<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar/9439067?origin\x3dhttp://halwacity.blogspot.com', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script> <!-- Remove below comment line to show the content. Added for meta redirection --> <!--

போட்டுத் தாக்கு!!!!!

எள்ளோடு எலி புழுக்கையும் எண்ணைக்காக காயுதாம்

-ல் போட்டுத் தாக்கியது

பெற்றோருக்கு மரியாதை

Difficulty in reading this post due to font issues? Click here for a PDF copy. Works best if you right-click the link and select 'Save target as...'
இந்த பதிவை போட்டுத் தாக்கியவர் : Vijayakumar
நேற்று புத்தமத சம்பந்தமாக சில புத்தகங்கள் வாசிக்கக் கிடைத்தது. பெற்றோர்களுக்கு நன்றி செலுத்தா பிள்ளைகளைப் பற்றியது அதில் ஒரு புத்தகம். சீன மொழியில் இருந்தாலும் ஆங்கிலத்திலும் மொழி மாற்ற வரிகள் இருந்ததால் அது என்னைக் கொஞ்சம் படிக்க தூண்டியது. போதனையின் மைய்யக் கருத்து என்னவெனில் "நீ கடவுளென்று எவரையும் தொழ வேண்டியதில்லை. உங்கள் வீட்டுலேயே இரண்டு புத்தர்கள் இருக்கிறார்கள். அவர்கள் தான் உன் தாய் தந்தையர். அவர்களுக்கு தங்கமும்,பணமும் கொட்டிக் கொடுத்தாலும் பெற்றோருக்கு ஈடாகாது"

புத்தர் தன் சிஷ்யகோடிகளுடன் நெடுந்தூர பயணம் மேற்கொள்கிறார். அப்போது வழியில் எலும்புக் குவியல்களைக் கண்டு தலை தாழ்த்தி வணங்குகிறார். பிரதம் சிஷ்யர் ஆனந்தா வணங்கியதன் அர்த்தத்தை புத்தரிடம் கேட்கிறார். அதற்கு புத்தர் "இந்த எலும்பு நம் மூதாதையர்களுடையதாக இருக்கலாம். நாம் தாய் தந்தை வழியாக பின்னோக்கி சென்றால் அது நமக்கு உறவினர்களாகக் கூட இருக்கலாம். இந்த வணக்கத்தை என் தாய் தந்தையரை நினைத்து அர்பணிக்கறேன்" என்றவர் தொடர்ந்து "ஆணின் எலும்பு வெண்மையாகவும், மிக மிக கனமானதாகவும் இருக்கும். ஆனால் பெண்ணின் எலும்பு வெண்மைக் குறைந்து ரொம்ப ரொம்ப லேசாகயிருக்கும்" எனச் சொல்கிறார். ஆனந்த அதன் அர்த்தத்தைக் கேட்கவும் புத்தர் ஒரு தாயின் மகத்துவத்தை விளக்க ஆரம்பிக்கிறார்.

"ஒரு ஆண்மகன் பக்தி, தொழிலென்று தன்னால் கூடிய கடமைகளை செய்கிறான். ஒரு பெண்ணுக்கோ தன் பிள்ளைகளை பாராட்டி சீராட்டி பாலூட்டி வளர்ப்பதே அவள் கவனம் பூராவும் இருக்கும். அவளுக்கு பக்தி என்பதே தன் பிள்ளைகளை கண்ணும் கருத்துமாக வளர்ப்பது தான். தன் உடலில் ஓடும் குருதியைத் தான் தன் பிள்ளைக்கு பாலாக்கி ஊட்டுகிறாள். அதனால் அவள் எலும்புகள் வலுவிலந்துப் போகின்றன. தன் பிள்ளை கருவில் ஜனித்தவுடனிருந்து அந்த தாய் படும் அவஸ்தைகள் ஏராளம்" என்று சொல்லி ஒரு தாய் பத்துமாதங்கள் படும் அவஸ்தைகளை விவரிக்கிறார்.
1. முதல் மாதம் புல்லின் மேல் அதிகாலை பனிப் போல கரு ஜனிக்கிறது. மதிய வேளையானது எந்நேரமும் அது மறைந்து விடலாம். அத்தகைய அபாயத்தில் அது ஜனிக்கிறது.
2. இரண்டாவது மாதத்தில் கரு தயிரைப் போல கெட்டியாகத் தொடங்கிறது.
3. மூன்றாவது மாதத்தில் இரத்த குழம்பாக கரு வளருகிறது.
4. நான்கவது மாதத்தில் லேசான மனிதவுருவை அடைகிறது.
5. ஐந்தாவது மாதத்தில் முக்கிய உறுப்புகளான தலை, 2 கால்கள், 2 கைகள் முளைக்கின்றன.
6. ஆறாவது மாதத்தில் உணர்வு உறுப்புகளான கண்கள், காதுகள், மூக்கு,நாக்கு, உடல் மற்றும் மூளை வளரத் தொடங்குகின்றன.
7. எழாவது மாதத்தில் 360 எலும்புகளும், இணைப்புகளும் உருவாகின்றன. மேலும் 84000 மயிர்கால்கள் நடப்படுகின்றன.
8. எட்டாவது மாதத்தில் மூளை வளர்ச்சி முற்றுப் பெற்று, சுயநினைவைப் பெற ஆரம்பிக்கின்றன
9. ஒன்பதாவது மாதத்தில் உடம்பின் ஒன்பது துளைகளான 2 கண்கள்,2 காதுகள்,2 நாசித் துளைகள், 1வாய்,1 மலவாய், 1 சிறுநீர் வாய் திறக்கின்றன.
10. பத்தாவது மாதத்தில் குழந்தை முழுவளர்ச்சிப் பெற்று பிறக்கத் தயாரகின்றன.

