<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar/9439067?origin\x3dhttp://halwacity.blogspot.com', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script> <!-- Remove below comment line to show the content. Added for meta redirection --> <!--

போட்டுத் தாக்கு!!!!!

எள்ளோடு எலி புழுக்கையும் எண்ணைக்காக காயுதாம்

-ல் போட்டுத் தாக்கியது

The Circle - ஒர் இரானிய படவிமர்சனம்

Difficulty in reading this post due to font issues? Click here for a PDF copy. Works best if you right-click the link and select 'Save target as...'
இந்த பதிவை போட்டுத் தாக்கியவர் : Vijayakumar
"ஏம்பா நீ மத்த நாட்டு படத்தோட விமர்சனம் தான் சொல்லுவியா, பெரிய இவனா நீ?" -ன்னு கேக்குறது காதுல விழுகிறது(என் மனசாட்சி உட்பட). நம்மூர் படத்தை யார் வேண்டுமானாலும் எழுதலாம். எனக்கு உலகத் திரைப்படங்கள் பார்க்கும் வாய்ப்பு கிடைத்த இந்த வேளையில் சினிமா உலகம் ரொம்ப பெருசு என்று தெரிய வருகிறது. உலக சினிமா ரசிக கண்மணிகள் சொல்கிற மாதிரி, பல வித சினிமா இரசனைகளை கண்டு சுவைத்துக் கொண்டிருக்கும் இந்த வேளையில் கேமிரா முன் வசனம் பேசிவிட்டு, கதாநாயகனை படம் முழுவதும் புகழ் பாடி, பட குப்பையில் வரும் காசை ஜேப்பில் போட்டுச் செல்லும் நம் கதாநாயகர்களை கண்டால் சிரிப்பு தான் வருகிறது. மாற்றம் தேவைப்படும் போது சில இரசனைகளையும் கற்றுக் கொள்ள வேண்டியுள்ளது. இந்த மாற்று இரசனையை காற்றில் வரும் கீதமாக பாடி வைத்தால் கற்றவர்கள் நாலு பேர் காதிலும் விழுந்து அவர்களையும் அந்த இரசனை பற்றிக் கொள்ளட்டுமே என்ற ஆவலால் எழுதுகிறேன் பிற நாட்டு படங்களின் விமர்சனங்களும், அறிமுகங்களும். உங்களுக்கும் வாய்ப்பு கிடைக்கும் போது உலக சினிமாவை இரசிக்க கற்றுக் கொள்ளுங்கள்.

போன வாரயிறுதியில் பார்த்த ஒரு இரானிய படம் "The Circle". "Dayereh" என்றப் பெயருடன் 2000-ம் ஆண்டு ஜாபர் பனாகி இயக்கத்தில் முஸ்லீம் நாட்டில் பெண்களின் நிலையை எடுத்துச் சொல்லும் பார்சி மொழியில் வந்த இன்னொரு படம். எதிர்பார்த்த அளவு இந்த படம் அமையவில்லை என்பது என் கருத்து. இயக்குனரின் மற்றப் படங்கள் சிறப்பாக இருக்கிறதென கேள்விப்பட்டிருக்கிறேன். படத்தில் சொல்லவந்த கருத்து என்னவென்றால் ஒரு முஸ்லீம் நாட்டில் பெண்களுக்கென்றுள்ள சட்ட திட்டங்கள் என்ற வட்டத்தை விட்டு வெளியே வரமுடியாது என்ற கருத்தை நிலை நிறுத்த எடுக்கப்பட்ட படம்.

