<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d9439067\x26blogName\x3d%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81!!!!!\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLACK\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://halwacity.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://halwacity.blogspot.com/\x26vt\x3d-1566162084738285005', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe", messageHandlersFilter: gapi.iframes.CROSS_ORIGIN_IFRAMES_FILTER, messageHandlers: { 'blogger-ping': function() {} } }); } }); </script> <!-- Remove below comment line to show the content. Added for meta redirection --> <!--

போட்டுத் தாக்கு!!!!!

எள்ளோடு எலி புழுக்கையும் எண்ணைக்காக காயுதாம்

-ல் போட்டுத் தாக்கியது

சிங்கப்பூர் இணைய மக்கள் கூட்டம்

Difficulty in reading this post due to font issues? Click here for a PDF copy. Works best if you right-click the link and select 'Save target as...'
இந்த பதிவை போட்டுத் தாக்கியவர் : Vijayakumar
சிங்கப்பூர் புதுயுக இணைய எழுத்தாளர்கள், வாசகர்கள் கூட்டம் 20/மார்ச்/2005 அன்று 3:30 மணியளவில் நடந்தது. அருமை தம்பி ஈழநாதன் அவர்கள் விவாதிக்கப்பட்ட கருத்துக்களை அவர் பதிவில் புட்டு புட்டு வைக்கிறேன் என்றதால் என் பாணியில் நடந்த நிகழ்ச்சியை மட்டும் மேலோட்டமாக சொல்லிவிட்டு ஓடிப் போய்விடுகிறேன்.

இரும்பு அடிக்கும் இடத்தில் ஈ -க்கு என்ன வேலை இருக்கப் போகிறது என என் மனது போனவாரம் முழுவதும் ஈ-யாக ரீங்கரிமிட்டுக் கொண்டிருந்தது. நான் என்ன பேசப்போகிறேன் என்ற நினைத்தவுடன் அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு எல்லாம் சேர்ந்துக் கொள்ள குறைந்தது கூட்டத்தை ஒருங்கிணைக்கலாம் என்ற நோக்கில் ஜெயந்தியக்காவின் நோக்கத்திற்கு உறுதுணையாக நிற்க முடிவு செய்தேன். ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் ஒரு துரும்பு கூட எடுத்துப் போடாமல் கீ போர்டை தட்டி தட்டி மின்னஞ்சல் அனுப்பி கூட்டத்திற்கு அறைக்கூவல் விட்டுக் கொண்டிருந்தேன். ஒரு வழியாக கூட்டம் சேர்ந்தது. கூட்டம் நடத்த இடம் கிடைக்காமல் அல்லாடிக் கொண்டிருந்த போது ரம்யா அக்கா அவர்கள் அவர்களின் இருப்பிடத்தின் ஃபங்ஷன் ஹாலை ஏற்பாடு செய்துக் கொடுத்தார்.

குயின்ஸ்டவுனில் எம்.ஆர்.டியில் ஏறி ராஃபிள்ஸ் பிளேசில் இறங்கி திரும்ப இன்னொரு எம்.ஆர்.டி எடுத்து ஆர்ச்சர்டில் இறங்கி அடித்த பட்டை வெயிலில் கிராஞ்ச் ரோடை நடராஜா சர்வீசில் தேடி தேடி தேடி தேடி தேடி லக்கியாக லக்கி டவரை கண்டெடுத்து ரம்யா அக்கா வீட்டில் இறங்கிய போது, இருக்கைகள் ஃபங்ஷன் ஹாலில் ஏற்கனவே அரேஞ்ச் செய்யப்பட்டு விட்டதால் நீங்கள் ரெஸ்ட் எடுங்க என்று சொன்னதும், என் காதில் பாலாறும் தேனாறும், என் முதுகில் வியர்வையாறும் ஓடியது. முதல் ஆளாக வந்திருந்த ஜெயந்தி சங்கர் அக்காவுடன் அருள்குமரனையும், செந்தில்நாதனையும் இணைத்துக் கொண்டு ஃபங்ஷன் ஹாலுக்கு படையெடுத்தோம்.

ஃபங்ஷன் ஹால் இனிமேயிருந்து விழா அரங்கம்(தமிழுப்பா). விழா அரங்கத்தில் நுழைந்ததும் சாப்பிடும் பண்டங்கள் அடுக்கி வைத்திருந்ததைக் கண்டு மனம் மகிழ்ந்தேன். வெளியில் நின்று நண்பர்களுக்கு வழிச் சொல்லிக் கொண்டிருந்த போது துளசியக்கா தன் மகளுடன் உள்ளே நுழைய 'இவங்க யாரு புதுசா?' என்று முறைத்துக் கொண்டே வரவேற்றேன். உள்ளே அவர்களை கூட்டிக் கொண்டு நுழைந்தப் போது தான் தெரிந்தது அவர்கள் தான் துளசியக்காவென்று. ஹி ஹி... என்று வழிந்துக் கொண்டே நான் தான் அல்வாசிட்டி விஜய் என அவர்களிடம் அறிமுகம் செய்துக் கொண்டேன்.

