-ல் போட்டுத் தாக்கியது
சந்திரமுகி - திரைவிமர்சனம்(சுட சுட)
Difficulty in reading this post due to font issues?
Click here
for a PDF copy. Works best if you right-click the link and select 'Save target as...'
அதிக எதிர்பார்ப்பு எப்போதுமே அதிக ஏமாற்றம் தான். எப்படியோ அடித்து பிடித்து இன்று(புதன் 13/ஏப்ரல்/2005) இரவு காட்சியில் சந்திரமுகி பார்த்தாயிற்று. ரஜினி ரசிகர்கள் மத்தியில் நானும் ஒருவன் என்ற நிலைமை. ஏத்திய சுருதியுடன் திரையரங்குக்குள் மணியை பார்ப்பது திரையை பார்ப்பதுமாக ரசிகர்களின் கூக்குரலினூடே வாகாக இருக்கையும் பிடித்து அமர்ந்தாயிற்று. இடைவேளை கிடையாது என்பதால் பாத்ரூமுக்கு போய் டவுன்லோட் பண்ண வேண்டியதை பண்ணி விட்டு திரும்ப இருக்கையில் அமர்ந்தேன். சென்றிருந்த 20 நண்பர்களும் ஒரே வரிசையில் உட்கார்ந்துக் கொண்டு, பாட்டுக்கு ஆட்டம் போடவும் ரெடி.
படம் ஆரம்பித்து எதற்கு எடுத்தாலும் விசில். பெரிய லெவல் ரோடு காண்ட்ராக்டராக பிரபுவை காண்பிக்க தொழில் பொறாமைக் கொண்ட வில்லன் அடியாட்களை அனுப்ப, பிரபு வருவதற்குள் திரையில் ஒரு ஷூவின் அடிப்பாகம் மட்டும் திரையில் குளோசப்பில் காண்பிக்கப்படுகிறது. அப்புறம் பக்கவாட்டில் கவிழ்த்து போட்ட Y எழுத்து மாதிரி காலை அந்தரத்தில் தூக்கி நின்று புருஸ்லீ, ஜாக்கிசான் ஸ்டைலில் ரஜினி காந்த் போஸ் கொடுக்கிறார். விசில் சத்தம் காதைக் கிழிக்கிறது. சில பேர் திரைக்கு ஓடிச் சென்று ரஜினியின் காலை தொட்டு கும்பிட்டு விட்டு வருகிறார்கள். ரஜினி தொட்டாலே போதும் அடியாட்கள் பறக்கிறார்கள். தலைகீழாக சுற்றுகிறார். மேல் கீழாக குதிக்கிறார். என்னனவோ செய்கிறார். வில்லன்கள் அடித்து ரஜினியால் துவம்சம் பண்ணப்படுகிறார். அய்யகோ... இருந்தாலும் ரஜினி ரசிகர்களுக்கு அருமையான பைட்டு சிக்குவென்ஸ்.
அப்புறம் தான் புரிகிறது ரஜினி அமெரிக்காவிலிருந்து இறங்கிய உலகப் புகழ்பெற்ற மனோதத்துவ நிபுணர்.பெயர் சரவணன். பிரபுவுக்கு உற்ற நண்பன். "யாமிருக்க பயமேன்,இந்த சரவணன் இருக்க பயமேன்" இது தாங்க ஒரு சில இடத்துல ரஜினி பயன்படுத்துற பஞ்ச் (பஞ்சு) டயலாக். பிரபு ஜோதிகாவை காதலித்து கல்யாணம் புரிந்தவர். அம்மா கே.ஆர்.விஜயா. பிரபு சொந்த ஊரில் உள்ள வேட்டையப்ப ராஜா அரண்மணை வாங்க போகிறேன் என்று சொல்ல கே.ஆர்.விஜயா பதறுகிறார். பிறகு அந்த ஊரில் உள்ள சொந்தங்களாக அகிலாண்டேஸ்வரி, நாஸர் பத்தியெல்லாம் சொல்கிறார்.அவர்களிடமிருந்து பல வருடம் முன்பு பிரிந்து வந்தவர்கள் பிரபு பேமிலி. அகிலாண்டேஸ்வரியைப் பற்றி ஒரு பெரிய பில்ட்-அப் கொடுக்கிறார்கள். நானும் வழக்கம் போல ரஜினி பட வில்லி என்று நினைத்தேன்.கடைசியில் அந்த கேரக்டரும் தொஸ்ஸ்ஸ்ஸ்....
ரஜினி முதலில் அந்த பங்களாவைப் பற்றி விசாரிக்க அந்த ஊருக்கு வருகிறார். வடிவேலுவும் நாசருக்கு ஒரு மாப்பிள்ளை முறையாக வேண்டும் அந்த படத்தில். ரஜினி வடிவேலுவுடன் சேர்ந்து சில காமெடிகளை செய்கிறார். பங்காளவைப் பற்றி சொன்னதும் எல்லாரும் நடுங்கிறார்கள். நடுங்கிக் கொண்டே இருக்கிறார்கள். பில்ட்-அப் கொடுத்தக் கொண்டே இருக்கிறார்கள். ரஜினியும் வடிவேலுவும் காமெடி என்ற பெயரில் அவஸ்தை பண்ணிக் கொண்டே இருக்கிறார்கள். போதும்டா சாமி இந்த கொடுமை. இடையிடையே பாட்டு வேற.
பங்களா பற்றிய பில்ட்-அப் என்னவென்றால் வேட்டையப்ப ராஜா சந்திரமுகி என்ற நாட்டியகாரியின் மேல் ஆசைக் கொண்டு அவளை தூக்கிக் கொண்டு வர, அவள் ஏற்கனவே ஒருவனை காதலித்து வருகிறாள். ராஜா பொறாமைக் கொண்டு காதலனை கொன்று விட்டு சந்திரமுகியை எரித்து விடுகிறார். அப்புறம் சந்திரமுகி அந்த பங்களாவில் ஆவியாக 150 வருடமாக வேட்டையப்ப ராஜாவை கொல்ல அலைகிறார். இது தான் பில்ட்-அப்.
