-ல் போட்டுத் தாக்கியது
அய்யன் வள்ளுவனின் கதை
Difficulty in reading this post due to font issues?
Click here
for a PDF copy. Works best if you right-click the link and select 'Save target as...'
நம் அய்யனின் உலகப் பொதுமறை திருக்குறளை வாழ்வியல் ரீதியாக கண்டு உலகப்பொதுமறையாகப் போற்றி வருகிறோம். வள்ளுவனைப் பற்றி கதைகள் பல உண்டு. தொகுப்பாக நம்மில் எத்தனைப் பேர் வள்ளுவனின் கதையை கேட்டுருப்பார்கள் என்பது கேள்விக் குறியே. நண்பனிடமிருந்து "உலகப் பொதுமறை திருக்குறள்-தமிழ்ப் பண்பாட்டுக் கையேடு" என்ற புத்தகத்தை சுட்டுக் கொண்டுவந்தேன். செய்திகள் பலவாறு இருந்தாலும் பல தமிழறிஞர்கள் செய்த ஆராய்ச்சியின் பொதுவாக வந்த வள்ளுவன் கதையை படக்கதையாக வெளியிட்டு இருந்தார்கள். அந்த புத்தகத்துக்கு பதிப்புரிமை எல்லாம் இருக்கிறதா என்பதை ஆராய்ச்சி செய்வதை விட மக்களுக்கு இந்த பயனுள்ள தகவலை அளிக்க வேண்டுமே என்ற என் உந்துதல் தான் வென்றது. வள்ளுவன் கதையை எங்கள் வலைப்பதிவின் வழியாக தருவதில் மட்டற்ற மகிழ்ச்சி தான். தோராயமாக பரவலான ஆராய்ச்சி முடிவாக கி.மு முதல் நூற்றாண்டை வள்ளுவன் ஜனித்த ஆண்டாக அந்த புத்தகம் கூறுகிறது.
வள்ளுவனின் தோற்றம்:
கி,மு.முதலாம் நூற்றாண்டில் வைகாசித் திங்கள் முழுமதிக்கு மறுநாள் தொண்டை நாட்டில் மயிலாப்பூரில் மயிலைக் கிழாரின் மகனாக வள்ளுவன் பிறந்தான். மதுரையில் பாண்டிய மன்னனிடத்தில் 'உள்பாடு கருமத் தலைவன்' என்னும் வள்ளுவப் பதவியில் இருக்கும் உறவினர் தமிழ்வேள், குழந்தைக்கு "வள்ளுவன்" என பெயர் சூட்ட வள்ளுவனின் குடும்பம் மகிழ்ச்சிக் கடலில் திளைத்தது.
வள்ளுவனின் வாலிபம்;
எழுத்தாணிப் பிடித்து, ஏர் பிடித்து, வேல் பிடித்து வெற்றிக் கண்டான் இளைஞன் வள்ளுவன். காவிதிப்பாக்கத்தில் ஆயிரம் ஏர் பூட்டி உழும் வேளாளர் தலைவரின் மகள் வாசுகியை ஒரு போர்க்களத்திலிருந்து திரும்பி வந்துக் கொண்டிருந்த வள்ளுவன் காதல் கொண்டு மணமும் முடித்தார். அவர்களுக்கு அழகே உருவாக மகள் பிறந்தாள். "முல்லை"யென பெயர் சூட்டி அன்புடன் வளர்த்து வந்தார்கள்.
வந்தவர்களுக்கு வாரி வாரி வழங்கிய வள்ளுவன் சில ஆண்டுகளில் வறியவன் ஆனார். ஒருநாள் வள்ளுவனின் மறைந்த மதுரை வணிகர் எட்டியின் மகன் நாகவேள் நவமணிகள் நிரம்பிய தட்டுடன் வந்தார். தேரோட்டி வருமையால் இருப்பதை உணர்ந்த வள்ளுவன் தன் மனைவி,மகள் கழுத்திலிருந்த நகைகளை தேரோட்டிக்கு கொடுத்தார். நாகவேள் மனம் முல்லையை நாடியது. நவரத்தின தட்டை வாங்காமல் அய்யன் நாகவேளை மதுரைக்கு அனுப்பி வைத்தான்.
