<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d9439067\x26blogName\x3d%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81!!!!!\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLACK\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://halwacity.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://halwacity.blogspot.com/\x26vt\x3d-1566162084738285005', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script> <!-- Remove below comment line to show the content. Added for meta redirection --> <!--

போட்டுத் தாக்கு!!!!!

எள்ளோடு எலி புழுக்கையும் எண்ணைக்காக காயுதாம்

-ல் போட்டுத் தாக்கியது

பேசாப்பொருளை பேசவந்தேன்

Difficulty in reading this post due to font issues? Click here for a PDF copy. Works best if you right-click the link and select 'Save target as...'
இந்த பதிவை போட்டுத் தாக்கியவர் : Vijayakumar
நான் ஒரு கூத்தாடி. ஊரு ரெண்டு பட்டா இந்த கூத்தாடிக்கு கொண்டாட்டம். நான் மேல் சாதியிமில்லை, கீழ் சாதியிமில்லை. சோத்து சாதி. என் வன்மம் என் வயித்தின் மீது. என் பார்வையில் தெரிவது கூத்துக்கு காசு வெட்டாத மனுச சாதி. இன்னொன்னு காசு வெட்டும் கடவுள் சாதி. இதோ ஊரு ரெண்டு பட்டிடுச்சி. எனக்கு கொண்டாட்டம். என் வயித்துக்கு சோறு இன்னிக்கு. கட்றா கூத்தை.

ஏ! வந்தனம். வந்தனம். டண்டனக்க வந்த சனம் குந்தனும் டண்டனக்க, அப்படி போடு அப்படி போடு.

இன்னிக்கு நானு பேசாத ஒரு பொருளை பத்தி நான் பேசப் போறேன். அந்த பேசாத பொருள் தாங்க செருப்பு. ஆமா... செருப்பை பத்தி தான் நாங்க கூத்துக் கட்டப் போறோம்.

தமிழ்மணம் வீதியில் கருகிய வாடக்கிடையில் ஒரே சலம்பல் சத்தம்....

"பீ அள்ளுங்க"

"தலித் பற்றி இழிவாக பேசும் பார்பனனை செருப்பால் அடி"

"இப்படியான சமூகத்தை உருவாக்கியது பாப்பன்கள். அவர்களில் ஒரு சிலர் இறந்துதான் தலித்திற்கு விடிவு வருமென்றால் அதில் தவறென்ன? செருப்பாலே அடிச்சி கொல்லுங்கடா?"

அடங்கொய்யாலே! செருப்புக்கு அங்கே டிமாண்டு போல. இந்த கூத்தாடி கூத்துப்பட்டறை டிப்பார்ட்மெண்ட்ல நிறைய செருப்பு இருக்குங்க. அடிச்சிகிடதுக்கு இந்த வந்து செருப்பு எடுத்துக்குங்க..... வாங்க வாங்க டிபார்ட்மெண்டுக்கு வாங்க....











வேறு திசையிலிருந்து இன்னொரு குரூப்பு சலம்பிக் கொண்டிருக்கிறது.

"உன் மூக்கை அறுக்கனும்"

"உன் நாக்கை அறுக்கனும்"

""பெண்களை இழிவாக காட்டும் அந்த நடிகனின் குறியை அறுத்து எறிய வேண்டும்"

அடங்கொம்மா!!! கத்திக்கும் டிமாண்டு போல. வகை வகையா கத்தி இருக்குங்கோ.....



அய்யா துப்பாக்கி வேணுமா? நைஸா இந்தப் பக்கம் வா நைனா. துப்பாக்கிய தள்ளுறேன். பேசிக் கொண்டிருக்கும் போதே...

கூத்தாடிகளின் குழுப்பாடல் 1:

கல்லு பறபற
செருப்பு பறபற
கத்தி பறபற
கம்பு பறபற
சாதி பறபற
அல்வாசிட்டிக்கு விசில் பறபற


பெரியாரின் பேராண்டிகள் அப்படியே அப்பீட்டு ஆகிங்க. இல்லாங்காட்டி காதை பொத்திக்கோங்கோ......

