<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d9439067\x26blogName\x3d%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81!!!!!\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLACK\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://halwacity.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://halwacity.blogspot.com/\x26vt\x3d-1566162084738285005', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script> <!-- Remove below comment line to show the content. Added for meta redirection --> <!--

போட்டுத் தாக்கு!!!!!

எள்ளோடு எலி புழுக்கையும் எண்ணைக்காக காயுதாம்

-ல் போட்டுத் தாக்கியது

பாடலும் பாடல் வரியும்-1

Difficulty in reading this post due to font issues? Click here for a PDF copy. Works best if you right-click the link and select 'Save target as...'
இந்த பதிவை போட்டுத் தாக்கியவர் : Vijayakumar
பாரதிராஜவின் 'நிழல்கள்' படம் ஒரு அருமையான படம். 3 இளைஞர்களின்('நிழல்கள்'ரவி,ராபர்ட் ராஜசேகர், சந்திரசேகர்) வாழ்க்கை போராட்டத்தையும், முக்கோண காதல் கதையையும் சுற்றி வரும் படம். இசை அமைப்பாளராக வேண்டுமென்று லட்சிய கனவு சந்திரசேகருக்கு, வேலை வாங்கி கொடுக்காத பட்டத்தை பட்டமாக பறக்கவிடுவார். கல்லூரி இளைஞராக ராபர்ட் ராஜசேகர் ஒரு பெண்ணை காதலிக்க, நிழல்கள் ரவியும் அதே பெண்ணை காதலிக்க ஒரு முக்கோணம் உருவாகிறது. ராபர்ட் ராஜசேகர் தனக்கென்று ஒரு உலகத்தில் லயித்து விடுவார். கஞ்சா அடிக்கும் பழக்கம் உள்ளவர். மனம் மயக்கும் மாலைப்பொழுதில் அவர் இந்த பாடல் வரிகளை பாடுவதாக படத்தில் அமைக்கப்பட்டிருக்கும்.

திரைக்காக கவிஞர் வைரமுத்து முதன்முதலில் எழுதிய வைரவரிகளால் ஆனது இந்த பாடல். நம்ம மொட்டையின் இசையில் அந்த வரிகள் சேர்ந்து காலத்தால் அழியாத இந்த பாடல் உருவானது. எந்த இடத்தில் இந்த பாடலை கேட்டாலும் முழுப்பாடலையும் கேட்காமல் அந்த இடத்தை விட்டு நகர்வது கிடையாது. அவ்வளவாக என்னை ஆட்கொண்டிருக்கிறது அந்த பாடல். கீழே பாடலை கேட்க விண்டோஸ் மீடியா ப்ளேயரும், பாடல் வரிகளையும் கொடுத்திருக்கிறேன். இந்த மாதிரி வாரத்திற்கு ஓரிரு ஆடியோ ப்ளாக் கொடுக்க முடிவு செய்துள்ளேன். என்னை கவர்ந்ததை உங்களுடன் பகிர்ந்துக் கொண்டு நீங்கள் மகிழ்வது எனக்கு மகிழ்ச்சியையே அளிக்கும்.































*******************

ஹே ஹோ ஹிம் லலா

பொன் மாலைப் பொழுது
இது ஒரு பொன்மாலைப் பொழுது
வானம் மகள் நானுகிறாள்
வேறு உடை பூணுகிறாள்
இது ஒரு பொன்மாலைப் பொழுது

ஹ்ம் ஹே ஹா ஓ ஹிம்ஹூம்

ஆயிரம் நிறங்கள் ஜாலமிடும்
ராத்திரி வாசலில் கோலமிடும்
ஆயிரம் நிறங்கள் ஜாலமிடும்
ராத்திரி வாசலில் கோலமிடும்
வானம் இரவுக்கு பாலமிடும்
பாடும் பறவைகள் தாளமிடும்
பூமரங்கள் சாமரங்கள் வீசாதோ

இது ஒரு பொன்மாலைப் பொழுது
வானமகள் நானுகிறாள்
வேறு உடை பூணுகிறாள்
இது ஒரு பொன்மாலைப் பொழுது