இதில் ஒவ்வொரு மாதத்திலும் தன் இரத்தத்திலிருந்து சத்தை பிரித்து ஒரு தாய் கருவில் வளரும் குழந்தைக்கு ஊட்டுகிறாள் குழந்தை பிறக்கும் போது அவளிடமிருந்து இரத்தம் ஆறாகப் போகிறது. 4 அல்லது 5வது மாதம் முதல் குழந்தை உதைப்பை உவகையுடன் அனுபவிக்கிறாள். மாதம் ஏற ஏற கண்ணில் தூக்கத்தைத் தொலைக்கிறாள், உணவு உட்செல்வது குறைகிறது. எப்போதும் குழந்தை ஞாபகம். தன் குழந்தை நல்லபடியாக ஆரோக்கியமாக பிறக்க வேண்டும் என்ற கவலை. யாரிடம் பேசினாலும் தன் குழந்தையைப் பற்றியே பேசுகிறாள். குழந்தைப் பிறக்கும் சமயத்தில் 1000 கத்திகளைக் கொண்டு உடம்பு கூறுப்போட்ட மாதிரி வலியால் துடிக்கிறாள். குழந்தை ஜனித்த மறுவிநாடியே தன் அனுபவித்த மரணவலியையும் மறந்துப் போகிறாள். இது குழந்தை பிறக்கும் போது மட்டுமல்ல அவள் பூவுலகில் இருக்கும் வரை தன் குழந்தைகளை நினைத்து நினைத்தே தேய்ந்துப் போகிறாள்" என்று கூறிவிட்டு தாயின் கருணையை 10 எடுத்துக்காட்டுகளாகச் சொல்கிறார்.

"1. தன் வயிற்றில் இருக்கும் வரை மசக்கை, குழந்தையின் உதை, தூக்க உபாதைகளை அனுபவித்தது இல்லாமல் தன் கருவை எப்பாடுபட்டாவது காப்பாற்றுகிறாள்.
2. பயங்கர பிரசவ வலியையும் தன் பிள்ளைக்காக தாங்கிக் கொள்கிறாள்.
3. எல்லா வலியையும் தன் பிள்ளையை பார்த்த மாத்திரத்தில் மறந்துப் போகிறாள்.
4. தன் குழந்தைக்கு எது நல்லது எது நல்லதில்லை என்பதை பார்த்து பார்த்து ஊட்டி மகிழ்கிறாள்
5. தான் குளிரிலோ, வெப்பத்திலோ கஷ்டப்பட்டாலும் தன் பிள்ளை எந்த பாதிப்புமில்லாமல் வசதியாக உறங்கப் பார்த்துக் கொள்கிறாள்.
6. தன் உடல்நிலைப் பற்றி கவலைப்படாமல் தன் இரத்ததை உருக்கி பாலாக்கி தன் குழந்தைக்கு ஊட்டுகிறாள்.
7. தன் குழந்தை பெய்த மூத்திரம், கழிவுகளை சிரமம் பாராமல் அகற்றி துணிகளை துவைத்து துவைத்து கை தேய்ந்துப் போகிறாள்
8. வெகு தொலைவில் தன் குழந்தை சென்றிருந்தால் அவள்/அவனுக்காக கண்ணீருடன் எத்தனை வயதானலும் காத்திருப்பாள். தனக்கு 100 வயதானாலும், தன் 80 வயது பிள்ளையை அதே பாசத்தோடு தான் பார்ப்பாள்.
9. தன் குழந்தைகளுக்காக எந்த விதமான துன்பத்தையும் தாங்கிக் கொள்ள தயாராக இருப்பாள்.
10. எப்போதும் மறையாத அன்புடனே அவள் தன் குழந்தை மேல் வைத்திருப்பாள்"

