<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d9439067\x26blogName\x3d%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81!!!!!\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLACK\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://halwacity.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://halwacity.blogspot.com/\x26vt\x3d-1566162084738285005', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script> <!-- Remove below comment line to show the content. Added for meta redirection --> <!--

போட்டுத் தாக்கு!!!!!

எள்ளோடு எலி புழுக்கையும் எண்ணைக்காக காயுதாம்

-ல் போட்டுத் தாக்கியது

சக்கரை இனிக்கிற சக்கரை

Difficulty in reading this post due to font issues? Click here for a PDF copy. Works best if you right-click the link and select 'Save target as...'
இந்த பதிவை போட்டுத் தாக்கியவர் : Vijayakumar
மணி பாவம் சின்ன பையன். கொஞ்ச நாளைக்கு முன்ன தான் அவனோட 12-வது பிறந்த நாளை கொண்டாடினான். அவனது அம்மா பையன் ஒழுங்கா படிக்கனும்கிறதுல ரொம்ப கண்டிப்பு. ஸ்டடி அவர்ல மணி கட்டாயம் உக்காந்து படிச்சே ஆகனும். அன்னிக்கும் இப்படி தான் அக்கறையோட படிக்க உட்காருகிறான்.

கையில வரலாற்றுப் பாடத்தை எடுத்துக் கொண்டு "மெளரிய மன்னர் வம்ச வழி வந்தவர் அசோகர். கலிங்கப் போருக்கு சென்ற அசோகர் போரில் மனம் வெறுத்து...." இப்படி சத்தம் போட்டு எட்டு வீட்டுக்கு கேட்கும் படி படித்துக் கொண்டிருந்தான்.

"டேய் மணி.... சத்தம் போட்டு படிச்சி பழகாதேன்னு எத்தனை தடவை சொல்றது. அதையே பழக்கப்படுத்திக்காதே... மனசுக்குள்ளே படிச்சி பழகு" அடுக்களையிலிருந்து அவன் அம்மாவின் அதட்டல் குரல்.

இப்போது மணி மனசுக்குள்ளே படிக்க ஆரம்பித்தான் "மெளரிய மன்னர் வம்ச வழி வந்தவர் அசோகர். கலிங்கப் போருக்கு சென்ற அசோகர் போரில் மனம் வெறுத்து....".... ஜன்னல் வழியாக அடுத்த வீட்டு சூரியன் FM அமர்களமான பாட்டு ஒன்றை ஒலி பரப்பிக் கொண்டிருந்தது.

மனசுக்குள் படித்துக் கொண்டிருந்த மணியின் காதில் ஒலிபரப்பாகிக் கொண்டிருந்த அந்த நியூ படத்தின் "உத்தரவின்றி உள்ளே வா" பாடலின் ஆரம்ப இசை கவனத்தை கவர, அவனுக்கு ஒரே கொண்டாட்டமாகியது. "ஆகா அம்மா இதுக்கு தான் அமைதியா படிக்க சொன்னாங்களா?"

மணியின் கற்பனையில் கொஞ்ச நாளைக்கு முன் நியூ படத்தின் பாட்டு டிவியில் பார்த்த போது கையை இடுப்புக்கு முன்னாடியும் பின்னாடியும் தேய்த்து ஆடிக் கொண்டிருந்த சிம்ரனும், சூர்யாவின் மனக்கண்ணில் வந்து நின்றனர். மெல்ல பாட்டின் வரியும் காற்றில் மிதந்து வர மணியின் மனசு எதை எதையோ கணக்கு பண்ண ஆரம்பித்தது.

(பாட்டாக சிம்ரன் ராகத்தை ஆரம்பிக்கிறார்)

சிம்ரன் டீச்சர் : "புத்தகமின்றி சொல்லித் தாரேன் வா....உத்தரவின்றி உள்ளே வா"

மணியின் மனசு: சே சிம்ரன் டீச்சருக்கு பயங்கர ஞாபக சக்தி போல. எங்க டீச்சர் சரியான ஞாபக மறதி. எப்போ பார்த்தாலும் கண்ணுல கண்ணாடியும் ஒரு கையில புக்கும் இன்னொரு கையில பிரம்பு வச்சிக்கிட்டு தான் சொல்லி தர்றாங்க. டியூசன் படிக்க வர்ற சூர்யா அங்கிளை சிம்ரன் டீச்சர் எப்படி உத்தரவில்லாம வரச் சொல்றாங்க. ஆனா கிளாஸ்க்குள்ளே வரனும்னா நாங்க "மே ஐ கம்மின்"-ன்னு கேட்டுத் தான் வரனும். இல்லேன்னா டீச்சர் அடிப்பாங்க. சிம்ரன் டீச்சர் தான் நல்ல டீச்சர்

சிம்ரன் டீச்சர் : "கட்டணமின்றி சொல்லித் தாரேன் வா... உத்தரவின்றி உள்ளே வா"

மணியின் மனசு: ம்... நம்ம டீச்சர் மாசத்துக்கு 110 ரூபாய் டியூசனுக்கு வங்குறாங்க. தெண்ட டீச்சர்

சிம்ரன் டீச்சர் : "நித்திரையின்றி சொல்லித் தாரேன் வா... வா வா....."

