<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d9439067\x26blogName\x3d%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81!!!!!\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLACK\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://halwacity.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://halwacity.blogspot.com/\x26vt\x3d-1566162084738285005', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script> <!-- Remove below comment line to show the content. Added for meta redirection --> <!--

போட்டுத் தாக்கு!!!!!

எள்ளோடு எலி புழுக்கையும் எண்ணைக்காக காயுதாம்

-ல் போட்டுத் தாக்கியது

சொத்தை பிலிம்ஸ்

Difficulty in reading this post due to font issues? Click here for a PDF copy. Works best if you right-click the link and select 'Save target as...'
இந்த பதிவை போட்டுத் தாக்கியவர் : Vijayakumar
கொஞ்ச நாளாகவே நானும் கவனித்துக் கொண்டிருக்கிறேன். வலைப்பதிவுகளில் தந்தை, மகன் பேசிக் கொள்வதாக வரும் பதிவுகள் மலிந்தே விட்டன. சுத்தமாக ஒரு மண்ணும் புரியவில்லை. ஏதோ ஜாதி வெறிப்பிடித்த ஒரு அப்பன் தன் மகனிடம் பண்ணும் உபதேசம் போல படிப்பவர்கள் மனதில் விஷமேற்றிக் கொண்டிருக்கிறது என்பதை என் மக்கு மூளைக்கு எங்கோ உறைத்துக் கொண்டிருக்கிறது.

என் பங்குக்கு 'சொத்தை பிலிம்ஸ்' சார்பாக அப்பனும் மகனும் உரையாடுகிறார்கள். அந்த தகப்பனாருக்கு 40 வயதாகிறது. அவர் கீதையும் படித்தது கிடையாது. பெரியாரையும் படித்தது கிடையாது. அவருக்கு கீதையிலிருந்து வந்ததாக தெரியும் ஒரே வசனம் "நடந்தது எல்லாம் நன்றாகவே நடந்தது..." கடவுள் இல்லையென்று மறுக்காதவர். அதே மாதிரி எல்லா விளைவுகளுக்கும் கடவுளே காரணமென்று ஏற்றுக் கொள்ளாதவர். கோவிலுக்கு அடிக்கடி செல்ல மாட்டார். மனிதர்களில் கடவுளை அடையாளம் காண முற்படுபவர். ஜாதியென்று ஒன்றை இட ஒதுக்கீடுகளில் மட்டுமே அறிந்தவறின்றி எல்லாரும் அவருக்கு நண்பர்களே. அவருடைய பதின்ம வயது மகன் பதின்ம வயது கோளாறு காரணமாக குழம்பி நிற்பவன் மட்டுமல்ல, நிறைய படிக்கும் ஆவலையும் கொண்டுள்ளவன். தமிழ்மணத்தின் தீவிர வாசகனும் கூட.

ஜாதியென்பது என்னவென்று கூட தெரியாதவன். கூட படிக்கும் பெண்ணின் குலம் கோத்திரம் ஜாதி கூட தெரியாமல் தீவிரமாக காதலிக்க ஆரம்பித்திருக்கிறான். அது உண்மை காதலாக இருக்கும் பட்சத்தில் அந்த தந்தையும் தன் மகனை அவன் ஒரு நல்ல நிலமைக்கு வந்தவுடன் திருமணம் செய்ய ரெடியாக இருப்பவர். வயது கோளாறை பற்றி அடிக்கடி அவனுடைய தந்தை கூறும் அறிவுரைகளை கேட்டுக் கொண்டிருக்கும் பையனுக்கு வலைப்பதிவுகள் படித்து படித்து அதில் வரும் ஜாதிகள் பற்றிய கருத்துக்கள் புரியவில்லை. குழம்பி தவிக்கும் வேளையில் அவன் தந்தையுடன் நடக்கும் உரையாடல் இது.

மகன் : அப்பா! அப்பா! ஜாதிகள் என்றால் என்ன?