ரஜினி அந்த பங்காளவை ஆராய்ந்து பேய் எல்லாம் ஒன்னும் கிடையாது என பிரபுவுக்கு ரைட் கொடுக்க, பிரபு பேமிலி உறவினர்களுடன் சர்வ ஜாக்கிரதையாக அந்த பங்களாவுக்கு குடியேறுகிறது. அப்புறம் ரஜினி வெளியூர் போகிறேன் என்று காணாமல் போகிறார். இதற்கிடையில் ஜோதிகா ஆர்வம் மிகக் கொண்டு பங்களாவில் ஒரு பகுதியில் பூட்டப்பட்ட சந்திரமுகி, வேட்டையப்ப ராஜாவின் அறையை திறக்கிறார். அதிலிருந்து வீட்டில் அமனுஷ்யமாக பல கெட்டவைகள் பிரபுவுக்கும் சுத்தி இருப்பவர்களுக்கும் நடக்கின்றன.
ரஜினி வந்து சேருகிறார். துப்பறிகிறார். கண்டுபிடிக்கிறார். மனோதத்துவ ரீதியாக இது ஸ்பிலிட் பெர்சனாலிட்டியின்(Split personality) அட்டகாசம் என்கிறார். நிகழந்த அட்டூழியங்களுக்கு ஜோதிகாவை நோக்கி கையை காட்டுகிறார். அவரை எப்படி குணப்படுத்துகிறார் என்பதே சந்திரமுகி.
டிவியில் வந்துக் கொண்டிருந்த 'விடாது கருப்பு'(இந்திரா சௌந்தராஜன் எழுதியது என நினைக்கிறேன்???) அப்படியே சந்திரமுகி ஆகியிருக்கிறது. படத்தில் ரஜினிக்கு சுருதி ரொம்ப குறைவு. படு இளைமையாகத் தெரிகிறார். இருந்தும் என்ன பயன்? பாபாவுக்கு ஒரு படி மேல் என்று சொல்லலாம் இந்த படத்தை. ரசிகர்களுக்காக முதலிலேயே வழக்கான ரஜினியை காண்பித்து விட்டு, படம் பூராவும் அவரை மிஸ் பண்ணி விடுகிறார்கள். உற்சாகத்துடன் வந்த ரசிகர்கள் படம் கொஞ்ச நேரம் ஓட ஆரம்பித்ததும் ஆங்காங்கே கொட்டாவி விடுவதும், பாடலுக்கு பாத்ரூமைத் தேடி போவதுமாக இருக்கிறார்கள்.
இடைவேளை வரை இந்த படத்தை பேய் படமாக காட்ட வேண்டுமா? இல்லை சஸ்பெண்ஸ் படமாக காட்ட வேண்டுமா? என்ற குழப்பம் பி.வாசுவுக்கு. சும்மா அந்த பங்களாவை சுத்தி சுத்தி கேமிரா சுழட்டி அடிக்கிறது. கூட சேர்ந்து நமக்கும் தலை சுத்துகிறது.
சில ரசிகர்களிடம் அப்பிராயம் கேட்ட போது இடைவேளை வரை தான் ரஜினி படமாக தெரிந்தது என்றார்கள்.எனக்கு என்னமோ இடைவேளைக்கு பிறகு தான் படம் நன்றாக போனதாக நினைப்பு. காமெடி என்ற பெயரில் இரட்டை அர்த்த வசனத்தை ஆங்காங்கே ரஜினி அள்ளி விடுகிறார்.
படத்தில் என்னதான் நிறைவு இருக்கிறது? நிறைவும் நிறைய இருக்கிறது.
பாடல்கள் படமாக்கப்பட்ட விதம் மிக அருமை(தமிழ் பட தரத்தை அளவுக்கோல்களாக வைத்தால்). 'கொஞ்ச கொஞ்ச நேரம்' பாடல் துருக்கி இஸ்தான்புல்-ல் எடுத்ததாகக் கேள்விப் பட்டேன். தமிழ் படத்தில் இது வரை வராத லொக்கேஷன். ரஜினியும் நயந்தாராவும் அருமையாக தெரிகிறார்கள். அடுத்த பாடல் "அண்ணணோட பாட்டு" இதுவும் வெகு அருமையாக எடுத்துருக்கிறார்கள். "கோழி பறபற" பாடலும் அருமை.
அப்புறம் ராஜகமாளிகை. அருமையான செட்டிங்ஸ். அற்புதமாகத் தெரிகிறது அந்த மாளிகை. இது எனக்கு மிகவும் பிடித்திருந்தது.கலை யார் என்று கவனிக்கவில்லை.
அப்புறம் படத்தின் கிளைமாக்ஸ். மிக விறுவிறுப்பாக எடுக்கப்பட்ட கிளைமாக்ஸ்.
அப்புறம் ஜோதிகா. கலக்கி அள்ளியிருக்கிறார். கிளைமாக்ஸில் ஜோதிகாவின் நடிப்புக்கு முன் ரஜினியால் ஈடு கொடுக்க முடியாமல் திணறியிருந்தார். சொத்தை சொள்ளையாக படத்தின் ஆரம்பித்தில் வந்துக் கொண்டிருந்த ஜோதிகா ஸ்பிலிட் பெர்சனாலிட்டியாக மாறியதும் சந்திரமுகியாக ஜொலித்திருக்கிறார். அவருடைய மேக்-அப் வெகு அருமை. இன்னும் என் கண்ணிலேயே நிற்கிறது ஜோதிகாவின் அந்த க்ளைமேக்ஸ் நடிப்பு. சபாஷ் நல்ல திறமையிருக்கு ஜோதிகா.
நயந்தாரா? ரஜினிக்கு நாயகி மட்டுமே. வேஸ்ட் செய்திருக்கிறார்கள். நாசருக்கும் கோமாளி வேடம். வேஸ்ட் செய்யப்பட்டிருக்கிறார்.
படம் முழுக்க தோய்வு.எப்படியோ க்ளைமேக்ஸை மட்டும் சரி கட்டியிருக்கிறார் பி.வாசு.
ரஜினி ரசிகர்களுக்கு இதுவும் சரியான படம் அல்ல என நினைக்கிறேன். அவர்கள் தான் சொல்ல வேண்டும் அவர்களின் பார்வையை. ரஜினி நடித்திருக்கிறார். அவ்வளவே....
அப்ப படம் புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்...... டமார் (க்ளைமாக்ஸ்)
குறிப்பு: படம் பார்த்த சூட்டில் எழுதியது, தூக்கம் கண்ணை சுழட்டுவதால் மூளையின் மேல்டாப்பில் வந்ததை போட்டுத் தாக்கியிருக்கிறேன். மற்ற விசயங்கள் மற்றொரு பதிவில் மெதுவாக. மும்பை எக்ஸ்பிரஸை கொஞ்சம் ஆறப்போட்டு சனிக்கிழமை பார்க்கலாமென இருக்கிறேன்.

