<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d9439067\x26blogName\x3d%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81!!!!!\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLACK\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://halwacity.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://halwacity.blogspot.com/\x26vt\x3d-1566162084738285005', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script> <!-- Remove below comment line to show the content. Added for meta redirection --> <!--

போட்டுத் தாக்கு!!!!!

எள்ளோடு எலி புழுக்கையும் எண்ணைக்காக காயுதாம்

-ல் போட்டுத் தாக்கியது

சிங்கப்பூர் இணைய மக்களுக்கு ஓர் அழைப்பு

Difficulty in reading this post due to font issues? Click here for a PDF copy. Works best if you right-click the link and select 'Save target as...'
இந்த பதிவை போட்டுத் தாக்கியவர் : Vijayakumar
இணையத்தில் இணைந்தோம். இணையத்தில் இணைவோம். சிங்கப்பூர் இணைய வலைப்பதிவர்கள்/வாசகர்கள்/எழுத்தாளர்கள் அனைவரும் ஒன்றுகூட இரண்டாவது முறையாக வாய்ப்பு கிடைத்துள்ளது.

'துளசிதளம்' துளசிகோபல்,நியூசிலாந்து அவர்களின் சிங்கப்பூர் வருகையை முன்னிட்டு இரண்டாவது கூட்டம் கூட்டப்படுகிறது. துளசியாக்கவுடன் தம்பி தங்கைகள் கூடிப்பேசி மகிழ்வது மட்டுமல்லாமல் ஒருவருக்கொருவர் ஆக்கப்பூர்வ விவாதங்களையும், விமர்ச்சனங்களையும் பறிமாறி கொள்ளும் வாய்ப்பாக அமைய வேண்டுமென்ற நோக்கத்துடன் கூட்டப்படுகிறது.

இரண்டாவது கூட்டத்தை கூட்டுவது ரொம்பவும் லேட் பிக்கப்பாகி விட்டது. கூட்டம் போட இடம் கிடைப்பது பிரச்சனையாக இருந்தது. சக இணையவாதி ரம்யா அக்காவின் உதவியால் இடமும் கிடைக்க இந்த வாரயிறுதி கூட்டத்திற்கு இப்பவே களை கட்டத் தொடங்கி விட்டது.

சின்ன வருத்தம் என்னவென்றால் கூட்டம் கூட்டப் போகும் அன்றைய தினம் சிங்கப்பூரில் நிறைய கோவில்களில் கும்பாபிஷேக விழா நடைபெறயிருப்பதால் சில முக்கியதலைகளும் மிஸ்ஸாகிறார்கள்.

ரொம்ப பார்மலாக மைக் வைத்து கூட்டம் ஆரம்பிக்கப்பட்டால் எங்கே கலகலப்பு போய் விடுமோ என்ற பயத்தில், படு கேசுவலாக நடத்த திட்டமிட்டிருக்கிறோம். அங்கு வந்தால் உங்கள் மகிழ்ச்சிக்கு உத்திரவாதம். அது போல் உங்கள் வாய் எப்போதும் பிஸியாக இருக்கவும் உத்திரவாதம் தரப்படுகிறது. பேச மட்டுமில்லாமல் அங்கு கிடைக்கப்போகும் நொறுக்கு தீனிகளும் உங்கள் வாயை பிஸியாக வைத்து இருக்கும்.

எங்களுக்கு தெரிந்த சிங்கப்பூர் இணைய மக்களை தவிர இன்னும் தெரியாத முகங்கள் பல பேர் தமிழ்மணம் முதல் கொண்டு பல தமிழ் இணையங்களை வாசித்து கொண்டும்/பங்களித்துக் கொண்டும் இருக்கலாம். அவர்களையும் நாங்கள் அழைக்கிறோம். நீங்கள் படைப்பாளராகக் கூட இருக்க வேண்டாம், வாசகர்களாக இருந்தாலே போதும். சிங்கப்பூரில் நீங்கள் இருந்தால் நீங்களும் கலந்துக் கொள்ளலாம். கூட்டத்திற்கான சில விவரங்கள் கீழே

நாள்: 20 மார்ச் 2005
நேரம்: மாலை 3:30 மணி

இடம்: லக்கி டவரில் உள்ள விழா அரங்கம் (Function Hall of Lucky Tower)

முகவரி

Lucky Tower Function room(second level)
57, கிராஞ்ச் ரோடு (Grange road)
சிங்கப்பூர் - 249569


இடத்தை அடைய

லக்கி டவருக்கு வரும் பஸ் எண்கள் 75(to Grange road), 65,54,14 மற்றும் 16 (Irwell bank ரோடு/பீட்டர்சன் ரோட்டில் நிற்கும் - அங்கிருந்து 3 நிமிட நடையில்)

MRT-ல் வருபவர்கள் ORCHARD -க்கு வந்தால் அங்கிருந்து 7 நிமிட நடையில் இருக்கிறது.


