<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d9439067\x26blogName\x3d%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81!!!!!\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLACK\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://halwacity.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://halwacity.blogspot.com/\x26vt\x3d-1566162084738285005', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe", messageHandlersFilter: gapi.iframes.CROSS_ORIGIN_IFRAMES_FILTER, messageHandlers: { 'blogger-ping': function() {} } }); } }); </script> <!-- Remove below comment line to show the content. Added for meta redirection --> <!--

போட்டுத் தாக்கு!!!!!

எள்ளோடு எலி புழுக்கையும் எண்ணைக்காக காயுதாம்

-ல் போட்டுத் தாக்கியது

உலக சினிமா - ஒரு ஓரப்பார்வை

Difficulty in reading this post due to font issues? Click here for a PDF copy. Works best if you right-click the link and select 'Save target as...'
இந்த பதிவை போட்டுத் தாக்கியவர் : Vijayakumar
முதலில் சொந்தக் கதை:

என்றைக்கு ப்ளாக்கில் பதிய ஆரம்பித்தேனோ அன்றிலிருந்து எனக்கு உலக சினிமாவை பார்க்கும் வாய்ப்பும் அதிகரித்தது. இன்னும் ஆரம்ப கட்டத்திலேயே நான் இருந்தாலும் உலக சினிமாவை நான் பார்ப்பது எதை நோக்கிய தேடல் அல்லது எதிர்பார்ப்பு என்பது எனக்கே தெரியவில்லை. குவார்ட்டரும், கட்டிங்கும் ஊத்தி அடித்தால் ஏற்படும் அதே போதையை மாறுபட்ட சினிமாவை பார்ப்பதிலும், அலசுவதிலும் ஏற்படுகிறது.

பதிவுகளிலே ஆங்காங்கே உலக சினிமாக்களை பற்றி வந்துக்கொண்டிருந்த போதும் ஆரம்பத்தில் உலக சினிமாவைப் பற்றிய முழு அறிமுகத்துக்கு எந்த நூலும் படிக்க கிடைக்கவில்லை. முதலில் எங்கேயாவது நூலை நுனியை பிடித்து ஏறலாம் என நன்கு அறிமுகமான குரோசோவாவில் ஆரம்பித்தேன். என்னுடைய உலக சினிமா பரப்பளவை ஜப்பானை விட்டு விரிவாக்கி ஈரானிய சினிமாவில் பயணத்தை தொடர்ந்து, அவ்வப்போது ஹாலிவுட்டில் இளைப்பாறி, பிரெஞ்சு சினிமாவை கண் குளிர பார்த்துக் கொண்டே, ருஷ்ய சினிமாவை நோக்கி பயணத்தை தொடர்கிறேன்.

குழந்தை பிறந்திருந்த போது மதுரைக்கு சென்றிருந்தேன். அந்த சமயத்தில் எஸ்.ராமகிருஷ்ணன் தொகுத்த 'உலக சினிமா' என் கவனத்தில் இருந்து கொண்டே இருந்தது. மதுரை இலக்கிய பண்ணையில் எஸ்.ராவின் உலக சினிமாவை பார்த்த போது அதன் அட்டைப்படத்தை கண்ணால் தான் அனுபவிக்க முடிந்ததே தவிர 500 ரூபாயான புத்தக விலையைப் பார்த்ததும் மூர்ச்சையாகி விட்டேன். 500 ரூபாய் கொடுத்து அந்த புத்தகத்தை வாங்குவதில் என் மனைவியை தவிர வேறு எந்த பிரச்சனையுமில்லை.ஆனால் புத்தகத்தில் உள்ள விசயங்கள் அவ்வளவாக வெளியே அலசப்படாத போது புத்தகத்தை வாங்கினால் பயனுள்ளதாக இருக்குமா? என்ற கேள்வி எனக்கு திகிலை மட்டுமே ஊட்டியது. ஏனெனில் ஒரே ஒரு புத்தகத்தை தான் மேல் ஷெல்பில் அடுக்கி வைத்திருந்தார்கள். அதை தொட்டு படித்துப் பார்க்கக் கூட பயம். மேலும் நான் உலக சினிமாவை 'அ','ஆ' என்று சொல்லிக் கொண்டிருந்தவன். ஆகையால் படித்திருந்தாலும் ஒன்றும் புரிந்திருக்காது என்பது வேறு விசயம்.

அண்மையில் சிங்கப்பூர் நூலகத்தில் உலகசினிமா புத்தகத்தை பார்த்ததும் என் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. ஏனெனில் அச்சமயம் உலக சினிமாவில் ப்ரீ-கேஜி வரை தேறியிருந்தேன். முதல் நாள் என்னுடைய நூலக அட்டையில் கடன் வாங்க இடமில்லை. தமிழ் சினிமா புத்தகம் எடுக்க யாரும் வரமாட்டார்கள் என்பதை அங்கு அழகாக அடுக்கி வைத்திருக்கும் புத்தகமே சாட்சியம் சொல்லும். தைரியமாக அடுத்த நாள் சென்று அந்த புத்தகத்தை எடுத்தேன்.

இந்த நட்சத்திர வாரத்தில் என்னை சினிமா பற்றி மட்டுமே பேச வைக்கும் அளவை விட மிக கனமான அறிமுக புத்தகம் எஸ்.ராவின் உலக சினிமா. எனக்கு உலக சினிமாவைப் பற்றி விரிவான பார்வையை கொடுத்தது அந்த புத்தகம் தான் என்றால் மிகையாகாது.

இனி 'உலகசினிமா' புத்தகத்தை பற்றி:

நல்ல கனமான அட்டையில் 750 பக்கத்தை உள்ளடக்கிய மிகவும் அடக்கமான புத்தகம். புக்மார்க் செய்து கொள்ள நல்ல நீளமான சிகப்பு கயிறு கொடுத்திருக்கிறார்கள். அட்டையை கவர் செய்கிற மாதிரியான கவரின் சைடில் ராமகிருஷ்ணனின் அருமை பெருமைகளை வழக்கமாக விளக்கியிருப்பார்கள். புத்தகத்தை வெளியிட்டவர்கள் 'கனவு பட்டறை'. முதல் பதிப்பு டிசம்பர் 2004.

Image hosted by PicsPlace.to

சவுத் இண்டியன் மீல்ஸ் சாப்பிட்டால் எப்படி முதலில் நெய் ஊற்றி பருப்பு சாதம்,பிறகு வரிசையாக சாம்பார்,மோர்குழம்பு இல்லையென்றால் காரக்குழம்பு,ரசம், தயிர், பாயசம் என்ற அளவிலேயே எல்லா தலைப்புகளும் சுவைப்பட தொகுக்கப்பட்டிருக்கின்றன. முதல் பகுதியில் ஆரம்பக் கால சினிமா வரலாற்றைப் பற்றி அலசுகிறது. சினிமா தோன்ற உதவிய மூததையர்களான வில்லியம் ஹென்ரி ஃபாக்ஸ் டால்பர், எடிசன், லூமியர் சகோதரகளையும், அவர்கள் கண்டுபிடித்த கருவிகளையும் அலசுகிறது. பிறகு ஆரம்பகால சினிமா கண்டுபிடிப்புகளையும், ஹாலிவுட் தோன்றிய வரலாறையும் பிரெஞ்சு சினிமா வரலாறையும் விரிவாக அலசுகிறது.இரானிய, இத்தாலிய, ரஷ்ய, ஜெர்மானிய, கொரிய திரைப்படங்களின் வரலாற்றையும் மிகச் சிறிதாக அலசிவிட்டு தொடர்கிறது.

இரண்டாம் பகுதி மிக முக்கியமானது.உலகில் சிறந்த நூறு படங்களை சின்ன சின்ன அறிமுகங்களுடன் ஏராளமான படங்களுடன், இயக்குநர், வருடம்,நாடு போன்ற விசயங்களுடன் சுருக்கமாக நச்சென்று இருக்கிறது. இந்த நூறு படங்களும் தேர்வுகுழுவின் விருப்பப்படி தான் தொகுக்கப்பட்டிருக்கிறது. அந்த நூறு படங்களில் சொல்லப்படாத சிறந்த 100-க்கும் மேற்பட்ட படங்கள் உள்ளேயும் வெளியேயும் இருக்கலாமென ஆசிரியர் ஒத்துக் கொள்கிறார். நான் IMDB-ல் சிறந்த 250 படங்களை தேடிய போது அதிகமான ஹாலிவுட் படங்களே சொல்லப்பட்டிருப்பதாக எனக்கு தோன்றுகிறது. ஏனெனில் அது பார்வையாளர்களின் வாக்கெடுப்புபடி அடுக்கப்படுகிறது. நான் அந்த நூறுபடங்களில் சில படங்களை பார்த்த போது அவரது சாய்ஸில் தப்பில்லை என்று தான் தோன்றுகிறது.

முன்றாம் பகுதி 'உரையாடல் தொடர்கிறது' என்ற தலைப்பில் சிறந்த உலக சினிமா இயக்குநர், நடிக நடிகைகள், தொழில் நுட்ப கலைஞர்களின் பேட்டிகளை தமிழ்படுத்தியிருக்கிறார்கள். இதற்கு எஸ்.ராவின் நண்பர்கள் முரளி மனோகர்,புவனேஷ், சா தேவதாஸ்,ஜி.குப்புசாமி, ஹரன் ஆகியோர்கள் உதவியிருக்கிறார்கள். இதுவும் மிக அருமையான பகுதி. குரோசவா, தொசிரே முபுனே, ரித்விக் கடாக், சமீரா மெக்மல்பப், மர்லின் மன்றோ, மனோஜ் ஷியாமளன்,அல்பாசினோ என பல கலைஞர்களின் பேட்டிகள் 36 எண்ணம் தேரும்.