வள்ளுவனின் கஷ்ட ஜீவனம்:
கஷ்டம் தலைவிரித்தாட வள்ளுவன் தான் இருந்த மாளிகையும் விற்க வேண்டியாதகி போயிற்று. மாளிகையை விட்டு சென்ற வள்ளுவன் மண்குடிசையில் நெசவுத் தொழில் செய்து குடும்பம் நடத்தி வந்தார்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த ஏலேலச் சோழன் இலங்கையை வென்று ஆண்டாவன். அவன் வழிவந்த இளைஞன் ஏலேலச் சிங்கன் ஒரு கப்பல் வணிகன். நூல் வணிகம் பற்றிப் பேச வள்ளுவன் அவனை வீட்டுக்கு அழைத்திருந்தார். பருவ மழைத் தவறியிருக்கும் நாட்டில் மக்கள் பசியோடு இருப்பதால் ஏலேலச் சிங்கனிடம் வள்ளுவன் நெற்களஞ்சியத்தை திறக்க சொல்கிறான். கைம்மாறாக தரை தட்டியிருக்கும் ஏலேலசிங்கனின் கப்பலை அய்யன் திருக்கையால் இழுக்க அழைக்கிறார். அய்யனும் "ஏலையா! ஏலேல்லோ!" என்று மக்கள் உதவியுடனும் கப்பலை கடலில் விடுகிறார்கள்.
ஒரு நாள் மாலையில் ஏலேலச் சிங்கனும், வள்ளுவன் மகள் முல்லையும் பூஞ்சோலையில் எதிர்பட காதல் கொள்கிறார்கள்.
அரசியலில் நுழையும் வள்ளுவன்:
மயிலாப்பூரை ஆளும் மன்னன் அவனை புகழ்ந்துப் பாட தூதுவனை அனுப்புகிறார். அதை மறுத்த வள்ளுவன் மாணவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டு வாழ்கிறார். அப்போது மாறுவேடத்தில் மாணவனாக சேர்ந்திருந்த பாண்டிய மன்னன் உக்கிரபெரும்வழுதியை வள்ளுவனைப் பார்க்க வந்த பாணனும் பாடினியும் அடையாளம் காண்கிறார்கள். அப்புறம் பாண்டிய மன்னன் வள்ளுவப் பெருமானை தமிழ்வேள் மறைந்துவிட்டதால் வள்ளுவ பதவிக்கு வள்ளுவனை அழைக்கிறார். இப்போது தான் வள்ளுவனுக்கு புரிகிறது நாகவேள் நவமணியுடன் அன்று வந்தது பாண்டியனின் மறைமுக தூவனான என்று. ஏலேல சிங்கனை விட்டு விட்டு வள்ளுவர் மதுரைக்குச் சென்று வள்ளுவப் பதவியை ஏற்கிறார்.வள்ளுவனை அன்னக் காவடியென அரசரவையில் இருக்கும் பலர் பரிகாசம் செய்ய நாட்டில் மதக்கலவரைத்தை மூட்டி சதி திட்டங்களும் தீட்டுகின்றனர். அதை வள்ளுவனின் அறிவுரைப் பேரில் மன்னர் முறியடிக்கிறார்.
மயிலை மன்னனின் கொடுமைப் பொருக்காமால் ஏலேலச் சிம்மனும் மதுரைக்கு வந்து அங்கேயே வணிகம் செய்கிறான். நாகவேள் எல்லோருக்கும் நல்லவன் போல் நடித்து பக்கத்து நாஞ்சில் நாட்டு சிற்றரசன் வேங்கை மார்பனை தந்திரமாக போருக்கு அழைத்து மன்னருக்கே குழி தோண்டுகிறான். வள்ளுவன் அதை ஒற்றர்கள் மூலம் அறிந்து மன்னரை போருக்கு அனுப்புகிறார். கானாப்பேர் போர்கலத்தில் வேங்கை மார்பன், வழுதியின் வேலுக்கு இரையாக அதைப் புகழ்ந்து ஐயூர் மூலங்கிழார் பாட வள்ளுவன் வாழ்ந்தினான்.
வெற்றிக் களைப்பை காரணம் காட்டி நாகவேள் மன்னரை அளவுக்கதிகமாக குடிக்க வைக்கின்றனர். மறுநாள் வள்ளுவன் மன்னரை அழைத்து கோப்பெருந்தேவியுடன் ஒழுக்கத்துடன் வாழ வெண்டுமெனவும், மதுவின் தீமைகளையும் அறிவுரைகளாக சொல்கிறார். அரசனைக் கொல்ல வந்த மெய்க்காப்பாளனிடம் விசாரிக்கும் போது நாகவேள் குற்றவாளியென எல்லாருக்கும் தெரியவருகிறது. கொலைத் தண்டைனைக் கொடுக்கப்படுகிறது.
