<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d9439067\x26blogName\x3d%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81!!!!!\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLACK\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://halwacity.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://halwacity.blogspot.com/\x26vt\x3d-1566162084738285005', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe", messageHandlersFilter: gapi.iframes.CROSS_ORIGIN_IFRAMES_FILTER, messageHandlers: { 'blogger-ping': function() {} } }); } }); </script> <!-- Remove below comment line to show the content. Added for meta redirection --> <!--

போட்டுத் தாக்கு!!!!!

எள்ளோடு எலி புழுக்கையும் எண்ணைக்காக காயுதாம்

-ல் போட்டுத் தாக்கியது

இடுப்போரம் மச்சம் காட்டவா?

Difficulty in reading this post due to font issues? Click here for a PDF copy. Works best if you right-click the link and select 'Save target as...'
இந்த பதிவை போட்டுத் தாக்கியவர் : Vijayakumar
இன்று தான் புதிதாக வந்த படங்களின் எல்லா பாடல்களையும் ஆர அமற உட்கார்ந்து கேட்கும் வாய்ப்பு கிடைத்தது. அய்யா, சந்திரமுகி, மாயாவி, ராம், ஜி, சுக்ரன்,திருப்பாச்சி போன்ற படங்களின் பாடல்களை கேட்டதுமில்லாமல் பாடல்களின் வரிகளும் சிலப் பாடல்களில் கவனிக்கப்பட்டது. மாயாவி பாடல்கள் முதல் இம்பிரஷன் (First Impression) ஏற்ப்படுத்த தவறி விட்டது. உன்னிப்பாக கவனித்தால் துள்ளல் இசையுடன் வந்த பாடல்கள் உடனே எனக்கு முதல் இம்பிரஷனை ஏற்படுத்து விடுகிறது.

சந்திரமுகி பாடல்களின் இசை கேட்க இனிமையாகயிருக்கிறது. கேட்க கேட்க சூப்பர்ஹிட் ஆகலாம். பாடல்களின் வார்த்தைகளை கவனிக்க தவறிவிட்டேன். 'தேவுடா தேவுடா' பாடல் இரஜினியின் செண்டிமெண்ட்க்கு ஏற்ற மாதிரி எஸ்.பி.பி பாடியிருக்கிறார். இது முதல் பாடலாகத் தான் இருக்கும். படத்தில் இந்த முதல் பாடல் பிக்சரைஷேசன் நன்றாக வந்திருக்குமென நினைக்கிறேன். சின்ன வயசில் விளையாடிய 'கொக்கு பறபற கோழி பறபற மைனா பறபற' விளையாட்டு பாடலாக வந்திருக்கிறது. சின்ன வயசில் என் கேர்ள் பிரண்ட்ஸ்களுடன் 'கொக்கு பறபற' விளையாடியதை நினைவில் தூண்டி விட்டு ஆட்டோ கிராஃப் எழுத வைத்தது. 'கொக்கு பறபற' விளையாட்டு எப்படி விளையாடுவது என்று உங்களுக்கு தெரியாவிட்டால் பின்னூட்டமிடுங்கள் அடுத்த பதிவில் போடுகிறேன். இந்த பாடத்தின் பாடல்களை விமர்சனம் செய்ய தனிப்பதிவே போட வேண்டும்.

ராம் படத்தின் எல்லா பாடல்களும் ஓரளவு முதல் இம்பிரஷனை பெற்றது. நியூ படத்திற்கு அப்புறம் தாயின் பெருமையை பாடும் இரு பாடல்கள் இப்படத்தில் உள்ளது. அத்துடன் அந்தப் பாடல்களை நீண்ட இடைவெளிக்கு அப்புறம் ஜேசுதாஸ் பாடியிருக்கிறார். ராம் படத்தில் தாயைப் பற்றி பாடும் ஜேசுதாஸின் பாடல் மிக இனிமையாக இருக்கிறது.

சுக்ரன் படத்தின் எல்லா பாடல்களும் ஓரளவு துள்ளல் வகை. இசைக்கு புதியவர் விஜய் அண்டனியின் இசை மிக நன்றாக ஆட்டம் போட வைக்கிறது. நல்ல தொடக்கம் தான். 4 ஸ்டண்ஸ்-க்கு அப்புறம் "சாத்திக்கடி போத்திகடி பாத்திரம படுத்துக்கடி வீட்டுக்குள்ள ஊசி வெடிப் போட போறேன்" பாடல் இரத்தத்தில் உற்சாகத்தை ஏற்றி ஆட்டம் போட வைக்கிறார். பாடல் வரிகள் குப்பை. அது போக துள்ளுவதோ இளமை என்ற பாடல் மால்குடி சுபாவின் குரலுடன் ரீ-மிக்ஸ் செய்யப்பட்டுள்ளது.

