-ல் போட்டுத் தாக்கியது
இது அறிவியலு வே...
Difficulty in reading this post due to font issues?
Click here
for a PDF copy. Works best if you right-click the link and select 'Save target as...'
சில அறிவியல் சம்பந்தப் பட்ட கேள்விகளுக்காக நாம் 'அறிவியல்' அண்ணாச்சியை அணுகினோம். நம்ம அறிவியல் அண்ணாச்சிக்கு சும்மா சொல்லக் கூடாது, அறிவும் ஜாஸ்தி, குசும்பும் ஜாஸ்தி. கொஞ்ச உஷாராகத் தான் கேள்விகளை அவரிடம் அடுக்க வேண்டியிருந்தது.
எடுத்த ஒடனே அவரு கேட்ட கேள்விக்கு ஓடி வந்திரனும்னு பார்த்தேன். சரி நம்ம அல்வாசிட்டி வாசகர்கள் கொஞ்சம் பயன் உள்ள அறிவியல் தகவல்களைத் தெரிஞ்சிக்கலாமுன்னு சகிச்சிக்கிட்டேன். இதோ அறிவியல் அண்ணாச்சியுடன் நம் உரையாடல்.
"மக்கா! அறிவியல் என்கிறது அறிவு உள்ளவங்களுக்குத் தாம்ல. நீ எதுக்கு நீங்க வந்தேவே?"
"இல்லே அண்ணாச்சி! உங்கக் கிட்ட இருந்து அதை கொஞ்சம் கடன் வாங்கிட்டு போலாமுன்னு தான் ஓடியாந்தேன்"
"வருவலே வருவே! உன்னை மாதிரி எத்தனை எத்தன பார்த்திருப்பேன் என்னோட கிளாஸ்ல. என்னல அறிவியல் சம்பந்தமான கேள்வி தானே கேக்க வந்திருக்கே. எனக்கு பிரச்சனவே. எனக்கு தமிழில்ல அவ்வளவு எளிமையா அறிவியலை சொல்ல வராதுவே"
"அண்ணாச்சி சும்மா பந்தா பண்ணிக்காதீக. தெற்கு பஜாருல 30 வருஷத்துக்கு முன்னாடி வர டவுசர் போட்டுட்டு, பொண்ணுங்களோட சேர்ந்து பாண்டி விளையாடிட்டு, என்னமோ அமெரிக்காவில பொறந்து வளர்ந்த மாதிரி பேசுதீக"
"தலை நரைச்சி போன இந்த சமயத்தில அது ஏம்ல ஞாபகப்படுத்துறே"
"அண்ணாச்சி! ஒரு கேள்வி. நமக்கு மட்டும் ஏன் வயசான முடி நரைச்சி போறது. மிருகத்துக்கு எல்லாம் அப்படி ஆகிறதில்லையே. அது ஏன்?"
"தம்பி, நமது தலைமுடி கெரட்டின் எனப்படும் புரொட்டீனால் உருவாகிறது. ஆனால் விலங்குகளுக்கு இந்த கெரட்டின் மிஸ்ஸிங். ஆக நமக்கு வயசாக வயசாக கெரட்டினும் அதனோட தெம்பை இழக்கிறது. விளைவு நரைத்துப் போன முடி தம்பி"
"சரி தம்பி வெய்யில்ல வந்திருக்கே. பிரிஜ்ல ஜூஸ் இருக்கு எடுத்து குடிவே"
"அண்ணாச்சி ப்ரிஜ்ல இருக்கிற தக்காளி பழங்களை எப்ப வாங்கியாந்தீக?"
"அதுவா, ஒரு வாரம் இருக்குமுன்னு நினைக்கிறேன்ல"
"அப்போ ஒரு கேள்வி! காய்கறிகளை ஃப்ரிஜ்ல வச்சா மட்டும் அப்படியே அழுகாம இருக்கு. அதே வெளியே வச்சா சீக்கிரம் கெட்டுப் போயிடுதே. என்ன மேஜிக் அண்ணாச்சி பண்ணுது அந்த ஃப்ரிஜ்"
"எல்லாம் உள்ள இருக்கிற குளுமை தாம்ல. பழவகைன்னாலும் சரி, காய்கறின்னாலும் சரி நொதித்தல் (Fermentation) நடக்காத வரை அப்படியே ஜிலு ஜிலுன்னு இருக்கும். நொதித்தல் பாக்டீரியா, வெப்பம் என்னும் பல காரணங்களுக்காக நடக்கிறது. நொதித்தலைப் பத்தி கேட்டேன்ன ஒரு பெரிய கிளாஸே எடுக்கலாம். அத அப்புறம் சொல்றேன். இந்த நொதித்தல் குறைவான வெப்ப நிலையில் நடப்பதே இல்லை. அதுனால தான் காய்கறிகளை ஃப்ரிஜ்க்குள்ளே இருக்கிற வரை நொதித்தல் நடக்காததுனாலே, அப்படியே அழுகாம ஃப்ரஸ்ஸா இருக்கு"
"அண்ணாச்சி வந்தாலும் வந்துட்டேன் உங்க கூட ஒரு போட்டோ எடுத்துக்கிறேன். ஆமா அண்ணாச்சி இந்த போட்டோ எடுத்து கழுவும் போது போட்டோல இருக்கிற மனுசங்க கண்ணு அப்படியே சிவப்பா இருக்கே. இத கூட உங்க ஆங்கிலத்தில "RED EYE" ன்னு சொல்வாங்க. அது ஏன் அண்ணாச்சி?"
"தம்பி! அந்த போட்டோக்களை நல்ல கவனிச்சிப் பார்த்தேன்னா உனக்கு ஒன்னு விளங்கும். எல்லாமே குறைவான வெளிச்சத்துல எடுத்த போட்டோவா இருக்கும். கண்ணுல ரெட்டினான்னு ஒரு பகுதி இருக்கு. அதிக வெளிச்சத்தில இது சுருங்கியும், குறைவான வெளிச்சத்தில அது விரிந்தும் உங்கள் பார்வையை சமன் படுத்த உதவுகிறது. இந்த மாதிரி குறைவான வெளிச்சத்தில் வைத்து கேமராவில் படம் எடுக்கும் போது, கேமராவில இருந்து வரும் பிளாஷ் வெளிச்சம் உன் கண்ணுக்குள் இருக்கும் விரிந்த ரெட்டினாவிலப் பட்டு எதிரொலிக்கிறது தான் காரணம். இப்பொது வரும் கேமாரக்களில் "RED EYE reduction" என்ற வசதியோடே வருகிறது. இந்த மாதிரி கேமராக்கள் என்ன பண்ணுமென்றால் இரண்டு பிளாஷ்களை பயன்படுத்தும். முதல் பிளாஷ் அடித்த உடன், இயல்பின் காரணமாக அதிக வெளிச்சம் ஆகையால் உங்கள் கண்ணில் உள்ள ரெட்டினா சுருங்கும். அதை தொடர்ந்து படம் எடுக்கத் தேவையான பிளாஷை உங்கள் கேமரா பிரயோகிக்கும். ஏற்கனவே உங்கள் கண்ணின் ரெட்டினா சுருங்கி விட்டதால் பிளாஷ் எதிரொலிப்பு இல்லாமல் போகிறது. அதனால் ரெட் ஐயும் இல்லாமல் போகிறது."
"ஒஹோ அதுனால தான அண்ணாச்சி, இருட்டுல இருந்து வெளிச்சத்துக்கு வந்த உடனே கண்ணு கூசுதோ"
'ஆமாம் தம்பி, இருட்டுல ரொம்ப நேரம் இருந்துட்டு டக்குன்னு வெளிச்சம் பார்த்த உடனே, இந்த விரிந்த ரெட்டினா அட்ஜ்ஸ்ட் ஆவாதற்கு கொஞ்சம் டைம் எடுக்கும். அதுக்கு தான் உங்க கண் கூசுகிறது"
"சரி அண்ணாச்சி, கண்ணை பத்தி பேசிக்கிட்டு இருந்ததுனால எனக்கு இன்னொரு கேள்வி. இந்த நாய், பூனை கண்ணெல்லாம் இருட்டுல வெளிச்சம் பட்ட உடனே, ஜிகு,ஜிகு மிளிங்குதே அது ஏன் அண்ணாச்சி?"
"ஏலே! நீ ரொம்ப அறுக்கே. எனக்கு மச்சியிலே கொஞ்சம் வேலை இருக்கு. அந்த பாரு... நீ கேட்ட கேள்வியையும் ஒரு அண்ணாச்சி படிச்சிக்கிட்டு இருக்கிறாரு. அவருகிட்டே கேளுலே.... போ...
"அண்ணாச்சி போறதுக்கு முன்னாடி பார்க்கிறவங்க கண்ணுக்கு விருந்தா ஒரு படம் போட்டுட்டு போறேன் அண்ணாச்சி...

