என் வயிறு, படிப்பை முடித்து விட்டு கூட்டை விட்டு பறந்து சென்ற பிறகு ஏதாவது மாமிசம் இல்லாவிட்டால் அது உணவை முற்றிலும்அனுமதிக்கவில்லை. எங்கள் வீட்டில் ஞாயிற்றுக்கிழமை மட்டும் அசைவ உணவு கட்டாயம் உண்டு. குழம்பிலும்,குருமாவிலும்,வருவலிலும் ஏற்கனவே விலங்குகளின் அனாட்டமி(Anatomy) படித்து விட்டதால் கால்நடை மருத்துவம் வேண்டாமென்று ஒதுக்கி விட்டு பொறியியல் படித்தவன்.

ஏறக்குறைய இரண்டரை வருட அமெரிக்காவாசம் பல வகை உணவுகளை அசூயையின்றி விட்டு விலாசுவதற்கு கற்றுக் கொடுத்திருந்தது. சாப்பாட்டை ஊடுகட்டி என்னால் சாப்பிட முடியாவிட்டாலும் பரிசோதனையாக எல்லா வகை உணவுகளையும் ஒரு கைப்பார்க்கும் திறம் என்னையும் மீறி வளர்ந்திருந்தது. நல்ல வேளை காந்தி "வெளிநாட்டில் புலால் உண்ணமாட்டேன்" என்று அன்னைக்கு கொடுத்த வாக்குறுதி மாதிரி நான் எதுவும் கொடுக்கவில்லை. வாய் தவறி பீப்(Beef) சாப்பிட்டேன் என்றால் "கண்டதை சாப்பிட்டு உடம்பைக் கெடுத்துக்காதே" என்பார் என் அன்னை. 2 காலோ, 4 காலோ மனிதனை விட குட்டியாக நடந்து சென்றால் நல்ல உணவு, அதுவே உருவத்திலும்/எடையிலும் கொஞ்சம் பெரிசாக இருந்தால் அதன் பெயர் "கண்டது". ஆகவே இனிமேல் யாரிடமும் சொல்லாமல் ஒரு கை பார்க்க வேண்டும் என்று என் மனது அப்போதே தயாராகி விட்டது.

சைவ உணவுகளால் விளையும் நன்மைகள், அசைவ உணவுகளால் விளையும் தீமைகள் என்பது நாக்குக்கு தெரியாது. என் மூளை நாக்குக்கு அடிமை என்பதால் நான் எப்போதுமே இந்த விசயத்தில் "Don't care". அமெரிக்காவுக்கு புதிதாக வரும் சைவர்கள் உணவுக்கு அல்லல்படுவதை மனதின் ஒரு ஓரத்தில் குரூரமாக ரசித்துக் கொண்டே கிடைக்கும் உணவுகளை பெருமிதத்துடன் சாப்பிடுவேன். அது நான் எப்போதும் பின்பற்றும் சாடிஸம். மீன்,கோழி,ஆடு போன்றவற்றை மட்டுமே சுவைத்திருந்த என் நாக்கு மெல்ல மெல்ல பீப்(Beef), போர்க்(Pork), டர்க்கி(Trukey) என்று புதியவகை உணவுக்கு ஏற்ற பரிணாமம் அடைந்தது அமெரிக்காவில் தான். அங்கு பேச்சுலராக வாழ்ந்ததால் பாதி நேரம் வெளியிலும், மீதி நேரம் அறைவாசிகளுடன் ஈகோ மோதல் ஏற்பட்டு சமைக்காமல் உறைய வைத்த உணவுகளை மட்டுமே சாப்பிட்டு காலம் தள்ளினேன். வெறும் அசைவத்திற்கு சைடிஸ் வேண்டுமென்று பியரும் சேர்ந்து என்னுடன் கலக்கியதில் கூடவே குட்டியாக தொப்பையும் வளர ஆரம்பித்தது. தொப்பை வைத்துக் கொள்வது பிரஸ்டீஜ்க்கு நல்லது ஆகையால், அப்படியே விட்டுவிட்டேன். கல்யாண சமயத்தில் எல்லோரும் செய்வதை போல 'தொப்பை குறைப்பு' விளிப்புணர்வு ஏற்பட, நோ சான்ஸ் இறுதியில் சோம்பலே வென்றது.

பர்க்கர்,பீசா,டாக்கோஸ்கள் போரடிக்க ஆரம்பித்ததும் சைனீஸ் உணவுகள், மெக்சிகன் உணவுகள், ஜப்பானீஸ் உணவுகள் என்று பலவற்றையும் சோதிக்க ஆரம்பித்தேன். எனக்கு மிகுந்த சிரமம் கொடுத்து பிறகு காதலாகிப் போனது ஜப்பானீய உணவு வகைகள் தான். வேக வைக்காத சால்மன் (Solmon) மீனை அழகாக ஏதோ அரிசி வகையில் சுருட்டி பல வண்ணங்களில் டப்பாவில் அடைத்து ஐஸின் மேல் வைத்திருக்கும் சூசி(Sushi)-ஐ பார்த்து பார்த்து மனம் ஏங்கியது. ஒரு நாள் சூசி வாங்கி சாப்ஸ்டிக்கில் சாப்பிட தெரியாமல் முள் கரண்டியில் குத்தி சாப்பிட்டு பார்த்தேன். ஒகே ரகம். அதற்கு பக்கத்தில் துவையல் மாதிரி ஏதோ இருக்க, அப்படியே எடுத்து மொத்தமாக வாயில் போட்டதில் கந்தகத்தை முழுங்கிய காட்டம் என் உச்சி மூளையை தாக்க முகத்திலிருக்கும் அத்தனை ஓட்டையிலும் நீர்வரத்து அதிகமாகியதை என்னுடைய அலுவலக அன்பர்கள் விநோதமாக கண்டு ரசித்தனர். பிறகு அதைப்பற்றி ஆராய்ச்சியில் இறங்க, அது 'வசாபி' எனப்படும் ஜப்பானிய கடுகை துவையலாக அரைத்திருக்கிறார்கள் என்று தெரிந்தது. இன்னும் பலருடன் ஜப்பானிய ரெஸ்டாரண்டுக்கு போய் பழகியதில் அந்த வசாபி துவையலை சோயா சாஸில் கரைத்து நீர்த்துப் போக செய்து சூசிக்கு சட்டினி மாதிரி தொட்டுச் சாப்பிட வேண்டுமென தெரிந்தது. அப்புறம் சூசிக்கு நான் அடிமை.