கடவுள் தந்த அழகிய வாழ்வு
உலகம் அவனது வீடு
கண்கள் மூடியே வாழ்த்துப் பாடு
கருணை பொங்கும் உள்ளங்கள் உண்டு
கண்ணீர் துடைக்கும் கைகளும் உண்டு
இன்னும் வாழனும் நூறு ஆண்டு
எதை நாம் இங்கு கொண்டுவந்தோம்
எதை நாம் அங்கு கொண்டு செல்வோம்
பூமியின் வாழ்க்கையை அன்பில் வாழ்ந்து விடைபெறுவோம்.


எல்லாருடைய கண்களிலும் ஆனந்த கண்ணீருடன் அப்படியே உள்ளம் அமைதியாகி கல்லாகி சமைந்த்து நிற்கிறார்கள். கூத்தாடியின் வேலை முடிந்தது. என் வயித்துக்கும் சோறு....

இந்த பதிவின் வாக்கு எண்ணிக்கை: . பக்கத்திலுள்ள ஸ்டாரை மவுசால் போட்டுத் தாக்கினால் எனக்கு மவுசு ஏறும். நன்றி:-)

உங்கள் கருத்துக்களை இட

திருப்பி தாக்கியவர்கள்:
சந்தடிசாக்குல இப்படி ஒரு பதிவா? சகிக்கலை.

கங்கா'வின் ஜென்கதைகள் பதிவில் http://zendaily.blogspot.com/2005/02/blog-post_19.html

நீங்கள் சொன்னமாதிரி எழுதுபவர்களைக் கொஞ்சம் பார்த்து எழுதுங்கள் என்று சொல்லலாம். கவனிக்க. எழுதாதே. கோபம் கொள்ளாதே என்றல்ல. கொஞ்சம் பார்த்து எழுதுங்கள் என்று சொல்லலலம். ஏனென்றால் எழுதியதில் இருக்கும் நியாயத்திற்கு பதில் சொல்ல முடியாமல் அந்த வார்த்தைகளைப் பிடித்துத் தொங்கிக்கொண்டிருக்கிறார்கள்.

அவர்களையும் முதலில் எழுதி தூண்டுபவர்களையும் அவங்க அப்படித்தான் என்று விட்டுவிடலாம்.

ஆனால், நடுவில் இப்படி எழுதி 'குளிர் காய்பவர்களை' இருக்கிறார்களே... கில்லாடிகள். எங்கேயிருந்துதான்... என்று தோன்றுகிறது.
 
