<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d9439067\x26blogName\x3d%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81!!!!!\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLACK\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://halwacity.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://halwacity.blogspot.com/\x26vt\x3d-1566162084738285005', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe", messageHandlersFilter: gapi.iframes.CROSS_ORIGIN_IFRAMES_FILTER, messageHandlers: { 'blogger-ping': function() {} } }); } }); </script> <!-- Remove below comment line to show the content. Added for meta redirection --> <!--

போட்டுத் தாக்கு!!!!!

எள்ளோடு எலி புழுக்கையும் எண்ணைக்காக காயுதாம்

-ல் போட்டுத் தாக்கியது

ஹிரோஷிமா என் அன்பே

Difficulty in reading this post due to font issues? Click here for a PDF copy. Works best if you right-click the link and select 'Save target as...'
இந்த பதிவை போட்டுத் தாக்கியவர் : Vijayakumar
"இந்த பூமியில் துன்பங்களுடனும், துன்பங்களின் வழியாகவும் தான் காதலிக்க முடியும். இல்லாவிட்டால் காதலிக்க முடியாது. காதலிப்பதற்காக துன்பப்பட விரும்புகிறேன்"
- 'நகைப்புக்குரிய மனிதனின் கனவு' என்ற கதையில் தஸ்தாவெயஸ்கி

நேற்றைய பதிவில் ஹிரோஷிமா கொடுமைகளை முன்னோட்டோமாக சொன்னது 'Hiroshima mon amour' (ஹிரோஷிமா என் அன்பே) என்ற பிரெஞ்சு படத்தை பற்றி அலசுவதற்காகவே. ஹிரோஷிமா மொன் அமுவா படத்தை பற்றிய சிறுகுறிப்பு

Image hosted by PicsPlace.toபடம் : ஹிரோஷிமா மோன் அமுவா
இயக்குநர் : அலென் ருஷ்னே (Alain Resnais)
கதை : மார்கரெட் தூரா
மொழி : பிரெஞ்சு
ஆண்டு : 1959
பெற்ற விருதுகள் : கேன்ஸ் அவார்ட், Internation film critics award
நடிகர்கள் : இமானுல் ரீவா(நாயகி), இஜி ஒக்காடா(நாயகன்)

சில வரிகளில் கதை சொல்ல வேண்டுமானால் ஒரு பிரெஞ்சு நடிகை, ஒரு ஜப்பானிய ஆடவனை ஹிரோஷிமாவில் சந்திக்கிறாள். இருவரும் தங்களின் கசப்பான முந்தைய வாழ்க்கையின் நினைவுகள் வழியாக சென்று தங்களை நிகழ்காலத்தில் அடையாளம் காண்கிறார்கள் என்பதை இயக்குனர் அலென் ரூஷ்னே நிகழ்கால காட்சிகளையும், புத்திசாலிதனமான ஃபிளாஷ்பேக்களை கலந்து ஒரு காவியத்தை படைத்திருக்கிறார்.

1959, 1960 களில் உலக சினிமா ஒரு முக்கிய திருப்புமுனையை சந்தித்தது. முக்கியமாக பிரெஞ்சு சினிமாவில் 'தி 400 ப்ளோஸ்' தந்த பிரான்ஸ்வா த்ரூஃபோவும், அலென் ருஷ்னேயும் பிரெஞ்சு புதிய அலை சினிமா உருவாதற்கு காரணமாக இருந்தவர்கள். 1952-லிருந்து இன்று வரையிலான பிரெஞ்சு சினிமாவை எடுத்துக்கொண்டால் 'ஹிரோஷிமா மோன் அமுவா' முதல் 10 இடத்துக்குள் இருக்கிறது. இந்த படத்தின் வெற்றிக்கு இயக்குநரின் படைப்பு திறனும், மார்கரெட் தூராவின் மனோதத்துவத்தை சார்ந்த கதையம்சமும் தான்.