உலகத்தின் எந்த மூலைக்கு சென்றாலும் எனக்கு உணவு பிரச்சனை இருக்காது என்றதில் சிங்கப்பூர் ஒரு அடி கொடுத்து "உன்னாலும் சிலவற்றை சாப்பிட முடியாதுடா மடையா!!" என்று திட்டியது. அந்த விசயத்துக்கு பிறகு வருகிறேன். இப்போது "உணவுகளின் சொர்க்கம்" சிங்கப்பூரை பற்றி பார்ப்போம்.


span >சிங்கப்பூரின் ஒரு ஹாக்கர் செண்டர்


ஆங்கொன்றும் இங்கொன்றுமாக உணவு கடைகளை அமெரிக்காவில் பார்த்துவிட்டு அடிக்கு ஒரு உணவுக்கடைகளை சிங்கப்பூரில் பார்த்ததும் என் மகிழ்ச்சி தலைவிரித்தாடியது. சிங்கப்பூரில் பெரும்பாலானோர் கணவன் மனைவி இருவரும் வேலைக்குப் போவதால் அவர்கள் கிட்சனை துடைத்து அழகாக கோலம் போட்டு கலைக்காமல் அழகு பார்ப்பார்கள். எல்லா வேளையும் வெளியில் தான் சாப்பாடு என்பதால் இங்கு உணவு தொழிற்சாலை கொடிக்கட்டிப் பறக்கிறது. இங்கு எங்குப் பார்த்தாலும் உணவுகளை கூவி கூவி விற்கும் ஹாக்கர் செண்டர்கள் இருக்கும். சிறுசும் பெருசுமாக சிங்கப்பூரை சுற்றியுள்ள உணவு விடுதிகள் பல ஆயிரங்களை தேறும். மனைவிக்கு ஊருக்கு போன பின் எல்லா நேரமும் வெளியில் சாப்பிட வேண்டும் என்ற நிலமைக்கு வந்த பின், என் நாக்கு மீண்டும் மீண்டும் ராட்சதனாக உயிர் பெற்று எழுந்தது.

இட்லி தோசை, இடியாப்பம்,புட்டு என்று இந்திய உணவு வகைகள் எங்கும் கிடைக்கும் என்ற நிலை இருந்தாலும் சீன,மலேய பாஸ்புட் வகைகள் ஒர் ஆயிரத்துக்கும் மேல். இந்தியனோ, சீனனோ, மலேயனோ எந்த உணவு கடைக்கு சென்றாலும் தட்டில் குவியல் குவியலாக வைத்திருக்கும் உணவு வகைகள்(குறைந்தது 8 வகைகள்). எங்கும் சோறு கிடைக்கும். குவித்து வைத்திருக்கும் உணவு வகைகளில் எந்த எந்த வகை வேண்டும் என்று சுட்டிக்காட்ட அவரும் சோறு வைத்திருக்கும் அதே தட்டில் நீங்கள் கேட்ட சைடிஸ்களை குவித்து தந்து நீங்கள் அதை தூக்கிக் கொண்டு வரும்போது அது அப்படியே பிச்சைகாரன் தட்டுப்போல பலவெரைட்டியில் காட்சியளிக்கும். கோமளாஸ், ஆனந்தபவன், அன்னபூர்ணா என்று பல இந்திய ரெஸ்டாரண்டுகள் இருக்கும். அவையெல்லாம் போரிங். KFC, மெக்டொனால்ட்,பர்கர் கிங் எல்லாம் எப்போதாவது. ஆனால் ஹாக்கரில் கிடைக்கும் உணவுகள் தான் மஜா.

மீ கோரிங், நாசி கோரிங், நாசி லெமாக், கெத்தியோ, ஹொர்பன்,நாசி படாங், டாம்யாம் சூப்,முர்தாபா,டக் ரைஸ், பிரைட்ரைஸ்கள், டோஃபூ, பிரைட் வெரைட்டிகள், சிக்கன் சாத்தே, பொரிட்ஜ் வெரைட்டிகள் என்று பலவற்றையும் சுவைத்து மகிழ்ந்த நிலையில் என் நாக்குக்கும் சோதனை வந்தது.