கொற்கையில் கடல் வணிகத்துக்கு சென்ற ஏலேலச் சிங்கம் தனக்கு கிடைத்த எல்லா பொன்னையும் தங்கக் கட்டியாக்கி அதில் "வள்ளுவர்" என்ற பெயர் பொறிக்கிறான். கடல் கொள்ளையனிடமிருந்து தப்பிக்க அதை கடலில் வீசி எறிகிறான். தங்கக் கட்டியையே நினைத்திருக்கும் ஏலேலவை வள்ளுவர் "உனக்கு உரிமையில்லாத பொருளை நீ வருந்தி காப்பாற்றினாலும் உன்னிடம் நிற்காமல் போய்விடும், உரிமையான பொருளை நீ வீசியெறிந்தாலும் உன்னை நாடி வரும்" என்று அறிவுரைக்கிறார். சிறிது நாள் கழித்து மீனவ வலையில் தங்கக் கட்டி கிடைக்க வள்ளுவனிடம் வந்துக் கொடுக்கிறார்கள். இந்த நிகழ்ச்சியால் வள்ளுவன் மகளை மணமுடிப்பதா வேண்டாமாவென ஏலேலச் சிங்கனின் மனம் ஊசலாடுகிறது. அது குறிப்பால் உணர்ந்து இல்லறத்தின் பெருமையை உரைத்து ஏலேலச் சிம்மனுக்கு தன் மகள் முல்லையை மனமுடித்துக் கொடுக்கிறார்.
ஏலேலச் சிங்கத்துக்கு அகஸ்டஸ் சீசரிடமிருந்து வணிகத்துக்கு அழைப்பு வர கடல் வணிகத்துக்கு கிளம்புகிறான்.
திருக்குறள் படைப்பு:
அரசியல் வாழ்க்கையை துறக்க முடிவு செய்கிறார் வள்ளுவர். "எந்தக் கடமையை செய்ய வேண்டுமென காத்திருந்தேனோ அந்த கடமை செய்யும் நேரம் வந்துவிட்டது. உலக மக்களின் வாழ்க்கையை அறம், பொருள்,இன்பம் என முப்பாலில் அடக்கிவிடலாம். மக்கள் இப்போது அறம், பொருள், இன்பம் எது எனத் தெரியாமல் எடுப்பார் கைப்பிள்ளையாக வாழ்ந்துவருகினறனர். அதனால் இந்த நாவலந்தீவு முழுவதும் பயணம் செய்து என் எண்ணங்களை மக்களுக்கு கூறி மயிலைச் சென்று "முப்பால்" பாட முடிவுச் செய்து விட்டேன்" என்று கூறிவிட்டு இலங்கை, வாரணாசி, பாடலிபுத்திரம் என்று பல இடங்களுக்கு சென்று மக்களுடன் அனுபவத்தைப் பகிர்ந்துக் கொண்டு,அனுபவங்களைப் பெற்றுக் கொண்டு மயிலை திரும்பி "முப்பாலை" படைக்கிறார்.
திருக்குறள் அரங்கேற்றம்:
மதுரைச் தமிழ்ச் சங்கத்தில் நூலைப்பாடிய புலவரோடு எல்லாச் சங்கப் புலவர்களும் சங்கப் பலகையில் ஒன்றாக அமர்ந்து கேட்பது மரபு. ஆனால் வள்ளுவருடன் ஒன்றாக அமரும் தகுதி எவருக்கும் இல்லையென மறுத்து அவரை மட்டும் உட்கார வைத்து "முப்பாலை" கபிலர் தலைமையில் அரங்கேற்றம் செய்கின்றனர்.
