<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar/9439067?origin\x3dhttp://halwacity.blogspot.com', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script> <!-- Remove below comment line to show the content. Added for meta redirection --> <!--

போட்டுத் தாக்கு!!!!!

எள்ளோடு எலி புழுக்கையும் எண்ணைக்காக காயுதாம்

-ல் போட்டுத் தாக்கியது

உலாவரும் ஒளிக்கதிர்

Difficulty in reading this post due to font issues? Click here for a PDF copy. Works best if you right-click the link and select 'Save target as...'
இந்த பதிவை போட்டுத் தாக்கியவர் : Vijayakumar
இந்த பெயர் ஞாபகமிருக்கிறதா? சன் டிவி, ஜெயாடிவின்னு தனியார் தொலைக்காட்சிகள் படையெடுக்காதப் போது தனிக்காட்டு ராஜாவாக திகழ்ந்த தூர்தர்ஷனில் வரும் ஒரு நிகழ்ச்சியோடப் பெயர். இன்னிக்கு நகர்வலம் போகலாமென்று தீர்மானித்து உலாவரும் ஒளிக்கதிராக சிங்கப்பூரில் நடக்கும் சில சுவையான நிகழ்ச்சிகள் தொகுத்துத் தருகிறேன்.

அக்ரோபெடிக் (Acrobatic) :

சிறுவயது முதலாக நம்மில் நிறைய பேருக்கு சீன பசங்களை புரூஸ் லீ, ஜாக்கி சான் வழியாகத் தான் தெரியும். அவர்கள் குரங்கள் மாதிரி தாவி குதித்து போடும் சண்டைக் காட்சிகள் உலகெங்கும் பிரசித்தம். அடிக்கடி எனக்கு ஒரு சந்தேகம் வருவதுண்டு. உண்மையில் அவங்களுக்கு எழும்பு இருக்கா இல்லையான்னு. விட்டா உடம்பை மடக்கி தீப்பெட்டிக்குள்ளே வச்சிகிடுவாங்க. இது சீனர்கள் மட்டுமில்ல, நம்மூர்ல இருக்கிற கலைக் கூத்தாடிகள், ஏன் கறுப்பர்கள் கூட உடம்பை வளைத்து, கைகால்களை வளைத்து ஏதேதோ செய்வதுண்டு. சிங்கப்பூரில் சேவல் ஆண்டை எதிர் நோக்கியிருக்கும் மக்கள் கடை கண்ணியென்று ஏறி இறங்கிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களை உற்சாகப்படுத்தும் விதமாக மால்களில் அக்ரோபெடிக் எனப்படும் ஒருவித நிகழ்ச்சி கண்ணை கவருகிறது.


மேலுள்ள படங்கள் அக்ரோபெடிக் நிகழ்ச்சியின் போது எடுக்கப்பட்டது தான். அவர்கள் செய்யும் சாகசங்களால் மயிர்கால்கள் குத்திட்டு நிற்க்கிறது. 6-பெப்-2005-ல் சிங்கப்பூர் எக்ஸ்போ ஹாலில் பிரமாண்ட அக்ரோபெடிக் நிகழ்ச்சியும் நடைப் பெற இருக்கிறது. விருப்பமுள்ளவர்கள் அங்கு செல்லலாம். கட்டணம் 18 வெள்ளியிலிருந்து 68 வெள்ளி வரை.

பெர்னாண்டோ பொடேரோ சிற்பம் மற்றும் ஓவியக் கண்காட்சி:

சிங்கப்பூர் முக்கியமான இடங்கள் எங்கே பார்த்தாலும் குண்டு குண்டா சிற்பங்கள் நிற்கும். இந்த கண்காட்சி வருவதற்கு முன்னமே போடேரோ சிற்பம் சிங்கப்பூரில் பிரபலம். Boat quay-ல் ஒரு குண்டுக் குருவி சிற்பத்தைப் பார்த்து ஊரிலிருந்து யார் வந்தாலும் அந்தக் குருவியை காட்டத் தவறுவதில்லை. கறுப்பு கலந்த சாம்பல் கலரில் நிற்கும் சிலைகள் யாவையும் கொலம்பியன் கலைஞன் பெர்னாண்டோ பொடேரோ(Fernando Botero)-வால் செப்பால் செய்யப்படதாகும். அவருடைய சிற்பத்திலும், ஓவியத்திலும் ஒரு சாதரண உருவத்தை இயல்புக்கு மாறாக குண்டாக்கிக் காட்டுவதால், அதை பார்ப்பவர்களுக்கு ஒரு வித்தியாசமான உணர்வைக் கொடுக்கிறது. படத்திலுள்ளது போடேரோவின் கலையாக்கத்தில் உருவானது தான்.