சிக்கன்,பீப்,மட்டன்,போர்க் என்ற வரிசையில் ஆமைக்கறி,தவளைக்கறி, முதலைக்கறி, ஆக்டோபஸும் சிங்கப்பூரில் கிடைக்கிறது. இந்த மெனு வகைகளை பார்த்ததும் என் நாக்கின் கொட்டமும் அடங்கியது. பாம்பு என்பது கொஞ்சம் பளபளவென்று அழகாக இருப்பதால் அதை சாப்பிடும் ஆசையில் அசூயை ஏற்படவில்லை. ஆனால் ஆனால்.... தவளையும் முதலையும்.... நினைத்துப் பார்க்க கொஞ்சம் கஷ்டமாக இருக்கிறது. காரணம் அதன் தோல் சொரசொரவென்று நீர் ஊறியிருப்பதால் தான் என நினைக்கிறேன். நெடுநாளாக பாம்புகறி சாப்பிட வேண்டும் என்ற ஆசையிருக்கிறது. நானும் சிங்கப்பூரில் தேடு தேடென்று தேடுவிட்டேன் கிடைக்கவில்லை. அது ஜப்பானிலும்,கொரியாவிலும் தான் கிடைக்கும் என்ற பதில் வந்தது. [வேண்டுகோள்: சிங்கப்பூர்வாசிகளுக்கு இதைப்பற்றி தெரிந்தால் எனக்கு ஒரு தனிமின்னஞ்சல் தட்டிவிடவும்].

அதிலும் முதலைக்கறி என்பது பெரிய முதலையிலிருந்து இல்லையாம். முதலை குஞ்சு என்று சொன்னார்கள். அது சாப்பிட்டால் ஆஸ்துமாக்கு நல்லதென்று வேறு என் அப்பார்ட்மெண்டுக்கு கீழிறுக்கும் ரெஸ்டாரண்டில் நோட்டீஸ் ஒட்டியிருந்தார்கள். இவ்வளவு நாள் கழித்து இப்போது தான் தவளை சாப்பிட எனக்கு கொஞ்சம் தைரியம் வந்திருக்கிறது. அது தகுந்த துணையுடன் போய் பரிசோத்தித்து விடலாமென நினைத்திருக்கிறேன்.

சிங்கப்பூர் மக்களுக்கும் வாயில் நீர் ஊறவைக்க வேண்டுமானால் "மீன் தலைக்கறி" என்று சொல்லிப்பாருங்கள். ஆக குறைந்தது S$25-லிருந்து கிடைக்கிறது. ஒரு மீன் தலைக்கறி வாங்கி குடும்பமே அதை சூழ்ந்து கபளீகரம் பண்ணுவது சிங்கப்பூரர்களுக்கு பரிபூரண சாப்பாடு. பெரிய்ய்ய்யய மீன் தலை 'ஆ'வென்று வாய்பிளந்து குழம்பில் மிதக்க, வாயில் செர்ரி பழத்துடன் கொண்டுவந்து வைக்கும் அழகே அழகு. 'முத்துஸ் கறி' ரெஸ்டாரண்ட் அதுக்கு பேமஸ்.

நெளி நெளியாக நீந்தும் மீன் வகைகளில் Squid-ம், ஆக்டோபஸும் அதிகமாக கிடைக்கிறது. சவக் சவக்கென்று ரப்பராக இருக்கும் squid என்னுடைய ரெகுலர் உணவில் அதுவும் ஒன்று. பணியாரமாக சுட்டு ஆக்டோபஸை உள்ளே வைத்து சமைக்கும் ஜப்பானிய உணவை சுவைக்கும் வாய்ப்பு கிட்டவில்லை. சிப்பிகளையும், நத்தைகளையும் சுவைத்தாகி விட்டது. சிப்பியை பிளந்து உள்ளே வெந்திருக்கும் சிப்பியை ஒரு உறி உறிந்தால்... ஆகா... பிரான்(Prawn) தோத்து விட்டது போங்க. எல்லா உணவுகளில் கட்டாயம் இடம் பெறும் ஒன்று நெத்திலி வகை (IKON BILIS) கருவாடும் ஒன்று. நாம் எப்படி வாசனைக்காக வெங்காயம் சேர்ப்போமோ அது மாதிரி நெத்திலி மீன் எங்கும் எதிலும் உண்டும். என் தாயார் சிங்கப்பூர் வந்து இந்த கருவாடு தான் முக்கியமாக வாங்கிச் சென்றார்.


கறியாக ரெடியாக இருக்கும் தவளைகள்


தவளைகளை உணவு விடுதியில் தொட்டியில் போட்டு வைத்திருப்பது போலவே மெகா சைஸ் நண்டுகளை உயிருடன் கட்டிப்போட்டிருப்பார்கள். நீங்கள் உங்களுக்கு பிடித்த நண்டை சுட்டிக் காட்ட சுவையான பதார்த்தமாக அதை மாற்றி தருவார்கள். அதில் Chilly Crab சூப்பர்.


ஊரும் நண்டே உணவாகப் போகிறாயா?

கொஞ்சம் நாள் முன்பு மலேசியாவில் புலிக்கறி கிடைக்கிறதென்று சொல்லி ஒரு நியூஸ் வந்தது. புலி மயிர் முதல் கறி வரை பல பயன்பாடுகளையும் விவரித்திருந்தார்கள். புலியின் மீசை மயிறு பல்லின் இடுக்கில் குத்திய புலிக்கறியை குத்தி எடுக்க உதவுகிறதாம். மேல் விவரங்களுக்கு இங்கே.