உன்னில் நான் அழுக்கு
என்னில் நீ அழுக்கு
நம்மால் யாவும் அழுக்கு
-நன்றி சந்திரமுகி
(அறிவியல் மேட்டரை 13/டிசம்பர்/2002-ல் அல்வாசிட்டி.காம் -க்காக நான் எழுதியது. மற்றவைகள் எல்லாம் லேட்டாஸ்டாக போட்டுத் தாக்கியது தான்)
இந்த பதிவின் வாக்கு எண்ணிக்கை:
. பக்கத்திலுள்ள ஸ்டாரை மவுசால் போட்டுத் தாக்கினால் எனக்கு மவுசு ஏறும். நன்றி:-)
உங்கள் கருத்துக்களை இட
திருப்பி தாக்கியவர்கள்:
போன மாதம் ஒரு நாள். இரவு 12.30 இருக்கும். about to sleep. பககத்தில் படுத்திருந்த என் 4 வயது மகன் திடீரென்று என்னைத் தொட்டு 'அப்பா, எனக்கு சிலது தெரியணும். இப்ப கேட்டா கோவிப்பீங்களா?' என்றான்.
நான் 'இல்லை கண்ணா. கேளு' என்றேன்.
'நான் 6 கேள்விகள் கேட்பேன். பரவாயில்லையா?' என்றான்.
'சரி' என்றேன்.
அவன் கேட்ட கேள்விகள் கீழே.
1. சுனாமி ஏன் வருது?
2. நம்ப எதுக்கு ட்ரெஸ் போட்டுக்கணும்?
3. ஸ்பைடர் மேன் எப்பொழுதும் ஏன் மற்றவர்களை அடித்துக் கொண்டே இருக்கிறான்?
4. பூக்களுக்கு ('செடிகளுக்கு' என்று புரிந்து கொண்டேன்) ஏன் தண்ணி ஊத்தணும்?
5. பாம் (bomb) ரொம்ப சின்னது. ஆனா வெடிச்சா பக்கத்தில் இருக்கும் எல்லாம் காணாமப் போயிடுது. எப்படி?
6. ஒருத்தர் செத்தா ஏன் புதைக்கணும்? அவர் உடம்பை அப்படியே விட்டா என்ன ஆகும்?
இதற்கு "மிகவும் சரியான" பதில்களை அறிவியல் அண்ணாச்சிதான் சொல்லணும்.
- ஆத்மன் (எங்கும் நிறைந்தவன்)