நான்காம் பகுதி 'சினிமா சில பார்வைகள்' என்ற தலைப்பில் திரைப்படங்களை ஒப்பீடுகளுடன் கொஞ்சம் ஆழமாக அலசுகிறது. எடுத்துக்காட்டாக 'சினிமாவுன் நானும்' என்று ஐசன்ஸ்டீன் சொல்லுவதையும், இவான் தி டெரிபிள் என்ற ரஷ்ய படத்துக்கு ஸ்டாலின் ஐசஸ்டீனை விசாரித்த டிரான்ஸ்கிரிப்ஷனும், 'தி கிரேட் டிக்டேட்டர்' என்ற சார்லி சாப்ளினின் முதல் பேசும் படத்தில் ஹிட்லர் வேடத்தில் இருக்கும் சாப்ளின் பேசுவதாக வரும் வசனத்தையும்,இலக்கியமும் திரைப்படங்களும் என்ற தலைப்பில் பி.கே.நாயர் பேசுவதையும் கட்டுரைகளாக ஆசிரிய தொகுத்திருக்கிறார். இது ஒரு 24 எண்ணம் தேரும்.

ஐந்தாம் பகுதி அகிரா குரோசவா, ஹிட்ச்காக், ஸ்பைக் லீ, சத்யஜித் ரே முதலான உலகில் தலை சிறந்த 50 இயக்குநர்களைப் பற்றி அருமையான அறிமுகப்பகுதியாக அமைகிறது. இயக்குநர்களின் அறிமுகத்தின் போது அவர்களின் தலைச்சிறந்த படங்களைப் பற்றிய அறிமுகமும், சின்ன கதை குறிப்புமாக சுவையாக தொகுத்திருக்கிறார்.

பகுதி ஆறும், ஏழும் இந்திய சினிமாவைப் பற்றி பேச ஒதுக்கியிருக்கிறார் ஆசிரியர். ஆறாம் பகுதியில் இந்தியாவின் ஆரம்பகால சினிமாவை பற்றியும், தாதா சாகிப் பால்கே, சாந்தாராம் சினிமா, சத்யஜித் ரே-தாகூர் சினிமா முதலானவற்றை அலசுகிறது.

ஏழாம் பகுதியில் சிறந்த 27 இந்திய இயக்குநர்களை பற்றிய அறிமுகப்பக்கம். அதில் மகேந்திரன், மணிரத்தினம்,பாலச்சந்தர், பாரதிராஜா போன்ற தமிழ் இயக்குனர்களும், எம்.டி.வாசுதேவன் நாயர், மிருணாள் சென் , நிமாய்கோஷ் போன்ற மற்ற இந்திய இயக்குனர்களைப் பற்றிய அருமையான அறிமுகம்.

எட்டாம் பகுதி திரைப்படவிழாக்கள், விருதுகள், சினிமா இதழ்கள்,100 சிறந்த சினிமாப் புத்தகங்கள் என பல தலைப்புகள் உள்ளன.

குழந்தைகள் திரைப்படங்கள், டாகுமெண்டரிகளை பற்றி ஒன்பதாம் பகுதியிலும்,சினிமாவின் எதிர்காலம் பற்றி சின்ன தலைப்புகளில் பத்தாம் பகுதியிலும் தொகுத்திருக்கிறார் ஆசிரியர்.

ஹஹஹஹ....ம்ம்ம்ம்... மூச்சு விட்டுக் கொள்கிறேன்.

கண்ணில் பட்ட சில குறைகள்;

புத்தகம் அருமையாக வந்திருந்தாலும் சில குறைகள் கண்ணில் பட்டு தொலைக்கிறதே.

1.ஆங்காங்கே வார்த்தை பிழைகளை கண்டேன்.புத்தகம் தயாரித்த அவசரம் தெரிகிறது.

2.மற்ற மொழிகளில் எனக்கு அறிமுகமில்லா சமயத்தில் பிரெஞ்சு படங்களை பற்றி என் பதிவுகளில் அலசும் போது ரோசவசந்த், ரவியா ஆகியோர் விளக்கம் தந்த இயக்குநர்களின் பிரெஞ்சு பெயர்கள் புத்தகத்தில் தப்பாகவே கையாளப்பட்டிருக்கிறது. புத்தகத்தில் அந்த பெயர்கள் சீராக கையாளப்பட்டிருந்தால் பரவாயில்லை. நிறைய இடத்தில் சீரற்ற தன்மையை பார்க்கிறேன். உதாரணத்துக்கு 'தி 400 புளோஸ்' படத்துக்கு அறிமுகம் தரும் போது இயக்குநரை 'பிரான்சிஸ் த்ரூஃபா' என்று அழைத்து விட்டு, 'உலகின் தலைச்சிறந்த இயக்குநர்' என்ற தலைப்பில் அவரை 'ப்ரான்ஸ்வா த்ரூஃபோ' என்று சரியாக அழைக்கிறார்கள். தலை சிறந்த இயக்குநர்கள் பக்கத்தை தொகுத்தவர் யார் என்று பார்த்தேன்.வெ.ஸ்ரீராம் என்று இருந்தது. பெயர்களின் சீரமையை பார்க்க தவறியிருந்தார்கள்.

3.அது போக 'நாலாவது கண்'சந்திரன் ஒரு பிரச்சனையை முன் வைத்திருந்தார். அது இங்கு out of context என்றாலும் என்னை கொஞ்சம் அந்த புத்தகத்துடன் சரி பார்க்க வைத்தது. ஆம், சந்திரனின் 'ஆஸ்கார் பரிசின் கதை'யும் இடம் பெற்றிருந்தது.

மேலோட்டமான சுவை முத்துக்கள்

அந்த புத்தகத்திலிருந்து மேலோட்டமாக சில சுவையான செய்திகளை தொகுத்திருக்கிறேன்.

1. நெப்போலியனை கதாபத்திரமாகக் கொண்டு 163 திரைப்படங்கள் வந்துள்ளன.

2. காந்தியாக நடித்து புகழ்பெற்ற பென் கிங்ஸ்லியின் இரண்டு தலைமுறை முன்னோர்கள் இந்தியர்கள். அவர் அப்பாவின் பூர்வீகம் குஜராத். உண்மையான பெயர் கிருஷ்ணா மஞ்சி.

3. காந்தி படத்திற்கு முன்பே மகாத்மா காந்தியைப் பற்றி முதல் டாகுமெண்டரி எடுத்தவர் ஏ.கருப்பன் செட்டியார்.

4. சிறுவயதில் பார்த்த ஒரு குடிகாரனின் நடையை பார்த்து தான் சாப்ளின் படங்களில் அதே மாதிரி ட்ரேட் மார்க் நடையில் நடந்து புகழ் பெற்றதாக சொல்கிறார்.

உண்மையில் இந்த மாதிரி விசயங்களை உள்ளடக்கிய தகவல் சுரங்கமாக விளங்குகிறது எஸ்.ராவின் உலக சினிமா. வாசிப்பில் எல்.கே.ஜியை தாண்டாத எனக்கு யமுனா ராஜேந்திரன் போன்றோர்களின் புத்தகங்கள் எனக்கு கொஞ்சம் ஹை-கிளாஸ். என்னை போன்றோர்கள் முதல் ஹை-க்ளாஸ் வாசிப்பாளர்கள் வரை குறிப்புக்கு வைத்து போற்ற வேண்டிய புத்தகம் இந்த உலக சினிமா. உலக சினிமா குறித்த ஆய்வு கட்டுரைகளும்,சிறப்பு பார்வைகள் அடங்கிய இரண்டாவது புத்தகத்தை வெளியிட எஸ்.ரா திட்டமிட்டுள்ளார். 500 ரூபாய்க்கு வஞ்சகமில்லாத புத்தகம். அடுத்த தடவை ஊருக்கு போனால் கட்டாயம் இந்த புத்தகத்தை வாங்கி விடுவேன். மேலும் இதை பற்றி ஆசிரியர் சொல்வதை பார்க்க இங்கே சொடுக்கவும்.

கட்டாயம் என்னுடைய இந்த பதிவு பரவலாக வசிக்கப்படாது என்பது தெரியும். உலக சினிமா ஆர்வம் உள்ள மக்கள் தமிழ்மணத்தில் நிறையவே இருக்கிறார்கள். நிறைய பேருக்கு உலக சினிமா பார்க்கும் மனோபாவ மாற்றமும் நிகழ்ந்துக் கொண்டும் இருக்கின்றன. அவர்களுக்கும் எனக்கும் இந்த பதிவு பயன்படட்டும். அடுத்து வரும் பகுதி என்னுடைய குறிப்புகளுக்காக பயன்படுத்திக் கொள்கிறேன். உங்களுக்காகவும். படங்களின் பெயர்களை குறிப்பிடுவதால் சில பேருக்கு பிரச்சனையாக தோன்றலாம். இது என்னுடைய ஆர்வத்திற்காக மட்டுமே.

Self Interest

எஸ்.ரா பட்டியலிட்ட கீழ்கண்ட 100 படங்களையும் பார்த்து விடுவது என நினைத்திருக்கிறேன்.படத்தின் தமிழ்பெயர்,இயக்குநர்,ஆண்டு,நாடு,ஆங்கில பெயர் என்ற வரிசையில் உள்ளது.

