<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar/9439067?origin\x3dhttp://halwacity.blogspot.com', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script> <!-- Remove below comment line to show the content. Added for meta redirection --> <!--

போட்டுத் தாக்கு!!!!!

எள்ளோடு எலி புழுக்கையும் எண்ணைக்காக காயுதாம்

வியாழன், ஜூன் 02, 2005 -ல் போட்டுத் தாக்கியது

இந்தியா எயிட்ஸில் வல்லரசாகலாம்?

Difficulty in reading this post due to font issues? Click here for a PDF copy. Works best if you right-click the link and select 'Save target as...'
இந்த பதிவை போட்டுத் தாக்கியவர் : Vijayakumar
டைம்ஸ் ஏசியாவில் வந்திருந்த ஒரு கவர் ஸ்டோரி படிப்பவரின் மனதை ஆட்டிப் பார்க்க தவறவில்லை. "Beyond Deniel-India's war on AIDS" என்று தலைப்பில் வந்த கட்டுரை இந்தியாவில் நிகழ்ந்துக் கொண்டிருக்கும் எயிட்ஸ் பாதிப்புகளை அரசாங்கம் குறைவாக மதிப்பிடுகிறது என்று சாடுகிறது. மூச்சுக்கு முன்னூறு தடவை பில் கேட்ஸை புகழ்ந்தும் அவர் எயிட்ஸ்க்காக ஒதுக்கிய பணத்தையும் வியந்தும் அந்த கட்டுரை அடிக்கடி பாராட்டினாலும் அவர்கள் பேச்சில் பொய்ப்புரை கலந்திருப்பதாக எடுத்துக் கொள்ள முடியவில்லை.


Image hosted by PicsPlace.to
Thanks: TimeAsia.com

பொத்தி வச்ச மல்லிகை மொட்டாக செக்ஸை மூடி வைத்திருக்கும் இந்திய சமூகம் உள்ளுக்குள் எயிட்ஸால் அழுகிக் கொண்டிருக்கிறது என்பதை நினைத்தாலே மனம் நடுங்குகிறது. இதே பொத்தி வைக்கும் நிலமை நீடித்தால் 2010-ஆம் ஆண்டிற்குள் இந்தியாவில் செழிப்பாக 20 மில்லியனிலிருந்து 25 மில்லியன் எயிட்ஸ் நோயாளிகளாகி வாழ்ந்தும் செத்தும் போய் கொண்டிருப்பார்கள். இந்தியா வல்லராசாகிறதோ இல்லையோ 2010-க்குள் 'உலகிலேயே அதிக எயிட்ஸ் நோயாளிகள்' என்ற பட்டத்தை பெருமையுடன் நாம் ஆப்பிரிக்காவிடமிருந்து பறித்துக் கொள்வோம்.

நிலமை இப்படியிருக்க, அரசாங்கம் எயிட்ஸ் என்பது வெளிநாட்டு நோய் எங்களவர்களுக்கு அதிகமில்லை,நிலமை கட்டுக்குள் தான் இருக்கிறது என்று கூறினாலும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களும், UN-ம் பல அதிர்ச்சி புள்ளி விவரங்களையும் அள்ளி விடுகின்றன. அரசாங்கள் 5.13 மில்லியன் எயிட்ஸ் நோயாளிகள் மட்டுமே இருக்கிறார்கள் என்று கூறும் அதே வேளையில் UN அது 8.5 மில்லியன் என்று கணித்து சொன்னாலும், டெல்லியை சார்ந்த NAZ Foundation அது 15 மில்லியனுக்கு பக்கத்தில் என்று கூறி மூர்ச்சையடைய வைக்கிறது.

