<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d9439067\x26blogName\x3d%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81!!!!!\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLACK\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://halwacity.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://halwacity.blogspot.com/\x26vt\x3d-1566162084738285005', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script> <!-- Remove below comment line to show the content. Added for meta redirection --> <!--

போட்டுத் தாக்கு!!!!!

எள்ளோடு எலி புழுக்கையும் எண்ணைக்காக காயுதாம்

-ல் போட்டுத் தாக்கியது

ஜன கன மன-உண்மை என்ன?

Difficulty in reading this post due to font issues? Click here for a PDF copy. Works best if you right-click the link and select 'Save target as...'
இந்த பதிவை போட்டுத் தாக்கியவர் : Vijayakumar
எனக்கு வரும் மின்மடல்களில் நமது தேசிய கீதம் பற்றிய ஒரு மின்மடல் என் கவனத்தை கவர்ந்தது. அது சொல்ல வந்த சேதி கொஞ்சம் புதுசா தான் இருந்தது எனக்கு. எந்தளவு உண்மையெனத் தெரியவில்லை. மின்மடலில் வந்த கருத்தை முதலில் சொல்ல முயல்கிறேன்.

"நமது தேசிய கீதத்தின் அர்த்தம் எந்த அளவுக்கு உங்களுக்குத் தெரியும்? நானும் நீண்ட நாளாக எனக்குள் சில கேள்விகளைக் கேட்டுக் கொண்டதுண்டு. தேசிய கீதத்தில் வரும் வார்த்தைகளில் 'அதிநாயக' என்பது யாரை குறிக்கிறது? 'பாரத பாக்கிய விதாத' என்று யாரை புகழ்ந்து பாடுகிறார்கள். நான் கீழே சொல்லப் போவது உங்களுக்கு தெரியுமா? எனக்கும் இப்போது தான் தெரிந்தது.

நம் தேசிய கீதமாகப் போற்றப்படும் 'ஜன கன மன அதிநாயக' என்ற பாடலை இரவீந்திரநாத் தாகூரால் 1919-ல் இந்தியாவுக்கு வருகை தந்த ஜார்ஜ் V மன்னரையும், இங்கிலாந்து இராணியையும் கவுரவிப்பதற்காக பாடப்பட்டது. ஆனால் நாம் ஜன கன மன இந்திய தாய் திருநாட்டை புகழ்கிறது என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம்.

பெங்காலியிலுள்ள 'ஜன கன மன' மூலக் கவிதையில் பஞ்சாப், சிந்து, குஜராத், மராட்டா போன்ற மாகாணங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏனென்றால் அவை அப்போது பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்தது. இந்திய நாட்டின் முக்கிய மாகாணங்களான காஷ்மீர், ராஜஸ்தான், ஆந்திரா, மைசூர், கேரளாவோ அந்தப் பாடலில் சொல்லப்படவில்லை. ஏனென்றால் அவையெல்லாம் போர்ச்சுகீசியர்களின் ஆட்சியின் கீழிருந்தது.

'ஜன கன அதிநாயக' என்பது ஜார்ஜ் V மன்னனை மக்களின் கடவுளாகவும், 'பாரத பாக்கிய விதாத' என்றால் மன்னர் நல்லவனவற்றை கொண்டு வருவதாகக் கூறுகிறது.

'ஜன கன மன' வின்

முதல் பத்தி: இந்திய மக்கள் உங்கள் நற்பெயரைப் பாடி, உங்களின் ஆசிர்வாதத்தை நாடுகிறார்கள் (தவ சுப நாமே ஜாஹே; தவ சுப ஆசிச மாகே...)

இரண்டாம் பத்தி: எல்லா மத மக்களும் உங்க நல்ல அன்பை பெற மிகுந்த ஆவலோடு உங்கள் அரியணையை நாடி வந்திருக்கிறோம்.

(இப்படியே 5 பத்திகளைப் பற்றி நிறைய அந்த மின்மடலில் சொல்லப்பட்டிருந்தது. நேரமின்மையால் சுருக்கிக் கொடுத்திருக்கிறேன்)

இப்படி அர்த்தம் தெரியாமல் 50 ஆண்டுக்கு மேலாக நாம் ஜன கன மன பாடலை தேசியகீதமாக பாடி வந்திருக்கிறோம். விழித்தெழுவோம். உண்மையை உணர்வோம்.