புலவர்களின் அய்யப்பாட்டை நீக்கி அங்கு சுடரொளியாக திகழ்கிறார்."அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகுத்திக் குறுகத் தறித்த குறள்" என அவ்வையார் புகழ, "குறளில் தமிழ், தமிழகம் என்ற சொற்களே இல்லையென்றாலும் தமிழ் மொழியின் அருமையையும், தமிழகத்தின் பெருமையையும் அது சொல்லிக் கொண்டேயிருக்கும்" என அனைத்து சங்கப்புலவர்களும் புகழ்பாடினர். அயல்நாட்டு அறிஞர்கள் சாக்ரடீஸ், கான்பூசியஸ்-க்கு ஒப்பிட்டு குறளை புகழ்ந்தனர்.
மதுரை தமிழ்ச் சங்கம் இவ்வாறு அறிவித்தது "முப்பால் நூல் மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் அரங்கேறியதை தொடர்ந்து "வள்ளுவர்" திரு என்ற அடைமொழிப் பெற்று திருவள்ளுவர் என்றும் முதல் பாவலர், தெய்வப்புலவர், தேவர் என்றும் வழங்கப்படுவார். முப்பால் நூல் திருக்குறள் எனவும், தெய்வநூல், பொதுமறை, உலகப் பொதுமறை, தமிழ்மறை, பொய்யாமொழி" எனவும் அழைக்கப்படும்"
வள்ளுவனின் கடைசிக் காலம்:
நாஞ்சில் நாட்டு சிற்றரசன், பொதியமலை சிற்றரசனுடன் சேர்ந்துக் கொண்டு பாண்டிய மன்னன் உக்கிரப் பெரும்வழுதியைப் போரில் கொல்கின்றனர்.
வாசுகி நோய்வாய்ப்பட்டு இறக்கும் தருவாயில் வாழ்க்கைத் தத்துவங்களை கேட்டுத் தெளிகிறார். அய்யனிடம் "நான் அமுது படைக்கும் போதெல்லாம் ஊசியும் ஒரு கிண்ணத்தில் தண்ணீரும் எடுத்து வைக்கச் சொல்வீர்களே. இது நாள் வரையில் நீங்கள் அதை பயன்படுத்தியதுக் கூட கிடையாது. அதன் அர்த்தம் என்ன?" எனக் கேட்கிறார். அதற்கு திருவள்ளுவர் "உலகத்தில் மக்கள் பலர் உண்ண உணவில்லாமல் வாடுகிறார்கள். உணவை யாரும் வீணாக்கக் கூடாதென்பதை உணர்த்தவே அவ்வாறு செய்தேன். ஆனால் நான் இது நாள் வரையில் உணவை சிந்தி வீணாக்கியதில்லை. அதனால் தான் நான் அதை பயன்படுத்தவில்லை" என்றார். அய்யனின் திருக்குறளை அய்யன் வாயால் கேட்டுக் கொண்டே வாசுகி அய்யன் மடியிலேயே உயிர் துறக்கிறார்.
வாசுகியின் மறைவுக்கு பின் மனத் துறவு பூண்ட திருவள்ளுவர் சில நாட்கள் கழித்து மாசித் திங்கள் உத்திரநாளில் இயற்கை எய்தினார்.
இந்த பதிவின் வாக்கு எண்ணிக்கை:
. பக்கத்திலுள்ள ஸ்டாரை மவுசால் போட்டுத் தாக்கினால் எனக்கு மவுசு ஏறும். நன்றி:-)
உங்கள் கருத்துக்களை இட
திருப்பி தாக்கியவர்கள்:
பொதிகையில் திருவள்ளுவர் தொடர் வந்தது. அதில் நீங்கள் கூறிய நிகழ்ச்சிகளும் இடம் பெற்றன. நடிகர் ராஜேஷ்தான் திருவள்ளுவராக நடித்தார் என்று என் ஞாபகம்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
அன்புடன்,
டோண்டு ராகவன்
வள்ளுவருக்கு மகள் இருந்ததே எனக்குப் புதிய செய்திதான்! இந்த வரலாறுமே இப்போதுதான் எனக்குத்
தெரிகிறது!
நல்ல பதிவு. நன்றி.
என்றும் அன்புடன்,
துளசி.
தெரிகிறது!
நல்ல பதிவு. நன்றி.
என்றும் அன்புடன்,
துளசி.
எங்கய்யா தூக்கினே இவ்ளோ மேட்டரு. பேஜாராகீது போ. நல்ல பதிவு, நிறைய விசயங்கள் தெரிந்து கொள்ள முடிந்தது.
உங்கள் கருத்துக்களை இட
<< திரும்ப முன் பக்கத்துக்கு போ