-ல் போட்டுத் தாக்கியது
சாவு கிராக்கி
Difficulty in reading this post due to font issues?
Click here
for a PDF copy. Works best if you right-click the link and select 'Save target as...'
சாவு. யாரும் நினைக்க அஞ்சுவது. யாவரும் தனக்கு எப்போதும் அது நேரக் கூடாதென்று விரும்புவது. பலரின் ஞானக் கண்களை திறப்பது.
ரோமபுரி அரசன் மார்க்கஸ் அரிலியஸ் அன்றே சொன்னார் "நாளை சாகப் போவதாக நினைத்து இன்றே காரியங்களை முடி"
இன்றைக்கு முடிக்கிறதுக்கு காரியங்கள் இல்லாததால் நாளைக்கு எப்படி சாவு வரும் என்று வேண்டுமானால் நினைக்கிறேன்.
நித்திரையில் உயிர் பிரியப் போகிறதா? நெஞ்சைப் பிழியும் வலியுடன் இதயம் நிற்கப் போகிறதா? ஆஸ்துமாவினால் மூச்சி முட்டி மூச்சி நிற்கப் போகிறதா? புற்று நோய்க் கண்டு மரண தேவனை சந்திக்கப் போகிறோமா? பஸ் என் மீது ஏறி உடல் நசுங்கப் போகிறதா? விமானத்தில் பறக்கும் போது கீழே விழுந்து பூமியை முத்தமிட போகிறேனா? துப்பாக்கியால் சுடப் பட போகின்றேனா? கத்தியால் குத்தப்படப் போகின்றேனா? மாடியிலிருந்து தவறி தலைக் கீழாக விழப் போகின்றேனா? கேஸ் அடுப்பு வெடித்து உடல் வேகப் போகிறதா?. வன்முறை கும்பலில் உயிர் போக்கடிக்கப் படப்போகிறதா? அப்படியென்றால் நாளைக்கு ஆபிஸில் மீட்டிங் உண்டா? அய்யோ.... நாளைக்கு ஆபிஸ்ல முடிக்க வேண்டிய முக்கியமான வேலைத் திடீரென ஞாபகத்திற்கு வந்து சாவு கற்பனை தடைப்பட்டு போகிறது.
உடம்பு வெலவெலத்து போய் விட்டது. உடனே எனக்கு என்ன சொத்து இருக்கு, வங்கி கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறதென என் மனது கணக்கு போட ஆரம்பித்தது. ஏனென்றால் சாவு பலரின் ஞானக் கண்களை திறக்கிறது.
மைக்கேல் ஜாக்சனின் பரிணாம வளர்ச்சி
அடுத்தது என்றைக்காவது மதியம் ஒரு 3:00, 3:30 மணிக்கு தூங்கி, அந்திச் சாயும் ஒரு 5:30, 6:00 மணிக்கு எந்திரிச்சி பார்த்து இருக்கீங்களா? அய்யகோ!! இது இன்றைக்கா? இல்லை இது மறு நாள் காலையா? ஒரு வேளை இது இன்னிக்குத் தானோ... இருக்காதே நாம தான் தூங்கி எந்திருச்சாச்சே, ஒரு வேளை மறு நாள் காலையா இருக்குமோ... மணியைப் பார்க்கிறேன்.... குழப்பத்துடன் 6:00 மணியைக் காண்பிக்கிறது... இது சாயங்காலம் 6 மணியா? இல்லை மறு நாள் காலை 6 மணியா? உங்க மூளை அந்த கனத்தை புரிந்துக் கொள்ள முடியாமல் தவிக்கும் தவிப்பை அனுபவித்து இருக்கிறீர்களா?

இந்த பதிவின் வாக்கு எண்ணிக்கை:
. பக்கத்திலுள்ள ஸ்டாரை மவுசால் போட்டுத் தாக்கினால் எனக்கு மவுசு ஏறும். நன்றி:-)
உங்கள் கருத்துக்களை இட
திருப்பி தாக்கியவர்கள்:
நன்றி தங்கமகன். நல்ல ஆழ்நிலை தூக்கத்திலிருந்து திடுமென விழித்துக் கொண்டால் மூளை குழம்பி விடுகிறதென நினைக்கிறேன். அதனால் தான் இந்த குழப்பம்.
இந்த நிகழ்வை அறிவியல் பூர்வமாக விளக்கினால் நல்லாயிருக்கும்.
-அல்வாசிட்டி.விஜய்

ஹலோ, போயும் போயும் மைக்கேல் ஜாக்சனின் பரிணாம வளர்ச்சியின் எல்லையாக எங்கள் ஸ்டார் வார்ஸின் அறிவுஜீவியாய் திகழும் "யோடா" வை வைத்திருப்பதை கண்டிக்கிறேன். ;-) ஜெடாய்களின் குருவாய் இருப்பவரைப் போய், மைக்கேல் ஜாக்சனின் பரிணாம வளர்ச்சியாய் இருப்பது பொருத்தமற்றது, முன்னது மறை கழண்டது, பின்னவர் விஷயஞானி :-)
நரேன், யோடாவை கேவலபடுத்துவதற்காக அல்ல அது. கிடைத்தபடத்தில் யோடோவுக்கு பதிலாக இன்னொருவரை கையில் வைத்திருந்தேன். அவரும் 2010 மைக்கேல் ஜாக்சனுக்கு பொருத்தமாகயிருந்திருப்பார். ஆனா எடிட் செய்ய நேரமில்லை. அதான் போட்டேன். யோடோ இரசிக கண்மணிகள் என்னை மன்னிப்பீர்களாக.
பாண்டியன் ஒரு ஞாயிற்றுகிழமை மூக்கு முட்ட மட்டன் பிரியாணி சாப்பிட்டுவிட்டு போட்ட தூக்கத்தில் மாலை காலையாக மூளைக்கு குழப்பியது. ஆபிஸ் டெண்ஷனோடு பல் விளக்க செல்ல, ஒரு வழியாக மூளை தெளிந்து மாலை எனக் கண்டது. ஆகா அப்போது நான் அடைந்த ஆனந்தித்திற்கு அளவேயில்லை.

<< திரும்ப முன் பக்கத்துக்கு போ