நேரு இந்தப் பாடலை ஏன் தேர்ந்தெடுத்தாரென்றால் பேண்டு இசைக் கருவியின் மூலம் வாசிக்க எளிதாக இருந்தது. உண்மையில் சொன்னால் 'வந்தே மாதரம்' பாடல் தான் நாட்டின் எழுச்சியை உண்மையாகப் பாடுவதாக உள்ளது, இப்போது இசைக்கருவிகளின் முன்னேற்றத்தால் வந்தே மாதரம் பாடலையும் மிக அருமையாக இசைக்க முடியும். ஏன் வந்தே மாதரம் நம் தேசிய கீதமாக ஆகக் கூடாது"

என் கருத்து: அந்த மின்மடல் எதாவது வேலையற்றவன் வேலையான்னு தெரியவில்லை. தேசிய கீத வரலாறு தெரியாத நிலையில் பெங்காலி மொழி புரியாத நிலையில் நான் கருத்து சொல்லவதை விட அந்த மடலின் கருத்துக்களை உங்கள் முன் வைக்கிறேன். தேசிய கீத வரலாறு அறிந்தவர்கள் மேலே சொல்லப்பட்டிருப்பது எந்த அளவு உண்மை என்பதை எங்களுக்கு விளக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இந்த பதிவின் வாக்கு எண்ணிக்கை: . பக்கத்திலுள்ள ஸ்டாரை மவுசால் போட்டுத் தாக்கினால் எனக்கு மவுசு ஏறும். நன்றி:-)

உங்கள் கருத்துக்களை இட

திருப்பி தாக்கியவர்கள்:
This comment has been removed by a blog administrator.
 
"இந்திய நாட்டின் முக்கிய மாகாணங்களான காஷ்மீர், ராஜஸ்தான், ஆந்திரா, மைசூர், கேரளாவோ அந்தப் பாடலில் சொல்லப்படவில்லை. ஏனென்றால் அவையெல்லாம் போர்ச்சுகீசியர்களின் ஆட்சியின் கீழிருந்தது."
கோவா மட்டும்தான் போர்ச்சுகீசியர் ஆட்சியில் இருந்தது. ஆந்திரா, மைசூர், கேரளா ஆகியவை திராவிடத்தின் கீழ் வருகின்றன. ராஜஸ்தான் பெரும்பாலும் சுதேச மன்னர்கள் கீழ் இருந்தது.
ஜன கன மனவின் இந்தச் சர்ச்சை பல ஆண்டுகளாகத் தொடர்கிறது. பார்க்க:
http://www.freeindia.org/vmataram/genesis_of_janaganamana.shtml
அன்புடன்,
டோண்டு ராகவன்
 
(correcting the spelling mistakes)

I am not able to write in Tamil, so sorry!

The 'athi Nayaka' in Jana Gana mana actually referes to the king George only. In fact congress was intially set up as an organisation to praise the king, and to popularise the greateness of the King. Only later it went against the British. The congreess, muslim legue, Justice party all are 'orE kuttaiyil Uriya mattai', all were in favour of British rule. There are different reasons for congress and muslim league to go against the British later. But Justice party maintained its pro British stand to fight aginst the congress. Intially all congress conferences used to start by praising the king ( by singing the Raja Vazhththu!).

Anyway Jana gana mana was written by Tagore to welcome the King. If 'athinayaka' refers to India, it has to be a female, refering to 'Mother India'. I will write more on this later. I am sure you can also find by searching the web.

Finally I am sure about the motive of the e-mail. If it is to promote the 'vandemataram', then I should mention that is bigger issue to talk about, as it is blatantly anti-muslim. More later.
 
ஓ உங்களுக்கு வந்தேமாதரத்தை தேசிய கீதமாக்கச் சொல்லி வந்ததா? எனக்கு "சாரே ஜஹா சே அச்சா"வை தேசிய கீதமாக்கச் சொல்லி மின்னஞ்சல் வந்தது.

தேசிய கீதமாயில்லைன்னாலும் தேசியப் பாடல் வந்தே மாதரம் தானுங்களே!

என்ன பெரிய வித்யாசம்!
 
//Finally I am sure about ...//

I wanted to say 'Finally I am not sure about ...'
 
