<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d9439067\x26blogName\x3d%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81!!!!!\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLACK\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://halwacity.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://halwacity.blogspot.com/\x26vt\x3d-1566162084738285005', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script> <!-- Remove below comment line to show the content. Added for meta redirection --> <!--

போட்டுத் தாக்கு!!!!!

எள்ளோடு எலி புழுக்கையும் எண்ணைக்காக காயுதாம்

-ல் போட்டுத் தாக்கியது

அப்பாவின் ட்ரெங்க் பெட்டி

Difficulty in reading this post due to font issues? Click here for a PDF copy. Works best if you right-click the link and select 'Save target as...'
இந்த பதிவை போட்டுத் தாக்கியவர் : Vijayakumar
சிங்கப்பூருக்கு கிளம்பி வருகையில் என் அப்பாவிடம் தொலைப்பேசிக் கொண்டிருந்தேன். "குழந்தையும் பொண்டாட்டியும் வீட்டில் இல்லாததால் உனக்கு நிறைய நேரம் கிடைக்கும். நேரம் கிடைக்கும் போது ஆங்கிலம் படி" என்றார். எனக்கு கோபம் கோபமாக வந்தது. பள்ளி பருவத்தில் தமிழ் மீடியத்தில் படித்துக் கொண்டு நான் ஆங்கிலத்தில் மக்காக திரிந்த காலத்தை நினைவில் வைத்துக் கொண்டு இன்னமும் சொல்லி காட்டிக் கொண்டிருக்கிறாரே என கோபம் வந்தது. ஒரு நிறுவனத்தில் பலவருடங்களாக வேலை பார்த்துக் கொண்டிருக்கிறேன். ஆங்கிலம் பேசும் அமெரிக்காவில் இரண்டரை வருடம் குப்பையை கொட்டியிருக்கிறேன். சிங்கப்பூரில் 1 வருடத்திற்கு மேலாக குப்பையை கொட்டுகிறேன். ஆங்கிலம் தெரியாமல் எப்படியாம்? அவரை சிங்கப்பூருக்கு அழைத்து வந்திருந்த போது கூட வேண்டுமென்றே போகும் கடைகளுக்கு எல்லாம் அவரை இழுத்துக் கொண்டு போய் கடைக்காரனிடம் என் நா துவள அவர் உள்ளம் குளிர சொத்தையே சொள்ளையோ ஆங்கிலம் தப்பு பண்ணாமல் பேசிக் காட்டியிருக்கிறேன். இப்படி இருந்தும் ஆங்கிலம் படி என்கிறாரே. ஸ்கூல் படிச்ச காலத்தில் ஆங்கில அகராதியை எடுத்துக் கொடுத்து அதில் A-வில் ஆரம்பித்து Z-ல் முடியும் வரை தினமும் பத்து வார்த்தைகளை மனப்பாடம் செய்ய சொன்னாரே. அதே மாதிரி இப்பவும் செய்ய வேண்டுமோ? என்று கோபம் வந்தது.

சில நாள் முன்பு தன் பேரக்குழந்தையை பார்ப்பதற்காக அவர் மதுரைக்கு வந்திருந்தார். அந்த இரவில் நான் தூங்கியிருப்பேன் என நினைத்து அங்கே திறந்திருந்த என் பையை பார்த்து என் அம்மாவிடம் சத்தம் போட்டுக் கொண்டிருந்தார். அன்று தான் மதுரை இலக்கிய பண்ணைக்கு சென்று சில புத்தகங்கள் வாங்கியிருந்ததால் அந்த பை நிறைய புத்தகம்.