டூரியன் பழமும் நாத்தமும்

அப்புறம் ஊரெல்லாம் நாறும் ஒரு விசயம் டூரியன் பழம். சிங்கப்பூருக்கு ஒரு வாசம் இருக்குமென்றால் அது டூரியன் பழத்தின் வாசமாக(நாற்றமாக)த் தான் இருக்கும். பலாப்பழத்தை போல தோற்றமளிக்கும் டூரியன் பழம் ஆசியாவின் ஒரு சில இடங்களில் மட்டுமே கிடைக்கிறது. பழங்களின் ராஜா என்றழைக்கப்படும் டூரியனின் நாற்றம் குடலைப்பிரட்டினாலும் அதை மிகுந்த மோகத்துடன் சாப்பிடுகிறார்கள். ஒரு தடவை சாப்பிட முயற்சித்து நாள் முழுக்க வாய் நாற்றத்துடன் அலைந்தது வேறு விசயம். டூரியன் வயக்கராக்கு ஈடு என்று சில நம்பிக்கைகளும் இங்கு உண்டென்று கேள்விப்பட்டுள்ளேன்.

என்னமோ போங்க... இப்போதெல்லாம் சாம்பர், ரசம், கொழம்பு என்று எதுவுமே பிடிக்கவில்லைங்க.

வாங்க சார் வாங்க சார்... வாங்கம்மா.. வாங்கம்மா.. சில்லி கிராப்... சில்லி கிராப்.... வாங்க சார் வாங்க சார்... வாங்கம்மா வாங்கம்மா.. டேஸ்டி பிராக்(Frog) டேஸ்டி பிராக் வாங்க வாங்க வாங்க.... டேஸ்டி டேஸ்டி... வாங்க வாங்க.

இந்த பதிவின் வாக்கு எண்ணிக்கை: . பக்கத்திலுள்ள ஸ்டாரை மவுசால் போட்டுத் தாக்கினால் எனக்கு மவுசு ஏறும். நன்றி:-)

உங்கள் கருத்துக்களை இட

திருப்பி தாக்கியவர்கள்:
//மீதி நேரம் அறைவாசிகளுடன் ஈகோ மோதல் ஏற்பட்டு சமைக்காமல் உறைய வைத்த உணவுகளை மட்டுமே சாப்பிட்டு காலம் தள்ளினேன்.//

உங்களுக்குமா?

//கல்யாண சமயத்தில் எல்லோரும் செய்வதை போல 'தொப்பை குறைப்பு' விளிப்புணர்வு ஏற்பட, நோ சான்ஸ் இறுதியில் சோம்பலே வென்றது.
//

அட ஆண்டவா உங்களுக்கு நேற்று நடந்தது எனக்கு இன்று நடக்கின்றது, நானும் ஒரு மாதமாக தொப்பை குறைப்பு நடவடிக்கையில் இறங்குகின்றேன், ம்... இதுவரை சோம்பலே வென்று கொண்டிருக்கின்றது
 
குழலி, நீங்க இன்னும் பேச்சுலர் தான்னு நினைக்கிறேன். சரியா? அப்போ இந்த தொப்பை வளர்ப்பு + தொப்பை குறைப்பு எல்லாம் திருமண வாழ்க்கை ஆரம்பத்திற்கு அறிகுறிகள்.
 
// நீங்க இன்னும் பேச்சுலர் தான்னு நினைக்கிறேன். சரியா?//

சரிதான் அல்வாசிட்டி விஜய்,நான் இன்னும் பேச்சுலர் தான் விரைவில் என்னை பேச்சிலர்(பேச்சு+இலர்) ஆக்க சிலர் சதி(?!) செய்து கொண்டுள்ளனர், அந்த சதிகார கூட்டத்தில் ஒருவரின் அறிவுரைதான் தொப்பையை குறைக்கை சொன்னதும்
 
சிங்கப்பூரில மிருக காப்பாளர் சங்கம் எல்லாம் என் செய்யுது.. இப்படி மிருகங்களை கூண்டுக்குள் கட்டி வைத்து.. சீ..சீ...காட்டு மிரான்டித்தனம்.. சிங்கப்ரபூரில் எனக்கு பிடித்த உனவகம் சிரங்கூன் ரோட்டில இருக்கே அதன் பேரு கோவிந்தாஸ் என நினைக்கிறேன் (இப்பவும் இருக்குதோ தெரியாது) என்ன அருமையான சைவ உணவுகள்.. நினைக்கவே வாய்யூறுகிறது..
உடனடியாக அங்கை போய் சாப்பிடுங்கள்..... (8 வருடங்களுக்கு முன் நானும் பறப்பன ஊர்வன எல்லாம் சாப்பிட்டவன்தான்... எல்லா பழக்கத்தையும் மனம் இருந்தால் மாற்றலாம்...) தொப்பையை குறைப்பதற்கு ஒரே வளி.. தெடர்ந்து ஒவ்வரு நாளும் உடற்பயிற்சி செய்ய வேன்டியது தான், பியர் அதிகம் குடிக்காமல் விஷ்கி, வொட்கா.. அப்படி வேற எதாவதும் குடிக்கவும்...
 
ஐயோ, கருமம் கருமம்; எப்டிதான் இந்த ஆட்டு பொணம், மாட்டு பொணம், பன்னி பொணம், கோழி பொணத்தயெல்லாம் சாப்டுறாங்களோ தெரியல.
உவ்வே...சீ...சீ.
 
Annachi,

http://www.petatv.com/tvpopup/video.asp?video=meet_your_meat&Player=wm&speed=_med

allathu

www.meetyourmeat.com poi parunga

Ana kandippa antha video fullum parkanum

Parthuttu sollunga appadi irunthathunnu

Ramesh
Ram_kum75@yahoo.com
 
விஜய்.