இந்த பதிவின் வாக்கு எண்ணிக்கை:
. பக்கத்திலுள்ள ஸ்டாரை மவுசால் போட்டுத் தாக்கினால் எனக்கு மவுசு ஏறும். நன்றி:-)
உங்கள் கருத்துக்களை இட
திருப்பி தாக்கியவர்கள்:
நான் இதைப் படிக்க மாட்டேன். நாளைக் காலை முதல் ஆட்டத்துக்கு பட்டாளத்துடன் புறப்படுகிறேன். பார்த்து விட்டு வந்து நீங்க என்ன எழுதியிருக்கீங்கன்னு படிக்கிறேன்.
þó¾ ¸¨¾ ±í§¸§Â¡ §¸ð¼ Á¡¾¢Ã¢ þÕ째?
Á¨Ä¡Çò¾¢ø "Á½¢îº¢òÃò¾¡Ø" À¡÷ò¾Å÷¸ÙìÌ ÒâÔõ.
¸¨¾ «§¾¾¡ý.
«¾¢ø §Á¡†ýÄ¡ø ¼¡ì¼÷ ¬¸ ÅÕÅ¡÷. §„¡ÀÉ¡ split personality ¬¸ «üÒ¾Á¡¸ ¿Êò¾¢ÕôÀ¡÷.
Å¢¼¡Ð ¸ÕôÒ «¾üÌôÀ¢È̾¡ý Åó¾Ð.