இப்படி தாயின் மகத்துவத்தை சொல்லிவிட்டு நீ ஏழேழு ஜென்மம் எடுத்தாலும் இந்த கடனை செலுத்த முடியாதென்று சொல்லி நரகம் பற்றி அந்தப் புத்தகம் அதிகம் விவாதிக்கிறது. தன் பெற்றோரை மறந்த பிள்ளைகள் நரகத்தில் எப்படி உழலுவார்கள் என்பதை கொஞ்சம் விரிவாகவே விளக்குகிறது.

எனது பார்வையில், "ஒரு தாய் 10 குழந்தைகளைப் பெற்றெடுத்தால் அந்த பத்து குழந்தைகளையும் எப்பாடுப்பட்டாவது காப்பாற்றுவாள் ஆனால் அதே 10 குழந்தைகள் அந்த தாயை காப்பாற்றுவார்களா என்பது சொல்லமுடியாத ஒன்று. உண்மையில் தன் பெற்றோர்களை மறந்த எவர்களும் செத்த பிணங்கள் தான். தன் தாய் அனுபவித்த கஷ்டத்தை மறந்தவர்கள் இன்னொரு தாயான மனைவி ஈன்றெடுக்கும் போதும், பிள்ளை பிறந்ததும் அவர்களை கண்ணில் வைத்து ஒருவன் காப்பாற்றும் போது அவன் தன் தாயை நினைக்க வேண்டும். அப்படி நினைக்காதவன் மனிதனே அல்ல. ஆனால் புத்தப் போதனைகளில் சொன்ன மாதிரி சொர்க்கம் நரகம் இருக்கிறத என்பது நம் அறிவுக்கு எட்டாத வீண் விவாதத்திற்குரிய ஒன்று. மதப் போதனைகளில் இருக்கும் மறுபிறப்பு, சொர்க்கம், நரகம் என்பதெல்லாம் ஒரு சிறிய பயம்காட்டலின் மூலம் படியவைக்கும் வேலை தான். சில நேரங்களில் நேர்வழியைச் சொல்லிக் கொடுக்க சில பயம்காட்டலும் தேவைப்படுகிறது. சிறு தெய்வங்களாக சொல்லப்படும் ஐய்யனார், பூதாத்தார் எல்லாரும் ஒரு கோர உருவத்துடன் பயங்கரமாக காட்சிக் கொடுத்தாலும் அது மனிதனை பயம் காட்டலின் மூலம் நேர்வழியில் செலுத்த வேண்டுமென்பதே அதன் நோக்கமாக எனக்குப் படுகிறது. அது உண்மையா? பொய்யா? இல்லை வேறு ஏதாவது கருத்து இருக்கிறதா என்பதும் எனக்கு தெரியாது. இதே வழியை கடைப்பிடிப்பது தான் இந்த சொர்க்கம் நரகம் கான்சப்ட். எது எப்படியிருந்தாலும் வாழும் வாழ்க்கையிலே நீங்கள் சொர்கத்தையோ நரகத்தையோ அமைத்துக் கொள்ளலாம் அதற்கு செத்துப் போய் தான் அனுபவிக்க வேண்டுமென்பதில்லை. இந்தப் பதிப்பின் நீளம் அதிகம் தாண்டிவிட்டதால் இத்தோடு முடித்துக் கொள்கிறேன்"

எல்லாம் சரி தான். அந்த புத்தரின் போதனை புத்தகத்தை எங்கே எடுத்தேனென்று சொல்லவேயில்லையே. சீன புத்தாண்டு நெருங்குகிற காரணத்தால் சிங்கப்பூர் கோலாகலம் பூணுகிறது. வீட்டில் உள்ள பழைய குப்பைகள் அகற்றப்பட்டு வெளியே கொட்டப்படுகிறது. தற்செயலாக அந்தக் குப்பையை நோக்கிய போது, புத்தரின் போதனைகள் புத்தக வடிவில் ஓரிடத்தில் குவிக்கப்பட்டிருந்தது. அதை வெளியில் போட்டவர் என்ன நினைத்து தூர எறிந்தாரோ தெரியவில்லை....

