<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar/9439067?origin\x3dhttp://halwacity.blogspot.com', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script> <!-- Remove below comment line to show the content. Added for meta redirection --> <!--

போட்டுத் தாக்கு!!!!!

எள்ளோடு எலி புழுக்கையும் எண்ணைக்காக காயுதாம்

திங்கள், ஏப்ரல் 04, 2005 -ல் போட்டுத் தாக்கியது

ஆபிஸில் ஃபிலிம் காண்பிப்பது எப்படி?

Difficulty in reading this post due to font issues? Click here for a PDF copy. Works best if you right-click the link and select 'Save target as...'
இந்த பதிவை போட்டுத் தாக்கியவர் : Vijayakumar
கவர்ன்மெண்ட் ஆபிஸில் ஃபைலை பாக்குறான். சாஃப்ட்வேர் ஆபிஸிலும் ஃபைலை பாக்குறான்.கவர்மெண்ட் ஆபிஸில உட்கார்ந்து உட்கார்ந்து பெஞ்சை தேய்க்கிறான். சாஃப்ட்வேர் ஆபிஸில் இ-மெயிலை தட்டி தட்டி கீ-போர்டை தேய்கிறான். கவர்ன்மெண்ட் ஆபிஸில் மக்களிடம் பணத்தை புடுங்குறான். சாஃப்ட்வேர் ஆபிஸில் மானிட்டர் முன்னாடி உட்கார்ந்து தலை மயிரை புடுங்கி(க்கி)றான்(கீ போர்டை தலைகீழாக வைத்து தட்டி பார்த்தாலே தெரியும் எத்தனை தலை மயிரை புடுங்கியிருக்கிறான்னு...).கவர்ன்மெண்ட் ஆபிஸில் தூங்குறான். சாஃப்ட்வேர் ஆபிஸில் இண்டர்நெட் பாக்குறான். ஆக மொத்தம் கூட்டி கழிச்சி பார்த்த கவர்ன்மெண்ட் ஆபிஸூம் சாஃப்ட்வேர் ஆபிஸூம் ஒன்னு தான்.

ப்ளாக் வந்ததும் வந்திச்சி சாஃப்ட்வெர் கம்பெனிகளில் புரொடக்டிவிட்டி (Productivity) குறைஞ்சாச்சி எக்ஸ்ட்ரா கரிக்குலர் ஆக்டிவிட்டிஸ் (Extra curricular activities) ஜாஸ்தியாகிருச்சின்னு சொல்றாங்க. எக்ஸ்ட்ரா கரிக்குலர் ஆக்டிவிட்டிஸ்ன கதை எழுதுறது கவிதை எழுதுறது கட்டுரை வரையிறது விவாதம் பண்றது. வாழ்க இணைய இலக்கிய மறுமலர்ச்சி.

ப்ளாக்குல திங்கள் முதல் வெள்ளி வரை போடும் பதிவுகளுக்கு ஹிட்டு ஜாஸ்தி. அதுவும் வெள்ளிக்கிழமை நிறைய ப்ளாக்குகள் சூப்பர் டூப்பர் ஹிட். ஏன்னா வார கடைசி மூட் எல்லாருக்கும் வெள்ளிக்கிழமையில் வந்திருக்கும். எப்போதுமே அதிகம் ஹிட் கொடுப்பவர்கள் அமெரிக்கா தோழர்களும் தோழிகளும் தான். அமெரிக்காவில் எப்படி வேலை வாங்கி வாட்டுகிறார்கள் என்பது இந்த ஹிட் மூலமே நன்றாக தெரிந்துக் கொள்ளலாம்.

சனி ஞாயிறுகளில் ஆரம்ப ஆர்வக் கோளாறால் வலைபதிவுகள் வந்து பார்க்கிறவர்கள் தான் ஜாஸ்தி. இல்லென்னா சன் டிவியில் சொத்தைபடம் போட்டால் வலைப்பதிவுகள் பக்கம் ஒதுங்குகிறார்கள். வீட்டில் வேலை வெட்டியில்லாதவர்கள் முக்கியமாக என்னை மாதிரி தற்காலிக தனிமையில் இருப்பவர்களும்,பேச்சிலர்களும்,ஆர்வக்கோளாறார்களும் வாரயிறுதியில் வலைப்பக்கம் ஒதுங்குகின்றார்கள். மற்றவர்கள் அனைவரும் தங்கள் குடும்பத்துடன் வாரயிறுதியை சுபிட்சமாக கழிக்கின்றனர்.