"இவன் ஏன் தான் இவ்வளவு புத்தகம் வாங்கி பணத்தை வேஸ்ட் செய்கிறானோ? மெட்ராஸ்ல அவன் வீட்டுக்கு போன அவன் வீடு நிறைய புஸ்தகம் தான். இவன் தான் இப்படின்ன இவன் பொண்டாட்டியும் இப்படி தான். புஸ்தகத்தை வேஸ்டா வாங்குறங்களே தவிர படிக்கிறதில்லை" என்று கூப்பாடு போட்டுக் கொண்டிருந்தார். ஆனால் இன்று தொலைபேசியில் என் கோபம் சில வார்த்தைகளில் வெளிப்பட்டதை அறிந்து என் அப்பா "நான் சொன்னது ஆங்கில புத்தகங்களை.." என்று தழுதழுத்த குரலில் சொன்னார்.

அவரிடம் பேசி முடித்த அன்றிலிருந்து இன்று வரை அவர் சொன்ன விசயங்களை அசை போட்டுக் கொண்டிருந்தேன். சிறுவயதில் என் வாசிப்புக்கு முதலில் தீனி போட்டவர் அவர் தான். அவருடைய பழைய ட்ரங்கு பெட்டியில் படுத்திருக்கும் குண்டு குண்டான புத்தகங்களில் என் வாசிப்புக்கு பிள்ளையார் சுழி போட்டவர். வீதி நாடகங்களில் நடித்தும், இயக்கியும் இளைமையில் சில காலங்களை செலவழித்தவர் என் தந்தையார். அவர் எழுதிய நாடகங்களின் மீந்து போன சில துண்டு காகிதங்களும், கண்ணதாசன்,பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், ஜீவா என ஆரம்பித்து பல புத்தகங்கள் அந்த ட்ரங்க் பெட்டியில் அடங்கியிருக்கும்.ஒரு காலத்தில் புரியாத வயசில் எதை படிக்கிறோமென தெரியாமல் கண்டவற்றையும் வாசித்துக் கொண்டிருந்தேன் நான். ஆனால் இந்த காலத்தில் புத்தகங்களை வாங்கி புத்தகத்தின் தலைப்பும் மேலோட்டமாக சில பக்கங்களின் வார்த்தைகளை படிப்பதோடு மட்டுமே என் வாசிப்பு நின்று விட்டது என்பதை உணர முடிந்தது.

என் வீட்டு பரணில் அந்த டிரங்க் பெட்டியில் தூங்கிக் கொண்டிருந்த புத்தகங்கள் நாளாக நாளாக எப்படி பழைய வாசனை பெற்றதோ அது போல் என் அறிவும் என் வாசிப்பு திறனிலும் பழைய வாசனை அடிக்க ஆரம்பித்தது. ஒரு நாள் டிரங்க் பெட்டியும் காணாமல் போயிருந்தது என் புத்தக வாசிப்பு திறனும் காணாமல் போயிருந்தது.

தொட்டகுறை விட்டகுறையாக வெகுஜன பத்திரிக்கை வாசிப்பு தான் அவ்வவ்ப்போது மீந்திருந்தது. ஆனால் புத்தக்கடை பந்தமும், புத்தகம் வாங்கும் பழக்கமும், என்றைக்காவது அதை வாசிப்பேன் என்ற என் உள்மன வேட்கையும் கனன்றுக் கொண்டு தான் இருந்தன.

பத்ரியின் "புத்தகம் வாசிக்கும் மிசோராம் மக்கள்" பற்றிய பதிவு என் சிந்தனையை அதிகம் தூண்டிவிட்டது. என்னை போன்ற பெரும்பான்மையோருடைய வாசிப்பு திறன் எங்கே போயிற்று? உலகம் அவசர மயமாகிவிட்டதா? இல்லை யாருக்கும் நேரமில்லையா? எதற்கு புத்தகம் வாசிக்க நேரமில்லை? இல்லை நல்ல புத்தகங்களே இந்த உலகில் இல்லாமல் போய்விட்டதா?. இப்படியாக போய் கொண்டிருந்த கேள்விகளில் எனக்குள்ளாக சில பதில்களும் எழத்தவறவில்லை.