போருக்கு பின் ஹிரோஷிமாவில் நிகழ்ந்த கொடுமையினை காதலின் வேதனைக்கு குறியீடாக்குகிறார் இயக்குநர். முதல் காட்சியில் படு க்ளோசப்பில் இரண்டு உடல்களின் தோள்கள் தழுவி கிடக்கும் காட்சி. அவர்கள் உடலுறவில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்பதை சொல்லும் அதே வேளையில் அந்த உடல்களின் மீது சாம்பல் மழையாக பொழிகிறது. கொஞ்ச நேரத்தில் ரேடியோ ஆக்டிவ் தனிமங்களாக அது மிளிர்கிறது. அதே இரு உடல்கள் இன்னும் முயங்கிக் கிடக்கின்றன. அங்கு ஆக்ரோஷமான செயல்கள் இல்லாமல் மென்மையான தழுவலை சொல்ல தோளும் கையும் மட்டுமே இயக்கத்தில் இருக்கின்றன. கொஞ்ச நேரத்தில் ரேடியோ அக்டிவ் தனிமங்களின் மினுமினுப்பு மறைந்து உடல்களின் மேல் வியர்வைத் துளிகள் பூத்து இருக்கின்றன.

அந்த இரண்டு உடல்களும் பேச ஆரம்பிக்கின்றன. அதில் ஆண் குரல் பெண்ணிடம் சொல்கிறது "நீ ஹிரோஷிமாவில் எதையும் பார்க்கவில்லை"? இந்த இடத்தில் இருவரும் ஹிரோஷிமாவில் இருக்கின்றனர் என்பதை இயக்குநர் உணர்த்துகிறார். அந்த பெண் பேச ஆரம்பிக்கிறாள் "ஹிரோஷிமா ஆஸ்பத்திரியை பார்த்தேன். ஹிரோஷிமா மியூசியத்திற்கு மூன்று முறை சென்றேன். ஹிரோஷிமாவில் எல்லாத்தையும் பார்த்து விட்டேன்" என்ற அவள் விவரிக்க விவரிக்க அந்த ஆணும் "நீ ஹிரோஷிமாவில் எதுவும் பார்க்கவில்லை" என்று சொல்லிக் கொண்டே வர, இயக்குநர் ஹிரோஷிமாவில் அணுகுண்டு வீசியபோது நடந்த கொடுமைகளை ஒரு விவாரண படம் போல காட்டிக் கொண்டே போகிறார். நேற்றைய பதிவில் நான் அணுவீச்சின் கொடுமையை விளக்கியது போக, அந்த படத்தில் வந்திருந்த காட்சியை எடிட் செய்து போட்டிருந்தேன். அந்த காட்சியை காண இங்கே அல்லது இங்கே சொடுக்கி 9 MB அளவுள்ள கோப்பை பெற்றுக் கொள்ளவும்.

காலையில் எழுந்திருந்த நாயகி ஹோட்டலின் மேல் மாடியிலிருந்து ஹிரோஷிமாவை பார்த்தபடி தேநீர் பருகுகிறாள். அறைக்கு திரும்பி வந்தவள் ஜப்பானிய நாயகன் படுத்திருக்கும் காட்சி தீடிரென இறந்து கிடக்கும் ஒரு ராணுவ வீரனை அவளுக்கு நினைவுப் படுத்துகிறது. பிறகு கேஷூவலாக நகரும் காட்சியின் வழியாக தான் தெரிகிறது 'அந்த பிரெஞ்சு பெண் நடிகையும், ஜப்பானிய கட்டிட கலை நிபுணரும் முந்தைய நாள் இரவு ஒரு பாரில் சந்தித்து, பிடித்தவுடன் படுக்கையில் இணைந்திருக்கிறார்கள். நாயகன் சொல்கிறான் ஹிரோஷிமா நிகழ்வின் போது தான் தூரதேசத்துக்கு போயிருந்ததால் தான் தப்பித்து குடும்பத்தை இழந்த சோகத்தை சொல்கிறான். அந்த பிரெஞ்சு நடிகை 'அமைதி' என்ற படத்தில் நடிக்க ஹிரோஷிமா வந்ததாகவும், மறுநாள் பாரீஸ் புறப்படுவதாகவும் சொல்லி விட்டு அவனை பிரிவதிலேயே குறியாக இருக்கிறாள்.

ஜப்பானிய நாயகன் ஏறக்குறைய அவள் மீது பைத்தியமாகி அவளின் பின்புலத்தை தெரிந்துக் கொள்ள விழைகிறான். அவளின் பின்புலத்தை அறிந்துக் கொள்ள ஏறக்குறைய மனோதத்துவ நிபுணரின் பாங்குடன் வெகு இயல்பான நடவடிக்கைகளுடன் அந்த பெண்ணின் ஆழ்மனதில் சென்று ஒவ்வொன்றாக சூட்சுமாக வெளிக் கொண்டு வருவதே இந்த படத்தின் பலம்.

