<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d9439067\x26blogName\x3d%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81!!!!!\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLACK\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://halwacity.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://halwacity.blogspot.com/\x26vt\x3d-1566162084738285005', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script> <!-- Remove below comment line to show the content. Added for meta redirection --> <!--

போட்டுத் தாக்கு!!!!!

எள்ளோடு எலி புழுக்கையும் எண்ணைக்காக காயுதாம்

-ல் போட்டுத் தாக்கியது

அய்யர் IPS தற்கொலை

Difficulty in reading this post due to font issues? Click here for a PDF copy. Works best if you right-click the link and select 'Save target as...'
இந்த பதிவை போட்டுத் தாக்கியவர் : Vijayakumar
என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் அய்யர் IPS தற்கொலை. side-ல தொங்குறது யார் தெரியுமா? வெங்கடா....ஜலபதி. பயப்படாதீங்க. அய்யர் IPS இல்ல. நான் தற்கொலைன்னு சொன்னது அய்யர் IPS படத்தை. தப்பித் தவறி அய்யர் IPS பார்த்தீங்கன்ன உங்களுக்கும் side-ல தொங்குறவர் நிலமை தான்.

கதை,திரைக்கதை, வசனம், தயாரிப்பு மற்றும் இயக்கம் ஆகியவகளை பண்ணியவர் அரிராஜன். இல்ல... இல்ல அரி(ப்பு)ராஜன். இயக்குனர் கையில இருந்த காசால் கைகளில் அரிப்பு ஏற்பட, அய்யர் IPS என்ற படத்தை எடுத்து அரிப்பை தீர்த்துக் கொண்டு, நமெக்கல்லாம் தீராத அரிப்பைக் கொடுத்தவர் அரிராஜன்.

அரிராஜன் கீழ்கண்டவாறு நினைத்து தான் அய்யர் IPS படத்தை எடுக்க முடிவு செய்திருப்பார் போல...

"
1. கையில காசு சேர்ந்திருச்சி, எப்படி கரைக்கலாம்? ஒகே, படம் எடுப்போம்.

2. யாரை நடிக்க வைக்கிறது. ஆங்... சத்தியராஜை எடுத்துக்கலாம். படத்துல நல்ல நக்கல் வைக்கலாம்.அவரு நாத்திகனால அய்யருங்களை நல்ல போட்டுத் தாக்குவார். வால்டர் வெற்றிவேல்ல சத்தியராஜ் வெற்றியடஞ்சனால நம்ம அவரை போலீசாவே நடிக்க வச்சிரலாம்.

3. படத்துக்கு சுண்டியிழுக்கிற பெயரை வைக்கனும். அய்யர் IPS -ன்னு பேர் வச்சிரலாம்.

4. சத்தியராஜ்-க்கு புரட்சிதமிழன்னு பேரு, புரட்சியா படத்துல என்ன பண்ணலாம்? ஆங்,,, படத்துல அவர் அய்யர்னால அய்யர் குலத்தையே எதிர்த்து பெரிய போலீஸ்காரர் ஆகுறாரு. சரி அதுல என்ன புரட்சியிருக்கு? கண்டுபிடிச்சிட்டேன்... பேசாம அவரை அய்யர் அடையாளமாகிய பூணூலை இடுப்பில அர்ணாகயிராட்டம் கட்டிக்கிற மாதிரி காமிச்சிரலாம்.

5. படத்தில அங்கங்கே டுவிஸ்ட் வைக்கனுமே. சரி அவரு வில்லன்களை என்கவுண்டர் பண்றாரு. ஏற்கனவே சூர்யா நிறைய என்கவுண்டர் பண்ணிட்டாரே...?... ம்... இருந்தா என்ன? நம்ம ஆளு என்கவுண்டர்ல ஸ்பெஷலிஸ்ட். சூப்பர். கலக்கியாச்சி.

6. வில்லனை என்ன பண்ணலாம். வித்தியாசமா எதாச்சி பண்ணனும். ஆங்... இன்னொரு சத்தியராஜ் தான் வில்லன். அவரை தலையில விக்கு வைக்காம மூஞ்சில கரிய பூசி நடிக்க வச்ச வித்தியாசம். சூப்பர். வித்தியாசத்துக்கு பஞ்ச் வைக்கனும்னா என்ன பண்ணலாம்?... கரெக்ட் வில்லன் சத்தியராஜ் ஊமை.

7. ஒரே ஒரு வில்லனிருந்த போலீஸ் சத்தியராஜ் எப்படி அடிக்கடி என்கவுண்டர் பண்ணுவாரு? என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்-ன்னு வேற பேரு வச்சிருக்கோமே? சரி சரி ஆனந்தராஜையும், ஓ.ஏ.கே சுந்தரையும் மூஞ்சில கரியை பூசி வில்லனா விட்டுரலாம். அப்போ தான் நம்ம என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் அடிக்கடி என்கவுண்டர் பேருல இவங்களை போட்டுத் தள்ள, நம்ம கதையை ஜவ்வா நவுத்தலாம்.