ஜி படத்தில் முதல் கவனத்தை சிலப் பாடல்கள் கவர்ந்தன 'திருட்டு ராஸ்கல்' பாடல் உள்பட. பெண் பாடகி 'திருட்டு ராஸ்கல்' என்ற வார்த்தை நன்றாக குரலில் உருட்டியிருக்கிறார். வீட்டில் சும்மா இருந்த பாடகர் மனோ இந்தப் பாடலில் பாடியிருக்கிறார். இப்போது மனோவின் மகன் மீது இண்டர்நெட் செக்ஸ் புகார் வேறு. பாவம் மனோ. இந்த படத்தில் ஒரு குறும்பாடல் அருமையாக வந்திருக்கிறது. பாடல் என்னவெனில்

"சரளா கொண்டையில் சாமந்திப்பூவை சடகோபன் தான் வச்சாண்டா
சம்மதம் சொன்ன மறுநாளே அவ அண்ணணுக்கு இவன் தான் மச்சான்டா
கடவ பல்லுல அழுத்துக் கடிச்ச கருங்கல்லு கூட ஒடையுமடா
மறவா கொஞ்சம் பேசி சிரிச்சா மடங்கா பிகரும் மடங்குமடா"

"எத்தனை எத்தனை நீண்ட இரவுகள் என்றைக்காவது விடியாதா?" என்ற ஜி படப்பாடல் மனதை இதமாக வருடுகிறது.

என்னுடைய நல்ல ஓட்டும் கள்ள ஓட்டும் நான் சொன்ன லிஸ்டில் ஒரு பாடலுக்கு தான். அது தான் 'அய்யா' படத்தில் வரும் ஒரு பாடலுக்கு. "ஒரு வார்த்தை கேட்க ஒரு வருசம் காத்திருந்தேன்" என்ற பாடல். பரத்வாஜ்-ன் அருமையான இசை, கச்சிதமான வரிகள் பாடல்களை மீண்டும் மீண்டும் கேட்க வைக்கிறது. இன்று இந்த பாடலை எத்தனை முறை கேட்டேனென்று எனக்கே தெரியாது. சந்திரமுகி நாயகிக்கு அய்யா படத்தில் இந்த பாடலின் பெண் குரல் மிக அருமையாக பொருந்தியிருக்கிறது. அந்த பாடலை டிவியிலும் பார்த்தேன். பாடலை கேட்கும் போது அந்த நாயகியின் முதிர்ச்சி அடைந்த அழகான முகத்தை விட நாயகியின் சினிமாஸ்கோப் இடை தான் மனதில் வந்து நிற்கிறது.

மூன்றாம் தர வரிசையில் திருப்பாச்சி பாடல்கள் தான் சேருகிறது. சில பாடல்கள் அருமையாக துள்ளுவதற்கென்றே இசை அமைத்திருக்கிறார்கள். அண்ணன் தங்கை பாசத்தை வடிய வைக்க ஒரு பாடல் கருத்தம்மா ஸ்டைலில் சுவர்ணலதா பாடியிருக்கிறார். ஒரு பாடலின் வரிகளை கவனித்த போது இரட்டை அர்த்ததுடன் விரசம் ததும்பி வழிகிறது. கீழே பாருங்கள். எல்லா வரிகளும் மிக மோசமாக காதலியை ஏதோ விலைமாதை பார்ப்பது போல வர்ணித்து வருகிறது. பெண் பாடுவதாக வருவதும் அதை விட மகா மோசம்.