தகப்பனார்: எனக்கும் தெரியாதுடா மகனே. அதெல்லாம் மிக பழங்காலத்தில் தொழில் வாரியாக வந்த பிரிவுகளென கேள்விப்பட்டிருக்கிறேன். இந்த காலத்தில் அது மிக மிக அருகிவிட்டது மகனே. சில மூடர்கள் இன்னமும் தன் சுயலாபத்திறக்காக ஜாதி என்பதை தொற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை படிக்கும் போது மட்டும் தான் கேள்விப்படுகிறேன் செல்லமே.

மகன் : அப்படியென்றால் ஏனப்பா வலைப்பதிவுகளில் ஜாதிகளைப் பற்றியும், ஏதோ பார்ப்பனன் என்றும், சத்திரியனென்றும், சூத்திரனென்றும், வைசியனென்றும் கூறுகிறார்களே அது யாரப்பா?

தகப்பனார்: இந்த மாதிரி கண்ட கண்ட கழிவுகளை படிப்பதை முதலில் நிப்பாட்டு. என்னுடைய போன தலைமுறைகளில் அதிகமாகயிருந்து, என் தலைமுறையில் தொட்டு தொடமால் அங்காங்கே இருந்துக் கொண்டு இருக்கும் இந்த ஜாதிகள், உன் தலைமுறையில் இல்லாமல் போக வேண்டும் மகனே. நேற்று வரை ஜாதி என்றால் என்னவென்று தெரியாமல் வளர்ந்த நீ, இன்று கண்ட கண்ட வலைப்பதிவுகளைப் படிப்பதால் அதற்கு அர்த்தம் புரிந்துக் கொள்ளும் முயற்ச்சியில் இறங்கினால், அது உன்னையும் உள் வாங்கிவிடும் கண்ணே. உன்னதமான முஸ்லீம் மதக்கருத்துக்களை எப்படி ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகள் திரித்து கருத்துக் கொள்கின்றனரோ, அதே போல் இந்து மதத்தின் புனித நூல்களில் வரும் கருத்துக்களையும் பாரபட்ச கண்களோடு காணும் கயவர்கள் யாவருக்கும் கருத்துக்கள் திரிந்து தான் தெரியும். அது எல்லா மதத்திலேயும் உண்டு கண்ணு. அதையெல்லாம் கண்டுக் கொள்ளாதே.

மகன் : அப்பா! இன்னும் நான் கேட்டதற்கு பதில் வரவில்லை. பார்ப்பனன் என்றும், சத்திரியனென்றும், சூத்திரனென்றும், வைசியனென்றும் கீதை கூறுவதாக கூறுகிறார்களே, அவர்கள் எல்லாம் யாரப்பா?

தகப்பனார்: எனக்கு அதைப் பற்றி அதிகம் தெரியாதுடா கண்ணு. அந்த பிரிவுகள் எல்லாம் அவரவர் செய்யும் தொழிலை குறிப்பதாக வந்திருக்கும் என்பது என் கருத்து. ஒரு காலத்திற்கு பொருந்தும் படி சொல்லப்பட்ட கருத்துக்கள் மறுகாலத்தில் அலசும் போது அப்போதுள்ள சமூக கட்டமைப்பின் படி கருத்துகள் விளங்கி கொள்ளப்படுவதும், திரித்துக் கூறுவதும் இயல்பு தான் மகனே. அதையே ஒரு வெறியூட்டும் செயலுக்கு பயன்படுத்துகிறார்கள் என்பது துக்கப்பட வேண்டிய விசயம்.

மகன் : அப்பா, என் கைகள் சொறிகிறது.

தந்தை : சொறிந்துக் கொள் மகனே.

மகன் : 'வர்ணாஸ்ரமம்' பற்றி கீதை கூறுகிறதாமே. அது என்ன அப்பா?