பிரெஞ்சு பெண் எங்கு சென்றாலும் நாயகன் தொடர்ந்து சென்று கடந்த கால வாழ்க்கையை ரொம்ப இயல்பாக கேட்கிறான். கொஞ்சம் கொஞ்சமாக அந்த பெண்ணின் மனதிலிருந்து அவளுடைய முதல் காதலின் காயத்திலிருந்து இரத்தம் கசிய ஆரம்பிக்கிறது. "காதல் வாழ்நாள் மிகக் குறுகியது" என்று ஆரம்பிக்கிறாள். மெல்ல மெல்ல நாயகன் அவளின் சொந்த ஊரைப் பற்றி கேட்க, பாரீஸ் பக்கத்தில் உள்ள நவேர் என்பது தான் தன் சொந்த ஊர் என்று மகிழ்ச்சியுடன் அவள் சொல்வதுடன் உரையாடல் ஆரம்பிக்கிறது. ஜம்ப் சீன்ஸ் எனப்படும் முறையில் காட்சிகள் நவேருக்கும், ஹிரோஷிமாவின் நிகழ்காலத்துக்கும் முன்னும் பின்னும் நமக்கு குழப்பம் ஏற்படாத வகையில் போய் வருகிறது. நாயகன் ஹிரோஷிமாவின் நிகழ்வின் போது நாயகி எங்கிருந்ததாக வினவுகிறான்.

ஏறக்குறைய மனதின் அடியில் புதைந்து போன நவேரின் நினைவலைகளில் முழ்கி மெதுவாக பேச ஆரம்பிக்கிறாள். இரண்டாம் உலகப்போர் முடிவின் காலகட்டத்தில் அவளது ஊரில் உள்ள ஜெர்மானிய போர் வீரன் ஒருவன் மீது காதல் கொள்கிறாள். மெல்ல அவளது முதல் காதலின் ஆழத்தை விவரிக்கிறாள். சட்டென்று எதோ ஞாபகம் வந்தவளாக ஜப்பானிய நாயகனிடமிருந்து கிளம்ப எத்தனிக்கிறாள்.

அப்போது ஜப்பானிய நாயகன் அந்த பிரெஞ்சு நடிகையிடம் தன்னை அந்த ஜெர்மானிய வீரனின் இடத்தில் வைத்து "நான் இல்லாத போது உனக்கு என்ன நிகழ்ந்தது?" என்று கேட்கிறான். ஏற்கனவே ஹிரோஷிமாவும், ஜப்பானிய நாயகனும் அவளது முதல் காதல் சூழ்நிலையை உணர்த்த ஆரம்பித்ததும் திரும்ப பேசுகிறாள். நவேரில் அவள் பைத்தியமாகி சின்ன அறைக்குள் அடைப்பட்டு கிடந்த காட்சியை விளக்குகிறாள். சுயநினைவின்றி சுவற்றை பிராண்டுவதும், கை நகங்களில் வழியும் இரத்ததை நக்குவதும் போன்ற காட்சிகளால் அவள் சுயநினைவின்றி அலைந்த போது அனுபவித்த கொடுமையை ஹிரோஷிமாவின் நிகழ்வுக்கு பிறகு நடந்த கொடுமையை காட்சிகளின்றி நமக்கு உணர வைப்பார் இயக்குநர்.

ஜப்பானிய நாயகனின் கேள்விகளால் இன்னும் இன்னும் அழமாக உள்மனதில் இறங்கி கொண்டே ஜெர்மானிய வீரனான அவள் காதலனுக்கு நிகழ்ந்ததை சொல்லுவாள். அவள் காதலனுடன் இணைய ஓடி வரும் போது ஜெர்மானிய வீரன் யாராலேயோ சுடப்படுவான். அவள் கண் முன்னமயே துடித்துக் கொண்டிருப்பான். அவ்வளவு சீக்கிரம் அவன் சாகவில்லை. கடைசியில் அவன் சாகும் போது அவளும் செத்துப் போனதாக உணருகிறாள். அந்த காட்சியில் தான் நமக்கு புரியும் ஏன் கதாநாயகி சுயநினைவிழந்து பைத்தியமாகிறாள் என்று.

