<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d9439067\x26blogName\x3d%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81!!!!!\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLACK\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://halwacity.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://halwacity.blogspot.com/\x26vt\x3d-1566162084738285005', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script> <!-- Remove below comment line to show the content. Added for meta redirection --> <!--

போட்டுத் தாக்கு!!!!!

எள்ளோடு எலி புழுக்கையும் எண்ணைக்காக காயுதாம்

-ல் போட்டுத் தாக்கியது

மெத்த படித்தவர்கள்

Difficulty in reading this post due to font issues? Click here for a PDF copy. Works best if you right-click the link and select 'Save target as...'
இந்த பதிவை போட்டுத் தாக்கியவர் : Vijayakumar
இன்று உங்களுக்கு மெத்த படித்தவர்கள் பற்றிய இரண்டு கதைகள் சொல்லப் போகிறேன்.

அந்த காட்டில் நிறைய காட்டுமிராண்டிகள் வசித்து வந்தனர். அவர்கள் நரமாமிசம் சாப்பிடும் காட்டுமிராண்டிகள்.காட்டுமிராண்டிகளை நாட்டு மிராண்டிகளாக்கியே தீருவேன் என ஒரு தொண்டன் சபதம் எடுத்து எப்படியோ காட்டுமிராண்டிகளுக்கு நண்பன் ஆகிவிட்டான். அவர்களுக்கு கல்வி அறிவு புகட்டினால் நரமாமிசம் சாப்பிட மாட்டார்கள் என்று எப்படியோ சில இளைஞர்களை காம்பிரமைஸ் செய்து கல்வி பெறுவதற்கு அனுப்பினான் அந்த தொண்டன்.

காட்டுமிராண்டிகளும் கல்வி அறிவுப் பெற்று நாகரீக மனிதர்களாக காட்டுக்கு திரும்பினர். வயதான காட்டுமிராண்டிகளுக்கு தன் புள்ளையாண்டாங்கள் திரும்ப வந்துவிட்டனர் என்று ஒரே சந்தோசம். சில வருடங்கள் கழித்து அந்த தொண்டன் காட்டுபக்கம் போய் படிப்பறிவு பெற்ற Ex-காட்டுமிராண்டிகளை காண வந்தான். அவர்கள் திரும்பவும் நரமாமிசம் சாப்பிட்டுக்கொண்டிருந்தனர்.

தொண்டன் கேட்டான் "ஏன்டா இந்த எழவை தின்னக் கூடாதுன்னு தானே படிக்க அனுப்பிச்சேன். இன்னும் என்னடா இது?"

படித்த காட்டுமிராண்டிகள் சொன்னார்கள் "ஆமாம் முன்னாடி நரமாமிசத்தை கையால் சாப்பிட்டோம். இப்போ ரொம்ப டீசண்டா முள்கரண்டி, ஸ்பூன்ல சாப்பிடுறோம்ல"

"@@#%&**()"

---------------------------------------------------------------------------

நகரத்தில் படித்துக் கொண்டிருந்த ஒரு விவசாயியின் மகன் தன் தந்தையைப் பார்க்க கிராமத்திற்கு வந்திருந்தான்.

"மவனே இன்னிக்கு நான் வயல்ல புல் அறுக்கப் போறேன். புல்லை அறுக்க நீயும் ஒரு வறண்டியை எடுத்துட்டு வாடா. சேர்ந்து புல்லு அறுப்போம்!" என்று தகப்பனார் பையனிடம் சொன்னார்.

ஆனால் பையனோ விவசாய வேலை செய்வதையே விரும்பவில்லை. "நான் மெத்த படித்தவன். இந்த விவசாயிங்க பேசுறதே எனக்கு புரியிறதில்லை.மறந்தும் போய்விட்டது. ஆமா வறண்டி என்றால் என்ன?" என்று திரும்ப அப்பாவிடமே கேட்டான்.

"இவனை திருத்தவே முடியாது" என்று தந்தை வேலையை தொடர்ந்தார்.