வானம் எனக்கொரு போதிமரம்
நாளும் எனக்கது சேதி தரும்
வானம் எனக்கொரு போதிமரம்
நாளும் எனக்கது சேதி தரும்
ஒரு நாள் உலகம் நீதி பெறும்
திருநாள் நிகழும் சேதி வரும்
கேள்விகளால் வேள்விகளை நான் செய்தேன்

இது ஒரு பொன்மாலைப் பொழுது
வானம் மகள் நானுகிறாள்
வேறு உடை பூணுகிறாள்
இது ஒரு பொன்மாலைப் பொழுது

*******************


நல்லா இருந்த/இல்லேன்னா ஒரு வரி பின்னூட்டத்துல சொல்லிட்டு போயிருங்க.

இந்த பதிவின் வாக்கு எண்ணிக்கை: . பக்கத்திலுள்ள ஸ்டாரை மவுசால் போட்டுத் தாக்கினால் எனக்கு மவுசு ஏறும். நன்றி:-)

உங்கள் கருத்துக்களை இட

திருப்பி தாக்கியவர்கள்:
அன்புள்ள விஜய்,

இந்தப் பாடலுக்காகவே இப்படத்தைப் பார்க்கணுமுன்னு நினைச்சிருந்தேன். இப்பத்தான்
மார்ச் மாதம் சிங்கை வந்தப்ப அந்தப் படத்தை வாங்கற சந்தர்ப்பம் அமைஞ்சது.
படம் என்னவோ சுமார்தான். ஆனா இந்தப் பாட்டுதான்... அருமை!!!!

என்றும் அன்புடன்,
துளசி.
 
"வானமகள் நாணுகிறாள்"
என்று வரவேண்டுமே
 
நன்றி துளசியக்கா.

சில விசயங்களுக்காக அந்த படம் எனக்கு பிடித்திருந்தது. முதல் விசயம் படத்தோடு கூடிய இளையராஜாவின் இசை. அனைத்து பாடல்களும் மிக மிக அருமையாக இருக்கும்.
 
//வசந்தன்(Vasanthan) said...
"வானமகள் நாணுகிறாள்"
என்று வரவேண்டுமே //

சுட்டிகாட்டியமைக்கு நன்றி வசந்தன். அந்த வரியை மாற்றி விட்டேன். டிரன்ஸ்கிரிப்ஷன் எரர் :-)
 
அது வெறும் ராஜசேகர் என்று நினைக்கிறேன் (One flew over the cukoo's nestஐ மனசுக்குள் மத்தாப்பு என்று ராபர்ட்-ராஜசேகர் சுடுவதற்கு முன் - அதே ராஜசேகர் தானே இது?).
 
//அது வெறும் ராஜசேகர் என்று நினைக்கிறேன் //

மாண்டீ ராஜசேகராய் தான் இருக்குமென நினைக்கிறேன். எழுதும் போது ஒரு ஆளா இல்லை இரு வேறு ஆளா என்று குழப்பமாக இருந்தது.

//One flew over the cukoo's nestஐ மனசுக்குள் மத்தாப்பு என்று ராபர்ட்-ராஜசேகர் சுடுவதற்கு முன் - அதே ராஜசேகர் தானே இது?). //

அதே அதே

தற்போது அவரை 'மைடியர் பூதம்' டிவி சீரியலில் பார்த்த ஞாபகம். டைட்டில் கார்டை கவனிக்கிறேன்.
 
என்கிட்டே இந்த பாட்டு இருந்தாலும் அல்வாசிட்டி ஸ்பீக்கர்ல எப்படித்தான் இருக்குது பாக்கலாம்ன்னு க்ளிக் பண்ணினா.... ஆர்டிஸ்ட்: விஜய்குமார், காப்பிரைட் அல்வாசிட்டி... ஆனாலும் இது டூமச்யா யோவ்... அப்புறம் பாட்டு லேசா வேகமா பாடுற மாதிரி ஒரு பீலிங்
 
தலீவர் முகமூடி,

முதன் முதலில் விண்டோஸ் மீடியா என்கோடர் பயன்படுத்துனேன். அந்த காப்பிரைட் மற்றும் மற்ற மேட்டர் எல்லாம் தெரியாமல் போட்டுவிட்டேன். அதை வலையேற்றிய பிறகு தான் கவனித்தேன். திரும்ப அழித்து பிறகு டயல் அப்பில் ஏற்றுவது முடியாத காரியம் ஆகையால் விட்டுவிட்டேன்.