சாஃப்ட்வேர்காரன் வேலை எப்படின்ன வேலையிறுந்தால் நாக்கு தொங்க இரவும் பகலும் தெரியாமல் தொடர்ந்து வேலை பார்க்க வேண்டும். இல்லையென்றால் இண்டர்நெட்டிலேயே தன் முழுநாளையும் பொது அறிவு வளர்க்க பயன்படுத்தலாம். 450-க்கு மேல தமிழர்கள் ப்ளாக் எழுதி தள்ளுகிறார்கள். எல்லாவற்றையும் படிக்க முடியாவிட்டாலும் குமுதம் ஆனந்தவிகடன் படிக்கிற மாதிரி சில வலைப்பதிவுகளை தொடர்ந்து படிப்பது எப்படி? இதுக்கு விடை கடைசியில் தருகிறேன்.

"எவ்வளவு வேலை செய்தாலும் க்ளையண்ட் மதிக்கவே மாட்டங்கிறான் மாப்பிள்ளை" ஒரு நண்பனின் புலம்பல்

"மச்சி, எவ்வளவு வேலை செய்யுறோங்கிறது முக்கியமில்லை, எவ்வளவு திறமையா வேலை செய்கிறோங்கிறது தான் முக்கியம்" என்று சொல்லவோ "மச்சி, எவ்வளோ வேலை செய்யுகிறோங்கிறது முக்கியமில்ல, எப்படி செய்கிறோங்கிறது தான் முக்கியம்" என்று சொல்லவோ நான் ஒன்றும் ஆபிஸ் வாழ்க்கையை பழம் தின்று கொட்டை போட்டவனில்லை. அதற்கு பதில் நான் இப்படி சொல்வேன். எப்படி :

"மச்சி எவ்வளோ வேலை செஞ்சோங்கிறது முக்கியமில்ல, எவ்வளோ ஃபிலிம் காமிச்சோங்கிறது தான் முக்கியம்"

"ஃபிலிம் காண்பிச்ச போதுமா மாப்ளே?" என்று கேட்கும் நண்பனுக்கு ஒரு கதை சொல்வது வழக்கம்.

ஒரு கசாப்புக் கடைக்கு ஒரு நாய் தினமும் வரும். நாயின் கழுத்துப்பட்டையில் தொங்கும் ஒரு சின்ன பையில் கடைக்காரனுக்கு ஒரு லெட்டரும், கொஞ்சம் காசும் கொண்டு வரும். கசாப்பு கடைக்காரன் அந்த லெட்டரை படிக்கும் போது "அரைக்கிலோ எழும்புக்கறியும், 4 ஆட்டுக்காலையும் கொடுத்து விடவும் என எழுதியிருக்கும்". கடைக்காரனும் தவறாமல் அதில் சொன்னமாதிரியே பார்சலைக்கட்டி, நாயின் கழுத்துப்பையிலிருந்து பைசாவை எடுத்துக் கொண்டு பார்சலை கழுத்தில் மாட்டி அனுப்புவான். நாய் எங்கு தான் போகிறது. யார் அதற்கு எசமானன் என்பதை பார்க்க வேண்டுமென்ற ஆவல் கடைக்காரனுக்கு ஏற்ப்பட்டது.