காலம் செல்ல செல்ல அவனுடைய நினைவும் மறந்து போக மெதுவாக சுயநினைவுக்கு வருகிறாள். அவளது பெற்றோர்கள் அவளை பாரீசுக்கு அனுப்புகிறார்கள். அப்போது தான் ஹிரோஷிமாவில் குண்டு விழுந்ததாக பத்திரிக்கையில் படித்ததாக கூறுகிறாள். மீண்டு வந்த அவளுக்கு பெற்றோர்கள் திருமணம் செய்து வைக்க, நடிகையும் ஆகிறாள். இந்த எமோஷனல் காட்சிகளை மிக தத்ரூபமாக ரீவா என்ற நாயகி நடித்திருப்பாள்.

14 வருடங்களுக்கு பிறகு அவளது முதல் காதல் காயத்தை இதுவரை கணவனிடம் கூட சொல்லாமல் ஜப்பானிய நாயகனிடம் சொன்னதும் காயம்பட்ட மனது ஆறுகிறது. அந்த ஜப்பானிய நாயகனும் திருமணம் ஆனவன் தான். இருந்தாலும் பிரிந்து செல்ல நினைக்கும் அந்த பிரெஞ்சு நடிகையை ஹிரோஷிமாவில் இருக்குமாறு வேண்டுகிறான். கடைசி காட்சிகள் அவளின் முதல் காதல் முழுவதுமாக மறைந்துக் கொண்டிருக்க, ஹிரோஷிமாவும் ஜப்பானிய நாயகனும் அந்த முதல் காதலை முற்றிலுமாக நிரப்பியிருப்பதை உணருகிறாள். அவள் மனதில் நிகழும் மாறுதல்களை நல்ல காட்சிகளுடன் விளக்கியதோடு படம் முடிவடைகிறது.

இந்த படத்தில் அமைக்கப்பட்டிருக்கும் காட்சிகளும், இயக்குநரின் திறனும் இன்றளவும் விவாதிக்கப்பட்டும், ஒரு திரைப்பாடமாக ஏற்று கொள்ளப்பட்டும் வருகிறது. இந்த படத்தில் ஆரம்பத்தில் ஒரு விவரணமாக சொல்லப்படும் ஹிரோஷிமா காட்சிகள் ஹிரோஷிமா மியூசியத்தில் இருந்த வீடியோ காட்சிகள் என்று கூறுகின்றனர். ஆதாரம் இல்லை.

இந்த படத்தை பற்றி மேலும் தெரிந்துக் கொள்ள இங்கே சொடுக்கவும்.

இந்த பதிவின் வாக்கு எண்ணிக்கை: . பக்கத்திலுள்ள ஸ்டாரை மவுசால் போட்டுத் தாக்கினால் எனக்கு மவுசு ஏறும். நன்றி:-)

உங்கள் கருத்துக்களை இட

திருப்பி தாக்கியவர்கள்:
One word - Brilliant. Hats Off to you, Vijay
 
விஜய்,
எப்படி உங்களால எப்படி இவ்வளவு தகவல் சேகரித்து எழுத முடியுது.
உங்களுடய கடின உழைப்பு தெரிகின்றது. வாழ்துக்கள்.
 
விஜய்
நல்ல ஓர் அருமையான படத்தை பார்த்தது போல இருந்தது உங்கள் விமர்சனம்.
நேரம் கிடைக்கும் பொழுது ENGLISH PATIENT என்ற படம் பாருங்கள் சற்று இந்த சாயல்
இருக்கலாம்.
நன்றி
மயிலாடுதுறை சிவா...
 