நீங்கள் வரவிரும்பினால் மேலதிக விவரங்களுக்கு என்னுடைய njvijay@yahoo.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும்.

அனைவரும் அலைகடலென திரண்டு வாரீர். எதிர்பாராத நிறைய பேர்களை அங்கு சந்திக்கலாம் என்ற நம்பிக்கையோடு விடைபெறுகிறேன்.

கொசுறு: துளசிதளத்திலும் இதை பற்றி துளசியக்கா சொல்லியிருக்கிறார்கள். சென்று பார்க்க.

இந்த பதிவின் வாக்கு எண்ணிக்கை: . பக்கத்திலுள்ள ஸ்டாரை மவுசால் போட்டுத் தாக்கினால் எனக்கு மவுசு ஏறும். நன்றி:-)

உங்கள் கருத்துக்களை இட

திருப்பி தாக்கியவர்கள்:
வாழ்த்துக்கள். நல்லா கூட்டம் சேர்க்கறீங்க அப்பு, நடத்துங்க, நடத்துங்க ;-) அப்படியே ஒரமா இந்த அறிவிப்பையும் எல்லோரும் சந்திக்கும் போது போட்டுங்க. என்னோட செல் எண் உங்ககிட்ட இருக்கும்ன்னு நினைக்கிறேன். அதை அப்படியே கொடுத்து, யார் சென்னைக்கு வந்தாலும், உருப்படாம ஒரு 10 நிமிஷம் எங்கிட்ட பேச சொல்லுங்க ;-)))))
 
அண்ணாத்தே விஜய்... chennai-Sing ஒரே ஒரு (return)ticket மட்டும் எடுத்து அனுப்பீட்டியள்னா அங்கன வந்து உங்க மகிழ்ச்சிய நானும் பகிர்ந்துப்பேன்... நொறுக்க வேற நெறய இருக்கும்றீரு... ம்ம்ம் நடத்துங்க... மறக்காம function முடிஞ்சவுடன வெவரமா எழுதுங்க.. நொறுக்குதனையும் சேர்த்து... :)
 
என்னுடைய சார்பிலும் வருபவர்களை வரவேற்கிறேன்.நொறுக்குத் தீனியுடன் அவ்வப்போது "கடி"க்கும் உத்தரவாதம்
 
நிகழ்ச்சி நடக்கும்போது அப்புடியே ஒலி 96.8ஐக் கூப்பிட்டு நம்ம வலை மக்களுக்காக ஒரு பாட்டையும் போட்டுத் தாக்கவும்:)
 
நன்றி நரேன், இளவஞ்சி,சுந்தரவடிவேல்.

இளவஞ்சி, நேரம் வரும்போது நாங்களும் அப்படியே இந்தியா வந்து மீட்டிங் அட்டெண்ட் பண்ணலாம்.:-)

வடிவேல், சூப்பர் ஐடியா சொன்னீங்க போங்க. மீட்டிங் அப்போ கூப்பிட்டுவிட வேண்டியது தான் 96.8

ஆகா நாரேன் 10 நிமிஷமா இல்ல 100 நிமிஷமா? :=)

பெருவாரியாக சிங்கப்பூர் மக்கள் கூட்டத்திற்கு வரும்படி மீண்டும் ஒரு முறை அழைக்கிறேன்.
 
சன் டிவில பாட்டாளி படம் போடறதுக்குள்ள விட்ருவீங்களா?:-)
 
அனானிமஸ் அண்ணாச்சி, பாட்டாளி எத்தனவாட்டி பார்ப்பீங்க அண்ணாச்சி. கொஞ்சம் அங்கே வந்து பாருங்களேன். அப்படியே பாட்டாளி பார்த்து தான் தீருவேன் என்றால் பாதி படம் பாக்க சம்மதமா?
 
யாராவது ஒட்டு மொத்த கூட்டத்தையும் பேச்சுக்களையும் பதிவு செய்து இணையத்துல வெளியிட்டா நல்லாயிருக்கும்.
 

உங்கள் கருத்துக்களை இட


<< திரும்ப முன் பக்கத்துக்கு போ

This page is powered by Blogger. Isn't yours? தமிழ் அசைபட இணையச் செயலி தமிழ் விக்கிபீடியா

-->