// கோமளாஸ், ஆனந்தபவன், அன்னபூர்ணா என்று பல
இந்திய ரெஸ்டாரண்டுகள் இருக்கும். அவையெல்லாம் போரிங். //

அங்கங்கே ஆளுங்க நாக்கு செத்து வாழ்ந்துக்கிட்டு இருக்கோம், இதுலே கோமளாஸ்
போரிங்கா? இது ஒண்ணுக்கே உங்களைப் 'போட்டுத்தாக்கலாம்"!!!
 
உவ்வே...கனியிருக்க காய் கவர்ந்தற்று...
 
அச்சச்சோ வியஜ் இவ்வளவு மரக்கறிகாரர் இருப்பார்கள் என்று தெரியாமல் பொய்விட்டதே உங்களைப் போட்டுத்தாக்குகிறார்களே.
எனக்கென்ன நான் 40 கிலோமீற்றர்/மணி வேகத்துக்கு குறைய ஓடும் நகரும் எதையுமே சாப்பிடுவேன் என்று தம்பட்டமடிப்பார் ஒரு நண்பர்.அவர் அருகில் போகவே பயமாயிருக்கு நான் கூட அதைவிட மெதுவாகத் தான் ஓடுவேன்
 
ஹாக்கர் செண்டர் என்ன ஸ்டர்லிங் ரோடா? பிலோக் 164?165?
பதிப்பு நன்று.
 
குழலி.. ஆல் தி வெரி பெஸ்ட்..! (அப்பாடா.. மாட்டிக்கினாருப்பா!)

விஜய்.. இதெல்லாம் த்ரீ மச்..! விட்டா கொரியாவிலே போய் நாய்க்கறி டேஸ்ட் பண்ணுவீரு போலருக்கே!
 
இங்கே பின்னூட்டமிட்ட அசைவ வெறுப்பாளர்களுக்கு,

நம்ம விஜய் அண்ணாச்சி உங்க எல்லாரையும் அவர் சாப்பிட்டதை எல்லாம் சாப்பிடச் சொல்லி கட்டாயப் படுத்தினாரா? அவருக்கு பிடிக்குது அவரோட ப்ளாகில எழுதுறார். உங்களுக்கு பிடிக்கலைன்னா பிடிக்கலைன்னு சொல்லிட்டு போரதை விட்டுட்டு, பிணம், மிருக வதை அது இதுன்னு உபதேசம் செய்ய வேண்டாம். அதை எல்லாம் உங்க உங்க ப்ளாகில வச்சிக்கோங்க.
 
குழலி சதிகாரர்களின் வஞ்சக வலையில் விழுந்து விடாதீர்கள். தொப்பையே நமக. தொப்பையே அழகு. ஆனா பொண்ணு பார்க்க போகும் போது மட்டும் நல்ல வயித்துல பெல்ட்டை இருக்க கட்டி தொப்பையை மறச்சிகிடுங்க. சும்மா ஒரு முன்னெச்சரிக்கைக்கு தான்.
 
//கொல்லான் புலான் மறுத்தானை கைகூப்பி
எல்லா உயிரும் தொழும்.//

நாடோடி அண்ணே,

எதுக்கு? எல்லா உயிரும் கைகூப்பி தொழுது hero ஆகி அப்புறம் முதலமைச்சர் நாற்காலியை பிடிக்கவா? வேண்டாமைய்யா இந்த விபரீத ஆசை.
 
//சிங்கப்பூரில மிருக காப்பாளர் சங்கம் எல்லாம் என் செய்யுது.. இப்படி மிருகங்களை கூண்டுக்குள் கட்டி வைத்து.. சீ..சீ...காட்டு மிரான்டித்தனம்.. //

நோநோ,

இது என்னைய்யா வம்பா இருக்கு. கூண்டுக்குள்ளே இருக்கிற மிருகத்தை இப்போ தான் பார்த்தீங்களா? உலகமெல்லாம் அசைவ பிரியர்களுக்காக இப்படி தான்யா அதை அடைச்சி வச்சிருப்பாங்க. விநோதம்.

அப்புறம் நீங்க சொல்லும் அந்த கோவிந்தாஸ் என்பது Hare ராமா Hare கிருஷ்ணா மக்கள் வைத்திருக்கும் உணவுக்கடை என நினைக்கிறேன். அது அங்கேயே தான் இருக்கிறது. சுற்றிலும் அசைவ கடைகள் இருப்பதால் கூட்டம் கம்மி தான்.

முழுநேர நான்வெஜ் மனைவி ஊரிலிருந்து வரும் வரை தான்.
 
//ஐயோ, கருமம் கருமம்; எப்டிதான் இந்த ஆட்டு பொணம், மாட்டு பொணம், பன்னி பொணம், கோழி பொணத்தயெல்லாம் சாப்டுறாங்களோ தெரியல.
உவ்வே...சீ...சீ. //
அண்ணே ஞானபீடம்,

அதுவா செத்து போனா தான் பிணம். சாவடிச்சா அதுக்கு பேரு இறைச்சி. ஆகையால் அசைவர்கள் தின்பது இறைச்சியே தவிர பிணமில்லை

அதுனால நீங்க சொல்லும் 'பிணம்' கான்சப்ட் தப்பு :-))))))
 
நன்றி ரமேஷ். நீங்கள் கொடுத்த சுட்டியை பார்க்கிறேன். என்ன ஆனாலும் மனது மாறதென்று நினைக்கிறேன்.
 
