<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d9439067\x26blogName\x3d%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81!!!!!\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLACK\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://halwacity.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://halwacity.blogspot.com/\x26vt\x3d-1566162084738285005', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe", messageHandlersFilter: gapi.iframes.CROSS_ORIGIN_IFRAMES_FILTER, messageHandlers: { 'blogger-ping': function() {} } }); } }); </script> <!-- Remove below comment line to show the content. Added for meta redirection --> <!--

போட்டுத் தாக்கு!!!!!

எள்ளோடு எலி புழுக்கையும் எண்ணைக்காக காயுதாம்

-ல் போட்டுத் தாக்கியது

Lost & Found

Difficulty in reading this post due to font issues? Click here for a PDF copy. Works best if you right-click the link and select 'Save target as...'
இந்த பதிவை போட்டுத் தாக்கியவர் : Vijayakumar
ஒரே ஒரு பெட்டி தான் வந்தது. ஏர்போர்ட் கன்வேயர் பெல்ட்டில் ஊரிலிருந்து எடுத்து வந்த இரண்டில் ஒரே ஒரு பெட்டி தான் வந்தது.

ஊரிலிருந்து சிங்கப்பூருக்கு வரும் போது கைப்பையைத் தவிர பெரியதும் மிக சிறியதுமாக இரண்டு பேக்கேஜ்களை எடுத்து வந்தேன். சிங்கப்பூர் வழியாக மலேசியா செல்லும் இரவு விமானம் ஆகையால் கூட்டம் அதிகமாகவேயிருந்தது. வரிசையில் ஏராளமான முகங்களில் ஏழ்மையின் சோர்வைத் தாண்டி எதிர்கால கனவு வாசலின் அனுமதி சீட்டுக்காக பயம் கலந்த உணர்வுடன் நின்றிருந்தார்கள். ஒரே ஒரு கவுண்டர் தான் திறந்திருந்தாலும் மற்ற இரண்டு கவுண்டரிலும் மக்கள் காத்திருந்தனர்.

சுதி மாறாமல் சென்றுக் கொண்டிருந்த வரிசையில் அபஸ்வரமாக ஒருவர் என் முன்னால் குறுக்காக நின்று தனி வரிசையை எற்படுத்திக் கொண்டிருந்தார். பார்த்தால் படித்தவர் மாதிரி மிக நாகரீகமாக வேறிருந்தார். மற்றவர்கள் வரிசையில் நின்றிருக்க இவர் தனகென்ற வரிசை உண்டாக்கியது என்னால் பொறுக்க முடியவில்லை. ஆக மொத்தம் வரிசை Y வடிவமாகியது. நான் நகர நகர என்னை முட்டிக் கொண்டே வந்தார். வந்த ஆத்திரத்தில் அவரை முன்னாடி போக வைத்து விட்டு நான் பின் வாங்கினேன். என் இரத்த அழுத்தம் குறையவில்லை.

என் முறையும் வர செக்-இன் கவுண்டரில் என் பெரிய பெட்டி பக்கத்தில் என் சிறிய பேக்கையும் வைத்தேன். சிங்கப்பூர் வந்திறங்கியப் பிறகு பெரிய பெட்டி வர சிறிய பேக்குக்காக காத்திருந்தேன். கடைசி வரை வரவேயில்லை. அப்புறம் என்னிடம் இருக்கும் டிக்கெட்டில் பேக்கேஜ் லேபிளை பார்த்த போது தான் உறைத்தது ஒரு பேக்கேஜ்க்கு தான் Tag போடப்பட்டு லேபிள் ஒட்டப்பட்டிருந்தது. இன்னொரு பேக்கேஜ்க்கு tag போட விமான நிலைய அதிகாரியும் மறந்திருந்தார். நானும் டென்ஷனில் சரி பார்க்க மறந்திருந்தேன். இதை விட கொடுமை என் மனைவியை முதன் முதலில் வெளிநாடு அழைத்து செல்லும் போது பேக்கேஜ் tag மற்றும் மற்ற விமான நிலைய சடங்குகளைப் பற்றி பெரிய வகுப்பே எடுத்திருந்தேன். நிறைய தடவை பயணம் செய்திருக்கிறேன். தவறு நிகழ்ந்ததில்லை. ஆனால் இந்த முறை...

பேக்கேஜ்க்குள் நண்பர் வீட்டிலிருந்து அவருக்கு கொடுத்தனுப்பிய இனிப்பு வகைகளும், நான் நண்பர்களுடன் பகிர்ந்துக் கொள்ள அல்வா மற்றும் மற்ற இனிப்பு வகைகளும் தான் அதிகம் இருந்தது. திருநெல்வேலி அல்வா ஒருவாரம் தாங்குமென்றாலும் சென்னை வந்து ஏற்கனவே 4 நாட்கள் ஆகியிருந்தது.