பெண் : அப்பன் பண்ண தப்பில ஆத்தா பெத்த வெத்தல வெளஞ்சிருக்குடா
வெளஞ்சி நெரஞ்சிக்குடா
ஆண் : அடி ஒன்ன சொல்லி தப்பில்ல வயசு பண்ணும் மப்பில மாஞ்சிருக்கேடி
மாஞ்சி காஞ்சிருக்கேடி
பெண் : கையளவு கத்துக்கோ உலகளவு ஒத்துக்கோ என்ன வேணா வச்சிக்கோ
எத்தனையோ பெத்துக்கோ
ஆண் : முன்னழகை கட்டிக்கோ பின்னழகை வெட்டிக்கோ ஒன்னு வேணாம் ஒத்திக்கோ
அத்தனையும் பொத்திக்கோ
பெண் : இடுப்போரம் மச்சம் காட்டவா. அப்புறமா மிச்சம் காட்டவா
இடுப்போரம் மச்சம் காட்டவா மச்சான் அப்புறமா மிச்சம் காட்டுவா
ஆண் : அடி ஒன்ன சொல்லி தப்பில்ல வயசு பண்ணும் மப்பில மாஞ்சிருக்கேடி

பெண் ; கொய கொய கொய்யா பாட்டுப்பாடவா அதப்பட்டு கட்டுப்பட்டு வந்து விழுவா (சரியா புரியல இந்த வரி)
ஆண் : கொய கொய கொய்யா கொய்யா கொத்திகிறவா கொய்யா கொய்யா மேல ***** (புரியல)
பெண் : ஏ ஈச்ச எலுமிச்ச உங்கொக்க மவடா ஏ ஈச்ச எலுமிச்ச உங்கொக்க மவடா
ஆண் : ஆ. பெருத்த கன்னம் உனக்கு உனக்கு பெருத்த கன்னம் எனக்கு எனக்கு
ஒட்டி ஒட்டி தேயடி. பட்டித் தொட்டி ஆளடி
பெண் : தேக்கு மரத்த பாத்து பாத்து செவந்து போகும் நாக்கு நாக்கு
மொத்த விலை சொல்லவ கிட்ட வந்து நில்லுட
ஆண் : நெய் முருக்கு கை முருக்கு நொறுங்கி போச்சி எம்மா
கிறங்கி புட்டேன் சும்மா
பெண் : காடேறி மேடேறி கூடிப்புட்ட கச்சேரி
ஆண் : ஒன் சேதி என் சேதி ஊரறிந்த காத்தாடி
பெண் : இடுப்போரம் மச்சம் காட்டவா. அப்புறமா மிச்சம் காட்டவா
இடுப்போரம் மச்சம் காட்டவா மச்சான் அப்புறமா மிச்சம் காட்டுவா

(அலிகள் பாடுவது போல)
ஒன்னு இரண்டு மூனு நாலு அஞ்சி ஆறு ஏழு எட்டு
இதுக்கு ஆசைய பாரு (வசனம்)
பத்து பத்து பத்துக்குள்ள ஒன்ன வெட்டு
எட்டு எட்டு எட்டு எட்டுக்கூட ஒன்ன கூட்டு

பெண் : கடிச்ச இடத்தில் எறும்பு எறும்பு
தடிச்ச இடத்தில் தழும்பு தழும்பு
வெட்கம் கெட்ட ஆம்பள
தூங்கிப்பூட்ட தேவல

ஆண் : ஆ பொத்தி வச்ச வெளக்கு வெளக்கு
போர்வைக்குள்ள இருக்கு இருக்கு
தூண்டிவிட்டு பாக்கவ
விளக்கில் எண்ணை ஊத்தவ

பெண் : வெளஞ்சிருக்கு சரக்கிறக்கு அறுவடைக்கு காத்திருக்கு
ஆண் : (வரி புரியல.....)
பெண் : களவாணி படவா நீ ஒனக்கு நானா தலகாணி
ஆண் : கரகாட்டம் ஆடி காட்டவா உன்னை தலைக்கு மேல சுத்தவா.....

இதை கேட்டால் பாடலாசிரியரை அசிங்கம் அசிங்கமாக திட்டி எழுத தான் வருகிறது. அசிங்கத்தை கண்டு ஒதுங்கி போய் விடுகிறேன்.

இந்த மாதிரி பாடல்கள் எல்லாம் ஏன் வருகின்றன? எல்லாம் ஒரு கவனயீர்ப்புக்கு தான். உங்கள் கவனத்தை ஈர்க்க இந்த அசிங்கம் பிடிச்சப் பாடலின் வார்த்தையை என் பதிவின் தலைப்பாக வைத்தேனே அது மாதிரி தான்.