intha kathai engeyoo ketta (partha) mathiri ullathu.
Malayalathil "manichithrathazhu" parthavargalukku puriyum.
kathai atheethan. Rajinikku bathil Mohanlal. Shobhana "split personality" aga arputhamaga nadithiruppar.

விமர்சனம் ரொம்ம்பவே சுடச் சுட இருந்தது, நன்றி விஜய்! முதல் நாளிரவே போய் படம் பார்த்து, பார்த்து முடித்த கையோடு ஒரு பெரிய விமர்சனம் எழுதி... அடடா என்ன ஒரு கடமை உணர்வு. புல்லரிக்குது தலைவா, தொடரட்டும் உங்கள் சேவை!
விஜய்,
விமர்சனத்தைப் பார்த்தால் படம் பார்க்கலாம்போல்தான் தெரிகிறது. வரும் ஞாயிறு நாங்கள் இங்கு பார்க்கத் திட்டமிட்டுள்ளோம். விமர்சனத்துக்கு நன்றிகள் பல, தொடரட்டும் உங்கள் சேவை :-).

அது சரி எப்பிடி உங்களால ரஜனிக்காந்த், விஜேக்காந்த், பிரவு போன்றவற்றை முகங்களை குளோசப்பில தியேட்டரில பாக்க முடியுது. கதாநாயகிகளை மட்டும் பார்த்துவிட்டு பின்னர் கண்ணை மூடிக்கொள்வீர்களா(சத்யராஜ் சகிக்கலாம் அவற்றை கொள்ளைகளுக்காக)
//*Á¨Ä¡Çò¾¢ø "Á½¢îº¢òÃò¾¡Ø" À¡÷ò¾Å÷¸ÙìÌ ÒâÔõ.*//
அதே, அதே இயக்குனர் பாசில். மலையாளத்தில் நாகவல்லி, தமிழில் சந்திர முகி. மனோத்துவ நிபுணர் மோகன்லால் அமேரிக்கா பிராட்லியின் சிஷ்யன்.

//*மலையாளத்தில் ''மணிச்சித்திரத்தாழு'' பார்த்தவர்களுக்கு புரியும்*//
அதே, அதே இயக்குனர் பாசில். மலையாளத்தில் நாகவல்லி, தமிழில் சந்திர முகி. மனோத்துவ நிபுணர் மோகன்லால் அமேரிக்கா பிராட்லியின் சிஷ்யன்.
அதே, அதே இயக்குனர் பாசில். மலையாளத்தில் நாகவல்லி, தமிழில் சந்திர முகி. மனோத்துவ நிபுணர் மோகன்லால் அமேரிக்கா பிராட்லியின் சிஷ்யன்.
அன்புள்ள விஜய்,
இது 'மணிச்சித்திரத்தாழ்'கதையேதான்!!!!
அதுலே 'ஷோபனாவொட ஒரு டான்ஸ் தமிழ்ப் பாட்டில் வரும். 'ஒரு முறை வந்து பார்த்தாயா?... அருமையான பாடல் & நடனம்!!!
என்றும் அன்புடன்,
துளசி.

இதுக்கு ரஜனிகாந்த், லதா, விஜயகுமார், பத்மப்ரியாவின் பழைய ஆயிரம் ஜென்மங்கள் பேய்ப்படத்தையே பார்த்துவிடலாமே ;-)
ஆனானப்பட்ட பாபா படத்தையே நான் தியேட்டர்ல பார்த்தவன். இதையும் பார்க்கப்போறேன்.
ரிலீசுக்கு முன்னால என்னல்லாம் சொன்னாரு?
P. வாசு மலையாளப் படமே பார்க்கமாட்டாரு போல ;)

I saw Manichitrathazh in Vasantham central couple of months back. And after reading your review now, I can see that the storyline of CM (chandramukhi) is simply the same.
If I remember right, P Vasu was denying in all his interviews that the story of Chandramukhi. He even went to the extent that they paid huge money to a greedy Fazil, though the story was nowhere close to Manichitrathazh. P Vasu, if at all you are listening, Tamils arent very naive as you guys have thought us to be.
Prince