பார்சலை கட்டிக் கொடுத்துவிட்டு நாயின் பின்னாலேயே கசாப்பு கடைக்காரன் போனான். நாய் மிக புத்திசாலித்தனமாக எலெக்டிரிக் ட்ரெயினில் ஏறியது. வரவேண்டிய ஸ்டேஷன் வந்தவுடன் சரியாக இறங்கியது. பிறகு பஸ் ஸ்டாப்பில் பஸ்ஸூக்காக காத்திருந்தது. பஸ் வந்ததும் அதில் ஏறியது. கண்டக்டரும் சரியாக பைசாவை அதன் கழுத்துப் பையிலிருந்து எடுத்து, டிக்கெட்டை வைத்தான். கசாப்புக்கடைக்காரனும் தொடர்ந்து கண்காணித்து வந்தான். டிரைவர் பக்கத்து ஜன்னலில் பார்த்துக் கொண்டே வந்த நாய் தான் இறங்க வேண்டிய இடம் வந்ததும் இறங்கிக்கொண்டது. கசாப்புக்கடைகாரனும் நாயை கவனித்துக் கொண்டே இறங்கினான்.

நாயும் 4 தெருக்களை அழகாக கடந்து ஒரு பெரிய வீட்டின் முன் நின்று கேட்டின் லாக்கை அழகாகத் திறந்தது. தோட்டத்தை தாண்டி உள்ளே ஓடியது. வாசல் கதவை பூட்டியிருந்ததை அறிந்த நாய் பக்கவாட்டில் உள்ள ஜன்னலுக்கு ஓடியது. "லொள் லொள்" என்று குலைத்தது. பிறகு கதவு பக்கம் வந்து கால் நகத்தை வைத்து பிராண்டியது. இதையும் பின் தொடர்ந்து வந்த கசாப்புக் கடைக்காரன் பார்த்துக் கொண்டேயிருந்தான்.

கதவை திறந்த எசமானன் நாயின் கழுத்தில் உள்ளவற்றை எடுத்துக் கொண்டு நாயை ஒரு பிரம்பால் அடித்து வெளுக்க ஆரம்பித்தான். கசாப்புக்கடைகாரன் வேகமாக ஓடிவந்து எசமானனை திட்ட ஆரம்பித்தான் "என்னங்க இது, நாய் எவ்வளவு புத்திசாலித்தனமா கறி வாங்கிட்டு ட்ரெய்ன் ஏறி பஸ் ஏறி தெருவை கடந்து வந்து உங்ககிட்ட பத்திரமா அதை கொண்டு வந்து சேர்த்திருக்கு. இப்படி போட்டு அடிக்கிறீங்களே" என்றான் கசாப்புக் கடைக்காரன்.

"எத்தனை வாட்டி சொல்றது இந்த மடநாய்க்கு வீட்டு வாசல் சாவியை எடுத்து போ போ என்று. சாவி எடுத்துப் போகாம திரும்ப திரும்ப வந்து கதவை பிராண்டுது" என்று நாயை அடிப்பதை தொடர்ந்தார். பிறகு அந்த நாயை அடித்து முடித்த எசமானன் துள்ளி துள்ளி அழகாக ஓடிவந்த அழகான டாலி என்ற அவரின் இன்னொரு நாயை வாரி அணைத்து கொஞ்சியப்படி வீட்டிற்குள் சென்றான் எசமானன்.

"மச்சி, இது மாதிரி தான் மேனஜர் எசமானன்னா ப்ரோகிராமர் நாய். ப்ராஜக்ட் மேனஜர் நாய்ன்னா அவருடைய பாஸ் எசமானன்" என்பேன். அந்த நாய் மாதிரி நாம எவ்ளோ நல்லது செய்தாலும் கடைசியில் நம்மிடம் குற்றம் கண்டுபிடித்தே பேர் வாங்குபவர்கள் நம்முடைய மேலாளர்கள் (பாஸ்கள்). நம்மளையும் அந்த நாய் மாதிரி நடத்தக் கூடாதுன்னா டக்குண்ணு டாலி மாதிரி ஒரு சீனை போட்டு நல்ல ஃபிலிம் காண்பிக்கனும்.

ஃபிலிம் ஃபிலிம் சொல்லிக்கிட்டே இருக்கேன். எப்படி தான் ஃபிலிம் காண்பிப்பது....