கடைசி நிலையில் இருக்கும் எயிட்ஸ் நோயாளி
Image hosted by PicsPlace.to
Thanks: TimeAsia.com

அரசாங்கத்தின் கூற்றுப்படி 5.13 மில்லியன் எயிட்ஸ் நோயாளிகளில் 100,000 பேர் மட்டுமே தாங்களாக முன் வந்து எயிட்ஸ் பரிசோதனை செய்து HIV-ஐ உறுதிப்படுத்திக் கொள்கிறார்கள். இரண்டரை ஆண்டுகளுக்கு முன் பில் கேட்ஸ் 100 மில்லியன் டாலர்களை எயிட்ஸ்க்காக ஒதுக்கிய போது, நன்றி காட்டாமல் அரசியல்வாதிகள் "இது தப்பான புள்ளி விவரத்தின் அடிப்படையில் கூறுகிறார்" என்றும் "பீதியை கிளப்புகிறார்" என்றும் "கோடிக்கணக்கில் சம்பாதித்த பணத்தை எயிட்ஸ்க்கு நிவாரணம் என்ற பெயரில் இந்தியாவில் அவர் மருந்து தொழிற்சாலைகளை நிறுவ முயற்சிக்கிறார்" என்று தூற்றினார்கள்.

காமசூத்ராவிலிருந்து தாந்திரிக் ஆர்கஸம் என்பது வரை உலகுக்கு கற்பித்த இந்தியாவில் இன்னும் செக்ஸ் என்பது இலைமறை கனியாகவே இருக்கிறது. கலாச்சாரம் பண்பாடுகள் தான் இந்த மாதிரி கண்ட கண்ட நோய்களிலிருந்து காக்கிறது என்று மூடத்தனமான எண்ணத்தினால் மறைக்கப்பட்டாலும் நிலமை வேறுவிதமாக இருக்கிறது. ஒரின சேர்க்கைகளில் தெனிந்தியா கொடிக் கட்டி பறக்கு அதே வேளைகளில் ஆண்கள் பிராத்தால்களை தேடிப் போவதும், மனைவிகளை குழுக்களில் மாற்றிக் கொள்வதும், ஹைகிளாஸ் சொசைட்டி செக்ஸ் என்பதும், அது போக மிடில் கிளாஸ் பெண்கள் செக்ஸை தேடி டீன் - ஏஜர்களை நோக்கி போவதும் என பல உண்மைகளை பத்திரிக்கை வாயிலாக நாம் அறிந்து தெரிந்தும் கொண்டுதானியிருக்கிறோம். இன்னும் கற்பனைக்கு எட்டாத நிறங்களில் இந்த செக்ஸ் இந்தியாவில் மறைத்து உலவிக் கொண்டிருக்கின்றன என்கிறார்கள்.

குஷ்வந்த் சிங் ஜோக் ஒன்று ஞாபகம் வருகிறது. "செக்ஸ் முடித்தவுடன் என்ன செய்வீர்கள்?" என்று அபிப்ராயம் கேட்டறிய ஒரு குழு இந்தியாவில் இறங்கியது. அதில் கொஞ்ச பேர் சொன்னார்கள் "நான் ரிலாக்ஸாக குளிப்பேன்" என்றார்கள். சில பேர் சொன்னார்கள் "வயிற்றுக்கு ஏதாவது ஆகாரம் சாப்பிடுவேன்" என்றார்கள். ஆனால் நிறைய பேர் சொன்னார்கள் "நான் வீட்டிற்கு போவேன்". இந்த நிலமை ஆண் பெண் இருபாலருக்கும் பொருந்தும். கணவனுக்கு தெரியாமல் மனைவியும், மனைவிக்கு தெரியாமல் கணவனும் வேறு வேறு ஆட்களுடன், பல பேருடன் உறவு வைத்திருப்பவர்கள் இந்தியாவில் அதிகம் பேர் இருக்கிறார்கள் என்பதை நம்பாமல் இருக்க முடியவில்லை. இவைகள் எல்லாம் தான் இந்தியாவில் எயிட்ஸ் வேகமாக பரவுவதற்கு காரணமா? கொஞ்சம் ஆழ்ந்து யோசித்தால் 'ஆம் செக்ஸ் அறிவு இல்லாததும்' தான் விடையாக வரும்.

