-ல் போட்டுத் தாக்கியது
கிழவனின் சில சில்லறைகள் காசுகள்
Difficulty in reading this post due to font issues?
Click here
for a PDF copy. Works best if you right-click the link and select 'Save target as...'
கதையென்று உட்கார்ந்து எழுதியதில் இது தான் என் முதல் கதை. இது உண்மையிலேயே கதைக்கு உரிய குணாதிசயங்கள் உள்ளனவா என்பதை நீங்கள் தான் கூற வேண்டும். எனக்கு தெரியாது. குறைகளையும், நிறைகளையும் சுட்டிக் காட்டினால் நன்றாகயிருக்கும். எனக்கு எழுத வேண்டும் என ஆர்வத்தை தூண்டுபவர்கள் தமிழ்மணம் சக வலைபதிவாளர்களும், அன்பு வாசகர்களும் தான். இந்த கதை நல்லயிருந்தால் இதை எனக்கு களம் அமைத்துக் கொடுத்த தமிழ்மணத்திற்கு அர்பணிக்கிறேன். கதை நன்றாக இருக்கவில்லையெனில் நான் திரும்ப பெற்றுக் கொள்கிறேன். நீங்கள் தான் இதற்கு நீதிபதி. இப்போது கதைக்கு....
------------------------------------------------------------------
கிழவனின் சில சில்லறைகள் காசுகள்
------------------------------------------------
பாளையங்கோட்டை ஆயிரத்தம்மன் கோவில் தசரா மறுநாள் ஆரம்பிக்கவிருப்பதால் இரவு முழுவதும் மேலரத வீதியில் குழாய் ரேடியோ கட்டி அம்மன் பாட்டு தான் காதை கிழித்துக் கொண்டிருந்தது. ரோட்டோரத்தில் சுருண்டுப் படுத்திருந்த கிழவன் ராமையாவுக்கு காலை தான் தூக்கத்துடன் லேசான மயக்கம் கலந்தது. இன்றோடு கிழவன் சாப்பிட்டு 4 நாட்கள் ஆகிவிட்டது. கால்களுடன் கைகளும் சிலநாட்களுக்கு முன் முற்றிலும் செயலற்றுப் போய்விட்டது. அதுவரை கால்களால் நடக்க வலுவில்லா விட்டாலும் மடங்கிய காலுடன் உட்கார்ந்து கொண்டே புட்டத்தை தரையில் தேய்த்துக் கொண்டே கைகளால் நகர முடிந்தது.
ரோட்டில் குப்பையைக் கூட்டிக் கொண்டிருந்த ஒரு நகராட்சி பணியாளர் அரைமயக்கத்திலிருந்த கிழவனை நோக்கி வந்து லேசாக புட்டத்தில் காலை வைத்து எக்கித் தள்ளினார். "லே பெர்சு, எந்திரிவே, குப்பையை தள்ளனும் அந்தப்பக்கம்" என்று சொல்லிவிட்டு ரோட்டிற்கு அந்த பக்கம் ஒரு ப்ளாஸ்டிக் கவரை கண்டார். ஓரிடத்தில் கூட்டி வைத்த குப்பையில் அதை சேர்க்க வாரியல் கட்டையுடன் சென்றான். கிழவனுக்கு அவன் சொன்ன வார்த்தைகள் கிணற்றுக்குள்ளிருந்து யாரோ பேசுவதுப் போல கேட்டது. இருந்தாலும் கிழவனால் எழுந்திருந்து எங்கேயும் ஒதுங்க முடியாது.