1) கையில் எப்போதுமே எதாவது டாக்குமெண்டையோ இல்லது கம்பெனி பைலையோ தூக்கிட்டு அலைவது அப்படியே நீங்கள் கம்பெனிக்கு மாஞ்சி மாஞ்சி வேலைப்பார்ப்பது போன்ற மாயத் தோற்றத்தை உருவாக்கும். வெறும் கையோடு உங்க பாஸ் ஆபிஸின் முன் நடந்து சென்றால் அவர் நீங்கள் தம் அடிக்கவோ இல்ல கேண்டீனுக்கோ போகிறார் என்று நினைத்துக் கொள்வார். தவறி அன்றைய நியூஸ் பேப்பரைக் கொண்டு அலையாதீர்கள். அப்படி அலைந்தால் நீங்கள் டாய்லெட்டை நோக்கி செல்வதாக உங்கள் பாஸ் நினைத்துக் கொள்வார்.ஆகவே டாக்குமெண்ட் அல்லது கம்பெனி லோகோ போட்ட பைல் நல்ல அபிப்ராயத்துக்கு 100% உத்திரவாதம்.

2) முகத்தை எப்போதுமே சீரியஸாக வைத்துக் கொண்டு கணனி முன் உட்கார்ந்து வலைப்பதிவோ, சி.என்.எனோ, அல்லது ஆனந்த விகடனோ, தமிழ்மணமோ படித்துக் கொண்டிருங்கள். மறந்தும் புன் சிரிப்பை கொண்டு முகத்தில் கொண்டு வந்துவிடாதீர்கள். Alt+TAB எப்போதும் உங்கள் கைவசம் இருக்கட்டும். பாஸ் வந்தால் டக்கென்று பக்கத்தில் உள்ள excel, word சாஃப்ட்வேருக்கு தாவிவிடுங்கள்.

3) உங்கள் அலுவலக மேஜையை எப்போதும் குப்பையாக வைத்திருப்பதால் நீங்கள் நிறைய வேலை பார்க்கிறீர்கள் என்ற தோரனையை ஏற்படுத்தும். பிரிண்ட் அவுட்டை எக்கசக்கமாக எடுத்து தள்ளி மேஜை நிறைய நிரப்பி வைத்துக் கொள்ளுங்கள்

4) பாஸ் உங்களை பார்க்கும் போது எல்லாம் நீங்கள் பொறுமையற்றவராக, ஏதோ பிரச்சனையில் சிக்கி தவிப்பது போல் பாவலா காட்டுங்கள். தலையை சொரியுங்கள். உஸ் உஸ் என்று சத்தம் போடுங்கள். மெதுவான குரலில் ஏதாவது முணுமுணுங்கள். பாஸ் காதுக்கு உங்கள் குரல் எட்டுமானால் மெதுவாக 'shit' என்று அடிக்கடி கூறுங்கள். உங்கள் ப்ரோகிராமோ இல்லை உங்கள் schedule-ஓ உதைக்கிறது என்று அதற்கு பொருள்படும்.

5) எந்த காலத்திலும் பாஸ் வீட்டுக்கு கிளம்புவதற்கு முன் நீங்கள் கிளம்பி விடாதீர்கள். இருக்கவே இருக்கு தமிழ்மணம் படிங்க... பின்னூட்டம் விடுங்க. நல்ல டைம் பாஸ். ஒரு வேளை நீங்கள் கட்டாயம் பாஸ் இருக்கும் போதே வெளியேற வேண்டுமென்றால் உங்கள் ஆபிஸ் பேக்கை(office bag) உங்கள் மேஜையிலேயே பாஸ் கண்ணில் படும்படு விட்டுவிட்டு செல்லுங்கள். அது நீங்கள் இன்னும் ஆபிஸில் இருக்கிறீர்கள் என்ற தோற்றத்தை உருவாக்கும்.மறுநாள் பாஸ் ஆபிஸிற்கு வரும் முன் நீங்கள் வந்து விடுங்கள். இல்லையேல் குட்டு வெளிப்பட்டுவிடும்.