I did n't read the post properly. So it was to promote the vandemataram. Then jana gana is tolerable. Anyway my Desiya Githam is 'karupputhAn enakku putichcha kalaru!'
 
வந்தே மாதரத்தைப் பற்றி நிறையப் பேருக்குத் தெரியாத ஒரு சங்கதி. அப்பாட்டுக்கு இசை அமைத்தவர் ரவீந்திரனாத் தாகூர்தான்.

அதே போல "அமொர் ஷோனா போங்க்ளா" என்று ஒலிக்கும் பங்களாதேஷின் தேசீயப் பாடலை எழுதியவரும் ரவீந்திரனாத் தாகூர்தான்.

"சாரா ஜஹான் ஸே அச்சா" என்றொலிக்கும் நமது இன்னொரு தேசீயப் பற்றுப் பாடலையியற்றியக் கவிஞர் இக்பால் அவர்கள் பிற்காலத்தில் இந்தியாவை விட்டுப் பாகிஸ்தான் சென்றவர்தான்.
சும்மாவா பெரியவர்கள் சொன்னார்கள் "நதி மூலம், ரிஷி மூலம் பார்க்காதே" என்று!
அன்புடன்,
டோண்டு ராகவன்
 
//வந்தே மாதரத்தைப் பற்றி நிறையப் பேருக்குத் தெரியாத ஒரு சங்கதி. அப்பாட்டுக்கு இசை அமைத்தவர் ரவீந்திரனாத் தாகூர்தான்.//

அதே போல வந்தே மாதரத்தை முதல் முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் அரவிந்தர்
 
ஆஹா இதே மாதிரி கோவில்களிலும் திருமண வைபவங்களிலும் பூம் பூம் மாடு போல் தலையாட்டாமல் அய்யர் சொல்லும் மந்திரங்களுக்கும் சடங்குகளுக்கும் என்ன அர்த்தம் என்று உங்களுடைய ஆராய்ச்சியை விஸ்தீரப்படுத்தினால் பேஷா இருக்கும்; அமோகமா இருக்கும்; திவ்வியமாக இருக்கும். ஆனா சாமி கண்ணை குத்திடும் ஜாக்கிரதை.
 
வசந்த் சோக்கா போட்டிங்களே 'கறுப்புதான் எனக்கு புடிச்ச கலருன்னு' இந்த சர்ச்சை நிறைய நாட்களாக இருக்கிறது.

போரடித்தால் சொல்லுங்கள். இதுபோல நிறைய சர்ச்சைகளை அனுப்பி வைக்கிறேன்.

1. தாஜ்மஹால் ஒரு இந்து கோவில்
2. ராமேஸ்வரத்தின் கடலுக்கு அடியில் ராமர் கட்டிய பாலம் ஒடுகிறது.
3. சுபாஸ் சந்திர போஸ் ஒரு புத்த துறவியாக மாறி, திபெத்தில் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
4. நேருவிற்கும் மெளன்பேட்டன் பிரபுவின் மனைவிக்கும் தொடுப்பு இருந்திருக்கிறது (டோண்டு, வசந்த் - இது உண்மையா )

அது சரி, ஒரு நாட்டின் தேசியகீதம் என்பது அந்த மக்களின் உணர்வும் உணர்ச்சியுமல்லவா. அதைக் காட்டாமல், சவம் போல் ஏன் அட்டென்ஷனில் நின்று, முணுமுணுக்க வேண்டுமதை.
 
பின்னூட்டமிட்ட அன்புள்ள நண்பர்கள் அனைவருக்கும் முதற்கண் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தேசிய கீதத்திற்கு பின்னால இவ்ளோ மேட்டர் கீதா...

வலைத்தளத்தில் இதைப் பற்றி ஓரளவு ஆராய்ந்து தான் பதிவை போட வேண்டுமென நினைத்தேன். ஊருக்கு செல்ல ஏற்பாடு பண்ணிக் கொண்டிருப்பதால் என்னால் அதிக நேரம் வலைத்தளத்தில் செலவழிக்க முடியவில்லை. அதனால் உங்கள் முன் வைத்தேன்.

பின்னூட்டமிடுவதை விட இதைப் பற்றிய நிறைய விசயங்கள் உங்களிடமிருந்தால் உங்கள் வலைப்பதிவிலேயே பதிவாகவே போடுங்களேன். நம்மூரு வரலாற்றையும் அதன் பின்னுள்ள அரசியலும் தெரிந்துக் கொள்வோமே. தொடர்ந்து பின்னூட்டமிடுங்கள்.
 