சிறிது நேரத்தில் இன்னொருவனுடன் வந்த நகராட்சி பணியாளர் கிழவனின் காலையும் கையையும் பிடித்து தரதரவென்று இழுத்துக் கொண்டு போய் பக்கத்திலிருந்த ஒரு சமூகத்துக்கு பாத்தியப்பட்ட பிள்ளையார் கோவில் பக்கம் நகர்த்தி கொண்டுப் போனார்கள். உணர்விழந்த நிலையிலும், அரைமயக்கத்திலுமிருந்த அந்த கிழவனுக்கு இடுப்பிலிருந்த அழுக்கு வேட்டி நழுவுவதும், அதில் முடிந்து வைத்திருந்த சில சில்லரை காசுகள் கீழே விழுவதும் உணர்ந்தார். இருவரும் ஊஞ்சலாக கிழவனை தூக்கியதும் காலை பிடித்திருப்பவன் கையில் அழுக்கு வேட்டியில் மறுமுனை பிடிபட்டிருந்ததால் வேட்டியும் அவர்களோடு இழுபட்டது. பிரஞ்ஞை நழுவிக் கொண்டிருந்த போதிலும் கிழவன் கீழே விழுந்திருந்த சில்லறை பக்கமாக வெறித்த பார்வையை கொண்டிருந்தார்.
'சொத்'தென்று கோவிலின் வாசலுக்கு ஒரத்தில் போடப்பட்ட கிழவனின் நிர்வாணத்தை மறைக்க வேட்டி அவன் மீது போர்த்தப்பட்டது. விழுந்த அதிர்ச்சியில் கொஞ்சம் தெளிந்திருந்தார்.கண்கள் ஒரே திசையை வெறித்துக் கொண்டிருந்தது. வாழ்ந்த வாழ்க்கையின் பாதையை தேடிக்கொண்டிருந்தது.
கீழே போட்டு படுத்திருந்த அந்த அட்டையை கிழவன் பக்கத்திலேயே வீசி விட்டு தன் வேலையை பார்க்கச் சென்றார் அந்த பணியாளர். சிறிது நேரத்தில் கீழே விழுந்திருந்த சில்லறைகளை பொறுக்கி கொண்டு வந்து கிழவன் பக்கம் கிடந்த அட்டையில் வைத்து விட்டு சென்றான். ஒரு வாரமாகவே கூட இருக்கும் காசுகள். எங்கேயோ பார்த்துக் கொண்டிருந்த கிழவனின் கண்கள் அந்த சில்லறை காசுகளை கவனித்தது. நிம்மதி ரேகை முகமெங்கிலும்.
ரோட்டோர வாசத்தை மேற்கொண்ட ஆறு மாத காலத்தில் கொஞ்சம் கொஞ்சம் நடந்துக் கொண்டிருந்தவர், ஒரு நாள் உட்கார்ந்தவரால் எழுந்திருக்க முடியவில்லை. அப்போதிருந்தது அந்த கிழவன் புட்டத்தை தேய்த்துக் கொண்டே கைகளால் ரோட்டில் ஊர்ந்து செல்வார். வசதி ஒன்றுமே இல்லையென்றாலும் பாளையங்கோட்டையில் தறி போடுபவர்களுக்கு நூல் உலர்த்திக் கொடுத்தும், நூலை நீட்டிக் கொடுத்தும் ஏதோ அவருக்காகவே சம்பாதித்து வந்தார். கொஞ்ச காலமாகவே உடம்புக்கு நோக்காடு வந்து வீட்டில் அடிக்கடி முடங்கி விடுவதால் அந்த வேலையும் கிடைக்காமல் போய்விட்டது. மகன் வீட்டு திண்ணை வாசம் தான் இரவும் பகலும். சில நேரம் உடம்பு நோக்காடு அதிகமாகி படுக்கையிலே மூத்திரமும்,மலமும் போய்விடுவதுண்டு. இதை கண்டால் மருமகள் பேயாட்டம் ஆடிவிடுவாள். உடல் நோவுக் கொண்டிருந்தாலும் தட்டுத்தடுமாறி ஏதாவது பேப்பரை எடுத்து தான் கழித்த மலத்தை துடைத்து தூற எறிவார். மலம் போன வேட்டியையும்,படுக்கையையும் மருமகள் எழுந்திருப்பதற்கு முன்பே அலச பார்ப்பார். கிழவனின் பீ அள்ள அந்த அடுத்த வீட்டு பெண்ணுக்கு, மருகளுக்கு தலையெழுத்தா என்ன? தட்டுத் தடுமாறி துவைப்பதாலும் காலை பொழுது புலராத மங்கிய ஒளியில் துணியை அலசுவதாலும் பாத்ரூமில் எங்காவது மலம் தங்கிவிடும். மருமகள் இதைப் பார்த்தால் கத்தி கூப்பாடு போட்டு கிழவனுக்கு அன்று சாப்பாடு கிடைக்காது.