<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d9439067\x26blogName\x3d%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81!!!!!\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLACK\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://halwacity.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://halwacity.blogspot.com/\x26vt\x3d-1566162084738285005', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script> <!-- Remove below comment line to show the content. Added for meta redirection --> <!--

போட்டுத் தாக்கு!!!!!

எள்ளோடு எலி புழுக்கையும் எண்ணைக்காக காயுதாம்

-ல் போட்டுத் தாக்கியது

மணிசித்ரதாழு & சந்திரமுகி

Difficulty in reading this post due to font issues? Click here for a PDF copy. Works best if you right-click the link and select 'Save target as...'
இந்த பதிவை போட்டுத் தாக்கியவர் : Vijayakumar
இரஷ்ய இலக்கியவாதி மேக்ஸிம் கார்கியின் தி லோயர் டெப்த்ஸ்(The lower depths) என்ற நாடகத்தை, புகழ் பெற்ற பிரஞ்சு பட இயக்குநர் ழான் ரெனாரும் (JEAN RENOIR) அகிரா குரோசாவாவும் படமாக்கினர். இரண்டு வேறு வேறு காலக்கட்டத்தில் எடுக்கப்பட்டது. ழான் ரெனாருக்கு குரோசாவா எடுத்த படத்தைப் பற்றி தெரியாது. ஆனால் குரோசவா ழான் ரெனார் படமாக எடுத்த அதே நாடகத்தை தன் பாணியில் ஜப்பானிய கலாச்சாரத்துக்கு ஏற்ற மாதிரி முற்றிலும் புதிய பாணியில் திரைக்களம் அமைத்து படமாக எடுத்தார். பல வருடங்களுக்கு பிறகு அகிரா குரோசவா ழான் ரெனாரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. ழான் ரெனார் குரோசாவாவின் தி லோயர் டெப்த்ஸை பார்த்து அசந்து போனார். ழான் ரெனாரின் இயக்கத்தில் அது உருவான போது சிக்கல் மிகுந்த அரசியல் தலையீடுகளால் அவரால் சரி வர மேக்ஸிம் கார்கி சொல்ல வந்த கருத்தை சொல்ல முடியவில்லை. அவரின் படம் படுதோல்வி.ஆனால் குரோசாவா அந்த தடைகளையெல்லாம் மீறி கார்க்கியின் பார்வையை நச்சென்று வெளிபடுத்தியிருப்பதாக ழான் ரெனார் புகழ்ந்திருந்தார். குரோசாவாவின் படைப்பே சிறந்தது என போற்றியிருந்தார்.

இங்கு இயக்குநர்களின் நேர்மையும், திறந்த மனதும் புலனாகிறது. அதே போல் மகேந்திரன் உதிரிபூக்களை புதுமைபித்தனின் கதையிலிருந்து தழுவியது என நேர்மையாக டைட்டிலில் போட்டார். இன்றைய காலக்கட்டத்தில் எங்கிருந்து உருவப்பட்டாலும் நேர்மையற்ற தன்மை தான் திரைஉலகில் நிலவுகிறது. அதற்கு ஒரு எடுத்துக்காட்டு சந்திரமுகி. சந்திரமுகி கதை, திரைக்கதை, வசனம், டைரக்ஷன் P.வாசு என வெட்கமில்லாமல் போட்டு கொண்டிருக்கிறார். சந்திரமுகியின் உண்மை கதைக்கு சொந்தக்காரர் மது முட்டம் என்பவர். சந்திரமுகி படம் ஆரம்பிப்பதற்கு முன்பாகவே மணிச்சித்ரதாழு என்ற மலையாள படத்தின் கதை என வந்ததிகள் பரவியது. பி.வாசு அங்கிருந்து சில காட்சிகள் தான் உருவப்பட்டன என்று அதற்கு சந்திரமுகிக்கும் சம்பந்தம் இல்லை என்றார்.

