<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar/9439067?origin\x3dhttp://halwacity.blogspot.com', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script> <!-- Remove below comment line to show the content. Added for meta redirection --> <!--

போட்டுத் தாக்கு!!!!!

எள்ளோடு எலி புழுக்கையும் எண்ணைக்காக காயுதாம்

-ல் போட்டுத் தாக்கியது

சுட்டதும் பட்டதும்

Difficulty in reading this post due to font issues? Click here for a PDF copy. Works best if you right-click the link and select 'Save target as...'
இந்த பதிவை போட்டுத் தாக்கியவர் : Vijayakumar
உலகமறிந்த விசயத்தை எழுத எனக்கே கூச்சமாகத் தான் இருக்கிறது. நிறைய வருடமாக எழுத்துக்கள் படிக்கும் வழக்கம் என்னில் உறங்கிப் போயிருந்ததால் நிறைய விசயங்கள் கவனிக்க தவறிவிட்டேனோ என்கிற குற்ற மனப்பான்மை தான் மேலிடுகிறது. அண்மையில் நாகூர் ரூமியிட்ட பதிவின் வாயிலாக தான் சாரு, அபிதீன் சண்டை தெரியவந்தது.

சில நண்பர்களிடம் இதை புதிய விசயமாக சொல்லிக் கொண்டிருக்க "அதான் ரொம்ப பழைய விசயமாச்சே"-ன்னு சொல்லித் துரத்தியடித்தார்கள். இந்த விசயம் எப்படி உலகறிந்த விசயமாக இருக்கிறது? அபிதீனுடைய வலி என்ன? என்று சிந்திக்க ஆரம்பிக்க என்னையுமறியாமல் இந்த பதிவு.


இந்த திருட்டு விசயங்களை கேள்விப்பட்டதும் அபிதீனுடைய எழுத்துக்களை படித்துவிட வேண்டும் என்ற ஆர்வம் தான் மேலிட்டது. அண்மையில் சிங்கை நூலகத்தில் "இடம்" என்ற அபிதீனுடைய சிறுகதை தொகுப்பு தான் கையில் கிடைத்தது. இரயிலூர்தியில் பயணம் செய்துக் கொண்டிருந்த போது தற்செயலாக புத்தகத்தைத் திருப்ப அங்கேயும் சாருவுடைய வண்டவாளம், அபிதீனுடைய தண்டவாளத்தில் ஏறி ஓடிக்கொண்டிருந்தது. "இது என்னடா கொடுமை, விடாது கருப்பு போல இந்த அபிதீன் மேட்டரும் நம்மை விடாது போல" என்ற விரக்தி தான் மிஞ்சியது.

மேலேயிருக்கும் ஒருவனை கீழேயிருந்து தாக்குவதால் கீழேயிருப்பவனும் மேலேறி விடுகிறான். இந்த அபிப்பிராயம் தான் அபிதீன் மேல் எனக்கு ஏற்பட்டது. ஓய்வாகயிருக்கும் போது அந்த புத்தகத்தில் கடைசிப்பக்கங்களில் சாருவின் கடிதங்களும், அபிதீனுடைய எழுத்துக்கள் சுடப்பட்ட விதங்களும், அபிதீனுடைய குமுறுல்களும் என்னை சுற்றி நடந்த நிகழ்வுகளும் ஆற அமர யோசிக்க வைத்தது.

ஏறக்குறைய மூன்று நான்கு வருடங்களாக முகம் தெரியாத இணைய நண்பர் ஒருவர் (பெயர் வெளியிட விரும்பவில்லை) வழக்கமாக குறிப்பிட்ட இடைவெளியில் அவர் கவிதைகளை மின்னஞ்சலில் அனுப்பி வைப்பார். முதலில் அலட்சியமாக விட்டுவிட்டாலும் அவருடைய கவிதையின் வரிகள் என்னுள் ஏதோ செய்ய தொடர்ந்து படிக்கலானேன். அண்மையில் அதே நண்பர் ஒரு கவிதையை மின்னஞ்சலில் அனுப்பும் போது அவருடைய வேதனையும் அந்த மின்னஞ்சல் சுமந்து வந்தது.

மின்னஞ்சல் நெடுக "நான் வணங்கும் முருக கடவுள் மீது சத்தியம். நான் சொல்வது உண்மை" என்று மீண்டும் மீண்டும் வரிகளினூடே புகுத்தியிருந்தார். சொல்ல வந்தது என்னவென்றால் அவருடைய கவிதை வேறு பெயர் மாற்றப்பட்டு வேறொருவர் பெயரில் அந்த கவிதை நிறைய பேர் பார்க்கும் ஓரிடத்தில் வெளியிட்டிருந்ததை வேதனையுடன் அழாத குறையாக சொல்லியிருந்தார்.

கவிதை நண்பர் நான்கு வருட தொடர்பு ஆகையாலேயோ என்னமோ அவருடைய வார்த்தைகள் என்னை மிகவும் பாதித்தது. அபிதீன் பரிச்சயம் இல்லாததாகையாலோ என்னமோ அவருடைய புலம்பல் எனக்கு பொருட்டாகத் தெரியவில்லை. இரண்டும் ஒரே வகை தான். ஏன் ஒன்றிலிருந்த பாதிப்பு மற்றொன்றில் இல்லை?