72 வயதான பொடேரோ இந்த 20-ம் நூற்றாண்டின் மிகச் சிறந்த கலைஞன். லத்தீன் அமெரிக்காவிலிருந்து இந்த நூற்றாண்டில் அவர் சிற்பம் மற்றும் ஓவியத்திற்காக புகழ் பெற்றவர். அவருடைய சிற்பங்கள் மற்றும் ஓவியங்கள் உலகமெல்லாம் சுற்றி இப்போது சிங்கப்பூருக்கும் வந்துள்ளது. பொடேரோவின் 22 சிற்பங்களும் 50 ஓவியங்களும் கண்காட்சிக்கு வந்துள்ளது.

1. சிங்கப்பூர் ஆர்ட் மியூசியத்தில் அவருடைய 50 ஓவியங்களும்,15 சின்ன சிலைகளும்,1 பெரிய சிலையும் உள்ளது.
2. எஸ்பிளனேடு வளாகத்தில் 5 சிலைகளும்
3. எஸ்பிளனேடு பார்க்கில் 8 சிலைகளும்
4. சாங்கி விமான நிலையத்தில் 2 சிலைகளும்
5. ஆர்சர்ட் ரோட்டில் 4 சிலைகளும் நிறுவப்பட்டுள்ளன. இந்த சிலைகளை கண்டு ரசிப்பதில் எனக்கொரு மயக்கமே. இது பெப்ரவரி 27 வரை சிங்கப்பூரில் இருக்கும். மேலும் தகவலுக்கு...

உலகத்தின் உயர்ந்த மனிதன்:

ஞாயிற்றுக் கிழமையன்று சிங்கப்பூர் லிட்டில் இந்தியா பக்கம் போவெதென்பது முடியாத காரியம். நமது இளைஞர்கள் ஆங்காங்கே கூடி கும்பல் கும்பலாக நின்றிருப்பார்கள். அது தானே அவர்களுக்கு சொர்க்க பூமி. அதே சிரங்கூன் ரோட்டை ஒட்டிய தெருக்களில் விபச்சாரமும் கொடிக்கட்டிப் பறக்கும். முக்கியமாக முஸ்தாப கடையை ஒட்டிய ஹிந்து ரோட்டின் பக்கம் ஒருநாள் ஞாயிறு தெரியாத்தனமாக உள்ளே நுழைய நமது அருமை இளைஞர்கள் அங்குள்ள வீட்டின் முன் கும்பலாக நின்று எதையோ ரசித்துக் கொண்டிருந்தனர். எட்டிப் பார்த்தபோது தான் மேட்டரே தெரிந்தது. அரைகுறை ஆடையுடன் நிற்கும் பெண்கள் ஆள் பிடிப்பது விரட்டுவதுமாக இருக்க, நம்ம விடலைப்பசங்க ஜொள்ளு ஆறாக ஓடும். கருமம்டா சாமி.

ஆனால் இன்று முஸ்தாபா கடை வாசலிலேயும் கூட்டம். எட்டிபார்த்தவுடன் நல்ல விசயம் தான் என்றறிந்தவுடன் நிம்மதியானேன். மேட்டர் இது தான். உலகிலேயே உயரமான மனிதனான நசீர் அகமது சமொரோ நின்றிருந்தார். அவர் ஒரு பாகிஸ்தானி. ஏதோ ரசிகர்ளை காண்கிறார் என்று நினைத்தால் மனிதர் கண்காட்சிக்காக நின்றிந்தார். அவர் கூட நின்று ஒரு போலராய்ட் படம் பிடித்துக் கொண்டால் 10 வெள்ளி கொடுக்க வேண்டும். பார்க்க பாவமாகத் தான் இருக்கிறது. எல்லோரும் தன் கைத்தொலைபேசியில் அவர் படத்தை அடக்கிக் கொள்ள, நான் என் கேமிராவை கையோடு எடுத்துச் சென்றிருந்ததால் அந்தக் கூட்டத்திலும் படம் பிடிக்க முயற்சி பண்ணினேன்.

பிளாஷ் போட்டு எடுக்க முடியாததால் அது அவ்வளவாக சரியாக வரவில்லை. மனிதர் ஒரு நடை விட்டாரே... அய்யோ மனிதனா ராட்சசனா என்ற பிரமிப்பு. அவர் வழியை மறித்து படம் பிடிக்க முயற்சி பண்ண அவரோ "வா என்னோடு நின்று காசுக்கு படம் எடுத்துக்கோ" என்று என்னை தர தரவென இழுக்க, நான் பயத்தில் நடுங்கி தப்பித்தோம் பிழைத்தோமென ஓடி வந்துவிட்டேன்.

இந்த பதிவின் வாக்கு எண்ணிக்கை: . பக்கத்திலுள்ள ஸ்டாரை மவுசால் போட்டுத் தாக்கினால் எனக்கு மவுசு ஏறும். நன்றி:-)

This page is powered by Blogger. Isn't yours? தமிழ் அசைபட இணையச் செயலி தமிழ் விக்கிபீடியா

-->