லக்கி டவரின் வாசலுக்கு சென்று நண்பர்களை வரவேற்றுக் கொண்டிருக்க ஈழநாதன் வழிதெரியாமல் என்னுடைய போனில் கதறிக் கொண்டிருந்தார். எனக்கு தெரிஞ்ச வரையில் அவருக்கு வழிசொல்லிவிட்டு, பேசாம டாக்ஸி எடுத்துட்டு வாங்க என்றேன். குமார், ரமேஷ் (மானசேஷன்) வர அடுத்து பாலுமணிமாறன் வர அடுத்து திரு. மா.கோவிந்தராசன் அவர்கள் எம்.ஜி.ஆர் ஸ்டைலில் கை ஆட்டிக் கொண்டே தமிழாசிரியர் திரு.பி.சிவசாமியுடன் காரில் இறங்க, அவர் கையில் இருந்த பெரிய பண்டிலை(Bundle) திகிலுடன் பார்த்துக் கொண்டிருந்தேன்.


(படத்தை க்ளிக்கி உள்ளே சென்று பெயரையும் மேலும் சில படங்களையும் பார்க்கவும்)


அங்கிருந்த செக்யூரிட்டி வர்றவங்களை நீங்க பார்த்துகிடுங்க சார் என்று என்னை சொல்லிவிட்டு சென்றுவிட்டார். ஒரு வழியாக ஈழநாதன் வந்து சேர, பின்னாடியே அன்பு லாரியில் தமிழ் புத்தகங்களை அள்ளிப் போட்டுக் கொண்டு வந்து இறங்கினார். [இந்தியாவிலிருந்து வந்திறங்கிய புத்தகத்தின் புதிய மெருகு குலையாமல் கொண்டு வந்து கேட்டவர்களுக்கெல்லாம் படிக்க கொடுத்தார். உண்மையில் மனத்திடமும் நல்ல எண்ணமும் வேண்டும். நான் இப்படியே கொடுத்து நிறைய தொலைத்துவிட்டதால், இப்போதெல்லாம் NO]

கூட்டத்திற்கு முன் ரமேஷ் அவர்கள் தான் வரைந்த ஓவியத்தை கண்காட்சிக்காக வைத்தார். கூட்டம் வழக்கமான கலகலப்புடன் ஆரம்பித்தது. நோக்கமில்லாமல் சிறிது நேரம் கலகலப்பாக ஒருவரையொருவர் அல்வா கிண்டிக் கொண்டிருக்க, நான் டென்ஷனுடன் திரு. 'கேப்டன் எம்.ஜி.ஆர்'-ஐ பார்த்துக் கொண்டிருந்தேன். ஒரு வழியாக சுய அறிமுகம் ஆரம்பம் ஆக 'மைக்காலேஞ்சலோ' ரமேஷ், 'புன்னகை மன்னன்' அன்பு, 'வாசக சிகாமணி' செந்தில்நாதன், 'don't do'அருள்குமரன், 'கதாவிலாசம்'பாலுமணிமாறன்,'வழிப்போக்கன்' மூர்த்தி,'கேப்டன் எம்.ஜி.ஆர்'மா.கோ, 'தமிழா(சிரியர்)' சிவசாமி, 'Would be'எம்.கே.குமார், 'சின்னதம்பி'ஈழநாதன், 'அ(ட)ப்பாவி'விஜய், 'தூள்'துளசியக்கா, 'தன்னடக்க பேரொளி' ஜெயந்தியக்கா, 'தொண்டு' ரம்யாக்கா போன்ற சான்றோர்கள் தங்களை சுருக்கமாக அறிமுகப்படுத்திக் கொண்டனர். இதப்பத்தின விரிவான எழுத்துக்கு மூர்த்தியின் வலைப்பதிவை பார்க்கவும்.