மணியின் மனசு: தூங்காம சொல்லித் தார்றாங்க சிம்ரன் டீச்சர். எப்படி பாசத்தோட கூப்பிடுறாங்க வா வா...ன்னு. எங்க பனுமதி டீச்சரும் இருக்காங்களே. எப்போ பார்த்தாலும் உர்றுன்னு முஞ்சை வச்சிக்கிட்டு

கோரஸ்: "சக்கரை இனிக்கிற சக்கரை அதில் எறும்புக்கு என்ன அக்கற. நீ அக்கரை நான் நிக்கிறேன் கெஞ்சி கேக்கும் படி ஏன் வைக்கிறே"

மணியின் மனசு : "அய்யோ நம்ம ஊரிலே (திருநெல்வேலி) சக்கரைன்ன வேற அர்த்தம் ஆச்சே... அது இனிக்க வேற செய்யுமா? இனிக்குதுன்னு எறும்பு அக்கறைப்பட்டு கடிச்சுதுன்னா....அம்மே வீங்கிரும்ல..." உட்கார்ந்திருந்த இடத்தை விட்டு வேறு இடத்துக்கு நகர்ந்து உட்கார்ந்த மணி, எறும்பு கடிச்சிறக் கூடாதுன்னு அக்கறையோட கால்கள் இரண்டையும் நன்றாக ஒடிக்கி வைத்துக் கொண்டான்.

சூர்யா அங்கிள் : "ஏ... ஏ... கேள்விக்கு பதில் என்ன தெரியாது... கலங்கி நிக்கிறேன் புரியாது..நீ சொல்லு நீ சொல்லு தெரிஞ்சிக்கிறேன், 100 மார்க்கு பரிட்சையில் வாங்கி காட்டுறேன்"

மணியின் மனசு: "சூர்யா அங்கிள் நல்ல ஆடுறாரு, ஆனா சரியான மக்கு மாமா போல. கேள்விக்கு பதில் கூட தெரியலையாம். அதுக்கு தான் சிம்ரன் டீச்சர்கிட்ட டியூசன் படிக்க வந்திருக்காரு போல. 100 மார்க்கு வாங்கிருவாறா? நான் தான் வாங்குவேன். அது மக்கு மாமா... மாமாவாலே முடியாது"

சூர்யா அங்கிள் : "என்னடி பண்ணுது சிங்காரி இப்படி நிக்கிற ஒய்யாரி உன்னிரு கண் விழி பொல்லது, உள்ளது எப்பவும் சொல்லாது"

மணியின் மனசு : "சூர்யா அங்கிள் ரொம்ப பேட் (Bad). எப்படியெல்லாம் திட்டுறாரு நல்ல சிம்ரன் டீச்சரை..."

சிம்ரன் டீச்சர் : "ராத்திரி நேர பூஜை தினம் புரிந்திட...உத்தரவின்றி உள்ளே வா...பூத்திரி எத்தி வைத்து அதில் படித்திட உத்தரவின்றி உள்ளே வா...மன்மத ராகம் ஒன்று மனம் இசைத்திட வாவா...."

மணியின் மனசு : எங்க வீட்டுல சாயங்காலம் தானே பூஜை பண்ணுவாங்க. சிம்ரன் டீச்சர் ஏன் ராத்திரி பூஜை பண்றாங்க... ம்ம்ம்ம்???? கரண்ட் வேற போயிடுச்சி போல. சூர்யா அங்கிளை பூத்திரி ஏத்தி படிக்க கூப்பிடுறாங்க.... ஆஹா சிம்ரன் டீச்சர் சங்கீதம் வேற படிச்சிருக்காங்க போலேயே... அம்மா வேற என்னை சங்கீதம் கத்துக்கன்னு நச்சரிக்கிற. முதல்ல சங்கீதத்துல மன்மத ராகம் தான் கத்துக்கனும்

சூர்யா அங்கிள் : "மெத்தை மீது தாவாது தத்தை ஒன்று வாடும் என் வித்தை கான தேடும் தொட்டதும் பட்டதும் பூ மலரும் முத்திட முத்திட தேன் சிதறும்"

மணியின் மனசு : சூர்யா அங்கிள் சொல்றது ஒன்னுமே புரியல...

