-ல் போட்டுத் தாக்கியது
தல தறுதலை
Difficulty in reading this post due to font issues?
Click here
for a PDF copy. Works best if you right-click the link and select 'Save target as...'
தமிழ் நாட்டில் ஆளுங்கட்சி தலைகளும்,எதிர்கட்சி தலைகளும் ஒன்றாம் எண் தறுதலைகள்.
நேற்று ஸ்டாலின் காவல்துறையிடம் அத்துமீறியாதற்காக நடவடிக்கை எடுக்கப்படுமென முதல்வர் சொல்ல ஸ்டாலினையும் விளக்கமளிக்கவிடாமல் செய்ய திமுக வெளிநடப்பு செய்தது. ஆளுங்கட்சியின் இந்த செய்கையை எதிர்த்து காங்கிரஸ் வெளிநடப்பு செய்தது. இதை ஆதரித்து பாமாக மற்றும் எதிர்கட்சிகள் வெளிநடப்பு செய்தது. இதைகண்ட ஆளுங்கட்சி ஏன் சும்மா உட்கார்ந்திருக்க வேண்டுமென அதுவும் வெளிநடப்பு செய்தது.
இன்று காவல்துறை மானிய கோரிக்கைகளுக்கு கருணாநிதியை இழுக்க, விளக்கம் சொன்ன துரைமுருகனின் கருத்தை அவைகுறிப்பிலிருந்து நீக்க, திமுக வெளிநடப்பு செய்ய, காங்கிரஸ் திமுக வால் பிடித்து வெளிநடப்பு செய்ய, அதன் வால் பிடித்து மற்ற கட்சிகள் வெளிநடப்பு செய்யாமல் பே...பே காட்டியது. திரும்ப பாஜாக எச்.ராஜா ஒரு பிரச்சனையை சொல்ல, ஆளுங்கட்சி மறுக்க, பாஜக வெளிநடப்பு செய்ய, டிவிக்கு அவர் பேட்டி கொடுக்க, அது சன் டிவி செய்தியில் ஒளிபரப்ப, நான் டிவியை ஆஃப் செய்ய ரிமோட் தேட.....
ஸ்கூலா இருந்த தலைமை ஆசிரியர் கிட்ட சொல்லி டீச்சரை ஒழுங்க பாடம் நடத்த சொல்லலாம். ஸ்கூல் பையான இருந்தா ஸ்கேலு, கம்பு வச்சி மிரட்டி ஒழுங்க ஸ்கூலுக்கு போக வைக்கலாம். வளர்ந்த எருமை மாடுகளா இருந்த என்ன பண்ண?
தறுதலைகளை விடுங்க. சரி இப்போ ஆப்-லைனில் தலைய வச்சி ஒரு செய்தி, 03-நவம்பர்-2002-ல் அல்வாசிட்டிக்கு என் நண்பரின் தந்தை திரு. நா.பாலசுப்பிரமணியம்(பார்வமணி) அவர்கள் சென்னை எப்.எம்-ல் கேட்ட ஒரு தலைக் கதையை அனுப்பியிருந்தார்.
நான் வெளியே கிளம்பும்போது, மனைவி கேட்டாள் எங்கே போறீங்க, தலைக்கு மேலே வேலை இருக்கு என்றாள். பிரெண்ட் கல்யாணத்திற்கு போய் தலையை காட்டிவிட்டு வந்துடறேன் என்றேன். அப்போ பக்கத்துவீட்டு மாமி வந்து புலம்பினாள்."என் பையன் தறு தலையா சுத்தரான். வீட்டுக்காரரிடம் சொன்னா, எல்லாம் என் தலை எழுத்து என்கிறார். வீட்டுக்காரர் ஒரு பக்கம், பையன் ஒரு பக்கம், இரு தலை எறும்பு போலே தவிக்கிறேன்". அதற்கு நான் சொன்னேன், "உங்கள் பையன் தலைக்கு மேல் வளர்ந்து விட்டான், அவனுக்கு இப்போ தலை கால் புரியாது. நான் உங்க வீட்டு விஷயத்தில் தலை இட முடியாது. அப்படியே தலையிட்டால் உங்கள் வீட்டில் எங்கள் தலை உருளும்" என்று சொல்லிவிட்டு கிளம்பினேன்.
என் எதிரில் ஒருவர் தலை தெரிக்க ஓடி வந்து கொண்டிருந்தார். என்ன விஷயம் என்று கேட்க, அவர் சொன்னார்,"நாய் தொரத்தரது வேஷ்டியை வேறே கவ்வி கிழித்து விட்டது" என்றார். "நல்ல வேளை உங்களை கடிக்காமல் விட்டதே. தலைக்கு வந்தது தலைப்பாகை யோட போயிற்று. இனிமேல் இந்த தெரு பக்கம் தலை வைத்து படுக்காதீர்கள்" என்றேன்.