கொஞ்சம் சீரியஸான மேட்டர்:
1) ரம்யா அக்கா சிங்கப்பூர் என்.ஆர்.ஐ என்ற அமைப்புடன் செய்து வரும் நல்ல தொண்டுகளை விளக்கினார். கைத்தட்டலுடன் அட்டகாசமான தொண்டை மனம்மகிழ பாராட்டினோம்.
2) எழுதுவது மட்டும் எழுத்தாளனின் கடமை முடிவதில்லை என்று திரு. மா.கோ ஆரம்பித்து எழுத்தாளர்கள் ஆக்கப்பூர்வமான செயல்களிலும் ஈடுபடவேண்டுமென படு சீரியஸாக மனிதர் பேசிக் கொண்டிருந்தார். சிங்கப்பூர் தமிழ் குழந்தைகளின் மொழிநிலையை விளக்கியதோடு ஆக்கப்பூர்வமாக ஏதாவது செய்ய கோரினார்
3) சிங்கப்பூர் தமிழ் எழுத்துக்கள் ஆவணப்படுத்தப்பட வேண்டுமென ஈழநாதன் வைத்த கருத்தின் மேல் அபிப்ராயங்களும் விவாதங்களும் நடந்தது.
4) 'இலக்கியம் என்றால் என்ன?' என்று துளசியக்கா கேட்ட கேள்விக்கு ரமேஷ் அவர்கள் அருமையாக விளக்கினார். பலநாட்டு எழுத்துக்களையும் மேஜிக்கல் ரியாலிசம், நியோ ரியாலிசம், எக்ஸிஸ்டன்ஷியலிசம் என புரியாத மொழியில் பேசிக் கொண்டிருந்தார்.
5) பொதுவாக ப்ளார்களை பற்றியும், திண்ணை போன்ற குழுமங்களை பற்றியும் விவாதம் நடைப்பெற்றது.
6) நல்ல மொழிப்பெயர்ப்பாளர்களைப் பற்றி ஈழநாதனும், ரமேஷீம் கருத்துக்களை பகிர்ந்துக் கொண்டனர்.

இதற்கு இடையில் அன்பு அவர்கள் தான் சேர்த்து வைத்த கணினி தமிழ் சொத்துக்களை அழகாக சி.டியில் போட்டு அருமையான கவர் போட்டு 'குப்பை-குப்பை மட்டுமல்ல' என்று தலைப்பிலிட்டு ஆளுக்கொரு சி.டி இலவசமாக வழங்கினார். 'எனக்கே எனக்கா.... இது எனக்கே எனக்கா' என்று என் மனது பாடல் படித்தது.

திரு.சிவசாமி அவர்கள் கொண்டுவந்த பொட்டலத்தை பிரிக்க நான் திங்கிறதோ என்று ஆவலுடன் பார்க்க, 'தமிழா' என்ற தான் எழுதிய புத்தகத்தை அறிமுகப்படுத்தினார். ஆவலாக ஆளுக்கொரு புத்தகத்தை கையில் எடுத்து மேய்ந்துக் கொண்டிருந்தோம். அவர் கொடுத்த புத்தகத்திற்கு $10 என்பது மிகக் குறைவு. தமிழ்சான்றோர்களைப் பற்றி சொல்லும் அந்த புத்தகம் மிக அருமை. நம் மக்களும் அந்த புத்தகத்தை படிக்க வேண்டுமென்ற ஆவலுடன் தலைக்கு $10 கொடுத்தனர். புத்தகத்தை படிப்பதும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்ட போதும் அந்த விழிகள் 'பக் பக் பக் பக் மாடப்புறா' என்று பாட்டு பாடிக் கொண்டிருந்தது.

வேலையிருக்கிறதென மா.கோ அய்யாவின், சிவசாமி அய்யாவும் கிளம்பி விட்டார்கள்.

அய்யய்யோ மறந்து போச்சே..... ஆங் ஞாபகம் வந்திருச்சி.... சூடான டீயுடன் கேக்கும் சுவைத்து காரமும் நொறுக்கிக் கொண்டே பேசினோம்.

அருள்குமரன் அவர் கண்டுபிடித்திருந்த செல்போன் படிப்பகம் என்ற தொழில் நுட்பத்தை காண்பித்து அசத்தினார். அவர் செல்போனை பார்க்க பார்க்க பொறாமையாக இருந்தது. ப்ளாஷ் கான்பெரன்ஷில் state-of-art போன் இனாமாக கிடைத்ததாம். மூளையை வைத்துக் கொண்டு சும்மாயிருக்காமல் இரவு பகல் பாராமல் உட்கார்ந்து செல்போன் தமிழ் படிப்பகத்தை உருவாக்கிவிட்டார். அப்படியே கூட்டங்களில் டோண்டு(Don't do)களாக சில கட்டளைகளை (மதுர விஜய் ஸ்டைலில் 'இது கட்டளை' என்று சொல்லி) வைத்தார். கட்டளைகள் நல்லதான் இருந்தது.