தி பெர்த் ஆப் எ நேஷன்,D.W.கிரிஃபித்,1915,அமெரிக்கா,The birth of a nation

தி கேபினட் ஆப் டாக்டர் கலிகர்,ராபர்ட் வெய்னே,1919,ஜெர்மனி,The cabiner of Dr.Galigari

தி பேட்டில் ஷிப் பொடொம்கின்,செர்ஜி ஐசன்ஸ்டீன்,1925,ருஷ்யா, the battleship potemkin

எர்த்,அலெக்ஸாண்டர் டவ்சென்கோ,1930,ருஷ்யா,earth

தி மாட்ர்ன் டைம்ஸ்,சார்லி சாப்ளின்,1915,அமெரிக்கா, the modern times

நாஸ்பரதோ,F.W.முர்னூ,1922,ஜெர்மனி,Nasferatau, A symphony of terror

ஸ்டேஜ் கோச்,ஜான் ஃபோர்டு,1939,அமெரிக்கா, Stage coach

கான் வித் த விண்ட்,விக்டர் ஃப்ளமிங்,1939,அமெரிக்கா, Gone with the wind

தி ரூல்ஸ் ஆப் த கேம்,ழான் ரெனார்,1939,பிரெஞ்சு,The rules of the game

காசாபிளாங்கா,மிகேல் கர்ட்ஸ்,1942,அமெரிக்கா,casablanca

சிட்டிசன் கேன்,ஆர்சன் வெல்ஸ்,1941,அமெரிக்கா,citizen kane

ப்யூட்டி அன் த பீஸ்ட்,ழான் காக்து,1946,பிரான்ஸ்,Beauty and the beast

தி பை சைக்கிள் தீஃப்,விட்டோரியா டிசிகா,1948,இத்தாலி,The bicycle theif

ரஷோமான்,அகிரா குரோசாவா,1950,ஜப்பான், Roshomon

லா ஸ்ராடா,பெட்ரிகோ பெலினி,1954,இத்தாலி,La Strada

டோக்கியோ ஸ்டோரி,யசுஜிரோ ஒசு,1953,ஜப்பான், tokyo story

பிரத்லெஸ், ழான் லாக் கோடார்ட்,1960,பிரான்ஸ்,Breathless

உகசு மோனாகதாரி,கென்சி மிசோகுஷி,1953, ஜப்பான்,Ugestu Monogatari

பிக்பாக்கெட்,ரொபேர் பிரெஸ்ஸான்,1959, பிரான்ஸ்,pickpocket

தி 400 புளோஸ், ப்ரான்ஸ்வா த்ரூஃபோ,1959,பிரான்ஸ்,the 400 blows

மை அங்கிள்,ழாக் தாதி,1958,பிரான்ஸ்,my uncle

லாரன்ஸ் ஆப் அரேபியா,டேவிட் லீன்,1962,இங்கிலாந்து,lawrence of arabia

தி செவந்த் ஸீல்,இங்மார் பெர்க்மான்,1957,ஸ்வீடன்,the seventh seal

பதேர் பஞ்சாலி,சத்யஜித் ரே,1955,இந்தியா,pather panjali

தி வொயிட் நைட்ஸ், லூசினோ விஸ்காண்டி,1957,இத்தாலி, the white nights

மேகே தாக தாரா,ரித்விக் கடாக்,1960,இந்தியா,meghe dhaka tara

சைக்கோ,ஆல்பிரட் ஹிட்ச்காக்,1960,அமெரிக்கா,psyco

டெத் பை கேங்கிங்,நகிஷா ஒஷிமோ,1968,ஜப்பான், death by ganging

2001 ஏ ஸ்பேஸ் ஒடிசி, ஸ்டான்லி குப்ரிக்,1968,அமெரிக்கா,2001 a space odyssey

உமன் இன் சாண்ட் டியூன்ஸ்,ஹிரோஷி தேஷிகாரா,1964,ஜப்பான்,women in sand dunes

புளோ அப்,ஆண்டோனியோனி,1966,இத்தாலி,blow up

பெல் டி ஜோர்,லூயி புனுவல்,1967,பிரான்ஸ்,belle de jour

ஜீ, காஸ்டா காவ்ராஸ்,1969, பிரான்ஸ்,Z

தி கலர் ஆப் போமாகிரானட்ஸ்,செர்ஜி பரஜினேவ்,1969,ஆர்மீனியா, the color of pomegranates

அகுர்,தி ராத் ஆப் காட்,வெர்னர் ஹெர்சாக்,1972,மேற்கு ஜெர்மனி, Aguirre, The wrath of god

தி காட் பாதர்,பிரான்சிஸ் போர்டு கப்பலோ,1972,அமெரிக்கா, The god father

சைனா டவுண்,ரோமன் பொலான்ஸ்கி,1974,அமெரிக்கா, china town

மே பூல்ஸ்,லூயி மால், 1990, பிரான்ஸ், may fools

ஆனி ஹால்,வூடி ஆலன்,1977,அமெரிக்கா, Annie hall

தி மேரஜ் ஆப் மரியா பிரான்,ரெய்னர் வெர்னர்,ஃபாஸ்பைண்டர், மேற்கு ஜெர்மனி,The marriage of Maria Braun

ரேகிங் புல்,மார்டின் ஸ்கார்ஸஸி,1980,அமெரிக்கா, Raging Bull

காந்தி,ரிச்சர்ட் அட்டன்பெரோ,1982,பிரிட்டன்,Gandhi

தி பேலட் ஆப் நாராயாமா,ஷோகோ இமாமுரா,1983,ஜப்பான், the ballot of narayama

அமேதியாஸ்,மிலாஸ் போர்மென்,1984,அமெரிக்கா,Amadeus

இ.டி,ஸ்டீவன் ஸ்பில்பெர்க்,1982,அமெரிக்கா,E.T

தி விங்க்ஸ் ஆப் டிசையர்,விம் வெண்டர்ஸ்,1987,மேற்கு ஜெர்மனி, The wings of desire

சினிமா பாரடிஷோ,குசாபே டொர்னாடோ,1998,இத்தாலி, cinema paradiso

லேண்ட்ஸ்கேப் இன் த மிஸ்ட்,அஞ்சலோ தியோபெலஸ்,1988,கிரீஸ்,landscape in the mist

எ சிட்டி ஆஃப் சேட்னஸ்,ஓசியோ ஹெசின் ஹௌ,1989,தைவான், a city of sadness

ரைஸ் தி ரெட் லேர்ண்டன்,ஜாங் இமு,1991,சைனா,raise the red lentern

தி ஆக்ட்ரஸ்,ஸ்டேன்லி க்வான்,1992,ஹாங்காங், the actress

தி பியானோ,ஜான் கேப்பிரியல்,1993,ஆஸ்திரேலியா, the piano

தி ஆப்பிள்,சமீரா மெக்மல்பஃப்,1998,ஈரான்,the apple

தி லாஸ்ட் எம்பிரர்,பெர்னார்டோ பெர்டோலுசி,1982, அமெரிக்கா, the lost emperor

தி சைக்கிளிஸ்ட்,மொசான் மெக்மல்பப்,1989, ஈரான், the cyclist

ஹிரோஷிமா மை லவ், அலென் ரெனெ,1959,பிரான்ஸ், hiroshima my love

மதர் அண்ட் சன்,அலெக்ஸாண்டர் சுக்ரோவ்,1997,ரஷ்யா,mother and son

சிரானோ டி பெஜா,ழான் பௌல் ரஃபேனு,1990,பிரான்ஸ்,Cerano De Berzac

டைடானிக்,ஜேம்ஸ் கேமரூன்,1997,அமெரிக்கா,titanic

எமிலி,ஜீன் பியாரே ஜெனட்,2001,பிரான்ஸ், Amelie

ரன் லோலா ரன்,டாம் டைக்கர்,1998,ஜெர்மனி, run lola run

இன் த மூட் ஆப் லவ்,அங் ஹர் வி, 2000, ஹாங்காங்,in the mood of love

இல் பொஸ்டினோ,மிக்கேவ் கர்ட்ஸ்,1994,இத்தாலி,La postino

தி செண்ட் ஆப் கிரீன் பபாயா,ட்ரான் ஆன் ஹங்,1993, வியட்நாம், The scent of green papaya

லை இஸ் ப்யூட்டிபுல்,ராபர்ட்டோ பெனிகனி,1997,இத்தாலி. Life is beautiful

தி சன்'ஸ் ரூம்,நானி மொராட்டி,2001,இத்தாலி, the son's room

மெபிஸ்டோ,இஸ்வான் சாபோ,1981,ஹங்கேரி,mephisto

ஆந்த்ரே ரூபலோவ்,ஆந்த்ரே தார்கோவெஸ்கி,1969,ரஷ்யா,Andrei rublyov

பிளேட் ரன்னர்,ரிட்லி ஸ்காட்,1982,அமெரிக்கா,Blade runner

தி பில்லோபுக்,பீட்டர் க்ரீன்வே,1996,அமெரிக்கா,The pillowbook

யெல்லோ எர்த்,ஜான் கெய்ஸி,1984,சைனா, Yellow earth

ஆல் அபவுட் மை மதர்,பெட்ரோ அல்மோடோவர்,1999,ப்ரான்ஸ்,all about my mother

வெஸ்ட் சைடு ஸ்டோரி,ஜெரோம் ராபின்ஸ்&ராபர் ஒய்ஸ்,1961,அமெரிக்கா,west side story

தி கில்லிங் பீல்ட்ஸ்,ரொனால்டு ஜாப்ரி,1984,இங்கிலாந்து,The killing fields

பெயிண்டட் பயர்,இம்-குவான் பீக்,2002,கொரியா,painted

புளூ,கீஸ்லோவ்ஸ்கி,1993,போலந்து,blue

டென் கமாண்ட்மெண்ட்ஸ்,சிசில் பி டிமிலி,1956,அமெரிக்கா,ten commandments

பல்ப் ஃபிக்ஷன்,குவாண்டின் டொரண்டினோ,1994,அமெரிக்கா,pulp fiction

தி காஸ்பல் அக்கார்டிங் டூ செயிண்ட் மாத்யூ,பாலோ, பசோலினி,1964,இத்தாலி,The gospel according to saint matthew

சிங்கிங் இன் த ரெயின்,ஜீன் கெலி ஸ்டான்லி டாமென்,1951,அமெரிக்கா, singing in the rain

போனி ஆண்டு கிளைட்,ஆர்தர் பென்,1967,அமெரிக்கா,bonnie and clyde

கிங்-காங்,மெரின் கூப்பர்,1933,அமெரிக்கா,king-kong

மால்கம் எக்ஸ்,ஸ்பைக் லீ,1992, அமெரிக்கா,Malcom X

ஆசஸ் அண்ட் டைமண்ட்ஸ்,ஆந்த்ரே வாஜ்தா,1958,போலந்து,Ashes and diamonds

தி பேஷன் ஆப் ஜோன் ஆப் ஆர்க்,கார்ல் தியோடர்டிரையர்,1928,பிரான்ஸ்,The fashion of jon of arc

மெமரீஸ் ஆப் அண்டர் டெவலப்மெண்ட்,தாமஸ் கிதாரெஸ் அலியா,1968, கியூபா,Memories of under development

