-ல் போட்டுத் தாக்கியது
மயக்கமா? கலக்கமா?
Difficulty in reading this post due to font issues?
Click here
for a PDF copy. Works best if you right-click the link and select 'Save target as...'
நேற்றைக்கு போட்ட அந்த காந்த பதிவு காந்த படுக்கை விவகாரத்தை விட எடாக்கூடாமாகி போனதால் அது என் பதிவிலிருந்து தூக்கப்பட்டு விட்டது.
சிறிது நேரம் முன்பு வரை தூக்கத்துக்காக கட்டிலில் புரண்ட போதும், தூக்கம் என்னை தழுவ மறுத்தது. மெல்லன குரலில் இசையை ரசிக்கத்தூண்டியது என் மூளை. மெதுவான குரலில் P.B.சீனிவாசை பாடவிட்டு தலையணையை கவ்வினேன்.அலைந்துக் கொண்டிருந்த மனதும் ஒருவசப்பட்டு போனது கண்ணதாசா!!.
தமிழ் தாயின் செல்லக் குழந்தை நீ எங்கள் கவி அரசா... உங்கள் பேனாவில் கொட்டிய கவிதைகள் தான் எத்தனை எத்தனை. என் உள்ளக் காயங்களுக்கு நீர் கொடுத்த அருமருந்துகள் தான் எத்தனை எத்தனை. தத்துவக் கடலே! "ஆயிரம் இயந்திரங்கள் ஓடும் போதும் என்னால் சிந்திக்க முடியும்" என்றீரே, உமக்கு எந்த நிலையிலும் அழிவில்லை. கவிதையாய் எங்களுடன் வாழ்கிறீர்கள் எங்கள் கவியரசர் கண்ணதாசன் அவர்களே.
என்னை தூண்டிய பதிவுக்கு தூண்டிய அந்தப் பாடல்
மயக்கமா? கலக்கமா?
மனதிலே குழப்பமா? வாழ்க்கையில் புழுக்கமா?
வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்
ஆசைத் தோறும் வேதனை இருக்கும்
வந்தத் துன்பம் எதுவென்றாலும்
வாடி நின்றால் ஓடிவிடுவதில்லை
எதையும் தாங்கும் இதயம் இருந்தால்
இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்
ஏழை மனதை மாளிகையாக்கி இரவும் பகலும் கவிப்பாடு.
நாளைப் பொழுதை இறைவனுக்கு அளித்து
நடக்கும் வாழ்வில் அமைதியைத் தேடு
உனக்கும் கீழே உள்ளவர் கோடி
நினைத்துப் பார்த்து நிம்மதியை நாடு
இனிய சாறாக வழிந்தோடும் உந்தன் தாலாட்டுடனும் சாந்த மனதுடனும் நிம்மதியாக தூங்கப் போகிறேன்.
சிறிது நேரம் முன்பு வரை தூக்கத்துக்காக கட்டிலில் புரண்ட போதும், தூக்கம் என்னை தழுவ மறுத்தது. மெல்லன குரலில் இசையை ரசிக்கத்தூண்டியது என் மூளை. மெதுவான குரலில் P.B.சீனிவாசை பாடவிட்டு தலையணையை கவ்வினேன்.அலைந்துக் கொண்டிருந்த மனதும் ஒருவசப்பட்டு போனது கண்ணதாசா!!.

என்னை தூண்டிய பதிவுக்கு தூண்டிய அந்தப் பாடல்
மயக்கமா? கலக்கமா?
மனதிலே குழப்பமா? வாழ்க்கையில் புழுக்கமா?
வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்
ஆசைத் தோறும் வேதனை இருக்கும்
வந்தத் துன்பம் எதுவென்றாலும்
வாடி நின்றால் ஓடிவிடுவதில்லை
எதையும் தாங்கும் இதயம் இருந்தால்
இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்
ஏழை மனதை மாளிகையாக்கி இரவும் பகலும் கவிப்பாடு.
நாளைப் பொழுதை இறைவனுக்கு அளித்து
நடக்கும் வாழ்வில் அமைதியைத் தேடு
உனக்கும் கீழே உள்ளவர் கோடி
நினைத்துப் பார்த்து நிம்மதியை நாடு
இனிய சாறாக வழிந்தோடும் உந்தன் தாலாட்டுடனும் சாந்த மனதுடனும் நிம்மதியாக தூங்கப் போகிறேன்.
இந்த பதிவின் வாக்கு எண்ணிக்கை:
. பக்கத்திலுள்ள ஸ்டாரை மவுசால் போட்டுத் தாக்கினால் எனக்கு மவுசு ஏறும். நன்றி:-)
உங்கள் கருத்துக்களை இட
திருப்பி தாக்கியவர்கள்:
நீங்கள் பாடலின் சில சொற்களைத் தவறாக எழுதியுள்ளீர்கள். கவனம் தேவை.
கண்ணதாசன் பற்றி நான் சொல்லிக் கேட்ட ஒரு விஷயம். ஒரு முறை அவர் ஒரு பள்ளி விழாவிற்கு சென்றிருந்தாராம். அங்கு பல மாணவர்களும் அவர் முன்னால் அவர்தம் கவிதைகளை வாசித்தார்களாம். வழக்கமான கை தட்டலும் இருந்ததாம். கடைசியாகக் கவிஞர் அவருடைய கவிதையை வாசித்தபொழுது, பலத்த கரகோஷம் வானைப் பிளந்ததாம். கைதட்டல் அடங்கிய பிறகு கவிஞர் சொன்னாராம் : "இது நான் எழுதிய கவிதையே அல்ல. முன்பு கவிதை வாசித்த ஒரு மாணவர் எழுதியது. அவர் வாசித்ததுதான் நான் எழுதிய கவிதை. ஆனால் யாருக்கு கிடைத்தது பலத்த கை தட்டல்? 'இதுதான் உலகம்' " என்றாராம்.
முன்பு நான் ஒரு பின்னூட்டத்தில்,
// விஜேய், நீங்கள் மகேந்திரன் பற்றியும் இந்த இரான் படம் பற்றியும் எழுதியதை ஒரு சுஜாதாவோ அல்ல புஷ்பா தங்கதுரையோ தாங்கள் எழுதியாக குமுதத்துக்கோ ஆனந்த விகடனுக்கோ அனுப்பிருந்தால் நிச்சயம் உடனே பிரசுரம் செய்திருப்பார்கள்.//
என்று எழுதியது "இந்த உலகம் இப்படித்தான்" என்ற யதார்த்தத்தை உணர்த்தத்தான். அதை நீங்கள் அப்பொழுது சரியாகப் புரிந்து கொண்டீர்களா என்பது சந்தேகமே !
- ஆத்மன் (எங்கும் நிறைந்தவன்)

நன்றி ஆத்மன், ரோசா. தூங்கிக் கொண்டே எழுதியதால் அங்காங்கே வார்த்தைகளை குழப்பி விட்டேன். சுட்டிகாட்டியமைக்கு நன்றி
உங்கள் கருத்துக்களை இட
<< திரும்ப முன் பக்கத்துக்கு போ