அன்றும் அப்படி தான் மூத்திரமும் மலமும் படுக்கையிலே போய்விட்டார். எழுந்திரிக்க முடியாத அளவில் கிழவயது உடம்பு நோவு அழுத்தியது கிழவனுக்கு. எழுந்து வந்து பார்த்த மருமகள் கிழவனுக்கு திண்ணையில் கூட இடமில்லை என்று மறுத்துவிட்டாள்.பெண்டாட்டியின் வருத்ததை கண்டு மகனும் கொதித்து போனார்.அடுத்த நாள் கிழவன் பாத்ரூம் பக்கம் பகலில் ஒதுங்கியிருந்த போது வீட்டிலிருந்த பெரிய டேபிள் ஒன்றை திண்ணையில் போட்டுவிட்டான். அன்று ரோட்டுக்கு வந்தவர் தான் ராமையா கிழவன்.
ரோட்டில் நடக்க முடியாமல் கொஞ்ச நாளில் கீழே உட்கார்ந்த கிழவனை மகனும் தேடவில்லை. கிழவனும் மகனை தேடவில்லை. உயிர் வாழ்க்கைக்கு பிச்சையெடுப்பதை தவிர வழியில்லை. புட்டத்தை தேய்த்துக் கொண்டே கைகளால் ஊர்ந்தவர் மூக்கையா மளிகை கடையிலிருந்து அட்டைபெட்டியை வாங்கிக் கொள்வார். மூக்கையா செய்யும் அதிகபட்ச தானமும் அதுவே. அட்டை பெட்டியை பிரித்தவர் நடுபாகத்தை படுக்கையாக பயன்படுத்துவார். அட்டைபெட்டியின் ஒரு பக்கத்து மூடி அட்டையை புட்டத்திற்கு அடியில் வைத்துக் கொண்டு ஊர்ந்து செல்வார்.
காலையில் கோயிலை திறக்க வந்த பூசாரி கோயில் வாசல் ஓரத்தில் சுருண்டு கிடந்த கிழவனை கண்டார். "யோவ் நட திறக்கிற நேரத்தில் இங்கே என்ய்யா வந்து கிடக்க, போ... ஓரத்தில் போய் கிட" சத்தம் போட்டார். பூசாரிக்கு பழகி போன கிழவன். கிழவன் ரோட்டிற்கு வந்தது முதல் புட்டத்தை தேய்த்து தேய்த்து ஊர்ந்தவரை பல தடவை பார்த்திருக்கிறார் பூசாரி. கண்களுக்கு பழகியவர் என்பதால் கிழவன் பூசாரிக்கு இளப்பம் தான். கோவில் வாசலில் தண்ணீர் தெளிக்க பூசாரி மறுபடியும் வந்தார். கிழவன் பக்கத்தில் வந்த பூசாரி உயிர் இருக்கிறதா? இல்லையா? என குனிந்துப் பார்த்தார். கிழவனின் பார்வை இன்னமும் பக்கத்திலிருந்த சில்லறையின் மீதே வெறித்திருந்தது. பூசாரிக்கு கிழவனின் உயிரைப் பற்றி இன்னமும் அறியமுடியவில்லை. பக்கத்தில் கிடந்த நீண்ட குச்சியை எடுத்து வந்து கிழவனின் உள்ளங்காலில் குத்திப் பார்த்தார். சில குச்சி குத்துகளுக்குப் பிறகு கிழவனின் கால் லேசாக அசைந்தது. உயிர் இருப்பதை உறுதிச் செய்துக் கொண்ட பூசாரி வாசல் மேல் படிக்கு சென்று தண்ணீர் தெளிக்க ஆரம்பித்தார். தண்ணீர் கிழவன் மீதும் பட்டுத் தெறித்தது. கிழவன் உடம்பை லேசாக அசைத்தார்.