படத்தின் கதைச் சுருக்கம்: சிறையிலிருந்து தப்பி வந்த பெண்கள் சமூகத்தில் சந்திக்கும் பிரச்சனைகளை ஒவ்வொரு பெண்ணையும் தாண்டி ரிலே ரேசாக காண்பிக்கப்படுகிறது. ஒரு பெண்ணின் சந்திப்பில் மற்றொரு பெண்ணின் கதை தொடக்கமாகி கடைசியில் எல்லா பெண்களும் சிறை என்ற வட்டத்திற்குள் வருகிறார்கள். முகம் தெரியாத சோல்மாஸ் கோலாமி ஒரு பெண் குழந்தையை பெற்றெடுக்க, "பெண் பிறந்து விட்டாளா? ஸ்கேன் ரிப்போர்ட்டில் ஆண் என்று வந்ததே, என் மருமகன் இதை அறிந்தால் என் மகளை துரத்திவிடுவானே" என்ற புலம்பலுடன் கோலாமியின் வயதான தாயின் புலம்பலுடன் படம் ஆரம்பிக்கிறது. அதே ஆஸ்பத்திரியின் வாசலில் டெலிபோன் பூத்தில் சிறையிலிருந்து வெளிவந்துள்ள மூன்று பெண்கள் தன் சொந்த ஊருக்கு செல்ல யாரையோ அழைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் நின்றிருக்கும் இடம் பெண்கள் துணையில்லாமல் தனியாக நிற்கவும், பெண்கள் புகை பிடிக்கவும் தடை செய்யப்பட்ட இடம். மூன்று பெண்களில் ஒருவர் போலீசில் மீண்டும் மாட்டிக் கொள்ள, அரிசோ, நர்கேஸ் என்ற மற்ற இரண்டு பெண்களும் தங்கள் அடையாளத்தை மறைத்து டெக்ரென் நகர வீதியில் நாய்படதாபாடு படுகிறார்கள். அரிசோ எதையோ விற்று நர்கேஸ்க்கு காசு திரட்டி சொந்த ஊருக்கு செல்ல வழியனுப்பி வைக்கிறாள். நர்கேஸ் அடையாள அட்டையில்லாமலும், துணையில்லாமலும் வந்ததால் பஸ் டிக்கெட் கூட வாங்க கஷ்டப்படுகிறாள். ஒரு வழியாக கஷ்டப்பட்டு ஊருக்கு டிக்கெட் வாங்கிய நர்கேஸ், பஸ்ஸ்டாண்டில் போலீசைப் பார்த்தது தப்பி ஓடி சிறையிலிருந்து தப்பி வந்த பரி என்ற பெண்ணை காணச் செல்கிறாள். பரியை பார்க்க முடியாமல் நர்கேஸ் செல்ல, அத்துடன் நர்கேஸ் கதை முடிகிறது. பரி அவளது அண்ணண்களால் வீட்டிலிருந்து துரத்தப்பட, கர்ப்பிணியான பரி கருவை கலைக்க போராடுகிறாள். கல்யாணம் பண்ணிக் கொள்ளாமல் கர்ப்பிணியான பரியின் கணவன் எதோ குற்றத்திற்காக மரண தண்டனைப் பெற்று இறந்தவன். பரி என்ற தனிப் பெண்ணாக எங்கும் சென்று கருகலைக்க முடியாமல் தவிக்கும் அந்த வேளையில், ஒரு பெண் குழந்தையை ரோட்டில் தவிக்க விட்டுவிட்டு செல்லும் ஒரு தாயை சந்திக்கிறாள். கண் முன்னாலேயே திட மனத்துடன் பெண் குழந்தையை பிரியும் அந்த தாயுடன் பரி பேசும் போது போலீஸ் வர பரியின் கதையும் அத்தோடு முடிகிறது. கண்ணீருடன் செல்லும் அந்த தாய் வந்த வண்டியில் ஏற, போலீஸ் பரிசோதனை சாவடியில் வண்டி நிற்கிறது. அங்கு யாருக்கும் தெரியாமல் ஒரு விபச்சாரியை கூட்டிவந்த அந்த ஆண் போலீசிடம் கெஞ்சிக் கூத்தாடி கொண்டிருக்க, காரில் வந்த அந்த தாய் நைசாக நழுவ, இப்போது அந்த விபச்சாரியை சுற்றி கதை வருகிறது. விபச்சாரியும் புகைப்பிடித்ததால் ஒரிடத்தில் கைது செய்யப்பட சிறைக்குள் தள்ளப்படுகிறாள். கேமிரா மெதுவாக அந்த அறையைச் சுற்ற அங்கு அரிசோ, நர்கேஸ் உட்பட படத்தில் வந்த அத்தனை பெண்களும் அங்கேயிருக்கிறார்கள். முதன் முதலில் முகம் தெரியாத பெண்ணாக வந்த சோல்மாஸ் கோலாமியை சிறை காவலாளி கூப்பிட்டுக் கொண்டே வருவது போல படம் முடிகிறது. காலையில் ஆஸ்பத்திரியில் கோலாமியுடன் ஆரம்பித்து நாள் பூராவும் பெண்களை சுற்றிக் கதை சுழன்று இரவில் எல்லா பெண்களும் சிறை என்ற ஓரிடத்தில் சந்திக்க கோலாமியுடன் முடிவடைகிறது.