பின்னூட்டம் விட்ட எல்லா தலைகளுக்கும் வணக்கம்.
முதலில் ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். சந்திரமுகி 'மணிசித்ரதாழ்'ழில் இருந்து ரீமேக் செய்யப்பட்ட படமே என்று படம் எடுப்பதற்கு முன்பாகவே கேள்விப்பட்டேன். படம் எடுத்து முடிச்ச பி.வாசு, 'மணிசித்ரதாழ்' எடுத்த பாசிலுக்கு ராயல்டி எதுவும் கொடுக்க வேண்டாம் என்றாராம். என்ன பெரிய மனசு. மணிசித்ரதாழ் பார்க்கததால் விமர்சனத்தில் நான் குறிப்பிடவில்லை. அதற்கு பதில் 'விடாது கருப்பு' என்றேன்.
படம் பாபாவைப் போல் கேவலமாக இல்லையென்றாலும் பார்த்து முடித்தவுடன் நெஞ்சில் நிற்கிறது. ரஜினி ரசிகர் அல்லாதோற்க்கு இது ஒகே டைப்படம். ரசிக கண்மணிகளுக்கு தான் ஏமாற்றமாக இருக்குமென நினைக்கிறேன். முதல் பாதி தவிர வேறு எங்கும் ரஜினிக்கு ஸ்டைலோ, பஞ்சு டயலாக்கோ பேச வாய்ப்பே இல்லாமல் இருக்கிறது. அது போல் கொஞ்ச நேரம் ரஜினியின் ரோலுக்கும் முக்கியதுவம் இல்லாமல் போய் கொண்டிருக்கிறது.
அந்த தெலுங்கு பாடலில் வரும் 'லக்க லக்க லக்க' என்ற ஓசை கலக்கியிருக்கிறது. படத்தில் பார்த்து தெரிந்துக் கொள்ளுங்கள்.
அபூ முஹை சொன்னது போல ரஜினியும் இதில் பிராட்லிக்கு அடுத்த கலக்கல் மனோதத்துவ நிபுணர் என்கிறார்கள்.

ºó¾¢ÃÓ¸¢ ¸ñÊôÀ¡¸ ´Õ âɢ À¼õ «øÄ. ¬É¡ø ´Õ ¿øÄ À¼õ. Å¢ƒö ¦º¡ýÉÐ §À¡Ä ¿¢¨È׸û ¿¢¨È þÕ츢ýÈÉ. À¼ò¾¢ø §ƒ¡¾¢¸¡ ¦¸¡ïºõ âɢ¨Â ´Å÷§¼ì ¦ºö¾¢Õ츢ȡ÷. Àïî ¼ÂÄ¡ì ÁüÚõ Ó¸ŠÐ¾¢ þ¾¢ø Á¢Š…¢í «Ð측¸ âɢ ú¢¸÷¸û §ÅñÎÁ¡É¡ø ¦¸¡ïºõ ²Á¡üÈõ «¨¼ÂÄ¡õ ¬É¡ø «Å÷¸¨Ç âɢ ²Á¡üÈÅ¢ø¨Ä. À¼õ ´Õ ¿øÄ ¾ÃÁ¡É À¼õ. âɢ þǨÁ¡¸ò ¦¾Ã¢¸¢È¡÷. À¡¼ø¸û À¼Á¡ì¸ôÀð¼ Å¢¾õ «üÒ¾õ. ¸¢¨ÇÁ¡ìŠ ÝôÀ§Ã¡ ÝôÀ÷. Å¢„Âõ þо¡ý âɢ¢ý ºÅ¡¨ÄÔõ Š¼ñ¨¼Ôõ ±¾¢÷À¡÷òÐ §À¡É£÷¸û ±ýÈ¡ø À¼õ À¢Ê측Ð. ´Õ ¿øÄ À¼ò¨¾ ±¾¢÷À¡÷ò¾£÷¸û ±ýÈ¡ø ºó¾¢ÃÓ¸¢ ´Õ ºÀ¡‰ §À¡¼Ä¡õ. ¿¢îºÂõ À¼õ 100 ¿¡ð¸û µÎ¦ÁÉÀÐ ±ý ¸ÕòÐ. ¸ñÊôÀ¡¸ À¡À¡¨Å Å¢¼ þÐ ¬Â¢Ãõ Á¼íÌ §¾ÅÄ¡õ ¬É¡ «§¾ ºÁÂõ À¡ð„¡ «Ç×째¡ À¨¼ÂôÀ¡ «Ç×째¡ þø¨Ä. «Ð ºÃ¢ âɢÔõ ¾¢Õó¾ÛÁ¢øÄ. þô§À¡ò¾¡ý ¦ƒÂ¡ ÊÅ¢ Àì¸õ §À¡Â¢Õì¸¡Õ Ó¾ø À¼§Á flop «Â¢ð¼¡ ±ôÀÊ?
மேலே அனானிமஸின் டிஸ்க்கி பின்னூட்டத்தின் யூனிகோடு வெர்சன்
--------------------------------
சந்திரமுகி கண்டிப்பாக ஒரு ரஜினி படம் அல்ல. ஆனால் ஒரு நல்ல படம். விஜய் சொன்னது போல நிறைவுகள் நிறைய இருக்கின்றன. படத்தில் ஜோதிகா கொஞ்சம் ரஜினியை ஒவர்டேக் செய்திருக்கிறார். பஞ்ச் டயலாக் மற்றும் முகஸ்துதி இதில் மிஸ்ஸிங் அதுக்காக ரஜினி ரசிகர்கள் வேண்டுமானால் கொஞ்சம் ஏமாற்றம் அடையலாம் ஆனால் அவர்களை ரஜினி ஏமாற்றவில்லை. படம் ஒரு நல்ல தரமான படம். ரஜினி இளமையாகத் தெரிகிறார். பாடல்கள் படமாக்கப்பட்ட விதம் அற்புதம். கிளைமாக்ஸ் சூப்பரோ சூப்பர். விஷயம் இதுதான் ரஜினியின் சவாலையும் ஸ்டண்டையும் எதிர்பார்த்து போனீர்கள் என்றால் படம் பிடிக்காது. ஒரு நல்ல படத்தை எதிர்பார்த்தீர்கள் என்றால் சந்திரமுகி ஒரு சபாஷ் போடலாம். நிச்சயம் படம் 100 நாட்கள் ஓடுமெனபது என் கருத்து. கண்டிப்பாக பாபாவை விட இது ஆயிரம் மடங்கு தேவலாம் ஆனா அதே சமயம் பாட்ஷா அளவுக்கோ படையப்பா அளவுக்கோ இல்லை. அது சரி ரஜினியும் திருந்தனுமில்ல. இப்போத்தான் ஜெயா டிவி பக்கம் போயிருக்காரு முதல் படமே flop அயிட்டா எப்படி?
-----------------------------------