8. ஹீரோயினுக்கு என்ன பண்றது? சத்தியராஜ்-க்கு வேற மூஞ்சில கிழடு தட்டிப் போச்சி. சரி தான். மார்க்கெட் போன சங்கவி தான் முதல் ஹீரோயின். புரட்சி தமிழன் நடிக்கிறதால அடிக்கடி படத்துல புரட்சி வச்ச படம் தூக்கல ஓடும். சரி. சங்கவி ஒரு முஸ்லீம் பெண். சத்தியராஜீ அய்யர்னால புரட்சி பண்ணி சங்கவிய கண்ணாலம் கட்டிகிறாரு. இன்னொரு ஹீரோயினும் வேனும்ல. சரி அதுக்கு புதுமுகம் 'மேகா' வைப் போட்டு கிழட்டு சத்தியராஜை டாவு அடிக்கிற மாதிரி விட்டுறலாம். இவ டாவு அடிச்ச அப்போ முதல் ஹீரோயின்....கொன்னுறலாம்.


அய்யர் IPS-க்கு அப்பாவாக வரும் ஒரு டப்பா தலையன்

9. சத்தியராஜ் அடிக்கடி படத்துல புரட்சி பண்றதால அவங்க வீட்டுல அய்யர் அப்பா மகனுக்கு எதிரி. அவரோட அப்பா வில்லனோட சேர்ந்துகிட்டு சத்தியராஜ் என்கவுண்டர் மேட்டரை எடுத்து விட, வில்லன் சத்தியராஜ் அய்யர் பேமிலியையே போட்டுத் தள்ள, அந்த அய்யர் அப்பா கடைசியில மனம் திருந்தி தன் அய்யர் IPS மகனை கூப்பாடு போட்டு கூப்பிட்டு உசுப்பேத்தி தொண்டைகிழிய கத்தி கடைசியில வில்லன் சத்தியராஜ்(வெங்கடாஜலபதியை) தூக்கிலிட்டு கொள்கிறார் அய்யர் IPS.

10. தூக்குல தொங்கப் போறது வெங்கடஜலபதி மட்டுமில்ல, படம் பார்க்கிற மக்களும் தான். இதுனாலயே 100 நாள் படம் பிச்சிக்கிட்டு ஓடும். "


படத்துல டம்மியாக வரும் போலீஸ்கள்



இந்த படத்தை பார்த்தாலே முழுபடமும் பார்த்த மாதிரி தான்

படம் முழுக்க வில்லன் கருப்பு சத்தியராஜ் 'பே பே.... பே...'-ன்னு கத்திக்கிட்டே இருக்காரு தவிர, எதையாச்சி செய்வாருன்னு பார்த்த எல்லாம் புஷ்ஷூ.... (ஜார்ஜ் புஷ் இல்லீங்க). அதுல வேற வில்லன் சத்தியராஜ்க்கு பே பே-ன்னு ஒரு பாட்டு, அதுக்கு ஆடுறதுக்கு 3 கவர்ச்சி குட்டிங்க. அய்யோடா...80-களில் பார்த்த அதே மாதிரி கவர்ச்சியாட்டம்... வில்லன் குடிக்க, குட்டிங்களை கூட்டியாந்து ஆட... தூ....

இந்த பதிவின் வாக்கு எண்ணிக்கை: . பக்கத்திலுள்ள ஸ்டாரை மவுசால் போட்டுத் தாக்கினால் எனக்கு மவுசு ஏறும். நன்றி:-)

உங்கள் கருத்துக்களை இட

திருப்பி தாக்கியவர்கள்:
படம் வேஸ்டுன்னு தெரியுமல்லவா... அப்போது ஏன் அதைப் போய் பார்க்கிறீர்கள்?
 
தலிவா, இந்தமாதிரி குப்பை படமெல்லாம் பாக்கறீங்க. 'காதல்' இன்னும் பார்க்காமே இருக்கீங்களே ? இப்படியே இன்னும் சில டப்பா படங்கள் பார்க்கணும்னா சொல்றேன். "திருப்பாச்சி" "ஜி"

விஜய், பேசாம, அமோஸ் பெராஸ் இன்னொரு முறை பாருங்க. படம் பார்க்காமல், டிவிடியில் மேகிங் ஆஃப் பாருங்கள். அவனவன், எவ்வளவு கஷ்டப்பட்டு படம் பண்ணறான்னு தெரியும்.
 
பலூன்,

காதல் வாங்கி வச்சிருக்கேன். ஆன கதையெல்லாம் படிச்சிட்டதுனால படிக்காத கதையா பார்க்கணும்னு அய்யருக்கு போயிட்டேன். அதுவுமில்லாம 'போட்டு தாக்க' ஒரு டாபிக் கிடைக்கும் போது விடனுமா? கஷ்டப்பட்டு படம் பார்த்தேன். அடுத்து திருப்பாச்சியும் இருக்கு கையில.

படம் எடுக்கிறது கஷ்டம் தான் ஆனா ஏன் இப்படி திறமையை வேஸ்ட் பண்றாங்க?
 

உங்கள் கருத்துக்களை இட


<< திரும்ப முன் பக்கத்துக்கு போ

This page is powered by Blogger. Isn't yours? தமிழ் அசைபட இணையச் செயலி தமிழ் விக்கிபீடியா

-->