அது அந்த காலக்கட்டத்தில் கதை வெளிப்பட்டு விட கூடாது என பி.வாசு மறுத்திருந்தால் அதில் நியாயம் இருக்கிறது. படம் வெளிவந்த பிறகு காட்சிக்கு காட்சி மணிச்சித்ராதாழை சந்திரமுகியாக போட்டோ காப்பி போல ஈ அடிச்சான் காப்பி பண்ணி வைத்திருக்கும் பி.வாசு படத்தின் டைட்டிலில் கதை, திரைக்கதை தன் சொந்தம் என்று கொண்டாடுவது எ ந்த வகையில் நியாயம் என்று தெரியவில்லை. உண்மை மூலத்தை சொன்னால் தன் திறமை மீது மக்களுக்கு சந்தேகம் வந்து விடுமோ என்று முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைக்கிறார். சினிமாவில் இப்போது நேர்மை என்பது நகைப்பு உரியது ஆகிவிட்டது.

நான் ரீமேக் படங்களை வெறுப்பவன் அல்ல. நல்ல கதையின் தமிழ் வெர்சனை பார்ப்பதில் மகிழ்ச்சி அடைபவர்களில் நானும் ஒருவனாக இருப்பேன். பி.வாசுவின் நேர்மையற்ற நடத்தையை கண்டு தான் மனம் வெறுக்கிறது.

இப்போது மணிசித்ரதாழு படத்தைப் பற்றி பார்ப்போம்.

மொழி: மலையாளம்
வெளியான ஆண்டு: 1993
டைரக்ஷன் : பாசில்
தயாரிப்பு : அப்பச்சன்
கதை-திரைக்கதை-வசனம் - மது முட்டம்
இசை : எம்.ஜி.ராதாகிருஷ்ணன்

நடிகர்கள்:
மோகன்லால், சுரேஷ் கோபி,ஷோபனா,நெடுமுடி வேணு, திலகன்

தெளிந்த நீரோடை போன்ற அற்புதமான கதை. யாருக்கும் மிகைப்பட்ட நடிப்பு இல்லை. எல்லா கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. சீராகச் செல்லும் திரைக்கதை. ஏற்கனவே பாசில் இந்த மாதிரி சஸ்பென்ஸ் டைப் பங்களா காட்சிகளை "கிளிபேச்சு கேட்க வா,கண்ணுக்குள் நிலவு" போன்ற படங்களில் புகுத்தியிருந்தார்.அதற்கு முன்னோடி மணிசித்ரதாழு படத்தைச் சொல்லலாம் என்று நினைக்கிறேன்.

கதையை தெரிந்துக் கொள்ள விரும்பினால் கீழ் சொல்லப் போகும் நடிகர்களின் மாறுதல்களுடன் என்னுடைய சந்திரமுகி விமர்சனத்தைப் பார்க்கவும்.

மோகன்லால் - ரஜினிகாந்த்
சுரேஷ் கோபி - பிரபு
ஷோபனா - ஜோதிகா
கொடுமுடி வேணு - நாசர்

உங்களுக்காக மணிசித்ராதாழிலிருந்து சில காட்சிகள். நீங்கள் சந்திரமுகியை பார்த்திருந்தால் காட்சிகள் டிட்டோவாக இருப்பதை கண்டு இரசிக்கலாம்.










மணிசித்ரதாழுலிருந்து சந்திரமுகி கீழ்கண்ட வகையில் மட்டுமே மாறுபட்டுள்ளது.