நோ மேன்ஸ் லேண்ட்,டேனிஸ் டனோவிக்,2001,சுலோவேனியா,No mans land

தி பேட்டில் ஆப் அல்ஜியர்ஸ்,கிளோ பொண்டோகர்வா,1965,பிரான்ஸ்,The battle of algiers

ஆன் த வாட்டர் பிரண்ட்,எலியா கசன்,1954,அமெரிக்கா,On the waterfront

சன்செட் பொலிவார்ட்,பில்லி ஒயில்டர்,1950,அமெரிக்கா, sunset boulivard

டாங்கோ,கார்லோஸ் சுரா,2000,ஸ்பெயின்,tango

தி விசார்ட் ஆப் ஓஸ்,விக்டர் ப்ளெமிங்,1939,அமெரிக்கா,the wizard of oz

பென் ஹர்,வில்லியம் வைலர்,1959,அமெரிக்கா,Benhur

ஃபெண்டாசியா,பென் ஷார்ப்கீன்,1940,அமெரிக்கா,Fantasia

மெட்ரோ பாலிஸ்,பிரிட்ஜ் லாங்,1927,ஜெர்மனி,metropolis

தி சில்ரன் ஆப் ஹெவன்,மஜித் மஜிதி,1997,ஈரான், the children of heaven

சிட்டி ஆப் காட்,பெர்னாண்டோ மெய்ரிவியஸ்,2002,பிரேசில், city of god

ஸ்டார் வார்ஸ்,ஜார்ஜ் லூகாஸ்,1977,அமெரிக்கா, Star wars

குளோசப்,அபாஸ் கிராஸ்தமி,1990,ஈரான், close-up

ஸ்பிரிட்டட் அவே,ஹயகோ மியாசகி,2001,ஜப்பான், spirited away

இந்த பதிவின் வாக்கு எண்ணிக்கை: . பக்கத்திலுள்ள ஸ்டாரை மவுசால் போட்டுத் தாக்கினால் எனக்கு மவுசு ஏறும். நன்றி:-)

உங்கள் கருத்துக்களை இட

திருப்பி தாக்கியவர்கள்:
/காந்தியாக நடித்து புகழ்பெற்ற பென் கிங்ஸ்லியின் இரண்டு தலைமுறை முன்னோர்கள் இந்தியர்கள். அவர் அப்பாவின் பூர்வீகம் குஜராத். உண்மையான பெயர் கிருஷ்ணா மஞ்சி./
அவர் காந்தியாக நடிக்க வந்தபோது, அவர் இந்தியர் இல்லை என்று சொல்லப்பட, தன் குஜராத்திப்பாரம்பரியத்தைச் (மறுபுறம் ஆங்கிலப்பாரம்பரியம்) சுட்டிக்காட்டியதை Inside the Actors Studio இலே சொல்லியிருந்தார். ஆனால், அவர் பெயர் கிருஷ்ணா மஞ்சியா, கிருஷ்ணா பஞ்சியா? ;-)
 
/காந்தி படத்திற்கு முன்பே மகாத்மா காந்தியைப் பற்றி முதல் டாகுமெண்டரி எடுத்தவர் ஏ.கருப்பன் செட்டியார்./
ஏ.கே.செட்டியாரின் விவரணம் தொலைந்துபோய்விட்டாலும், அது குறித்த சிறுநூலொன்று அண்மையிலே தமிழிலே வெளிவந்திருக்கின்றது.
 
விஜய்க்கு
வணக்கம். எனக்கு நட்சத்திர வாரம் மே இறுதியில், இதே புத்தகத்தை வைத்து
நான் எழத நினைத்தை அப்படியே எழதி உள்ளீர்கள், பாராட்டுக்கள். நீங்கள் உலக சினிமா
பிரியர் என்றால் அவசியம் எஸ்,ரா புத்தகத்தை வாங்க வேண்டும். இது தமிழில் மாபெரும்
முயற்சி. கனவு பட்டறையை மனதாரப் பாராட்ட வேண்டும்.
நன்றி.
மயிலாடுதுறை சிவா...
 
முதலில், சில எழுத்துப்பிழைகள் - புத்தகத்திலா உங்கள் தட்டச்சிலா என்று தெரியவில்லை - ஒருமுறை மேய்ந்ததில் கண்ணில் பட்டவை:

//தி பேலட் ஆப் நாராயாமா,ஷோகோ இமாமுரா,1983,ஜப்பான், the ballot of narayama//
அட கடவுளே, நாராயாமா போட்ட ஓட்டு என்ற ரீதியில் ஆகிவிட்டது இங்கே; அதன் சரியான பெயர் Ballad of Narayama (ஷோஹீ இமாமுரா - இயக்குனர்)

//தி பியானோ,ஜான் கேப்பிரியல்,1993,ஆஸ்திரேலியா, the piano//
இயக்குனர் பெயர் ஜேன் காம்ப்பியன் (Jane Campion) - பெண்.

//சிரானோ டி பெஜா,ழான் பௌல் ரஃபேனு,1990,பிரான்ஸ்,Cerano De Berzac//
அது Cyrano de Bergerac.

//ஆந்த்ரே ரூபலோவ்,ஆந்த்ரே தார்கோவெஸ்கி,1969,ரஷ்யா,Andrei rublyov//
அது Andrei Rubelev - இதைப்பற்றி நான் விரைவில் எழுதுவேன்.

//தி கில்லிங் பீல்ட்ஸ்,ரொனால்டு ஜாப்ரி,1984,இங்கிலாந்து,The killing fields//
இயக்குனர் பெயர் ரோலண்ட் ஜாஃப் - Roland Joffe.

//தி பேஷன் ஆப் ஜோன் ஆப் ஆர்க்,கார்ல் தியோடர்டிரையர்,1928,பிரான்ஸ்,The fashion of jon of arc//
The Passion of Joan of Arc - Carl Dryer

//நோ மேன்ஸ் லேண்ட்,டேனிஸ் டனோவிக்,2001,சுலோவேனியா,No mans land//
அது போஸ்னியப் படம்.

எண்ணிப் பார்த்தால் 42 படங்கள் பார்த்திருக்கிறேன்... Blade Runner, Titanic, The marriage of Maria Braun போன்றவற்றையெல்லாம் இங்கே எதிர்பார்க்கவில்லை (இருக்கக்கூடாது எனவில்லை... எஸ்.ராமகிருஷ்ணனே சொல்லியிருப்பது போலத்தான் - அவரவர் பட்டியல் வேறுபடத்தான் செய்யும்). ஃபாஸ்பைண்டரின் The marriage of Maria Braun, போர்ப் பின்னணி, கணவனின் தியாகம், கணவன் மொத்த ஜெர்மனிக்குமான குறியீடு என்பதுபோன்ற அர்த்தங்கற்பிப்புக்கள் தாண்டிப் பார்த்தால், வெகு சாதாரணமான melodramaவாகப் பட்டது. என்னளவில், ஃபாஸ்பைண்டரின் Despair மிகவும் பிடித்திருந்தது. வெகுவாக அதிமதிப்பீடு செய்யப்பட்ட இயக்குனர்களில் ஃபாஸ்பைண்டரும் ஒருவர் என்பது என் அபிப்ராயம். Blade runner - simply overhyped crap. Zhang Yimouவின் Raise the red lantern பார்க்கவில்லை, ஆனால் இதே இயக்குனர்தான் சமீபத்தில் Hero என்று அமெரிக்காவின் இதயங்களைக் கொள்ளைகொண்ட ஒரு சீன ஆக்-ஷன் படம் எடுத்தார். நல்ல படம்தான் அது கூட. ழாக் தாத்தி (Jacques Tati) கிட்டத்தட்ட குழந்தைகளுக்கான ஒரு கோமாளி போல - அவரது படங்கள் ஒன்றோ இரண்டோ இங்கே நூலகத்தில் திரையிட்டபோது பார்த்ததுண்டு. Nosferatu இன்னுமொரு சுவாரஸ்யமான, விரும்பத்தக்க தேர்வு. மேற்கொண்டு இங்கே அதுகுறித்துச் சொல்வதை விடுத்து, இந்த அவசரச் சுட்டியைப் பார்க்கலாம்.

அடுத்தமுறை இந்தியா போகும்போது கட்டாயம் இந்தப் புத்தகத்தை வாங்கவேண்டும். புத்தகம் குறித்த தகவல்களை விபரமாகப் பகிர்ந்துகொண்டதற்கு நன்றி விஜய். இங்கே வந்தபிறகுதான் டாவ்ஜெங்கோவின் Earth பார்த்தேன். அற்புதமான படம் - அதன் திரைக்கதை, புத்தகமாகவும் வந்திருக்கிறது. துறை சார்ந்த இதுமாதிரி தகவற்புத்தகங்கள் தமிழில் வருவது வெகுவாக வரவேற்கப்படக்கூடிய ஒன்று. தமிழ் சினிமா ரசனை தன்னை விரித்துக்கொண்டால் நன்றாயிருக்கும்.
 
This comment has been removed by a blog administrator.
 
spirited away குறித்து 'பார்வை' மெய்யப்பன் எழுதியிருக்கின்றார்

The Last emperor.
 
அன்புள்ள விஜய்,

நல்ல பதிவு!

சிறந்த 100 படங்கள் லிஸ்ட்லே ( இது சிறந்த படங்கள் வரிசையிலே எஸ்.ரா எழுதுனது
தெரியாமலேயே) நிறையப் படங்கள் பார்த்திருக்கேனே!

எப்படியாவது நான் ஒரு எஸ்.ரா புத்தகத்தையாவது படிக்கணும்!

என்றும் அன்புடன்,
துளசி.
 
>>>அங்கிருக்கும் ராமகிருஷ்ணனின் படம் புத்தகத்தை படிக்கும் போது தூக்கம் வந்தால் தெளிவிக்க நன்றாகவே பயன்படுகிறது

இப்படி ஒருவரின் உருவ அமைப்பை விமர்சிப்பது அவ்வளவு நாகரீகமாக இல்லை விஜய் சார்.
 
