<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d9439067\x26blogName\x3d%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81!!!!!\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLACK\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://halwacity.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://halwacity.blogspot.com/\x26vt\x3d-1566162084738285005', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script> <!-- Remove below comment line to show the content. Added for meta redirection --> <!--

போட்டுத் தாக்கு!!!!!

எள்ளோடு எலி புழுக்கையும் எண்ணைக்காக காயுதாம்

-ல் போட்டுத் தாக்கியது

காதல் வளர்த்தேன்... காதல் வளர்த்தேன்

Difficulty in reading this post due to font issues? Click here for a PDF copy. Works best if you right-click the link and select 'Save target as...'
இந்த பதிவை போட்டுத் தாக்கியவர் : Vijayakumar
டப்பா படமாகிய மன்மதன் படத்தில எப்படியோ "காதல் வளர்த்தேன்" பாட்டு மட்டும் ஹிட் ஆகிடுச்சு. கேட்டு கேட்டு அலுத்துப் போன பாட்டு. மன்மதன் படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆக்கியிருக்குனும்னா என்ன என்ன பண்ணியிருக்கலாமுன்னு இன்றைய நெடிய பயணத்தின் போது ஒரே சிந்தனை. "காதல் வளர்த்தேன்" ஒரே பாட்டுல சிம்புவை எங்கோயோ கொண்டி போயிருக்கலாம். என்னோட "காதல் வளர்த்தேன்" பாட்டோட situation-ஐ சொல்றேன். கேளுங்க.

படத்துல சிம்பு மாம்பலம் பஸ் ஸ்டாண்டுல பிச்சையெடுக்கும் பிச்சைக்காரன். ஒரு நாள் ஏரியா தெரியாம சைதாப்பேட்டை பஸ் ஸ்டாண்டுக்கு சிம்பு போக, அங்கே இன்னொரு பிச்சைக்காரி சிந்து துலானி. இந்த பிச்சைக்கார சிம்பு, அந்த பிச்சைக்காரிய பார்த்து பாடுறதா நம்ம "காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன்" பாடலை வச்சிக்கலாம். மக்களோட எதிர்பார்ப்பைக் கூட்ட அப்பப்போ அந்த பிச்சைக்காரி, பிச்சைகாரன் பாட்டுக்கு கமெண்ட் கொடுக்கிறாள். பிச்சைக்காரன் சிம்பு பாடும் வரிகள் blue text-லும், ஜோடியாக பிச்சைக்காரி கொடுக்கும் கமெண்ட்டுகள் red text-லும் இருக்கிறது, உங்க கற்பனையில பிச்சைக்காரன் பிச்சைக்காரியை நினைத்துக் கொண்டே கீழ்கண்ட வரிகளைப் பார்க்கவும். Blue text-ஐ பாட்டாகவும், Red text-ஐ வசனமாகவும் படிக்கவும்.


காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன்
உன் மேல் நானும் நானும் புள்ள காதல் வளர்த்தேன்


எத்தனை கிலோ உரம் போட்டு வளர்த்தே? ஆமா! சோத்துக்கே வழியில்லே... உரம் மட்டும் தான் குறைச்சல்

காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன்
நான் உசுருக்குள்ளே கூடுக் கட்டி காதல் வளர்த்தேன்


டேய் காதல் என்ன நாய்க்குட்டியாடா? கூட்டுக்குள்ள வச்சி வளக்குறதுக்கு. பேமானி! உனக்கு இருக்க வீடே இல்ல. அதுல கூடு வேறக் கட்டி காதல் வளர்த்தியாக்கும்.

ஏ இதயத்தின் உள்ள பெண்ணே நான் செடி ஒன்னு தான் வச்சி வளர்த்தேன்
இன்று அதில் பூவாய் நீயே தான் பூத்தவுடனே காதல் வளர்த்தேன்


ஆமா! உன் இதயம் 4 ஏக்கர் பரப்பளவுள்ள தோட்டம். அதுல செடி வேற வச்சி வளர்க்குறாரு

ஏ புள்ள புள்ள உன்னை எங்க புடிச்சேன் ஏ புள்ள புள்ள அத கண்டுபிடிச்சேன்

அடப்பாவி! சைதாப்பேட்டை பஸ்டாண்ட்ல பிச்சையெடுக்கும் போது தாண்டா என்னைப் பிடிச்சே.. அதுல வேற என்ன கேள்வி

ஏ புள்ள புள்ள கண்ணில் புடிச்சேன் ஏ புள்ள புள்ள உன்னை நெஞ்சில் வெதச்சேன் ஏபுள்ள....

ஒன் கண்ணு என்ன ஏரியாடா, மீன் பிடிச்ச மாதிரி சொல்றே.. அடப்பாவி இன்னும் காதலிக்கவே ஆரம்பிக்கல அதுக்குள்ள என்னை கொன்னு பொதச்சத வெதச்சேன்னு வேற டிஸண்டா சொல்றே.

பூவின் முகவரி காற்று அறியுமே, என்னை உன் மனம் அறியாதா?

நீயும் அட்ரஸ் இல்லாத பொறம்போக்கு, நானும் அட்ரஸ் இல்லாத பொறம்போக்கு... உன்னை எப்படி அறியும்?