கொஞ்ச நேரத்தில், "திருவிழா நேரத்துல கிழவன் இங்கே வந்து கிடக்கான்" என்று சொல்லிக் கொண்டே பூசாரி 3 ஆட்களுடன் வந்தார். "பக்கத்துல இருக்கிற கற்பகம் சைக்கிள் கடைப்பக்கமா தூக்கி கொண்டு போங்க, சைக்கிள் கடைக்காரன் வெட்டுப்பட்டு ஆஸ்பத்திரியில தான் இருக்கான், அதுனால அவன் இன்னிக்கு கடை தெறக்க மாட்டான்" என்று பூசாரி கூட்டிவந்த ஆட்களிடம் கூறினார்.
பழையபடி கிழவன் தூக்கப்பட்டான். கிழவன் பூட்டப்பட்டிருந்த சைக்கிள் கடைபக்கம் படுக்க வைக்கப்பட்டான். இந்த முறை வந்தவர்கள் அவருடைய இடுப்பிலுள்ள வேட்டியை கொஞ்சம் ஒழுங்காகவே கட்ட எண்ணி வேட்டியை சும்மா இடுப்பை சுத்தி வைத்தார்கள். நல்ல பிள்ளையாக அவருடைய படுக்கை அட்டையையும் அந்த சில்லறைகளும் வைத்து விட்டு சென்றனர். ஆனால் கிழவன் தரையில் தான் படுத்திருந்தான். ரோட்டில் படுத்துக்கிடந்ததை விட சைக்கிள் கடை செட் எவ்வளவோ தேவலாம். இங்கு கொஞ்சம் நிழலாவது கிடைக்கிறது. வெயில் வந்தால் ரோட்டோரத்தில் படுத்துக்கிடக்க முடியாது.
கிழவன் லேசாக தலையை அசைத்து கண்களை உருட்டி உருட்டி எதையோ தேடினார். போன வாரம் தான் சந்திப்புல இருக்கிற தேவர்சிலைக்கு யாரோ செருப்பு மாலை போட்டாங்கன்னு ஊரே கொந்தளிச்சிட்டு இருந்தது. கற்பகம் சைக்கிள் கடை திறந்திருந்ததால் வெறி கும்பல் சைக்கிள் கடைக்காரனை நாலு ஐந்து வெட்டுக்காயங்களுடன் விட்டுச் சென்றனர். வெட்டுப்பட்டு கொஞ்ச நேரத்தில் அங்கு கூடிய கூட்டத்தை கண்டு கிழவனும் தூரத்திலிருந்து புட்டத்தை தரையில் தேய்த்துக் கொண்டே வந்து ஆர்வமுடன் கூடி வேடிக்கை பார்த்தார். சைக்கிள் கடை கதவு பக்கத்திலேயே கிழவன் கிடந்ததால், கண்களை உருட்டி தேடிக்கொண்டிருந்த கிழவனின் கண்ணில் அந்த மரக்கதவுக்கு ஓரத்தில் காய்ந்து போன இரத்தம் தெரிந்தது. வெட்டிகாயத்தோடு அந்த சைக்கிள் கடைக்காரனின் முகத்தில் இருந்த அந்த மரணபயம் நினைவில் வந்து போனது. அந்த நினைவு வந்தவுடன் ஏதேதோ நினைவுகள் முட்டி மோதி உதைத்து கொண்டு அவர் மனதில் ஓடியது. மரணம் அவ்வளவு கொடுமையானதா? ஏன் அவன் முகத்தில் அந்த பயம்? என்று அரைகுறை நினைவில் நினைத்தவர் கண்ணில் அவர் வைத்திருந்த சில்லறை காசுகள் அட்டையில் பார்த்ததும் நிம்மதி அடைந்தது.