அப்படியே முற்றத்திற்கு போன பையன் கீழே கிடந்த ஒரு வறண்டியை மிதிக்க, அதன் மறுமுனை எழும்பி முகத்தில் உள்ள மூக்கில் "னொங்கென்று" இடித்தது.அப்போது தான் வறண்டி என்றால் என்ன என்று ஞாபகத்துக்கு வந்தது. அவன் மூக்கை தடவியப்படியே "இந்த வறண்டியை எந்த முட்டாள் தரையில் போட்டு வச்சிருக்கோ?" என்றான்.

(இது லியோ டால்ஸ்டாய் சொன்ன கதைன்னு யாரோ சொன்னாங்க)
----------------------------------------------------------------------

ஒரு ஜோக்கு

மனைவியை கண்டு பயந்து வாழ்க்கையே வெறுத்து அவன் குடிப்பழக்கத்தை மேற்கொண்டான். ஒரு நாள் நன்றாக குடித்து விட்டு வீட்டுக்கு திரும்பியவன் குடிமயக்கத்தில் முறைத்து கொண்டு நின்ற மனைவியின் இரண்டு உருவங்களைக் கண்டான். அவ்வளவு தான் அன்றிலிருந்து குடிப்பதையே நிறுத்திவிட்டான்.

---------------------

என்னாது இது? (வடிவேலு ஸ்டைலில்)
சும்ம்ம்ம்ம்மா.... (அதே வடிவேலு ஸ்டைலில்)

வேலை ஜாஸ்தியிருந்ததால் ஒரு ஒப்பேத்தல் பதிவு.

இந்த பதிவின் வாக்கு எண்ணிக்கை: . பக்கத்திலுள்ள ஸ்டாரை மவுசால் போட்டுத் தாக்கினால் எனக்கு மவுசு ஏறும். நன்றி:-)

உங்கள் கருத்துக்களை இட

திருப்பி தாக்கியவர்கள்:
நர மாமிசக்காரங்களைப் பற்றி நான் படித்தது.
அவர்களுக்கு படிப்பு சொல்லிக் கொடுக்க ஒரு வெள்ளைக்கார பாதிரியார் சென்று அவர்களுடன் தங்கியிருக்கிறார். திடீரென்று ஒரு பிரச்சினை. அதாவது அவர்கள் தலைவனுக்கு ஒரு வெள்ளிக்காரக் குழந்தை பிறந்துவிடுகிறது. காரணம் நீங்கள் நினைப்பதேதான். தலைவன் கோபத்துடன் பாதிரியாரைப் பார்க்க வருகிறான். பயந்து போன அவர் உளற ஆரம்பிக்கிறார். "இதோ பாரப்பா, குழந்தையின் நிறம் என்பது கடவுள் செயல். உன்னுடைய ஆட்டுக்கு எல்லாமே வெள்ளைக் குட்டிகள்தான். திடீரென்று இம்முறை கறுப்பு குட்டிகள் பிறக்கவில்லையா?" என்று கேட்கிறார். தலைவன் சுற்றுமுற்றும் பார்த்து விட்டு கூறுவான்: "சரி சரி, குழந்தையைப் பற்றி நான் கேட்கவில்லை, நீயும் குட்டிகளை மறந்து விடு".
அன்புடன்,
டோண்டு ராகவன்
 
மற்றுமொரு கதையை பகிர்ந்துக் கொண்டதற்கு நன்றி டோண்டு அய்யா.
 
i use abilon as my desktop news aggregator .i have problems reading tamil and hindi blogs(simply no english blogs) any solutions please.
 
ஒப்பேத்தர பதிவே இப்படின்னா ஒழுங்கா எழுதுனதெல்லாம் எப்படி சூப்பரா இருக்கும்! // இதுவும் வின்னர் வடிவேலு ஸ்டைலு தான்//

இருந்தாலும் அந்த குடிகார கணவன் ஜோக் கொஞ்சம் ஓவர்!
 
Arvind, You may need to install tamil fonts to see tamil letters. Could you give me more details?

இளவஞ்சி, நன்றி தலீவா.
 

உங்கள் கருத்துக்களை இட


<< திரும்ப முன் பக்கத்துக்கு போ

This page is powered by Blogger. Isn't yours? தமிழ் அசைபட இணையச் செயலி தமிழ் விக்கிபீடியா

-->