1. ஹீரோ துதி மணிசித்ராதாழில் இல்லை. ரஜினிக்காக சேர்க்கப்பட்ட முதல் பகுதி.
2. மோகன்லால் இடைவேளைக்கு பக்கத்தில் தான் படத்தில் அறிமுகம் ஆவார். சந்திரமுகியில் படம் முழுக்க ரஜினி.
3. சந்திரரமுகி தெலுங்கில் பேசுவார். மணிசித்ரதாழில் சந்திரமுகிக்கு பதிலாக நாகவல்லி தமிழ் பேசுவார்.
3. சந்திரமுகியில் க்ளைமாக்ஸ் காட்சியில் ரஜினி வேட்டைய ராஜாவாக நடித்து ஜோதிகாவை குணப்படுத்துவார். ஆனால் மணிச்சித்ரதாழில் மோகன்லாலின் உதவியுடன் சுரேஷ் கோபி சங்கரன் தம்பியாக (வேட்டைய ராஜா) நடித்து ஷோபனாவை குணப்படுத்துவார்.
4. சந்திரமுகியில் வேட்டைய ராஜா பொம்மை எரிக்கப்படும். மணிசித்ரதாழில் சங்கரன் தம்பி பொம்மை வெட்டப்படும்.

இதை தவிர மற்றவை எல்லாம் டிட்டோ.

சந்திரமுகி சில வகையில் உயர்ந்து நிற்கிறது. Ofcourse 1. ரஜினி 2. இசை 3. கலை: தோட்டாதரணி 4. கிராபிக்ஸ் போன்றவை அருமை. திரைக்கதை சொதப்பல் & குப்பை.

இந்த பதிவின் வாக்கு எண்ணிக்கை: . பக்கத்திலுள்ள ஸ்டாரை மவுசால் போட்டுத் தாக்கினால் எனக்கு மவுசு ஏறும். நன்றி:-)

உங்கள் கருத்துக்களை இட

திருப்பி தாக்கியவர்கள்:
நீங்க இப்படி சவுகரியமா எங்கயோ உக்காந்துட்டு இணையத்துல எழுதிட்டீங்க.. நான் இங்க இதே மேட்டர.. (சித்தூர் வரைக்கும் போயி சி.டி எடுத்துட்டு வந்து கையில வச்சுகிட்டு) சொன்னேன்.. அதுக்கு ஆளாளுக்கு அடிக்க வரானுக.. :-(
 
விஜய், நல்ல பாயிண்ட்!

/../ழான் ரெனாரும் ../ அது ரென்வா!
 
சரியாச் சொன்னீங்க. இப்பவெல்லாம் தப்பைச் சுட்டிக்காட்டினா, ஆமா அதுக்கு இப்ப என்னாங்கற? அப்படின்னு சொல்ற அளவுக்கு சொரணை கெட்டுப் போய்க்கிடக்கு. இதுல நேர்மைய எல்லாம் எங்க போயிங்க விஜய் எதிர்பார்க்கறது?
 
//சந்திரமுகி சில வகையில் உயர்ந்து நிற்கிறது. Ofcourse 1. ரஜினி 2. இசை 3. கலை: தோட்டாதரணி 4. கிராபிக்ஸ் போன்றவை அருமை. திரைக்கதை சொதப்பல் & குப்பை.//

EverythingI agree with everything in your post Vijay. Except with

//சந்திரமுகி சில வகையில் உயர்ந்து நிற்கிறது. Ofcourse 1. ரஜினி 2. இசை 3. கலை: தோட்டாதரணி 4. கிராபிக்ஸ்//

I havent seen Chandramukhi. Might do it for Jothika. Might... But, Manichithrathaazu's music is way way way better than Chandramukhi's.

-Mathy
 
ராசா உண்மைய சொன்ன இப்படி தான் அடிக்க வருவாங்க. அதுக்கு தான் ஃபிளாஷ் படத்தோட பதிவு போட்டேன். ஓசி ஜியோ சிட்டிஸ் பயன்படுத்துறதுனால பேண்ட் வித் ஜாஸ்தி ஆகி படம் வரல். என்ன பண்றதுன்னு தெரியலையே?