மதி, உங்களது பின்னூட்டத்துக்கும், மற்றப்படி பொதுவாகவும்: நேற்று இரவு ஒரு பதிவு எழுதிவைத்திருந்தேன். விஜய்யின் இந்தப் பதிவு அதற்கு முன்பு பிச்சை வாங்கவேண்டும். இது 'குளிர்காயும்' பதிவெனில், அது 'குளிர்காய்வது' raised to the power n என்று இருந்தது. ப்ளாகர் தகராறு செய்ததால், நான் அவ்வப்போது நேரடியாக ப்ளாகர் text boxல் அடிக்கும் மேதாவி என்பதால், சுவடே இல்லாமல் காணாமற்போயிற்று. அதே வன்மத்துடன் மறுபடி எழுதமுடியவில்லை. தன் தரப்பு நியாயங்களை நிலைநாட்டுகிறேனென்றுசொல்லி, மேலும் மேலும் விஷவிதைகளைத் தூவும் பதிவுகளை இந்தப் பதிவு கிண்டலடிக்கிறது - அப்படித்தான் நான் புரிந்துகொண்டேன். உன் அடையாளத்தை விட்டு வெளியே வா என்பதை யாரும் காதுகொடுத்துக் கேட்கத் தயாராயில்லை, அவரவருக்கு அவரவர் தரப்பு நியாயம், அதைப் பிடித்துத் தொங்கிக்கொண்டிருக்கிறார்கள். பதில் சொல்லமுடியாமல் தொங்கிக்கொண்டிருப்பதல்ல அது - காயடிக்கப்பட்ட மூளைகளின் யோசிக்க இயலாமை (அனைத்து ஜாதிகளுக்கும்தான் சொல்கிறேன் என்று கவனமாக disclaimer வரிக்குவரி போடவேண்டியதிலேயே தெரியவில்லையா?). 'யோசிக்க' என்பதை முக்கியமாம, பிற சமூக அவலங்களுக்கிடையில் இங்கே சொல்வது, இங்கே விவாதித்துக்கொண்டிருப்பவர்கள் அனைவரும் படித்த மேதாவிகள் என்பதால்தான். யுனிகோடு கன்வர்ட்டரும் தமிழ்மணமும் எ-கலப்பையும் வெயிலுக்குப் போட்டுக்கொள்ளக் கொடுத்த செருப்பு என்றால், அதைக் காலில் போட்டுக்கொண்டு முன்னோக்கி ஒழுங்காக நடப்பதற்கு முன்பே பக்கத்திலிருப்பவன் செவிட்டில் அடிப்பது தமிழ்ப் புத்தி இல்லாமல் வேறென்ன? அதில் வரும் எரிச்சல்தான். எரிச்சல்படுவது எஸ்கேப்பிஸம் என்பார்கள். இதைப்பற்றி ஒரு பதிவு எழுதநினைத்தேன். எழுதி என்ன இழவு ஆகப்போகிறது இங்கே? படித்தவர்களே இந்த நாயடி அடித்துக்கொண்டிருக்கும்போது படிக்காதவனை என்னத்தைவைத்துக் குறைசொல்லிப் புலம்பிக்கொண்டிருப்பது? வார்த்தைகள் மேலும் வர வர மேலும் மேலும் திரிக்கப்படும் என்பதே நியதியாக இருக்கிறது. இதில விளக்கமாவது புண்ணாக்காவது.
 
This comment has been removed by a blog administrator.
 
முட்டாள் தனமான விஷமதனமான கன்டிக்கதக்க பதிவு அல்வாசிட்டி விஜய்!
 
//
நல்லதோர் வீணைசெய்தே - அதை
நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ
//

//
மனதி லுறுதி வேண்டும்,
வாக்கினி லேயினிமை வேண்டும்
நினைவு நல்லது வேண்டும்,
நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்
//

விஜய்
கடைசியாகத் நீங்கள் தந்த பாடல் நன்றாக இருக்கிறது.

தமிழ் அன்பர்கள் மதங்களையும், சாதியத்தையும் விட்டு விட்டு தரமான பதிவுகளைத் தருதல் வலைப் பூக்களின் வாசிப்பினை அதிகரிக்கும்.

வலைப் பூக்கள் நல்ல விதமாக உபயோகித்து பல உபயோகமான தகவல்களை தருவதால் மட்டுமே நீண்ட காலத்திற்கு நிறைய நண்பர்கள் எந்த வேற்றுமையும் இன்றி படிப்பதற்கு ஏதுவாக இருக்கும்.

முன்பு பல நல்ல விஷயங்களை பகிர்ந்து கொண்டது போல், பதியுங்கள்.

வாழ்த்துக்கள்.
 
மாண்ட்ரீஸர்,

உங்கள் கருத்துகளோடு ஒத்துப்போகிறேன். எனக்கும் இப்போதல்ல எப்போதிருந்தோ ஜாதி சம்பந்தப் பட்ட பதிவுகளென்றால் அலர்ஜி. அதுவும் விஷவிதைகளைத் தூவும் வலைப்பதிவுகளைத் தாண்டிக்குதித்துப்போயிருக்கிறேன். ஒரு பொருட்டாகவும் மதித்ததில்லை. நாம் மதிப்புக் கொடுத்தால்தானே வளரும் என்ற எண்ணந்தான் காரணம். எப்படியும் அவர்கள் மாறமாட்டார்கள். மாறுப்வர்களாக இருந்தால் இப்படியெல்லாம் எழுத மாட்டார்கள். 'தன்னில் நம்பிக்கை இல்லாதவர்களே இம்மாதிரியாக நடந்துகொள்கிறார்கள் என்று போய்விடுவேன்.

