<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar/9439067?origin\x3dhttp://halwacity.blogspot.com', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script> <!-- Remove below comment line to show the content. Added for meta redirection --> <!--

போட்டுத் தாக்கு!!!!!

எள்ளோடு எலி புழுக்கையும் எண்ணைக்காக காயுதாம்

-ல் போட்டுத் தாக்கியது

நவீன இலக்கிய எழுத்தாளர் ஆவது எப்படி?

Difficulty in reading this post due to font issues? Click here for a PDF copy. Works best if you right-click the link and select 'Save target as...'
இந்த பதிவை போட்டுத் தாக்கியவர் : Vijayakumar
அண்மை காலமாக இலக்கியத்திற்குள் நான் வாசகனாக நுழைய முற்படும் போது என் கன்னிப் பார்வையில் சில இக்கால எழுத்தாளர்களின் எழுத்தும் பின் புலங்களும் நன்றாகவே நல்ல விதமாக அறிமுகமாகிக் கொண்டிருக்கிறது. அதன் அடிப்படையில் பார்த்தால் சர்ச்சைக்குள்ளாகும் நவீன இலக்கிய எழுத்தாளர் ஆவது மிக மிக எளிது. கீழே கொடுக்கப்பட்டுள்ளவைகளை பின்பற்றினாலே போதுமானது.

1. சுமராக தமிழில் எழுத தெரிந்தால் போதும். அதற்கு வேண்டுமானால் வலைபதிவுகளை பயன்படுத்திக் கொள்ளலாம்.

2. முதலில் இலக்கியத்தை திருட தெரிய வேண்டும். உங்கள் நண்பர் கதை கவிதை கட்டுரை என்றெழுதி இலக்கிய தேவிக்கு சேவை செய்துக் கொண்டிருந்தால் மிக மிக நலம். ஏனென்றால் அவரை தத்தியாக இருக்க வைத்து விட்டு அவருடைய உழைப்புகளை தன் பெயரில் போட்டுக் கொண்டால் மிக மிக பெரிய ஆளாக வரலாம். நீங்கள் புகழின் உச்சிக்கு போகும் போது உங்கள் நண்பரும் தீடிரென முழித்துக் கொண்டு உங்களை "லபோ திபோ" வென கத்தி அவரும் பெரிய ஆள் ஆகலாம். இது இலவசமாக வரும் இலவச இணைப்பு.

3. உங்கள் எழுத்துக்களில் நவீனத்துவம் மிளிர யோனி, பிச்சைக்காரன், குறி, மயிர் இந்த மாதிரி வார்த்தைகளை ஆங்காங்கே தூவிக் கொள்ள வேண்டும். அளவுக்கதிகமாக போனால் மஞ்சள் புத்தகத்தில் வரும் கதை,கட்டுரை ஆகிவிடும். அதுவே சரியான இடத்தில் சரியாக பொருத்திவிட்டால் நவீன இலக்கியம் ஆகிவிடும்.

4. பெண்களுக்கு பின்னால் நீங்களே ஜொள்ளுவிட்டுக் கொண்டு அலைந்து விட்டு, பின்னாடி உங்கள் எழுத்துக்களில் அவர்களை பற்றி அசிங்கம் அசிங்கமாக எழுதலாம். அப்போது தான் பெண்கள் மத்தியிலும் நீங்கள் சர்ச்சைக்குள்ளாகும் எழுத்தாளர் ஆகலாம்.

5. எழுத வருவதற்கு முன் குண்டராக முயற்சி செய்யுங்கள். எழுதும் போது உங்களின் குண்டர் பண்பு மிளிர வேண்டும். அப்போது தான் சர்ச்சைக்குள்ளாகும் போது நாலு பேரை தூக்கிப் போட்டு மிதிக்க முடியும். (ஐடியா கிடைத்தது சிங்கை வலைப்பதிவு எழுத்தாளர்கள் கூட்டத்தில்...நன்றி)

6. நீங்கள் குண்டராக இருந்தால் மட்டும் பத்தாது. உங்களுடன் ஒரு குண்டர் படையை வைத்துக் கொள்ள வேண்டும். உங்கள் நவீன இலக்கியம் புத்தகமாக வந்தால் வரும் சர்ச்சைகளை கையாள ஒரு குண்டர் கூட்டம், ஒரு வேளை நீங்கள் இணைய எழுத்தாளராக இருந்தால் பின்னூட்டம் என்ற பெயரில் அடிதடி நடத்த ஒரு சைபர் குண்டர் கூட்டம் என வைத்துக் கொள்ள வேண்டும்.