சில்லறை காசு பசி தீர்க்குமென எப்போது அவர் அறிந்தாரோ தெரியவில்லை? ஆனால் ரோட்டுக்கு வந்த கிழவனுக்கு அந்த ஆறு மாதத்தில் நிம்மதி கொடுத்தது அந்த சில்லறைகள் தான். போன வாரம் வரை புட்டத்தை தேய்த்து தரையில் ஊர்ந்தவருக்கு மேலரத வீதியில் மிஞ்சிப் போனால் 200 அடி தான் முன்னும் பின்னும் போய் வருவார். பிச்சை கிடைத்த காசில் ஜூபிடர் பேக்கரியில் ஜாம் பன் வாங்கி சாப்பிடுவார், இல்லையென்றால் சாயங்காலம் ஆயிரத்தம்மன் கோயில் பக்கம் வண்டியில் வடை விற்பார்கள். எண்ணை ஒத்துக் கொள்வதில்லை என்றாலும் பசிக்கு அந்த கடை பக்கம் போய் ஒதுங்குவார்.கையில் சில்லறை இருந்தால் ஒரு வடை வாங்கி நியூஸ் பேப்பரில் வடையை அமுக்கி அமுக்கி எண்ணையை எடுத்து விட்டு வடையை சாப்பிடுவார். இல்லையென்றால் யாராவது வாங்கி தருவார்களா என்று யாராவது மூஞ்சைப் பார்த்துக் கொண்டே உட்கார்ந்திருப்பார். அப்படியும் கிடைக்கவில்லையெனில் கடை மூடும் சமயம் வடை வண்டி பக்கத்திலிருக்கும் குப்பை கூடையை குடைவார். சாப்பிட்டு போட்ட சிறு துண்டு வாலையில் கொஞ்சம் தேங்காய் சட்னி தான் மீந்திருக்கும். வழித்து வாயில் போட்டுக் கொள்வார். ரோட்டுக்கு வந்தவுடன் அவருக்கு இந்த மாதிரியெல்லாம் செய்ய தோனவில்லை. பசியால் கடந்த 3 மாதமாக தான் இதை செய்ய ஆரம்பித்திருந்தார். சில பேர் மூக்கு முட்ட வடை சாப்பிட்டு விட்டு வடையில் கடைசி அரை பீசை சாப்பிட முடியாமல் அந்த கூடையில் கடாசியிருப்பர். அதை கண்டால் கிழவனுக்கு மகிழ்ச்சி தான். சில சமயம் கடைக்காரனே இரக்கப்பட்டு மீந்துப் போன வடைகளை எடுத்துக் கொடுப்பார்.
சைக்கிள் கடை செட்டில் சில்லறை மீது வெறித்த பார்வையிலிருந்த கிழவனின் காதில் பேச்சு சத்தம் கேட்டது.4 இளைஞர்கள் இருந்த கும்பல் சைக்கிள் கடையை நோக்கி வந்துக் கொண்டிருந்தனர். எந்த நேரத்திலும் மரத்துக்கு கீழே,கோயில் மண்டபம், ஸ்கூல் கிரவுண்டு என எங்கெங்கே நிழல் கிடைக்கிறதோ அங்கெல்லாம் உட்கார்ந்து ஆடு புலி ஆட்டம் போடும் வெட்டிக் கூட்டம். இன்று சைக்கிள் கடை மாட்டிக் கொண்டது. கிழவனின் சுயநினைவு மறுபடி குறைந்துக் கொண்டே வந்தது. கிழவனை கவனத்தில் கொள்ளாமல் ஒரு ஓரத்தில் அந்த கும்பல் உட்கார்ந்துக் கொண்டு ஆடு புலி ஆட்டம் கட்டத்தை வரைந்துக் கொண்டிருந்தது. கொஞ்ச நேரத்தில் ஆடு புலி ஆட்டமும் சூடு பிடித்தது. சிறிது நேரத்துக்கு பிறகு...