நேற்றைக்கு எழுதிய மறுமொழிதான் இந்த விஷயத்தில் முதலும் கடைசியுமானது என்றிருந்தேன்.

ஆனால் நீங்கள் சொன்ன 'அனைத்து ஜாதிகளுக்கும் சொல்கிறேன்' என்ற டிஸ்க்ளெய்மர் இந்த வலைப்பதிவில் இருக்கிறதா? எனக்குத் தெரியவில்லை. இந்த இடத்தில் நானும் ஒரு டிஸ்க்ளெய்மர் குடுத்துவிடுகிறேன். நேற்றைய மறுமொழியில் கொடுத்திருக்க வேண்டியது. நான் சொன்னதும் அனைத்து ஜாதியினருக்குமானது. அடுத்த தலைமுறைக்கு இந்த அழுக்கை காவிக்கொண்டு போகாதீர்கள் என்பது என்னுடைய வேண்டுகோள்.

அப்ப இங்கே எழுதியதை ஏன் 'குளிர்காயும்' பதிவென்று சொன்னேன்?

அனைவரையும் குறிப்பிட்டு எழுதியிருந்தால் முதல் ஆளாக நல்ல பதிவு என்று பாராட்டியிருப்பேன். ஆனால், இங்கேயோ ஒரு சிலர்(கறுப்பி போன்ற தெளிவில்லாதவர்கள் எழுதியிருப்பதைத் தவிர்த்து - அது கிண்டலடிக்கப் படவேண்டியதே) எழுதியதை மட்டும் இங்கே கிண்டலடித்திருப்பது உங்களுக்குத் தெரியவில்லையா? வார்த்தைகளை அதிகப் படியாக உபயோகித்ததுமட்டும் பிழை என்பதுபோல இங்கே சித்தரிக்கப் பட்டிருக்கிறதே. நாகரீகமாக மொழியினை தங்களுக்கேற்றபடி வளைத்து விஷவிதைகளைத் தூவுபவர்களையும் இங்கே சொல்லியிருக்கலாமே??????????????

'படித்தவர்களே இந்த நாயடி அடித்துக்கொண்டிருக்கும்போது படிக்காதவனை என்னத்தை வைத்துக் குறை சொல்லிப் புலம்பிக்கொண்டிருப்பது?'

மிக மிக மிக உண்மை!

-மதி
 
விஜய்,
அசத்திப்புட்டிங்க.. தொடரட்டும் உங்கள் நக்கல்கள் :-).
 
This comment has been removed by a blog administrator.
 
இது எரிகிற தீயில் எண்ணை ஊற்றுகிற செயல். இன்னும் அதிகம் எழுதுங்கள். அப்போ தான் உங்கள் சாயம் வெளுக்கும்
 
இது எரிகிற தீயில் எண்ணை ஊற்றுகிற செயல். இன்னும் அதிகம் எழுதுங்கள். அப்போ தான் உங்கள் சாயம் வெளுக்கும்
 
//கறுப்பி போன்ற தெளிவில்லாதவர்கள் எழுதியிருப்பதைத் தவிர்த்து - அது கிண்டலடிக்கப் படவேண்டியதே//

ஸாரி... அது கிண்டலடிக்கப்படக்கூடியதல்ல... கண்டிக்கப்படக்கூடியது!! அதை எவ்வளவு பேர் கண்டித்தீர்கள்.. இங்கே இப்படி துள்ளிக் குதிக்கிறீர்கள்?! ஆளுக்கொரு நியாயம்.. இதில் படித்தவன், படிக்காதவன் என்றெல்லாம் என்ன பேச்சு வேண்டிக்கிடக்கிறது?! விஜய்.. உங்கள் கருத்துக்களை சொல்வதற்கு உங்களுக்கு முழு உரிமை இருக்கிறது! கண்ட்டினியூ..!!! தொடர்ந்து கொடுங்க அல்வா!
 