சிங்கபூர் ஏர்போர்ட் Lost & found அலுவலகத்தில் புகார் சொல்லப் போக பேக்கேஜ் லேபிள் இல்லாததால் 'Courtesy report' மட்டுமே கொடுக்க முடியுமென சொன்னார்கள். பேக்கேஜ் கிடைத்தால் இருக்கு இல்லையென்றால் இல்லை என்று சொல்லிவிட்டார்கள். பேக்கேஜ்க்கு அடையாளம் கேட்டார்கள். அப்போது தான் ஒன்று எனக்கு உறைத்தது.

என்னவெனில், நண்பர்களோ, உறவினர்களோ வெளிநாடு செல்லும் போது பெரிய பெரிய பேப்பரில் போகும் இடத்தில் முகவரி, தொலைப்பேசி எண் போன்றவைகளைக் குறிப்பிட்டு பெட்டியில் ஒட்டியிருப்பார்கள். நானே நிறைய தடவை பெட்டியை அடையாளம் காண ஓரிரு அடையாளம் வைத்துக் கொண்டால் போதாத என்று சாடியிருக்கிறேன்.

பேக்கேஜ் அடையாளம் கேட்கும் போது எல்லா பேக்கேஜ்களைப் போல பொதுவாகயிருந்ததால் அடையாளங்களை சொல்ல குறித்துக் கொண்டார்கள். இருந்தாலும் தனியாக உங்கள் பேக்கஜை கண்டுப்பிடிக்க பெயர் ஏதாவது எழுதியிருக்கிறீர்களா என்று கேட்டார்கள். நான் !!!!!!!!!!!!. நல்ல வேளையாக தனித்தன்மையாக நல்ல பச்சைக் கலர் பூட்டுப் போட்டிருந்ததால் அதைச் சொன்னேன்.

ஆக இந்த கதையின் நீதி என்னவென்றால், நீங்கள் விமானத்தில் வெளிநாடு செல்லும் போது உங்கள் பேக்கேஜ்கள் 99 விழுக்காடு உங்களிடம் வந்து சேர்ந்தாலும், 1 விழுக்காடு தவற வாய்ப்பு உள்ளது. ஆகவே உங்கள் பேக்கேஜ்களை கண்டுப்பிடிக்க தனித்தன்மையான அடையாளம் ஏதாவது வைத்துக் கொள்ளுங்கள். இல்லையென்றால் பெயர் மற்றும் முகவரி ஒரு பேப்பரில் எழுது அதில் ஒட்டி விடுங்கள்.

ஆக எப்படியோ என்னுடைய பேக்கேஜ் சிங்கப்பூர் அடைய, நான் அடையாளம் சொல்லி இன்று காலை தான் எடுத்து வந்தேன். அப்போ அதிலிருந்த அல்வா???? கல்லாக மாறிப்போயிருந்தது. இருக்கட்டும். அரசியல் வாதிகள் யாராவது அபசகுனமாக பேசும் போது எறிய உதவும்.

இந்த பதிவின் வாக்கு எண்ணிக்கை: . பக்கத்திலுள்ள ஸ்டாரை மவுசால் போட்டுத் தாக்கினால் எனக்கு மவுசு ஏறும். நன்றி:-)

உங்கள் கருத்துக்களை இட

திருப்பி தாக்கியவர்கள்:
அல்வா சிட்டிக்கே, அல்வா பிரச்சனையா?? :) :) திரும்ப கிடைத்ததால் மகிழ்ச்சி
 
விஜய் கவனமாக வைத்திருங்கள் அடுத்த சந்த்திப்பில் யாராவது இடக்கு முடக்காகப் பேசினால் உபயோகப்படுத்தலாம்
 
முதன்முதல்ல போறவங்க போஸ்டர் சைஸ்ல பேரு அட்ரஸ்ச ஒட்டும்போது அவங்களை கிண்டல்பண்னத்தான் இதுவரை தோணியிருக்கு... ஆனா இத படிச்சா அது உபயோகம்தான்னு தோனுது...
 
நன்றி. பாலாஜி-பாரி, ஈழநாதன், இளவஞ்சி
 

உங்கள் கருத்துக்களை இட


<< திரும்ப முன் பக்கத்துக்கு போ

This page is powered by Blogger. Isn't yours? தமிழ் அசைபட இணையச் செயலி தமிழ் விக்கிபீடியா

-->