பூட்டி வைத்த என் ஆசை மேகங்கள் உன்னைப் பார்த்ததும் பொழியாதா?

பன்னாடை! ஜொள்ளு விடுறத உவமையோட சொல்றியாக்கும்.

பலக் கோடி பெண்கள் தான் பூமியிலே வாழலாம் ஒரு பார்வையால் மனதை பறித்துச் சென்றவள் நீயடி

பேமானி! எனக்கு கண்ணு கொஞ்சம் ஓரம்ங்கிறதை குத்தி வேற காட்டுறியா.... அடிச் செருப்பால...

உனக்கனவே காத்திருந்தாலே காலடியில் வேர்கள் முளைக்கும் காதலில் வலியும் இன்பம் தானே நானே

உனக்கு மண்டையில மூளையும் முளைக்கல, மசிரும் முளைக்கல கால்ல வேரு முளச்சிடத்தாங்கும்....

உனது பெயரெழுதி பக்கத்திலே எனது பெயரை நானும் எழுதி வச்சேன் அது மழையில் நனையாமே குடைப்பிடிச்சேன். மழைவிட்டும் நான் நெனஞ்சேன் ஏபுள்ள புள்ள....

அட லூஸ்! நீ பெயரழுதி விளையாடும் போது உன் கூட பிச்சையெடுக்கிறவன் என்னைப் பார்த்து ஜொள்ளு விடுறாண்டா! அது மழைன்னு நினைச்சி கீழ உட்கார்ந்திருக்கிற நீ ஓட்டை குடை வேற பிடிக்கிறியாக்கும். அறிவு! ஓட்டை குடை பிடிச்ச நீயும் தான் நனைவே...

உன்னைத் தவிர எனக்கு யாரடி உனது நிழலிலே ஓய்வெடுப்பேன்

ஏண்டா! உனக்கு துணையா நான் கிடச்சிட்ட உடனே பிச்சை எடுக்காம என்னையை மட்டும் பிச்சை எடுக்கவிட்டு இப்படி செண்டிமெண்டலாப் பேசி பொழச்சிகிடலாமுன்னு பார்க்கிறியா? கொன்னுறுவேன்

உனது சுவாசத்தின் சூடு தீண்டினால் மரணம் வந்தும் நான் உயிர்த்தெழுவேன்

10 நாள் பல்லு விலக்காம நாத்ததுல நானே செத்துருவேன்னு நினைக்கிறேன். அதுல வேற என் சுவாசம் உன்னை தீண்டினா... உயிர்த்தெழவே மாட்டே...

உன் முகத்தைப் பார்க்கவே என் விழிகள் வாழுதே பிரியும் நேரத்தில் பார்வையிழக்கிறேன் நானடி
உடல் பொருள் ஆவி அனைத்தும் உனக்கனவே தருவேன் பெண்ணே

கள்ளத்தனமா 4 ரவுண்டு பேட்டரி தண்ணி அடிச்சிட்டு வந்தா பார்வை என்னடா... உன்னோட ஆவியும் சேர்ந்து தான் போகும். உடல் பொருள் ஆவி எல்லாத்தையும் எனக்கு தருவியா? இருக்கிறது 1 அலுமினிய தட்டு, 1 வருசம் குளிக்காத உடம்பு ஓஞ்சி போன ஆவி, இத வச்சிக்கிட்டு நான் என்ன பண்றது...

முழுச்சிக்கோங்க... பாட்டு முடிஞ்சிடிச்சி....


இந்த பதிவின் வாக்கு எண்ணிக்கை: . பக்கத்திலுள்ள ஸ்டாரை மவுசால் போட்டுத் தாக்கினால் எனக்கு மவுசு ஏறும். நன்றி:-)

உங்கள் கருத்துக்களை இட

திருப்பி தாக்கியவர்கள்:
நல்ல கற்பனை.. ஜோராக உள்ளது..
பாவம் பாடல் எழுதியவர் படித்தால்.. நடித்தவரைவிட நொந்து போய் இருப்பார்
 
உங்கள் கற்பனை நன்றாகவே உள்ளது.

இந்தப் பாட்டின் வரிகளை முதல் முறையாக இப்போதுதான் கவனிக்கிறேன் - டி ஆர் பாட்டில் உள்ளது போலவே inconsistency!
இரண்டு வரி இலக்கியத்தமிழ் - திடீரென்று லோக்கல் பாஷை!
 
பின்னூட்டத்திற்கு நன்றி கங்கா,சுரேஷ்,கதிரவன். உங்களின் ஊக்கமே எனது ஆக்கம்.
 
நீங்கள் போட்டுத்தாக்குவதைப்பார்த்தால் சிம்புவின் பரம எதிரிப்போல் தெரிகிறீர்கள்.உங்களின் முந்தைய படைப்புகளையும் வைத்துத்தான் சொல்கிறேன். கற்பனை நன்று..
 

உங்கள் கருத்துக்களை இட


<< திரும்ப முன் பக்கத்துக்கு போ

This page is powered by Blogger. Isn't yours? தமிழ் அசைபட இணையச் செயலி தமிழ் விக்கிபீடியா

-->