தெரியாமல் நிகழ்ந்துவிட்ட இந்த தவறை மட்டும் மன்னித்தருள்க :-)

அப்புறம் இங்கே ஒழுங்க தான் பாடுகிறது அந்த பாட்டு. பைலின் சைஸை குறைப்பதற்க்காக பிட் ரேட்டை குறைய வைத்து என்கோட் பண்ணியிருக்கிறேன். ஆகையால் சுதி கம்மியாகத் தான் பாடும். கேட்கும் அளவில் இருந்ததால் வெளியிட்டேன்.
 
படத்தை பற்றியெல்லாம் எனக்கு தெரியாது. ஆனால்... பாடல் மிக அருமை. மீண்டும் கேட்க கிடைத்ததில் மகிழ்ச்சி. மேலும் தொடருங்கள்.
 
நன்றி சண்முகி. முதன் முதலில் இந்த ப்ளாக்கில் பின்னூட்டமிட்டு இருக்கிறீர்கள். தங்கள் பின்னூட்டத்திற்கு மெத்த மகிழ்ச்சி. இனி வாரம் என்னை கவர்ந்த பாடல்கள் அலங்கரிக்கும். அது காட்டாயம் உங்களை போன்ற ரசிக பெருமக்களுக்கும் கவரும் என்பதில் ஐயமில்லை. இசைஞானி வடிக்கும் இசையாச்சே, சும்மாவா?
 
// மன்னித்தருள்க // என்னுடைய இயல்பான சுபாவமே அதுதானே... மன்னித்தோம் :-) << சரி.. சரி... ஒரு சந்தர்ப்பம் கிடைச்சுடக்கூடாதே >>

// இனி வாரம் என்னை கவர்ந்த பாடல்கள் அலங்கரிக்கும் // மாயவரம் வேற இதே மாதிரி ஒரு திட்டத்தோட கெளம்பியிருக்கார் (பாட்டு இல்ல, மலரும் நினைவுகளாம்). எங்களயெல்லாம் ஒரு நிமிஷம் நெனச்சி பாத்தீங்களா... சரி, விதி வலியது... நடத்துங்க...
 
அருமையான பாடலிது. சிறுவயதில் இப்பாடலை விழா ஒன்றின் போது நிஜத்திலேயே ஒரு பொன்மாலைப் பொழுதில் மலைகள் சூழ்ந்த இடமொன்றில் ஒலிக்கவிட்டிருந்தார்கள். அந்த அனுபவம் மங்கிவிட்டிருந்தாலும் மறக்கமுடியாதது.

ஃபயர்பாக்ஸில் விண்டோஸ் மீடியா பிளேயரின் படம் தெரியவில்லை.

அப்புறம் " நம்ம மொட்டையின் இசையில்" இப்படி சொல்லியிருக்க வேண்டாமே!
 
முகமூடி,

தலைவிதியை யாராலும் மாற்ற முடியாது. இதெல்லாத்தையும் ஆராயாம அனுபவிங்க :-}}} கருத்துக்கு நன்றி.
 
நன்றி ராதாகிருஷ்ணன்

//ஃபயர்பாக்ஸில் விண்டோஸ் மீடியா பிளேயரின் படம் தெரியவில்லை.//

பயர்பாக்ஸில் தெரிகிற மாதிரி தான் முதலில் பாட்டை இட்டேன். ப்ளே பட்டனை தட்டாமலே எடுத்த உடனேயே பாடல் வந்து விடுகிறது. அது இந்த ப்ளாக்கை பார்ப்பவர்க்ளுக்கு திடீர் ஒலியால் அதிர்ச்சி வரலாம்.