எயிட்ஸ் நோயாளிக்கு வைத்தியம்
Image hosted by PicsPlace.to
Thanks: TimeAsia.com

மும்பையில் அதிகமாக பணம் புரளும் கைகள், அதை செலவழிக்க அவர்கள் நாடிச் செல்லும் பார்கள், அதில் 80,000 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் மும்பையைச் சுற்றியுள்ள ஆயிரக்கணக்கான பார்களில் ஆடுகின்றனர். அந்த ஆட்டத்தில் ஆபாசம் கிடையாது, தொடுதல் கிடையாது. வாடிக்கையாளர் ராஜா தோரணையில் சோபாவில் சாய்ந்துக் கொண்டு ஆட்டத்தை ரசிப்பார். பல நூறு ரூபாய் நோட்டுக்கள் ஆடும் பெண்மணியின் மீது மழையாக பொழியும். கடைசியில் ஒவ்வொரு கஸ்டமரும் ஏதாவது ஒரு ஆட்டக்காரியுடன் உறவுக் கொள்ளாமல் திரும்ப மாட்டார்கள். பார் முதலாளிகள் இதை வெளியில் தெரியாமல் செய்தாலும் பாதுக்காப்பான உறவை வலியுறுத்துவதால் எயிட்ஸ் 10%-க்கு கீழே இருப்பதாக டைம்ஸ் பத்திரிக்கை சொல்கிறது. ஏப்ரல் 12-ல் மகராஷ்ட்ராவின் துணை முதல்வர் R.R.படேல் "இது இளைஞர்களை சீரழிக்கிறது" என்று இந்த பார்களை இழுத்து மூடப்போவதாக அறிவித்திருந்தது. இந்த நிலைமைக்கு அவர் சென்றால் பார் ஆட்டக்காரிகள் மும்பை சிவப்பு விளக்கு பகுதியில் சென்று சேர எயிட்ஸ் தொழிற்சாலை அங்கு சூடு பிடிக்கலாம் என கணிக்கிறது.

இந்த பிரச்சனைகளில் அலிகளின் முக்கிய பங்குப் பற்றியும் விவாதிக்கிறது அந்த கட்டுரை. தனி சமூகமாக்கப்பட்டு ரேஷன் கார்டு, ஓட்டு உரிமை" என்ற எந்த உரிமையும் அனுபவிக்க முடியாமல் பரிதவிக்கும் அலிகள் சமூகம் ஏறக்குறைய நிறைய பேர் பாலியல் தொழில்களிலேயே ஈடுபடுகின்றனர். நீலு என்ற 26 வயது அலி சொல்லும் போது சென்னை இரயில் நிலையங்களில் அங்குமிங்கும் நின்று 20 ஆண்கள் வரை ஒரு நாளைக்கு சமாளிக்கும் அவருக்கு கூலி ஒரு தலைக்கு 10-லிருந்து 20 ரூபாய் தான். அவர்களை நாடி வரும் கஸ்டமர்கள் கூட அவர்களுடன் பேச விரும்பாத நிலையில் தன்னார்வ நிறுவனங்கள் எயிட்ஸ் பிரச்சனைக்காக அவர்களை கவனிப்பது மகிழ்ச்சி அளிப்பதாக கூறுகிறார் நீலு.

படுக்கையிலிருந்து விழுந்தவர் எழுந்திருக்க கூட முடியாமல்
Image hosted by PicsPlace.to
Thanks: TimeAsia.com

எயிட்ஸ்க்கு மருந்து என்ற நிலமையை விட தடுப்பு மருந்து தயாரிக்கும் நோக்கத்தில் தான் இருக்கிறது International AIDS Vaccine Initiative(IAVI). இந்த தடுப்பு மருந்து மனிதர்களின் மேல் சோதிக்கும் முயற்சி ஏற்கனவே இந்தியாவில் ஆரம்பித்து விட்டது. IAVI-ன் தலைவர் சேத் பார்க்ளே "எயிட்ஸ்க்கு தடுப்பு மருந்து தான் சாத்தியமா? குணமாக்கும் மருந்துக்கு சாத்தியம் இல்லையா?" என்ற கேள்விக்கு "எங்களிடம் பூட்டு தான் இருக்கிறதே தவிர சாவி இல்லை" என்கிறார்.

