-ல் போட்டுத் தாக்கியது
புதிய மாத வாழ்த்துக்கள்
Difficulty in reading this post due to font issues?
Click here
for a PDF copy. Works best if you right-click the link and select 'Save target as...'
இனிய பெப்ரவரி மாத வாழ்த்துக்கள்.
ஏன் புத்தாண்டுக்கு வாழ்த்துச் சொல்கிற மாதிரி புது மாதத்திற்கு சொல்லுவதில்லை? 12 மாதங்களும் திருப்பி திருப்பி வருவதால் போரடித்து விடுமோ? கொஞ்சம் ஆழமாக டிரில் டவுன் பண்ணி பார்த்தால் நாட்களும் பாவம் தான். ஒவ்வொரு நாளைக்கும் 'இனிய ஞாயிறு வாழ்த்துக்கள்' என ஆரம்பித்து 'இனிய சனி வாழ்த்துக்கள்' என தினந்தோறும் வாழ்த்துக்களைச் சொன்னால் வாழ்த்துக்கே மதிப்பு இல்லாமல் சென்று விடுமோ? திங்கள், செவ்வாய்... என வார நாட்களின் பெயர்கள் திரும்ப திரும்ப வந்தாலும் தினம் தினம் நாள் என்பது புதியதாகத் தானே பிறக்கிறது. அதில் உள்ள நிகழ்வுகளும் புதிது தானே.
'சிந்தனை செம்மலே!' என்று என்னை நீங்கள் அழைப்பது எனக்கு கேட்கிறது. எனக்கு இதெல்லாம் பிடிக்காது மக்களே. 'அடக்கம் அமரருள் உய்க்கும்' என்று சொல்வார்கள். சீக்கிரமே அமரராக விரும்பவிட்டாலும் அடக்கமாகவே இருந்துட்டு போகிறேன். எத்தனை பேர்கள் என்னை கேட்கிறார்கள் தெரியுமா? நீங்க பிறக்கும் போதே நிறைய அறிவோட பிறந்தீங்களா இல்ல இடையில தான் இவ்வளவு அறிவு வந்திச்சான்னு. என்னத்த சொல்ல அவங்களுக்கு?. எங்க பேமிலியே என்னை 'மரமண்டை'-ன்னு கூப்பிடுவாங்கன்னு பெருமையா சொல்லவா முடியுமா?
ஏங்க எங்களைப் போட்டு அறுக்கனும்னு கேக்குறீங்களா? இதெல்லாம் சும்மா..... ஜாலிக்கு.... டேக் இட் ஈஸி.... நான் உங்களோட பகிர்ந்துக்க வந்தது ஒரு லிங்க். சும்மா இதாம்பா லிங்க்-ன்னு சொன்ன அவ்வளவு எடுபடாதுன்னு பெரிய பீடிகையோட ஆரம்பிச்சேன். மன்னிச்சுருங்க...
நிலச்சாரல்.காம் -ல் ஒரு படத்துக்கு வசனம் எழுதிக் கொடுத்தேன். அதை உங்களோட பகிர்ந்துக்கிறதுல மிக்க மிக்க மகிழ்ச்சி... உங்கள் பின்னூட்டத்தை எங்கேவேனாலும் பகிர்ந்துக்குங்க... இந்த URL--ல் போய் அந்தப் படத்தைப் பார்க்கவும். http://www.nilacharal.com/feature/super/super193.html
உங்கள் பொறுமைக்கு கோடி நமஸ்காரங்கள்.
இந்த பதிவின் வாக்கு எண்ணிக்கை:
. பக்கத்திலுள்ள ஸ்டாரை மவுசால் போட்டுத் தாக்கினால் எனக்கு மவுசு ஏறும். நன்றி:-)
உங்கள் கருத்துக்களை இட
திருப்பி தாக்கியவர்கள்:
படத்துக்கு வசனம் அப்படின்னவுடனே இதோடா, நம்ம விஜய், சுஜாதா, பாலகுமாரன், செல்வராஜ் ரேன்ஞ்க்கு வந்துட்டரா ன்னு நினைச்சிக்கிட்டே போனா, என் நினைப்புல மண் அள்ளிப் போட்டியே மக்கா.
(கண்ணா என் டீ-சர்ட்க்குள்ள கட்டெறும்பு புகுந்திருச்சு
எதுக்கு? ஆங்...... கடிக்க!!)
(கண்ணா என் டீ-சர்ட்க்குள்ள கட்டெறும்பு புகுந்திருச்சு
எதுக்கு? ஆங்...... கடிக்க!!)
ஹ ஹ... ச்ச்ச்ச்ச்சும்மா..... ஜாலிக்கு இந்த பதிவு...ஏப்ரல் மாசத்துக்கு ஒரு ட்ரையல் நாராயண். இருந்தாலும் ஒரு படத்துக்கு தானே வசனம் எழுதியிருக்கேன். இல்லையா?
//'அடக்கம் அமரருள் உய்க்கும்'//
ஒருவேளை அடக்கம் பண்ணினப்புறம் பேருக்கு முன்னால (அமரர்) அப்டின்னு போடுறாங்களே அதைத்தான் வள்ளுவர் அன்னிக்கே சொல்லியிருப்பாருங்க! :-P
ஒருவேளை அடக்கம் பண்ணினப்புறம் பேருக்கு முன்னால (அமரர்) அப்டின்னு போடுறாங்களே அதைத்தான் வள்ளுவர் அன்னிக்கே சொல்லியிருப்பாருங்க! :-P
உங்கள் கருத்துக்களை இட
<< திரும்ப முன் பக்கத்துக்கு போ