ஐயா ராசா இப்பத்தான் உலக சினிமா பற்றி அ,ஆ கூட இல்லை அதற்குக் கீழே படிக்கிறேன் அதற்குள்ளே பட்டியல் போட்டு ஆளை அடிக்கிறீர்களே.பதிவுகள் அத்தனையிலும் உங்கள் உழைப்பு மிளிர்கிறது விஜய் சேர்த்து வைக்கிறேன்
 
-/பெயரிலி, கிருஷ்ணா மஞ்சி,பஞ்சி எது சரியென தெரியவில்லை. ஆனால் புத்தகத்தில் மஞ்சி என்று பார்த்ததாகவே ஞாபகம். வேண்டுமென்றால் இன்று மாலை சரி பார்த்துச் சொல்கிறேன்.


//ஏ.கே.செட்டியாரின் விவரணம் தொலைந்துபோய்விட்டாலும், அது குறித்த சிறுநூலொன்று அண்மையிலே தமிழிலே வெளிவந்திருக்கின்றது. //

அந்த புத்தக்த்திலும் இந்த டாகுமெண்டரியை பற்றி விரிவாகவே எஸ்.ரா சொல்லியிருக்கிறார். ஒரு வேளை நீங்கள் சொல்லும் புத்தக்த்திலிருந்து தொகுக்கப்பட்டிருக்குமோ? அதையும் பார்க்க வேண்டும்.

மாண்டி,

என்னுடைய தட்டச்சிலும் இருக்கலாம், புத்தகத்திலும் இருக்கலாம். மாலையில் புத்தகத்தை சரி பார்த்து சொல்கிறேனே :-)

//நோ மேன்ஸ் லேண்ட்,டேனிஸ் டனோவிக்,2001,சுலோவேனியா,No mans land//
அது போஸ்னியப் படம்.//

இதை என்னால் அடித்து சொல்ல முடியும். எனென்றால் தட்டச்சும் போது எனக்கு சந்தேகம் இருந்தது. இருமுறை பார்த்து தான் தட்டச்சினேன். புத்தகத்தில் சுலோவேனியா என்று தான் இருக்கிறது.

அனானிமஸ்,

//இப்படி ஒருவரின் உருவ அமைப்பை விமர்சிப்பது அவ்வளவு நாகரீகமாக இல்லை விஜய் சார்//

அய்யய்யோ, நான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லையே. சில எழுத்தாளர்களின் எழுத்து புத்தகத்தை கீழே வைக்காமல் படிக்க வைக்கும். சில சமயம் எழுத்தாளர்களின் எழுத்தால் அவர்களின் மற்ற புத்தகத்தை படிக்கும் போது அயர்ச்சி ஏற்பட்டால் அவர்கள் புகைப்படம் பார்க்கும் போது படிக்கும் உத்வேகம் கொடுக்கும். எஸ்.ராவின் எழுத்து ரொம்ப பிடிக்கும். அவரை காணும் போதெல்லாம் துணையெழுத்தும், உபபாண்டமும் தான் கண்ணில் வந்து நிற்கும். ஆர்வத்துடன் படிக்க ஆரம்பிப்பேன். தவறாக அந்த வரி வழிகாட்டுவதை பார்த்தால் கஷ்டமாகத் தான் இருக்கிறது. வரிகளை மாத்தியிருக்கிறேன். சரியில்லை என்று நீங்கள் நினைத்தால் அந்த வரியை தூக்கிவிடலாம்.

நன்றி ஈழநாதன்,துளசியக்கா,அனானிமஸ்,பெயரிலி, மாண்டீ.
 
பதிவுக்கு நன்றி!

நான் முடிந்தால் அந்தப்புத்தகத்தை வாங்கிப் படிக்கிறேன்.

ஏ.கே. செட்டியார் எழுதிய புத்தகம் 'அண்ணலின் அடிச்சுவட்டில்' என்று வந்திருக்கிறது. படித்தேன். செட்டியாரின் மகத்தான உழைப்பு அதில் குறிப்பிடப்பட்டிருக்கும். அவர் உலகெங்கும் அலைந்து திரிந்து காந்தியைப்பற்றி எடுக்கப்பட்டிருந்த படத்துண்டுகளை எல்லாம் சேகரித்து அந்த டாகுமெண்டரியைச் செய்திருப்பார். சிறிது காலம் காந்தியின் ஆசிரமத்திலும் தங்கி படமாக்கியிருப்பார்.

புத்தகத்தைப் படிக்கும்போது அவரது உழைப்பு, முயற்சி இவை குறித்து பாராட்டமுடியுமென்றாலும், சுயமரியாதை கட்சிகளை எதிர்க்கவிரும்பிய, அதே சமயத்தில் அதன் பேரெழுச்சியை நேரடியாக எதிர்க்கமுடியாத ஒருவரின் 'காந்தியை கடவுளாக்கும்' அற்புத முயற்சியைப் பற்றியது அது என்றே நான் புரிந்துகொண்டேன். சென்னையில் பால்க்காரர்கள் செய்யும் கலப்படம் வரை கால மாற்றத்தை பதிவு செய்த செட்டியார் தமிழ் நாட்டில் அப்போது நடந்துகொண்டிருந்த சமூக, அரசியல் மாற்றத்திற்கு தமது கண்களை இறுக மூடிக்கொண்டார். அவரது அத்தனை எதிப்புணர்வும் நாடு நாடாக ஓடி காந்தி படம் சேகரிக்கவும் அவரை ஒரு கடவுள் நிலைக்கு கற்பிப்பதையும் செய்யத்தூண்டியது. காந்தியின் ஆணையின் பேரில் பெரியார் நடத்திய கள்ளுக்கடைப் போராட்டத்தைப் பற்றியோ, வைக்கம் ஆலய நுழைவுப்போராட்டத்தில் பெரியார்-காந்தியின் இடங்களைப் பற்றியோ ஒரு தகவலை, கருத்தை, தனது காந்தி படத்தில் காட்டக்கூட அவரால் முடியாத அளவுக்கு அவருக்கு பெரியாரின் மேலான வெறுப்பு ஓங்கி இருந்ததாகவே நான் புரிந்துகொண்டேன். அதற்கான மனநிலை பற்றிய குறிப்புகளை அந்தப் புத்தகத்தில் இருந்தே பெறலாம்.

அந்தப்புத்தகம் சினிமா, அரசியல் போன்ற காரணங்களுக்காக வாசிக்கப்படவேண்டும் என்றே சொல்வேன்.
 
No Man's land, என்னிடம் சொந்தமாக ஒரு DVD கிடக்கின்றது. அஃது அடிப்படையிலே ஒரு கூட்டுத்தயாரிப்பு என்றே நினைக்கிறேன். ஆனால், பொஸ்னியத்தயாரிப்பு என்றே (இயக்குநரை முன்வைத்து) பரிசுகளைப் பெற்றது.

IMDB இலே தேடினேன்; தயாரிப்பு நாடுகள்: Bosnia-Herzegovina / Slovenia / Italy / France / UK / Belgium என வருகின்றது.

தங்கமணி ஏ. கே. செட்டியாரின் நூல் பற்றிய விபரத்தைத் தந்திருக்கின்றார்.
 
விஜய், நல்ல பதிவு. எஸ்.ராவின் இந்தப்புத்தகத்தை அண்மையில் ஒரு புத்தகவெளியீட்டில் பார்த்துவிட்டு, அதன் கனதியைப் பார்த்துவிட்டு, விலை சரிவராது என்று வாங்காமல் விட்டுவிட்டேன். எஸ்.ராவின் 'பால்ய நதி' சிறுகதைத் தொகுப்பு வாசித்திருக்கின்றீர்களா? மெல்லிய உணர்வுகளால் மனதை மிகவும் நெகிழச்செய்திருப்பார். எனக்கு மிகவும் பிடித்த தொகுப்பு அது.
 
நேற்று இரவே எழுத வேண்டும் என்று நினைத்திருந்தேன். ப்ளாக்கர் சொதப்பியதால் முடியவில்லை. இந்த புத்தகத்தினை பற்றி எழுத முதலில் நினைத்து, பின் வலைப்பதிவில் பேசப்படும் 100 படங்களையும், இதையும் வைத்து ஒரு ஒப்பீடு செய்யலாம் என்று ஆகாய க் கோட்டை கட்டியிருந்தேன், தகர்த்து விட்டீர்கள் ;) பரவாயில்லை. சந்திரன் இப்புத்தகத்தினைப் பற்றி எழுதிய போது, அவரோடு தொலைபேசியில் உரையாடிய போது சில தகவல்களை பகிர்ந்து கொண்டேன். ஒட்டுமொத்தமாக இது ஒரு நல்ல, பெரிய புத்தகம்.

ஆனால், கொஞ்சம் விவரமாக நோக்கினால், ஐஎம்டிபி தமிழில் வந்தால் போலிருக்கிறது. எஸ்.ரா சொல்லியது போல அவரவர் தேர்வுகள் வேறாக இருக்கலாம். ஆனால், ஈரானிய இந்நாளைய இயக்குநர்களைப் பற்றி பேசும்போது அதே அளவில் ஐரோப்பிய இயக்குநர்களையும் (மைக்கேல் விண்டர் பாட்டம் ) அமெரிக்க இயக்குநர்களையும் (டிம் பர்டன், ஸ்டீபன் சோடன்பர்க் ) சேர்க்கவில்லை. இந்தியாவில் மாற்று சினிமா என்று பேசும் போது அதன் வரையறைக்குள் வரும் நிறைய நபர்களின் பேர்களாவது தந்திருக்கலாம். "கொரில்லா சினிமா" என்றழைக்கப்படும், மைக்கேல் மூர் மாதிரியான ஆட்கள் செய்யும் படங்களைப் பற்றிய குறிப்புகளும் குறைவு. இங்கே தமிழகத்தில் அதற்கு ஈடாக "ஒரு நதியின் மரணம்" என்ற பெயரில் தாமிரபரணி ஆற்றில் பொலீஸ் அடக்குமுறையினால் உயிரிழந்தவர்களை பற்றிய ஒரு குறும்படம் தந்திருக்கிறார்கள். வங்காளத்தில் தியேட்டர்களும், மாற்று சினிமாவும் பூத்து குலுங்கும் நேரமிது. மும்பாயில் மட்டும், நான் பார்த்த அளவில் குறைந்தது 15-20 படங்கள் தேரும். இவற்றையெல்லாம் விரிவாக எழுதாவிட்டாலும், கோடிட்டு காட்டாமல் போயிருப்பது மனதினை நெருடுகிறது.