வேலுக்கும் சந்திரமுகிக்கும் ஒரு சம்பந்தமுமில்லை. சந்திரமுகி அறை வாசலில் அந்த படம் இருக்குது அவ்வளவு தான்.
ஒப்பனீங் சாங் ரஜினி ரசிகர்களுக்கு மட்டுமே.
அனானிமஸ் பாபா படத்தை விட 100 மடங்கு நல்ல இருப்பது என்னவோ உண்மை. சவால் விடாத விசுக் விசுக்கென்று கைய ஆட்டாத அமைதியான ரஜினி. அவைகள் என்னமோ ரஜினியின் ஆரம்ப கால கலக்கல் படங்களை நினைவூட்டியது.

என்ன நடக்குது இங்க.. ? ஹிட் ரேட் உங்க வலைப்பூவுக்கு எகிறிடுச்சு போலிருக்கே. 1200 பேருக்கு மேல் நேத்து மட்டும் பார்த்திருக்காங்க. :-)

முத்து,
இதெல்லாம் கான்பிடென்ஷியல் மேட்டராச்சே. உங்க வலைப்பூவை பார்த்து netstad போட்டது தப்பா போச்சே. :-) எடுத்துர்றேன் :-))))))
ஆமாம் நேத்து யார் யாரோ பார்த்திருக்காங்க... ஹிட்டு எகிறிடுச்சி... ரஜினி படம் ஹிட் ஆகுதோ இல்லையோ நேத்து இந்த வலைப்பதிவு சூப்பர்ஹிட்டு... :-))))

What happenned Vijay ?? You had removed the post on magnetism.... hahahahahahaha.. You need not have removed it. After all we all make mistakes.....
Oru hittum Oru floppum ;)
Oru hittum Oru floppum ;)
அல்வா சிட்டி விஜய்,
நீங்கள் ரசிகர்களுக்கு பிடிக்குமா? என்று கேட்பதிலிருந்தே நீங்கள் ரஜினி ரசிகர் இல்லை என்பது தெரிகிறது.வாசுவின் திரைக்கதியில் குழப்பமில்லை. உங்களுக்குத்தான் பட விமர்சனத்தை எப்படி எழுதுவது என்று குழம்பிப் போயிருக்கிறீர்கள்.
ரஜினி ஜோதிகாவுடன் போட்டி போட முடியாமல் திணறுகிறார் என்று கூறியிருக்கிறீர்கள்.சினிமாவின் "அண்டர் பிளே" இலக்கணங்கள் தெரியாத உங்களைப் போன்ற விமர்சகர்கள் இருக்கும் வரை தமிழ் திரையுலகம் உருப்படாது.
உங்களைப் போன்ற ஆட்களை தொடர்ந்து ஏமாற்றும் வரை ரஜினி படம் பிரமாதமாக ஓடும்.
ஆல் த பெஸ்ட் நெக்ஸ்ட் டைம்.

