<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d9439067\x26blogName\x3d%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81!!!!!\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLACK\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://halwacity.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://halwacity.blogspot.com/\x26vt\x3d-1566162084738285005', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe", messageHandlersFilter: gapi.iframes.CROSS_ORIGIN_IFRAMES_FILTER, messageHandlers: { 'blogger-ping': function() {} } }); } }); </script> <!-- Remove below comment line to show the content. Added for meta redirection --> <!--

போட்டுத் தாக்கு!!!!!

எள்ளோடு எலி புழுக்கையும் எண்ணைக்காக காயுதாம்

-ல் போட்டுத் தாக்கியது

பாதுகாப்பு வளையம்

Difficulty in reading this post due to font issues? Click here for a PDF copy. Works best if you right-click the link and select 'Save target as...'
இந்த பதிவை போட்டுத் தாக்கியவர் : Vijayakumar
சக வலைப்பதிவாளர்களுக்கும், அல்வாசிட்டி வாசகர்களுக்கும் என்னுடைய வணக்கங்கள். 2 வார இந்தியா பயணம் வெற்றிகரமாக சீக்கிரமே கடந்து போய்விட்டது. வாழ்க்கை ஓட்டத்தில் ஓட மறுபடியும் என்னுடைய களத்திற்கு துரத்தி அடிக்கப்பட்டேன். சொந்த வேலை அதிகமிருந்தாலும் இடைப்பட்ட நேரத்தில் சென்னை வாழ் சக வலைப்பதிவாளர்களையும் சந்திக்க பேச நேர்ந்தது. டோண்டு அய்யா வீட்டில் டோண்டு அய்யாவையும், ரவியா அவர்களையும் சந்தித்தேன். 'உருப்படாதது' நாரயணன் கொஞ்சம் பிஸியாகயிருந்ததால் என்னுடைய நேரமும் அவருடைய நேரமும் தோது படவில்லை. எப்படியோ ஞாயிற்றுக் கிழமை போனில் அவரை பிடிக்க 1 மணி நேரம் எல்லாவற்றையும் போனிலே கொட்டித் தீர்த்தார். அருண் வைத்தியநாதன் குறும்படங்களைப் பார்க்க வேண்டுமென்ற ஆவல். ஆனால் என்னால் அவ்வளவு நாள் சென்னையில் இருக்க முடியவில்லை. அது போக 'என்றென்று அன்புடன்' பாலாவின் தொலைபேசி டோண்டு அவர்கள் கொடுத்திருந்தாலும் என்னால் அவரைத் தொடர்பு கொள்ள முடியாமல் போய் விட்டது. அது மட்டுமல்லாமல் என்னுடைய அருமை நண்பர் 'அழகி நம்பர் 1' விஸ்வநாதன் (விசி) அவர்களுடனான சந்திப்பு உயிரில் இனித்து கருத்தில் நிறைந்தது.

நேற்று இரவு முழுவதும் பயணம் செய்த களைப்பு கண்களை சொக்க வைத்தாலும் சின்னதாய் ஒரு பதிப்பு போட்டு போய் விடலாமென இந்த பக்கம் வந்தேன். 2 வருடங்களுக்கு முன் நடத்திய அல்வாசிட்டி.காம் வலைப்பதிவு பக்கங்களையும் என்னுடைய சில எழுத்துக்களையும் என் வீட்டில் ஓய்வாக இருக்கும் போது கணனியில் தோண்டி எடுத்து வந்தேன். முடிந்தால் ஒவ்வொன்றாக எழுத நேரமில்லாத போது இடைச்செருகலாக தருகிறேன். கீழ்கண்ட படம் கூட அவ்வாறு வந்த ஒன்று தான்.


இ-மெயிலில் வந்த சில வரிகள்...

Cigarette

A pinch of tobacco rolled in paper with fire at one end and a fool on the other.

Conference

The confusion of one man multiplied by the number present.

இந்த பதிவின் வாக்கு எண்ணிக்கை: . பக்கத்திலுள்ள ஸ்டாரை மவுசால் போட்டுத் தாக்கினால் எனக்கு மவுசு ஏறும். நன்றி:-)

உங்கள் கருத்துக்களை இட

திருப்பி தாக்கியவர்கள்:
நீங்களும் ரவியாவும் வந்ததில் மிக்க மகிழ்ச்சி. ஃபோட்டோக்கள் நன்றாக வந்திருக்கின்றனவா? கணினியில் எப்போது ஏற்றப் போகிறீர்கள்?
அன்புடன்,
டோண்டு ராகவன்
 
டோண்டு, உங்களின் ஜி-மெயிலை raghtransint@gmail.com திறந்து பாருங்களேன். போட்டோக்களை நேற்றே அனுப்பி விட்டேனே. இல்லையென்றால் மறுபடியும் அனுப்புகிறேன்.
 
வாங்க விஜய்... குழந்தை நலமா? ஏதாவது போட்டுத்தாக்கியிருக்கிறீர்களா என்று அவ்வப்போது எட்டிப் பார்த்து ஏமாந்து கொண்டிருந்தேன்... திரும்பவும் உங்கள் பதிவைப் பார்ப்பதில் மகிழ்ச்சி. சிங்கை இணைய நண்பர்கள் சந்திப்பில் நா.கண்ணன்தான் அதிகம் பேசினார். இப்போது அதிகம் எழுதுகிறார். அதற்கும் - அங்கு அமைதிகாத்தவர்கள் ( அன்பு, நீங்கள், குமார் etc ) புதிய பதிவுகள் இல்லாமல் இங்கும் அமைதி காப்பதற்கும் ஏதாவது சம்பந்தமிருக்கிறதா? : )
 
வாங்க பாலு அண்ணே! நீங்க உள்ள வந்த பிறகு நாங்களெல்லாம் அவுட்டாகி(வெளியே போய்) விட்டோம். பெரியவங்க பேசும் போது கேட்டுக் கொண்டிருப்பது தானே மனதுக்கு மூளைக்கும் நல்லது. அது தான் அங்கு அமைதி காத்தோம் (சமாளிப்பு)... வேறொன்றுமில்லை. மெதுவாக ஹாலிடே மூடிலிருந்து வழக்கமான மூடுக்கு வந்துக் கொண்டிருக்கிறேன். பழையபடி போட்டுத் தாக்கலாம். குழந்தை நலமே.
 

உங்கள் கருத்துக்களை இட


<< திரும்ப முன் பக்கத்துக்கு போ

This page is powered by Blogger. Isn't yours? தமிழ் அசைபட இணையச் செயலி தமிழ் விக்கிபீடியா

-->