அட்ரா சக்கை அட்ரை சக்கை தூங்கி எழுந்திரிச்சி வர்றதுக்குள்ளே எம்மேல இவ்ளோஓஓஓஓ கற்பிதங்களா?. அட்றா சக்கை அட்றா சக்கை.

//மதி: சந்தடிசாக்குல இப்படி ஒரு பதிவா? சகிக்கலை//

சகிக்கலைல்ல. அதே உணர்வு தான் சாதீய பதிவுகளை படிக்கும் எனக்கும்...

//மதி: நீங்கள் சொன்னமாதிரி எழுதுபவர்களைக் கொஞ்சம் பார்த்து எழுதுங்கள் என்று சொல்லலாம். கவனிக்க. எழுதாதே. கோபம் கொள்ளாதே என்றல்ல. கொஞ்சம் பார்த்து எழுதுங்கள் என்று சொல்லலலம். ஏனென்றால் எழுதியதில் இருக்கும் நியாயத்திற்கு பதில் சொல்ல முடியாமல் அந்த வார்த்தைகளைப் பிடித்துத் தொங்கிக்கொண்டிருக்கிறார்கள்.//

என்ன கிண்டலா? எதுக்கு? அறிவுரை சொல்ல போய் என் மேல பூச்சு வரவா? அட சும்மா இருங்கம்மா,யாரு யாரைப் போட்டுத்தாக்கலமென்ற மெண்டாலிட்டியோட(என்னையும் சேர்த்து தான்) இருக்கும் போது அறிவுரையா? அடையாளத்தையும் தாண்டி யோசிக்கமுடியாதவங்க கிட்ட அறிவுரையா?


//மதி: ஆனால், நடுவில் இப்படி எழுதி 'குளிர் காய்பவர்களை' இருக்கிறார்களே... கில்லாடிகள். எங்கேயிருந்துதான்... //

அப்படிதான். இரவெல்லாம் ஒரே பனி. குளிர்காய எழுதினேன். அடபோங்கம்மா நீங்க வேற. அது அது மாறமாட்டேன்னு அங்கே அங்கே நின்னுக்குன்னு இருக்கும் போது, இதுவும் இப்படி தான். மாறாது. இப்படி தான் குளிர் காயும்.

//மாண்டூ: தன் தரப்பு நியாயங்களை நிலைநாட்டுகிறேனென்றுசொல்லி, மேலும் மேலும் விஷவிதைகளைத் தூவும் பதிவுகளை இந்தப் பதிவு கிண்டலடிக்கிறது - அப்படித்தான் நான் புரிந்துகொண்டேன். //

இது தான் 100% உண்மை.எந்த சாதிக்கும் வக்காலத்து வாங்க வேண்டுமென்ற அவசியமுமில்லை. தேவையிமில்லை.ஒருவர் மனதிலும் மாற்றங்கள் நிகழாத போது இப்படி தான் குளிர் காய்வேன்.

//மாண்டூ: எழுதி என்ன இழவு ஆகப்போகிறது இங்கே? படித்தவர்களே இந்த நாயடி அடித்துக்கொண்டிருக்கும்போது படிக்காதவனை என்னத்தைவைத்துக் குறைசொல்லிப் புலம்பிக்கொண்டிருப்பது? வார்த்தைகள் மேலும் வர வர மேலும் மேலும் திரிக்கப்படும் என்பதே நியதியாக இருக்கிறது. இதில விளக்கமாவது புண்ணாக்காவது//

சும்மா திரிக்கிறதா? திரிச்சி மாவாக்கி, சப்பாத்தி சுட்டு சாப்பிடுறாங்க. இதோ பாருங்க எத்தனை பேர் கையில அந்த சப்பாத்தி.....

