<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar/9439067?origin\x3dhttp://halwacity.blogspot.com', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script> <!-- Remove below comment line to show the content. Added for meta redirection --> <!--

போட்டுத் தாக்கு!!!!!

எள்ளோடு எலி புழுக்கையும் எண்ணைக்காக காயுதாம்

-ல் போட்டுத் தாக்கியது

கள்ள வோட்டு குத்துவது எப்படி?

Difficulty in reading this post due to font issues? Click here for a PDF copy. Works best if you right-click the link and select 'Save target as...'
இந்த பதிவை போட்டுத் தாக்கியவர் : Vijayakumar

ஜோலியில்லாமல் ஒரு ஜாலி பதிப்பு.

நம்ம தமிழ்மணத்துல ஜோர ஆளுக்கொரு வோட்டுப் பெட்டி கொடுத்து வோட்டுப் போடுற முறையும் வந்தாச்சி. அதுல டாப் 10 வேற கொடுக்கிறாங்க. திராவிட கழக கண்மணிகள் பொறந்த நாட்டுல பொறந்துட்டு கள்ள வோட்டு குத்தத் தெரியலன்ன திராவிடனாக பொறந்ததுக்கே அர்த்தமில்லையே. இதோ உங்களுக்கு டாப் 10 பெட்டியில இருக்கனும்னா சில (கள்ளத்தனமான) வழிகள். எல்லாத்தையும் உங்களுக்கு வேலையில்லன்ன பண்ணுங்க. எல்லாம் நேரக் கொள்ளையாகும் வம்பு பிடித்த வேலைகள்.

டெக்னாலஜி தெரியாதவர்களுக்கு....

1. உங்க சக ஊழியர் எல்லாருடைய கம்ப்யூட்டரையும் சில மணித்துளிகள் பயன்படுத்தக் கேட்டு உங்கள் வலைப்பதிவுக்கு போய் வாக்குப்பெட்டியில் ஒவ்வொரு குத்து விடுங்கள்.
2. உங்கள் நண்பர்கள், தெரிந்தவர்கள் யாவருக்கும் உங்கள் வலைப்பதிவை அனுப்பி பதிவைப் படிக்காமல் வோட்டு மட்டும் போடச் சொல்லுங்கள்.
3. உங்கள் கம்ப்யூட்டர் வலை(நெட்) இணைப்பை துண்டியுங்கள். திரும்ப கம்ப்யூட்டரை நெட்டில் இணையுங்கள். பிறகு உங்கள் பதிப்புக்கு போய் குத்து குத்தென்று உங்கள் வோட்டை குத்துங்கள். இப்படியே எத்தனை வோட்டுக்கள் வேணாலும் போடலாம்.
4. மேல் சொன்ன வசதிகள் இல்லையா உங்களுக்கு. அப்போ உங்க ஆசைக்கு மண் அள்ளிப் போட்டு மூடிவிட்டு கண்ணீர் அஞ்சலி செலுத்திக் கொண்டிருங்கள்.
5. வேற ஏதாச்சிம் வழி இருந்தா எல்லாத்துக்கும் சொல்லி கொடுங்க.
6. டாப் 10 லிஸ்ட்ல இருக்கிறவர் நம்பர் 1-அ எப்படி ஆனாருன்னு அனுபவத்தை பகிர்ந்துக்கிடலாம்.

எதோ கருகிப் போகும் வாடை வருகிறது. காசியின் வயிறு தானென நினைக்கிறேன். காசி கவலைப்படாதீங்க! இதெல்லாம் ஒரு பேன்சி வேலையாகும். நாளாக நாளாக மோகம் குறைய ரெகுலர் வழிக்கு எல்லாரும் வந்து நேர்மையான வாக்குகளை தான் அளிப்பார்கள்.

சும்மா ஜாலிக்கு... கடுமையாக எடுத்துக் கொள்ளாதீர்கள் புன்னகை பூக்களே..... :-)


இந்த பதிவின் வாக்கு எண்ணிக்கை: . பக்கத்திலுள்ள ஸ்டாரை மவுசால் போட்டுத் தாக்கினால் எனக்கு மவுசு ஏறும். நன்றி:-)

உங்கள் கருத்துக்களை இட

திருப்பி தாக்கியவர்கள்:
No.1, No.2 இதுல எல்லாம் எனக்கு ஆசையில்லை. நம்பிக்கையில்லை. நமக்கு வர்றது தானா வரும் (ஹி....ஹி...தமிழ்நாட்டுல மார்க்கெட்ப் போன கதாநாயகன்/கிகள் சொல்றாப் போல ....;-) )
 
இன்னும் நெறைய டெக்னிக்கு இருக்குது. இத வெச்சே பத்துக்குள்ள வந்துட்டீங்க.. அதையும் சொன்னா நம்பர் ஒன்னா நீங்க ஆயிட்டா??? அதனால சொல்லமாட்டேன்!
 
கள்ளவோட்டு எப்படி போடறதுன்ற பதிவுக்க, கள்ளவோட்டு ரொம்ப விழல போல கிடக்கு!
 
அண்ணாச்சிங்களா, சொல்லத் தான் செய்வோம் கள்ள வோட்டு போடுங்க அப்படி இப்படின்னு... நாங்க தங்கங்க...செய்ய மாட்டோம்... எங்க வழி எப்பவுமே நேர்வழி தான். ;-) :-)
 

உங்கள் கருத்துக்களை இட


<< திரும்ப முன் பக்கத்துக்கு போ

This page is powered by Blogger. Isn't yours? தமிழ் அசைபட இணையச் செயலி தமிழ் விக்கிபீடியா

-->