இந்த பதிவின் வாக்கு எண்ணிக்கை: . பக்கத்திலுள்ள ஸ்டாரை மவுசால் போட்டுத் தாக்கினால் எனக்கு மவுசு ஏறும். நன்றி:-)

உங்கள் கருத்துக்களை இட

திருப்பி தாக்கியவர்கள்:
இந்த மாதிரியான ஆபாசங்களை கண்டுகொள்ளாமல் விடுவதே நல்லது. இதைப்பற்றி பேசப்பபோக அவை இன்னும் (முழுமையான அர்த்தத்துடன்)அதிகமானவர்களிடம் சென்றுவிடும்
 
படா சோக்காலிபா நீ.. எத்தினி தபா கேட்டிருந்தா நீ வரி வரியா பாட்ட எழுதுவ? ஆனாலும் பாட்டு ரொம்ப ஆபாசம் தான்..ஹிஹி...
 
புதிய பாடல்கள் பற்றி எழுதிய விஜயிற்கு முதலில் சலாம்.
....
பாடல்கள் பற்றிக்கூறும்போது கொஞ்சம் பாடலாசிரியர்களைப் பற்றியும் பேசியிருக்கலாம் என்று நினைக்கத்தோன்றியது. திருப்பாச்சியின் முழுப்பாடல்களையும் அந்தப்பட இயக்குநனர்தான் எழுதியிருந்தார். பாடல்கள் ஆபாசமாய் இருக்கிறதென்று ஒதுங்கிக்கொள்வதைவிட அவை குறித்துசற்றுப்பேசவேண்டும் என்றுதான் நினைக்கின்றேன். ஒன்றிரண்டு வருடத்திற்கு முன் படித்துக்கொண்டிருந்த நகரிலிருந்து இன்னொரு நகரிற்கான பயணத்தின்போது, 'நாட்டுக்கட்டை நச்சென்று இருக்கு' என்ற பாடலை எம்மோடு வந்திருந்த தோழியர் திருப்பப் திருப்பபோடச்சொல்லி கேட்டுக்கொண்டிருந்தனர். ஒருமுறை பொறுக்காமல் நான், 'Girls ஐ இப்படிக்கீழ்த்தரமாய் எழுதியிருக்கின்றனர் நீங்கள் அதைக் கவனிக்காமல் இரசிக்கின்றீர்களே என்று சொன்னேன். அவர்களும் உண்மைதான் என்றபடி அதை அலட்சியபடியபடி தொடர்ந்து கேட்டுக்கொண்டேயிருந்தனர்.இதைப் பொதுப்படையாக எடுக்கமுடியாதெனினும், யோசிக்கவேண்டிய விடயம்.

இற்தியில் வந்த குங்குமத்தில் கூட விவேக், அறிவுமதி தமிழ்ப்படங்களில் ஆபாசம், ஆங்கிலத்திணிப்பு உள்ள காரணத்தினால் பாடல்களை எழுதுவதை நிறுத்திவிட்டார் என்பதை ஏன் பெண்ணியவாதிகள், தமிழ் உணர்வாளர்கள் பாராட்டவில்லையென்று கொஞ்சம் நக்கலாய் கேட்டிருந்தாலும், முக்கியமான கேள்வியென்றுதான் நினைக்கின்றேன்.
.........
//'கொக்கு பறபற' விளையாட்டு எப்படி விளையாடுவது என்று உங்களுக்கு தெரியாவிட்டால் பின்னூட்டமிடுங்கள் //
எனக்குத் இந்த விளையாட்டுக்குறித்து எதுவும் தெரியாது :-(.
 
ஏம்பா அல்வாசிட்டி அண்ணாத்தே, படா ஜோலிக்காரம்பா நீ... பாட்டையும் நல்லா ஊனி கேட்டு ரசிக்க வேண்டியது.. சீ சீ இதெல்லாம் ஆய் அப்ப்டின்னு ஒரு உதார் (உன் பாஷையில பகடி) உட வேண்டியது.. நடத்து ராசா நடத்து..
 
அய்யே! பாட்டை வரி வரியா எழுதுறதுக்கு 1000 தடவை கேட்கனுமின்னு அவசியமில்லைங்கோ. ஆடியோ அல்லது எம்.பி 3 பைல், ஆடியோ பிளேயர், டைப் பண்ண 15 நிமிச நேரம் இருந்தா போதுங்கோ, ஸ்கூல் பையன் கூட சூப்பரா பாட்டை வரி வரியா எழுதுவான்.

பீட்டும், இசையும் நல்லாயிருக்குன்னு ரசிச்ச போது தான் ச்ச்சீய்ய்ன்னு தோணிச்சி. இதுல என்ன உதார் வேண்டிகிடக்கு...