6) நல்ல பெரிய பெரிய கம்பியூட்டர் புத்தகங்களை உங்கள் மேஜை குப்பைகளுக்கு இடையில் திறந்து வைத்து அவ்வப்ப்போது அதில் ஏதோ தேடுவது போல பாவ்லா காட்டுங்கள். புத்தகத்தை எப்போதும் மூட வேண்டாம். நீங்கள் ப்ராஜக்ட் மேனஜராகயிருந்தால் கிளையண்ட் requirement, functional specification போன்ற தடிமனான பைலை உங்கள் முன் திறந்து வைத்துக் கொள்ளுங்கள். MS-project schedule உங்கள் முன் இருந்தால் மிகச் சேமம்.

7) வலைப்பதிவில் யாரோ இந்த ஃபிலிமை போட்டிருந்தார்கள். அதை தொகுக்கும் பொருட்டு இங்கே கொடுக்கிறேன். எனக்கு தெரிந்து நிறைய பேர் க்யூபிக்களில் அலங்கார கண்ணாடியை வைத்திருப்பார்கள். என் அலுவலகத்தில் ஒரு காரின் சைடு கண்ணாடியே அழகாக வைத்திருந்தார். அதன் பயன் மிக எளிது. பாஸ் மெதுவாக பூனையாக உங்கள் பின்னால் வந்து பார்க்கும் முன்னர் தூரத்திலிருந்தே அந்த கண்ணாடியில் பார்த்துவிடலாம். அதற்கேற்ப அரெஞ்மெண்ட் செய்துக் கொள்ளலாம்.

ஆயிரக்கணக்கான ஃபிலிம் காட்டும் முறைகளில் சிலவற்றை தொகுத்து உங்களுக்கு தந்திருக்கிறேன். இதை பயன்படுத்தி உங்கள் extra curricular activities -ஐ கூட்டிக் கொள்வது உங்கள் திறமை.

(எனக்கு மின்னஞ்சலில் வந்த ஒரு குறிப்பை தழுவி எழுதியது)

இந்த பதிவுக்கும் இந்த படத்துக்கும் சம்பந்தமில்லை.

நல்ல அப்பா நல்ல பையன்

இந்த பதிவின் வாக்கு எண்ணிக்கை: . பக்கத்திலுள்ள ஸ்டாரை மவுசால் போட்டுத் தாக்கினால் எனக்கு மவுசு ஏறும். நன்றி:-)

உங்கள் கருத்துக்களை இட

திருப்பி தாக்கியவர்கள்:
என் அனுபவத்தைக் கூறுகிறேன். நான் இஞ்சினியர் மற்றும் பிரெஞ்சு மொழிபெயர்ப்பாளராக ஐ.டி.பி.எல்லில் வேலை செய்தேன். ஜெர்மன் மொயிபெயர்ப்பு வேலைகளை அலுவலகத்துக்குக் கொண்டு வந்து என் மேஜையில் வைத்துக் கொண்டே வெளிப்படையாகவே வேலை செய்தேன். அதைப் பற்றி ஏற்கனவே பதிவும் இட்டுள்ளேன். நான் எப்போதும் ஏதோ எழுதிக் கொண்டிருக்க, மற்றவர்கள் வம்பு பேசிக் காலம் கழிக்க, ராகவனைப் பாருங்கள் அவர் எப்படி ஸின்சியராக இருக்கிறார் என்று என் மேலாளர் குற, ஒரே தமாஷ்தான் போங்கள். நின்ங்கள் கூட என்னுடைய அந்தப் பதிவுக்கு வந்துப் பின்னூட்டமிட்டுள்ளீர்கள்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
 
விஜய்,

உங்க பாஸுக்கு தமிழ் தெரியாதா?
:-))
 
மாங்கு மாங்கென்று ஆபீசில் உழைத்து விட்டு, வீடு வந்து, இரவு ஒரு மணி வரை கை வலிக்க எழுதி அனுப்பிய கதை கிட்டத்தட்ட ஒரு வருடத்துக்கு பின் பத்திரிக்கையில் வந்தது. ரொம்ப மகிழ்ச்சியுடன் என் பாஸிடம் சொல்லிக் கொண்டேன். 'அடடே வெரி குட்!' என்றார். கூடவே, 'எப்ப நீங்க கதை எழுதறீங்க?' என்றார் மூக்குக் கண்ணாடியை சரி செய்தபடி! 'என்ன சொல்வது?' என்று ஒரு நிமிடம் தயங்கிப் போனது உண்மை. 'ஐ மீன், எப்படி உங்களுக்கு டைம் கிடைக்குதுன்னு கேட்டேன்!' என்றார்! ஒரு க்ரைம் ஸ்டோரியில் அவரையே ஒரு பாத்திரமாக்கி கடைசியில் கொன்று விட வேண்டும் என்று மனதில் நினைத்துக் கொண்டேன்!
 