நன்றி ரோசாவசந்த். கொஞ்ச நாள் முன்பு வரை ஜீன் ரினாயர் என்று கூப்பிட்டுக் கொண்டிருந்தேன். அப்புறம் எஸ்.ரா 'ழான் ரெனார்' என்கிறார். நீங்கள் 'ரென்வா' என்கிறீர்கள். அப்புறம் ஜீன் ஏன் ழான் ஆகிறது பிரெஞ்சில். டோண்டு,ரோசா பதில் சொல்வீர்களா?

நன்றி இராதாகிருஷ்ணன். ரொம்ப சொரணை கெட்டுப் போய்ச்சே அதான் மோசமான நிலமை.

அப்புறம் மதி, இசை என்று சொன்னது பின்னனி இசையை. க்ளைமாக்ஸ் அற்புதமான சவுண்ட் எபெக்டில் வருகிறது சந்திரமுகியில். ஆனால் மணிசித்ராதாழு பாடல்கள் மிக மெல்லின வகையை சேர்ந்தது. அருமையாக இருக்கிறது. அது போல் சந்திரமுகி கலை ரொம்ப பிடிச்சிருக்கு.
 
அன்புள்ள விஜய்,

'கிடக்கறதெல்லாம் கிடக்கட்டும், கிழவியைத்தூக்கித் தொட்டிலில் போடுன்னானாம்!'

இப்படி போகுது கதை இங்கே!!!!

//கொடுமுடி வேணு - நாசர்//


அது சரி நெடுமுடியைக் 'கொடுமுடி'யாக்கிய காரனம் என்னவோ?:-))))))

ஆனா, பாட்டுன்னா அது 'மணிச்சித்திரத்தாழு'தான் பிடிச்சிருக்கு! அதுலேயும் அந்த
'ஒருமுறை வந்து பார்த்தாயா?...அடடா.. அருமை!!!!

என்றுமன்புடன்,
துளசி.
 
விஜய், ஜீன் ழானாகவில்லை. அது எதுவோ அப்படியே இருக்கிறது. குழப்பம் ஆங்கிலத்தில்தான் அதிகம் உள்ளது. பிரஞ்சு மொழிக்கான சொல்லிணக்கப்படி அது ஜான் தான். பிரஞ்சில் J என்பது அழுத்தமான முறையில், ழவிற்கு நாம் தரும் அழுத்தத்துடன் உச்சரிக்கப்படுகிறது. அதை ழ என்று தமிழில் பலரால் குறிக்கப்படுகிறது. அது ஜதான், ஆனால் ழ போல உச்சரிக்கப்படுகிறது. ஜான் என்பது ழான் என்பதாய் ஒலிக்கிறது. பிரஞ்சை பொறுத்தவரை அது எதுவாகவும் ஆவதில்லை. ஆங்கிலத்திலேயே பல வார்த்தைகள் வேறு ஒன்றாக ஆகிறது.

அது ரென்வாதான். வா என்றால் வா இல்லை. உஆ என்பதுபோல். oiஎன்பது இப்படி வ்வா என்று உச்சரிக்கப்படும்.
 
தலைவா போட்டுத்தாக்குறதுல உங்கள மிஞ்ச யாருமில்ல போங்க!
 
ஆகா! நல்ல விளக்கம் கொடுத்தீர்கள் ரோசா. ரொம்ப நன்றி.
 
சொல்ல மறந்த விடயம். பிரஞ்சில் (கிட்டதட்ட)எல்லா வார்த்தைகளிலும் கடைசி எழுத்து உச்சரிக்கப் படுவதில்லை. அதனாலேயே ரென்வார் எனப்படவேண்டியது ரென்வா என்று நிற்கிறது.
 
>>>சந்திரமுகி கதை, திரைக்கதை, வசனம், டைரக்ஷன் P.வாசு என வெட்கமில்லாமல் போட்டு கொண்டிருக்கிறார்.