கல்யாணவீட்டிற்கு போனால் அங்கு பிள்ளை வீட்டார் பெண் வீட்டாரிடம் நீங்க தலைகீழே நின்னாலும், வரதஷிணை கொடுத்தால் தான் பெண் கழுத்தில் தாலி ஏறும் என்று கத்திக்கொண்டிருந்தார். பெண்ணின் தகப்பனார் சொன்னார் " 2 மாதத்தில் தலையை அடகு வைத்தாவது, பணத்தை கொடுத்துவிடுகிறேன், மீதி ஏதாவது இருந்தால் தலை தீபாவளியின் போது கொடுத்துவிடுகிறேன். இப்பொழுது தாலி கட்டசொல்லுங்கள்" என்றார்.
தலைக்கு ரூ.50 மொய் எழுதிவிட்டு சாப்பிட போனேன். அங்கு தலை வாழை இலை போட்டு சாப்பாடு போட்டார்கள் சாப்பிட்டுவிட்டு கிளம்பினேன்.வாசலில் பிச்சைகாரர்கள். தலைக்கு ரூ 1/- கொடுத்தேன். அவன் என்னை வாழ்த்தி தருமம் தலை காக்கும் என்றான்
வழியில் நண்பனை பார்த்தேன். எங்கே இந்த பக்கம் என்றேன். தங்கைக்கு தலைபிரசவம் ஆஸ்பத்திரிக்கு போறேன் என்றான். என்ன ஆச்சரியம் சிகரெட்டு பிடிக்க காணோமே என்றேன். அதை எப்போவோ தலை முழுகிவிட்டேன், வா காப்பி சாப்பிடலாம் என்றான் நண்பன். இல்லை நான் போகனும் அதென்ன அப்படி தலை போகிற காரியம் ஓடனும்கிறே என்றான்.இல்லையப்பா, புறப்படும்போதே என் மனைவி தலைக்கு மேலே வேலை இருக்கு சீக்கிரம் வங்கோன்னு சொல்லி இருக்கா அதனாலே டைமே இல்லை நான் வருகிறேன் என்று புறப்பட்டேன்.
ஆரம்பத்திலிருந்து தலை தலை என்று சொல்லி வாசகர்களுக்கு தலை சுற்றிக்கொண்டிருக்கும் . தலையைச் சுற்றி மூக்கை தொடாமல் நேராவே விஷயத்திற்கு வருகிறேன். எப்பவுமே அனாவசியமான விஷயத்தில் தலையை பிய்த்துக் கொள்ளாமல் நல்லதை மட்டும் எடுத்துக்கொண்டு மற்றவைகளை விலக்கிவிட்டு தலைகனம் இல்லாமல், மற்றவரிடம் அன்பு செலுத்துவதில் ஒரு தலை பட்சமாக இருக்காமல் தலை சிறந்து வாழ்வதை நம் தலையாய கடமையாக கருதுவோம்.
எத்தனை தலைகள்? சொன்னா தலைக்கு ஒரு குட்டு கிடைக்கும். உங்களுக்கு தலைவணங்கி விடைபெறுகிறேன்

இந்த பதிவின் வாக்கு எண்ணிக்கை:
. பக்கத்திலுள்ள ஸ்டாரை மவுசால் போட்டுத் தாக்கினால் எனக்கு மவுசு ஏறும். நன்றி:-)
உங்கள் கருத்துக்களை இட
திருப்பி தாக்கியவர்கள்:
எல்லாம் சரி தலை! //தலை வாழை இலை போட்ட// இடத்துல, ஒரு தலையை கண்டுக்காம விட்டதால, அந்த தலை என் தலையை உலுக்குது? இதுக்கு சரியான பரிகாரம் செய்யாட்டா, என் தலை சுக்கு நூறா வெடிச்சுடுமாம். என் தலையை வெடிக்க விடலாமா? அல்லது உங்க தலையை கொடுக்கறீங்களா? - சந்திரன்
சந்திரன், **தலை** வாழை இலை போட்ட இடத்தில இருந்த தலை, 'தலை'மறைவு வாழ்க்கை வாழ்ந்ததுனால அத்'தலை'யை கண்டுக்கலை.
மேலும் தலை வாழை இலை பெரிசா இருந்ததால் அது போட இடம் பத்'தலை'.
மேலும் தலை வாழை இலை பெரிசா இருந்ததால் அது போட இடம் பத்'தலை'.
உங்கள் கருத்துக்களை இட
<< திரும்ப முன் பக்கத்துக்கு போ