நன்றி டோண்டு அய்யா.ஆம் நானும் அந்த உங்கள் பதிவை படித்து பின்னூட்டமிட்டேன்.பலவும் இந்த பதிவை எழுத என்னை தூண்டியது.

சுபமூகா, பாஸ்ஸுக்கு தமிழ் தெரியாது :-(.

//க்ரைம் ஸ்டோரியில் அவரையே ஒரு பாத்திரமாக்கி கடைசியில் கொன்று விட வேண்டும் என்று மனதில் நினைத்துக் கொண்டேன்! //

ஹா ஹா ஹா.....:-)
 
விஜய்,
அந்த மாதிரி ·பிலிம் காட்டி, சிரிக்கவைத்துவிட்டீர்கள். எதற்கும் கெதியாய் சிங்கப்பூருக்கு வந்து உங்களின் bossடன் கதைக்கின்றேன்(பயப்பிடவேண்டாம், இப்படி hard work செய்யும் உங்களுக்கு promotion கொடுக்கச் சொல்ல மட்டுந்தான் :-) )
 
நல்ல யோசனை சொன்னீங்க போங்க... Alt+Tab சமாச்சாரமெல்லாம் தெரியாம அக்கடான்னு இருந்தேன்... நீங்க சொல்லிக் கொடுத்தீங்களேன்னு பாஸ் பக்கத்தில் வந்ததும் தடா புடான்னு Alt + Tab ஐ ரெண்டு தடவை அழுத்தி வைக்க, கம்ப்யூட்டர் என்னடான்னா, போட்டுத்தாக்குன்னு சிவப்புக்கலர்ல பல்லிளிக்குது...

பூச்சி பூச்சியாத் தெரியிற தமிழ் எழுத்துக்களை Japanese Boss உத்து உத்து பாத்திட்டு, கடைசியாச் சொன்னாரு .. " பகைரோ " .. அதுக்கு என்ன அர்த்தம்னு எனக்கு தெரியல விஜய் .. உங்களுக்குத் தெரியுமா? :)))))))

( ஹி,ஹி... சும்மா ஒரு கற்பனைதான்... இப்படியெல்லாம் நமது வலைஞர்களுக்கு ஏதும் நடக்காமல் halwacity-யில் இருக்குற அத்தனை சாமிகளும் கட்டாயம் help பண்ணுவாங்க..அதனால பயப்படாம நீங்க இப்படிப்பட்ட ஐடியாக்களைத் தொடர்ந்து போட்டுத் தாக்குங்க ! )
 
டிசே நீங்க சிங்கப்பூர் வந்தீங்கன்ன நாங்க உடனே ஒரு ப்ளாக்கர் மீட்டிங் போட்டுறுவோம். ஜாக்கிரதை.

பாலு, alt+tab ஒருவாட்டி தான் தட்டனும். ரெண்டு வாட்டி தட்டுனீங்கன்ன இப்படி தான். இல்லேன்னா பதட்டத்துல ஒரு நாலஞ்சி வாட்டி தட்டுங்க. ஏதாச்சி ஒரு விண்டோ ஒப்பனாகும். ஹாங்..முக்கியம் நிறைய விண்டோ ஒப்பன் பண்ணி வச்சிக்கோங்க.
 
அடப்பாவிங்களா! ஒலகம் முழுக்க இந்த கதைதான் நடக்குதா?