யோவ் காஞ்சி, நீங்க சரியான விடாக்கண்டனைய்யா. நீங்க கேட்டதும் நல்ல கேள்வி தான். மறுப்பேதுமில்லை பின்னூட்டமிட்ட இந்த விசயத்தில் மட்டும்.
 
I think in the national anthem, all the southern states are mentioned as Dravida....so there is no point in saying that this is for praising the British king...look at the translation below.

Thou art the ruler of the minds of all people,
dispenser of India’s destiny.
Thy name rouses the hearts of Punjab, Sind,
Gujarat and Maratha,
Of the Dravida and Orissa and Bengal;
It echoes in the hills of the Vindyas and Himalayas,
mingles in the music of Jamuna and Ganges and is
chanted by the waves of the Indian Sea.
They pray for thy blessings and sing thy praise.
The saving of all people waits in thy hand,
thou dispenser of India’s destiny.
Victory, victory, victory to thee.
 
Please let us not be ridiculous enough to assume that our leaders who were serious freedom fighters chose a song that "praises King George" to be the national anthem of free India.

The contents of the email are so obviously false.
 
//I think in the national anthem, all the southern states are mentioned as Dravida...//

//.so there is no point in saying that this is for praising the British king...//

என்ன லாஜிக்?
 
நேரு எட்வீனா தொடுப்புப் பற்றிப் பலர் பல இடங்களில் எழுதி விட்டனர். அது அவர் தனிப்பட்ட விஷயமாகயிருப்பினும் நாட்டு நலனுக்கு ஊறு விளைத்ததாக எழுதியதைப் படித்தப் போது மனம் வருந்தினேன்.
எட்வினா என்னும் தலைப்பில் ஃபிரெஞ்சில் காத்தெரீன் க்ளெமென்ட் என்பவர் எழுதியப் புத்தகத்தில் கூறப்பட்டதை என் நினைவிலிருந்துத் தருகிறேன்.
காஷ்மீரில் பட்டேல் அவர்களின் நடவடிக்கையால் அம்மாநிலம் கிட்டத்தட்ட நம் கைக்கு வந்து விடும் நிலையில் நேருவாகத் தானே போய் காஷ்மீருக்குத் தனி அந்தஸ்து, இந்தியாவுடன் அல்லது பாக்கிஸ்தானுடன் இணைய மக்கள் வாக்கெடுப்பு என்று சகட்டு மேனிக்கு ஒத்துக் கொண்டதில் நாம் 50 வருடங்களுக்கும் மேலாக அவற்றின் விளைவுகளை அனுபவித்து வருகிறோம். இவ்வாறு செய்யுமாறு மவுன்ட்பேட்டன் பிரபு பின்னாலிருந்து எடுத்துக் கொடுக்க எட்வினா நேருவை இந்த ஏற்பாடுகளுக்குச் சம்மதிக்க வைத்ததாய் இப்புத்தகம் கூறுகிறது.
மற்றும் எட்வினா அப்படியொன்றும் ஒழுக்கமானப் பெண்மணி அல்லவென்றும், மௌன்ட்பேட்டன் பிரபு அதைக் கண்டுக்கொள்ளவில்லை என்றும் வெளிப்படையாகவே அப்புத்தகத்தில் எழுதப் பட்டிருந்தது.
அதே போல நேருவுக்கும் பத்மஜா நாயுடுவுக்கும் இருந்த உறவைப் பற்றியும் எழுதப்பட்டிருந்தது.

அன்புடன்,
டோண்டு ராகவன்
 
நேரு மேட்டரை அரசல் புரசல காது வழியாக கேட்டது தான். ஆதாரபூர்வமாக படித்ததில்லை. டோண்டு அய்யா சொல்வதைப் பார்த்தால் அந்த கிசு கிசுயெல்லாம் உண்மை தான் போலிருக்கே....
 