துளசியக்கா, இந்த கோமளாஸ், ஆனந்த பவன் எல்லாம் உண்மையிலேயே ஒரே அறுவை தாங்க. அடிக்கடி சாப்பிட்டு பாருங்க. அதோட டேஸ்டே எரிச்சலா இருக்கு. நான் சொல்வது உணவின் ருசியை தான் சொல்கிறேன். சாப்பிட்டால் நெஞ்சில் ஒரு எரிச்சல் மற்றும் வாந்தி வரும் உணர்வு எப்போதும் உண்டு.
 
ஜீவா, கனியும் திங்க பழகனும். காயும் திங்க பழகனும்.

ஈழநாதன், மரக்கறி சாப்பிடுபவர்கள் கொடுத்து வைத்தவர்கள் தான்.உலகமே மரக்கறி பக்கம் போய் கொண்டிருக்கிறது. ம்ம்ம்ம்ம்ம்... நமக்கு தான் அந்த கொடுப்பினை இல்லையே.


மயாவரத்தான், நாய் கறியா? வ்வ்வ்வ்வ்வேவேவே.... ஒன்லி டீசன்ட்/அப்பாவி அனிமல்ஸ்க்கு தான் வயித்துக்குள்ளே இடம்.
 
தினேஷ், நீங்கள் சொல்லும் அதே ஸ்டெர்லிங்க் ரோடு உணவு விடுதி தான். நீங்களும் அந்த ஏரியா தானோ? ஆனால் வேற ப்ளாக்குங்க. நீங்கள் அந்த ஏரியாவாக இருந்தால் njvijay at yahoo dot com என்னை தொடர்புக் கொள்ளுங்களேன்.
 
//உங்களுக்கு பிடிக்கலைன்னா பிடிக்கலைன்னு சொல்லிட்டு போரதை விட்டுட்டு, பிணம், மிருக வதை அது இதுன்னு உபதேசம் செய்ய வேண்டாம். அதை எல்லாம் உங்க உங்க ப்ளாகில வச்சிக்கோங்க.//

அனானிமஸ் அண்ணே,

ரொம்ப உணர்ச்சி வசப்படாதீங்கப்பா...டேக் இட் ஈஸி. அருவருப்பா சொன்னதால அடிக்க வர்றாங்க. இதுல என்ன இருக்கு. தாவர வதை சட்டம் இல்லை. மிருகவதை சட்டம் இருக்கிறதுனால சொல்றாங்க.
 
அசைவ உண்ணிகளுக்கு ஏற்ற பதிவு. ஆனா தவளை, முதலை எல்லாம் கொஞ்சம் ஓவர்.

-ரவி
 
//துளசியக்கா, இந்த கோமளாஸ், ஆனந்த பவன் எல்லாம் உண்மையிலேயே ஒரே அறுவை தாங்க. அடிக்கடி சாப்பிட்டு பாருங்க. அதோட டேஸ்டே எரிச்சலா இருக்கு. நான் சொல்வது உணவின் ருசியை தான் சொல்கிறேன். சாப்பிட்டால் நெஞ்சில் ஒரு எரிச்சல் மற்றும் வாந்தி வரும் உணர்வு எப்போதும் உண்டு.
//

அல்வாசிட்டி அண்ணாச்சி இது என்னவோ உண்மைதானுங்க, நான் கூட இதுமாதிரி எண்ணியதுண்டு, இருந்தாலும் அண்ணப்பூரனா பொங்கலுக்கும் கோமளாஸ் பட்டுராவிற்கும் நான் அடிமை
 
//குழலி.. ஆல் தி வெரி பெஸ்ட்..! (அப்பாடா.. மாட்டிக்கினாருப்பா!)//

மாயவர்த்தான் உங்கள் வாழ்த்துக்கு நன்றி விரைவில் சேதி சொல்கின்றேன்,

//ஆனா பொண்ணு பார்க்க போகும் போது மட்டும் நல்ல வயித்துல பெல்ட்டை இருக்க கட்டி தொப்பையை மறச்சிகிடுங்க.//
நாம் சந்திக்கும்போது இதுமாதிரி இன்னும் சில யோசனைகள் சொல்லுங்கள்

//பியர் அதிகம் குடிக்காமல் விஷ்கி, வொட்கா.. அப்படி வேற எதாவதும் குடிக்கவும்... //
நோநோ... இப்படி எதுவுமே இல்லாமல் எனக்கு மட்டும் எப்படி 3 மாதத்திற்கு ஒரு முறை இடுப்பளவு எகிறுகின்றது எனத்தெரியவில்லை... :-(
 
அண்ணாச்சி, தாய்(லாந்து), மங்கோலிய உணவு வகைகள் பற்றி ஏதாவது? நாய்க்கறிக்கு ஏன் கொரியா போகவேணும்? பக்கத்திலிருக்கும் பிலிப்பைன்ஸ்லையே கிடைக்கும் என்று கேள்வி.

எனக்கு க்ரேக்க, மேற்க்காசிய உணவு வகைகள் ரொம்ப பிடிக்கும்.
 
தினமலர் வாரமலரில் அந்துமணி பா.கே.ப.ல் எழுதிய நாகாலாந்து நாய்பிரியாணி பற்றி படித்துள்ளீர்களா?
 
//அதுவா செத்து போனா தான் பிணம். சாவடிச்சா அதுக்கு பேரு இறைச்சி.//

இனிமே தமிழ் சினிமாவிலெல்லாம் டயலாக்கை மாத்தணும்ப்பா...

"டேய்.. எனக்கு துரோகம் செஞ்ச அவனை அடிச்சு சாகடிச்சு, இறைச்சியோட வாங்கடா..!"