நான் ஏதோ நான்மட்டும்தான் இப்படி செய்யறேன்னு இத்தனைநாள் ஒரு குற்றஉணர்வுல இருந்திருக்கேன்! :)
 
இன்னா இளவஞ்சி நீ! உலகம் தெரியாத புள்ளையா இருக்கியே! (Take it easy) :-)
 
கடந்த 5 வருடங்களில் 50 தடவை இதை (நாய் கதை உட்பட) இ-மெய்லில் பெற்று படித்திருந்தாலும், தமிழில் படிப்பதில் சுவை அலாதிதான். அதுவும் 'நாய்' என்ற வார்த்தை இருக்கிறதே.... சரி. நேரமில்லை.

- ஆத்மன் (எங்கும் நிறைந்தவன்)
 
விஜய்...

உங்க 'ஆபிஸில் ஃபிலிம் காட்டற' பிளாக் படிச்சேன். எழுத்தாளர் சுஜாதா
சொல்வார். 'கவர்மெண்ட் ஆபிசுல எல்லாம் ஒழுங்கா வேலை செய்யறவனைத் தட்டிக் கொடுத்து... நல்லா வேலை வாங்குவாங்க! அவனுக்கு ஊக்கம் வேண்டும்னு
பாராட்டு எல்லாம்கூட கிடைக்கும். நான் பாராட்டியிருக்கேன். சில
நேரங்கள்ல, ஸ்பெஷல் இன்கிரிமெண்ட் எல்லாம் கூட கிடைக்கும்'

'சரி! ஒழுங்கா வேலை செய்யாம, ஏமாத்தறவங்களுக்கு.... என்ன கிடைக்கும்?'

'புரொமோஷன் கிடைக்கும்'.

அது software கம்பெனியிலும் போல!

இதான் இளவஞ்சி...
அல்வாசிட்டி.... எல்லாம் சீக்கிரம்
புரொமோஷன் வாங்கற ரகசியமா?
ஜமாய்ங்க!

அப்புறம்.... கடைசியா ஒரு படம் போட்டிருக்கீங்களே! அது என்னப்பா? பாவம் அந்த குழந்தை! அவங்க
அப்பாவுக்கு பீர் குடிக்கத் தெரியலைன்னு கத்துக் கொடுக்க, அவர் கைல பீர் பாட்டிலைக் கொடுத்து, தன்
கையில் பால் புட்டியை வைச்சிட்டு... ரொம்ப சிரமப்படுது போல! ஆனாலும் நீங்க கொஞ்சம் கொடுரமானவருதான்
போலிருக்கு! இதைப் போய் இரசிக்கிறீங்க! இதுவும் குழந்தை தொழிலாளர்கள் போலத்தான்.
அந்த குழந்தைக்கு இந்த வயசுலேயே, வாத்தியார் வேலைன்னு நெனைக்கிறேன்.

என் கட்சி யார் யார்! கை தூக்குங்க!

- சந்திரன்
 
Vijay,
nalla pathivu!!! Though I have read this before in English, "ippOthu migavum rasiththup padiththEn".

nagaissuvaiyai miga nanRAga kaiyALkiRIrkaL!!! vAzththukkaL.

enRenRum anbudan
BALA
 
Kalakitinga thaliva... evlodhan hard and smart work pannalum innum satisfy aakama irukan en boss, Nanum eppadi film kamikaradhunu paarthen... romba nalla idea kuduthinga thanks
 
பின்னூட்டத்திற்கு நன்றி மக்களே....

ஆயிரம் தான் ஆங்கிலத்தில் படித்தாலும் அதை தமிழில் கொஞ்சம் நகைச்சுவை பூசி லோக்கலாக தரும்போது கலக்கலாக தான் இருக்கிறது. நானே ரசித்துப் படித்தேன்....
 
ஹாய் விஜய் பின்னிட்டீங்க.

உண்மையில் நல்ல பதிவு. அதிலும் நாய்க்கதை இருக்கே தமிழ்ல அழகா சொன்னா சூப்பரா இருக்கு.
 

உங்கள் கருத்துக்களை இட


<< திரும்ப முன் பக்கத்துக்கு போ

This page is powered by Blogger. Isn't yours? Web Statistics and Counters தமிழ் அசைபட இணையச் செயலி தமிழ் விக்கிபீடியா

-->