எயிட்ஸ் விசயத்தில் அசிரத்தையாக இருக்கும் இந்திய அரசாங்கம் எந்த விதத்தில் வளர்ந்து வரும் எயிட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தப் போகிறதோ தெரியவில்லை. இந்தியா வல்லராசாகிறதோ இல்லையோ எயிட்ஸ் விசயத்தில் அதிக சிரத்தை எடுக்க வேண்டும். அவர்கள் மூடிய போர்வையிலிருந்து வெளிவந்து துணிச்சலான நடவடிக்கை எடுப்பதை தலையாய கடமையாக கொள்ளட்டும்.

மேலும் பல விசயங்களை தெரிந்துக் கொள்ள இங்கே க்ளிக்கவும்.

ஆசியாவின் எயிட்ஸ் பிரச்சனையைப் பற்றிய சிறு படத்தொகுப்பு இங்கே. (சென்சார் செய்யப்பட வேண்டியிருப்பதால் பொது இடத்தில் பதிவை படிப்பவர்கள் கொஞ்சம் உஷார்)

இந்த பதிவின் வாக்கு எண்ணிக்கை: . பக்கத்திலுள்ள ஸ்டாரை மவுசால் போட்டுத் தாக்கினால் எனக்கு மவுசு ஏறும். நன்றி:-)

உங்கள் கருத்துக்களை இட

திருப்பி தாக்கியவர்கள்:
HIV is 'out of control' in India - "BBC" 19 April 2005

Clinton lauds India Aids campaign - "BBC" 26 May 2005

--
Navan Bhagavathi
 
அவசியமான நேர்த்தியான பதிவு விஜய். நான் இதைப்படித்தபின் எழுத எண்ணியிருந்தேன். நீங்கள் நன்றாக எழுதியிருக்கிறீர்கள்.

இன்னும் கலச்சார குன்றாக நம்மை நாமே எண்ணிக்கொண்டு அடுத்தவரை எல்லாம் ஒழுக்கங்கெட்டவர்கள் என்று சொல்லிக்கொண்டு பொத்தி வைத்து நமது அழுகல்களை சமாளித்து வந்தால் நிலமை மோசமாகும். செக்ஸ் கல்வி, பாலியல் தொழிலை அங்கீகரித்து முறைப்படுத்துதல், ஓரினைச்சேர்க்கையாளர்களை அங்கீகரித்தல், திருமணத்தைப் பற்றிய மாற்று சிந்தனை, இந்திய மருத்துவமுறைகளில் இருக்கும்/ இருந்த மருந்துக்களை மீளக்கண்டுபிடித்து ஆய்வுகளை மேற்கொண்டு பயன்படுத்துதல், குடும்பக்கட்டுப்பாடு பிரச்சாரம் போன்று பாரிய அளவில் மக்களிடம் கொண்டுசெல்லல், ஆணாதிக்க சிந்தனைகளுக்கு எதிரான கடுமையான பிரச்சாரம், கல்வி இவைகளை இந்தியா உடனே மேற்கொள்ள வேண்டும்.

பதிவுக்கு நன்றிகள்!
 
முக்கியமான இன்னொன்று விடுபட்டு விட்டது. அது மிகப்பெரிய அளவில் பெண் கல்வியை ஊக்குவித்தலும், அதிகப்படுத்துதலும் மிக அவசியமானது.
 
விஜய்,

இது ஒருபக்கம் கஷ்டமா இருக்குன்னா, அடுத்தபக்கம் அவுங்க பிள்ளைங்களும்
இந்த நோயால் பாதிக்கப்பட்டு, உறவினர்களால் வெறுத்து ஒதுக்கப்பட்டு அனாதைகளா
ஆயிடறாங்களே!!!

நம்ம நண்பரும் அவர் மனைவியும் அவுங்க செஞ்சுக்கிட்டிருந்த வேலையை விட்டுட்டு
இப்ப சென்னையிலே இருக்கற 'எய்ட்ஸ் ஹோம் ( பேரு ஹோப் ஃபவுண்டேஷன்)லே
வேலை செஞ்சுக்கிட்டு இருக்காங்க!

என்ன கண்ராவிப்பா!!!! அந்தப் புள்ளைங்களைப் பாக்கறப்பவே மனசு பிழிஞ்சுடுது.
 