தொடுப்பை விடுங்க. இந்த விசயம் உண்மையா ? இந்தியாவின் சுதந்திரமென்பது, போராடியதால் வந்ததல்ல. இரண்டாம் உலகப்போருக்கு பிறகு, இங்கிலாந்து பலவீனமாகிப் போனது. போரினை முன்னின்று நடத்திய வின்ஸ்டன் சர்ச்சில் அடுத்த தேர்தலில் தோல்வியடந்தார். கட்டுப்பாடுகள் கைவிட்டு போவதை கணக்கிலெடுத்தே, இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்தது. ஒருவேளை இரண்டாம் உலகப்போரில் இங்கிலாந்து பலமடைந்திருந்தால், 1947-ல் சுதந்திரம் கிடைத்திருக்குமா ?

நேரு பற்றிய கதை ஒன்று. அன்னிய பொருட்கள் பகிஷ்கரிப்பு என்ற காலகட்டத்தில், நேரு விலையுயர்ந்த வெளிநாட்டு சுருட்டினை பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த சிலர், பகிஷ்கரிப்பு போராட்டத்தினை நினைவுறுத்தியபோது நேரு சொன்னது:
"நானும் அதைத் தான் செய்கிறேன். பாருங்கள், எரித்து கொண்டிருக்கிறேனே"
 
// பெங்காலியிலுள்ள 'ஜன கன மன' மூலக் கவிதையில் பஞ்சாப், சிந்து, குஜராத், மராட்டா போன்ற மாகாணங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏனென்றால் அவை அப்போது பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்தது. இந்திய நாட்டின் முக்கிய மாகாணங்களான காஷ்மீர், ராஜஸ்தான், ஆந்திரா, மைசூர், கேரளாவோ அந்தப் பாடலில் சொல்லப்படவில்லை. ஏனென்றால் அவையெல்லாம் போர்ச்சுகீசியர்களின் ஆட்சியின் கீழிருந்தது.
//

Dravida is mentioned clearly...so this is not a valid arguement
 
// பெங்காலியிலுள்ள 'ஜன கன மன' மூலக் கவிதையில் பஞ்சாப், சிந்து, குஜராத், மராட்டா போன்ற மாகாணங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏனென்றால் அவை அப்போது பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்தது. இந்திய நாட்டின் முக்கிய மாகாணங்களான காஷ்மீர், ராஜஸ்தான், ஆந்திரா, மைசூர், கேரளாவோ அந்தப் பாடலில் சொல்லப்படவில்லை. ஏனென்றால் அவையெல்லாம் போர்ச்சுகீசியர்களின் ஆட்சியின் கீழிருந்தது.
//

Dravida is mentioned clearly...so this is not a valid arguement
 
நாராயண், நீங்கள் சொன்ன சுருட்டு துணுக்கின் நாயகர் மோதிலால், ஜவஹர்லால் அல்ல!
மேலும் சர்ச்சைகளை வளர்த்து க்கொன்டிருப்பதை விட, ஜன கன மன-வையே ஏற்றுக்கொன்டுவிட்டால் நல்லது. அது தானே ஜனங்களின் மனங்களில் வாழ்கிறது.
 
Hi,

I haven't yet learnt fully to write in Tamil. Sorry.

Even "vandemataram" has its flaws . Many people don't know that B.C. Chatterrjee wrote this song saluting and singing the praise of Bengal province only,not India. He salutes 'bengal mata' not 'bharat mata'.

We are familiar with only the first two stanzas but there are a few more.
One says

"saptha kodi knata ninatha karale
dwi saptha koti bhujair thrutha karakala wale........."
meaning
" oh my mother! who will call you waek when you have 7 crore throats(mouths) singing your praise and 14 crore hands are ready to serve you""

7 crores was then the population of Bengal province alone.

We know our Mahakavi Bharathi has translated this into tamil.
"nalirmani neerum nayambadu kanikalum".........

While transalting the aforesaid stanza he writes

"mupathu kodivay ninnisai muzangavem
Arupathu kodi thol uyarnthu unakku atravum
Thiranilal enrunai yavare chuppuvar"

He was just transalting, mind you.

I felt like sharing with you.


Thanks,
Jayashree
 
நன்றி ஜேஸ்ரீ.

நண்பர்கள் வேறுயாராவதிடம் விளக்கம் இருக்கிறதா?
 

உங்கள் கருத்துக்களை இட


<< திரும்ப முன் பக்கத்துக்கு போ

This page is powered by Blogger. Isn't yours? தமிழ் அசைபட இணையச் செயலி தமிழ் விக்கிபீடியா

-->