//ஜென் அண்ணாச்சி: தமிழ் அன்பர்கள் மதங்களையும், சாதியத்தையும் விட்டு விட்டு தரமான பதிவுகளைத் தருதல் வலைப் பூக்களின் வாசிப்பினை அதிகரிக்கும்//

இது நான் உள்பட எல்லோரும் எதிர்பார்ப்பது.

//மதி: ஆனால் நீங்கள் சொன்ன 'அனைத்து ஜாதிகளுக்கும் சொல்கிறேன்' என்ற டிஸ்க்ளெய்மர் இந்த வலைப்பதிவில் இருக்கிறதா? எனக்குத் தெரியவில்லை.

ஆனால், இங்கேயோ ஒரு சிலர்(கறுப்பி போன்ற தெளிவில்லாதவர்கள் எழுதியிருப்பதைத் தவிர்த்து - அது கிண்டலடிக்கப் படவேண்டியதே) எழுதியதை மட்டும் இங்கே கிண்டலடித்திருப்பது உங்களுக்குத் தெரியவில்லையா? வார்த்தைகளை அதிகப் படியாக உபயோகித்ததுமட்டும் பிழை என்பதுபோல இங்கே சித்தரிக்கப் பட்டிருக்கிறதே. நாகரீகமாக மொழியினை தங்களுக்கேற்றபடி வளைத்து விஷவிதைகளைத் தூவுபவர்களையும் இங்கே சொல்லியிருக்கலாமே??????????????//

ஆத்தாடி. நியாயமான கேள்வி தானுங்கோ. ஒரு பானை சோற்றில் சில பருக்கைகளை தான் எடுத்துப் போட்டேன். புரிஞ்சிகிடுவீங்கன்னு நினைப்புல. சோத்து சட்டிய அப்படியே கவுக்கனுமாக்கும் இங்கே. இப்போவே பல அதிமேதாவி மண்டைங்கள்ல்ல ஒரு யோசனை ஓடிகிட்டு இருக்கும். "இப்படி எழுதியிருக்கானே,இவன் பார்ப்பனனோ? அப்படி எழுதியிருக்கானே? அப்ப இவன் தலித்தோ?". அறிவுஜீவிங்களே! உங்கள் வட்டத்தை விட்டு வரமுடியவில்லை என்றால் இப்படி தான் யோசிப்பீங்க. சாரி. யோசிங்க யோசிங்க யோசிச்சிக்கிட்டே இருங்க. அதுக்கு ஒன்னும் செய்ய முடியாதுங்கய்யா.

//அனானி: முட்டாள் தனமான விஷமதனமான கன்டிக்கதக்க பதிவு அல்வாசிட்டி விஜய்!//

முட்டள்தனமான விஷமத்தனமான கண்டிக்கத்தக்க பதிவா? ஹா ஹா.... ஐ டோண்ட் கேர். முட்டாள்ன்னு நீங்க சொல்லி எனக்கு தெரியனுமுன்னு அவசியமில்லை சார்/அம்மா. எப்போ சாதீயங்களை போட்டு தாக்கி கொண்டீர்களோ,எப்போ இந்த பதிவை எழுதுனும்னு நெனைச்சேனோ, அப்பவே உங்ககிட்டயிருந்து வந்து ஒட்டிக்கிட்டதுங்க. இந்த கருத்தை சொல்றதுக்கு அதிமேதாவி தனமெல்லாம் தேவையில்லை, அனானிமஸ்.

//கிறுக்கன்: இது எரிகிற தீயில் எண்ணை ஊற்றுகிற செயல்//

வாங்க மேதாவி. ஏதோ கருத்து சொல்றீங்க, கேட்டுக்கிறேன். நீங்க தீயை மூட்டிவிட்ட இப்படி தான் எண்ணைய ஊத்துவேன். தீ வைக்க கூடாதுன்னு சொல்றதுக்கு உங்கள் குரல் பயன்படல, எண்ணெயை ஊத்துறதை பத்தி சொல்ல வந்திடுச்சாக்கும். அடபோங்கைய்யா.