தகப்பனார்: இந்த வார்த்தையே இப்போது தான் கேள்விப்படுகிறேன். அதை தெரித்துக் கொள்வதால் நீ ஒன்றும் பெரிய மேதை ஆகி விடப் போவதில்லை. ஒரு வேளை அதை தெரிந்துக் கொண்டால் நீ நம்பர் 1 ஜாதி வெறிப்பிடித்த ரெளடி ஆக வாய்ப்புள்ளது. ஒரு வேளை ஆஸ்ரமம் கலர் இழந்துப் போய் வெறுமையாக இருப்பதால் வர்ணங்கள் பூசி வர்ணாஸ்ரமம் ஆகிவிட்டதோ என்று தெரியவில்லை. எவ்வளவோ நல்ல விசயங்கள் கீதை சொன்னதாக கேள்விப்பட்டிருக்கிறேன். வர்ணாஸ்ரமம் போன்ற கெட்ட விசயங்களும் சொல்லப்பட்டிருப்பதாக இந்த கணனி யுகத்திலும் கணனி வழியாக பிதற்றுகிறார்கள். பகுத்தறிவு என்பதை அர்த்தம் விளங்கிக் கொள்ளாமல் சொல்வதெல்லாம் பகுத்தறிவு என்று நம்பிக் கொண்டு வைரஸ் தாக்கி நிறமிழந்து போன மூளைக்கு புதிய சிந்தனையென்ற ரத்தம் பாயந்தால் தான் அந்த மூளை வர்ணம் கொண்டு திகழும். அதுவே வர்ணாஸ்ரமமென நினைக்கிறேன்.

மகன் : பகுத்தறிவு பாசறை என்று சொல்கிறார்களே அது என்ன அப்பா?

தகப்பனார்: குளியலறை, படிப்பறை, படுக்கையறை, கழிப்பறை மாதிரி பாசறைன்னு ஒன்னு இருக்குன்னு நினைக்கிறேன். பகுத்தறிவுன்னு பெரியவர் ஒருவர் சொன்னதை வைத்துக் கொண்டு அதை பகுத்தறியாமல் ஆவி பேய் தெய்வம் போன்ற கணங்கள் நிஜமென்று அவர்களுக்கு தோன்றினாலும், இருட்டிலிருந்து ஒளியை தேடாமல் இருட்டையே சபிப்பது தான் அவர்கள் நினைத்துக் கொள்ளும் பகுத்தறிவுன்னு நினைக்கிறேன்.

மகன் : அப்பா, என் மூக்கை நோண்டி கழிவை எடுத்துக் கொள்கிறேன்.

தகப்பனார்: அதை உருட்டி அந்தப் பக்கம் வீசி எறி மகனே.

மகன் : காஞ்சியில் நடப்பது என்னப்பா?

தகப்பனார்: இது என் மண்டை போல, மொட்டையான கேள்வி மகனே. பலருடைய அனுமானங்கள் தான் காஞ்சியில் நடக்கிறது மகனே. அவர்களை பழித்தால் பெரிய ஆள் ஆகிவிடலாம் என்ற அனுமானங்கள் தான் மகனே. 'சாமி' யார் என்று தேடுபவர்கள் எப்படி சாமியாக முடியும். தவறுகள் எப்போதும் தண்டிக்கப்படும். துறவிகளை எல்லாம் நம்பாதே மகனே. உன்னை நம்பு. உன்னில் இருக்கும் கடவுளை தேடு. நிஜ மனிதர்களை நம்பு. அவர்களிடையே கடவுளை தேடு. எங்கும் இருக்கிறார் கடவுள்.

மகன் : அப்பா கொட்டாவி கொட்டாவியா வருது. தூங்குறேன்பா.

தகப்பனார்: கண்ட கண்ட பதிவுகளை படிச்சிட்டு கடவுளை பற்றி பேசும் போது மட்டும் உனக்கு தூக்கம் வரும். நீ நல்ல இருந்தா சரி.

இந்த பதிவின் வாக்கு எண்ணிக்கை: . பக்கத்திலுள்ள ஸ்டாரை மவுசால் போட்டுத் தாக்கினால் எனக்கு மவுசு ஏறும். நன்றி:-)

உங்கள் கருத்துக்களை இட

திருப்பி தாக்கியவர்கள்:
ஆஹா அல்வா ஃபிலிமு உங்க அளவுக்கு யாரய்யா ஃபிலிம் விடமுடியும்! எல்லா ஜாதிக்கும் வெறி பிடித்த திருநெல்வாலியிலிருந்து வந்துவிட்டு ஜாதி என்றால் என்னவென்றே தெரியாது. அடடா! ஜாதிதெரியாமல் கல்யாணம் பண்ணி வாழ்கிறீர்களாக்கும்!