டைட்டில் கார்டில் திரைக்கதை, வசனம், டைரக்ஷன் P.வாசு என்று மட்டும்தான் வெட்கமில்லாமல் போட்டு கொண்டிருக்கிறார். ஏனோ, கூச்சத்தில் 'கதை'யை விட்டு விட்டார்.

தோட்டா தரணியின் கலை வெகு இயல்பு அருமை.

கிராஃபிக்ஸ்: அந்தப் பட்டம் சுழற்றுவதைத்தானே சொல்றீங்க ;-))
 
they shown "Moola kathai - Swarna chithra" in last screen title
 
சந்திரமுகி சில வகையில் உயர்ந்து நிற்கிறது. Ofcourse 1. ரஜினி
Eventhough I am Rajini's fan and I have not seen the movie so far. But as a gut feeling no way Rajini can perform better than Mohanlal in that role.

Venkat M
 
மனிசந்திர தாழ் பற்றி தெரிவதற்கே சந்திரமுகி தேவைபடுகிறது.(இதுவரை மனிசந்திரதாழ் பற்றி எந்த பிளாக்கும் வந்ததாக தெரியவில்லை.)
மனிசந்திராதாழின் டிட்டோ என் சொல்லிவிட்டு சந்திரமுகியை மட்டும் சரியில்லை என விமர்சிப்பது நல்ல ஜோக்.
ரஜினி யை பற்றி திட்டுவது எழுதுவது என் ஆரம்பித்தபிறகு லாஜிக் பார்ப்பது தவறு.
தேன்மாவின் கொம்பு விற்கு கிடைக்காத வறவேற்பு முத்து விற்கு கிடைத்தது(ஜப்பான் வரை).

பாவம் கஷ்டப்பட்டு மனிசந்திரதாழ் கிளிப்பிங்ஸ் எல்லலாம் போட்டு ரஜினியை திட்டுமளவிற்கு ரஜினியின் வளர்ச்சி.
 
உங்களுக்கெல்லாம் எப்படி தான் புரிய வைக்கிறதோ. நான் சொல்ல வந்த கருத்து புரிஞ்சிதா? நான் ரஜினியை குறை சொல்ல வரவில்லை. அதனால் எனக்கு 10 பைசா லாபமில்லை. திரைத்துறையில் courtesy என்பது எந்த அளவு என்பதை தான் விளக்குகிறது.பி.வாசுவை தான் இந்த பதிவில் கேள்வி கேட்டேன்.

Fanatic-களுக்கு என்ன சொன்னாலும் புரியாது.

க்ளிப்பிங்ஸ்களுக்கு என்னமோ ரொம்ப கஷ்டப்பட்டதா சொல்றீங்க. 10 நிமிஷம் போதும் சார் எனக்கு. என்னுடைய மத்த ப்ளாஷ் க்ளிப்பிங்ஸை போய் பாருங்கண்ணா.
 
//மனிசந்திர தாழ் பற்றி தெரிவதற்கே சந்திரமுகி தேவைபடுகிறது//

கொஞ்சம் உங்களுக்கு நினைவிருந்தால் 1993-க்கு நினைவை ஓட்டிப் பாருங்கள். கேராளவில் சக்கைப்போடு போட்டது மணிசித்ரதாழு. அத்துடன் சிறந்த நடிகை(ஷோபனா), சிறந்த மேக்-அப்(பி.என்.மணி), மற்றும் சிறந்த டைரக்டர் (பாசில்) போன்றவர்களுக்கு அந்த படம் விருதுகளை வழங்கிச் சென்றது.
 
//மனிசந்திர தாழ் பற்றி தெரிவதற்கே சந்திரமுகி தேவைபடுகிறது.//
அது சரி தான்..ஆனால் யாருக்கு என்பது தான் பிரச்சனை..ரஜினி படம் மட்டும் தான் உலகத்திலே உண்டுன்னு நினைக்குற உங்களை போல ரஜினி பக்தர்களுக்கு சந்திரமுகிக்கு முன்னால் மனிசந்திர தாழ் தெரியாமல் இருக்கலாம்..எல்லோரையும் உங்களோடு சேர்த்துக்கொள்ள வேண்டாம்.
 