இது தாண்டி, ஸ்டுடியோக்கள் தவிர்த்து உலகெங்கும் விவரணப்படங்களையும், ஆவணப்படங்களையும் மட்டுமே தரும் பிபிசி பிலிம்ஸ், டாக்குயரமா, பிலிம் நெட்வொர்க், என்.ஜி.சி பிலிம்ஸ் பற்றிய விவரங்கள் என் கண்ணில் படவில்லை. இவையனைத்தும் ஒரு திரைப்பட வரிசையில் மிக முக்கியம். இதுதாண்டி, எனக்கு புத்தகத்தில் கடுப்படித்தது திருப்பி, திருப்பி, எல்லா புத்தகங்களிலும், அலசி, ஆராய்ந்து காயப்போட்ட சத்யஜித்ரே புராணம், சியாம் பெனகல் புராணம், ஸ்பீல்பெர்க் புராணம். இவை சினிமாவைப் பற்றி பேசும் எந்தப் புத்தகத்திலும் பார்க்க முடியும். உலக சினிமாவினைப் பற்றி அறிந்துக் கொள்ள முயல்பவர்களுக்கு, இவர்களைப் பற்றி கண்டிப்பாக தெரிந்திருக்கும். தமிழ் இயக்குநர்கள் என்று வரும்போது அந்நியாயமான இருட்டடிப்பு நடந்திருக்கிறது. பாரதிராஜா பற்றி பேசும் போது அலைகள் ஒய்வதில்லை, முதல் மரியாதை போன்ற படங்கள் இல்லை. ஜுலி கணபதி, வண்ண வண்ண பூக்கள் எழுதும் எஸ்.ரா, "மறுபடியும்" எப்படி பாலுமகேந்திரா படமென்று மறந்தார் என்று தெரியவில்லை. இதுதாண்டி, இந்நாளைய இந்திய இயக்குநர்கள் பற்றீ பேச்சு வரும் போது, சந்தோஷ் சிவனின் "டெரரிஸ்ட்", அஸ்தோஷ் கொளரிகரின் "லகான்" போன்றவற்றை எப்படி மறந்தார் என்று தெரியவில்லை. இது தவிர தற்போதைய இந்திய இயக்குநர்களைப் பற்றிய செய்திகளொன்றும் காணோம்.

மொத்தத்தில் இது ஒரு நல்ல புத்தகம், முதலில் உள்ளே வருபவர்களுக்கு மட்டுமே. கொஞ்சம் உலக சினிமாக்கள், இணைய தளங்கள் என்று பார்த்து விட்டீர்களேயானால் அப்புறம் இந்த புத்தகம் ஒரு ரெப்ரென்ஸ் கைடு மாதிரி ஆகிவிடும். நான் இங்கு சொன்ன கருத்துக்களை எஸ்.ராவிற்கும் அனுப்பியிருக்கிறேன். நான் சொன்னதில் ஏதேனும் தவறிருந்தால், மன்னிப்பினை இப்போதே கேட்டுவிடுகிறேன்.
 
சொல்ல வந்து மறந்துவிட்டேன். விஜய், உண்மையிலேயே போட்டுத் தாக்குகிறீர்கள். நடத்துங்கள்.
 
//சந்தோஷ் சிவனின் "டெரரிஸ்ட்", அஸ்தோஷ் கொளரிகரின் "லகான்" போன்றவற்றை எப்படி மறந்தார் என்று தெரியவில்லை//
நரேன், சந்தோஷ் சிவனின் ரெரரிஸ்ட்டைவிட, மல்லி நல்ல படமென்று கேள்விப்பட்டிருக்கின்றேன். சந்தோஷ் சிவனின் படங்கள் வெளிநாட்டு விழாக்களின் விருதுகளை இலக்காக கொண்டு இயக்கப்படுகின்றன என்ற குற்றச்சாட்டை அவரது படங்கள் குறித்த கட்டுரையொன்றில் வாசித்ததாய் நினைவு. ரெரரிஸ்ட் படத்தின் அபத்தத்தை நீங்கள் In the name of buddha பார்க்கும்போது புரிந்துகொள்வீர்கள். அப்படியான இன்னொரு அபத்தம், 'உயிரே'.
 
நரேன்,

//நான் இங்கு சொன்ன கருத்துக்களை எஸ்.ராவிற்கும் அனுப்பியிருக்கிறேன். நான் சொன்னதில் ஏதேனும் தவறிருந்தால், மன்னிப்பினை இப்போதே கேட்டுவிடுகிறேன். //

இதில் எதுவும் தவறு இருப்பதாய் எனக்கு தெரியவில்லை. உலகசினிமாவின் ஆரம்ப பார்வையாளன் என்ற விளிம்பினில் நின்று தான் இந்த பதிவை எழுதினேன். நீங்கள் சொன்ன இந்திய சினிமா பற்றிய சில கருத்துக்களை எண்ணிப் பார்க்க தவறவில்லை. 500 ரூபாய்க்கு இது போதுமென்று நினைத்தாரோ? இல்லை புத்தக கண்காட்சி வெளியீடுக்கு அவசரப்பட்டாரோ தெரியவில்லை. இந்திய சினிமாக்களை பற்றியே இதே தடிமனில் இன்னொரு புத்தகத்தை போடலாம். உலக சினிமா என்றதால் இந்திய அல்லாத உலக சினிமாக்களுக்கு அதிகம் கவனம் செலுத்தியிருப்பதாக தோன்றுகிறது. அதுவுமில்லாமல் இந்த மாதிரி சினிமாவை பற்றி ஓரளவு எல்லாவற்றையும் ஒருங்கே தொகுத்து வந்திருப்பது எனக்கு தெரிந்த வரையில் இது தான் முதல் புத்தகம் என நினைக்கிறேன் (சரியா??).

மாற்று சினிமாவை பார்க்க எண்ணி திக்கு தெரியாமல் அலைந்துக் கொண்டிருந்த எனக்கு இது ஒரு நல்ல ரெப்பரண்ஸ் என்றே நினைக்கிறேன். எடுத்துக்காட்டாக, எம்.எஸ்.ஆபிஸ் படிக்க வேண்டுமானல் முதலில் 'MS OFFICE FOR DUMMIES' என்ற புத்தகத்திலிருந்து ஆரம்பிப்போம். ஒரு வேளை அதில் எக்ஸ்பர்ட் ஆகிவிட்டால் டம்மிஸ் புத்தகம் கொஞ்சம் அபச்சாரமாகத் தான் தெரியும். அது போல் பிற்காலத்தில் இந்த புத்தகம் எனக்கு தோன்றலாமென நினைக்கிறேன்.

இப்போதைக்கு இந்த புத்தகம் நல்ல கைடு.ஒரு வேளை இரண்டாவது புத்தகத்தில் நல்ல மேட்டர்கள் வரலாமென நினைக்கிறேன். பார்க்கலாம்.
 
டிசே, கருத்து ரீதியாக அதனை ஒத்துக் கொள்கிறேன். இங்கே பிரச்சனை அதுவல்ல. உலக விழாக்களில் பங்குப்பெற்ற படங்கள் என்கிற பேச்சு எழும்போது, டெரரிஸ்ட் இல்லாமல் இருக்கமுடியாது. கமல் பற்றி தனியாக ஒரு பக்கம் கூட இல்லை அப்புத்தகத்தில். ஒத்துக் கொள்கிறேன். மல்லி, டெரரிஸ்ட்டை விட நல்ல படம். இன் தி நேம் ஆப் புத்தா இந்தியாவில் தடை செய்யப்பட்ட படம். யாராவது கொண்டு வந்து தந்தீர்களேயானால், சந்தோஷப்படுவேன்.

இதுதாண்டி, என் மீது, பாசமும், மதிப்பும் வைத்திருக்கும், இணைய மகா ஜனங்களுக்கு. எனக்கு ஏதாவது பரிசளிக்க வேண்டுமென்று தோன்றினால் (நீ கொட்ற் குப்பைக்கு பரிசு கேக்குதா பரிசு, போடாங்...) என்னுடைய இப்போதைய தேவை, இதுதான் - டாக்யுரமா வெளியிட்டிருக்கும்
12 DVD கலெக்ஷன்
வாங்கி பத்திரமாக FedEx-இல் அனுப்பி வையுங்கள். நான் சுயசரிதை எழுதும்போது 3 பக்கங்கள் அனுப்பி வைப்பவர்களுக்கு :)
 
நரேன் சார்,

அந்த தொகுப்பை ஈஸியாக பிடித்துவிடலாமென நினைக்கிறேன். சிங்கப்பூரில் தேடிப்பார்க்கிறேன்.(எனக்கு 3 பக்கம் ???? :-)).

அதுபோக உதிரியாக லைப்ரரியில் பார்த்தது எடுக்காமல் விட்டது...

Best Boy – 1979
Murder on a Sunday Morning - 2001

Murder on a Sunday Morning கையில் எடுத்து அதை விட தெரிந்த படமொன்று கையில் கிடைத்ததால் விட்டு விட்டேன். தேடி எடுத்து பார்த்து விடுகிறேன் முதலில்.
 