ஜாதி இல்லை என்பவந்தான் நம் சமூகத்தில் ஜாதிவெறி பிடித்து அலைபவன் என்பதற்கு இந்த பதிவு சிறந்த சாட்சி! அதை வெளி கொணர்ந்ததற்கு நன்றி.
 
நல்ல்ல்ல்ல்லா எழுதி புட்டிங்க சாமியோ ! நாங்களும் சாதின்னா என்னான்னு தெரியாம தான் சாமி பத்தாங்க்லாஸ்(10வது) வரைக்கும் படிச்சிகிட்டு இருந்தோம். +1 ல் சேரதுன்னா ஜாதி செர்டிபிகெட்டு வேனுமுன்னு சொல்லிபுட்டாங்க சாமி. அப்ப தான் நாங்க மொதோ முறையா அவுங்க அவுங்க அப்பா கிட்ட பொய் நம்ம ஜாதி என்ன ஜாதி அப்பான்னு கேட்டோம் சாமி. அதுக்கு அப்புரம் தான் சாமி அதுவரிக்கும் ரமெஷ், சுரெஷ், பாலகணேசா இருந்தவனெல்லாம் செட்டி ரமெஷாகவும், கோமுட்டி சுரெஷாகவும், கருப்பு ஐயரு பாலகணெஷாகவும் ஆகிபுட்டாங்க சாமி. எங்க மனசுல அதுவரைக்கும் உங்க வெள்ள மனசு மாதிரி தான் இருந்திச்சி. கர்ணம் ஆபிசில போய் கியூ நின்னு ஜாதிங்கர கேவலத்த ஜாதி மதம் இல்லன்னு சொன்ன அசோக முத்திரைய குத்தி அரசாங்கம் தான் சாமி கொடுத்துச்சி.
சாதி இரண்டோழிய வேரில்லை: இட்டார் பெரியோர், இடாதார் இழிகுலத்தோர் பட்டாங்கில் உள்ளபடி -என்று தான சொல்லிகுடுத்தீங்க. அப்புரம் எதுக்கு போயி எங்கள ஜாதி செர்டிபிகேட்டு வாங்க சொன்னிங்க நான் என் +1 தமிழ் வாத்தியார பாத்து கேட்ட கேள்விக்கு, மடார்ன்னு ஒரு கொட்டுதான் என் தலையில விழுந்துதது.
அப்ப ஆரம்பித்தது தான் இந்த ஜாதி ஆராய்ச்சி. அது எங்கேயிருந்து வந்ததுன்னு மொதல்ல தெரிந்ச்சாதான், அத எப்படி அழிக்கலாம்ன்னு கண்பிடிக்கமுடியும். நோய் நாடி நோய் முதல் நாடி அது தனிக்கும் வாய்நாடி வாய்ப்பச்செயல்.
இன்னும் எவ்வளவு நாளக்கு நம்மள நாமே எமாத்திக்கறது சாமி!
 
//நாங்களும் சாதின்னா என்னான்னு தெரியாம தான் சாமி பத்தாங்க்லாஸ்(10வது) வரைக்கும் படிச்சிகிட்டு இருந்தோம். +1 ல் சேரதுன்னா ஜாதி செர்டிபிகெட்டு வேனுமுன்னு சொல்லிபுட்டாங்க சாமி. அப்ப தான் நாங்க மொதோ முறையா அவுங்க அவுங்க அப்பா கிட்ட பொய் நம்ம ஜாதி என்ன ஜாதி அப்பான்னு கேட்டோம் சாமி. அதுக்கு அப்புரம் தான் சாமி ..//

காஞ்சி ஃபிலிம்ஸ் இதை முதலிலேயே தெளிவாய் சொல்லியிருந்தால் அல்வாசிடி திட்டியே இருக்கமாட்டார். அடடா! காஞ்சியைவிட காஞ்சி ஃபிலிம்ஸ் இன்னும் புத்திசாலியாய் இருக்கிறது. ஏற்கனவே தங்கமணி பதிவில் சொன்னதுதான்.

'பாப்பானைவிட மோசமாய் இந்த காஞ்சி ஃபிலிம்ஸ் பேசுவதை கவனிக்கவும்.'
 