சூர்யா அங்கிள் (மீண்டும்) : "கற்றது உன்னிடம் கையளவு உள்ளது என்னிடம் கடலளவு"

மணியின் மனசு : கற்றது உன்னிடம் கையளவு... கற்றது உன்னிடம் கையளவு.... ம்ம்ம் ஞ ஞ.... ஒளவையார் சொன்னது. அங்கிள் கரெக்டா சொல்றாரு....

சிம்ரன் டீச்சர் : "இளகிய மாலை நேரம் மனம் மயங்குது... உத்தரவின்றி உள்ளே வா... சுகமெனும் வெள்ளம் பாய மடை திறந்தது... உத்தரவின்றி உள்ளே வா... இனியொரு கேள்விக்கான விடைகிடைத்தது...வா வா...."

மணியின் மனசு : வெள்ளம்னா தண்ணி திபு திபுன்னு ஓடி வர்றது... மடைன்ன என்னது??? என்னை டீச்சர் திட்டுற மடையன் மாதிரியோ...? வெள்ளம் பாய்ஞ்சி மடையன் எப்படி திறக்கும்...? அய்யோ ஒன்னுமே புரியலே. நான் கமலா டீச்சர்கிட்டே கேட்டுக்கிறேன்.

கோரஸ் : "சக்கரை இனிக்கிற சக்கரை அதில் எறும்புக்கு என்ன அக்கற நீ அக்கரை..."

ஹாலில் உட்கார்ந்திருந்த குட்டி பொண்ணு ரம்யா மணியின் தங்கை. அம்மா தட்டில் அல்வா வைத்துக் கொடுத்திருக்க, அவள் கையில் ஒட்டிக் கொண்டிருந்த அல்வாவை நக்கிக் கொண்டிருந்தாள்.

கோரஸ் : சக்கரை இனிக்கிற சக்கரை அதில் எறும்புக்கு என்ன அக்கற நீ அக்கரை...

மணி (சத்தமாக): நீ நக்குற... ரம்யா நீ நக்குற... அம்மா! எனக்கும் அல்வா வேணும்

மணி இப்போது கவனம் சிதறி உட்கார்திருந்த இடத்தை விட்டு எழுந்து ஓட....

அடுத்த பாடல் திருப்பாச்சி படத்திலிருந்து ஒலிக்க ஆரம்பித்தது "அப்பன் செஞ்ச தப்பிலே, ஆத்த பெத்த வெத்தல வெளஞ்சிருக்கேண்டா....தின்னு கொழுத்திருக்கேண்டா......"

இந்த பதிவின் வாக்கு எண்ணிக்கை: . பக்கத்திலுள்ள ஸ்டாரை மவுசால் போட்டுத் தாக்கினால் எனக்கு மவுசு ஏறும். நன்றி:-)

உங்கள் கருத்துக்களை இட

திருப்பி தாக்கியவர்கள்:
மிக நல்ல திறனாய்வு.....தமிழை காப்பாத்துங்க.
 
அடேங்கப்பா!!! நம்ம என்ன தமிழை காப்பத்துறது. அதுக்கு தான் ராமதாஸூம், திருமாவளவனும் இருக்காங்களே... :-) :-)
 
விஜய் அவர்களே !! இதை பார்த்தீர்களா?? http://tringtring.blogspot.com/2005/02/blog-post.html
மீண்டும்...தமிழை காப்பாத்துங்க.
 
நல்ல கற்பனை.. பையன்களுக்கு சத்தமா படிச்சாலும், மனசுக்குள்ள படிச்சாலும், பாடம் ஏறுவதை விட படத்தின் பாட்டு தான் ஏறும். நக்கலான உண்மை
 
இன்னா தம்பி! வூட்டு வாசலுக்கு ஆட்டோ அனுப்பனுமா!! அரிவாளோட அடியாளுங்களைப் பாக்கணுமா!! தலீவரு பத்தி பேசினிங்க, அவ்ளதான்!! டாக்டர் ராமதாஸ் வாள்க!!
 
அடேங்கப்பா நீங்க யாரப்பா? தமிழை பத்தி நீங்க சொன்னது கஷ்டமா இருக்கப்பா....

நன்றி கங்கா...

நரேன், வூட்டு வாசலுக்கு ஆட்டோ அனுப்புங்களேன் கோட்டை வரைக்கும் போயி ஒரு மனு கொடுக்கனும். எங்க வயல்ல நாளைக்கு தான் அறுவடை.. அதுனால அறுவளோட ஆளுங்களை நாளைக்கு அனுப்புங்க.... :-) (எல்லாம் புத்சாலி தனமா பேசுறேன்னு நெனப்பு தான்)
 

உங்கள் கருத்துக்களை இட


<< திரும்ப முன் பக்கத்துக்கு போ

This page is powered by Blogger. Isn't yours? தமிழ் அசைபட இணையச் செயலி தமிழ் விக்கிபீடியா

-->