"ஐய்யோ.. கலையிலே போகும் போது நல்லாதானே போனீங்க. இப்போ அந்த சதிகாரங்க உங்களை சாகடிச்சு இறைச்சியா போட்டுட்டு போயிட்டாங்களே"

"இன்ஸ்பெக்டர் ஸார்.. இங்கே ஊரு குளத்து பக்கத்திலே ஒரு மனுஷ இறைச்சி கெடக்குது ஸர். யாரோ அடிச்சு போட்டுட்டு போயிருக்காங்க!"
 
//ஞானபீடம் said...
ஐயோ, கருமம் கருமம்; எப்டிதான் இந்த ஆட்டு பொணம், மாட்டு பொணம், பன்னி பொணம், கோழி பொணத்தயெல்லாம் சாப்டுறாங்களோ தெரியல.
உவ்வே...சீ...சீ. //

ஞானபீடம் சார்.. நீங்க காடை, கவுதாரி ரேஞ்சா?! :)
 
//அண்ணாச்சி, தாய்(லாந்து), மங்கோலிய உணவு வகைகள் பற்றி ஏதாவது? நாய்க்கறிக்கு ஏன் கொரியா போகவேணும்? பக்கத்திலிருக்கும் பிலிப்பைன்ஸ்லையே கிடைக்கும் என்று கேள்வி. //

அனானிமஸ், தாய் உணவு எனக்கு ரொம்ப பிடிக்கும். அது கொஞ்சம் நம்மூரு ஸ்டைலில் இருக்கும். பைனாப்பிள் பிரைட்ரைஸ் பிடிச்சிருக்கு. நாய்கறியா? நோ சான்ஸ்.
 
//தினமலர் வாரமலரில் அந்துமணி பா.கே.ப.ல் எழுதிய நாகாலாந்து நாய்பிரியாணி பற்றி படித்துள்ளீர்களா?
//

அனானிமஸ், அந்துமணி மேட்டர் படிச்சதில்லை. ஆனால் என்னுடைய பெங்காலி நண்பர் இதைப்பற்றி சொல்வதுண்டு. சிறிதுகாலம் அவர் நாகலாந்தில் வசித்திருக்கிறார்.அவர் நாகலாந்து மக்கள் சாப்பிடும் யானை கறியையும் பற்றி சொல்வார். என்னால் நம்ப முடியவில்லை.
 
//"டேய்.. எனக்கு துரோகம் செஞ்ச அவனை அடிச்சு சாகடிச்சு, இறைச்சியோட வாங்கடா..!"//

யோவ் மயாவரத்தான். உங்களுக்கு நகைச்சுவை உணர்ச்சி ஜாஸ்தியோ? எப்படிங்க இயற்கையிலேயே இப்படியா? இல்ல வளரும் போது இந்த நகைச்சுவை உணர்வு ஒட்டிக் கொண்டதா? :-)))))))

அந்த வரிகளை சும்மா சாமாளிபிகேஷனுக்கு சொன்னது.
 
Meat:
the flesh of animals (including fishes and birds and snails) used as food,

இந்த முறை ஊருக்கு செல்லும் போது தமிழ்-தமிழ் அகராதியில் பார்த்து சொல்கின்றேன்,

ஹி ஹி நைனா தமிழ் வாத்தியாரா, அவுரு தமிழ் வார்த்தைக்கு மீனிங் தெரிஞ்சிக்க சொல்ல கூட தமிழ் - தமிழ் அகராதி வச்சிக்குனு கீராரு
 
குழலி,

அய்யா தமிழ் வாத்தியாரா? அதானே பார்த்தேன். தமிழ் மேல கொஞ்சம் ஒரு ஸ்டெப் மேலேயே உங்களுக்கு பற்று இருப்பதில் ஆச்சரியமில்லை.
 
This comment has been removed by a blog administrator.
 
//இந்த முறை ஊருக்கு செல்லும் போது தமிழ்-தமிழ் அகராதியில் பார்த்து சொல்கின்றேன்,//

அய்யா தான் தமிழ் வாத்தியராச்சே. போன் போட்டு கேட்டா புல்லரிச்சி போய் நிக்க மாட்டாரா? "பையன் இது வரைக்கும் தமிழில் சந்தேகம் கேட்டதில்லை. இப்போது கேட்கிறான் என்று ஆனந்தமாகி நிற்பார்". ஊருக்கு போய் தான் கேட்கனுமா? இல்லை போனில் கேட்பதற்கு அப்பா மீது மரியாதை கலந்த பயமா?
 
பாண்டியன்,

ஜப்பானில் வாக்கிங் போய் விட்டு பாம்பு சூப் குடிப்பார்கள் என்று எங்கோ படித்த ஞாபகம். அதனால் பாம்பு-ஜப்பான் என்றேன்.
 
பாம்பு கறி Hong Kong-ல் 'சூப்'பரா கிடைக்கும் என்று கேள்வி..!!
 
சிங்கப்பூரில் பாம்புக்கறி 3 இடங்களில் கிடைக்கும் என கேள்விப்பட்டேன், விரைவில் விசாரித்து எங்கு கிடைக்கும் என் சொல்கின்றேன் விஜய் :-)
 
பாண்டியன்,

நீங்களும் சாப்பாட்டு விசயத்துல நம்ம மாதிரி தானா? நீங்க கொடுத்த லிஸ்டுல ஆக்டோபஸ்க்கு மட்டும் இன்னும் விமோசனம் கிடைக்கல. மத்த வகை நத்தை,கடல்பாசி எல்லாம் அடிச்சி முழக்கியாச்சி.
 
மயாவரத்தான், பாம்புக்காக ஹாங்காங்.... இப்போதைக்கு முடியாதப்பு...
 