காந்த பதிவு காந்த படுக்கை விவகார ரேஞ்சுக்கு போய்விட்டதால் தூக்கி விட்டேன்.
என்னப்பா ராஜ்குமாரு பதிவு பதிவா போய் சந்திரமுகி பத்தி சொன்னவங்களையெல்லாம் போட்டுத்தாக்கிட்டு வர்றீங்க போல. உங்கள் உணர்ச்சி வேகம் புரியுது. இப்படி திட்டி திட்டி தான் மனசை ஆத்திகிடனும் :-). அனேகமா பாபாவுக்கும் இப்படி தான் அநேகமாக குரல் விட்டுருப்பீங்க. உண்மை என்றுமே கசப்பானது தான். அப்புறம் ஒரு மேட்டர் நான் ஒன்றும் பத்திரிக்கைளுக்கான செர்டிபைட் (certified) விமர்சகன் அல்ல.அதை முதல்ல புரிஞ்சிக்குங்க. என் பதிவு. என் பார்வை. என் கருத்து. உங்களுக்கு பிடிச்ச எனக்கு படம் பிடிக்குனும்னு எதிர்பார்க்கிறது என்னப்பா நியாயம்.
அன்டர்ப்ளேயா இருக்கட்டும் ஓவர் ஆக்டிங்க இருக்கட்டும் நான் என் கருத்து சொன்னதில் ஏனைய்யா பொத்துக் கொண்டு வருகிறது.நான் சொல்லி திரைஉலகம் உருப்படாமல் போகப்போகிறதா??? ஆகா நல்ல அப்செர்வேஷன் உங்களுக்கு. நான் ஒன்றும் திரைஉலகை தூக்கிட்டு நிற்கும் தூண் அல்ல. வெறும் திரை ரசிகனே. அப்புறம்
//உங்களைப் போன்ற ஆட்களை தொடர்ந்து ஏமாற்றும் வரை ரஜினி படம் பிரமாதமாக ஓடும்.//
இது அப்படியல்ல இப்படி
"உங்களைப் போன்ற ஆட்களை ரஜினி தொடர்ந்து ஏமாற்றும் வரை ரஜினி படம் பிரமாதமாக தியோட்டரை விட்டு ஓடும்"
அப்புறம் திரைக்கதையில் குழப்பம் இல்லையா? :-) சுட்டாலும் உருப்படியா சுடனும்.
அய்யா! Fan-க்கும் Fanatic-க்கும் என்ன வித்தியாசம் தெரியுமா?

இன்னா ஜோ தலீவா,
ஒரே பின்னூட்டம் தானா எல்லா பதிவுலேயும்...ஹி ஹி ஹி...இங்கே போய் உங்க பின்னூட்டத்தை பாருங்க தலீவா
http://raasaa.blogspot.com/2005/04/x.html

தவறுதலா அங்கே போட்ட பின்னூட்டத்தையே போட்டுட்டு அழிக்க முடியாம திண்டாடிட்டிருக்கேன்..சாரி தலைவா! (notepad-ல type பண்ணி copy பண்ணதால வந்த வினை!)
இங்க நான் சொல்ல வந்தது இது தான்....
விஜய்,
நீங்க உடனே மும்பை எக்ஸ்பிரஸ் பார்த்துட்டு வந்து தாறுமாறா திட்டி ஒரு விமர்சனம் எழுதுங்க..அப்ப தான் ராஜ்குமார் உங்கள ரஜினி ரசிகன்னு ஒத்துக்குவார்.

ஜோ,
என்னை ரஜினி அல்லது கமல் ரசிகன் என்று சொல்லிக் கொ(ல்)ள்வதை விட நல்ல சினிமா ரசிகன் என்று சொல்லிக் கொள்ள தான் விரும்புவேன்.சனிகிழமை தான் போறேன் மும்பை எக்ஸ்பிரஸ்க்கு.இடைப்பட்ட நாட்களில் வேலை வந்து விட்டதால் கொஞ்சம் டூ லேட் . குறை நிறைகள் சுட்டி காட்டுவதால் நான் ஒருவருக்கு மட்டுமே ரசிகன் ஆகிவிட முடியாதே.10 படங்கள் அந்த நேரத்தில் வந்திருந்தாலும், வித்தியசமாக ஏதாவது செய்திருக்கிறார்களா என்று ஆனானப்பட்ட "உப்பு" படத்துக்கே $14 போட்டு விசிடி(ஒரிஜினல் தானுங்கோ) வாங்கி பார்த்தவன்.
Fanatic-களுக்கு புரிய வைக்கிறது கஷ்டம் தலீவா.

நல்லா சொன்னீங்க விஜய்..
அது சரி..உங்க ஊட்டு பக்கம் வீடியோ லைப்ரரி எதுவும் இல்லியா..நம்ம ஊட்டு பக்கம் ஒரு சீனா காரம்மா தமிழ் வீடியோ லைப்ரரி வச்சிருக்கு .புதுசு வந்தவுடனே போன் பண்ணி சொல்லும் .$3 -ங்கரதால நிறைய படம் பாக்குறது .(உப்பு-ம் அதுல ஒண்ணு) .மத்தபடி கமல்,ரஜினி,சேரன் படங்கள் தான் theatre-la பாக்குறது .நான் கமல் ரசிகன் தாங்கோ !ஆனா ரஜினி-யயும் பிடிக்கும். இந்த வார கடைசில ரெண்டு படத்தையும் பாக்குறாப்புல plan.