சிந்திக்க, அபிப்ராயம் மாறிக் கொண்டது. அபிதீன் உணமையிலேயே சாருவிடம் கதையை கொடுத்திருப்பாரா? உண்மை தான் இருக்க வேண்டும். சும்மா எவரும் அழுது அரற்ற முடியாது.

கவிதை மின்னஞ்சல் நண்பரிடம் அவருக்கு நிகழ்ந்த கொடுமையை என் பதிவில் போடப் போகிறேனென்று சொன்னதற்கு "விட்டு விடுங்கள் விஜய். பெரிசு பண்ண வேண்டாம். நிஜம் இல்லாமல் எத்தனை நாள் வாழ்ந்துவிட முடியும். 5 பேராக ஆரம்பித்த என் கவிதை மின்னஞ்சல் இப்போது 50 பேருக்கு அதிகமானோருக்கு சென்றுக் கொண்டிருக்கிறது. இது புகழ் தேடி நான் சேர்த்தவர்கள் அல்ல. என் திறமையை மதிக்கிறவர்கள் கூடியிருக்கிறார்கள். எனக்கு அது போதும்" என்றார்.

ஒருவேளை அவர் கவிதையை வெளியிட்டவர் வைரமுத்துவாகவோ,அப்துல் ரகுமானாகவோயிருந்திருந்தால் இவர் சும்மாயிருந்திருப்பாரா என்பதையும் சிந்திக்கத் தவறவில்லை. மனோபாவம் யாவருக்கும் ஒன்றல்ல. கவிதை நண்பரை மதிக்கிறேன்.

அபிதீனுடைய தீவிரமும் கவிதை நண்பரின் அடக்கமும் அவர்கள் அவர்களின் படைப்பின் மீது வைத்திருக்கும் காதலின் தீவிரத்தை தான் காட்டுகிறது. அன்பு அதீதமாகும் போது பொஸஸிவ்னஸ் கட்டாயம் அதிகமாகும். தன் கண் முன்னே தான் காதலிக்கும் ஒன்றும் போகும் போது உயிர் சும்மாயிருக்காதே!

விமர்சனமோ அறிவுரையோ சொல்ல நீ யாருடா? என்ற தாக்குதலும் என் மேல் வரலாம். எப்போது அபிதீன் சாரு சண்டைகள் பொதுவில் வந்ததோ அப்போதே அது பொது சொத்தாகி விட்டது. காசு கொடுத்து புத்தகத்தை வாங்கும் ஒருவனுக்கு கேள்வியும் கேட்கும் அதிகாரமும் வந்துவிடுகிறதென நினைக்கிறேன்.

இன்னமும் குடைந்துக் கொண்டிருக்கும் கேள்வி திருட்டு நடந்து பத்தாண்டுக்கு மேலான நிலையில் அண்மை காலத்தில் மட்டும் இந்த பிரச்சனை குடையப்படுவது ஏன்?

எனக்கு தோன்றுவது என்னவென்றால் நல்ல படைப்பாளியான அபிதீன் "இன்னா செய்தார்..." வள்ளுவ வாக்குப்படி குடைவதை விட்டுவிட்டு இலக்கிய புகழ் உச்சிக்கு ஏறி சாதித்துக் காட்ட வேண்டும். இலக்கிய திருட்டு விற்பனை விளம்பரமாகி விடக்கூடாது. ('இடம்' புத்தகத்தின் கடைசி அட்டையின் கருத்தை பார்க்க இங்கே சொடுக்கவும்)

அண்மையில் 'அழகி நம்பர் 1' விசி வீட்டிற்கு சென்றிருந்த போது அவருடைய அண்ணாவிற்கு என்னை அறிமுகம் செய்து வைத்து அல்வாசிட்டி 'போட்டுத் தாக்கு' பக்கங்களை காட்டிக் கொண்டிருந்தார். 'நவீன இலக்கியவாதி ஆவது எப்படி?' என்ற பதிவை அவர் அண்ணாவிற்கு படித்துக் காட்டிக்கொண்டிருந்தார். நான் சாருவை தெரியுமா? அபிதீனை தெரியுமா? என்று கேட்க அவர்கள் 'தெரியாது' என்றார்கள். அவருடைய அறியாமையின் இருள் விலக்க சாரு அபிதீன் சண்டை என்ற ஒளி விளக்கை ஏற்றி விட்டு வந்தேன்.

இந்த பதிவின் வாக்கு எண்ணிக்கை: . பக்கத்திலுள்ள ஸ்டாரை மவுசால் போட்டுத் தாக்கினால் எனக்கு மவுசு ஏறும். நன்றி:-)

உங்கள் கருத்துக்களை இட

திருப்பி தாக்கியவர்கள்:
பின்னூட்டம் சதி செய்ததால் சோதனை முயற்சி.
 

உங்கள் கருத்துக்களை இட


<< திரும்ப முன் பக்கத்துக்கு போ

This page is powered by Blogger. Isn't yours? தமிழ் அசைபட இணையச் செயலி தமிழ் விக்கிபீடியா

-->