//கலாச்சாரம் பண்பாடுகள் தான் இந்த மாதிரி கண்ட கண்ட நோய்களிலிருந்து காக்கிறது என்று மூடத்தனமான எண்ணத்தினால்//

மிகச்சரியாக கூறினீர்கள்,

மிக நல்ல மற்றும் அவசியமான பதிவும் கூட
 
பண்பாட்டைக் கட்டிக் காக்க முயல்வதால்தான் எய்ட்ஸ் பெருகுகிறது என்பதும் பொயானதே. கீழ்க்காணும் நாடுகளில் சவுதி மிகவும் காட்டமாக க(ல்)லாச்சாரத்தை கடைப்பிடிக்கிறது அதே போல் தான் நைஜீரியாவும் ஆனால் அவற்றின் எய்ட்ஸ் விகிதங்கள் இரு துருவம் போல் உள்ளன. அதே போல் பண்பாடுகளைத் தளர்த்தியுள்ள நாடுகளானா நெதர்லாந்தும் தென் ஆபிரிக்காவும்.

HIV/AIDS - adult prevalence rate:

Saudi Arabia - 0.01%
Nigeria - 5.4%
South Africa - 21.5%
Netherlands - 0.2%
Pakistan - 0.1%
India - 0.9%

source: cia.gov (world fact book).
 
பண்பாட்டைக் கட்டிக் காக்க முயல்வதால்தான் எய்ட்ஸ் பெருகுகிறது என்பதும் பொயானதே. கீழ்க்காணும் நாடுகளில் சவுதி மிகவும் காட்டமாக க(ல்)லாச்சாரத்தை கடைப்பிடிக்கிறது அதே போல் தான் நைஜீரியாவும் ஆனால் அவற்றின் எய்ட்ஸ் விகிதங்கள் இரு துருவம் போல் உள்ளன. அதே போல் பண்பாடுகளைத் தளர்த்தியுள்ள நாடுகளானா நெதர்லாந்தும் தென் ஆபிரிக்காவும்.

HIV/AIDS - adult prevalence rate:

Saudi Arabia - 0.01%
Nigeria - 5.4%
South Africa - 21.5%
Netherlands - 0.2%
Pakistan - 0.1%
India - 0.9%

source: cia.gov (world fact book).
 
நவன்,

இந்த கட்டுரைக்கு தொடர்புள்ள சுட்டிகளுக்கு நன்றி. கிளிண்டன் இந்தியாவின் எயிட்ஸ் தடுப்பு நடவடிக்கைகளை பாராட்டினாலும், உண்மை என்னவோ வேறுவிதமாக இருக்கலாமென தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் கருதுகின்றன. அரசின் புள்ளி விவரங்களை எப்படி நம்புவது? களப்பணிகளில் இருக்கும் ஆர்வலர்கள் சொல்லுவது தான் சரியென தோனுகிறது.
 
தங்கமணி,

நான் கட்டுரை ஒட்டியே இந்த பதிவை எழுதினேன். கட்டாயமாக உங்கள் பார்வை இன்னும் விசாலமாக உங்கள் பதிவில் சொல்லப்படலாம். இதைப் பற்றியும் பதியுங்ளேன்.

நீங்கள் சொல்லும் கருத்துக்கள் அனைத்தும் ஏற்புடையது. நன்றி.
 
துளசியக்கா,

எயிட்ஸால் பாதிக்கபட்ட பெரியவர்களின் எண்ணிக்கைக்கு ஏறக்குறைய சமமாக பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை இருக்கிறது. பெற்றோர்கள் செய்யும் தவறு ஒன்னுமறியாத பச்சிளங்களை காவு வாங்குகிறது என்று அறிந்தால் நம்மால் கண்ணீர் விட முடியாமல் இருக்க முடியாது.

நன்றி குழலி.
 