ஆத்மன் அண்ணாத்தே,
அறிவியல் அண்ணாச்சியை தான் பிடிக்கனும் இதுக்கு. எங்கேயிருக்காறோ... எந்த புக் ஷெல்ப்ல இருக்காறோ.... பதில் சொல்லிறலாம் கூடிய சீக்கிரம்... :-)

சின்ன வயதில் என் அப்பாவிடம் - " இந்த தக்காளியை எந்த மெஷினில் தயாரிக்கிறாங்க ? " அப்புறம் ... " இந்த பல்பு எந்தச் செடியில் முளைக்குது ? " என்றெல்லாம் கேள்வி கேட்டது ஞாபகம் இருக்கு...ஆனால் அவர் பதி சொன்னதேயில்லை.
விஜய் ... உங்ககிட்ட பதில் இருக்கு ? :))))

பாண்டியனாரே! உங்களுக்கு மட்டும் திசை மாறி தெரியாது என்று நினைக்கிறேன். எல்லோருக்கும் திசைகள் மாறி தான் தெரியுமென நினைக்கிறேன் கம்பஸை தவிர. அல்லது திசைகளை கண்டுபிடிக்க காந்தமாக இருக்க வேண்டும். அடடா... இதுக்காக 2 வாட்டி பின்னூட்ட விட்டுட்டீங்களே... கட்டாயம் நல்ல அறிவியல் காரணங்களுடன் வந்து விட வேண்டியது தான்.
விஜய்,
உங்களை யாரோ சொல்லிருந்தாங்க... விட்டா நீங்க படமே எடுப்பீங்கன்னு...
படம் எல்லாரும்தான் எடுக்குறாங்க. அதெப்படி நீங்க எடுக்குற படம்லாம் ஓடுற மாதிரி எடுக்கிறீங்க!? அறிவியலையே ஜனரஞ்சகமா எடுத்து ஹிட் கொடுத்திட்டீங்களே:) பாராட்டுக்கள், தொடருங்கள்.
அப்புறம், நண்பர் ஆத்மன் அவர்களுக்கு:
மகனோட கேள்விகளுக்குப் பதில் சொல்லுமுன், இதைப் படிச்சிடுங்க:
அப்படின்னா என்ன மம்மி...!?

என்ன அன்பு இப்படி சொல்லிட்டீங்க. படம் எடுக்க கத்துக்கிட்டதே உங்களை மாதிரி ஆளுங்ககிட்ட இருந்து தானே...
அன்பு அது நல்ல பதிவு. இருங்க ஊர்ந்து வாரேன் அந்த பக்கம்.
அன்பு அது நல்ல பதிவு. இருங்க ஊர்ந்து வாரேன் அந்த பக்கம்.
உங்கள் கருத்துக்களை இட
<< திரும்ப முன் பக்கத்துக்கு போ