ஜோ, பக்கத்துல எங்கே வாடகைக்கு படங்கள் கிடைக்கும் எனத் தெரியாது. என் ஏரியாவில் நான் பார்த்ததில்லை. அதுவுமில்லாமல் நல்ல புத்தகங்களை படித்து வீட்டு நூலக கலெக்ஷனில் வைத்து அழகு பார்ப்பது போல நல்ல படங்களையும் பார்த்து என்னுடைய வீட்டு நூலகத்தில் சேமித்து வைத்துக் கொள்வது வழக்கம். சில நேரங்களில் நல்லது என நினைத்து வாங்கினால் குப்பையான படங்களும் மாட்டிக்கொள்ளும். நானும் தியோட்டரில் பெரிய தலைங்க படங்களை தான் பார்க்கிறது.
தலிவா..
நம்ப கிட்டயும் கொஞ்சம் collection இருக்கு .ஆனா சொன்னா அடிக்க வருவீங்க .எல்லாம் பழைய சிவாஜி படம்..நான் ஒரு சிவாஜி பைத்தியம்..(அடப்பாவி ..இந்த காலத்துல இப்படி ஒரு லூசா-ன்னு திட்டாதீங்க!)

ஜோ, அப்படியே njvijay at halwacity.com -க்கு வாங்க தலீவா. ஆப்-லைன்ல விருப்பங்களை share பண்ணிகிடலாமே.,,,
திருவாளர் விஜய்,
தியெட்டரை விட்டு ரஜினி படம் ஓடும் என்று எழுதியிருப்பதிலிருந்தே எந்த எதிர்பார்ப்போடு நீங்கள் படம் பார்த்தீர்கள் என்பது தெரிகிறது.
படம் சரியில்லை என்றால் "நெஞ்சில் நிற்கிறது, ரசிகர்களுக்கு பிடிக்குமா? என்ற பாசாங்கெல்லாம் எதற்கு? உருப்படியாக திரைக்கதியை சுட்டு இருக்கிறார்களா என்பதற்கு "மணிச்சித்திரத்தாழ்" பார்த்திருக்கிறீர்களா நீங்கள்.
விமர்சிப்பது உங்கள் உரிமை. ஆனால் சில பின்னூட்டங்களில் நீங்கள் குறிப்பிட்டிருப்பதற்கும், மெயின் விமர்சனமாக எழுதியிருப்பதற்குமே முரண்பாடு இருக்கிறது.
நீங்கள் ரஜினி ரசிகராக இல்லாத பட்சத்தில் விமர்சகர் கோணத்தில் மட்டும் எழுதுங்கள். ரசிகர்கள் பற்றிய கவலைகள் தேவையில்லை.
எப்படியோ, ரஜினியை திட்டுவதற்காவது முதல் நாள் பார்த்ததற்கு நன்றி.
பி.கு: எல்லா இடத்திற்கும் சென்று பிம்குறிப்பு தரும் அளவுக்கு வேலை வெட்டி இல்லாதவன் அல்ல. உருப்படியானவர்கள் என்று நினைத்த பிளாகிற்கு மட்டும்தான் பின்னூட்டம்.என்னுடைய கருத்தை மாற்றிக்கொள்ள வேண்டுமா சொல்லுங்கள்.

this movie simply super but this was not took for rajini the movie was took for rajini anyway i like the movie.I saw three movie the best 1 is chandramuki and mumbai express and sachin
//என்னை ரஜினி அல்லது கமல் ரசிகன் என்று சொல்லிக் கொ(ல்)ள்வதை விட நல்ல சினிமா ரசிகன் என்று சொல்லிக் கொள்ள தான் விரும்புவேன்.//
இப்படி சொல்லி என்னை உங்க பரம ரசிகனாக்கிட்டிங்க, இனி தினமும் உங்க வலைப்பதிவை படிக்காமல் இருக்கவே முடியது. தாக்குதல் தொடரட்டும். இறுதியில் நன்மை உண்டாகட்டும்! வாழ்த்துக்கள்! (கொஞ்சம் ஒவர் ice வச்சதுக்கு மன்னிக்கவும்)

பாட்சா படம் வந்த போது வெகுஜன நாளிதழ் வன்முறையின் உட்சம் என்று எழுதியது. அதே நாளிதழ் சில தினங்களுக்கு பிறகு ஆக்சன் படம் எடுப்பவர்களுக்கு அஸ்திவாரம் என்று எழுதும் அளவுக்கு வெற்றி பெற்றது.
மனிச்சந்திர தாழ், ஆப்தமித்ரா வை வெருக்கதாவர்கள் சந்திரமுகி யை விமர்சிப்பது ரஜினியின் மீது உள்ள காழ்ப்புணர்ச்சியே.
தலைவர் வழியில் வெண்ணிலவை மின்மினிகள் தடுத்திடுமா என்பது போல் மக்கள் படத்திற்கு கொடுக்கும் ஆதரவை உங்கள் இனையதள விமர்சனத்தால் தடுக்க

தலைவர் வழியில் வெண்ணிலவை மின்மினிகள் தடுத்திடுமா என்பது போல் மக்கள் படத்திற்கு கொடுக்கும் ஆதரவை உங்கள் இனையதள விமர்சனத்தால் தடுக்க முடியாது

<< திரும்ப முன் பக்கத்துக்கு போ