துளசியக்கா நியூசிலாந்திலிருந்து கொண்டு வந்திருந்த பரிசுப் பொருளை எங்களுடன் பகிர்ந்துக் கொண்டார். இடையில் வந்து எங்களுடன் இனைந்துக் கொண்ட பனசை நடராஜன் அவர்களுடன் ஒரு விவாதம் சூடு பிடித்தது. நீங்கள் ஏன் பத்திரிக்கையில் எழுதுவதில்லை என்ற கேள்வியை கேட்க, எழுத்து சுதந்திரம் வேண்டுமென்று தொடங்கி பல நல்ல பாஸிடிவ், நெகடிவ்கள் விவாதிக்கப்பட்டன.

ஆளாளுக்கு அளவளாவிக் கொண்டிருந்தோம். பிறகு அருமையான போட்டோ எடுக்கும் வைபவத்தை வைக்க கூட்டம் இனிதே நடந்தேறியது.



இந்த பதிவின் வாக்கு எண்ணிக்கை: . பக்கத்திலுள்ள ஸ்டாரை மவுசால் போட்டுத் தாக்கினால் எனக்கு மவுசு ஏறும். நன்றி:-)

உங்கள் கருத்துக்களை இட

திருப்பி தாக்கியவர்கள்:
¿ýÈ¢ Å¢ƒö, À¾¢×õ À¼í¸Ùõ(Á¢¸×õ ¦¾Ç¢Å¡¸!) þÃñΧÁ ¿øÄ¡ÕìÌ. ÍšÊÂÁ¡ö þÕóÐîÍ!·§À¡ð§¼¡ ¡÷ ±Îò¾¡í¸?

«ýÒ¼ý
(Ãí¸)Á£É¡
 
மீனா அவர்களின் பின்னூட்டம் யூனிகோடில்...


-------------------------------
நன்றி விஜய், பதிவும் படங்களும்(மிகவும் தெளிவாக!) இரண்டுமே நல்லாருக்கு. சுவாரஸ்யமாய் இருந்துச்சு!·போட்டோ யார் எடுத்தாங்க?

அன்புடன்
(ரங்க)மீனா

-------------------------------
 
//பல நல்ல பாஸிடிவ், நெகடிவ்கள் விவாதிக்கப்பட்டன.// நீங்கள் எழுதியிருப்பதை பார்க்கும்போது உபயோகமான தகவல்களுடன் நிகழ்ச்சி சுவாரஸ்யமாக இருந்திருக்கும் என்று தோன்றுகிறது. மூர்த்தியும் தனது வலைப்பதிவில் சிறப்பாக விவரித்துள்ளார். ஒரு நல்ல கலந்துரையாடலை மிஸ் பண்ணிவிட்டேன் என்று தோன்றுகிறது.

- சலாஹுத்தீன்
 
Nice PATHIVU.... as usual nallaa "poottu thaaki" irukinga!!!

Meendum , Meendum thaakka vazhaththukkal!
 
நன்று!!
 
பின்னூட்டத்திற்கு நன்றி மீனா,சலாஹுத்தீன்,பாலு, சுந்தரவடிவேல்.

மீனா எல்லாரும் குழுவாக இருக்கும் முதல் படத்தை துளசியக்கா அவர்களின் மகள் எடுத்தார்கள். மற்ற இரண்டு படங்கள் நான் எடுத்தது. எல்லாமே என் கேமிராவில் தான் :-)

சலாஹுத்தீன், அடுத்த முறை கட்டாயம் கலந்துக் கொள்ளுங்கள்.
 
வணக்கம் விஜய்
இம்முறை வர எண்ணி இயலாமல் போய்விட்டது. அடுத்த சந்திப்புக்கு அவசியம் வருகிறேன். நன்றி .
 
¦¾Ç¢Å¡ â§À¡÷𠦺ﺢÕ츣í¸!
¿øÄ À¾¢×.

Á¡É…¡-¦ƒý:)
 
சிங்கப்பூர் வலைஞர்களைப் பார்த்தா பொறாமையாக இருக்குது. நடத்துங்க, நடத்துங்க.
 
அனானிமஸ் விட்ட பின்னூட்டத்தின் யூனிகோட் வடிவம்.

"தெளிவா ரிபோர்ட் செஞ்சிருக்கீங்க!
நல்ல பதிவு.

மானஸா-ஜென்:)"
 
நன்றி வீரமணி இளங்கோ. அடுத்த மீட்டிங்கில் கட்டாயம் உங்களை எதிர்பார்ப்போம்.