7. தமிழ் சரளமாக வருகிறதோ இல்லையோ கெட்டவார்த்தை எழுத்திலும் பேச்சிலும் சரளமாக வர வேண்டும். குறைந்தது 'மயிர்' என்று அங்காங்கே போட்டு எழுத தெரிய வேண்டும்.

8. இலக்கிய நண்பர்கள் இருந்தால் ஒருவருக்கொருவர் புகழில் முந்திச் செல்லாத வகையில் காலை வாரிக் கொண்டே இருக்க வேண்டும். முக்கியமாக ஒருவரின் தாயை மற்றொருவர் Vice versa -வாக தரக்குறைவாக திட்ட கற்றுக் கொள்ள வேண்டும்.

இந்த பண்புகளை வைத்துக் கொண்டு நானும் சீக்கிரமே பெரிய பெரிய சர்ச்சைகளை கிளப்பும் நவீன இலக்கிய எழுத்தாளர் ஆகிவிடுவேன். நீங்களும் தான். நான் ரெடி. நீங்க ரெடியா?

இந்த பதிவின் வாக்கு எண்ணிக்கை: . பக்கத்திலுள்ள ஸ்டாரை மவுசால் போட்டுத் தாக்கினால் எனக்கு மவுசு ஏறும். நன்றி:-)

உங்கள் கருத்துக்களை இட

திருப்பி தாக்கியவர்கள்:
சும்மா போட்டு தாக்காதே விஜய். எழுத்தாளன்னா அவ்வள்வு கேவலமா? இல்லை சுலபமா?
 
நீங்கள் எழுதுவது புரியும்படி தெளிவாக எழுதுகிறீர்கள். அப்படி எழுதும் வரை நீங்கள் நவீன அல்லது பின் நவீன எழுத்தாளராக முடியாது!:-)
 
அது சரி தலைவா, நீங்க போட்டுத் தாக்குங்க, உங்களை யார் கேக்கறது!!

எரிச்சலடைய வைத்த விஷயம் மாலனின் பின்னூட்டம் (எழுதியது மாலனாக இருப்பின் மட்டுமே இது). இத்தனை வருடம் பத்திரிகையாளராக, நிர்வாகியாக, எழுத்தாளராக இருந்துவிட்டு இதுமாதிரி ஒன்றிரண்டுவரிப் பின்னூட்டங்கள்மூலம் தலைகுப்புறத் தடுக்கிவீழ்கிறீர்கள் என்பதைக் காண்பதிலே வரும் பிரமிப்பில் வரும் எரிச்சல்! எங்கே போய்ச் சொல்வது இந்தக் கோராமையை!!
 
அட போங்கப்பா! போட்டு தாக்குறத சொல்றீங்க. இலக்கியம்ன என்னன்னு ஆசையோட தெரிஞ்சிக்க உள்ள நுழையிறவனை எழுத்தாளர்கள் பின் புலனை காட்டி பேய் மாதிரி தானே பயமுறுத்தி ஓட்டுறாங்க போட்டி எழுத்தாளர்கள்.அப்புறம் எப்படி புதுசா வர்றவனுக்கு இலக்கியம் படிக்கனுங்கிற ஆசை வரும். அப்புறம் தான் எப்படிய்யா நாங்கள் எல்லாம் இலக்கிய வாசகனாகிறது. அதுனால தான் அப்படியே ஆனந்த விகடன், குமுதம்ன்னு ஒதுங்கிறோம்.அதரவும் அதுக்கு தான் ஜாஸ்தியிருக்கு. என்னை மாதிரி ஞான சூனியங்களுக்கு எதுக்கு இலக்கியம்,இலக்கணம்.
 
மாலனின் பின்னூட்டம் குறித்து நான் சொல்ல விரும்பியதை மாண்ட்ரீஸர் சொல்லியிருகிறார்.

அன்புள்ள அல்வாசிடி விஜய்க்கு இன்னோரு அல்வா/அறுவாள் சிடிக்காரன் சொல்வது.

மாண்ட் சொன்னதைப்போல தாராளமாய் இலக்கியவாதைகளை (வாதை என்றது எழுத்து பிழை அல்ல) போட்டு தாக்குங்கள்! மனதில் தோன்றுவதை இங்கே பதியுங்கள். எல்லாம் முடிந்துவிட்டு தனிமையில் வாசிக்க கிடைக்கும் எத்தனையோ இலக்கியங்களை வாசியுங்கள். வேறு எப்படியும் இலக்கியம் குறித்து அறியமுடியாது.