குழலி கட்டாயம் பாம்புகறி பற்றி சொல்லுங்கள். சிங்கை இணைய இலக்கிய குழு மாதிரி சிங்கை வித்தியாசமான சாப்பாட்டு குழு நண்பர்கள் வேறு இருக்கிறார்கள். நெடுநாளாக அந்த குழுவுக்கு பாம்பை ஒரு கை பார்க்க ஆசை.
 
விஜய், லிஸ்ட் ரொம்ப சின்னதா இருக்கே.. இங்கே ஊர்ல சாப்பிடற ஐட்டம் எல்லாம் சொல்லலியே. இது வித்தியாசமான ஐட்டம் லிஸ்ட் மட்டுமா..
 
சுதர்சன், இது வித்தியாசமான பட்டியலுக்கு மட்டுமே. நம்ம ஊரு சாப்பாடை பத்தி எழுத ஒரு பதிவு போதுமா என்ன? காடை கவுதாரி, உடும்பு என்று நம்ம ஊரு லிஸ்டே நிறைய இருக்கு.
 
ஐயா நல்ல கட்டுரை....நானும் அசைவந்தான்.....என்னாலயே செல எடங்கள்ள தாங்க முடியலையே...........சைவாள நெனச்சுப் பாத்தேன். இந்தக் கட்டுரையைப் படிக்க விடாம ஆண்டவன் அவங்கள காப்பாத்தட்டும்.

டூரியன் பழத்தப் பத்திக் கேள்விப் பட்டிருக்கேன். நாறினாலும் நல்லாருக்குமாமே....அப்படியா? வாய் நாறுச்சுன்னு சொன்னவரு....சுவையச் சொல்லலையே!
 
டுரியன் நாறுமா?! அடப்போங்கய்யா.. தமிழ் பழமொழி ஒண்ணு நியாபகத்துக்கு வந்து தொலைக்குது!
 
ராகவன்,

டூரியன் பழத்தின் நாத்ததில் அந்த பழத்தை முழுவதுமாக சாப்பிடவில்லை. அதுவும் அந்த பழம் பயங்கர ஹீட். சாப்பிட்டு வாய் வயிறு எங்கும் புகை தான். ஆற அமர விரும்பி சாப்பிடுவது டூரியன் கேக் மட்டுமே.
 
மாயவரத்தான்,

//டுரியன் நாறுமா?! அடப்போங்கய்யா.. தமிழ் பழமொழி ஒண்ணு நியாபகத்துக்கு வந்து தொலைக்குது! //

அந்த பழத்தின் நாத்தத்தை உணர்ந்தால் பழமொழியே ஞாபகத்துக்கு வராதுன்னு நினைக்கிறேன்
 
அடப்பாவி, சரியான 'சாரு நிவேதிதாத்தன' ஆளா இருக்கிறீயே மக்கா, உம்மகூட சேர்ந்து சுத்துறதே தப்பு.

பாம்பு கறி கெடக்கீற இடம் எனக்கு நல்லாத்தெரியும். வாரும் அடுத்த வேட்டை அங்கெ வெச்சுக்கலாம், ஆனா அதைச் சாப்பிட்டப்புறம் 'படுக்கையில் பாம்பு நெளியுமாம்' பரவாயில்லையா? :-)

நல்லா எழுதியிருக்கெ மக்கா மொத்த விஷயத்தையும்! கிரேட்!

நமக்கு இப்போ ஆடு கோழியெல்லாம் திடீர்ர்ன்னு பாவமுன்னு தோண ஆரம்பிச்சுடுச்சி. அதனால கடற்பக்கம் கரை ஒதுங்க ஆரம்பித்துவிட்டேன். அதிலும் நண்டும் பிரானும் ஃபேவரைட்.

நத்தை ஒரு நாளோடு போச்சு. மத்த எதையும் சே சே தொடுறதில்லை.

மான், நரி, முயல், உடும்பு, கவுதாரி, காடை, ஆட்காட்டி இப்படி இருந்தது காலம், முன்னாடி.! இப்போ ஊருக்குப்போனா மோர்க்கஞ்சியும் மோர்மிளகாயும் கேக்குறேன்!

கொஞ்சம் போல பிலிக்குட்டி உள்ளே போனா, அசைவமா ஏதாவது அது கேக்கும், அதாவது புலி கேக்கும். அவ்ளோதான்! :-)


எம்.கே.குமார்
 
This comment has been removed by a blog administrator.
 
//பாம்பு கறி கெடக்கீற இடம் எனக்கு நல்லாத்தெரியும். வாரும் அடுத்த வேட்டை அங்கெ வெச்சுக்கலாம், ஆனா அதைச் சாப்பிட்டப்புறம் 'படுக்கையில் பாம்பு நெளியுமாம்' பரவாயில்லையா? :-)//

யோவ் குமாரு! நான் ரெடி. நீங்க ரெடியா.சாப்பிட்டுட்டு படுக்கையில நான் பாம்பா நெளியாம இருந்தா சரி :-))

புலிக்குட்டி புலிக்குட்டின்னு சொல்றியேப்பா. புலிக்குட்டிக்கு அடிமை ஆகி விட்டீரா? அதுக்கும் ஒரு நாள் மீட்டிங் போட்டிரலாமா?
 

உங்கள் கருத்துக்களை இட


<< திரும்ப முன் பக்கத்துக்கு போ

This page is powered by Blogger. Isn't yours? தமிழ் அசைபட இணையச் செயலி தமிழ் விக்கிபீடியா

-->