இந்த பதிவின் வாக்கு எண்ணிக்கை: . பக்கத்திலுள்ள ஸ்டாரை மவுசால் போட்டுத் தாக்கினால் எனக்கு மவுசு ஏறும். நன்றி:-)

உங்கள் கருத்துக்களை இட

திருப்பி தாக்கியவர்கள்:
இன்னா விஜய் ஒரே பீல் ஆயிட்ட. அது சரி, நல்ல விசயங்கள் எல்லாம் குப்பையில தான் கிடைக்கும், அதுக்கு இன்னா பண்றது. நல்ல பதிவு. இந்தப் புத்தகத்தின் விரிவாக்கம் தான் நான் சொன்ன "சம்சாரா" என்கிற் படம். கூடிய விரைவில் பதிகிறேன்.
 
உணர்ந்து படித்து ரசிக்கும் வகையில் எழுதியிருக்கின்றீர்கள். நன்றாக இருக்கின்றது.
 
1990-ல் காசி, கயைக்குச் சென்றபோது என் முன்னொர்களுக்குத் தர்ப்பணம் செய்தேன். ஒவ்வொரு உறவுமுறைக்கும் பிண்டம், எள் நீர் விடும்போதும் அதற்கேற்ற மந்திரங்கள் கணீரென்றக் குரலில் தெளிவாகக் கூறப்பட்டன. அவற்றில் அன்னைக்கு மட்டும் மிக அதிக அளவில் உணர்ச்சிப் பூர்வமாக மந்திரங்கள் கூறப்பட்டன. வடமொழியில் இருந்தாலும் ஹிந்தி தெரிந்திருந்ததால் அவற்றின் உள்ளடக்கத்தைப் புரிந்துக் கொள்ள முடிந்தது. பேறுக் காலத்தில் அன்னை நமக்காகப் படும் துயரங்கள் கவித்துவம் ததும்பக் கூறப்பட்டன.

உங்கள் பதிவு எனக்கு அவற்றை ஞாபகப்படுத்தியது.

அன்புடன்,
டோண்டு ராகவன்
 
ஜேஸ்ரீ, புத்தர் கயாவில் உள்ள போதிமரத்தடியில் தான் ஞானமடைந்தாக கேள்விப் பட்டிருக்கிறேன். அதுவுமில்லாமல் அந்த புத்தகங்களையெல்லாம் படிக்கும் போது புத்தமதம் பெற்றோர்களை மிக மிக போற்றவேண்டுமென வலியுறுத்துவதாகத் தெரிகிறது. இருந்தாலும் எங்கிருந்து அது போனதென்பதற்கு என்னிடம் தகுந்த ஆதாரங்கள் என்னிடமில்லை. ராகவன் அய்யாவுக்கு தெரியலாம்.

இறப்பு பற்றி,புத்தர் பொன்மொழிகள், சடங்குகள் என நிறைய புத்தகங்களை கையில் அள்ளி வந்தேன். ஒரு வேளை எல்லாத்தையும் படித்தால் விளக்கம் கிடைக்கலாம் எனக்கு.
 
அருமையான விஜயம் விஜய், பதிவுக்கு நன்றி.

அதை வெளியில் போட்டவர் என்ன நினைத்து தூர எறிந்தாரோ தெரியவில்லை....இந்த விஷயம் தெரியாதா விஜய், அந்த புத்தகத்தின் உள்ளேயோ, பின்னாடியோ போட்டிருப்பார்களே, அது இலவச புத்தகமாயிருக்கும். அதுபோன்ற பல புத்தகங்கள் ஓசிதானேன்னு எடுத்து வந்து வீட்டில் அடுக்கியதோடு சரி:)

முன்னர் China Town பக்கம் ஒரு இடத்தில் கிடைத்தது. இப்போது, புது தேக்காமாலில் உள்ள food courtன் ஒரு ஓரத்தில் அடுக்கடுக்கடுக்காக புதிய புதிய புத்தகங்கள் அடுக்கப்பட்டிருக்கும். இன்னிக்கு சாயங்காலமே போய் எடுத்துவந்து, இதுமாதிரி நிறைய விஷயம் எழுதுங்கோ:)
 
இப்படியெல்லாம் வேற இருக்க. குப்பையில் கிடந்தால் என்ன கடையில் கிடைத்தால் என்ன நல்ல விசயங்களின் மதிப்பு குறைவதில்லை.
 
Budha was clearly a Rebel mystic. One can read that from the comments. Thanks for such a post.
 

உங்கள் கருத்துக்களை இட


<< திரும்ப முன் பக்கத்துக்கு போ

This page is powered by Blogger. Isn't yours? தமிழ் அசைபட இணையச் செயலி தமிழ் விக்கிபீடியா

-->