யாருக்காவது எந்த டேக்கை பயர்பாக்ஸில் பயன்படுத்தினால் விண்டோஸ் ப்ளேயர் தெரியும் எனத் தெரிந்தால் சொல்லுங்களேன்.

//அப்புறம் " நம்ம மொட்டையின் இசையில்" இப்படி சொல்லியிருக்க வேண்டாமே! //
இளையராஜாவை நான் எப்போதும் செல்லமாக அழைப்பது 'மொட்டை' என்று தான். இசையின் ஞானியாக விளங்கும் இளையராஜாவை இப்படி அழைக்கலாமா என்பதை விட இசையின் மூலம் எங்கள் மனதை கொள்ளைக் கொண்டவர் என்ற உரிமையில் தான் அழைக்கிறேன்.
 
இளையராஜா , பாரதிராஜா , வைரமுத்து எப்போது இணைந்து இதனை போன்ற காவியங்களை படைக்கப்போகிறார்களோ தெரிய்வில்லை ..

கொசுரு : 'ஒரு நாள் ஒரு கனவு' பாட்டு கேட்டீர்களா?? மொட்டைஸ் மொட்டைஸ்தான் (அதே உறவு தாங்க)
 
///இளையராஜாவை நான் எப்போதும் செல்லமாக அழைப்பது 'மொட்டை' என்று தான். இசையின் ஞானியாக விளங்கும் இளையராஜாவை இப்படி அழைக்கலாமா என்பதை விட இசையின் மூலம் எங்கள் மனதை கொள்ளைக் கொண்டவர் என்ற உரிமையில் தான் அழைக்கிறேன்.///
என் நண்பர்கள் பலர் இளையராஜாவின் தீவிர ரசிகர்கள், அவர்களும் "மொட்டை" என்றுதான் அழைப்பார்கள். ஒருவேளை இது "சாம்பார் - ஜெமினி" போல செல்லப் பெயரோ ? :-).
 
உண்மையிலேயே வானம் எனக்கொரு போதி மரம். இந்த வரிகள் எழுதிய வைரமுத்து நன்றாகத்தான் எழுதிகொண்டிருந்தார் ஆரம்ப கால பாடல்களிலே.
 
அண்ணாச்சி..
பாட்டோ நீர் எழுதுனது கெடயாது;
மியூஜிக்கோ நீர் போட்டது கெடயாது;
சரி வுடு, இந்தப் படத்தயாச்சும் நீர் எடுத்தீரா
அதுவும் கெடயாது. அப்புறம் எதுக்குய்யா,
right-click பண்ணாக்க
வேண்டாமே... வேண்டவே வேண்டாமே
அப்டீன்னு alert குடுக்குறீரு!

வுட்டோமா நாங்க,
view source போனோம்ல,
தேடிப் புடிச்சோம்ல,
http://www.halwacity.com/vijay/PONMALAI_small.wma
கெடச்சுதுல்லா,
எறக்கிப்போட்டோமுல்ல!

ஹே ஹோ ஹிம் லலலா


------------
புதுசா பின்னூட்டம் போட்ட சண்முகிக்கு வரவேற்பு தூக்கலா இருக்கு! ம்...... புது கஸ்டமர கவர் பண்றீங்க! ok ok.. நடத்துங்க.
------------

- ஞானபீடம். {<<= வேண்டாமே... வேண்டவே வேண்டாமே; இங்கே CLICK செய்யவே வேண்டாமே!}
 
தாஸூ, ஒரு நாள் ஒரு கனவு இன்னும் கேட்கவில்லை.

நன்றி தாஸூ

//இது "சாம்பார் - ஜெமினி" போல செல்லப் பெயரோ ? :-). //

அதே அதே. நன்றி முத்து.
 