200 வருடங்களுக்கு முன்னாடி தென்னாப்ரிக்காவுக்கு கரும்பு வெட்ட கூலிக்கு கூட்டம் கூட்டமாய் போன நம்ப தமிழர்கள் இன்னைக்கும் அங்கே ராமசாமே கோவெண்டர்(கவுண்டர்), நடேச நாடார், இனிமை ஆச்சினுதான் பேரு வச்சிகிட்டு வாழறாங்க... இந்த சாதி பேரு எல்லாம் அவங்களுக்கு family name ஆ மாறி ரொம்ப காலம் ஆயிடுச்சி... அங்கயும் தமிழ் ரேடியோ, பேப்பர், கோவில் எல்லாம் இருக்கு... ஆனா அவங்களுக்குள்ள சாதி சண்டை இருக்கறமாதிரி தெரியலை... இதையும் யாராவது யோசிச்சி கருத்து சொல்லுங்கப்பு...
 
அய்யகோ! திருநெல்வேலியில இவ்ளோ மேட்டர் இருக்க. ரொம்ப நாள் அங்க இங்க சுத்துனதுனால ஒன்னுமே தெரியலீங்கோ. காலேஜு படிக்கும் போது ஏதோ பஸ்ஸ எரிச்சாய்ங்க, கண்டதையும் கொளுத்துனாங்க.. எதுக்குன்னு லேசு லேசு தெரிஞ்சதுங்கோ. பரீட்சைக்கு கோவில்பட்டி போக அன்னிக்கு பஸ் கிடையாதுன்னவுடனே ஜாலியா இருந்திச்சிங்கோ. இப்படி தாங்கோ எனக்கு தெரியும். என்னாண்ட லேசு லேசா இருந்ததையும் தொடச்சிரலாமுன்னு ஒரு நம்பிக்கை தானுங்கோ.

குடி வெறிய தெரியும், நாய்க்கு வெறி பிடிக்குமுன்னு தெரியும், யானைக்கு மதவெறி பிடிக்குமுன்னு தெரியும். மனசனுக்கு ஜாதி வெறியிருக்குமுன்னும் தெரியும். அத வளர்க்க தான் வேண்டாமுங்க. அது என் தலைமுறையோட ஒழியாதன்னு ஒரு ஆதங்கம் தானுங்கோ.

என்னை எப்படி திட்டினாலும் பரவாயில்லை.என் கிறுக்கு மூளையில் உதித்ததையும், சொல்லவந்தது சொல்லியாகிவிட்டது. மேட்டர் ரொம்ப ஒவரா தடம் மாறிப் போன அங்கேங்கே பின்னூட்டத்தில் கத்திரி வைக்கப்படும். அதையும் தாண்டிப் போன திருத்த முடியாதென சொல்லிவிட்டு பதிவுக்கே கத்திரி வைக்கப்படும்/தூக்கப்படும்.
 
saathigal pala naadukalil irukkalaam. irundhirukkalaam.
inna saadhiya sendhavan inna thozila dhan seyyanumnu bagavaan vidhichirukaan. idhuku peru 'karma' .

indha karma vai pathi neenga therinjukanumnaa mudhalle
www.kamakoti.org endra valai padhivai poi paarunga. ange thelivaa ' dheivaththin kural' nu namma mahaaa periyavaa ezhudhina pusthagam onnu iruku. volume volumeaa azhagaana thamizle inaya thalathile potrukaan. adha padichutu pesungo.

dheivaththin kural namma kanchi films kudutha geethaa vilakkam ille. dheivame kudutha vilakamaakum.


oru edathile periyavaa sorry dheivam sollra 'magan than karmavai seyya maatennu sollrappo, appa avanukku eduthu solanumam. magane namma kulathozil mudi vettradhudhan purinjudha. mudi vettradhan moolama dhan bagavaanai adaya mudiyum. nee veena poriyiyal adhu idhu padikkirennu manasa pottu kuzhappikaama, poi nanna mudi vettunu sollanumaam'.

indha dheivaththin kuralai padichapin geethayin arththam ennanu ungalukku purinjudum. aprom dharalama inaya dhalathilerndhu logout pannitu kahrikolum kaiyuma dhaaraalamaa mudi vetta pongo.
 
