<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://draft.blogger.com/navbar.g?targetBlogID\x3d9439067\x26blogName\x3d%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81!!!!!\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLACK\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://halwacity.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://halwacity.blogspot.com/\x26vt\x3d-1566162084738285005', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe", messageHandlersFilter: gapi.iframes.CROSS_ORIGIN_IFRAMES_FILTER, messageHandlers: { 'blogger-ping': function() {} } }); } }); </script> <!-- Remove below comment line to show the content. Added for meta redirection --> <!--

போட்டுத் தாக்கு!!!!!

எள்ளோடு எலி புழுக்கையும் எண்ணைக்காக காயுதாம்

-ல் போட்டுத் தாக்கியது

விடை தெரியா கிராஃபிட்டி

Difficulty in reading this post due to font issues? Click here for a PDF copy. Works best if you right-click the link and select 'Save target as...'
இந்த பதிவை போட்டுத் தாக்கியவர் : Vijayakumar
நீண்ட நாட்களாக சில கேள்விகளுக்கு பதில் தேட வேண்டுமென முயற்சிப்பேன். பதில் கிடைக்கவில்லையென்று நான் சொல்ல மாட்டேன். தேடவில்லை. இதற்காக ஆனந்தவிகடன் மதன் கேள்வி பதிலுக்கோ, அரசு, அல்லி பதிலுக்கோ நான் செல்ல விரும்பவில்லை. இணையற்ற இணைய உலகத்தில் சில மணி நேரம் உலவினாலே எதற்கும் விடைக்கிடைக்கும். இருந்தாலும் சரியான திசையில்லாவிட்டால் அங்கிருந்து கண்டறிவதும் மிகக் கடினம். நம் சக வலைப்பதிப்பு மன்னர்கள் மதனை விட சிறப்பாகவே பதில் சொல்லமுடியுமென்ற நோக்கில் இரண்டு கேள்விகளை உங்களிடம் எறிகிறேன்.

கிராஃபிட்டி (Graffiti)

முக்கியமாக ஆப்பிரிக்க-அமெரிக்கர்கள் வாழும் பகுதிகளில் ஒரு விதமான ஓவியத்தை தெரு சுவர்களில் கண்டிருக்கிறேன். நிறைய ஹாலிவுட் படங்களிலும் காணலாம். அடித்தட்டு மக்கள் இருக்கும் அழுக்கான வீதிகளில் சுவர் முழுவது ஒரு விதமான ஓவியங்களுடன் கேமிரா சுழல வைத்துக் காண்பிப்பார்கள். மிக அண்மையில் தான் அதன் பெயர் கிராஃபிட்டி(Graffiti) என்பதை கேள்விப்பட்டேன். கீழுள்ள ஒரு கிராஃபிட்டி படத்தைப் பார்க்கவும்.
நானும் இந்த மாதிரி கிராஃபிட்டிகளை நிறைய கண்டிருக்கிறேன். ஓவியம் மாதிரியும் இல்லாமல், எழுத்துக்கள் மாதிரியும் இல்லாமல் குழப்பமான நிலையில் வரையப்படும் கிராஃபிட்டிகளின் முக்கியத்துவம் என்ன? அது நமக்கு சொல்லவரும் சேதி என்ன? சில விவரங்கள் தேவை.

மர்ஃபிஸ் லா (Murphy's law)

நாம் பஸ்-ஸ்டாண்டை அடையும் சில செகண்டுக்கு முன்னர் நம் கண் முன்னாலே பஸ் கிளம்பிப் போகும். சீக்கிரம் பஸ்-ஸ்டாண்டை அடைந்தால் நம் நேரத்திற்கு அநியாயமாக மெதுவாக வரும் பஸ்.

மேக இருண்டுகிட்டு வந்தாலும் நாம் வீட்டுல சும்மா இருக்கும் போது மழை பெய்யாது. அதே எதோ ஒரு வேலையா வெளியே கிளம்பும் போது மழை பிச்சிக்கிட்டு ஊத்தும். இதுக்கு பேரு மர்ஃபிஸ் லா அப்படின்னு சொல்ல கேள்விப்படுட்டிருக்கிறேன். மார்ஃபிஸ் லாவை யாராவது ஒரு சின்ன விளக்கம் கொடுக்க முடியுமா?

இப்போது தான் கூகிளில் தேடும் போது மர்ஃபிஸ் லாவை பற்றி இரண்டு வலைத்தளம் மாட்டியது.

மர்ஃபிஸ் லா - 1
மர்ஃபிஸ் லா - 2
அந்த வலைத்தளத்தை நேரம் கிடைக்கும் போது தான் படிக்க வேண்டும். உங்களுக்கு மர்ஃபிஸ் லாவைப் பற்றி தெரிந்திருந்தால் விளக்கமளிக்கவும்.

இந்த பதிவின் வாக்கு எண்ணிக்கை: . பக்கத்திலுள்ள ஸ்டாரை மவுசால் போட்டுத் தாக்கினால் எனக்கு மவுசு ஏறும். நன்றி:-)

உங்கள் கருத்துக்களை இட

திருப்பி தாக்கியவர்கள்:
மர்ஃபீஸ் லா என்பது ரொம்ப எளிமையானது. "ஏதாவது கெட்டுப் போகக்கூடும் என்றால் அது நிச்சயம் கெடும்" என்பதே அது. (If anything can go wrong, it will). சமீபத்தில் 1968-ல் இதைப் பற்றி ஆலன் ஸ்மித் என்பவர் எழுதிய "A short history of fingers and other state papers" என்றப் புத்தகத்தில் படித்தேன்.

அதாவது நாம் வெளியே செல்லும்போது கைக்குட்டை எடுத்துக் கொள்ள மறந்து விட்டோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். அப்போதுதான் இல்லாத தும்மல் எல்லாம் வரும். மூக்கைச் சிந்தும் கட்டாயம் வரும். அதுவும் அழகான ஃபிகர்கள் எதிரில் இருக்கும்போதுதான் இது நடக்கும்.

(இப்போதும் அது நடந்தே விட்டது. நான் வலைப்பதிப்பதை எப்போதும் வந்துப் பார்க்காத என் வீட்டம்மா இப்போது மேலே எழுதியதைப் படித்து விட்டு 58 வயதுக் கிழவனுக்கு ஃபிகர் கேட்கிறதா என்று என்னைச் செல்லமாகத் தட்டிச் சென்றார்.)

அன்புடன்,
டோண்டு ராகவன்
 
ஹா.. ஹா... மனசுல இளமையிருக்கும் வரை வயதென்ன செய்து விடமுடியும் அய்யா. தகவலுக்கும் நன்றி.
 

உங்கள் கருத்துக்களை இட


<< திரும்ப முன் பக்கத்துக்கு போ

This page is powered by Blogger. Isn't yours? தமிழ் அசைபட இணையச் செயலி தமிழ் விக்கிபீடியா

-->