-ல் போட்டுத் தாக்கியது
எதிர்பார்ப்பு
Difficulty in reading this post due to font issues?
Click here
for a PDF copy. Works best if you right-click the link and select 'Save target as...'
இன்று மிக சந்தோஷமான நாள். காலையில் லேட்டாக எழுந்திருச்சி "அய்யோ ஆபிஸ் போகனுமேன்னு" மனசு அலற, ரொம்ப நாள் பயன்படுத்தாத சட்டையை எதற்காகவோ எடுக்க, சட்டைப் பையில் 50 சிங்கை வெள்ளி. எதிர்ப்பார்பில்லாத போது அந்த பணத்தை பார்த்த என் மனது ஏக சந்தோஷமாகிப் போனது. வங்கியில் எதிர்பார்ப்புடன் சில நூறு வெள்ளிகள் காத்திருந்தாலும், எதிர்பாராதா 50 வெள்ளி பெரியதாக எனக்கு பட்டது. பணம் என்று மட்டுமல்லாமல் எதிர்பார்ப்பில்லாமல் கிடைக்கும் எதுவுமே நமக்கு அதிர்ச்சி தருகிறது. அது நமக்கு உகந்ததாக, பிடித்தாக இருந்தால் இன்ப அதிர்ச்சி எனவும், பிடிக்காததாக இருந்தால் துன்ப அதிர்ச்சி என்று வகைப்படுத்தி விடுகிறோம். எது எப்படி இருந்தாலும் " எதிர்பார்ப்பில்லாமல் கிடைக்கும் நல்லது அனைத்துமே இன்பம் தான். ஆனாலும் அதிக எதிர்பார்ப்பு அதிக ஏமாற்றமே"
**************************************************
நீண்ட நாட்களாக எனக்கு ஒன்றை தெரிந்துக் கொள்ள ஆசை. டிவிகளில் நியூஸ் வாசிக்கும் போது செய்தி ஆரம்பிக்கும் முன்னரும் சரி, செய்தி முடியும் போதும் சரி இரண்டு பேரும் பேசிக் கொள்வதாக காண்பிப்பார்கள். எனக்கு சில சமயம் என்ன பேசிக் கொள்கிறார்கள் என்று தெரிந்துக் கொள்ள வேண்டுமென தோன்றும். சில நேரங்களில் ஆண் அறிவிப்பாளர், பெண் அறிவிப்பாளரைப் பார்த்து கண்களில் அபிநயம் பிடித்து கடலை வறுத்துக் கொண்டிருப்பார்.கடலை கருகிய வாடை வருவதும் உண்டு.
ஒரு வேளை இப்படி இருக்குமோ...
பெண் வாசிப்பாளர்: "நான் இந்த நியூஸை வாசிப்பேன்"
ஆண் வாசிப்பாளர்: "நான் தான் இந்த நியூஸை வாசிப்பேன்"
ஆண்: "நான்"
பெண்: "நான்"
அப்புறம் கேமிரா மேன் காமிராவை திருப்பி அந்த பெண் வாசிப்பாளரைப் பார்த்து "நீ தான்" என்பார் என்று நினைக்கிறேன்.
டி.வியில மட்டுமில்ல விழா மேடையிலேயும் பரிசு கொடுப்பவர், வாங்குபவர் இருவரும் காதில் கிசு கிசிவென பேசி தள்ளுவார்கள்.
*********************************************
என்னப்பா ப்ளாக் நிறைய குரோசவா மேட்டரா இருக்கு போரடிக்குதுன்னு சொல்றாங்க. அதுனால மாடாடியோ பட விமர்ச்சனத்தை இந்த பதிவுல பின்னூட்டமாகவே இட்டுருக்கிறேன். ஹி... ஹி விடாது கருப்பு.

இந்த பதிவின் வாக்கு எண்ணிக்கை:
. பக்கத்திலுள்ள ஸ்டாரை மவுசால் போட்டுத் தாக்கினால் எனக்கு மவுசு ஏறும். நன்றி:-)
உங்கள் கருத்துக்களை இட
திருப்பி தாக்கியவர்கள்:
அவசரத்துல இப்படியாண்ணே சட்டையை மாத்திப்போடுறது... சட்டைப்பையில வச்ச 50 வெள்ளிய காணோன்னு நா இங்க தேடி அலஞ்சிட்டு இருக்கேன்...
அச்சசோ... என்னோட தூக்கத்தில நடக்கிற வியாதி இவ்ளோ முத்திப் போச்சின்னு நீங்க சொன்னப் பிறகு தான் தெரியும். தூக்கத்திலேயே நடந்து உங்க வீட்டுக்கு வந்துட்டேன்னு நினைக்கிறேன் உங்க சட்டையப் போட.
உங்கள் கருத்துக்களை இட
<< திரும்ப முன் பக்கத்துக்கு போ