aprom innoru idathile dheivathin kural 'kolayum seyyalam' endru sollkirathu. adavathu kannan arjunanidam 'thathtaavayum, vaaththiyarayum kollvadharku thayangaathe. dharmaththai kaaka kolayum seyyalam endru solkiraan'. yeenenil adhu sathriya karma(m).

adhanaal dhaano ennavo indraya madathipathikal 'Appu, Kadhiravan... ' pondra sathriyankalin udhaviyodu dharmaththai kaaththirukkiraargal.
irandhavan paarpanachennu yaaravadhu kavalai padraala. illai. yenna sondha thaaththaavaanalum dharmaththirkaaka kolayum pannalam.

purigirathaa?
innum vilakkam thevayaa?
 
//மேட்டர் ரொம்ப ஒவரா தடம் மாறிப் போன அங்கேங்கே பின்னூட்டத்தில் கத்திரி வைக்கப்படும். //

அது சரி! நீங்க ஊர்ல உள்ளவனை போட்டுதாக்கலாம், அதுக்கு பதில் சொன்னா திட்டுரமாதிரி தெரியுதாக்கும். நீங்க மத்தவன் ஜாதிவெறியை பத்தி பேசற மாதிரி உங்கள் உள்ளே உறையும் ஜாதிவெறி பற்றி நான் எழுதினேன். அதை தாங்கிக்கறது கஷ்டம்தான். ஆனால் கத்திரி போட்டு என்ன ஆகபோகுது. இது இணையம். அவனவனுக்கு தனி வலைப்பதிவு இருக்குன்னு கூடவா தெரியாது?

நான் ஒருபோதும் இங்கே எழுத விரும்பியது கிடையாது. நான் ஃபுல்பார்மில் எழுத தொடங்கினால் தாங்கிகொள்வதும் கஷ்டமாய் இருக்கும். காஞ்சியும் சரி, நீங்களும் சரி காட்டுகிற ஃபிலிம் ரொம்ப ஓவராய் போனதால் சின்னதாய் தட்டினேன். மத்தபடி எனக்கு கையிலே இருக்கிற விஷயத்த எழுத நேரமில்லாம இருக்கேன். கத்திரி போடற இடத்தில போராட எனகென்ன ஆசையா!
 
ரோசாவசந்த் அண்ணாச்சி, நீங்க கருத்து சொன்னதை நான் தப்பாவே எடுத்துக்கலை. உண்மைய சொன்ன நேத்து தான் சிங்கப்பூர் வலைப்பதிவு மக்கள் கூட்டு சேர்ந்த போது இதை பத்தி விவாதித்துக் கொண்டிருந்தோம். அதாவது ஒரு வலைப்பதிவு நாலு பேர் படிக்க ஆரம்பிக்கும் போது அந்த பதிவு எப்படி சமூகப் பொறுப்பு அடைகிறது என்பதை. என்னால் வரும் விமர்சனங்களை ஆக்கப்பூர்வமாக எடுத்துக் கொள்ள முடியும் நம்பிக்கையிருக்கிறது. என் பயம் என்னவென்றால் விவாதம் 'தடம் மாறி' விடக்கூடாது என்பது தான். நான் அந்த பின்னூட்டமிடும் வரை விவாதம் தடமாறவில்லை என்பது என் கருத்து. அதனால் நான் எதையும் கத்திரி வைக்கவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் தட்டியதையும் ஆக்கபூர்வமாக எடுத்துக் கொள்கிறேன்.

அனானிமஸ் இட்ட பின்னூட்டத்தையும் படித்துக் கொண்டிருக்கிறேன். பிறகு அதைப்பற்றி பின்னூட்டம் பதிகிறேன். நன்றி.
 