என் ஒ(கோ)ரப் பார்வையில்: இது அவ்வளவு சிறந்தப் படமா என்று சொல்ல முடியாத நிலைமை. உண்மையில் இரானில் பெண்களின் நிலைமை அறியாமல் இந்தப் படத்தை பார்ப்பது அபத்தமாகவே எனக்கு தோன்றியது. அண்மையில் கூட இரானிய பெண்கள் தேர்தலில் நின்றதாகக் கூட கேள்விப்பட்டேன். இந்த படம் அந்த நாட்டின் பெண்கள் பிரச்சனையை எந்த மாதிரி முன் வைக்கிறது என்பதை பல ஆராய்ச்சிகள் செய்து தான் கண்டுபிடிக்க வேண்டும். டிவிடி கவரில் சொல்லப்பட்டிருந்தது என்னவெனில் "அந்த பெண்கள் செய்த மிகப் பெரிய குற்றமே பெண்ணாக பிறந்தது தான்" என்கிற மாதிரி இருந்தது. சொல்லவரும் கருத்து என்ன என்பதை பலவாறு சிந்தித்து பார்த்தேன். அந்தப் பெண்களின் குற்றப் பிண்ணனி என்னவென்று சொல்லாமல், சந்திக்கும் பிரச்சனைகளையே சொல்கிறது படம். அந்த இடத்தில் குற்றம் செய்தவன் யாராகயிருந்தாலும் அந்த பெண்கள் சந்தித்த பிரச்சனைகளை சந்திப்பார்கள். ஒரு வேளை பெண்களை மையப்படுத்த எடுத்தபடமாகக் கூட இருக்கலாம். படத்தில் பாரட்டப்பட வேண்டிய விசயங்களும் இருக்கு.

பின்னனி இசை துளிக் கூட இல்லை. எல்லாம் கார்களின் சத்தமும், டயலாக்கும், மெளனமும் தான் பிண்ணனியாகச் சேர்கிறது. படம் கூட கையடக்க கேமிராவில் எடுக்கப்பட்டதாக தான் தெரிகிறது. வித்தியாசமும் இருக்கிறது. வித்தியாசம் வேண்டுபவர்கள் ஒரு தடவைப் பார்க்கலாம். படத்தின் இயக்குனர் பனாகி ஒரு பேட்டியில் என்ன சொல்லியிருந்தாரென்றால் "அவர் ஹாலிவுட் படங்கள் பார்த்து 5 வருடங்கள் மேலாகிவிட்ட நிலையில் எந்த லாபமும் எதிர்பார்க்காமல் எடுத்த படம்" எனச் சொல்லியிருந்தார். அதற்காகவே அவரைப் பாரட்டலாம்.



இந்த பதிவின் வாக்கு எண்ணிக்கை: . பக்கத்திலுள்ள ஸ்டாரை மவுசால் போட்டுத் தாக்கினால் எனக்கு மவுசு ஏறும். நன்றி:-)

உங்கள் கருத்துக்களை இட

திருப்பி தாக்கியவர்கள்:
ஓரு விசயத்தை முன் வைக்கவிரும்புகிறேன். ஈரானிய படங்கள் ஏன் உலக அளவில் இவ்வளவு முக்கியத்துவம் பெறுகின்றன என்று தெரியுமா? ஈரானில் மட்டும்தான் நீங்கள் படமெடுக்கும் முன்பே படத்தின் முழு ஸ்கிரிப்ட்டை, அரசாங்கத்திடம் காண்பித்து அனுமதி வாங்கி பின் படமெடுக்க வேண்டியதுள்ளது. இவ்வளவு கெடுபிடிகளிருந்தும், சில அற்புதமான இயக்குநர்களை ஈரான் உருவாக்கியிருக்கிறது. இதனை, அப்பாஸ் கிரோஸ்ட்சுமி டெஹல்காவின் பேட்டியில் சொல்லியிருக்கிறார். ஆக, அதை வைத்துப் பார்க்கும் போது இன்னமும் வியப்பு அதிகரிக்கிறது. குறைந்த வளங்களையும், ஆட்களையும் வைத்துக்கொண்டு ஈரானிய இயக்குநர்கள் எடுக்கும் படங்களில் நூறில் ஒரு பங்கினைக் கூட 10,000-20,000 பேர்களை கொண்டு இயங்கும் நம் திரைப்பட துறையினால் எடுக்கமுடியவில்லை என்னும் போதுதான் அயர்ச்சியாகவும், அலுப்பாகவும் உள்ளது.

கொஞ்சம் வேலைகள் அதிகமாக இருப்பதால், இன்னும் ஒரு நாலைந்து நாட்களுக்கு தலைகாட்ட முடியாது என்று தோன்றுகிறது. பிறகு வந்து பதிகிறேன்.
 

உங்கள் கருத்துக்களை இட


<< திரும்ப முன் பக்கத்துக்கு போ

This page is powered by Blogger. Isn't yours? தமிழ் அசைபட இணையச் செயலி தமிழ் விக்கிபீடியா

-->