விஜய், அப்படியே, இன் தி நேம் ஆப் புத்தா கிடைத்தால் ராவுங்கள். இந்தியாவில் கிடைக்காது. நீங்கள் வாங்குவதாக இருந்தால் சொல்லுங்கள், இந்தியாவில் கிடைக்காத நிறைய படங்கள் பற்றிய ஒரு லிஸ்ட்டினை அனுப்பி வைக்கிறேன். வாங்கி நீங்கள் இந்தியாவிற்கு வந்தால், சினிமா பேரடைசோவிற்கு இணையாக ஒரு டிவிடி கடை திறந்து கல்லா கட்டலாம். மென்பொருள் எழுதி போரடிச்சு போச்சு ;)
 
எஸ்.ராமகிருஷ்ணன் தொகுத்த 'உலக சினிமா' புத்தகத்தையும் பிலிம் நுயுஸ் ஆனந்தன் எழுதிய தமிழ் சினிமா புத்தகத்தையும் பிரட்டி பார்த்து விட்டு பிலிம் நுயுஸ் ஆனந்தன் புத்தகத்தையே வாங்கினேன்.உலக சினிமாவை பற்றி மற்ற மொழியில் "தரமான" நிறைய புத்தகங்கள் இருப்பதால்...ஆனால் 500 ரூபாயுக்கு எதுவும் கிடைக்காது..ஆகையால் தாராளமாக இப் புத்தகத்தை வாங்கலாம்.
பி.கு: நுயு புக் லாண்ட் சீனிவாசன் (மோர் தருவாரே..)என் தலையில் எப்படியோ கட்டப் பார்த்தார். எடை காரணமாக நான் மசியவில்லை.
 
//நுயு புக் லாண்ட் சீனிவாசன் (மோர் தருவாரே..)//

மோர் நல்லாருக்குமே!
 
அதிர்ஷ்டமய்யா உங்களுக்கு, நான் இவ்வளவு வாங்கியிருக்கிறேன்... ம்ஹூம்.. ஒரு தடவை கூட மோர் குடித்ததில்லை. இந்த முறை போகும்போது கட்டாயமாக கேட்டு வாங்கிக் குடிக்கிறேன்.
:)
 
நரேன், இன் த நேம் ஆப் புத்தாவையும் தேடுகிறேன். அது இலங்கை படம் தானே?

மணிக்கூண்டு,

//எனக்கு நட்சத்திர வாரம் மே இறுதியில், இதே புத்தகத்தை வைத்து
நான் எழத நினைத்தை அப்படியே எழதி உள்ளீர்கள்//

இதெல்லாம் பதிவு வாழ்க்கையில சகஜமப்பா... நன்றி.

நல்ல தகவலை கொடுத்த தங்கமணிக்கு நன்றி.

ரவியா! பிலிம் நியூஸ் ஆனந்தம் புத்தகம் வாங்கிட்டீங்களா? நானும் படிக்கனும்னு வச்சிருக்கேன். பார்க்கலாம்.
 
விஜய்
நல்ல விரிவான பதிவு. தேடித்தேடி பார்த்தேன். எனக்கு பிடித்த சில படங்களைப் பற்றிய அறிவிப்பே இல்லை.
1.untouchable-ஷான் சொனரி, கெவின் ஸ்டேசி நடித்த மதுவிலக்கின் விளைவுகள், அதன் மூலம் வரும் கடத்தல் பற்றிய மிக நல்ல படம்.ஷான் ஜேம்ஸ்பாண்டாக அல்லாமல், பெண்களின் அருகாமையின்றி நடித்திருப்பார். அருமையான நடிப்பு.
2. scent of a woman - அல்பசீனோ நடித்து வந்த ஒரு போர்வீரனின் மனநிலை பற்றியத்
3. படத்தின் பெயர் நினைவில் இல்லை- பாலியல் தொழிலாளிகள் தங்கள் நிலை குறித்து மற்ற பெண்களோடு தங்களை ஒப்பிட்டு நீதிமன்றத்தில் வாதிடுவது போன்றது.
4. traffic- போதை பொருள், பெண்கள் கடத்தல்கள் பற்றியது
ஒருவேளை இவை பாகம் 2 வருமாயிருக்கும். இதி எழுதுவதன் நோக்கம், பார்க்காதவர்கள் பார்க்கலாமே என்ற எண்ணம்தான்.
 
/traffic- போதை பொருள், பெண்கள் கடத்தல்கள் பற்றியது
ஒருவேளை இவை பாகம் 2 வருமாயிருக்கும். இதி எழுதுவதன் நோக்கம், பார்க்காதவர்கள் பார்க்கலாமே என்ற எண்ணம்தான்./
இதுவும் USA அலைவரிசையிலே வந்த Traffic தொடரும் (இதை நான் பார்க்கவில்லை) உம் கிட்டத்தட்ட அலைவரிசை-4 இன் Traffik தொடரின் இன் பாதிப்பினைக் கொண்டவையாகவே எனக்குப் படுகிறன. மூல Traffik மனித உணர்வுகளின் நுட்பங்களைக் கவனத்திலே கொண்டு - இருக்கையின் நுனியிலே இருத்தலையும் நகம் கடித்தலையும் மட்டும் நோக்காகக் கொள்ளாமல்- அவற்றினையும் வெளிக்காட்டும் வண்ணம் எடுக்கப்பட்டிருந்தது.
 
Traffic நல்லதொரு படம். Michael Douglas, drugsற்கு எதிராய்ப் போராட, அவரது மகளே drugsற்கு அடிமையாகும் விந்தையையும், ப்லவேறு பின்னணியில் நடைபெறும் மூன்று அலல்து நான்கு சம்பவங்களை இறுதியில் ஒரேயிடத்தில் இணைத்துக்காட்டியும் சிறப்பாக அந்தப்படம் இயக்கப்பட்டிருந்தது. பத்மாவின் பின்னூட்டத்தைப் பார்த்தவுடன் எனக்கு நினைவுக்கு வரும் இரண்டு படங்கள்: LA Confidentialம், The Hurrianeம். LA confidentialஅமெரிக்காப் பொலிஸின் இன்னொரு முகத்தைக் காட்டியிருந்தது. Hurrianeல் நடித்ததற்கு டென்சில் வாஷிங்கடனுக்கு ஒஸ்கார் கொடுக்காமல், The Traning Dayயிற்கு விருது கொடுத்ததை வைத்தே யாரின் கையில் ஒஸ்கார் விருதுகள் இருக்கின்றன என்பது புரியும் :-(.
 
நான் எல்லாம் இங்கே பேசமாட்டேன். விஜய் நல்லா போட்டுத் தாக்குறீங்க.
 
Traffic - இதை தான்ய்யா நானும் சொல்றேன். இந்த படத்தின் இயக்குநர் ஸ்டீபன் சோடன்ப்ர்க். 4 ஆஸ்கரினை அள்ளிய படம். சிறந்த துணை நடிகருக்கான விருதினைப் பெற்ற பெனிசியோ டெல் டோரோ ஒரு அற்புதமான நடிகன். சோடன்பர்க் ஒரு திறமையான இயக்குநர், எரின் ப்ரோக்கவிச் (ஜூலியா ராபர்ட்ஸ்), Schizopolis, புல் ப்ரான்டல் போன்ற படங்களை தந்தவர். இவரைப் பற்றிய குறிப்பு எஸ்.ரா புத்தகத்தில் இல்லாமல் போனதே என்ற வருத்தத்தில் தான் எழுதினேன்.

இது தாண்டி, பத்மா, நீங்கள் அன்டச்சபிள் பிடிக்குமென்றால், நீங்கள் பார்க்க நான் சிபாரிசு செய்யும் இன்னொரு படம் பிலடெல்பியா (1993) டாம் ஹாங்ஸ், டென்சில் வாஷிங்டன் நடித்த படம். எய்ட்ஸினால் பாதிக்கப்பட்ட ஒரு வக்கீலை அவனுடைய லா பெர்ம் வேலை நீக்கம் செய்து விடுவார்கள். அவனுடைய வழக்கினை எந்த லா பெர்ம்ங்களும் எடுத்துக் கொள்ளாது. ஒரு சின்ன வக்கீலைப் பிடித்து அவன் அவனுடைய நியாயத்தினை நிறுவதற்காக போராடும் படம் தான் இது. இது பிலடெல்பியாவில் நடந்த உண்மை சம்பவம் என்று சொல்லப்பட்டது. சரியாக தெரியவில்லை. அருமையான டிராமா இது. படத்தின் பின்பாதியில் நடக்கும் கோர்ட் நிலவரங்கள் அற்புதமாக இருக்கும்.
 
// எரின் ப்ரோக்கவிச் (ஜூலியா ராபர்ட்ஸ்)//

அந்த வருடம் (2000) சிறந்த நடிகைக்கான தேர்வில், அமெரிக்காவின் 'கண்மணி' என்ற ஒரே காரணத்துக்காக சாதாரணப் பாத்திரநடிப்பொன்றுக்கு பரிசைக் கொடுத்து, Requiem for a Dreamன் Ellen Burstynக்குக் கொடுக்காமல் விட்டார்கள் என்பதற்காகவே ஆஸ்கர் குழுவினரைத் தலைகீழாகத் தொங்கவி்ட்டு அடிக்கலாம்.
 
>>கொஞ்சம் விவரமாக நோக்கினால், ஐஎம்டிபி தமிழில் வந்தால் போலிருக்கிறது---

பத்து நிமிடங்கள் புத்தகத்தைப் புரட்டியதில், எனக்கும் நாராயணின் எண்ணங்களே மனதி வந்து போனது. 'வெயிலைக் கொண்டு வாருங்கள்'/துணையெழுத்து போன்றவற்றை கொடுத்தவரிடமிருந்து உணர்வுரீதியான பதிவுகளை எதிர்பார்த்திருந்தேன். ஆனால், அது புக் ஆஃப் லிஸ்ட்ஸ் மாதிரி காட்சியளித்தது. இந்தப் புத்தகத்தை அமெரிக்கா வருவதற்கு முன் பார்த்திருந்தால், மிகவும் பயனுள்ளதாக இருந்திருக்கும் ;-)

>> traffic- போதை பொருள், பெண்கள் கடத்தல்கள் பற்றியது
ஒருவேளை இவை பாகம் 2 வருமாயிருக்கும்.---

இதன் விரிவான இரண்டாவது பாக அலசல்கள், தொலைக்காட்சி தொடராக, யு.எஸ்.ஏ சானலில் வந்திருக்கிறது. அறிவியல் புனைகதை மாதிரி 'நிஜம் நிறைய கலந்த' அரசியல் ஆய்வுக்கதை என்று (பெயரிலி கருதுவதைப் போல்) சொல்லலாம்.