1) ஒரு தமிழனுடைய வாழ்க்கையை டிவி முடக்கி போட்டு விட்டது. தகவலுக்கு டிவியே பிரதானம் என்று இருந்தாலும், நேரத்தின் சிறுபகுதியை தான் அதில் தகவல் அறிய பயன்படுத்துகிறார்கள். மீது நேரம் சினிமா நிகழ்ச்சிகளை கண்டுகளிப்பதிலும், சீரியல்களை காண்பதிலும் தான் பெரும்பான்மையான நேரத்தை செலவழிக்கிறார்கள்.

2) ஒருவரை பொறுத்தவரை வெகுஜன பத்திரிக்கையிலிருந்து தான் வாசிப்பு ஆரம்பம் ஆக வேண்டுமென்றாலும் சில காரணிகள் சுவாரஸ்யமான மாற்று வாசிப்புக்கு தூண்டி விடாமல் போய்விட்டதோ என எண்ணத் தோன்றுகிறது.

3) "கணவனை/மனைவியை வசியம் செய்வது எப்படி" என்று மாத/வார இதழ்கள் கூறும் கருத்தை படிப்பவதில் ஆர்வம் செலுத்துகிறவன் காலம்காலமாக நீதி சொல்லும் திருக்குறளில் இருப்பதில்லை. ஏன்? யாருக்கும் அது புரியாமல் போய்விட்டதா?

4) மனப்பாடம் செய்து வாந்தி எடுக்க சொல்லிக்கொடுக்கும் நம் கல்வி முறை வாசிப்பு என்ன என்று அறிவதை பள்ளிக் கல்வியிலேயே சேர்க்க மறந்து விட்டதோ? பள்ளிகளில் சில இலக்கிய வாசிப்புகளை மாணவர்களுக்கு ஆரம்பத்திலே கொடுத்து, மதிப்பெண் சாரா முறையில், ஆர்வத்தை தூண்டி, அதை வாசித்து விமர்சனம் செய்ய சொல்லிக் கொடுத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். எனக்கு தெரிந்து மேற்படிப்பு படிப்பவர்களுக்கு மட்டுமே இந்த மாதிரி ஒரு வாய்ப்பு வாய்க்குமென கேள்விப்பட்டேன். நீங்கள் BAவோ இல்லை MAவோ கலையியல் எடுத்து படித்தால் மட்டுமே அந்த வாய்ப்பு கிடைக்குமென நினைக்கிறேன்.

என்ன தான் வெகுஜன பத்திரிக்கையில் நடுபக்கத்தில் நடிகைகளின் மார்பையும் இடுப்பையும் பார்த்து விட்டு சென்றாலும் ஆர்வம் இருக்கிறவன், வாசிப்பின் வட்டத்தை விரிவாக்கி கொண்டு தான் செல்கிறான். என்ன தான் சுபாவும் பட்டுக்கோட்டை பிரபாகரும் மஞ்சள் பத்திரிக்கைக்கு வழிப்போட்டு கொடுத்தாலும் ஆர்வம் அவனை அதையும் தாண்டி செல்லச் செய்கிறது. என்னதான் மாஞ்சி மாஞ்சி டிவி பார்த்தாலும் புத்தகம் வாசிக்கும் போது அது உங்களிடம் பேசி உறவாடும் மகிழ்ச்சியை தட்டிப்பறித்து விடுவதில்லை. என்னதான் தமிழ் பதிவுகளில் வெட்டி பதிவுகள் வந்தாலும் வெகு சில நல்ல பதிவுகளும் வாசிப்பு தூண்டுதலைக் கொடுக்கிறது.