நன்றி 'மானஸா-ஜென்'ரமேஷ். அன்றே உங்களிடம் கேட்க தவறிவிட்டேன். 'மானஸா-ஜென்' என்றால் என்ன?

காசி தலீவா, எல்லாத்துக்கும் ஒரு கொடுப்பினை வேணும். இது தான் நேரம் என்கிறீர்களா?
 
கலக்குங்க விஜய். சிங்கபூரிலும் தமிழ் கலட்டா :-)
 
//சிங்கப்பூர் தமிழ் எழுத்துக்கள் ஆவணப்படுத்தப்பட வேண்டுமென ஈழநாதன் வைத்த கருத்தின் மேல் அபிப்ராயங்களும் விவாதங்களும் நடந்தது.//
நல்ல விசயம். முயற்சி செய்யுங்கள்.
விஜய், உங்களைப் பார்த்தால், நான் ஈழத்தில் வன்னியில் பார்த்த (எந்த நேரமும் சிரித்துக்கொண்டிருக்கும்) முக்கியமான ஒருவரின் look அடிக்கிறது. ஈழநாதனிடம் கேளுங்கள், அவர் சொல்லுவார் அந்த நபர் யாரென்று.
அதுசரி, ஈழநாதன் beer குடித்துக்கொண்டு நிற்கும்போது எடுத்த போட்டோவை ஏனிங்கு சேர்க்கவில்லை :-).
 
விஜய்...உங்களிடம்...பாரதிராஜாவால் புதிய வார்ப்புகள் படத்தில் அறிமுகப்பட்ட ஒருவரின், முந்தானை முடிச்சு போன்ற நல்ல படங்களை இயக்கிய ஒருவரின் சாயல் இருக்கிற விஷயத்தை இந்தப் பின்னூட்டத்தின் வழி சொல்வதற்கு எனக்கென்ன பைத்தியமா பிடிச்சிருக்கு? எனவே ----என்னை கட்டி வச்சு அடிச்சாலும் அந்த மேட்டரை இந்த பின்னூட்டத்தின் வழி உஙக மேல சத்தியமா சொல்ல மாட்டேன், மாட்டேன், மாட்டேன்ன்ன்ன்ன்....
 
நன்றி டி.சே, பாலு மணிமாறன்.

கொஞ்சம் லூஸ் டாக் இப்போ:
-----------------------------

என் மூஞ்சை பார்த்து தெரு நாய்கள் எல்லாம் விரட்டிய காலம் போய் பதிவுகளின் பின்னூட்டம் வழியாக விரட்டும் அளவுக்கு என் மூஞ்சி ஆயிடுச்சே.

டிசே என்னாடாவென்றால் எந்த நேரத்திலும் சிரித்துக் கொண்டிருக்கும் ஒருவரின் சாயல் இருக்குன்னு சொல்றாரு. எனக்கு தெரிஞ்சி எந்நேரமும் சிரிக்கும் ஒருவர் 'பைத்தியம்' தான். ஹா... ஹா... எப்படி கரெக்டா கண்டுபிடிச்சீங்க டிசே?

பாலு ஒரு கலத்துல கலக்கிட்டுயிருந்த பாக்கியராஜ் மாதிரியா நான் இருக்கேன்? :-) இருந்தாலும் நான் தான் முருங்கை காய் அதிகம் சாப்பிடறதில்லையே? அப்பறம் எப்படி?
 
அன்புவின், "குப்பை-குப்பை மட்டுமல்ல!" சிடி அற்புதமானது. மிகவும் நல்ல காரியம் பண்ணினார்! எவ்வளவு போட்டோக்கள், எவ்வளவு விஷயங்கள்! ரொம்ப நன்றி அன்பு அண்ணா! (அண்ணா- நன்றி மூர்த்தி!)

ஆனா, விசய், ரொம்பத்தான் வாயெ பாக்குறீக, வவுத்த பாருங்க தம்பி. கேசரி எப்புடி இருந்துச்சி தெர்யுமா? சூப்பர்!

கொஞ்சம் பைட்டு-கொஞ்சம் பாட்டுன்னு விஜய் கணக்கா எழுதியிருக்கீங்க! நன்றி!

இன்னாபா அது would be? நல்ல பட்டம் நெறைய கீதுப்பா. (எனக்கு மட்டும்) இனி போட்டுத்தாக்கு, இன்னா?

எம்.கே.
 

உங்கள் கருத்துக்களை இட


<< திரும்ப முன் பக்கத்துக்கு போ

This page is powered by Blogger. Isn't yours? தமிழ் அசைபட இணையச் செயலி தமிழ் விக்கிபீடியா

-->