<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d9439067\x26blogName\x3d%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81!!!!!\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLACK\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://halwacity.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://halwacity.blogspot.com/\x26vt\x3d-1566162084738285005', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script> <!-- Remove below comment line to show the content. Added for meta redirection --> <!--

போட்டுத் தாக்கு!!!!!

எள்ளோடு எலி புழுக்கையும் எண்ணைக்காக காயுதாம்

-ல் போட்டுத் தாக்கியது

இது விற்பனைக்கு அன்று

Difficulty in reading this post due to font issues? Click here for a PDF copy. Works best if you right-click the link and select 'Save target as...'
இந்த பதிவை போட்டுத் தாக்கியவர் : Vijayakumar
இன்று கொஞ்சம் வேலை ஜாஸ்தி. நாளை சுனாமி விவாதத்திற்கு தளம் அமைத்துக் கொடுத்த அருள்குமரன் வீட்டில் ஒரு விசேஷம். இருந்தாலும் இந்த இரண்டு நாட்களும் இந்த அல்வா கடை மூடப்படாது. இரண்டு நாட்களும் அல்வாசிட்டியில் வேறு லாலா கடையிலேருந்து அல்வா கொண்டு வந்து கொடுக்கப்படும்.

இன்றைய அல்வா....

குட்டி ரேவதி எழுதிய 'தனிமையின் ஆயிரம் இறக்கைகள்' கவிதை தொகுப்பிலிருந்து நான் ரசித்த நிறைய கவிதைகளில் சாம்பிளுக்கு இரண்டு கவிதைகள் இங்கே.....

வளையங்கள் உருண்டோடும் இரவு

மதில் சுவரிலிருந்து பந்தைப்போல்
துள்ளிக் குதிக்கிறது கறுப்புப்பூனை

நீண்ட தாழ்வாரத்தில்
அதன் விழிகளில் மஞ்சள் நிற வளையங்கள்
உருண்டோடுகின்றன

அடர்ந்த மரக்கிளையில்
கூட்டை அடையும் பறவையைப்போல்
மறைந்துப் போகிறது

ஒரு பகலின் விளிம்பிலிருந்து
மறு பகலின் கைப்பிடிச்சுவருக்குத் தாவுகிறது

நட்சத்திரங்கள் உறுத்தும்
வானிற்குக் கீழே

இது விற்பனைக்கு அன்று

வறுமைக்கோட்டைக் கரைக்கவே முடியாமல்தான்
முலைகளை விற்பதென முடிவுச்செய்தேன்
இன்னபிற உறுப்புகளையெல்லாம் ஏலத்தில் இழந்தபின்
கடைகடையாக ஏறி இறங்கினேன்
ஆபரணங்களுக்கு மத்தியிலோ கனிகளுக்கு இடையிலோ
அவற்றை விற்பனைக்கு வைக்கமுடியவில்லை
உள்ளாடைகளைப் போலச் சுவர்களிலோ
தாங்கிகளில்லோ தொங்கிக்கொள்ளவும் ஏதுவாயில்லை
குழந்தைகளுக்கான பொம்மைக்கடையில்
குழந்தைகளின் நாட்டமெல்லாம் இவைமீதே;
பொம்மை விற்பனை குறைந்தது எனத் திரும்பத்தந்தான்
வாடகைக்கு என்றால் எவரும் வைத்துக்கொள்ளத் தாயார் என்றான்

வாடகைக்கு அமர்த்தப்பட்டிருக்கின்றன
பள்ளிகளில்
குழந்தைகளுக்குப் பாலூட்டவென

(நன்றி: ஓசியில் இந்த புத்தகத்தை படிக்கக் கொடுத்த 'குப்பை குப்பைமட்டுமல்ல' அன்புவுக்கு ஒரு கோடி நன்றிகள் உரித்தாகட்டும்)

இப்போ சினிமா....

கீழே மீன் தொட்டியை ஃபிளாஷில் ஓபன் சோர்ஸில்(open source) போட்டுக் கொடுத்த புண்ணியவானுக்கு நன்றி. என் விருப்பத்துக்கு ஏற்ப ஃபிளாஷில் கத்தி வைக்கப்பட்டு அது அல்வாசிட்டிக்கு உரிமையானது :-)

அல்வாசிட்டி மீன் தொட்டி









இந்த பதிவின் வாக்கு எண்ணிக்கை: . பக்கத்திலுள்ள ஸ்டாரை மவுசால் போட்டுத் தாக்கினால் எனக்கு மவுசு ஏறும். நன்றி:-)

உங்கள் கருத்துக்களை இட

திருப்பி தாக்கியவர்கள்:
இரவி தூங்கினால் இரவு
இரவு தூங்கினால் இரவி

--------------------------

மார்பில் தொங்கும் அதே சதைகள்
முழங்காலில் தொங்கினால்?
அப்பொழுதும் வருமா(மோ) காம வெறி?!
சதை மானிடா! வெறும் சதை!

-----------------------------

ஆத்மன் - எங்கும் நிறைந்தவன்
 
ஆத்மன், இரவி - சூரியன். ம்ம்ம்,.. வரியெல்லாம் நல்ல தான் இருக்கு....
 
மீன் தொட்டி ஃபிளாஷ் நல்ல இருக்கு
 

உங்கள் கருத்துக்களை இட


<< திரும்ப முன் பக்கத்துக்கு போ

This page is powered by Blogger. Isn't yours? தமிழ் அசைபட இணையச் செயலி தமிழ் விக்கிபீடியா

-->