>>The Traning Dayயிற்கு விருது கொடுத்ததை வைத்தே யாரின் கையில் ஒஸ்கார் விருதுகள் இருக்கின்றன என்பது புரியும்

டென்ஸல் எல்லாப் படங்களையும் போலவே இதிலும் கலக்கியிருந்தாலும், ஆப்பிரிக்க-அமெரிக்கர் என்றால் இப்படித்தான் என்னும் பிம்பத்தை சார்ந்து வந்த படத்திற்கே கௌரவித்திருக்கிறார்கள்!!!
 
Traffic எசகுபிசகாக என் தலையில் விலைக்கு கட்டப்பட்ட DVD.வேண்டா வெறுப்புடன் பார்க்க ஆரம்பித்து மிகவும் பிடித்து போன படம். சொடன்பர்க்கின் நிறக்கலவை மிகவும் பிரச்சித்தியல்லவா. காட்சிக்கு காட்சி ஒரு வித நிறக்கலவையுடன் இருக்கும் அல்லவா? எடுத்துக்காட்டாக மெக்ஸிகோ பாலைவன காட்சி ஆரஞ்சு கலர் சேடுடன் எடுத்துயிருப்பார்கள். அந்த படம் பார்த்து ரொம்ப நாளாகிவிட்டது.

டென்சில் வாஷிங்டன் என்றால் என் நினைவில் நிற்கும் படம் மால்கம் X. 1992 ஆம் ஆண்டில் சிறந்த நடிகர் அக்டாமிக் விருது வாங்கினார் அந்த படத்தில். கறுப்பர்களின் வழிக்காட்டியான மால்கம் X -ன் வாழ்க்கை வரலாற்றை ஸ்பைக் லீ பொறி பறக்க எடுத்திருப்பார். மிக மிக அருமையான படம்.

//// எரின் ப்ரோக்கவிச் (ஜூலியா ராபர்ட்ஸ்)//

மாண்டீக்கு இருக்கும் அதே கேள்வி தான் எனக்கும். வழக்கமான அதே அலப்பரை நடிப்பு தான் அங்கேயும்.

பிலடெல்பியா, ஆக எனக்கு பிடித்த டாம் ஹாங்ஸ் நடித்தது. அந்த கோர்ட் காட்சிகளில் கலக்கியிருப்பார்கள். டாம் ஹாங்ஸ் என்றவுடன் எனக்கு ஞாபகத்திற்கு வரும் இன்னொரு படம் 'க்ரீன் மைல்ஸ்'
 
அன்பு விஜய்,

ஏதோ தோணும்போது எழுதுறேன்... என்று சொன்னாலும் நிறைய உழைப்பு தெரிகிறது - குறிப்பாக இந்த நட்சத்திர வாரத்தில். ஆனால், இதெல்லாம் இந்த ஒருவார/மாத தேடலில் அல்ல என்று தெரியும். அதனால் உங்கள் ஆர்வம் கண்டு வியந்து - வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறேன்(வழக்கம்போல) தொடர்ந்து கலக்குங்க...

இதுவரை நீங்கள், நாராயணன் போன்றவர்கள் அவ்வப்போது உலகத்திரைப்படம் என்று என்னுடைய வயித்தக்கலக்கிக் கொண்டிருப்பீர்கள். உங்கள் நட்சத்திரவாரம் வந்தாலும் வந்தது - வயிற்றோட்டம் நிற்கவில்லை:)

அடப்பாவிங்களா... அப்போ நான் 30 வருடமா பார்த்ததில் ஒன்றுகூட நல்ல/உலகத் திரைப்பட வரிசையில் வராதா என்று மனதுள் புலம்பிக்கொண்டிருந்தேன்.

ஆனால் உங்களின்:
இந்திய சினிமாக்களை பற்றியே இதே தடிமனில் இன்னொரு புத்தகத்தை போடலாம்.
என்று படித்தபிறகுதான்... ஓஹோ எஸ்.ரா போலவே நீங்களும் இந்திய சினிமா அல்லாது வேறுதிரைப்படங்களைப் பற்றி கருத்துக்கள் பகிர்ந்துகொள்கின்றீர்கள் என்று சமதானம் செய்துகொண்டேன்.

நடக்கட்டும், தொடர்ந்து கலக்குங்க:)
 
//டென்சில் வாஷிங்டன் என்றால் என் நினைவில் நிற்கும் படம் மால்கம் X. 1992 ஆம் ஆண்டில் சிறந்த நடிகர் அக்டாமிக் விருது வாங்கினார் அந்த படத்தில். கறுப்பர்களின் வழிக்காட்டியான மால்கம் X -ன் வாழ்க்கை வரலாற்றை ஸ்பைக் லீ பொறி பறக்க எடுத்திருப்பார்.//

இதே மால்கம்X பற்றி தமிழில் இரவிக்குமார் ஒரு அருமையான புத்தகம் எழுதியிருப்பார். சிறிய, ஆனால் விஷயமுள்ள புத்தகம்.

// எரின் ப்ரோக்கவிச் (ஜூலியா ராபர்ட்ஸ்)//

யோவ் அந்த படத்துக்கான ஆஸ்கர் கதைக்கு கொடுத்திருக்கணும். டைட்டா டீசர்ட் போட்டுவந்தவங்களுக்கு கொடுத்ததுல, மாண்டீ டிரிட்மெண்ட் தான் ஆஸ்கர் குழுவினருக்கும்.

அதெல்லாம் சரி, யாராவது "ஸீ இன்சைடு" பார்த்துட்டிங்களா?
 
வாங்க சாரிநிவேதிதா.யாரு? நீங்க வலைப்பதிவுக்கு புதுசா?

//இவ்வளவு பெரிதாய் ஒரு நீள்பதிவு வெறும் திரைப்படம் பற்றி, வருத்தமே மேலிடுகிறது. சேகுவாரா, belly-dance, கம்யூனிசம், sex-workers இதுபற்றியெல்லாம் blog-ல் எப்போது படிக்க கிடைக்குமோ? //

நீங்க வருத்தபடுறதுல கொஞ்சம் கூட நியாயமே இல்லை.ப்ளாக் என்பது ஒரு தனிநபரால் அவர் கருத்துக்களை முன் வைத்து மற்றவர்கள் கருத்துக்களை பெறுவதற்கே என்பது என் கருத்து. ப்ளாக்கர்கள் அவர்களுக்கு தெரிஞ்சதை தான் ப்ளாக்குகளில் எழுத முடியுமே தவிர பத்திரிக்கை நோக்கில் சேகுவாரா, belly-dance, கம்யூனிசம், sex-workers -களை எல்லாம் ஒரே ப்ளாக்கர் எழுதும் அளவுக்கு அந்த ப்ளாக்கர் சகலகலா வல்லவராக இருக்க வேண்டிய அவசியம் இல்லையே.

நீங்கள் சொல்லும் கருத்துக்களையும் தமிழ் ப்ளாக்கர் முன் வைக்க மறப்பதில்லை. தேவையானால் http://www.thamizmanam.com சென்று பாருங்கள். பலதரப்பட்ட அருமையான கருத்துக்களையும்/பார்வைகளையும் படிக்கலாம்.

ஒரு கேள்வி... சினிமாவை முன் வைத்து எழுதுவது என்ன அவ்வளவு பெரிய குற்றமா? என் சட்டியில் இருப்பது என் ப்ளாக்கர் அகப்பையில் வரும். வீணாக மற்றதை தேடி ஏமாற வேண்டாம். என் வாசிப்பும் அனுபவமும் விரிவடையும் போது நீங்கள் கேட்டதும் என்னுடைய பதிவுகளில் வரலாம். அது வரை மற்ற நண்பர்களின் பதிவுகளையும் படியுங்கள்.
 
இது மாண்டீயின் கேள்விகளுக்கு....

/*******************
/தி பேலட் ஆப் நாராயாமா,ஷோகோ இமாமுரா,1983,ஜப்பான், the ballot of narayama//
அட கடவுளே, நாராயாமா போட்ட ஓட்டு என்ற ரீதியில் ஆகிவிட்டது இங்கே; அதன் சரியான பெயர் Ballad of Narayama (ஷோஹீ இமாமுரா - இயக்குனர்)
**********************/

புத்தகத்தில் உள்ள பிழை

/************************
//தி பியானோ,ஜான் கேப்பிரியல்,1993,ஆஸ்திரேலியா, the piano//
இயக்குனர் பெயர் ஜேன் காம்ப்பியன் (Jane Campion) - பெண்.
***************************/

தட்டச்சு பிழை. புத்தகத்தில் ஜான் கேப்பியன் என்றிருக்கிறது.

/**********************
//சிரானோ டி பெஜா,ழான் பௌல் ரஃபேனு,1990,பிரான்ஸ்,Cerano De Berzac//
அது Cyrano de Bergerac.
*************************/
புத்தக்கத்தில் உள்ள பிழை

/****************************
//ஆந்த்ரே ரூபலோவ்,ஆந்த்ரே தார்கோவெஸ்கி,1969,ரஷ்யா,Andrei rublyov//
அது Andrei Rubelev - இதைப்பற்றி நான் விரைவில் எழுதுவேன்.

*****************************/
புத்தகத்தில் உள்ள பிழை

/****************************
//தி கில்லிங் பீல்ட்ஸ்,ரொனால்டு ஜாப்ரி,1984,இங்கிலாந்து,The killing fields//
இயக்குனர் பெயர் ரோலண்ட் ஜாஃப் - Roland Joffe.
**************************/

ரொனால்டு ஜாப்ரி என்று தான் புத்தகத்தில் உள்ளது. பிழை


/**************************
//தி பேஷன் ஆப் ஜோன் ஆப் ஆர்க்,கார்ல் தியோடர்டிரையர்,1928,பிரான்ஸ்,The fashion of jon of arc//
The Passion of Joan of Arc - Carl Dryer
*******************/

தட்டச்சு பிழை
 
>>The fashion of jon of arc //
The Passion of Joan of Arc

ப்ரூஃப் மறந்த புத்தக உலகில் இதெல்லாம் சகஜமப்பு :P)
 

உங்கள் கருத்துக்களை இட


<< திரும்ப முன் பக்கத்துக்கு போ

This page is powered by Blogger. Isn't yours? தமிழ் அசைபட இணையச் செயலி தமிழ் விக்கிபீடியா

-->