அனானி, இந்த பாட்டை போட்டுதாக்கி விட்டு ஒதுங்கிட்டேன். செய்யுள் பதவுரை எழுத வேண்டுமென நினைத்தேன். அப்புறம் அது முட்டாள் தனமென புரிந்தது. ஒதுங்கியாச்சி.

டி.சே தமிழன், உங்களுக்கு விளக்கமாக என் கருத்தை நள்ளிரவு பதிவு போடுவதற்கு முன் இடுகிறேன். என் பார்வைக்கு அந்த கேள்விகள் கொஞ்சம் முக்கியமாகத் தான் படுகிறது.
 
டி.சே, இந்த மாதிரி பாடல்களை பெண்களே விரும்பி கேட்கிறார்கள் என்பதை நான் ஒத்துக் கொள்கிறேன். அதற்கு இராசாவின் இந்த பதிவு(http://raasaa.blogspot.com/2005/03/blog-post_07.html) கூட ஒரு சாட்சி. எல்லாருக்கும் வார்த்தைகளை கவனிக்கிறார்கள் என்று சொல்லுவதை விட பாடலின் வரும் இசை மற்றும் துள்ளவைக்கும் ராகங்கள் தான் மக்களை எளிதாக பிடித்துக் கொள்கிறதென நினைக்கிறேன். நானே போகிற போக்கில், மேல் சொன்ன பாடலை ஆங்காங்கே டிவியிலும், ரேடியோவிலும் கேட்டிருக்கிறேன் மட்டுமல்லாமல் வார்த்தைகள் அதிகம் உறுத்தியதில்லை. காரணம் வார்த்தைகளின் மேல் அவ்வளவாக கவனமில்லை. சில விசயங்களை உற்று கவனிக்கும் போது தான் சில அசிங்கங்கள் புலப்படுகின்றன. அந்த வகையில் அந்த பாடலும் ஒன்று.

ஒன்றா இரண்டா டிசே...இப்போது வருகிற எல்லா படங்களிலும் எப்படியாவது இந்த மாதிரி ஒரு பாடல் அமைந்து விடுகிறது. ஒவ்வொன்றுக்கும் பெண்கள் கொடி தூக்க ஆரம்பித்தால் ரொம்ப டயர்டாகி விடுவோமென்றோ என்னவோ அந்த மாதிரி விசயங்களுக்கு கொடி தூக்குவதில்லையென நினைக்கிறேன். பெண் விளம்பர மாடல்களை எதிர்த்து அவ்வப்போது எப்படி குரல் வந்து அடங்குகிறதோ அதே மாதிரி இந்த மாதிரி விசயத்துக்கும் குரல்கள் அவ்வவ்ப்போது வந்து அடங்கிவிடுகின்றன.

சிங்கை எப்.எம்-ல் கூட 'கல்யாணம் தான் கட்டிக் கிட்டு ஓடிப் போலாமா' பாடல் ரொம்ப விரசமாக இருக்கிறதென்று சொல்லி, இனிமேல் ஒளிபரப்ப மாட்டோமென்று சொல்லிவிட்டு, அப்படியே 'மேமாதம் 98-ல் மேஜர் ஆனேனே' பாடலை போடுகிறார்கள். இதை என்ன சொல்ல?

இதனால் தான் என்னவோ அறிவுமதி சினிமா பாடல்களை எழுத மாட்டேனென்று சொன்ன போது நான் மேல் சொன்ன காரணங்களால் எனக்கென்னவென்று எல்லாரும் இருந்து விட்டார்களோ என்னமோ?
 
படங்களை தமிழ் பெயரிட வேண்டும் எனச் சொல்லும் அன்பர்கள் தமிழை அசிங்கமாக்குவதை கண்டு கொள்ளாது ஏன்?

படத்தை குறைசொல்லும் பெண் அமைப்புகள் இதை கண்டு கொள்ளாமல் விடுவது ஏன்?

சரி சென்ஸார் போர்டு என்னதான் செய்கிறது?

எல்லாரையும் விட ஒரு குழந்தை அந்த பாடலை பாட அப்பா அம்மா ரசிக்க கேட்டேன் தலை விதி!!

நம்மை நாமே நொந்து கொள்வது தவிர வேறு வழியில்லையா?
 
ப்ரியன், நான் முன்னால் இட்ட பின்னூட்டத்தை கவனிக்கவும்
 

உங்கள் கருத்துக்களை இட


<< திரும்ப முன் பக்கத்துக்கு போ

This page is powered by Blogger. Isn't yours? தமிழ் அசைபட இணையச் செயலி தமிழ் விக்கிபீடியா

-->