-ல் போட்டுத் தாக்கியது
துண்டுப் பேப்பர் வாசகன்
Difficulty in reading this post due to font issues?
Click here
for a PDF copy. Works best if you right-click the link and select 'Save target as...'
என்றைக்காவது கையில் கிடைக்கும் துண்டுப் பேப்பர்களை படித்ததுண்டா?
துண்டுப் பேப்பர்கள் என்றால்....
மளிகைச் சாமான் கட்டி வரும் துண்டுப் பேப்பர்
பீச்சில் சுடச்சுட மிளகாய் பஜ்ஜி சாப்பிட எண்ணைக் கரையுடனும் பஜ்ஜியுடனும் கொடுக்கும் துண்டுப் பேப்பர்
புதுசாக போட்டுவந்த போட்டோ பிரேமில் சுற்றி வரும் பேப்பர்
முக்கு கடையில் யாருக்கு தெரியாமல் சரக்கு வாங்கி வரும் போது சரக்கைச் சுற்றித் தரும் நியூஸ் பேப்பர்
இப்படி பலவிதங்களில் கைக்கு வரும் பேப்பர்களை படிப்பதில் ஒரு அலாதி சுகம் இருக்கத் தான் செய்யும்.
பழைய பேப்பர்கடையில் போட்ட தினமலர், வாரமலர், ஹிந்து, இந்தியன் எக்ஸ்பிரஸ், ஸ்கூல் ஹோம் ஒர்க் நோட்டு, ஆனந்தவிகடன்,குமுதம், ராணி, ராணிமுத்து,சில சமயம் பெரிய பெரிய எழுத்தாளர்கள் எழுதிய புத்தகங்கள்(திருக்குறள் முதலாக) தெரிந்தோ தெரியாமலோ பழைய பேப்பர்கடையை அடைய, பக்கதிலிருக்கும் 'முருகன் ஸ்டோர்' கடைக்காரர் தன் கடைப் பையனை அனுப்பி "எலே பேப்பர் தீர்ந்திருச்சி பக்கத்து பழைய பேப்பர் கடையில போயி வாங்கிட்டு வாடா" என்று அனுப்புவார். அவனும் கட்டாக மேல சொன்ன பழைய பேப்பர் மற்றும் புத்தகக் கட்டை கொண்டுவருவான். நான் போய் சட்னி அரைக்க பொரிக்கடலை 1/2 கிலோ வாங்க, கடைக்காரரும் வெயிட்டுக்கு ஏத்த மாதிரி ஏதாவது புத்தகம் இல்லை செய்தித்தாளைக் கிழித்து பொட்டலம் போட்டுத் தருவார்.
பெரிய பெரிய புத்தகங்கள் கனமாக இருக்க, அந்த கனமே நம்மை தூக்கத்தில் அழ்த்தும். ஆனால் இந்த துண்டுப் பேப்பரைப் பார்த்தும் மனசு பரபரவென்று படிக்க துடிக்கும். சில சமயம் அருமையான செய்திகள் மாட்டும், சில சமயம் நல்ல துணுக்குகள் மாட்டும், சில சமயம் சமையல் குறிப்பு, டிப்ஸ் டிப்ஸ் கையில் வந்து மாட்டும். அதையெல்லாம் அம்மாவுக்கோ, மனைவிக்கோ இல்லையென்றால் பிள்ளைகளுக்கோ வாசித்து காண்பிப்பதில் தனி இன்பம்.
மிக அரிதாக சில சமயம் ஏற்க்குமாறானா துண்டுக் கதை கிடைக்க அதில் "அவன் மெல்ல மெல்ல அவளை நெருங்கினான்" என்பதோடு துண்டுப் பேப்பர் கிழிபட்டிருக்க, அய்யோ எஸ்,ஜே.சூர்யா படம் பார்க்கையில கரண்ட் போன மாதிரி ஷாக் அடிப்பதுமுண்டு.
துண்டுப் பேப்பர் வாசகனாக இருப்பதிலும் தனி இன்பம் தான். அதிலும் சஸ்பென்ஸ் சிறுகதை ஆரம்பித்து முடிவு மட்டும் பொட்டலம் போட அறுபட்டிருக்க, முடிவு தெரியாமல் அது இப்படியிருக்குமோ, இது அப்படியிருக்குமோ என்று நமக்கு நாமே நீதிபதியாவதில் சூப்பர் த்ரில். வெளிநாடுகளில் வாழும் தமிழர்களுக்கு இந்த அனுபவம் கிடைப்பதும் அரிதே.

இந்த பதிவின் வாக்கு எண்ணிக்கை:
. பக்கத்திலுள்ள ஸ்டாரை மவுசால் போட்டுத் தாக்கினால் எனக்கு மவுசு ஏறும். நன்றி:-)
உங்கள் கருத்துக்களை இட
திருப்பி தாக்கியவர்கள்:
http://inru.blogspot.com/2004/06/blog-post_17.html
:-)
ஒரு தடவை என்னுடைய கதையை எனக்கே உளுத்தம்பருப்பாய்க் கட்டிக் கொடுத்தபோது ஏதோ தேசிய விருது வாங்கின மாதிரி ஒரு பரவசம். :))

நான் பதிவாகப் போட நினைத்தது இங்குப் பின்னூட்டமாக வருகிறது. இம்மாதிரி ஒரு துண்டுப் பேப்பரில் "புடலங்காய் கூட்டு" என்றக் கதையின் ஒரு பகுதி காணக்கிடைத்தது. படத்தைப் பார்த்தால் குமுதம் பத்திரிகையில் வந்தது போன்றத் தோற்றம். கதையின் நாயகன் மனைவியுடன் கோபித்துக்கொண்டு ட்ரெயினில் செல்கிறான். நடுவில் ஸ்டேஷனில் டிபன் ஸ்டாலில் கிச்சடி வாங்க வருகிறான். அவசரத்தில் கிச்சடியை முதலாளி அவன் உள்ளங்கையிலேயே போட்டுவிட, சூட்டில் கை வெந்துப் போகிறது. அதற்கு மேல் படிக்க இயலவில்லை. கதை அறுபதுகளில் வந்திருக்கும் என்று யூகம். யாராவது முழுக்கதையையும் கூற இயலுமா?
அன்புடன்,
டோண்டு ராகவன்
அன்புடன்,
டோண்டு ராகவன்
மிக அரிதாக சில சமயம் ஏற்க்குமாறானா துண்டுக் கதை கிடைக்க அதில் "அவன் மெல்ல மெல்ல அவளை நெருங்கினான்" என்பதோடு துண்டுப் பேப்பர் கிழிபட்டிருக்க, அய்யோ எஸ்,ஜே.சூர்யா படம் பார்க்கையில கரண்ட் போன மாதிரி ஷாக் அடிப்பதுமுண்டு.
உங்கள் கருத்துக்களை இட
<< திரும்ப முன் பக்கத்துக்கு போ