நல்ல பதிவு விஜய். ஆலன் ரெனேயின் மற்ற இரண்டு அற்புதமான படைப்புக்கள் - நாஜி யூதப் படுகொலைகளை விவரிக்கும் ஆவணப்படமான Night and fog, மற்றும் அலென் ராபெ-க்ரியே (Alain Robbe-Grillet) மற்றும், போர்ஹேஸின் துணையெழுத்தாளரான அடால்ஃபோ பியோ-கஸாரெஸ் (Adolfo Bioy-Casares) இருவரும் இணைந்து திரைக்கதை எழுதி ரெனே இயக்கிய Last year in Marienbad. இதே சங்கிலித்தொடரை முன்பு பொடிச்சியின் ஒரு பதிவில் குறிப்பிட்டிருந்தேன். Last year in Marienbad குறித்தும் எழுதவேண்டுமென்று நினைத்து, நேரம் வாய்க்காமலே போகிறது. அதைக்குறித்து எழுதினால் ராபெ-க்ரியே குறித்தும் எழுதவேண்டும், அவரைமாதிரி ஒரு unconventional எழுத்தாளரைக்குறித்து எழுதவேண்டுமெனில் சில புத்தகங்களையாவது திரும்பப் படிக்கவேண்டும் என்ற சோம்பேறித்தனத்தினாலேயே தள்ளிப்போய்க்கொண்டிருக்கிறது. Hiroshima mon amour டிவிடியில் பார்த்திருந்தீர்களானால், அதையடுத்து வரும் ரெனேயின் சுவாரஸ்யமான பேட்டி குறித்தும் எழுதியிருக்கலாம்!! மற்றப்படி, இந்த வாரம் நிஜமாகவே போட்டுத் தாக்குகிறீர்கள் - தொடரட்டும்!
 
அன்புள்ள விஜய்,

இந்த வார நட்சத்திரமா இருந்துக்கிட்டு, நீங்க 'ஜொலிக்கிற ஜொலிப்பு'
கண்ணைக் கூசுது!!

உங்க ஒவ்வொரு பதிவிலும் இருக்கற 'அசாத்திய உழைப்பு' கண்கூடாத் தெரியுது!

இவ்வளவு மெனக்கெட்டு என்னை போன்றவர்களால் செய்யவே முடியாது.

நல்ல நல்ல பதிவுகளாவே போட்டுக்கிட்டு வர்றீங்க. ஜமாய்ங்க!!!!

நல்லா இருங்க. வாழ்த்துக்கள்!!!
என்றும் அன்புடன்,
துளசி.
 
நன்றி நரேன், சரவணன், சிவா, மாண்டீ & துளசியக்கா.

//எப்படி உங்களால எப்படி இவ்வளவு தகவல் சேகரித்து எழுத முடியுது.//
//உங்க ஒவ்வொரு பதிவிலும் இருக்கற 'அசாத்திய உழைப்பு' கண்கூடாத் தெரியுது!//

எல்லாம் ஒரு ஆர்வ கோளறு தான். ஆனால் ரொம்ப ஒன்னும் மெனக்கெடவில்லை.

சிவா,
//ENGLISH PATIENT என்ற படம் பாருங்கள் //
இந்த படத்தை இலங்கையை பூர்வீகமாக கொண்ட ஒரு இயக்குநர் இயக்குது தானே. அதுவும் ஒரு நாவலை தழுவி எடுக்கப்பட்டது தானே?

மாண்டீ,

//Hiroshima mon amour டிவிடியில் பார்த்திருந்தீர்களானால், அதையடுத்து வரும் ரெனேயின் சுவாரஸ்யமான பேட்டி குறித்தும் எழுதியிருக்கலாம்!! //

ஆமாயில்லை. எனக்கு அந்த ஐடியாவே வரலே.

ரெனெயின் மற்ற படைப்புகளின் அறிமுகத்துக்கு நன்றி. அந்த படைப்புகளையும் தேடிப் பார்க்கிறேன்./
 
ஜப்பானிய பிரதமர் இந்தியா வந்திருக்கும் சமயத்தில், ஹிரோஷிமா பற்றி நட்சத்திரப் பதிவுகள்...Coincidence or by design?!
திடீரென ஒரு எண்ணம்...இது போன்ற உலக விஷயங்கள் ஏன் நம் இந்திய தொலைக்காட்சிகளில் இடம் பெறுவதே இல்லை...?
 
It is only by coincident jeeva

//திடீரென ஒரு எண்ணம்...இது போன்ற உலக விஷயங்கள் ஏன் நம் இந்திய தொலைக்காட்சிகளில் இடம் பெறுவதே இல்லை...? //

நியாயமான கேள்வி. அது போல் தமிழ் சினிமாக்களில் ஏன் போர்களை அடிப்படையாக வைத்து யாரும் படம் எடுப்பதில்லை. வழக்கமான பதில் 'சந்தைப்படுத்தமுடியாது' என்பது தானாகத் தான் இருக்கும்
 

உங்கள் கருத்துக்களை இட


<< திரும்ப முன் பக்கத்துக்கு போ

This page is powered by Blogger. Isn't yours? தமிழ் அசைபட இணையச் செயலி தமிழ் விக்கிபீடியா

-->