தயவு செய்து இலக்கியம் என்றால் என்னவென்று யாரிடமும் கேட்காதீர்கள். கடவுள் என்றால் என்னவென்று கேட்டு சாமியாரிடம் ஏமாற்றபடும் பக்தனின் நிலை மட்டுமே உங்களுக்கு சித்திக்கும். மேலும் இலக்கியத்தை இலக்கியவாதிகளிடம் தேடாதீர்கள். அது இலக்கியபிரதிகளில் மட்டுமே இருக்கிறது. மேலும் அதை எழுதிய ஆசாமி அதனிடமிருந்து பெறுவதற்கு எதுவுமில்லை. அதை உண்மையாய் படைக்கபோகும் நீங்கள் பெறுவதற்கே அதிகம் உள்ளது.

ஆகையால் மேலே சொன்னதுதான்! இது குறித்து யாரிடமும் கேட்டு 'ஞானம்' பெறுவதைவிட நீங்களாக சுயதேடலில் இறங்குவதே ஒரே வழி. எதையாவது அடையும்போது அதை இங்கே பதிந்து பகிந்து கொள்ளுங்கள். நன்றி!
 
வசந்த் சொல்வதை வழிமொழிகிறேன். (சே வர வர வலைப்பதிவு எல்லாம் சட்டசபை ரேன்ஞ்சுக்கு போயிருச்சு. பெஞ்ச் தட்டறத்துக்கு பதிலா, விசைப்பலகையை தட்டறேன்) ஏன்னா, கோணங்கி பத்தி நான் எதேச்சையா ஒரு பதிவு போட, அவ்வளவுதான், நம்மாளுங்க, என்னை பிட்சா பிக்கறமாதிரி பிரிச்சி, மேஞ்சிட்டாங்க. திரு.மாலனின் கருத்து சற்றே உருத்துகிறது. அவர் அதனை நகைச்சுவையாக சொல்லியிருந்தாலும் கூட.

எல்லாமே புரியறது தான். எப்படி புரிஞ்சுக்கறோம் அப்படிங்கறதைப் பொறுத்து தான், புரியுது, புரியலை என்னு கேக்கறதெல்லாம். எனக்கு சொன்ன அதே அட்வைஸ் தான் உங்களுக்கும். படிங்க. படிங்க. படிச்சுகிட்டே இருங்க. தயவுசெய்து எந்த இலக்கியவாதி / இசம்/ இஸ்ட் வலையில விழுந்துறாதிங்க. அப்புறம் யார் யாரோ நம்மை பெரியாரிஸ்ட், இடது சாரி அப்படின்னு போஸ்ட் போட்டு அப்புறம் தூக்கிருவாங்க (with due apologies to Rosavasnth)
 
//தயவு செய்து இலக்கியம் என்றால் என்னவென்று யாரிடமும் கேட்காதீர்கள். கடவுள் என்றால் என்னவென்று கேட்டு சாமியாரிடம் ஏமாற்றபடும் பக்தனின் நிலை மட்டுமே உங்களுக்கு சித்திக்கும். மேலும் இலக்கியத்தை இலக்கியவாதிகளிடம் தேடாதீர்கள்//

சொன்னாலும் சொன்னீங்க கலக்கலான வரிகள்.

//இது குறித்து யாரிடமும் கேட்டு 'ஞானம்' பெறுவதைவிட நீங்களாக சுயதேடலில் இறங்குவதே ஒரே வழி//

முடிவு செய்து விட்டேன்.

பெரிய அண்ணாச்சிங்க அறிவுரை கொடுக்கும் போது ஏற்றுக் கொள்ள என்ன தயக்கம் எனக்கு?
 
இந்த ஒரு வரி போதும், ரோசாவசந்தின் புகழை அடுத்த தலைமுறை வரை பாட...

//மேலும் இலக்கியத்தை இலக்கியவாதிகளிடம் தேடாதீர்கள்//
 

உங்கள் கருத்துக்களை இட


<< திரும்ப முன் பக்கத்துக்கு போ

This page is powered by Blogger. Isn't yours? தமிழ் அசைபட இணையச் செயலி தமிழ் விக்கிபீடியா

-->