யோவ் அனானிமஸ், லூசாய்யா நீ. போடுற வலைப்பதிவுகளைப் பார்த்தே கிறுக்கு பிடிக்குது. அதுல நாங்க காமகோடி.காம் வேற போய் நாங்க படிக்கனுமாக்கும். ஒன்னுமில்லாத மேட்டர இருந்தாலும் ஒரு இடத்தில குமிச்சி தீ மூட்டி பாக்குறதுக்குன்னே உன்னை மாதிரி ஆளுங்க கிளம்பிருவானுங்க. நீங்க போட்ட பின்னூட்டமெல்லம் அந்த வகையை சேர்ந்தது தான். இதுக்கு பதிலா பின்னூட்டம் போடமாயே இருக்கலாம். அந்த காமகோடி.காம்-ஐ நீங்களே படித்துக் கொள்ளுங்கள். எனக்கு அவசியமில்லை.
 
அல்வாசிடிக்கு, ஆபிதீன் என்ற நண்பர் என்னிடம் வம்பிழுத்திருப்பதால், நான் இப்போது விவாதங்களில் கலந்து கொள்ள விரும்பாவிடினும் அது குறித்து எழுத வேண்டியுள்ளது. அதனால் இங்கே பெரிதாய் எழுத முடியாது. உங்கள் பதிலில் ஒரே ஒரு திரித்தலை சுட்டிகாட்டுகிறேன்.

//திருநெல்வேலில சாதிவெறி புடிச்சவங்க நெரய இருந்தா அங்க இருகுரவன் எல்லாம சாதி வெறி புடிச்சவனா?//

அப்படி நான் எங்கே சொன்னேன்? 'ஜாதி குறித்து கேள்வியே பட்டதில்லை' என்று ஃபில்ம் காட்டுவதை சுட்டி காட்டும்போது
'ஜாதி வெறிபிடித்தலையும் திலியிலிருந்து வந்திருப்பதை குறிப்பிட்டேன். எந்த எந்த ஜாதி எந்த தெருவில் எந்த பகுதியில் வாழ்வது என்பது தெளிவாய் வரையருக்க பட்டிருக்கும் திருநெல்வேலியிலிருந்து வந்து ஜாதி தெரியாது என்று சொன்னால் அது எத்தனை பெரிய பொய் என்பதுதான் நான் சொன்னது.


//ஜாதி பற்றி தெரியாமலா
பாரதி கூட சாதி இல்லை-னு சொன்னவர்தான் ரோசா சொன்ன மாதிரி அவரும் சாதி வெறி புடிச்சவ்ர்தான் போல?//

பாரதி சாதி பற்றி வாய்மூடியவனோ,ஜாதி பற்றி யாரும் பேசக்கூடாது என்று சொன்னவனோ இல்லை. ஜாதி இல்லை என்பது, 'யதார்தத்தில் சமூகத்தில் ஜாதி இல்லை' என்று பொய் சொல்லுவது அல்ல. ஜாதி என்ற கற்பிதம் பொய்மையானது என்று சொல்வது. ஜாதிரீதியாய் யாரும் மேலோர் கீழோர் இல்லை என்ற அர்தத்தில் சொல்வது. அது எப்படி திரிகிறது பாருங்கள்.
 
ரோசா அண்ணாச்சி, முதல்ல அபிதீனை கவனியுங்க. அப்புறம் நம்ம பிலிம்ஸ்-க்கு வரலாம்.
 
"விஜய் சும்மா இல்லாமல் இவ்வளவுக் கேள்விக்குறிகள் போட்டு ஸ்கிரீனை மிக அகலப்படுத்தி விட்டார். அதற்கு ஏதாவதுச் செய்ய முடியுமா என்றுப் பாருங்கள்."
இது நான் நாகூர் ரூமியின் "சாரு யார்" என்றப் பதிவில் இப்போது இட்டப் பின்னூட்டம். அங்குப் போய் ஏதாவது செய்ய முடியுமா என்றுப் பார்க்க முடியுமா? தேவையானல் அப்பின்னூட்டத்தை நீக்கி விட்டு அந்த அளவுக்குக் கேள்விக் குறிகள் இல்லாது மறுபடியும் அதே பின்னூட்டத்தைப் பதிக்க முடிந்தால் உத்தமம்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
 

உங்கள் கருத்துக்களை இட


<< திரும்ப முன் பக்கத்துக்கு போ

This page is powered by Blogger. Isn't yours? தமிழ் அசைபட இணையச் செயலி தமிழ் விக்கிபீடியா

-->