-ல் போட்டுத் தாக்கியது
விழும் எரிநட்சத்திரத்தின் சுயதம்பட்டம்
பாடச் சொல்லுகிற உலகம்
மயிலைப் பிடிச்சி கால உடைச்சி
ஆடச் சொல்லுகிற உலகம்
அது அப்படி பாடுமைய்யா?
அது எப்படி ஆடுமைய்யா?"
மனேஜ்மெண்ட் தந்திரம் ஒன்று இருக்கிறது. அது என்ன தெரியுமா? வேலையிடத்துல எவனாச்சிம் வேலை வெட்டியில்லாம கதை அளந்துக்கிட்டு இருந்தாங்கன்ன அவனுக்கு எப்படி கூடுதல் பொறுப்பு கொடுப்பது என்பதை மேனேஜர் யோசிப்பார். சும்மா ஒரு கூடுதல் பொறுப்பை கையில கொடுத்தால் அவன் ஒழுங்க அந்த வேலையையும் செய்ய மாட்டான். அவனை கூப்பிட்டு "அய்யா! ராசா! உனக்கு ப்ரமோஷன் கொடுக்கிறேம்பா. நீ ப்ரோமோஷன் ஆகி விட்டதுனால நீ இந்த இந்த வேலை எல்லாம் செய்யனும்" என்று கூடுதல் பொறுப்பை தலையில் கட்டி விடுவார்கள்.அவனுக்கும் ப்ரோமோஷன் ஆகிவிட்டோமே என்ற மயக்கத்தில் இல்லை ஒரு கிறக்கத்தில் கொடுத்த வேலையை செய்ய ஆரம்பிப்பான்.
நான் மேல சொன்னதுல இருந்தே உங்களுக்கு புரிஞ்சிருக்கும் நான் என்ன சொல்ல வாரேன்னு. பல நட்சத்திரங்கள் தமிழ்மணம் வானில் மிகுந்த ஒளியுடன் மினுக்கிக் கொண்டிருந்தாலும் வானிலிருந்து விழுந்துக் கொண்டிருக்கும் இந்த எரிகல்லை இந்த வாரத்துக்கு மட்டும் நட்சத்திரமாக மினுக்கி விட்டு அப்புறம் எரிந்து சாம்பலாய் விழு என்றார்கள். பதவி ஆசை யாரை விட்டது? அதனால் ஏற்றுக் கொண்டுவிட்டேன்.
அல்வாசிட்டி.விஜய் ஆகிய நான் என்னைப் பற்றி ஒரு சில வார்த்தைகளை கூறிக்கொள்கிறேன்(தமிழ்மணத்தை பைபாஸில் படிப்பவர்களுக்காக).
என் இயற்பெயர் விஜயகுமார். சொந்த ஊர் திருநெல்வேலி. 30 வயது நிரம்பிய கட்டுத்தொந்தி காளை. திருமணமாகி ஒரு குழந்தையுடன் வாழும் பேமிலி மேன். நிறைய பேர் பண்றாப்புல எழவு நானும் அதே மென்பொருள் பொறியாளன் தான்.
திருமணத்திற்கு முன் அவ்வளவாக கடவுள் நம்பிக்கையில்லாதவனாக இருந்தேன், திருமணம் ஆன பின் பல நேரங்களில் கடவுளை துணைக்கு அழைக்க முழுநேர ஆத்திகனாகி விட்டேன். "கர்த்தருக்கு பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்" என்று பைபிள் கூறுகிறது.என்னைப் பொருத்த வரையில் "மனைவிக்கு பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்" என்பேன். அப்படியே எனக்கு ஞானம் ஆரம்பம் ஆனது. விஞ்ஞானம், மெய்ஞானம், அஞ்ஞானம் என பல ஞானங்கள் இருப்பதால், அவற்றைக் கண்டு குழம்பி போன குட்டை நான்.ஆக மொத்தம் என் ஊக்க சக்தியாக இருப்பது என் மனைவியே.
எனக்கு தமிழ் இலக்கியம் தெரியாது. அதனால் நான் தமிழில் எழுதுகிறேன். இணையத்தில் இலக்கியம் இல்லை. அதனால் நான் இணையத்தில் எழுதுகிறேன். எனக்கு சமூகம் தெரியாது. அதனால் நான் இந்த சமூகத்தில் எழுதுகிறேன்.எனக்கு உலகம் தெரியாது. அதனால் நான் உலகத்தைப் பற்றி எழுதுகிறேன். முக்கியமாக என் மனைவி எழுதவில்லை. அதனால் நான் எழுதுகிறேன்.
நான் அண்மைக்காலமாக சினிமாவைப் பற்றி நிறைய எழுதிக்கொண்டு வருகிறேன். அதுபோல் நான் அறிந்த நிகழ்ச்சிகளை/விவரங்களை திருநெல்வேலி அல்வா போல சுவையாக முடிந்த வரையில் எழுதி வந்திருக்கிறேன். நட்சத்திரம் என்பதற்காக நான் என் சுயத்தை இழக்கக் கூடாது என்று விரும்புகிறேன்.ஆனால் எதுவோ எழுதும் என் கையை பின்னுக்கு இழுக்கிறது. வழக்கமாக எழுதும் அந்த நடையில் சாயம் தெளித்து வைக்கிறது. அதை கொல்ல கொல்ல விஸ்வரூபம் எடுக்கிறது.