"ஏலே காசு இருந்த ஆட்டைக்கு வா இல்லேன்னா அப்படியே ஒரத்தில் உட்காரு" என்று கூட்டத்தில் இருப்பவர்கள் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். கோபித்துக் கொண்டு வெளியே வந்தவனுக்கு கிழவனுக்கு பக்கத்திலிருந்த அட்டையில் சில்லறைகளை கண்டான். மறுநிமிடத்திலேயே 'ஏலே என்கிட்ட காசு இருக்கில.இந்த ஆட்டத்தில நீயா நானான்னு பார்த்திருவோம்ல, வாடா வா" என்று உறுமிக் கொண்டே சென்றான்.
திடீரென கண்ணை திறந்துப்பார்த்த கிழவனுக்கு சில்லறை அங்கில்லாதது கண்டு மரணபயம் தொற்றிக் கொண்டது. ஓ! இது தான் அந்த சைக்கிள் கடைக்காரனின் முகத்தில் பார்த்தது, இது தான அந்த பயம். அவருக்கு இருந்த ஒரே நம்பிக்கை சில்லறை காசுகள். காணவில்லை இப்போது. மிக வேகமாக நினைவு தப்பிக் கொண்டிருந்தது.
அன்று மாலை தசராவுக்கு கோயில் வந்தவர்கள் போகும் வழியில் சைக்கிள் கடையில், தெருவிளக்கு வெளிச்சத்தில் கிழவனை கண்டார்கள். பக்கத்திலிருந்த அட்டையில் சில சில்லறைகளை போட்டு விட்டு சென்றனர். கிழவனின் தப்பிய நினைவும் திரும்பாமலேயே போய் விட்டது.

இந்த பதிவின் வாக்கு எண்ணிக்கை:
. பக்கத்திலுள்ள ஸ்டாரை மவுசால் போட்டுத் தாக்கினால் எனக்கு மவுசு ஏறும். நன்றி:-)
உங்கள் கருத்துக்களை இட
திருப்பி தாக்கியவர்கள்:
ரம்யா அவர்களின் பின்னூட்டம் யூனிகோடில்....
------------------------
நல்ல கதை.. யதார்தமாகவும், மனதை தொடும் விதமாகவும் அமைந்துள்ளது.
ரம்யா
-------------------------

கதையை படித்து ஒருவர் பின்னூட்டமிட்டாலும் சரி தொடர்ந்து கதையை போட்டு தாக்கவேண்டுமென நினைத்திருந்தேன். பலகாலம் பின்னூட்டம் யாரிடமிருந்தும் வரவில்லை.
இப்படியாக இந்த கதைக்கு பயங்கர வரவேற்பு. வரவேற்பை கண்டு கதை எழுதுனுமா என்று என்னை நானே கேள்விக் கேட்டுக் கொண்டிருந்த நேரத்தில் ஒரு ஊக்க மொழி கொடுத்த ரம்யா அக்காக்கு ஒரு ஓ....
ஆகவே இந்த கதை மாதிரி அவஸ்தைகள் தொடரும்.

விஜய்.. நான் 2 தடவை பின்னூட்டமிட முயற்சி செய்தும் bloger விட்ட ரவுசுல எனக்கு தோல்விதான் கிடைத்தது. கொஞ்சம் நீளம். மற்றபடி ஔஅருமையான கதை. தொடருங்க.
//கதையை படித்து ஒருவர் பின்னூட்டமிட்டாலும் சரி தொடர்ந்து கதையை போட்டு தாக்கவேண்டுமென நினைத்திருந்தேன்//
நீங்க இந்த ஐடியால இருக்கறது தெரிஞ்சிருந்தா நேரா உங்க ஊருக்கே வந்து இதை சொல்லியிருப்பேன்.
//கதையை படித்து ஒருவர் பின்னூட்டமிட்டாலும் சரி தொடர்ந்து கதையை போட்டு தாக்கவேண்டுமென நினைத்திருந்தேன்//
நீங்க இந்த ஐடியால இருக்கறது தெரிஞ்சிருந்தா நேரா உங்க ஊருக்கே வந்து இதை சொல்லியிருப்பேன்.
உங்கள் கருத்துக்களை இட
<< திரும்ப முன் பக்கத்துக்கு போ