நான் தொடர்ந்து படிக்கும் வெகுசில பதிவுகளில் மாண்ட்ரீஸர், பெயரிலி, மாலன், டோண்டு, ஈழநாதன் போன்றோர்களின் பதிவுகளில் இழையோடும் அவர்களின் வாசிப்பு அனுபவமும், கருத்து செறிவும் எனக்குள்ளும் வாசிப்பு ஆர்வத்தை தூண்டவே செய்கின்றன. ரோஸாவசந்த், தங்கமணி, நாராயணன் போன்றோர்களின் பதிவுகளில் சில விசயங்களை ஓரளவு ஆழச்சென்று பார்க்கும் பார்வையை கற்றுக் கொடுத்தது ஏராளம். ரோசாவசந்த் என்னதான் சாதிகளை பற்றிய விவாதங்களில் செருப்பெடுத்து அடித்தாலும், கண்டவற்றை வெட்டினாலும் அங்காங்கே அவர் உகுக்கும் சில நல்ல வார்த்தைகளும் அருமையாக தான் இருக்கிறது. எடுத்துக்காட்டாக அவர் என்னுடைய ஒரு பதிவிலிட்ட பின்னூட்டம்

"மாண்ட் சொன்னதைப்போல தாராளமாய் இலக்கியவாதைகளை (வாதை என்றது எழுத்து பிழை அல்ல) போட்டு தாக்குங்கள்! மனதில் தோன்றுவதை இங்கே பதியுங்கள். எல்லாம் முடிந்துவிட்டு தனிமையில் வாசிக்க கிடைக்கும் எத்தனையோ இலக்கியங்களை வாசியுங்கள். வேறு எப்படியும் இலக்கியம் குறித்து அறியமுடியாது. தயவு செய்து இலக்கியம் என்றால் என்னவென்று யாரிடமும் கேட்காதீர்கள். கடவுள் என்றால் என்னவென்று கேட்டு சாமியாரிடம் ஏமாற்றபடும் பக்தனின் நிலை மட்டுமே உங்களுக்கு சித்திக்கும். மேலும் இலக்கியத்தை இலக்கியவாதிகளிடம் தேடாதீர்கள். அது இலக்கியபிரதிகளில் மட்டுமே இருக்கிறது. மேலும் அதை எழுதிய ஆசாமி அதனிடமிருந்து பெறுவதற்கு எதுவுமில்லை. அதை உண்மையாய் படைக்கபோகும் நீங்கள் பெறுவதற்கே அதிகம் உள்ளது. ஆகையால் மேலே சொன்னதுதான்! இது குறித்து யாரிடமும் கேட்டு 'ஞானம்' பெறுவதைவிட நீங்களாக சுயதேடலில் இறங்குவதே ஒரே வழி. எதையாவது அடையும்போது அதை இங்கே பதிந்து பகிந்து கொள்ளுங்கள்.".

சுயதேடல் என்பது முக்கியம். எந்த விசயமாக இருக்கட்டும் கட்டாயம் சுயஎழுச்சி அதன் மூலம் சுயதேடல் கட்டாயம் இருக்கவேண்டும்.

மேல் சொன்னவைகளை நான் வெறும் முகஸ்துதி (பதிவுஸ்துதி)க்காக சொல்லவில்லை. அவர்களின் மேல் விழுந்திருக்கும் முத்திரைகளுக்கு அப்பாற்பட்டு சென்று அவர் பதிவுகளை வாசித்தாலே அவர்களின் அனுபவம் புரியும். ஒருவர் அனுபவத்தை பதிந்து நாம் படித்து தெரிந்து கொள்வது வேறு, அனுபவத்தில் ஆழ்பார்வையில் ஒரு விசயம் எழுதியதை படிப்பதென்பது வேறு.

இதை தவிரமதி கந்தசாமி போன்றோர்களின் முயற்சியில் புத்தக குழுமம் வேறு ஆரம்பிக்கப்பட்டு வெகு ஜோராக போய் கொண்டிருக்கிறது. இவையெல்லாம் காலம் நமக்கு தந்த வரப்பிரசாதம்.

