<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d9439067\x26blogName\x3d%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81!!!!!\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLACK\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://halwacity.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://halwacity.blogspot.com/\x26vt\x3d-1566162084738285005', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe", messageHandlersFilter: gapi.iframes.CROSS_ORIGIN_IFRAMES_FILTER, messageHandlers: { 'blogger-ping': function() {} } }); } }); </script> <!-- Remove below comment line to show the content. Added for meta redirection --> <!--

போட்டுத் தாக்கு!!!!!

எள்ளோடு எலி புழுக்கையும் எண்ணைக்காக காயுதாம்

-ல் போட்டுத் தாக்கியது

தி லோயர் டெப்த் - மேக்ஸின் கார்க்கி தகவல் தேவை

Difficulty in reading this post due to font issues? Click here for a PDF copy. Works best if you right-click the link and select 'Save target as...'
இந்த பதிவை போட்டுத் தாக்கியவர் : Vijayakumar
புகழ் பெற்ற ரஷ்ய நாடக ஆசிரியர் மேக்ஸிம் கார்க்கியின் 'The lower depths' நாடகத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட இரண்டு படங்களைப் பார்த்தேன். ஒன்று குரோசவாவின் ஆக்கத்தில் உருவான ஜப்பானிய மொழிப்படமும், ஜீன் ரினாயர்(Jean Renoir) ஆக்கத்தில் உருவான பிரஞ்ச்(French) மொழிப்படத்தையும் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.

இன்னும் பாமர ரசிகனாக நானிருக்கும் பட்சத்தில், கார்க்கியின் படப்பை எழுத்துவாயிலாக படித்திராத பட்சத்தில் எனக்கு 'The lower depths' முழுவதுமாக பிடிபடவில்லை. அடித்தட்டு மக்களின் ஏழ்மை மற்றும் அவர்களின் அறியாமையையும், சமூகத்தின் மிகப் பெரிய பாதிப்பாக ஏழ்மையை அந்த ப்ளேயின் மூலம் சொல்லவருவாதாகத் தெரிகிறது.

கார்க்கியின் இந்தப் படைப்பு கட்டாயம் நூல் வடிவில் இருக்க வேண்டும். நூலக்கத்தில் தேடிக் கொண்டிருக்கிறேன்.நம் வாசகர்கள் யாருக்காவது மேக்ஸிம் கார்க்கி படைப்புகள் இணையத்தில் கிடைக்குமெனில் இணைய முகவரியை எனக்கு கட்டாயம் தெரியப்படுத்தவும். வாசகர்கள் யாராவது 'The lower depths' பற்றி நல்ல ஒரு விமர்ச்சனம் எழுதினாலும் பயனுள்ளதாக இருக்கும்,

மேற்சொன்ன இரு இயக்குனர்களில் குரோசவாவின் இயக்கம் தான் பிடித்திருந்தது. ரினாயர் எதோ கட்டாயத்தில் இந்த படம் எடுத்து மூலக்கருத்தை சொதப்பியதாக எங்கேயோ படித்த ஞாபகம்.

இந்த பதிவின் வாக்கு எண்ணிக்கை: . பக்கத்திலுள்ள ஸ்டாரை மவுசால் போட்டுத் தாக்கினால் எனக்கு மவுசு ஏறும். நன்றி:-)

உங்கள் கருத்துக்களை இட

திருப்பி தாக்கியவர்கள்:
இந்த உரலைப் பார்க்கவும். ஆல் தி பெஸ்ட்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
http://www.amazon.com/exec/obidos/tg/detail/-/048641115X/102-0950182-3367348?v=glance
 
மிக்க மிக்க நன்றி டோண்டு அய்யா. மிக பயனுள்ளதாக உள்ளது நீங்கள் கொடுத்திருக்கிற URL.
 
குரோசாவின் RASHOMON பார்த்தேன். 1950 களில் எடுக்கப் பட்ட அந்த படம் இன்றும் பார்ப்பதற்கு சுவாரசியமாக உள்ளது. விஜய் கிடைத்தால் இந்த படத்தையும் பாருங்கள்
 
கங்கா,

நானும் சில நாட்களுக்கு முன் தான் ரோசாமான் பார்த்தேன். அதில் பைத்தியமாகி தான் குரோசாவா படங்களை விடாமல் விரட்டி விரட்டி பார்த்துத் தள்ளுகிறேன். ரோசாமான் பற்றிய விமர்ச்சனத்தை எனது இந்த பதிப்பில் பாருங்களேன்.

http://halwacity.blogspot.com/2005/01/blog-post_110649561502481981.html
 

உங்கள் கருத்துக்களை இட


<< திரும்ப முன் பக்கத்துக்கு போ

This page is powered by Blogger. Isn't yours? தமிழ் அசைபட இணையச் செயலி தமிழ் விக்கிபீடியா

-->