//உண்மையிலேயே வானம் எனக்கொரு போதி மரம். இந்த வரிகள் எழுதிய வைரமுத்து நன்றாகத்தான் எழுதிகொண்டிருந்தார் ஆரம்ப கால பாடல்களிலே. //

இப்போது கூட ரொம்ப rare-ஆக நல்ல பாடல்களை சில நேரம் கொடுப்பார். நன்றி தேன் துளி
 
//அண்ணாச்சி..
பாட்டோ நீர் எழுதுனது கெடயாது;
மியூஜிக்கோ நீர் போட்டது கெடயாது;
சரி வுடு, இந்தப் படத்தயாச்சும் நீர் எடுத்தீரா
அதுவும் கெடயாது. அப்புறம் எதுக்குய்யா,
right-click பண்ணாக்க
வேண்டாமே... வேண்டவே வேண்டாமே
அப்டீன்னு alert குடுக்குறீரு!//

ஞானபீடம் நீங்க சொன்னது எல்லாம் இல்லை தான். ஆனா அதை என்கோட் எழுதி ப்ளாக்குல போட்டிருக்கோம்ல. அட ஏங்க உங்களுக்கு கஷ்டம் ஒரு சோதனைக்காக அதை கொடுத்திருந்தேன். இப்போ அதை தூக்கியாச்சில்ல. தாரளமா உள்ள புகுந்து பார்க்கலாம் கண்ணா.

நன்றி ஞானபீடம்.
 
அல்வாசிட்டிக்கு ஜே.........
விஜய்க்கு ஜே........

நன்றி.
 
அண்ணே ஞானபீடம்,

நான் ஒரு கட்சி ஆரம்பிக்கப் போறேன். அதுக்காக 'ஜே' போட 100000 தொண்டர்கள் தேவைப்படுகிறார்கள். உடனே ஏற்பாடு பண்ண முடியுமா?

:-))))
 
என்னதான் இருந்தாலும் என்ஜாய் பண்றதுனா - "மடை திறந்து..." பாட்டு, பிக்சரைசேசனோட ... அட அட அட ...
-டண்டணக்கா
 
//என்னதான் இருந்தாலும் என்ஜாய் பண்றதுனா - "மடை திறந்து..." பாட்டு, பிக்சரைசேசனோட ... அட அட அட ...//

டண்டணக்க, இந்த பாடலும் நான் அடிக்கடி கேட்கும் பாடல் தான். ஒரு இளைஞனின் இசை அமைப்பாளர் ஆகும் ஆசை, ஒரு படத்தயாரிப்பாளர் அவனுக்கு இசை அமைக்க அட்வாண்ஸ் கொடுத்தவுடன் துள்ளளுடன் ஆரம்பிக்கும் இசையில் அவனுடைய கனவுகளை காட்சி அமைப்புகள் மூலம் அசத்தியிருப்பார் பாரதிராஜா. அந்த இரண்டு பாடல்களிலும் எஸ்.பி.பியின் குரலும் ஆதிக்கம் காலத்தால் அழியாது. அந்த படத்தில் எல்லா பாடல்களும் அருமை. 'பூங்கதவே தாழ் திறவாய்' கேட்டுப்பாருங்க. நன்றி டண்டணக்கா.
 
//மடை திறந்து பாயும் நதி அலை நான்,..
அந்த படத்துல, அதுதான் டாப்பு..
அப்புறம்.. ஒரு மாதிரியா இருந்தாலும்.. 'மொட்டை'ன்னு சொல்லும் போது தான்.. ஒரு பிரியம் வருது.. நீங்க அப்படியே மெயின்டெயின் பன்னுங்க அண்ணாச்சி..
 
ஒரு சிறு குறிப்பு: இது வரை வைரமுத்து எழுதிய திரையிசைப் பாடல்களில் அவரது மனைவி பொன்மணி வைரமுத்துக்கு பிடித்தத வரிகள்

வானம் எனக்கொரு போதி மரம்
நாளும் எனக்கது சேதி தரும்
 
This comment has been removed by a blog administrator.
 
This comment has been removed by a blog administrator.
 
This comment has been removed by a blog administrator.
 
This comment has been removed by a blog administrator.
 

உங்கள் கருத்துக்களை இட


<< திரும்ப முன் பக்கத்துக்கு போ

This page is powered by Blogger. Isn't yours? தமிழ் அசைபட இணையச் செயலி தமிழ் விக்கிபீடியா

-->