சந்திரமுகி படத்துல (முடியும் போது)

மூலக்கதை : ஸ்வர்க்க சித்ரா

அப்படின்னு போட்டிருந்தாங்களே கவனிச்சீங்களா?
 
அது என்ன ஸ்வர்க்க சித்ரா? கவனிக்கவில்லை.

நான் பத்திரிக்கையில் படித்த வரையில் மது முட்டம் இதைக் கண்டு கொதித்து கேஸ் போட தீவிரம் ஆகியிருக்கிறார் என்று படித்தேன்.
 
ஜோ மனிசந்திராதாழ் வெற்றிபடம் என்பதில் எனக்கு மறுப்பேதுமில்லை. ஆனால் கேரளாவுடன் நின்ற படத்திற்கு இன்று உலகம் முழுவதும் தெரிகிறது என்றால் அது சந்திரமுகி மனிசந்திரதாழின் ரீமேக் என்பதால் தான். தமிழகத்தில் இதுவரை மனிசந்திரதாழ் ரிலிஸாகவில்லை. ஆனால் சந்திரமுகி கேரளாவிலும் ரிலீசாகியிருக்கிறது.

//கேராளவில் சக்கைப்போடு போட்டது மணிசித்ரதாழு//
கேரளாவில் மட்டும்தானே

விஜய் உங்களுடைய coutesy பற்றி பெருமை அடைகிறேன். மனிசந்தரதாழ் படத்தை தான் கன்னடத்தில் ஆப்தமித்ராவாக P.vaasu கொடுத்தார். அப்போது நீங்கள் விமர்சித்திருந்தால் உங்களுடைய ஆதங்கம் சரியே. அதை ஏன் செய்ய வில்லை ராசா. ஆப்தமித்ரா பற்றி தெரியாது என் கூறி உங்களுடைய அறிவுஜீவியை குறைத்து கொள்ளாதீர்கள். கன்னடத்க்தில் 200 நாட்கல் ஓடிய வெற்றிப்படம் அது.
Repeattu- உங்களுக்கெல்லாம் எப்படி தான் புரிய வைக்கிறதோ.
 
//ரஜினி படம் மட்டும் தான் உலகத்திலே உண்டுன்னு நினைக்குற உங்களை போல ரஜினி பக்தர்களுக்கு சந்திரமுகிக்கு முன்னால் மனிசந்திர தாழ் தெரியாமல் இருக்கலாம்.. //
ரஜினி பக்தர்கள் என்று சொன்னதற்கு நன்றி.

எத்தனையோ படம் வந்தாலும் சந்திரமுகிக்கு மட்டும் விமர்சனம் இனயதளதிலும் அதிகம் வருவது ரஜினி மட்டுமே நடிகர் என நீங்கள் நினைத்து கொண்டீர்கள் என வைத்துக் கொள்ளலாமா/
 
really..i accept it..manichitra tazh is 1million times better than chandramukhi. I dont think Rajini can even act 1% of what mohanlal did..Rajini..a psychatrist..he does not have the look...but see mohanlal...the dialouge delivery in malayalam was outstanding..and shobana..my god..jothika is no where near her..truly..manichitratazh is the ultimate..and chandramuki..just okay..unnecessary comedy tracks..stunts..those group songs..spoilt the originality of the movie..
P.Vasu..u can better stop directing and pls stop calling this movie an entertainer..

Ramakrishnan, New Delhi
 

உங்கள் கருத்துக்களை இட


<< திரும்ப முன் பக்கத்துக்கு போ

This page is powered by Blogger. Isn't yours? தமிழ் அசைபட இணையச் செயலி தமிழ் விக்கிபீடியா

-->