//இன்னும் அதிகம் எழுதுங்கள். அப்போ தான் உங்கள் சாயம் வெளுக்கும்//

என்ன நான் கறுப்பா? சிவப்பா?ன்னு ஒரு டவுட்டா உங்களுக்கு. ஏன் சார் இந்த ஆராய்ச்சியெல்லாம் எதுக்கு உங்களுக்கு?. தாங்கள் இப்படி தான் சாயம் பூசுகிறதுக்கென்றே அலைந்துக் கொண்டிருக்கிறீர் என்று நினைக்கிறேன். வலைபதிவுகளில் கருத்து தெரிவிக்கிறதுக்கு உங்களுக்கு எவ்ளோ உரிமையிருக்கோ, அதே உரிமை நான் நக்கலடிக்கவும் எடுத்துக் கொள்கிறேன். கண்ணா! நீங்க சொன்னாலும் சொல்லாட்டியும் எழுதிக்கிட்டே தான் இருப்பேன் கண்ணா!. கொஞ்ச நஞ்சம் இருக்கிற சாதீய சாயமும் இப்படி அடிக்கடி எழுதி வெளுத்து போய் வெண்மையாக மாறும் என்றால் அதை ஏற்றுக்கொள்வதில் அதில் என்ன தயக்கம் எனக்கு.

மக்களே! பார்த்துக்கிட்டேயிருங்க. யாராவது வந்து என் மீது சாதீய சாயத்தை பூசிவிட்டு செல்வார்கள். ஹா...ஹா... அப்படி பூசினால் அவர்களின் அறியாமையை எள்ளி நகையாடுவேன். நல்ல காமெடி படத்தைப் பார்த்த உணர்வை தந்து விடாதீர்கள்.

கங்கா, மாயவரத்தான், முத்து அவர்களின் பின்னூட்டத்திற்கு நன்றி.
 
"ஸாரி... அது கிண்டலடிக்கப்படக்கூடியதல்ல... கண்டிக்கப்படக்கூடியது!! அதை எவ்வளவு பேர் கண்டித்தீர்கள்.."
=மாயவரத்தான்

த்தோடா! யாரு யார சொல்றதுனு ஒரு விவஸ்தை இல்லாமப் போச்சு!
நீரு சொல்ற கருத்துகளுக்கு 'கண்டிக்க' வந்திற்றீராக்கும். வாயில வருது.
=வியர்க்குளவி
 
வியர்க்குளவி..I never open my mouth to kill a human being for any cause.. Anyhow, if any ppl will repeatedly unnecessarily "targetting" (plz. note the word targetting) us, I can say the same word (even worser than) of Roza..!
 
இன்னும் ஒண்டும் சொல்லலலையாக்கும். racist (who U include in you (targetted) 'US'??)! keep on waste ur time (what you going to do with it anywayss' answering me, that's what my target now.
=same kulavi
 
//keep on waste ur time (what you going to do with it anywayss' answering me//

Thanks for accepting that itz waste of time to answer ur stupid comments..! 'Racist...I'm now asking the same question... whoz telling this word to whom?!
 
ஹும்....

அடிச்சிக்காதிங்கன்னு சொல்றதுக்காக, அடிச்சிக்க சொல்லி கிண்டலா ஒரு பதிவு. அங்கையும் உட்டேனாப் பார்ன்னு அடிச்சிக்றாங்க.

அடச்சே! என்ன உலகம்டா இது!
 

உங்கள் கருத்துக்களை இட


<< திரும்ப முன் பக்கத்துக்கு போ

This page is powered by Blogger. Isn't yours? தமிழ் அசைபட இணையச் செயலி தமிழ் விக்கிபீடியா

-->