அனானிமஸ்,

பண்பாடு என்ற பெயரில் செக்ஸ் பற்றிய அறிவுகள் பொத்தி வைக்கப்படுவதாலும், செக்ஸ் என்பது மிகப்பெரிய குற்றம் என்று பார்க்கப்படுவதும் முறையற்ற உறவுக்கு அடிகோலுகிறது. முறையற்ற/பாதுகாப்பற்ற உறவே எயிட்ஸ்க்கு வழிவகுக்கிறது. மேலே தங்கமணி அவர்களின் பின்னூட்டத்தையும் பார்க்கவும். சவுதியில் கலாச்சாரம் கடுமையாக கடைப்பிடிக்கும் அதே வேளையில் கலாச்சாரத்தை மீறினால் கொடுக்கப்படும் தண்டனையும் எவ்வளவு கொடுமையானது என்று ஒப்பிட வேண்டும் என்பது என் கருத்து. நைஜீரியாவின் நிலமை தெரியவில்லை. கலாச்சாரம் என்பதை பொருட்டாக கருதாத நாடாக இருந்தாலும் எயிட்ஸ் பற்றிய விழிப்புணர்ச்சி இல்லாதவர்களுக்கும் அதே நிலை தான். விழிப்புணர்வு என்பது கொஞ்சம் அறிவு சார்ந்த விசயமாகையால் அந்நாட்டின் கற்றோர்களின் எண்ணிக்கையும் பொருத்து அமையலாம். பண்பாடு,கலாச்சாரம் என்பது எயிட்ஸ்க்கு ஒரு Factor. அதுபோகவும் நிறைய Factors இருக்கலாமில்லையா?

நம்ம மக்களிடையே செக்ஸ்/எயிட்ஸ் பற்றிய விழிப்புணர்வை மாத்ருபூதம் ஜோக்காக ஒரிடத்தில் சொல்லி இருந்தார். அதாவது எயிட்ஸ் விழிப்புணவுக்கு லாரி, வண்டி ஓட்டுபவர்களுக்கும், கிராமபுறத்திலும் பாதுகாப்பான உறவுக்கு எப்படி ஆணுறை உபயோகப்படுத்த வேண்டும் என்பதை கை விரலில் மாட்டி Demo செய்து காண்பித்தார்களாம். அந்த Training-ல் கலந்துக் கொண்டவர் சிறிதுநாள் கழித்து பாலியல் நோயிடன் வர, பாதுகாப்பு முறைகள் சொல்லிக் கொடுத்தோமே இருந்தும் எப்படி நடந்தது என்று விசாரிக்கும் போது, அவர் முறையற்ற உறவு கொள்ளும் போது Training-ல் சொல்லிக் கொடுத்த மாதிரி கை விரலில் ஆணுறை மாட்டி உறவுக் கொண்டாராம்.

எப்படியிருக்கிறது பாதுகாப்பான செக்ஸ்ஸைப் பற்றிய விழிப்புணர்வு?
 
இந்தியாவில் எயிட்ஸ் சம்பந்தப் பட்ட செய்திகளும் மற்றும் பல விவரங்களைப் பற்றியும் தரும் ஒரு ஆங்கில வலைப்பூ http://aidsindia.blogspot.com/

நேரமிருக்கும் போது படித்துப் பாருங்கள்
 
சுட்டிக்கு நன்றி கோபி. நேரம் கிடைக்கும் போது போய் படித்துப் பார்க்கிறேன் சார்.
 
நேற்றைய சன் நியூஸில் இந்தியாவில் வளர்ந்து வரும் எயிட்ஸ் பிரச்சனைக்கு மந்திராபேடி மற்றும் இன்னொரு ஹிந்தி நடிகரும்(பெயர் தெரியவில்லை) எயிட்ஸ் விழிப்புணர்வு விளம்பர படத்தில் நடித்துள்ளதாக சொன்னார்கள். பாலியல் தொழிலாளிகளுக்கு மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் குழுக்கள் இருந்தாலும் குடும்ப பெண்மணிகளுக்கு இதைப்பற்றிய விழிப்புணர்வு கொண்டுவருவதும் இந்த விழிப்புணர்வு படத்தின் நோக்கம் என்றார்கள்.

அந்த குழுவுக்கு என் நன்றிகளும் வாழ்த்துக்களும்.இது மகத்தான பணி.
 

உங்கள் கருத்துக்களை இட


<< திரும்ப முன் பக்கத்துக்கு போ

This page is powered by Blogger. Isn't yours? Web Statistics and Counters தமிழ் அசைபட இணையச் செயலி தமிழ் விக்கிபீடியா

-->