பதிவுகளில் மட்டுமின்றி எஸ்.ராமகிருஷ்ணனின் துணையெழுத்து படித்துக் கொண்டிருந்த போது இரஷ்ய இலக்கியவாதிகளான ஆண்டன் செகாவ், தஸ்தாவெயஸ்கி, டால்ஸ்டாய், கார்க்கி போன்றவர்கள் மட்டுமல்லாது நிறைய பேர்கள் அறிமுகம் ஆனார்கள். தமிழில் குறுக்காக புகுந்து நெடுக்காக வலம் வரவேண்டுமென்ற குறிக்கோளுடன் மட்டுமில்லாமல் இரஷ்யாவில் ஆரம்பித்து மெதுவாக அமெரிக்கா, தென் அமெரிக்காவை சுற்றி பிரான்சு முதலான நாடுகளில் உள்ள இலக்கியவாதிகளை கண்டு வரவேண்டுமென்ற ஆவல். உந்துதல்.

உலக இலக்கியங்கள் இணையத்தில் கொட்டிக்கிடக்கின்றன. அதை பற்றி பிறகு தனிப்பதிவு போடுகிறேன். புத்தக வாசிப்பை பற்றி செகாவ் 'பந்தயம்' என்ற ஒரு அருமையான கதை எழுதியிருக்கிறார் (நாங்களும் இப்போ படிக்கிறேம்ல. அப்பப்போ இந்த மாதிரி எடுத்து விடுவோம்ல). அந்த கதையை அடுத்தப்பதிவில் சுருக்கமாக போடுகிறேன்.

சென்னைக்கு வந்தவுடன் யாரை போய் பார்த்தேனோ இல்லையோ எங்கள் வீட்டு புத்தக அலமாரியை திறந்து பார்த்தேன். சிலவருடங்கள் முன்பு கன்னிப் பெண்ணாக வெள்ளையாக சிரித்திருந்த பல புத்தகங்களில் வயதின் ரேகை. என்னையுமறியாமல் என் கை நானும் என் மனைவியும் சேர்த்த புத்தகங்களை தடவிக் கொண்டிருந்தது. "உங்களை எல்லாம் எப்போது நான் கண்டுக் கொள்ள போகிறேனோ" என்று நினைத்து பெருமூச்சு விட்ட அந்த வேளையில் என் தந்தையின் ட்ரங்க் பெட்டி ஞாபகம் வந்தது. கவனமாக நாப்தலீன் உருண்டைகளை புத்தக அலமாரியில் போட்டுவிட்டு வந்தேன்.

இந்த பதிவின் வாக்கு எண்ணிக்கை: . பக்கத்திலுள்ள ஸ்டாரை மவுசால் போட்டுத் தாக்கினால் எனக்கு மவுசு ஏறும். நன்றி:-)

உங்கள் கருத்துக்களை இட

திருப்பி தாக்கியவர்கள்:
This comment has been removed by a blog administrator.
 
நான் படிக்கும் சில பதிவுகள் என்று சொன்னேன் இல்லையா? அதில் பத்ரியின் பதிவும் அடங்கும். பதிவில் குறிப்பிட மறந்து விட்டேன். நேரம் கிடைக்கும் போது எல்லா பதிவுகளும் படிப்பதுமுண்டு. அந்த குறிப்பிட்ட நாளில் எழுதும் எல்லாரும் பரிச்சயம் உண்டு. படிக்கும் பதிவுகளில் விவாதம் அதிகமில்லாத பதிவில் பின்னூட்டமிடுவதுமுண்டு. விவாதத்தில் கலந்துக் கொள்ள நேரம் அதிகம் அனுமதிப்பதில்லை. இருந்தாலும் சில விவாதங்கள் வாசிப்புக்காகவே விடாமல் படிப்பதுமுண்டு.

~அல்வாசிட்டி.விஜய்
 

உங்கள் கருத்துக்களை இட


<< திரும்ப முன் பக்கத்துக்கு போ

This page is powered by Blogger. Isn't yours? தமிழ் அசைபட இணையச் செயலி தமிழ் விக்கிபீடியா

-->