எல்லோருமே நிகழ்காலத்தையும், எதிர்காலத்தையும் சிந்தித்து எழுதும் போது நான் மட்டும் இந்த வாரம் சில இறந்தகாலத்தையும் எழுத நினைக்கிறேன். பயப்படாதீர்கள். அது என்னுடைய இறந்த காலம் அல்ல. எல்லோரும் ரஜினிகாந்த் சந்திரமுகியில் எந்த பிராண்ட் லிப்ஸ்டிக் மேக்கப்பில் போட்டு வந்தார் என்று விவாதித்து கொண்டிருக்கும் வேளையில் உலக சினிமாவை திசை மாற்றிய இரண்டொரு சினிமாக்களைப் பற்றி பேசுகிறேன். இந்த வாரம் பதில் சொல்லட்டும்.
'நல்ல பண்ணனும்' என்று சொதப்புகிற கோஷ்டிகளில் நானும் ஒருவன். அது என் மேல தப்பில்லை. பழக்கதோஷம். அப்படியே இந்த வாரம் சொதப்பினால் என்னை மன்னிக்கும் படி முன்னமே தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
உங்கள் கருத்துக்களை இட
திருப்பி தாக்கியவர்கள்:
வாசிக்கும் எங்களுக்கு ஏதாவது போட்டி வைத்து திருநெல்வேலி அல்வா பரிசு கொடுக்கும் திட்டம் ஏதேனுமுண்டா என்பதையு கூறிவிடுங்கள் :-).
அதான் பக்திப்பாட்டு (நட்சத்திர வாரத்தின் முதல் பதிவு) முடிச்சாச்சுல்லே, உங்க வழக்கமான ஸ்டைல்லேயே கலக்குங்க:)
இப்படிக்கு
10 நாட்களுக்கு முன்னாலேயே ஊகித்த சுரேஷ்
/எல்லோரும் ரஜினிகாந்த் சந்திரமுகியில் எந்த பிராண்ட் லிப்ஸ்டிக் மேக்கப்பில் போட்டு வந்தார் என்று விவாதித்து கொண்டிருக்கும் வேளையில் உலக சினிமாவை திசை மாற்றிய இரண்டொரு சினிமாக்களைப் பற்றி பேசுகிறேன்/
;-)
( கொஞ்சம் வருஷம் முன்னாலே, அல்வாசிட்டி என்று ஒரு இணையத்தளம் பார்த்திருக்கிறேன். நீங்க தானா அது? )
இந்தவார எரி நட்சத்திரத்துக்கு வாழ்த்துக்கள். நட்சத்திரமா இருக்கிறதவிட எரி நட்சத்திரம் வித்தியாசம்தான்.
வாழ்த்துகள்.
இயல்பா இருந்தாலே போதும். வரவழைத்துக்கொண்ட எந்த பாவனைகளும் யாருக்கும் பிரயோஜனமில்லை..சரியா..??
கலக்குங்க வழக்கம்போல...:-)
ஐகராஸ்,
//கொஞ்சம் வருஷம் முன்னாலே, அல்வாசிட்டி என்று ஒரு இணையத்தளம் பார்த்திருக்கிறேன். நீங்க தானா அது? //
அடியேன் தான். ஊருவிட்டு ஊரு போய் நேரம் கிடைக்காமல் அந்த வலைத்தளத்தை பால் ஊத்தி மூடியாகி விட்டது. இப்போது அது புதுசாய் ப்ளாக்காகி முளைத்திருக்கிறது.
அப்புறம் நீங்க சொன்ன இனிப்பு வரிசையில பருத்திபாலை விட்டுட்டீங்களே... :-)
நன்றி நரேன், டிசே,அன்பு,சுரேஷ்,பெயரிலி,அனானிமஸ்கள்,
செல்வநாயகி,ரோசா,ஐகராஸ்
,வசந்தன்,மூக்கன்
,சம்மி, தங்கமணி மற்றும் முன்பதிவில் பின்னூட்டமிட்ட துளசியக்கா.
அதோட எங்கூரு ஆட்டுக்கால் சூப், கருப்பட்டி மிட்டாய், காராசேவு... இன்னும் இன்னும்....
வாழ்த்துக்கள்.
என்ன, புரிஞ்சுதாலே?
-ஆத்மன் (எங்கும் நிறைந்தவன்)
,பாலாஜி-பாரி,ஈழநாதன்
, மாண்ட்ரீஸர், கருப்பி,இராதகிருஷ்ணன்,
ஆத்மன், இளவஞ்சி.
கருப்பி,
//அல்வாசிட்டி அரட்டையடிக்கிறதை விட்டிட்டு ஒழுங்கா வேலையப் பாருங்க. யாராவது போட்டுக் குடுத்து வேலையப் பிடுங்கீடுவாங்க.
வாழ்த்துக்கள். //
யாராவது வேலையைப் பிடுங்கீக்க வாழ்த்துக்களா ? :-) :-) :-)
ஆத்மன்,
//கலக்கு. நல்லா கலக்கு. அண்டம் அயரும் வரை கலக்கு. கலக்கிகிட்டே.... இரு.
என்ன, புரிஞ்சுதாலே?//
புரிஞ்சிடுச்சி வே. கலக்கு கலக்குன்னு உடம்பு ஓயும் வரை வயிற்றை தான் கலக்குது
விஜய்,
பின்நவீனத்துவம் எழுத ஆரம்பித்துவிட்டீர்க்ளா ? கலக்குங்கள்.
உங்கள் கருத்துக்களை இட
<< திரும்ப முன் பக்கத்துக்கு போ